☰KAILASA Library/Satsangs/உங்க கேர்ள்ஃப்ரெண்ட் பிரேக்அப் பண்ணிட்டு போயிருச்சா, பாய்ஃப்ரெண்ட்…Sign in
21 April 2026

“உங்க கேர்ள்ஃப்ரெண்ட் பிரேக்அப் பண்ணிட்டு போயிருச்சா, பாய்ஃப்ரெண்ட்…”

Live notesUntitled · opening words shown
The Satsang

உங்க கேர்ள்ஃப்ரெண்ட் பிரேக்அப் பண்ணிட்டு போயிருச்சா, பாய்ஃப்ரெண்ட் பிரேக்அப் பண்ணிட்டு போயிட்டாரா இல்ல ஏதாவது ஒரு பிசினஸ் லாஸ் ஆகி செல்வத்தை இழந்துட்டீங்களா, என்னவானாலும்...

உங்களுடைய இன்னர் டயலாக் உள் உரையாடல், எமோஷனல் பேஸ்லைன் உங்க உணர்ச்சிகளின் அடித்தளம், எனர்ஜெடிக் போஸ்ச்சர் உங்கள் உணர்வில் நீங்கள் யார் என்று நினைக்கின்றீர்களோ, உங்கள் மூல பாவம் இந்த மூன்றையும் கான்சியஸ்ஸா...

நீங்க உணர்வுனால என்ன உள்ளே உருவாக்குறீங்களோ அத அப்படியே...

நீங்க ரொம்ப நாளெல்லாம் நினைந்து செய்ய வேண்டாங்கய்யா, இந்த 18 நாள் நினைந்து செய்யுங்க போதும் பெருமான்...

என் ஆன்மார்த்த மூர்த்தி அண்ணாமலையான் சாட்சியாக சொல்லுகின்றேன் உங்க வாழ்க்கையே எல்லாம் வல்ல சித்தராய், சுந்தரேசராய், பரமசிவனாய்...

ஆக்சுவலா பெரிய புராணமே ஒரு மிகப்பெரிய பூமியிலே வார்த்தையால் வடித்து வைக்கப்பட்ட...

ஓம் ஓம் ஓம் அஸ் த அல்டிமேட் மேனிபெஸ்டேஷன் ஆஃப் பரமசிவ ஏகபாத மூர்த்தி, ஏகபாத திரிமூர்த்தி, திரிபாத திரிமூர்த்தி ஐ பிளஸ் யூ ஆல் வித் பரமாத்வைத பரமாத்வைத பிராப்தி ரஸ்து, சர்வ மங்கள பிராப்தி ரஸ்து, சர்வ ஐஸ்வரிய பிராப்தி ரஸ்து, சர்வானந்த பிராப்தி ரஸ்து, சர்வேஸ்வரத்வ பிராப்தி ரஸ்து. ஆல் த பரமசிவசேனா பார்டிசிபன்ட்ஸ் ஆஃப் கைலாசா கினிவிசா, கைலாசா திருவண்ணாமலை, ஆல் த சித்சபா மெம்பர் ராஜ்யசபா மெம்பர் பிளஸ்சிங்ஸ் டூ ஈச் அண்ட் எவரிஒன் ஆஃப் யூ. சித்சபா மெம்பர் இன் கைலாசா கினிவிசா அண்ட் ஆல் த நியூ மெம்பர்ஸ் ஆஃப் எ எஸ்ஜேபி ஃபேமிலி அண்ட் சித்சபா. பிளஸ்சிங்ஸ் ஃபார் ஆல் ஆஃப் யூ, நாட் ஒன்லி ஐ அக்செப்ட் யூ அஸ் சித்சபா மெம்பர்ஸ் அண்ட் சர்வக்ஞ பீட எஜமான்ஸ். ஐவெல்கம் யூ டு பி பார்ட் ஆஃப் கைலாசாஸ் பார்லிமெண்ட். ஃப்ரம் நவ் யூ ஆர் ஆல் மெம்பர்ஸ் ஆஃப் கைலாசாஸ் பார்லிமெண்ட் ஆஃப் சித்சபா அண்ட் ஐ வாட்டட் டு அஸ்யூர் ஆல் ஆஃப் யூ ஆல் த சித் சபா மெம்பர்ஸ் அண்ட் சர்வஞ பீட எஜமான்ஸ், கர்த்தாஸ், மேனிபெஸ்டர்ஸ் எஸ்பெஷலி தோஸ் ஹூ கமிட்டட் எஸ்டர்டே ஆஃப்டர் ஹியரிங் த கிரேட் நியூஸ். ஆல் தோஸ் ஹு கமிட்டட் டு ஸ்டாண்ட் ஸ்ட்ராங் அண்ட் ஸ்டேண்ட் டால் அண்ட் மேக் திஸ் ஹேப்பென் ! மை பிளஸ்சிங்ஸ் டு ஆல் ஆஃப் யூ ததாஸ்து அண்ட் ஐ ஷவர் த பெஸ்ட் அல்டிமேட் ஃபார் ஆல் ஆஃப் யூ. ஆல் தோஸ் கமிட்டட் டு பிகம் சர்வஞ பீடாதீஸ்வர், கமிட்டட் டு பிகம் சர்வஞ பீட கர்த்தாஸ், கமிட்டட் டு பிகம் சர்வஞ பீட எஜமான்ஸ் அண்ட் தோஸ் ஹூ கமிட்டட் டு பிகம் சர்வஞ பீட மேனிபஸ்டர்ஸ் எவெரிஒன் ஹூ இஸ் மூவிங் பார்வர்ட் இன் எஸ்ஜேபி ஜர்னி, மை பிளஸ்ஸிங்ஸ் டு ஆல் ஆஃப் யூ, ஜஸ்ட் லைக் யூ ஆல் ஸ்டாண்ட் டூரிங் த டைம் ஆஃப் நீட் பார் கைலாசா ! பரமசிவா வில் ஸ்டாண்ட் வித் யூ ஆல் ஃபார் மேனிபஸ்டிங் யுவர் அல்டிமேட் அஸ் த ரியாலிட்டி. வென் யூ ஸ்டாண்ட் ஃபார் ஹிஸ் மிஷன், ஸ்டாண்ட்ஸ் ஃபார் யுவர் மேனிபஸ்டேஷன், த அல்டிமேட் என்லைட்டன்மெண்ட் அண்ட் மேனிபெஸ்டிங் எவரிதிங் யூ வாட் ! ததாஸ்து ! ததாஸ்து !! ததாஸ்து !!! அண்ட் ஆல் த பார்டிசிபன்ட்ஸ் த யக்ஞ எஜமான்ஸ், யக்ஞ கர்த்தாஸ் குபேர லக்ஷ்மி ஹோமா பிளஸ்சிங்ஸ் ஃபார் ஆல் ஆப் யூ, ஐ அக்செப்டட் யுவர் குபேர லக்ஷ்மி ஹோமா அண்ட் ஐ கிவ் யூ சங்கல்ப பல சித்தி ! சங்கல்ப பல சித்தி ரஸ்து !! வித வாட் இன்டென்ஷன் அண்ட் பிரேயர் யூ ஆஃபர்ட் திஸ் ஹோமா இஸ் புல்பில்ட் ! ததாஸ்து ! சங்கல்ப பல சித்தி ரஸ்து ! பிளஸ்சிங்ஸ் ! அண்டர்ஸ்டாண்ட், தௌசன்ஸ் ஆஃப் இயர்ஸ் யகோ ஃப்ரம் காஞ்சி கைலாச பீடம் 7 மாஸ்டர்ஸ் அண்ட் டிஃபரண்ட் டைம்ஸ் வென்ட் டு சைனா, த பிரசென்ட் லேண்ட், பிரசென்ட் கண்ட்ரி கால்ட் சைனா, டு தட் லேண்ட் அண்ட் கேவ் திஸ் என்லைட்டன்மெண்ட் சயின்ஸ் ! தேர் ஸ் எ லாங் கனெக்ஷன், இன்டென்ஸ் ஸ்பிரிசுவல் கனெக்ஷன் பிட்வீன் காஞ்சி கைலாச பீடம் அண்ட் சைனீஸ் சிவிலைசேஷன். ஈவன் த புத்தியிசம் இன் சைனா, ஆல் த டிஃபரண்ட் ரிலிஜியன்ஸ் இன் சைனா, பிகேன் ஃப்ரம் த என்லைட்டன் சயின்ஸ் ஆஃப் காஞ்சி கைலாச பீடம், ஸ்டார்டிங் ஃப்ரம் போதி தர்மா, பத்ம சம்பவா, போகர், புலிப்பாணி, குமார ஜீவா அண்ட் புத்த பத்ரா, அமோக வஜ்ரா, வஜ்ரபோதி, ஆல் தீஸ் மாஸ்டர்ஸ், த ட்ரடிஷன் இஸ் தேர் ஃப்ரம் லாஸ்ட் ஃப்யூ தௌசண்ட்ஸ் இயர்ஸ் ! த என்லைட்டன் பீயிங்ஸ் ஃப்ரம் காஞ்சி கைலாச பீடம் கோ ஆல் தவே அப் டு த பிரசென்ட் லேண்ட் சைனா அண்ட் டீச் திஸ் என்லைட்டன்மெட் நாலஜ். ஐ திங்க் பரமசிவா இஸ் கட்டின்யூனுயிங் திஸ் டிரடிஷன் துரூ திஸ் மேனிபஸ்டேஷன் ஆல் சோ தட் இஸ் வொய் சச் எ டீப் பவர்ஃபுல் கனெக்ஷன். இட் இஸ் டைம் டு டேக் திஸ் என்லைட்டன்மெண்ட் சயின்ஸ் அண்ட் ஸ்பிரண்டிங் நாட் ஒன்லி டு த மெயின் லேண்ட் சைனா

டு த ஹோல் வேர்ல்ட் வேர் எவர் த சைனீஸ் பீப்பள்ஸ் ஆர் தேர், த ஹோல் சைனீஸ் சிவிலைசஷன் ஷுட் கெட் தி என்லைட்டன்மெண்ட் சயின்ஸ் ஒன்ஸ் அகைன் அண்ட் சிவிலைசேஷனலி த ஹோல் சைனா, பூட்டான், நேபாள், இந்தியா, ஸ்ரீலங்கா, லாவோஸ், கம்போடியா ஆல் ஆஃப் அஸ் ஆர் சேம், வி ஆர் ஆல் தர்மா பேஸ்ட் சிவிலைசேஷன், என்லைட்டன்மெண்ட் சென்டர்ட் சிவிலைசேஷன், மோக்ஷ சென்டர்ட் சிவிலைசேஷன், நிர்வாண சென்டர்ட் சிவிலைசேஷன், லெட் அஸ் ரிவை இட் ! லெட் அஸ் ரிவை இட் ! அண்ட் ஆல் த சர்வஞ பீட எஜமான்ஸ், கர்த்தாஸ், ஈஸ்வர்ஸ் டேக்கன்அப் காசிங் அதர் எஸ்ஜேபீஸ் அண்ட் ஸ்டாண்டிங் அப் ஃபார் கைலாசா அட் திஸ் மொமெண்ட் மை பிளஸ்சிங்ஸ் டு ஆல் ஆஃப் யூ, பரமசிவா மேட் இட், யூ வில் ஆல் பி செலிப்ரேட்டிங், ...... பிளஸ்சிங்ஸ் எவ்ரிஒன் ஆஃப் யூ அண்ட் டு டே ஐ இனிஷியேட் ஆல் ஆஃப் யூ வித்

கம்ப்ளீஷன் இன் ஆல் வெல்த் ஆஸ்பக்ட்ஸ் ஆர் ஏர்னிங், சேவிங் அண்ட் ஸ்பெண்டிங் அண்ட் ஷவர் யூ ஆல் வித் இன்பினிட் வெல்த் அண்ட் அல்டிமேட் வெல்த் ! வென் ஐ சே ஐ மீன் இட் ! ஜஸ்ட் கோ பேக் அண்ட் ரீரைட், ரீரைட். ரீரைட் த பாஸ்ட், யூ வில் மேனிபஸ்ட் மோர் அண்ட் மோர் அண்ட் மோர் வெல்த். மை பிளஸ்சிங்ஸ் !

சித்ரா பௌர்ணமி திருநாள் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றது. சித்திரை பெருவிழா, இன்று ஏழாம் நாள். திருவிளையாடல், தியான சத்சங்க ஞான ரசவாத நிகழ்வின் ஏழாவது நாளும், சித்திரை பெருவிழாவின் மூன்றாவது நாளும் கோலாகலமாக மதுரை கைலாசத்திருந்து உலகெங்கும் உள்ள எல்லா கைலாசங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இன்றைய திருவிளையாடல் ஞான சத்சங்க ஞான ரசவாத நிகழ்விற்கு உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். பரமசிவ பரம்பொருளின் நேரடி செய்தி மகா கைலாசத்திருந்து இன்று நம் அனைவருக்கும், ஆழ்ந்து கேளுங்கள்,

"பூர்வ ப்ரத்வம்சன அன்யோன்ய அபாவைஹி யத் உபசாம்யதி ந சாம்யதி ஏவ தத் சிதே சாம்யதியேவ து த்ரிஷ்யதே"

காணப்படும் உலகறிவு, அதன் காரணங்கள் அழியும்போது மறைகிறது. ஆனால் மனதில் காரண வாசனைகள் நீங்காமல் இருக்கும் வரை வெளியில் அழிந்த பின்னரும் உலகத் தோற்றம் மீண்டும் மீண்டும் தோன்றும். ஆழ்ந்து கேளுங்கள், இது யோகவாசிஷ்டத்தோட பத்தாவது ஸ்லோகம். இத கொஞ்சம் புரிஞ்சுக்கிட்டீங்கன்னா ரொம்ப பெரிய நன்மை விளையும். இதுதான் பரமசிவ பரம்பொருளோட நேரடியான செய்தி.

"காணப்படும் உலகறிவு, நீங்க

பார்க்கிற உங்களுடைய வாழ்க்கை, உங்களுடைய உலகம் அதன் காரணங்கள் அழியும் போது மறைகிறது. ஆனால் மனதில் காரண வாசனைகள் நீங்காமல் இருக்கும் வரை, வெளியில் அழிந்த பின்னரும் உலக தோற்றம் மீண்டும் மீண்டும் தோன்றும். அதாவது சாஸ்திர பிரமாணத்தை புரிஞ்சுக்கோங்க, இப்ப நீங்க பார்க்கிற இந்த உலகம், ரியாலிட்டி இதோட காரணங்கள் அழியும் பொழுது இந்த உலகம் மறையுது, அதாவது நீங்க ஆழ்ந்த உறக்கத்தில பார்த்தீங்கன்னா இது மறைஞசிருது. ஆனால் மனதிலே இருக்கின்ற காரண வாசனைகள் நீங்காமல் இருப்பதனால், வெளியில் இருக்கின்ற உலகம் மறைந்தாலும் உள்ளுக்குள் அந்த உலக தோற்றத்தை மீண்டும் மீண்டும் நீங்கள் கனவாக தோன்ற வைத்து பார்க்கின்றீர்கள், வெளிப்படுத்தி பார்க்கின்றீர்கள், இது வந்து நீங்க புரிந்து கொள்ள வேண்டிய ஒரு சத்தியம். அடுத்தது சொல்றேன் கேளுங்க, ஒரு விஷயம் வெளியிலே முடிந்துவிட்டுருந்தாலும் உள்ளுக்குள்ளே அது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கலாம்; அந்த நிகழ்வு வெளியில் முடிஞ்சிருது, அந்த நபர் உங்க வாழ்க்கையில் இருந்து போயிட்டார், அந்த காட்சி இப்ப உங்க கண்களுக்கு தெரியல, ஒரு நல்லதோ கெட்டதோ வெளியில் நடந்து முடிஞ்சிருச்சு, ஒரு பெரிய அதிசயம்னு நினைக்கிற நல்லதோ அல்லது விபத்துன்னு நினைக்கிற கெட்டதோ நடந்து முடிஞ்சு உங்க வாழ்க்கையில இருந்து போயிருச்சு; அந்த காட்சி இப்ப உங்க கண் முன்னாடி இல்லை; அந்த வார்த்தைகள் இனிமே யாரும் பேசுறது இல்லை; ஆனால் உள்ளுக்குள் அது இன்னமும் உங்களை பாதிக்கிறது மட்டுமல்லாமல், அந்த உள் காரணத்தை உங்கள் மனதுக்குள்ளேயே தங்கி இருக்கசெய்து அதை மீண்டும் மீண்டும் நீங்கள் ஓட்டி பார்க்கும் பொழுது பழைய காரணத்தின் வழியாக நீங்கள் இந்த உலகத்தை பார்த்தீர்களானால் இந்த உலகம் அந்த நிகழ்வுகளையே மீண்டும் மீண்டும் தோன்றச் செய்து கொண்டிருக்கும் ! இதுதாங்கய்யா நடக்குது, அதனால மனிதர்கள் இப்ப இல்லாத ஒன்றை மீண்டும் மீண்டும் உருவாக்கி வாழறாங்க. ஒரு பயங்கள், இப்போ நடக்கல ; ஆனால் அந்த பயங்களை மீண்டும் மீண்டும் உருவாக்கி வாழுகின்றீர்கள் ; அதே மாதிரி சுகங்கள், இப்ப நடக்கல ஆனா அதை மீண்டும் மீண்டும் உருவாக்கி வாழ்கிறீர்கள் ; வெளிப்புற நிகழ்வு கரைந்து முடிந்துவிட்டாலும் உள் காரணம் இன்னும் ஆக்டிவா இருக்கிறதுனால அதே நிகழ்வுகளை மீண்டும் நிகழ்த்தி பார்க்கிறீர்கள் ! அது ஒன்னு, இரண்டாவது... அதாவது எல்லா கோணத்திலிருந்தும் இந்த சத்தியத்தை புரிந்து கொள்ளுங்கள் ; வெளியில நிகழ்ந்து முடிந்த பிறகும் உள்ளுக்குள் அதன் உள் காரணங்களை நீங்கள் ரசிப்பதால், ருசிப்பதால், புசிப்பதால் அவைகளை மீண்டும் வெளியில் நிகழ்த்தி பார்க்கிறீர்கள் ; அதேபோல் உள்ளுக்குள் எதை நீங்கள் நினைத்து பார்க்கிறீர்களோ, நிகழ்த்தி பார்க்கிறீர்களோ அதை மீண்டும் வெளியில் நிகழ்த்தி பார்க்கிறீர்கள். அதாவது உள் உலகம், வெளி உலகம்ன்னு தனித்தனியா இல்லைன்னு சொல்ல வராங்க, நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளுலகம் தனி வெளிவுலகம் தனின்னு நம்ப முயற்சித்தாலும், அந்த நம்பிக்கையை சார்ந்து முடிவுகளை எடுத்தாலும், நீங்க படாத பாடுபட்டு குருவி சேர்க்கிற மாதிரி தினந்தோறும் வாயைக்கட்டி வயித்தக்கட்டி 50 ரூபாய் 100 ரூபாயா சேர்த்து, அருமையா 10 கோடி ரூபாய்க்கு ஒரு பெரிய கட்டடம் கட்டி முடிச்சு, கிரக பிரவேசம் பண்ற அன்னைக்கு கரெக்டா திடீர்னு முழிச்சுக்கிட்டு, இது மொத்தமும் கனவுன்னு காணும் பொழுது என்ன ஆகின்றது ?! அது மாதிரிதான் இந்த உள்ளுலகமும் வெளி உலகமும் வேறு வேறு என்று நீங்கள் நினைத்துக்கொண்டு கட்டுகின்ற எல்லா கட்டிடங்களும் முடியும் தருவாயில், நீங்கள் வெற்றி என்று நினைக்கும் தருவாயில, திடீர்னு ஒரு வினாடியில் ஒரு சின்ன எர்த்குவேக், காணாமல் போய்விடும், நன்றாக புரிந்து கொள்ளுங்கள், இதுல நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய மிகப்பெரிய சத்தியம் என்னன்னா, நீங்கள் கட்ட வேண்டிய, உங்கள் வாழ்க்கையை கட்டமைக்க வேண்டிய, உங்கள் வாழ்க்கையை முதலில் உள்ளில் கட்டுங்கள். பூசலார் நாயனார்தான் வாழ்க்கையினுடைய மிகப்பெரிய வெற்றியின் வடிவம் ! வீடு கட்டணுமோ கோவில் கட்டணுமோ உங்க வாழ்க்கையை கட்டணுமோ என்னவானாலும் சரி, உங்க உடல் நலத்தை கட்டணுமா, மனநலத்தை கட்டணுமா, தேவையான உறவுகளை கட்டணுமா, செல்வத்தை கட்டி அமைக்கணுமா, ஞானத்தை கட்டணுமா, எதை நீங்கள் கட்டி அமைத்து உங்கள் வாழ்க்கையாக வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அதை முதலில் உங்களுக்குள் கான்சியஸ்ஸா கட்டுங்க ! ஒரு மனிதன் வாழ்விலே நுழைவதற்கு முன்பாக முக்கியமா இந்த ஜென்z க்கு சொல்றேன் கேட்டுக்கங்க, வாழ்க்கையிலே நுழைவதற்கு முன்பாக, இந்தியால எஜுகேஷன் அப்படின்னா, அப்ப எல்லாம் 10th , பிளஸ் 2 அப்படின்னு இருந்தது. எஸ்எஸ்எல்சி, பியூசி, இப்போ 10th, பிளஸ்2, இன்ஜினியரிங், அதுக்கு அப்புறம்தான் என்ன வாழ்க்கையில் பண்ண போறேன்னு முடிவு பண்ணுவாங்க ; என்ன படிக்கணும்னு அப்புறம்தான் முடிவு பண்ணுவாங்க ; இந்த 10th, பிளஸ்2, இன்ஜினியரிங் வந்து பேசிக் குவாலிபிகேஷன் மாதிரி ஆயிடுச்சு. இன்ஜினியரிங் முடிச்சுட்டுதான் நாம என்ன வாழ்க்கையில பண்ணனும் அப்படின்னு யோசிப்பாங்க. நீங்க என்ன வெளியுலகம் சார்ந்த எந்த இன்ஜினியரிங் படிச்சீங்கனாலும் அது எந்த அளவுக்கு உபயோகமாகும்னு எனக்கு தெரியாது. ஒன்று ஒரு விஷயத்தை படிச்சிருங்க. என்லைட்டன்மெண்ட் என்ஜினியரிங், கான்சியஸ் என்ஜினியரிங், லைப் என்ஜினியரிங் ! உங்களுடைய உணர்வை, கான்சியஸ்நெஸ்ஸை கட்டமைத்து விடுங்கள் ! ரொம்ப சுலபம், தினந்தோறும் இரவு உறங்கச் செல்லும் பொழுது உடலை படுக்கைக்கு சரணாகதி செய்துவிட்டு, இந்த உடலை படுக்கைக்கு சரணாகதி செய்வது ரொம்ப முக்கியமான விஷயம்ங்கய்யா, நீங்க பல ஆண்டுகளாக உறங்கி இருப்பீர்கள், ஆனா தூக்கம் உங்களை விழுங்கும் வரை உடம்பை ஸ்ட்ரெஸ்டா, டைட்டா புடிச்சிட்டு இருப்பீங்க ; படுத்த உடனேயே உடம்பை படுக்கைக்கு சரணாகதி செய்து, நித்ரா தேவிக்கு உங்களை சரணாகதி செய்ய கற்றுக்கொள்ளுங்கள் ! அதாவது உடம்பு படுக்கையின் மீது முழுகி விட வேண்டும்; படுக்கைக்குள் முழுகி விட வேண்டும்; அது மாதிரி உடம்பை கம்பர்ட்டபிளான பொசிஷன், அது எந்த பொசிஷனா இருந்தாலும் பரவாயில்லை, உடம்பை சரணாகதி செய்துவிடு, முடிச்சுட்டு, சரணாகதி பண்ணிட்டு, அப்ப நேச்சுரலா உடல் அடங்கிவிடும் ; சில வினாடிகள், சில நிமிடங்களிலயே, அப்போ மனம் அடங்க துவங்கும், அந்த மாதிரியான மனம் அடங்குகின்ற நேரத்திலே, அருமையா நீங்க வந்து அந்த 'மூல பாவ'த்திலிருந்து காரண சரீரம் வழியாக 'அகம் பாவம்' ன்னு சொல்ற அந்த வார்த்தையைதான் 'மூல பாவம்'ன்ற வார்த்தையால சொல்றேன், ஏன்னா'அகம் பாவம்'என்பது வேற ஒரு அர்த்தங்களை, விளக்கங்களை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்பதனால், உங்க ஒரிஜினல் அசம்ஷன 'மூல பாவம்'ன்னு சொல்றேன். உங்களுடைய ஐடென்டிட்டி, கோர் ஐடென்டிட்டி இந்த 'மூல பாவ'த்தில் இருந்து நீங்க மெதுவா விலகி, காரண சரீரம் வழியாக கடந்து, உங்களுடைய 'ஆதி ஸ்வபாவம்' , 'அகம் ஸ்வபாவ'த்திற்குள் முழுகுகின்ற அந்த நேரத்தில, உங்கள் கடந்த காலங்களை அழித்து அழித்து அழித்து உங்களுக்குள்ள இருக்கிற வலிங்க, துக்கங்கள் எதெதெல்லாம் இப்படி நடந்திருக்க கூடாதுன்னு நீங்க நினைக்கிறீங்களோ அதையெல்லாம் மீண்டும் மீண்டும் அழித்து, 'பாவ'த்தாலே அழித்துவிட்டு, அது எப்படி நடந்திருக்கணும்ன்னு நீங்க நினைக்கிறீங்களோ அதே மாதிரி உருவாக்கி வைத்துவிட்டு, உறக்கத்திற்குள் கரையுங்கள்; நல்லா புரிஞ்சுக்கங்க, இந்த 'மூல பாவ'த்திலிருந்து நீங்க 'அகம் சுவபாவ'த்துக்குள்ள நுழையிற அந்த காலகட்டத்திலே பரமசிவ பரம்பொருளை நேரடியாக சந்திக்கின்றீர்கள் ! மனிதர்களுக்கு மட்டும்தான் 24 மணி நேரத்துக்கு ஒருமுறை நேரடி அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருக்கார் பெருமான் ! தேவர்களுக்கு கிடையாது; அதல, விதல, சுதல, தலாதல, பாதாளத்திலே, கீழ் உலகங்களிலே வாழுகின்ற அசுரர்களுக்கோ ராட்சசர்களுக்கோ மற்ற ஜீவன்களுக்கோ கிடையாது; கைலாசத்திலே இருக்கின்ற தெய்வங்களை தவிர, கீழ் உலகங்களிலே சத்தியலோகம் வரை இருக்கின்ற எந்த தெய்வங்களுக்கும் தினசரி அப்பாயின்ட்மென்ட் கிடையாது ; பெருமானோட தினசரி அப்பாயின்ட்மென்ட் ரெண்டே ரெண்டு பேருக்குதான், ஒன்னு மனித உடல்ல இருக்கிறவங்களுக்கு, இன்னொன்னு கைலாசத்தில, மகா கைலாசத்தில அவரோடயே இருக்கறவங்க, சாலோக்கிய முக்தி அடைந்தவர்கள், அவ்வளவுதான் ! நன்றாக புரிந்துகொள்ளுங்கள், அதனாலதான் சொல்றேன், ஜென்z உறங்க போகும் நேரத்தை தயவு செய்து வீணடித்து விடாதீர்; சோசியல் மீடியால, சமூக ஊடகங்களலயும், ஏன்னா அந்த வகுப்பு அட்டென்ட் பண்ணிட்டு இருக்கற, பிஎஸ்எஸ் வகுப்பு அட்டென்ட் பண்ணிட்டு இருக்கறவங்களும் பல கேள்விகள் அனுப்பி இருந்தீங்க, சமூக ஊடங்கள்ல பல கேள்விகள் பார்த்தேன், சில பேர் அவங்களால குடிக்காம இருக்க முடியாது அப்படிங்கறாங்க, சரி டே டைம்ல குடிச்சு தொலைச்சிருங்க, நான் குடிக்கிறத ஏத்துக்கல, நல்லா புரிஞ்சுக்கோங்க, குடிக்கிறத நான் ஏத்துக்கல, குடிக்காம இருக்க முடியாதுன்றவங்க டே டைம்ல குடிச்சு தொலைச்சு என்னவோ பண்ணி முடிச்சிருங்க, ராத்திரி தூங்க போறதுக்கு 3 மணி நேரம் முன்னாடி இருந்து எதுவும் பண்ணாம பார்த்துக்கங்க, இரவு உறங்குவதற்கு மூணு மணி நேரத்துக்கு முன்னாடி மதுவோ மாமிசமோ மாதுவோ மூன்றையும் தவிர்த்து விடுங்கள். சில பேர் உங்களுடைய செக்சுவல் ஆக்டிவிட்டீஸ் எப்ப வச்சுக்கணும்னு கே்கறீங்க, தந்திர சாஸ்திரம், நல்லா புரிஞ்சுக்கங்க, இந்த மாதிரி கேள்விகளுக்கு பொதுவா நான் பொதுவெளியில் விடை அளிப்பதை தவிர்க்கிறேன், காரணம் என்னன்னா, கான்ட்ராவர்சி இந்த ட்ரோல் பண்றது, இது மாதிரியான விஷயங்களுக்காக அவாய்ட் பண்ணிட்டுருந்தேன், ஆனா நேர்மையான ஒரு தேடுதல் உடைய, ஞான தேடுதல் உடையவங்க கேட்கிற கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டியது என்னுடைய கடமைங்கறதுனால பதில் சொல்றேன் ; பரமசிவ பரம்பொருள், ஒரு ஆன்மீக சாதனை செய்கின்ற, ஜீவன் முக்த தேடுதல் இருக்கின்றவர்கள், உங்களுடைய உடல் உறவு சார்ந்த, காமம் சார்ந்த, உடலின்பம் சார்ந்த, புலனின்பம் சார்ந்த எல்லா நடவடிக்கைகளையும் சூரியன் சாய்வதற்கு முன்பாக வைத்து கொள்ளுங்கள் அப்படின்னுதான் சொல்றார் ! சூரியன் சாய்வதற்கு முன்பாகவே முடித்து விடுங்கள் ; ஏன்னா இரவை நீங்கள் பெருமானோடு கலக்கின்ற, பெருமானோடு கலக்கின்ற அந்த பரம யோகத்திற்கு, அல்டிமேட் யூனியனுக்காக, மகா சம்போகத்திற்காக, மகா சம்போக முத்திரைனே பெருமான் சொல்றார் ; சூரியன் சாய்ந்த பிறகு சம்போகம் வேண்டாம் ; மகா சம்போகத்தில் ஈடுபடுங்கள் அப்படிங்கிறது பெருமானோடு கலப்பதை மகா சம்போகம்னு சொல்றார் ; சூரியன் சாய்ந்த பிறகு நேரத்தை மகா சம்போகத்திற்காக வைத்து விடுங்கள் சொல்றார் ! ஆழ்ந்து கேளுங்கள், உங்களுடைய இரவு நேரம், சூரியன் சாய்ந்த பிறகான இரவு நேரத்தை பெருமானோடு கலந்திடவும், உங்கள் கடந்த காலத்தை மாற்றி நீங்கள் விரும்பியவாறு அமைத்திடவும், அதுக்கு மட்டும் அலாட் பண்ணுங்க ! நீங்கள் உங்கள் வாழ்க்கையில் விரும்பியதை அனைத்தையும் அடைந்து ஜீவன் முக்தராகவும் வாழ்வீர்கள் என்பதற்கு நான் பொறுப்பு ! ஐயா ! இப்ப நான் சொல்ற ஒவ்வொரு சத்தியமும் என் ஆன்மநாதன், ஆன்மார்த்த மூர்த்தி அருணாசலேஸ்வரன், அண்ணாமலையான் சாட்சியாக சொல்லுகின்றேன் ! இது சத்தியம் ! உண்மை ! சற்றே கடைபிடித்து பாருங்கள், உங்க வாழ்க்கையில நீங்க மாத்தவே முடியாதுன்னு நினைச்ச மனப்பழக்கத்தை எல்லாம் மாத்திரலாங்கய்யா ; உடல் வியாதிகளை மாத்திரலா ங்கய்யா ! இது உயிரின் அறிவியலங்கய்யா ! கல்பதரு அறிவியலங்கய்யா ! சித்தர்களை போலே வாழலாம் ! எல்லாம் வல்ல சித்தனாக எம்பெருமான் எவ்வாறு வெளிப்பட்டாரோ அது மாதிரி எல்லாம் வல்ல சித்தராக வாழலாமங்கய்யா ! இழந்த இளமையை மீண்டும் பெறலாம் ; இழந்த உடல் வளமையை மீண்டும் பெறலாம் ; உடல் வலிமையை மீண்டும் பெறலாம் ; நோயற்ற வாழ்வடையலாம் ; பெரும் செல்வத்தோடு பேரானந்தத்தோடு வாழலாம் ; மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் ! பூசலார் நாயனார் யூஸ் பண்ண அந்த ஞான சத்தியத்தை மட்டும் உபயோகப்படுத்துங்கய்யா; பூசலார் நாயனாருடைய வரலாறு எல்லாம் கேள்விப்பட்டிருப்பீங்க, பல்லவ அரசன் காடவர்கோன் ராஜசிம்மன் காலத்தில் வாழ்ந்திருக்கார் ; உணர்விலேயே அருமையான ஆலயம் கட்டிருக்கார் ! அது ஒரு அழகான பாட்டு, சேக்கிழார் பெருமான் சொல்றார், "பெருமானுக்கு ஆலயம் சமைப்பதற்கு என்ன பொருளை தேடி சமைப்பது"ன்னு . அவர் பரமசிவ பரம்பொருள் மூன்று கண்ணுடையவர், அவர் மூன்றாவது கண்ணை திறந்தால் முப்புரமுமே எரிந்துவிடும் ! இப்ப பிராண பிரதிஷ்டை பண்ணும் பொழுது அவருக்கு திரிநேத்திராய நமஹ அப்படின்னுதான் பிராண பிரதிஷ்டை பண்ணுவோம். சோ திரிநேத்திரமும் மலர்ந்தால் நீங்க எந்த மெட்டீரியல்ல, கல்லோ மண்ணோ சிமெண்ட்டோ மரமோ எதுல நீங்க கோவில் கட்டியிருந்தாலும் அது எரிஞ்சு போயிடும் ; ஏன்னா அவர் திரி நேத்திரமும் திறந்தா திரிபுரமும் எரிஞ்சு போயிருது ; சோ எதுல எதுல கோவில் கட்டுறது, "அன்றினார் புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி, ஒன்றும் அங்கு உதவாது" அப்படின்ற தெளிவுக்கு வந்து, ஆன்ம ஸ்வரூபமான கான்சியஸ்னஸ்ஸ்ஸே

வடிவான அந்த பெருமானுக்கு கான்சியஸ்னஸ்ஸால மட்டும்தான் கோவில் கட்டி வைக்க முடியும் ! ஆத்ம ஸ்வரூபியான சூப்பர் கான்சியஸ்னஸ் வடிவான, சித் ஸ்வரூபமான, சைதன்ய ஸ்வரூபமான, சேதன ஸ்வரூபமான பெருமானுக்கு சேதனத்தாலே, சைதன்யத்தாலே மட்டும்தான் ஆலயம் செய்ய வேண்டும் என்று, அதனால் ஆலயம் எடுப்பித்தால் மட்டும்தான் அது பெருமானுக்கு நிரந்தரமாக இருக்கும் என்று தெளிந்த அறிவோடு, நல்ல புரிஞ்சுக்கோங்க, எல்லாரையும் எல்லாருமே பொதுவா பூசலார் நாயனார் வறுமையில் இருந்ததனாலும் அவருக்கு ஆலயம் செய்வதற்கு கல்லோ மண்ணோ ஆட்களோ செல்வமோ மரமோ வெளியுலக பொருட்கள் கிடைக்காத காரணத்தாலே மனத்தால் கோவில் செய்தார்ன்னு நாம நினைக்கிறது தப்பு ! சேக்கிழார் பெருமான் ரொம்ப தெளிவா சொல்றாரு, சேக்கிழார் பெருமான் சொல்ற வார்த்தைகளை நல்லா புரிஞ்சுக்கோங்க, "அன்றினார் புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி"

ஐயா, பரமசிவ பரம்பொருளுடைய அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் 64 வடிவங்களிலே எத்தனையோ இருக்கு, அதையெல்லாம் சொல்லாது சேக்கிழார் பெருமான் இந்த இடத்தில் "அன்றினார் புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி"ன்னு ஏன் சொல்றார்னா, அவர் அழகா சொல்லிருக்கலாம், "லிங்கமூர்த்திக்கு ஆலயம் எடுக்க எண்ணி" , "மால் ஐயன் காணவொண்ணா தலைவனுக்கு ஆலயம் எடுக்க எண்ணி" சொல்லி இருக்கலாம் அவர் ; சேக்கிழார் வார்த்தையாலே விளையாட தெரியாதுன்னு கிடையாது ; அழகா சொல்லி இருக்கலாம், "அன்றினார் புரம் எரித்தார்க்கு ஆலயம்"ன்ற இதே இலக்கணம் மாறாமல் காமாந்தகரை பற்றி சொல்லி இருக்கலாம், "காமன் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி"ன்னு சொல்லி இருக்கலாம் , அப்படி எல்லாம் சொல்லல, "அன்றினார் புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி ஒன்றும் அங்கு உதவாது ஆக" அப்படின்னா பூசலார் நாயனாருக்கு கல், மண், மரம், வெளியுலக பொருட்களை கொண்டு ஆலயம் செய்வதற்கான தேவையான செல்வமும் சகல வசதிகளும் இருந்தும், அவைகளால் எல்லாம் ஆலயம் எடுத்தால் அது உதவாது என்கின்ற தெளிவினால், ஏன்னா அதனால் எல்லாம் ஆலயம் எடுத்து பெருமானை பிரதிஷ்ட பண்ணி, மூணாவது கண் திறந்தா முடிஞ்சு போச்சு, மொத்தமும் எரிஞ்சு போயிரும், ஏன்னா புர மூன்றாவது கண் திறந்தவுடன் புரத்தையே எரித்துவிட்டார் ; புரமே எரிந்துவிட்டது ; முப்புரம் எரிந்துவிட்டது ; அப்படின்னும்போது கருங்கல், செங்கல், மரம் இவைகளை கொண்டு சமைத்து வைக்கும் ஆலயம் மட்டும் எவ்வாறு நிற்கும் ; எவ்வளவு காலம் நிற்கும் ; அதனாலே "அன்றினார் புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி" உணர்வினால் எடுக்கும் தன்மை நன்று என மனத்தினாலே, உணர்வால, கான்சியஸ்னஸ்னால ஆலயத்தை எடுக்கும் தன்மையே நன்றென மனத்தினாலே, அப்படின்னா சத்துவமான மனத்தினாலே, அந்த தெளிவு வந்த நன்றான சுத்த சத்துவமான மனத்தினாலே நல்ல ஆலயம்தான், நன்றாக புரிந்து கொள்ளுங்கள், மற்ற எந்த ஆலயங்களுக்கும் 'நல்ல' என்கின்ற அடைமொழியை பெருமான் சேக்கிழார் பெருமான் சொல்லல, என்னய்யா சேக்கிழார், ஆஹா ! சனாதன தர்மத்துக்கு வியாசர்ன்னா, சைவத்துக்கு சேக்கிழார்ங்கய்யா; சம்ஸ்கிருதத்துக்கு பாணின்னா, தமிழுக்கு தொல்காப்பியர் போல, சைவ சம்ஸ்கிருதத்திற்கு வியாசருடைய புராணங்கள் எப்படியோ அது மாதிரி சைவ தமிழுக்கு சேக்கிழார் ; ஒரு வார்த்தை கூடவும் இல்லை ; குறையவும் இல்லை ; மாற்றியும் சொல்லவில்லை ; சேக்கிழாரை எடிட்டே பண்ண முடியாதுங்கய்யா, நீங்க எத்தன உரை எழுதினாலும் சரி சேக்கிழார எடிட்டே பண்ண முடியாது ! சில அன்பர்கள் சோசியல் மீடியால கமெண்ட் போட்ருந்தீங்க, என்னுடைய ப்ரநௌன்சியேஷன், என்னுடைய உச்சரிக்கின்ற விதம் பெரிய புராணத்தையோ திருமந்திரத்தையோ பன்னிரு திருமுறைகள், திருமுறைகள் தேவாரம், திருவாசகத்தை என்னுடைய உச்சரிக்கின்ற விதத்தை "இது கொஞ்சம் இது மாதிரி, சரி பண்ணிக்கோங்க சுவாமிஜி" அப்படின்னு போட்டுருந்தீங்க சில பேரு, நன்றாக புரிந்து கொள்ளுங்கள், எங்களுடைய தொண்டைமண்டல ஆதீனத்தோட 229வது சன்னிதானம், எனக்கு தீக்ஷை பண்ணி, சமய தீக்ஷை பண்ணி, விசேஷ தீக்ஷை பண்ணி, ஆச்சாரிய அபிஷேகம் பண்ணி வச்சது 230வது சன்னிதானம் ; 229 அவங்க ரொம்ப கடும் உழைப்பு எடுத்து, திருமந்திரம் உட்பட, இந்த பன்னிரு திருமுறைகளையும் பல மூல ஓலைகளை ஆராய்ச்சி செய்து, இந்த பாட பேதங்களை எல்லாம் திருத்தி, ஒரு தெளிந்த முறையிலே மூல வரிகளை அவர் பாடபேதம் திருத்தி பண்ணி வச்சிருக்கார் ; அதாவது பல மூல ஓலைகள் திருமந்திரம்ன்னா ஒரு அவருடைய காலத்தில குறைஞ்சபட்சம் ஒரு 25 மூல ஓலைகள் கிடைச்சிருக்கு, அவைகள் எல்லாத்தையும் எடுத்து சரியான முறையிலே அந்த வார்த்தை அமைப்பை செஞ்சு வச்சிருக்காரு, அவர் கைப்பட எழுதி, 229வது சன்னிதானம் ரொம்ப மகா ஞானி, சொல்லிவிட்டு சமாதி அடைந்த, ஜீவ சமாதி அடைந்த ஞான புருஷன், ஜீவன் முக்தர் ! அவருடைய பூர்வாசிரம பேர் வந்து முத்துமாணிக்கவாசக முதலியார்ன்னு ; தொண்டைமண்டல ஆதீனத்தோட 229வது சன்னிதானமா இருந்தாங்க ; சைவம், தமிழ் இரண்டிலும் மிகப்பெரிய மகான், ஞானி, அறிஞர் ; சைவத்திலும் தமிழிலும் அதாவது அனுபூதியும் உடையவர் ;ஜீவன் முக்தராகவே வாழ்ந்தவர் ; அதனாலதான் சொல்லி வச்சிட்டு, நல்லா புரிஞ்சுகோங்க, 229வது சன்னிதானம் அவரே சொல்லி சமாதிக்குழி எல்லாம் தயார் பண்ணி, அவரே நேரடியா இருந்து, பார்த்து, நாள் குறித்து, பஞ்சாங்கம் படிக்க வைத்து நாள் குறித்து, எல்லாத்தையும் தயார் பண்ணிட்டு, படுக்கெல்லாம் இல்லாம, எந்த உடல் வியாதி இல்லாம, எந்த பிரச்சனையும் இல்லாம, அன்பர்கள் அவருடைய நெருங்கிய சீடர்கள், அன்பர்கள் ஒரு அத்தனை பேரையும் அழைத்து அமரவைத்து, திருவருட் பயன்ற நூலை படிக்கச் சொல்லி முழுமையாக கேட்டுவிட்டு, எல்லாம் முடிஞ்சதும் எந்திரிச்சு போய் கை கால் கழுவி, அவருடைய சந்தியாவந்தனம் அதையெல்லாம் முடிச்சுட்டு, உட்கார்ந்து அப்படியே தியானத்தில் உட்கார்ந்து, சமாதியில் ஆழ்ந்து உட்கார்ந்தபடியே சித்திர பலகையில், அவருடைய ஆசனத்திலே அமர்ந்த நிலையிலேயே அப்படியே உடலை விட்டார்கள் ; சமாதி அடைந்தார்கள் ; பரமுக்தி அடைந்தார்கள் ; சிவசாயுஜ்யம் அடைந்தார்கள் ; ஜீவன் முக்தரா வாழ்ந்து பரமுக்தி அடைந்தவர் ! அவர், அவருடைய கைப்பட தெளிவாக இந்த பன்னிரு திருமுறைகளையும் பாடபேதம் திருத்தி வச்சிருக்கார் ! அவர் திருத்தி வச்சது சில நூல்கள் திருமந்திரம் எல்லாம் பதிப்பிட்டு வெளியிலயும் வந்திருக்கு. அவருடைய கைப்பட அவர் செய்த அந்த பாடபேதங்கள் பாடபேத திருத்தங்கள் பாடபேதங்களை எல்லாம் திருத்தி அவர் செய்து வைத்தது திருமந்திரம் நூலா வந்துருச்சு ; இரண்டாம் திருமுறையும் நாலாம் திருமுறையும் நூலா வந்துருச்சு ; 12வது திருமுறையான பெரிய புராணத்திலே ஒரு பாகம் அவர் திருத்தி வைத்ததன்படி நூலா வந்துருச்சு ; இன்னும் சில அவர் திருத்தி வைத்த சில நூலாக வெளிவராமல் ஏட்டு பிரதிகளாக மட்டும் இருக்கு ; அவரோடு சேர்ந்து திருப்பணி செய்த, அவருக்கு உதவியாக இருந்த என்னுடைய ஆசான் திரு பாண்டுரங்கனார் அவர்கள் இது அத்துணையும் மிக தெளிவாக பிரதி எடுத்து வச்சிருக்காரு. என்னுடைய சைவத்தமிழ் ஆசிரியர், ஆச்சாரியர் பாண்டுரங்கனார் அவர்கள் மூலமாதான் இது அத்தனையும் நான் கற்றுக்கொண்டேன். அதனால 229வது சன்னிதானம் அவர்கள் செய்து வைத்த பாடபேதத்தின் படியே நான் எல்லாவிதமான பாராயணங்களையும் அதாவது நான் படிக்கும் பொழுது, நான் சொல்லும் பொழுது, நான் பாராயணம் பண்ணும் பொழுது, மேற்கோள் காட்டும் பொழுது, திருமந்திரம் ஆகட்டும், தேவாரம் ஆகட்டும், திருவாசகம் ஆகட்டும், பெரியபுராணம் ஆகட்டும், பன்னிரு திருமுறைகளை முழுவதுமாக நான் மேற்கோள் காட்டும் பொழுதெல்லாம், பாடும் பொழுதெல்லாம் 229வது தொண்டைமண்டல ஆதீனத்தின் குருமகா சன்னிதானமான திருமுத்து மாணிக்கவாசக முதலியார் என்கின்ற பூர்வாசிரமம் பெயருடைய சீலத்திரு ஸ்ரீல ஸ்ரீ ஞானபிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களுடைய பதிப்பு, அவர்கள் கொடுத்த திருத்திய பதிப்பின் படியே நான் சொல்லுவதனால், தயவு செஞ்சு நீங்க யாரு ரெபர் பண்ணனும் நினைச்சாலும் அவருடைய நூல்களை ரெபர் பண்ணுங்க, மற்ற பதிப்புகளை நீங்கள் பார்த்தீர்களானால் சொற்குற்றமோ சொற்பிழையோ இருப்பது போல் தோன்றினால் அது அதற்கு நான் பொறுப்பில்லை ; ஏன்னா நான் இவருடைய இவருடைய வழியிலே பாடம் கேட்டவன் ; அவரோடு இருந்து அவரிடம் பாடம் கேட்ட பாண்டுரங்கனார் தான் எனக்கு சைவத்தமிழ் ஆசிரியர், சைவத்தமிழ் ஆச்சாரியார் ; அவரிடமிருந்து நான் பாடம் கேட்டதுனாலே அத அப்படியே சொல்றேன், ஆழ்ந்து கேளுங்கள், சேக்கிழார் பெருமானுடைய வார்த்தைகளை ஆழ்ந்து புரிந்து கொள்ளுவோம் ; "அன்றினார் புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி ஒன்றுமங்கு உதவாது ஆக உணர்வினால் எடுக்கும் தன்மை" எதனால் ஆலயம் எடுத்தாலும் அது உதவாது என்று, உணர்வாலேதான் எடுக்க வேண்டும் என்கின்ற தெளிந்த முடிவுக்கு வந்து, நன்றென மனத்தினாலே நல்ல ஆலயம் தான் செய்து நின்ற ஊர் பூசலார்தம் நினைவினை உரைக்கலுற்றாம் ! ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், பூசலார் மாதிரி நாயன்மார்கள் எல்லாம் இறந்த காலம் கிடையாது ; அவர்கள் நிகழ் காலம் ; நித்திய நிகழ்வு ! 'அந்த நித்திய நிகழ்வினை நினைவில் இருந்து உரைக்கின்றேன்'னு சொல்றார். “நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த

நன்று நீடாலயத்து நாளை நாம் புகுவோம் நீ இங்கு

ஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய் என்று” கொன்றைவார் சடையார் தொண்டர் கோயில் கொண்ட அருளப்போந்தார் ! ஐயா, திருவிளையாடற் புராணம், பெரிய புராணம், காஞ்சி புராணம், அருணாச்சல புராணம் இதெல்லாம் வாழ்வியல் நூல்களங்கய்யா ; பக்தி இலக்கியங்கள் மட்டும் கிடையாதுங்கய்யா ; அது நம்ம நம்முடைய வாழ்வியலை படம் பிடிச்சு வச்சிருக்கய்யா ! பன்னிரு திருமுறை, திருவிளையாடற் புராணம் இவைகளை எல்லாம் பக்தி இலக்கியங்கள்னு சொல்லி ஒதுக்குறவங்க நம்முடைய தமிழர் வாழ்வியலுக்கு மிகப்பெரிய தீங்கு இழைக்கின்றார்கள் அறிந்தோ அறியாமலோங்கய்யா ! அவைகள் பக்தி இலக்கியங்கள் கிடையாதுங்கயா ; வாழ்வியல் இலக்கியங்கள்ங்கய்யா ! நாம ஒன்னும் தமிழ் சிவிலைசேஷன் தமிழ் இனம் அடிப்படையிலே சிவஞானத்தையும் சிவபக்தியையும் சார்ந்தே வாழ்ந்தவர்களய்யா ; நம்மளுக்கு செக்குலர் லைப், ரிலிஜியஸ் லைப் எல்லாம் தனித்தனியா கிடையாதுங்கய்யா ; நம்முடைய எக்கானமி, நம்முடைய பொருளாதாரம், நம்முடைய நீதி, நம்முடைய சமூகம், நம்முடைய சமூக கட்டமைப்பு, வாழ்வியல் கட்டமைப்பு, வாழ்வாதாரம் சகலமுமே பரமசிவ ஞானமும் பரமசிவ பக்தியும் மையமாக வைத்து அமைக்கப்பட்டதுங்கய்யா ! அதனால பன்னிரு திருமுறையையும் திருவிளையாடற்புராணத்தையும் காஞ்சி புராணத்தையும் அருணாச்சல புராணத்தையும் திருவாரூர் ஆரூர் புராணத்தையும் தயவுசெய்து பக்தி இலக்கியங்கள்னு சொல்லி ஒதுக்காதீங்க ; அவை வாழ்வியல் இலக்கியங்கள் ! இந்த பூசலார் நாயனார் ஒருத்தருடைய கதையை புரிஞ்சுக்கிட்டு உங்கள் வாழ்க்கையை கட்டமையுங்கள் ! முதல்ல உணர்விலே கட்டமையுங்கள் ; என்ன மாதிரி உடம்பு வேணும், ஆரோக்கியம் வேணும், உணர்விலே கட்டமையுங்கள் ! கடந்த காலம் எல்லாம் ஒண்ணுமே கிடையாதுங்கய்யா, உணர்விலேயே கட்டமையுங்கள் ! கடந்த காலம் எல்லாத்தையும் டெலீட் பண்ணிட முடியும்ங்கய்யா, ஜஸ்ட் கண்ட்ரோல் டெலீட், ஓவர் ! உணர்விலே உங்களுக்கு என்ன மாதிரி உடம்பு வேணுமோ அதை கட்டமையுங்கள் ; மனத்திலே உங்களுக்கு என்ன மாதிரி மனம் வேணுமோ அதை கட்டமையுங்கள் ; உயிரிலே உங்களுக்கு என்ன மாதிரி உயிர் வேணுமோ, ஆன்மா வேணுமோ அதை கட்டமையுங்கள் ; உறவுகள் எந்த மாதிரி உறவுகள் வேணுமோ அதை கட்டமையுங்கள் ; கான்சியஸ்ஸா உங்க உணர்வுக்குள்ள செல்வம் என்ன மாதிரி செல்வம் வேணுமோ அதை உணர்விலே கட்டமையுங்கள் ; என்ன மாதிரி ஞானத்தோடு வாழனுமோ அதை கட்டமையுங்கள் ; ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்கய்யா, பூசலார் ஆலயத்துள் பெருமான் புகுந்தது போலே, என்ன அழகா சொல்றார் பாருங்க “நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த

நன்று நீடு ஆலயத்து நாளை நாம் புகுவோம் நீ இங்கு

ஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய்” என்று "கொன்றைவார் சடையார் தொண்டர் கோயில் கொண்டருளப் போந்தார்" இப்ப என்ன, பரமசிவ பரம்பொருளுக்கு பூசலார் கோயிலுக்கு போனா, இந்த அரசன் கட்டிய கோவிலுக்கு போறதுக்கு முடியாதா ?! ஒரே நேரத்துல ரெண்டு இடத்துல அவரால குவாண்டம் சூப்பர் பொசிஷன்ல அப்பியர் ஆகி பண்ண முடியாதா என்ன ? பண்ண முடியும் ; ஆனா பூசலார் மகிமையை உலகத்திற்கு சொல்ல வேண்டும் ; அந்த ஞான நுட்பத்தை நமக்கெல்லாம் கொடுக்கணும் ; இது கதையும் அல்ல ; கவிதையும் அல்ல ; அகவிதை ! வாழ்வை வாழ்வதற்கான அகவிதை ! இதை நமக்கு சொல்லணும் ; உலகத்துக்கு காட்டணும் ; அதனாலதான் பெருமான் இந்த லீலை செய்கின்றார் ; இந்த திருவிளையாடல் செய்கின்றார் ! உங்களுக்கு வாழ்க்கை எப்படி வேணுமோ அப்படி உள்ள கட்டமைங்கய்யா, பெருமான் உள்நுழைவார் ! "கொன்றைவார் சடையார் தொண்டர் கோயில் கொண்டருளப் போந்தார்"

உங்க வாழ்க்கையே எல்லாம் வல்ல சித்தராய், சுந்தரேசராய், பரமசிவனாய் வாழ்வீர்களய்யா ! இது சத்தியம்ங்கய்யா ! மீண்டும் சொல்கிறேன், என் ஆன்மார்த்த மூர்த்தி அண்ணாமலையான் சாட்சியாக சொல்லுகின்றேன், இது சத்தியம் ! இது சாத்தியம் !! உங்களுடைய இன்னர் டயலாக் - உள் உரையாடல், எமோஷனல் பேஸ்லைன் - உங்க உணர்ச்சிகளின் அடித்தளம், எனர்ஜெடிக் போஸ்ச்சர் - உங்கள் உணர்வில் நீங்கள் யார் என்று நினைக்கின்றீர்களோ, உங்கள் 'மூல பாவம்' இந்த மூன்றையும் கான்சியஸ்ஸா கட்டமைங்க ; நீங்க கட்டமைக்கிறத மட்டும் பண்ணுங்க, பெருமான் அதை வெளிப்படுத்திருவாருங்கய்யா !பெருமான் எப்பொழுதும் மிகப்பெரும் கருணையோடு, அளப்பரிய கருணையோடு 'ததாஸ்து ததாஸ்து ததாஸ்து' என்கின்ற மிகப்பெரிய ததாஸ்துவோடு சோபீட் என்கின்ற உணர்வோடு எப்போதும் நிர்விகல்ப சமாதியில் அமர்ந்து, நித்திய கல்பதருவாக இருந்து கொண்டிருக்கிறாரங்கய்யா ; நாம என்ன நம்ம உணர்வுக்குள்ள கட்டமைச்சாலும் உடனே 'ததாஸ்து' அப்படிங்கிறார் ! உங்க கேர்ள்ஃப்ரெண்ட் பிரேக்அப் பண்ணிட்டு போயிருச்சா, பாய்ஃப்ரெண்ட் பிரேக்அப் பண்ணிட்டு போயிட்டாரா இல்ல ஏதாவது ஒரு பிசினஸ் லாஸ் ஆகி செல்வத்தை இழந்துட்டீங்களா, இல்ல ஏதோ ஒரு ஆக்சிடன்ட்னால உடல் நலத்தை இழந்துட்டீங்களா, இல்ல உடம்புல ஏதாவது ஒரு பெரிய வியாதி வந்துருச்சா, என்னவானாலும் கவலைப்படாதீங்க, தீர்வு இருக்கு ; இல்ல அறிவில்லாத காரணத்தினால தப்பான முடிவுங்க எடுத்து வாழ்க்கையில சிக்கல்ல பிரச்சனைகள்ல மாட்டிட்டீங்களா, இல்ல பாய் பெஸ்டி ஓடி போயிருச்சா, கேர்ள் பெஸ்டி ஓடி போயிருச்சா, இல்ல உறவுகள்ல சிக்கலா, காம்ப்ளிகேட்டடா இருக்கா, என்ன வேணாலும் தீர்வு இருக்குங்கய்யா ! ஆழ்ந்து கேளுங்க, இந்த ஒரே ஒரு சத்தியம்தான், தினந்தோறும் பரமசிவ பரம்பொருள் உங்களுக்கு நேரடியா அப்பாயின்ட்மெண்ட் கொடுத்திருக்காரு ; இரவு உறங்கும் பொழுதும் காலையில எந்திரிச்ச உடனே, இரவு உறங்கும் பொழுது படுக்கையில உடம்பை சரணாகதி பண்ணிட்டு, காரண சரீரத்திற்குள் கரைந்து, அப்படியே உடம்பு அடங்கினது உங்க உணர்வுக்குள்ள உங்களை பத்தி நீங்க வச்சிருக்கிற கருத்துக்கள், கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள், என்னென்னவெல்லாம் அழிக்கணுமோ அதைெல்லாம் அழிச்சிட்டு, நீங்க என்னவெல்லாம் உருவாக்கணும் நினைக்கிறீங்களோ, எப்படி எல்லாம் உங்க வாழ்க்கை இருந்திருக்கணும், இருக்கணும் அப்படின்னு நினைக்கிறீங்களோ, கடந்த காலத்தில் எப்படி இருந்திருக்கணும், இப்ப எப்படி இருக்கணும், எதிர்காலத்தில் எப்படி இருக்கணும் நினைக்கிறீங்களோ அத்தனையும் அழகா உருவாக்கி வைங்க, உணர்வினால் உருவாக்கி வைங்க, நீங்க உணர்வுனால என்ன உள்ள உருவாக்குறீங்களோ அத அப்படியே நிஜமாயிடுங்கய்யா, அதுக்கு நாம் பொறுப்புங்கய்யா, வெறும் இந்த 18 நாள் முயற்சி பண்ணுங்க, சித்ரா பௌர்ணிமை வரைக்கும், இந்த 18 நாள் ராத்திரி உறங்க போகும்பொழுது முயற்சி பண்ணுங்க, அதே மாதிரி காலையில எந்திரிச்ச உடனே தூக்கத்தில இருந்து எந்திரிச்சிட்டீங்க, ஆனா முழுசா இன்னும் எந்திரிச்சு போகணும்னு தோணல, அப்படியே படுத்துருங்க, கொஞ்ச நேரம் படுத்து நீங்க உணர்வினால் உருவாக்கியதை மீண்டும் உருவாக்குங்க, ராத்திரி உறங்க போறதுக்கு முன்னாடி உணர்வினால் உருவாக்கி வச்சத மீண்டும் அதே மாதிரி உணர்வினால் உருவாக்குங்க ! இங்க சேக்கிழார் பெருமான் சொல்லும்பொழுது சொல்றாரு 'நின்ற ஊர் பூசல் அன்பன் நெடிது நாள் நினைந்து செய்த' - ரொம்ப நாள் அவர் நினைந்து செய்தார்னு ! நீங்க ரொம்ப நாள்ல்லாம் நினைந்து செய்ய வேண்டாங்கய்யா, இந்த 18 நாள் நினைந்து செய்யுங்கய்யா போதும், பெருமான் மேனிபெஸ்ட் ஆயிடுவாரு ! "நின்ற ஊர் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்று நீடாலயத்து நாளை நாம் புகுவோம்" அப்படின்னு அந்த அரசனுக்கு சொல்றார் ; "பூசலார் நாயனார் கட்டி இருக்கிற கோவிலுக்கு நான் போகணும்பா, நீ நாளையை விட்டு மீதி எந்த நாள்ல வேணாலும் உன்னுடைய திருக்குடமுழுக்கை, கும்பாபிஷேகத்தை வைத்துக்கொள், நான் வருகின்றேன்," என்று கொன்றைவார் சடையார் தொண்டர் கோயில் கொண்ட அருளப்போந்தார், சேக்கிழார் பெருமானே ! என்ன அழகான வார்த்தைகளாலே வடித்து கொடுத்துட்டாரு, ஆக்சுவலா, பெரிய புராணமே ஒரு மிக பெரிய பூமியிலே வார்த்தையால் வடித்து வைக்கப்பட்ட கைலாசமங்கய்யா; பெரிய புராணத்துக்குள்ள நீங்க நுழைஞ்சங்கீன்னா, கைலாசத்துக்குள்ள நுழைஞ்சிடலாம் ! இதே மாதிரி ஒருமுறை நாலாயிர திவ்ய பிரபந்தங்கள், வைஷ்ணவ நூல்கள் மேலயும் உரை சொல்றேன் ; அவைகள் அது அது சொல்ல சொல்ல சொல்ல உயிரே இனிக்கின்ற என்ன அருமையான, தமிழிலே வார்த்தைகளாலேயே வைகுண்டத்தை கட்டி வைத்திருக்கிறார்கள் ஆழ்வார்கள் ! இங்க தமிழ் வார்த்தைகளாலேயே கைலாசத்தையே கட்டி வச்சிட்டார் சேக்கிழார் ! பெரிய புராணத்துக்குள் புகுந்தால் கைலாசத்துக்கு உள்ள பூந்துருவீங்க, இந்த 'மூல பாவம்' உங்களுடைய அந்த ஒரிஜினல் அசம்ஷன் 'மூல பாவ'த்தில மீண்டும் மீண்டும் உங்களுக்குள்ள உங்களை வலிக்க வைக்கிற, ஹர்ட் பண்ண அந்த மாதிரி வலிகள், நினைவுகள் இதெல்லாம் வெறும் நினைவா தங்கிறது இல்லைங்க, அது ஒன்னும் டெட் மெமரி கிடையாது ; அது உயிரோட இருக்கிற கொடும் அசுரர்கள், ராட்சசர்கள் ; அது உங்களை மீண்டும் மீண்டும் அந்த கொடுமையான அனுபவத்திற்கே கொண்டு செல்லுகிறது ; அது அப்படியே உங்களுடைய அந்த மெமரி மூடா மாறுதுங்கயா, மூடு வந்து உங்களுடைய தினசரி வாழ்க்கைக்கான ரியாக்ஷனா மாறும் ; அந்த ரியாக்ஷன்ஸ் வந்து ஹேபிட்டா மாறும் ; அந்த ஹேபிட்ஸ் வந்து உங்களுடைய செல்ப் டெபனிஷனா மாறும் ; உங்களுடைய செல்ப் டெபனிஷனே உங்களுடைய ஒரிஜினல் அசம்ஷனா மாறிடும் ! நல்லா புரிஞ்சுக்கோங்க, இது ஒன்றை ஒன்று எப்படி விஷியஸ் சர்க்கிளா மாறி உங்களுக்கு நரகத்தை உருவாக்குதுன்றத புரிஞ்சுக்கோங்க ! உங்களுக்குள்ள தங்குற வலி நினைவுகள் அதை நீங்க அழிக்காம விட்டீங்கன்னா, மூடா மாறும், அது மெதுவா மனநிலையா, மூடா மாறிடுது ; அந்த மனநிலை உங்க வாழ்க்கைக்கு எல்லா சூழ்நிலைக்கு நபர்களுக்குமான ரியாக்ஷனா மாறுது ; எதிர்வினையாகுது ! எத்தனை பேருக்கு புரியுது ? நல்ல மூடுல இருந்தீங்கன்னா, யாராவது ஒருத்தர் கை தவறி ஒரு கப்பையோ எதையாவது ஒன்னுத்த டிராப் பண்ணி, அது உடைஞ்சு போச்சுன்னா, அவங்கள கத்த மாட்டீங்க, "சரி விடு அது என்ன தானா இயற்கையா சாவு வந்தா சாகும், இப்படித்தான் ஒன்னு ரெண்டு உடையும் விடு,"அப்படின்னு விட்டுருவீங்க ; ஆனா நீங்க பேட் மூட்ல இருந்தீங்கன்னா, உங்களுடைய யூசுவல் மூட் யார் வந்தாலும் முன்னாடி வந்தா அவங்கள கடிச்சு வைக்கிற அந்த மூட்ல இருந்தீங்கன்னா, ஒரு சின்ன டம்ளர் கீழ விழுந்தா கூட அது ஒன்னும் உடைஞ்சு போயிருக்காது, சும்மா கீழ விழுந்துருக்கும், உடனே, 'உங்க அம்மா வீட்ல இருந்தா எடுத்துட்டு வந்த, வீட்ல இருக்கற அத்தனையும் உருட்டுற, யார் மேல இருக்கற கோபத்தை யார் மேல காட்டுற'... உங்க ரியாக்ஷன்ஸ், அந்த அம்மா உடனே 'ஆமா எங்க அம்மா வீட்லதான் எடுத்துட்டு வந்தேன், இந்த டம்ளர் எங்க அம்மா வீட்ல இருந்து எடுத்துட்டு வந்தேனான்னு தானே கேக்குறே, இந்த குக்கர் எங்க அம்மா வீட்ல இருந்து நான் எடுத்துட்டு வந்தேன், பாரு, இந்த குக்கர போடுறேன்'னு, குக்கர 'டம்'னு போடும். இந்த கேஸ் அடுப்பு எங்க அம்மா வீட்ல இருந்து எடுத்து வந்தா கேஸ் அடுப்பு எடுத்து போடும், என்ன பண்ணுவீங்க?! இந்த மூடு, மனநிலை ரியாக்ஷனா, எதிர்வினையாக மாறுகிறது ; அதுக்கப்புறம் அந்த எதிர்வினை, அந்த ரியாக்ஷன் பண்ற அது பழக்கமா, ஹேபிட்டா மாறும் ; காலையிலிருந்து சாயந்திரம் வரைக்கும் யாரு கண்ணு முன்னாடி வந்தாலும் கடிச்சு வைக்கிறது, வவ் வவ் ன்னு எரிஞ்சு விழுறது, இது ஹேபிட்டா மாறுன உனே, அது உங்களுடைய செல்ப் டெபனிஷனா மாறிடும் ; உங்களுடைய சுய வரையறையா மாறுது ! முதல்ல சில உறவுகள் கூட இந்த மாதிரி எரிஞ்சு விழுந்துட்டு இருப்பீங்க ; அப்புறம் எல்லா உறவுகளுக்கும் அது பரவ ஆரம்பிக்கும் ; அந்த 'சுய வரையறை', செல்ப் டெபனிஷனே உங்களுடைய ஒரிஜினல் அசம்ஷனா மாறி போயிடும் ; அந்த ஒரிஜினல் அசம்ஷன் அப்படிங்கறது திரும்ப திரும்ப நினைவு கூறப்பட்ட தாக்கங்களிலிருந்து உருவான 'ரூட் ஐடென்டிட்டி', 'வேர் அடையாளம்'கய்யா ; உங்களுடைய எல்லா வார்த்தைகளுக்கும், உங்க இன்னர் டயலாக் மற்றும் வெளியில் நடத்துற உரையாடல்கள், இது எல்லாத்துக்கும் கீழ ஒளிஞ்சிருந்து ஆழமா ஓடுற அடிப்படை இன்னர் டயலாக், வார்த்தைகள் நீங்க உங்களை பத்தி வச்சிருக்கிற இன்செக்யூர், 'யூ ஆர் நாட் எனாஃப்' உங்களுக்கு போதுமான அளவுக்கு சக்தி, தகுதிகள் இல்ல, நீங்க எப்பவுமே ரிஜெக்ட் ஆவீங்க லைப்ல, இன்டர்வியூ போனா ரிஜெக்ட் ஆவீங்க, லவ்ல ரிஜெக்ட் ஆவீங்க, பிரெண்ட்ஷிப்ல ரிஜெக்ட் ஆவீங்க, ஃபேமிலில ரிஜெக்ட் ஆவீங்க, ஆல்வேஸ் யூ ஆர் இன்விசிபிள் ரிஜக்டட், லைப்ல யாருமே உங்களை சப்போர்ட் பண்ணல, நீங்க லைப்ல நீங்க சக்சஸ் ஆகுறது உங்களுக்கு சப்போர்ட்டே இல்ல, இந்த மாதிரியான ரூட் ஐடென்டிட்டிஸை நீங்க உருவாக்கி வச்சிறீங்க ; அதுதான் பிரச்சனை, அதுதான் உங்கள் வாழ்க்கையில் வெளிப்படும் ! இவைகள் அனைத்தையும் நீங்க உருவாக்கி வச்சிருக்கீங்க அப்படிங்கிறது கெட்ட செய்தி, இதை அழித்து விட முடியும் அப்படிங்கிறது நல்ல நல்ல செய்தி, ரொம்ப சுலபமா அழிச்சு விட முடியும் அப்படிங்கிறது கைலாயத்தில் இருந்து உங்களுக்கு வரும் மிகப்பெரிய நல்ல செய்தி !! இந்த மாதிரி உங்களை நீங்களே பல விதத்தில சீரழிச்சு வச்சிருக்கீங்க அப்படிங்கிறது கெட்ட ரூட் ஐடென்டிட்டிய 'மூல பாவ'த்தை ஒரிஜினல் இம்ப்ரஷன நீங்க உருவாக்கி வச்சிருக்கீங்க என்றது கெட்ட செய்தி, அதை மாத்தி சரி பண்ணிட முடியும் அப்படிங்கிறது நல்ல செய்தி, ரொம்ப சுலபமா அதை மாத்தி சரி பண்ணிட முடியும் அப்படிங்கிறது கைலாசா நியூஸ் !!! ஆழ்ந்து கேளுங்க, இந்த மாதிரி மோசமான ரூட் ஐடென்டிட்டிய நீங்க கிரியேட் பண்ணி வச்சிருக்கீங்க அப்படிங்கிறது பேட் நியூஸ், அதை நீங்க மாத்த முடியும் அப்படிங்கிறது குட் நியூஸ், ரொம்ப ஈசியா நீங்க விரும்புன மாதிரி நல்லபடியா அதை மாத்திர முடியும் அப்படிங்கிறது கைலாசா நியூஸ் !!!! நல்லா புரிஞ்சுக்கங்க, இதுல முதல்ல நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது, இந்த 'மூல பாவம்' உங்களுடைய 'நித்திய ஸ்வபாவம்' ; 'அகம் ஸ்வபாவம்' கிடையாது ; அது உங்கள் இயல்பு அல்ல ; அது உங்களுடைய அடையாளமாக, ஐடென்டிட்டியாக மாற்றப்பட்ட, நினைவு கூறப்பட்ட வலிங்கய்யா... அவ்வளவுதாங்கய்யா ! நீங்கதாங்கய்யா உருவாக்கனீங்க, நீங்களே அதை இடிச்சு தள்ளிட முடியும்ங்கய்யா ; கையாலே எழுதியதை காலாலே அழித்து விடலாம் ; காலாலே எழுதியதை கையாலே அழித்து விடலாம் ; நீங்கதான் எழுதினதுங்கறதால உங்களால ஈசியா அழிச்சிட முடியும் !!! தலை எழுத்து அப்படின்னு நீங்க நினைக்கிறது கூட வேற யாரோ எழுதினது இல்லைங்கய்யா, நீங்களே தலையில் எழுதிகிட்டது தாங்கய்யா, அதை உங்களால அழகா அழிச்சிட முடியுங்கய்யா ! நீங்க உங்க தலையில் எழுதிகிட்டத எல்லாம் நீங்க அழிங்க, உங்கள மீறுன சக்திகளான பிரம்மன் உங்க தலையில் எழுதினத நான் அழிச்சறேன், கவலைப்படாதீங்க, உங்களுக்கு அபயம் அளிக்கின்றேன் ! நன்றாக புரிந்து கொள்ளுங்கள், நான் சொல்வதை கேட்பவர்கள், இந்த சத்தியங்களை புரிந்து கொள்பவர்கள், இதை வாழ நினைப்பவர்களுக்கு அழிவில்லை, கவலைப்படாதீர்கள், நீங்கள் செய்ய வேண்டிய முயற்சியை மட்டும் நீங்கள் செய்யுங்கள் ; உங்களை தாண்டி உங்களால் செய்ய முடியாதவைகளை நான் செய்து கொடுக்கின்றேன் !! உங்களுடைய ஓட்டோ நோட்டோ எனக்கு தேவையில்லை என்பதனாலும், உங்களிடமிருந்து நான் அடையப்பட வேண்டியது எதுவுமே இல்லை என்பதனாலும், உங்கள் மீது நேர்மையான காதல் உடையவன் என்பதனாலும், சத்தியத்தை அப்படியே சொல்லுகின்றேன் !!! நான் சொல்வது ஒரு வார்த்தையும் பொய்ல்ல, முழு சத்தியம் ! உங்களுக்கு உங்களிடம் பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்பதனால், சத்தியத்தை, அதன் சாத்தியத்தை அப்படியே சொல்லுகின்றேன், கேளுங்கள் !! கடந்த காலம் உங்களுக்குள் 'வெறும் நினைவா'க மட்டும் தங்குவதில்லை ; அது, 'மனநிலை'யாக மாறுகின்றது; 'மனநிலை', 'நோக்கு நிலை'யாக - பர்ஸ்பெக்டிவா மாறுது ; பர்ஸ்பெக்டிவ், ஆட்டிடியூடா - 'மனப்பான்மை'யா மாறுது; 'மனப்பான்மை' - ஆட்டிடியூட் 'மூல பாவமாக', 'ரூட் ஐடென்டிட்டி'யா மாறுது; அந்த 'ரூட் ஐடென்டிட்டி' உங்க எதிர்காலமா மாறிடுது ; அதனால கடந்த காலத்தை அழித்து விடுங்கள் !!! நீங்கள் விரும்பிய விதத்திலே உங்கள் கடந்த காலத்தை உருவாக்குங்கள் ; இது சத்தியம் ; சாத்தியம் ; இது சத்தியம் ; சாத்தியம் !!! ஆழ்ந்து கேளுங்கள், அடுத்த ஒரு அருமையான, ஆழமான, முக்கியமான சத்தியம் ... நினைத்து பார்த்து இந்த 'மூல பாவ'த்தை கட்டமைப்பவர், இந்த 'நினைவு கூறுதல்' அப்படிங்கிற செயலுக்கும் முந்தையவர், ஆழ்ந்து கேளுங்க, அதற்கும் முற்பட்டவர் 'ஆதி', 'மூலம்', 'நினைவு கூறுபவர்', நினைவு கூறப்படும் நினைவுகள் அல்ல ! யோகவாசிஷ்டத்தோட ஸ்திதி பிரகரணத்தோட மூன்றாவது அத்தியாயம், எட்டாவது ஸ்லோகம் "அதஹ ஸ்மரதுர்பாவேன ஸ்ம்ருதிர் ஓதேதிகிம் கதம் அவஸ்யம்ஹி மஹா கல்பே சர்வே மோக்ஷைகபாகினஹ" - 'நினைவு கூர்பவர்' இல்லாத போது நினைவு எவ்வாறு எழும் ?! மகா பிரளயத்தில் அனைத்து ஜீவராசிகளும் முக்தி பெற்று பரபிரம்மத்தில் லயமாகின்றவர் லயமாகின்றனர் ; ஆகவே தனித்த நினைவுகள் எதுவும் அங்கே நிலைக்காது ; இந்த சாஸ்திர பிரமாணம் தாங்கய்யா உங்களுடைய முக்திக்கும், ஜீவன் முக்திக்கும் அதாவது எப்படி வேண்டுமோ அவ்வாறு வாழுகின்ற ஜீவன் முக்த வாழ்க்கைக்கும், எதுவுமே வேண்டாது பரத்தோடு நிறைந்திருக்கும் பரமுக்தி, எல்லாம் கடந்த பரமுக்தி வாழ்க்கைக்குமான அடிப்படை சூத்திரம் இந்த வார்த்தை, இந்த சாஸ்திர பிரமாணம் !

நல்லா புரிஞ்சுக்கோங்க, நினைவு கூறுபவராகிய நீங்கள் 'அகம் ஸ்வபாவம்' ; அதுதான் 'நினைவு கூறுது' ; அது, இல்லாமல் 'நினைவு கூறுதலா'ன ரிமெம்பரிங் நடக்காது; நீங்க இந்த விட்னஸ்சிங் பிரின்சிபில புரிஞ்சுக்கிட்டீங்கன்னா இது புரியும் ; அதாவது உங்களுக்குள்ள ஓடுற எல்லா நினைவுகளையும் சாட்சியா பார்த்தீங்கன்னா, உங்களுக்குள்ள இந்த நினைவுகளை தாண்டி நீங்க இருக்கீங்க என்றது புரியும் ; அந்த சாட்சியையே சாட்சியா பார்த்தீங்கன்னா, சைதன்யத்தின் ஒளி - லைட் ஆப் கான்சியஸ்னஸ், அந்த சேதனம் - சித் இல்லாமல் ஒரு எண்ணம் கூட எழாதுங்கறது புரிஞ்சிருங்க ; சித்தோட சாநித்தியத்திலதான் சகலமும் எழுந்து, இருந்து, விழுகின்றது ! சித் ஆ - அகம் ஸ்வபாவம் தான் மூலம் ; அதுதான் ஆரிஜின் ; அதுதான் முதல் ; அதில் இருந்துதான் மூல பாவமே இயங்குகிறது ; நினைவுக்கு முந்தையது 'சைதன்யம்' அப்படிங்கிறது புரியும் !

'அதஹ ஸ்மர்துரபாவேன ஸ்ம்ருதிர்வோதேதிதிகிம் கதம் அவஸ்யம்ஹி மஹா கல்பே சர்வே மோக்ஷைக பாகினஹ"

இந்த நிமிடத்திலிருந்து நாளை மீண்டும் சத்சங்கத்திற்கு வரும்வரை நான் கொடுக்கிற இந்த ஒரு தீக்ஷையை தயவு செய்து செஞ்சு பாருங்க, இப்ப கொடுக்கிற இந்த தீக்ஷையை நல்லா உள்வாங்கிக்கோங்க, உங்களுக்குள்ள நடக்கிற உங்க எண்ணங்கள், மூடு, உங்க உங்களை பத்தி நீங்க வச்சிருக்கிற கருத்து எல்லாத்துக்கும் உங்க ரியாக்ஷன், உங்க மூட்ஸ், உங்க ஹேபிட்ஸ், உங்க மெமரி, உங்களை பத்தி நீங்க வச்சிருக்கிற செல்ப் டெபனிஷன், உங்களுடைய ரூட் அசம்ஷன், ஒரிஜினல் அசம்ஷன், மூல பாவம் எல்லாத்தையும் அப்படியே சாட்சியா பாருங்க ; அதோட சண்டை போடாதீங்க ; அதை ஒன்னும் பண்ண வேணாம் சாட்சியா பாருங்க ! இந்த சின்ன பிள்ளைங்க ஓவரா டான்ட்ரம் த்ரோ பண்ணும்போது நீங்க ஒன்னும் பண்ணனும். ஜஸ்ட் அதை சாட்சியா பார்த்தீங்கன்னா போதும். சைலன்ட்டா அடங்கி உடாந்துரும். அதே மாதிரிதான்.

உங்களுடைய அகம் பாவம், மூல பாவமே நீங்களே உங்களுக்குள்ள போடுற டான்ட்ரம் தாங்கய்யா, எத்தனை பேருக்கு நல்லா புரியுது, ஏதாவது கிடைக்கணும் அப்படின்னும் போது டான்ட்ரம் த்ரோ பண்றது, அது கிடைச்ச அப்புறம் நீங்க 'நீங்க விரும்புன காலத்திலயே கிடைச்சிருக்கணும், ஏன் டிலே ஆகி கிடைச்சது ?' ன்னு டேன்ட்ரம் த்ரோ பண்றது ; இல்ல அது கிடைச்சாலும் சரி, 'இப்படிதான கிடைச்சிருக்கணும், அப்படி ஏன் கிடைச்சது?' ன்னு டேன்ட்ரம் த்ரோ பண்றது. உங்க அகம் பாவமே உங்களுடைய மூல பாவமே உங்க வாழ்க்கையை நோக்கி நீங்க த்ரோ பண்ணிட்டே இருக்கிற டேன்ட்ரம் தான்னு எத்தனை பேருக்கு புரியுது, உள்ளுக்குள்ள ஒரு சின்ன பிள்ளையை வச்சுகிட்டு நீங்க படாத பாடுபட்டுட்டு இருக்கீங்கய்யா, இது எத்தனை பேருக்கு புரியுது, கை தூக்குங்க, அந்த குழந்தையே நீங்க தாங்கய்யா, உள்ளுக்குள்ள உயிர் முதிர்ச்சி அடையாத, ஆன்ம முதிர்ச்சி அடையாத, மெச்சூர்ட் ஆகாத ஒரு குழந்தையை வச்சுகிட்டு, அது வாழ்க்கையில என்ன நடந்தாலும் டான்ட்ரம் த்ரோ பண்ணிட்டு இருக்குது, அதை ஃபேஸிபை பண்றதுலயே உங்க வாழ்க்கையே போயிருதுங்கய்யா, நீங்க ஜென் ஆல்பாவா இருந்தாலும் சரி, ஜென் பூமரா இருந்தாலும் சரி, 90ஸ் கிட்ஸா இருந்தாலும் சரி, ஜென் ஜியா இருந்தாலும் சரி, நீங்க எந்த ஜெனரேஷன் இருந்தாலும் சரி உள்ளுக்குள்ள அந்த பிள்ளையை, அந்த குழந்தையை வச்சிட்டு வாழற வரைக்கும் வாழ்க்கை பெருந்துக்கமாதான் இருக்கும் ! அதனால அந்த டேன்ட்ரம் த்ரோ பண்ற குழந்தையை, முதல்ல மெமரி வரும், உடனே ஏதாவது ஒரு மூடு வரும், இல்லன்னா உடனே ஏதாவது ஒரு ரியாக்ஷன் வரும், இல்ல ஏதாவது ஒரு ஹேபிட், ஏதாவது ஒரு இந்த செல்ப் டெபனிஷன், இல்லன்னா உங்களுடைய மூல பாவமான ரூட் அசம்ஷன் மேனிபெஸ்ட் ஆகும் !

இதுங்களுக்கு நடுவுல படாத பாடுபட்டு சிக்கி தவிக்கிறீங்க, இது எல்லாத்தையும் ஸாக்ஷியா பாருங்க, ஸாக்ஷியா பார்க்க ஆரம்பிச்சீங்கன்னா அப்படியே எல்லாம் அடங்கும் ; அடங்கினதும் ஸாக்ஷியையே ஸாக்ஷியா பாருங்க, அந்த அகம் ஸ்வபாவம் பரம சாந்தத்தோடும் முழு விழிப்புடனும் எதனாலும் தொடப்படாமல் சுயம் பிரகாசமாக, ஞான பிரகாசமாக உங்களுக்குள் இருப்பதை காண்பீர்கள் ! இதுவே நான் உங்களுக்கு இப்பொழுது அளிக்கும் தீக்ஷை, சக்தி பாதம், சக்திநிபாதம், உபதேசம் !! இதை கடைபிடித்துவிட்டு நாளை சத்சங்கத்திற்கு வாருங்கள் ; நாளை சத்சங்கத்தின் நீங்கள் வரும்வரை இதை ஆழ்ந்து தொடர்ந்து கடைபிடியுங்கள் !!! அடுத்த நிலை பாடத்திற்குள் நாளை செல்வோம். நீங்கள் எல்லோரும் ஸாக்ஷியை ஸாக்ஷியாக பார்க்கும் பரம ஸாக்ஷி பாவத்தில் இருந்து பரம்பொருளாய் இருந்து, நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் கரைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன் !!!

ஆனந்தமாக இருங்கள் !!!

Details

The talk

Date
21 April 2026
Language
English

The recording

Recording
No recording linked to this transcript

The transcript

Status
Live notes
Time-synced
Not time-synced
Length
5,170 words · 29 min read
Topics
None recorded