☰KAILASA Library/Satsangs/As the ultimate manifestation of Paramashiva, Gajamukha Anugraha…Sign in
14 April 2026

“As the ultimate manifestation of Paramashiva, Gajamukha Anugraha…”

Live notesUntitled · opening words shown
The Satsang

ஓம்... ஓம்... ஓம்...

As the ultimate manifestation of Paramashiva, Gajamukha Anugraha Murthy, I bless you all with Paramadvaita. All the Paramashivasena participants in Gini Bissa, Kailasa Gini Bissa, Kailasa Thiruvannamalai, and all the Chit Sabha members, Raja Sabha members, Kailasavasis... Blessings to each and every one of you. As the Paramashiva ultimate manifestation Gajamukha Anugraha Murthy, I bless you all... பரமாத்வைதப் பிராப்திரஸ்து, சர்வ மங்களப் பிராப்திரஸ்து, சர்வானந்தப் பிராப்திரஸ்து, சர்வ ஐஸ்வர்யப் பிராப்திரஸ்து, சிவஞான போதப் பிராப்திரஸ்து.

Blessings to all the Chit Sabha members, Kailasa Gini Bissa, பாலாஜி சீனிவாசன், மா நித்யானந்த யோகேஸ்வரி, ஸ்ரீ நித்யானந்த யோகேஸ்வரா, மா ஞானரூபிணி, மா வேதாந்த யோகிணி, blessings to each and every one of you. And... now open...

ஓம்... ஓம்... ஓம் நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பரியந்தாம் வந்தே குரு பரம்பராம்!

ஓம்... உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

திருவிளையாடற் புராணம்... இந்த சத்சங்கத்தின் ஞான ரசவாதத்திற்குள் நுழைவதற்கான அடிப்படை அறிமுகத்தை அளிக்கின்றேன், புரிந்து கொள்ளுங்கள். அடிப்படையான இந்த சில சத்தியங்களை புரிஞ்சிக்கோங்க.

முதல்ல திருவிளையாடற் புராணத்திலும், பெரியபுராணத்திலும் சொல்லப்பட்டிருக்கின்ற இந்த நிகழ்வுகள் சத்தியத்தை அப்படியே டாக்குமெண்ட் (document) பண்ணி வச்சிருக்காங்க. அத முதல்ல புரிஞ்சிக்கோங்க. இங்க திருவிளையாடற் புராணமோ, பெரியபுராணமோ ஸ்பிரிச்சுவல் பொயட்ரி (spiritual poetry) கிடையாது. ஒரு ஆன்மீக கவிதை கிடையாது. கவிதையின் நடையில் சொல்லப்பட்டிருப்பதனாலேயே அதில் பொய் கலந்திருக்கும் என்று நமக்கு செய்யப்பட்டிருக்கின்ற மூளைச்சலவை திருவிளையாடற் புராணத்தின் முன்பாகவும், பெரியபுராணத்தின் முன்பாகவும் தோற்றுப்போய்விடுகின்றது. அதை நல்லா புரிஞ்சிக்கோங்க.

ஐயா... இந்தப் பிரபஞ்சம் நம் ஐம்புலன்களால் பார்க்கின்ற, புரிந்துகொள்ளுகின்ற அந்த அளவோடு நின்று விடுகிறது என்று நினைத்தால் உங்களைப் போன்று ஒரு மிகப்பெரிய குறையறிவு உடையவர் வேறு யாரும் இருக்க மாட்டாங்க. தயவுசெய்து அந்த குறையறிவு மூளைச்சலவையை... அதுக்குப் பகுத்தறிவுன்னு பெயர் வேறு கொடுத்து, அந்த குறையறிவு மூளைச்சலவையிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்.

அது மெட்டீரியலிசம் (materialism) ஆகட்டும், இல்ல நாத்திகம் ஆகட்டும், லோகாயுதம் ஆகட்டும்... நல்லா புரிஞ்சிக்கோங்க, லோகாயுதம் வேற, மெட்டீரியலிசம் வேற. வெஸ்டர்ன் மெட்டீரியலிசத்தை (Western materialism) தான் மெட்டீரியலிசம்னு சொல்றேன். ஈஸ்டர்ன் மெட்டீரியலிசம் (Eastern materialism) ஒன்னு இருக்கு அதுதான் லோகாயுதம். ஈஸ்ட்லயே (East) கீழை நாடுகளிலேயே ரெண்டு மூணு விதமான நாத்திகம் இருக்கு. பாரம்பரிய நாத்திகம், நவீன கால நாத்திகம். இந்த நவீன கால நாத்திகம் மோர் ஆர் லெஸ் (more or less) பார்த்தீங்கன்னா இந்து மதத்தை அழித்தாக வேண்டும், சனாதன இந்து தர்மத்தை அழித்தாக வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு செய்யப்படும் மூளைச்சலவை, அது நத்திங் பட் ஜஸ்ட் தீய சக்தி. தீய சக்தி, அதுல ஒன்னும் அதுல ஸ்டஃப்பே கிடையாது. ஒரு டிபேட் பண்ணி, ஆர்கியூ பண்ணி, நேர்மையான ஒரு வாதப் பிரதிவாதங்கள் செய்து, வாக்கியார்த்த சதஸ் பண்ணி அந்த மாதிரிலாம் செய்யறதுக்கெல்லாம் அங்க மெட்டீரியலே கிடையாது. ஜஸ்ட் ஒரு தீய சக்தி.

ரவுடி கும்பல், இல்ல பொலிட்டிகல் பவர், இந்த ஹார்ட் பவரை ஹோல்ட் பண்ணி, ஹார்ட் பவரை கேப்சர் பண்ணி, அந்த வேகத்தோடு சாஃப்ட் பவரை அழிக்கிற ஒரு தீய சக்தி, தீவிரவாத தீய சக்தி, அவ்ளோதானே தவிர, இதுல வாதப் பிரதிவாதங்கள், புரிந்துகொள்ளுதல், ஞானம், அறிவு என்பதற்கான பங்களிப்பே அங்க இல்ல. அந்த டைமென்ஷனே அங்க இல்ல.

சோ இப்ப இந்த ஒன்னொன்னா பாருங்க. ஒவ்வொரு நிலையா சொல்றேன். அதாவது... திருவிளையாடற் புராணம், பெரிய புராணம் போன்ற இந்த புராணங்கள்லாம் பிரபஞ்சத்தோட பல்வேறு பரிணாமங்களிலும், பரிமாணங்களிலும் நிகழ்ந்தவற்றைப் பார்த்து, நமக்கு நேரடியாக சத்தியத்தை, சத்தியத்தின்படியே அமைத்துத் தந்திருக்கிறார்கள்.

நீங்க ஒன்னு நல்லா புரிஞ்சுக்கணும்... திருவிளையாடற் புராணம் செய்து வைத்த வியாசரோ, நீலகண்ட தீக்ஷிதரோ, திருப்பற்றப்புலியூர் நம்பியோ, பரஞ்சோதி முனிவரோ, எந்த வெஸ்டட் இன்ட்ரஸ்ட்டும் கிடையாது. அவங்கள மாதிரி ஒரு pure கான்ஸஸியஸ்னெஸ் , அதாவது தனக்கு என்று எதையும் தேடிக்கொள்ள வேண்டிய, அறிவை வைத்து விபச்சாரம் செய்து தனக்காக சுகங்களையோ பேர் புகழையோ வேறெந்த பெனிபிட்டையோ அடஞ்சிக்கவேண்டிய தேவை இல்லை. கொஞ்சம் ஸ்ட்ரோங் காண வார்த்தையை உபயோகம் பண்ணிருக்கேன். பரவாயில்லை. சத்தியங்களை சொல்லும்போது சற்று பலமான வார்த்தை வருவது தவறில்லை. சத்தியத்திற்கு அபச்சாரம் செய்து, பரம சத்தியத்திற்கு அபச்சாரம் செய்து, அறிவை உபயோகப்படுத்தி செய்யப்படுகின்ற எல்லா செயல்களும் அறிவு விபச்சாரம்.

இங்க திருவிளையாடற் புராணம் செய்து வைத்த நால்வரும்... இன்னும் நிறைய பேர் திருவிளையாடற் புராணம் பண்ணியிருக்காங்க, அதுல இந்த நால்வரை தான் நான் மெயினா எடுத்துக்கிறேன். அவங்கள தான் நான் ரெஃபரன்ஸ் பாயிண்ட்டா, பேஸ் லைனா எடுத்துக்கிறேன். அவங்கள தான் அடித்தளமாக எடுத்துக்கொண்டு இந்த சத்சங்கங்களை நிகழ்த்துகிறேன்.

வியாசரோ, நீலகண்ட தீக்ஷிதரோ, திருப்பற்றப்புலியூர் நம்பியோ, பெரும்பற்றப்புலியூர் நம்பியோ, இல்ல பரஞ்சோதி முனிவரோ, எந்த விதத்திலும் எந்த பிரதிபலனும் அல்லது எந்த ரெகக்னிஷன், பெருமை, இந்த காரணங்கள் எதுவுமே இல்லாதவர்கள் என்பதனால், சுத்தமான தியாகிகள் என்பதனால், சத்தியத்திலே தங்களை ஸ்தாபிக்கப்பெற்று, சத்தியத்திலே ஸ்தாபித்து இருந்ததனால், சத்தியத்திலே பிரதிஷ்டையாகி இருந்ததனால்... அறிவு விபச்சாரம் செய்யாதவர்கள் என்பதனால்...

நல்லா புரிஞ்சுக்கோங்க, இவங்க நாலு பேர்ல யாருமே எந்த அரசோட கோர்ட் போயட்டும் (Court poet) கிடையாது. எந்த அரசாங்கத்தோட கோர்ட் போயட்டும் கிடையாது. சேக்கிழார் கோர்ட்ல மந்திரியா இருந்தா கூட, இந்த திருப்பணிய அப்படின்னு வரும் பொழுது ஒரு விதத்தில் கூட அரசனுடைய தலையீடு இல்லை. எங்கேயுமே பார்த்தீங்கன்னா, அவர் இந்த பரம சத்தியத்தை வார்த்தையால் வடித்து வைப்பதில் காம்ப்ரமைஸ் பண்ணிக்கவே இல்லை.

இன்னும் கொஞ்சம் ஆழமா இந்த பெரிய புராண ஆய்வு நூல்களை எல்லாம் எடுத்துப் புரட்டிப் பார்த்தோம்னா, உண்மையிலே சேக்கிழார் பெருமான் அந்த ஒவ்வொரு நாயன்மார்களுடைய வாழ்க்கையையும் எழுதுவதற்கு, படிப்பதற்கு, அந்த ஒவ்வொரு ஊருக்கும் பயணப்படுறார் அந்த காலகட்டத்துல. ஒரு ஒரு ஊருக்கும் பயணப்பட்டு, அந்த ஊர்ல தகவல்களை திரட்டி... ஒரு நல்ல விஷயம் புரிஞ்சுக்கணும், பெரிய புராணமோ, திருவிளையாடற் புராணமோ வெறும் ஞான சத்தியங்கள் மட்டுமல்ல, அந்த காலகட்டங்களின் சமூக... அப்படியே சமூகத்த படம் பிடிச்சு வச்சிருக்காங்க ஐயா!

அந்த டீட்டெய்லிங்... அவங்க உள்ள போயிருக்கிற அந்த டீட்டெய்லிங்கைப் பார்க்கும் பொழுது, அந்த டீட்டெய்லிங்க்காக அவங்க எவ்ளோ பிரயத்தனப்பட்டு இருக்காங்க அப்படின்னு பார்க்கும் பொழுது, அவர்களுடைய அறிவின் நேர்மை புரியும்.

ஒரு சில உதாரணங்கள் சொல்றேன். சேக்கிழார் காலத்துல பல ஆலயங்கள்ல அம்பாள் சந்நிதி வேற மாதிரி இருந்திருக்கு, இல்லாம இருந்திருக்கு. எப்படி எப்படி அப்போ அந்த டைம்ல இருந்ததோ அத அப்படியே டாக்குமெண்ட் பண்ணி வச்சிருக்கார். ஜியாக்ரபி (Geography), சமூக அமைப்பு, அதாவது புவியியல் அமைப்பு, அந்த ஊர், கட்டமைப்பு எப்படி இருந்திருக்கு, அந்த ஊரோட இயற்கை அமைப்பு எப்படி இருந்திருக்கு, அந்த ஊரோட அரசியல் அமைப்பு எப்படி இருந்திருக்கு."

அந்த ஊரோட சமூக அமைப்பு எப்படி இருந்திருக்கு, அந்த ஊரோட ஆன்மீக கட்டமைப்பு எப்படி இருந்திருக்கு... இது அத்தனையும் எவ்வளவு டீடைலா, எவ்வளவு ஆழமா ஆவணப்படுத்தி இருக்காரு.

இந்த ஆவணப்படுத்துதலுக்கு சேக்கிழார் பெருமானோ, வியாசரோ, பெரும்பற்றப்புலியூர் நம்பியோ, பரஞ்சோதி முனிவரோ, நீலகண்ட தீக்ஷிதரோ எடுத்திருக்கின்ற பிரயத்தனம்... அதைப் பார்க்கும் பொழுதே தெரியுது, சத்தியம் அப்படியே ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதில் அவர்கள் எந்த அளவுக்கு முனைப்போடு இருந்திருக்கிறார்கள்னு.

அப்ப திருவாரூர், இந்த தரையிலே கண் முன்னாடி இருக்கிற ஒரு ஊரையே போய் பார்த்து, அதுல என்ன இருக்கோ அதை மட்டும்தான் டாக்குமெண்ட் (Document) பண்ணனும்ன்ற அறிவுக்கூர்மையும், அறிவு நேர்மையும் உடையவர்கள், இப்போ தேவலோகத்தையும் சிவலோகத்தையும் மட்டும் என்ன கற்பனை பண்ணி டாக்குமெண்ட் பண்ணிடுவாங்களா?

முதல்ல தமிழ் இனமே, உன் மீது நடத்தப்பட்ட மிகக் கொடும் தாக்குதலான... மிகப்பெரிய மூளைச்சலவை, அதாவது இனத்தின் மீது இன அழிப்பு, ஜெனோசைட் (Genocide)... உங்க மீது நடத்தப்பட்ட அந்த ஜெனோசைட்ல இருந்து வெளியில தப்பிச்சு வெளியில வாங்க. உயிரோடு தப்பித்தது மட்டும் போதாது, உயிர்மையோடு தப்பியுங்கள். உங்கள் உயிர்மை உரிமையை மீட்டெடுங்கள். உங்க உரிமையின் உரிமை தான்...

திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்றவைகள் எல்லாம் சத்தியம். இவைகள் நடந்தவைகள் நடந்தபடியே அப்படியே செய்யப்பட்டிருக்கின்ற ஆவணம்.

தமிழினமே, சில நூறு ஆண்டுகளாக உங்க மேல பல நிலைகளிலே இனப்படுகொலை தாக்குதல் நிகழ்ந்திருக்கின்றது. பல நிலைகள்ல என்னால சொல்ல முடியும். இந்த இனப்படுகொலை தாக்குதல்கள் வெறுமனே போர் மட்டும் கிடையாது. அதாவதுங்க, நம்முடைய சனாதன இந்து தர்மத்தோட ஆணிவேர் ஆலயம். இந்த ஆலயம் செய்கின்ற குலமான விஸ்வகர்மா குலத்தை ஃபோக்கஸ் (Focus) பண்ணி அடிச்சு கன்வெர்ட் (Convert) பண்ணிருக்காங்க, மதம் மாத்திருக்காங்க. ஏன்னா அவங்க மதம் மாறி போயிட்டாங்கன்னா, அந்த ஆலயம் சமைக்கின்ற கலை அழிஞ்சாலே போதும், இந்து மதத்தை, சனாதன இந்து தர்மத்தை அழிச்சிரலாம்.

இதுமாதிரி பிளான் பண்ணி, பிளான் பண்ணி... இது ஒரு ஒரு நாள், ரெண்டு நாள்ல நடந்துர்றதில்ல, அதனால உங்களுக்கு பலபேர் இதைப் புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க. கடந்த 40 ஆண்டுகளாக இந்தத் துறையிலே முழுகி முத்தெடுத்தவன்றதுனால, உலகம் முழுக்க பல நூறு இடங்கள்ல ஆலயம் பண்ணிருக்கேன். கணக்கு போட்டு பார்த்தா லார்ஜஸ்ட் (Largest) திருமேனிகள் செஞ்சது நவீன காலத்துல நாங்களாதான் இருப்போம், கைலாசமாதான் இருக்கும். ஏன்னா பல்லாயிரக்கணக்கான திருமேனிகள் செஞ்சு பல்லாயிரக்கணக்கான இடங்கள்ல பிரதிஷ்டை பண்ணிருக்கோம்.

இந்த துறையில வேலை செய்றவங்கள, இந்த திருமேனிகள், கருங்கல் திருமேனி பண்றவங்க, மத்த இந்த துறையில வேலை செய்யறவங்களோடலாம் 40 ஆண்டுகளாக பழகிக்கொண்டிருக்கிறேன். அவங்க எல்லாரும் சொல்றது அதுதான், "கும்பகோணம் அந்தப் பகுதிகள், பல பகுதிகள் எங்களுக்கு முந்தைய தலைமுறைகள்லலாம் பல பேர், எங்கள் குலத்தவர்கள். கட்டாயப்படுத்தியோ அல்லது வறுமையின் காரணமாகவோ மதம் மாற்றப்பட்டிருக்கிறார்கள் சுவாமி. அதனால எங்கள் குலத்தோட குலம் அழிந்துவிட்டது."

இன்னொன்னு, இந்த பாரம்பரிய கல்வியை இல்-லெஜிடிமேட் ஆக்குறது (Illegitimate). அதாவது, அதை வந்து அங்கீகாரம் இல்லாததாக மாற்றுவது. தெளிவா ஓப்பனா சொல்றேன்... பாரம்பரியமா சின்ன பிள்ளையில இருந்து அப்பா அம்மாவோட பட்டறையில சுத்திக்கிட்டு, உளி புடிச்சு, சுத்தி புடிச்சு, அப்பா அந்த தியான ஸ்லோகங்களை, ஆகமத்தோட தியான ஸ்லோகங்களை சொல்லி திருமேனிகளை செதுக்கும்பொழுது, தாயார் அந்த உளியை உலையில வெச்சு கொதிக்க வெச்சு, உளியை சூடுபண்ணி கொடுத்து, தாயார் சமைச்சு கொண்டு வந்து தந்தைக்கு பட்டறையில கொடுக்கும்போதே, சாப்பாடு கொடுக்கும்போதே குழந்தைக்கும் கொடுத்து... அந்த மாதிரி வளர்ந்த குழந்தைகள் செய்கின்ற சிற்பங்கள், திருமேனிகள், அதோட டீடைல் (Detail), அதோட அழகு, அதோட அமைப்பு...

இவங்க நடத்துற இந்த மாடர்ன் டே (Modern day) காலேஜ்ல போய் படிச்சுட்டு வர்ற பசங்க அவங்க செய்யற சிற்பங்கள், சிலைகள் அதோட அமைப்பு... இந்த ரெண்டுத்தையும் பார்த்தீங்கன்னாலே புரிஞ்சிரும். அதாவது பாரம்பரிய கல்வி முறையை இல்-லெஜிடிமேட் ஆக்கினதே ஒரு இனப்படுகொலைதான். சட்டத்தை யூஸ் பண்ணி இனப்படுகொலை பண்றது. சட்டம்னு ஒன்னுத்த உருவாக்கி அதை யூஸ் பண்ணி இனப்படுகொலை பண்றது... லா-ஃபேர் (Lawfare).

நன்றாக புரிந்து கொள்ளுங்கள். கருத்தியல் ரீதியாக, நடைமுறையியல் ரீதியாக, பல்வேறு விதத்திலே தொடர்ந்து இனப்படுகொலை... நம்முடைய சனாதன இந்து தர்மத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், தொடர்ந்து சனாதன இந்து தர்மத்தின் கருத்துக்களை அவமதித்து, மலினப்படுத்தி, பொய் என்று காட்டி, கிண்டல் கேலி செய்து, மொத்த ஊடகமே பாருங்கய்யா...

திரைப்படமாகட்டும், சின்னத்திரை ஆகட்டும், மொத்த ஊடகத்தையும் பாருங்கய்யா. ஒரு சில எக்ஸெப்ஷன் (exception), கொஞ்சம் நல்லவங்க சில பேர் இருந்து, அவங்களும் தட்டுத்தடுமாறி எப்படி வா.உ.சி கடன் வாங்கி உயிரைக் கொடுத்து கப்பலோட்டினாரோ, அந்த மாதிரி அந்த காலத்து தயாரிப்பாளர்கள் சில பேரு தட்டுத்தடுமாறி இந்த 'திருவிளையாடல்' மாதிரி ஒரு படமோ, இல்ல 'நந்தனார்' மாதிரி ஒரு படம், இல்ல சில 'திருவருட்செல்வர்' மாதிரி சில படங்களை தயாரித்து வைத்தார்களே தவிர, அதுக்குப்பிறகு...

எப்படி இந்த தீய சக்தி, திரை, பதிப்பு, ஊடகம், அதாவது இந்த ஊடகத்துல நான் பிரின்ட் மீடியா (print media), சின்னத்திரை, சோசியல் மீடியா (social media) சகலத்தையும் எப்படி ஆக்டோபஸ் (octopus) மாதிரி இந்த தீய சக்தி ஆக்குபை (occupy) பண்ணிக்கிட்டு தமிழர்களை உயிர்மை ரீதியாக அழித்துக்கொண்டிருக்கிறது, அப்படிங்கறத புரிஞ்சுக்கோங்க. அத புரிஞ்சிகிட்டிங்கனா தான் உயிர்மை சுதந்திரத்தை (conscious soverignity) மீட்டெடுங்கள். உங்கள் உயிர்மை உரிமையை மீட்டெடுங்கள்.

ஆழ்ந்து கேளுங்கள். உங்கள் மீது செய்யப்பட்ட இந்த மூளைச்சலவையை முழுமையாக புரிந்தால்தான், எவ்வாறு தீய சக்திகள் உங்களை வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் தின்று இருக்கின்றது (என புரியும்).

ஒரு மூணு தலைமுறையாவேங்கய்யா... தமிழனுக்கும் சனாதன இந்து தர்மத்துக்கும் சம்பந்தமில்லை, என்னென்ன மூளைச்சலவைகள்... சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் பிரச்சனையை கிரியேட் (create) பண்ணி... என்னென்ன மூளைச்சலவைகள்! இது வெறும் மூளைச்சலவை இல்லைங்கய்யா, இனப்படுகொலை. தமிழினமே விழித்துக்கொள்! உங்களுடைய உயிர்மை உரிமையை மீட்டெடுங்கள். திருவிளையாடற் புராணமும், பெரிய புராணமும் சத்தியம் அப்படின்னு நம்புற மாதிரியான ஈகோ சிஸ்டம் (ecosystem) எதுவுமே இல்லாம சீரழிச்சு வச்சிருக்கானுங்க பாருங்கய்யா இந்த தீய சக்திகள்.

ஐயா நல்லா புரிஞ்சுக்கோங்க... வியாசரைப் போலே, பெரும்பற்றப்புலியூர் நம்பியைப் போலே, பரஞ்சோதி முனிவரைப் போலே, நீலகண்ட தீட்சிதரைப் போலே, சேக்கிழார் போலே எனக்கும் எந்த தேவையும் இல்லாமல், சத்தியத்தை ஆவணப்படுத்தி உங்களுக்கு சாத்தியப்படுத்த வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்திற்காக மட்டும்தான் அவர்களும் பேசினார்கள், நானும் பேசுகின்றேன்.

அதனால் கொஞ்சம் ஆழ்ந்து நான் சொல்றதெல்லாம் உள்வாங்குங்க. உங்களுடைய உயிர்மை உரிமையை மீட்டெடுங்கய்யா. சேக்கிழாரோட ரிசர்ச் (research) பத்தி கொஞ்சம் சொல்றேன் கேட்டுக்கோங்க, புரிஞ்சுக்கோங்க. அதுக்கு அப்புறம் பரஞ்சோதி முனிவர்...

பெரும்பற்றப்புலியூர் நம்பி இவங்களுடைய ரிசர்ச் (Research) பத்தியும் சொல்றேன். அவங்க எல்லாம் எப்படி ரிசர்ச் பண்ணி இருக்காங்கன்னு.

இந்த நூல்கள், ஏன் சேக்கிழாரையும் கூட எடுத்துக்கிறேன்னாங்க ஐயா, திருவிளையாடல் புராணத்தோட... திருவிளையாடல் புராணம் சொல்லும்பொழுது பெரிய புராணத்தையும் ரெஃபர் (Refer) பண்ணித்தான் ஆகணும், வேற வழி கிடையாது. காரணம் என்னன்னா, திருவிளையாடல் புராணத்துல வர்ற பல திருவிளையாடல்கள் பெரிய புராணத்திலயும் வருது. முக்கியமா திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் சம்பந்தப்பட்டதெல்லாம் பெரிய புராணத்திலயும் வருது. ஏன்னா இந்த ரெண்டு நூலும் சில விதங்கள்ல ஓவர்லேப் (Overlap) ஆகி வருது.

அதனாலதான் பெரிய புராணத்தையும் எடுத்துட்டு வர்றேன். ஏன்னா, திருவிளையாடல் புராணம் சொல்லும் பொழுதே பெரிய புராண ரெஃபரன்ஸும் பண்ணப் போறேன். பெரிய புராணத்தோட மேற்கோள்களை நிறைய காட்டப் போறேன். அதனாலதான் ரெண்டையும் எடுத்துட்டு வர்றேன். என்னென்ன நூல்களை எல்லாம் உபயோகப்படுத்தப் போறேன், அதோட ஆழமான உண்மை, அதோட சத்தியத்தின் ஆழம்... இதைப் புரிய வச்சுட்டேன்னாதான், உங்களுக்கு முழுக்க முழுக்க இந்த புராணத்திற்குள் மூழ்கி அந்த அனுபூதி முத்தெடுப்பீர்கள்.

சேக்கிழார் ஐயா, மூல நூலை ஆய்வு பண்றார். மூல நூல் வந்து நம்பியாண்டார் நம்பி தொகுத்த 'திருத்தொண்டர் திருவந்தாதி', அப்புறம் 'திருத்தொண்டத் தொகை'. இதைத்தான் சேக்கிழார் வந்து ஆதாரமா வச்சுட்டு மூல நூல் ஆய்வு பண்றாரு. அதுக்கடுத்து தேவார ஆராய்ச்சி பண்றாரு. தேவாரப் பாடல்கள்ல நாயன்மார்கள் பற்றி சொல்லப்பட்டிருக்கின்ற உள்ளுரைக் குறிப்புகள்... அதாவது ஞானசம்பந்தரோ, திருநாவுக்கரசரோ, சுந்தரமூர்த்தி நாயனாரோ பாடும் பொழுதே, பல இடங்கள்ல இந்த நாயன்மார்களைப் பற்றிய குறிப்புகளோடையே ரெஃபர் பண்ணி பாடுறாங்க. சோ, அதையெல்லாம் ஆராயுறார். சுந்தரமூர்த்தி நாயனார் பாடல்கள்ல பார்த்தீங்கன்னா, மற்ற நாயன்மார்களைப் பற்றி பல இடங்கள்ல தேவாரத்துல சொல்றாரு. அதையெல்லாம் ஆதாரமா எடுத்துக்கிறார்.

அதுக்கடுத்து சேக்கிழார் பெருமான் ஊர் ஊரா போறாரு. கள ஆய்வு பண்றாரு, ஃபீல்ட் ரிசர்ச் (Field research) பண்றாரு. ஐ திங்க் (I think), கள ஆய்வு செய்து தமிழிலே எழுதப்பட்ட தெளிந்த புராணங்கள் அப்படின்னா, பெரிய புராணமும் திருவிளையாடல் புராணமும் தான் சொல்லணும். தெளிவா தமிழ்நாடு முழுவதும் பயணம் பண்றாரு. அறுபத்து மூன்று நாயன்மார்கள் வாழ்ந்த ஊர்கள், அவர்கள் பிறந்த இடங்கள், அவர்கள் வழிபட்ட சிவாலயங்கள் இதெல்லாம் நேர்ல போய் பார்வையிடுறாரு. பார்வையிட்டு, வாய்மொழியா கர்ண பரம்பரையா இருக்கின்ற கதைகளை, வரலாற்று உண்மைகளை சேகரிக்கிறார். அந்தந்த ஊர்ல வாழ்ந்த வயோதிகர்கள், முதியவர்கள், அறிஞர்கள், சைவ அடியார்கள் அவங்ககிட்ட எல்லாம் போய் நேர்ல... அவங்களை எல்லாம் கேட்டு இன்டர்வியூ (Interview) பண்ணி டாக்குமெண்ட் (Document) பண்றாரு. இந்த வரலாறுகள், கருத்துக்கள், குறிப்புகள் இதைத் திரட்டுறாரு.

கல்வெட்டு, அப்புறம் ஸ்தலபுராணம் இதையெல்லாம் ஆராயுறார். நாயன்மார்கள் வாழ்ந்த கோயில்கள்ல இருக்கிற கல்வெட்டுகள், செப்பேடுகள், ஸ்தலபுராணங்கள்... ஒரு நல்ல விதமா நல்வாய்ப்பாக இந்த இஸ்லாமியப் படையெடுப்பு, கிறிஸ்தவப் படையெடுப்பு இந்த ரெண்டுத்துக்கும் முன்னாடி இந்தக் கல்வெட்டுகள், செப்பேடுகள் இதெல்லாம் ரொம்ப நிறைய பாதுகாக்கப்பட்டிருந்தது. நல்லா புரிஞ்சுக்கோங்க, அரசர்கள் மற்ற நாடுகளைத் தாக்கினாலும் கூட ஆலயங்களைத் தாக்குவதில்லை, அழிப்பதில்லை. அரண்மனைகளைத் தாக்கி அழித்தார்களே தவிர ஆலயங்களைத் தாக்கி அழிப்பதில்லை. இஸ்லாமிய, கிறிஸ்தவப் படையெடுப்பு நடக்கும் போது மட்டும்தான் ஆலயங்களைத் தாக்குகிற பழக்கம் வந்தது. அதுக்கு முன்னாடி வரைக்கும் ஆலயங்களைத் தாக்குகின்ற வழக்கம் கிடையாது.

திருவிளையாடல் புராணத்திலயே பாத்தீங்கன்னா, பெருமான் ஆலயத்துல மீன் இலச்சினையை எடுத்து ரிஷப இலச்சினை, நந்தி முத்திரையைப் போடுறாரு. அப்படின்னா என்ன சொல்றாருன்னா... ஸ்டேட்டும் (State) டெம்பிளும் (Temple) தனித்தனியா இருங்கப்பா. இது ஆரம்பிச்சதே பெருமான்தான். சர்ச் - ஸ்டேட் செப்பரேஷன் (Church - State separation) அப்படின்னு சொல்றதையே ஆரம்பிச்சதே பெருமான்தான். கோயிலைப் பொறுத்தவரைக்கும் யாரு வேணா வரலாம், தரிசனம் பண்ணலாம், போகலாம். இது அரசனோட டெரிட்டரி (Territory), ஆளுமைக்கு கீழ வராதுங்குறாரு.

கான்ஷியஸ் சாவரனிட்டியோட (Conscious sovereignty), நாட்டோட சட்டம் தலையிட முடியாது. ரிலிஜியஸ் சாவரனிட்டியோட (Religious sovereignty), ரிலிஜியஸ் சாவரனிட்டி, கான்ஷியஸ் சாவரனிட்டி அது பிரபஞ்ச தர்மத்திற்கு உட்பட்ட ஏரியா. அந்த ஏரியாவுக்குள்ள லா ஆஃப் தி லேண்ட் (Law of the land) வரக்கூடாதுன்னு டிக்ளர் (Declare) பண்றது தான். ஆக்சுவலா (Actually) சோழ நாட்டு அரசன் பாண்டி நாட்டுக்குள்ள வரக்கூடாது. வந்தா கைது செய்யப்படுவான், இல்ல கொலை செய்யப்படுவான், இல்ல சிறைப்படுத்தப்படுவான். ஆனா அந்த விதியை மீறி, கோயிலுக்குள்ள இந்த நாட்டோட விதிகள் செல்லாதுன்றத எஸ்டாப்ளிஷ் (Establish) பண்ணி, சோழ நாட்டு அரசனுக்காக திருவாலவாய் ஆலயத்தோட, மீனாட்சி கோயிலோட கதவைத் திறந்து விட்டது மட்டுமில்லாம, நான்தான் திறந்து விட்டேன்னு காட்டுறதுக்காக, பாண்டிய நாட்டோட மீன் முத்திரையை விலக்கி, தன்னுடைய நந்தி முத்திரையை, ரிஷப முத்திரையைப் பதிப்பித்து, தன்னுடைய கான்ஷியஸ் சாவரனிட்டியை டிக்ளர் பண்றாரு பெருமான்.

அதனால அந்த காலத்துல கல்வெட்டு, ஸ்தலபுராணம், செப்பேடுகள் இதெல்லாம் ரொம்ப உயிரோடு இருந்த அந்த ஈகோ சிஸ்டம் (Ecosystem). சேக்கிழார் பெருமான் இதையெல்லாம் தேடுறாரு. கல்வெட்டுகள், செப்பேடுகள், ஸ்தலபுராணங்கள்... அந்தந்த ஸ்தலங்களில் உள்ள ஸ்தலபுராணங்கள் இதையெல்லாம் ஆராயுறார். அதுக்கடுத்து வரலாற்று காலக்கணக்கை ரொம்ப அழகா பண்றார். அதாவது... சோழ, பல்லவ, பாண்டிய மன்னர்களுடைய ஆட்சி வரலாற்றை ஆராய்ந்து, நாயன்மார்களுடைய காலத்தை நிர்ணயிக்கிறார். அதுக்கடுத்து புவியியல் துல்லியம் (Geographical detailing). நாயன்மார்களின் வாழ்க்கை நடந்த புவியியல் இடங்கள், ஊர்கள், நதிகள், மலைகள், காடுகள் இவைகளையெல்லாம் துல்லியமா குறிப்பிடுறாரு. அந்தக் காலத்தோட புவியியல் அமைப்ப, சமூக நிலைய, மக்கள் பழக்க வழக்கங்கள, துல்லியமா ஆராய்ந்து டாக்குமெண்ட் பண்றாரு.

அதாவது, பாணினியோட நாலாயிரம் சூத்திரங்களை படிச்சீங்கன்னா தெரியும். பாணினியோட நாலாயிரம் சூத்திரங்களை பத்தி ஒரு ஆழமான ஒரு சத்தியத்தை புரிஞ்சுக்கணும். அந்த டைம்ல பாணினி இந்த நாலாயிரம் சூத்திரம் பண்ணும்பொழுது, 300 சான்ஸ்கிரிட் ஸ்பீக்கிங் கம்யூனிட்டி (Sanskrit speaking community) இருந்தது. சான்ஸ்கிரிட்டை பேசுகிற தாய்மொழியாக வைத்துக்கொண்டு வாழுகின்ற 300 கம்யூனிட்டி இருந்தது.

இதுல முக்கியமான விஷயம் என்னன்னா 300 டயலக்ட் (dialect) இருந்தது. 300 விதமான சமஸ்கிருத பிரயோகம். இன்னமும் தமிழ் வந்து ஒரு 18 டயலக்ட் உயிரோடு இருக்கு. தமிழ்லயே 18 டயலக்ட் உயிரோடு இருக்கு. அது மாதிரி அந்த காலகட்டத்துல 300 சான்ஸ்கிரிட் டயலக்ட் உயிரோடு இருந்தது. இவரு 300 இடத்துக்கும் பாணினி பர்சனலா போய் தங்குறாரு. தங்கி அத மொத்தத்தையும் ஸ்டடி பண்ணி, அந்த 300-யும் கலெக்ட் பண்ணி தான் இந்த 4000 சூத்திரம் பண்ணி வைக்கிறாரு.

யாராவது கொஞ்சம்... முனித்ரய வியாகரணம்... அதாவது முனித்ரய வியாகரணம்னா, பாணினி எழுதுன 4000 சூத்திரங்கள், பதஞ்சலி எழுதுன மகாபாஷ்யம், கார்த்தியாயனர் எழுதுன வார்த்திகம். இந்த மூணுத்துக்கு தான் முனித்ரய வியாகரணம்னு சொல்லுவோம். முனித்ரய வியாகரணம் படிச்சிருந்தீங்கன்னா, கொஞ்சம் தொல்காப்பியம் படிச்சிருந்தீங்கன்னா, இந்த ரெண்டையும் படிச்சவங்களுக்கு தெள்ளத்தெளிவா புரியும், தமிழும் சம்ஸ்கிருதமும் வேற வேற டயலக்ட் தாங்கய்யா.

ஒரு கோர்ல (core) இருந்து உருவான வேற வேற டயலக்ட் அவ்வளவுதாங்கய்யா. இப்ப எப்படி ஆங்கிலம், சிவில் இன்ஜினியரிங் யூஸ் பண்ற இங்கிலீஷ் வேற, சயின்டிஸ்ட்ஸ்ங்க யூஸ் பண்ற இங்கிலீஷ் வேற, காமன் மேன் யூஸ் பண்ற இங்கிலீஷ் வேற, இந்த நைட் டைம் ஷோ, காமெடி ஷோஸ் பண்ற அவங்க யூஸ் பண்ற இங்கிலீஷ் வேற, வேற வேற டயலக்ட்டோ அதே மாதிரிங்கய்யா.

கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தா... முனித்ரய வியாகரணத்தையும், அவங்க மூணு பேர் எழுதுனது, முனித்ரய வியாகரணம்னா இதான்... பாணினி எழுதுன 4000 சூத்திரம், அதுக்கு பதஞ்சலி எழுதுன மகாபாஷ்யம், இதே சூத்திரங்களுக்கு கார்த்தியாயனர் எழுதுன வார்த்திகம். இந்த மூணும் சேர்ந்தது தான் முனித்ரய வியாகரணம். இங்க தொல்காப்பியர் எழுதுன தொல்காப்பியம்.

இதுல இன்னொரு சிறு தகவல், ஒரு சிறு உண்மை சொல்றேன் கேட்டுக்கோங்க. தொடர்ந்து தமிழர்கள், அகத்தியர் எழுதுன அகத்தியம் அழிந்துவிட்டதுன்னு மூளைச்சலவை செய்து வைக்கப்படுகிறார்கள். அது ஏன்னு எனக்கு தெரியல. அகத்தியர் இலக்கண நூல் விதியை எடுத்து, தொல்காப்பியத்தை எடுத்து ரெண்டுத்தையும் ஆராயும் பொழுது மிகத்தெளிவா தெரியுது, நிச்சயமாக தொல்காப்பியருடைய குருவான அகத்தியர் எழுதி வைத்த நூல் தான் இந்த அகத்திய இலக்கண நூல் விதி. காரணம் லாங்குவேஜ் (Language), மொழி ஒற்றுமை.

அதுமட்டுமில்லாம குரு உபயோகித்த வார்த்தைகளை, சொற்றொடர்களை என்ன மரியாதையோடு சீடன் உபயோகித்து அதுக்கு விளக்கம் கொடுப்பார் அப்படிங்கற இந்த கட்டமைப்பு, பாணினியோட சூத்திரங்களையும், பதஞ்சலியோட மகாபாஷ்யத்தையும் படிக்கும் பொழுதே, அந்த சூத்திரங்களையும் பாஷ்யங்களையும் என்ன அழகா பதஞ்சலி என்ன பணிவோடு கட்டமைக்கிறார்... அதாவது சூத்திரக்காரருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து, தன்னுடைய பாஷ்யத்தை எழுதுறாரோ அதே மாதிரி தான் அகத்தியர் இலக்கண நூல் விதியையும் தொல்காப்பியத்தையும் படிச்சீங்கன்னா, தொல்காப்பியர் அப்படியே பண்ணியிருக்கார்.

இந்த அகத்திய இலக்கண நூல் விதி அகத்தியம் தான் அப்படிங்கறது என்னுடைய தனிப்பட்ட ஆழமான தெளிந்த கருத்து. ஏஐ (AI) கூட யூஸ் பண்ணி பார்த்துட்டேன். இத ரெஃபர் பண்றதுக்கு பாணினிக்கும் பதஞ்சலி மகாபாஷ்யத்துக்கும் இருக்கிற ரிலேஷன்ஷிப்ப ஸ்டடி பண்ணி, அந்த டீடெய்லிங்ஸ எடுத்து அதை அப்படியே அப்ளை பண்ணா, இப்ப அவைலபிலா (available) இருக்கிற இந்த அகத்திய இலக்கண நூல் விதியும், தொல்காப்பியத்துக்கும் அப்படியே மேட்ச் ஆகுது.

சோ, அதனால அந்த காலகட்டத்துல சூத்திரக்காரர்களுக்கு பாஷ்யக்காரர்கள் கொடுத்த மரியாதை, பாஷ்யக்காரர்கள் பின்பற்றிய இலக்கணம், இது அனைத்துமே தொல்காப்பியர் அகத்தியர் இலக்கண நூல் விதிக்கு கடைபிடித்து இருப்பதனால்... இப்ப நமக்கு அவைலபிலா இருக்கின்ற, சித்தர் பாடல்கள் தொகுப்பிலே அவைலபிலா இருக்கின்ற அகத்தியர் இலக்கண நூல் விதி அகத்தியம் தான்.

அது முதல் கன்குளூஷன் (conclusion). ரெண்டாவது, தொல்காப்பியரோட குரு அகத்தியர். அந்த அகத்தியர் வரைந்த நூல் தான் இந்த அகத்திய இலக்கண நூல் விதி. இவைகளையெல்லாம் நம்மளால ரொம்ப தெளிவான முடிவுக்கு வர முடியும்.

அடுத்த கன்குளூஷன், இது தான் ரொம்ப முக்கியமான சத்தியம். இந்த முனித்திரய வியாகரணம், தொல்காப்பியர், அகத்திய இலக்கண நூல் விதி, இந்த ஐந்து நூல்களையும் படிக்கும் பொழுது ரொம்ப தெளிவா தெரியுதுங்கய்யா.

வார்த்தைகளை அமைக்கின்ற ஸ்ட்ரக்சர் (Structure), அதாவது நாதத்திலிருந்து சப்தத்தை உருவாக்கி, சப்தத்திற்கு விளக்கம் செய்து வைக்கின்ற இந்த அமைப்பு முறை, அனாகதமாக, அனாகத சக்கரத்திலே நிறைந்திருக்கின்ற அனாகத திவனியை தொண்டைக் குழிக்கு கொண்டு வந்து நாதமாக்கி, நாதத்தை நாவிற்கு கொண்டு வந்து சப்தமாக்கி, அந்த சப்தமாக அது உருண்டு வரும் பொழுது, அந்த வார்த்தைகளை உருவாக்கி, அந்த வார்த்தைகளுக்கு விளக்கமும் இலக்கணமும் செய்து வைக்கின்ற இந்த முறை சமஸ்கிருதத்திலேயும் தமிழிலேயும் அப்படியே ஒன்னா இருக்குங்கய்யா.

தொல்காப்பியரே, தொல்காப்பியத்தையே கொஞ்சம் ஆழமா படிச்சா பல இடங்கள்ல ரெஃபரன்ஸ் (Reference) இருக்கு. தொல்காப்பியரே தெளிவா சொல்றாரு, பாணினியோட சூத்திரங்களை பார்த்து, அகத்தியரிடமிருந்து பெற்ற தமிழ் அறிவை வைத்து, இந்த பாணினி சூத்திரங்களை போன்றே தான் தமிழுக்குத் தொல்காப்பிய சூத்திரங்கள் செஞ்சு வெச்சிருக்கிறதா சொல்றாரு. தொல்காப்பியத்தை, அகத்தியம் அழிந்து விட்டதுன்னு சொல்றவர்கள் சூத்திரம்னு ஏத்துக்கிறாங்க. ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும் தொல்காப்பியத்தை அகத்தியத்தின் பாஷ்யம்னு தான் நான் ஏத்துக்கிறேன்.

பாணினிக்கு, பாணினி செய்த சூத்திரங்களைப் போலவே அகத்தியத்துக்கு பாஷ்யம் செய்து வைத்திருக்கின்றார் தொல்காப்பியர். இது சங்க இலக்கியங்கள்ல கூட பல இடங்கள்ல டாக்குமெண்ட் (Document) ஆயிருக்குங்கய்யா. அத தொல்காப்பியரே டாக்குமெண்ட் பண்றாரு. அதனால கொஞ்சம் நம்ம நல்லா புரிஞ்சிக்கணும்.

இந்த ஐந்து நூல்களையும் படிக்கும் பொழுது, முனித்திரய வியாகரணம், அகத்திய இலக்கண நூல் விதி, தொல்காப்பியம், இந்த ஐந்தையும் படிக்கும் பொழுது ஒரு விஷயம் தெளிவாகுது. சமஸ்கிருதமும் தமிழும் ஒன்றாகவே உருவாகி, வேறு வேறு டயலெக்ட்டாக (Dialect) வளர்ந்த மொழிகள். இப்போ இந்த தமிழ் சுப்ரிமசி (Supremacy) அப்படின்றவங்க நீங்க கவலைப்பட வேணாம், நீங்க என்ன சொல்லுங்க, தமிழில் இருந்து சமஸ்கிருதம் உருவாக்கப்பட்டதுன்னு சொல்லுங்க. அதுகூட தப்பில்லை, அது வந்து கொஞ்சம் ஒப்பினியனேட்டட் நியூஸ் (Opinionated news), அதாவது ஃபேக்ட்ல (Fact) கொஞ்சம் நம்முடைய பெருமையை கலந்துக்கறது தப்பில்லை, ஓகே, அதுவும் ஓகே தான். அதே மாதிரி இப்ப சான்ஸ்கிரிட் சுப்ரிமசி (Sanskrit supremacy) இருக்கவங்க நீங்க சொல்லிக்கலாம், இல்ல இல்ல சான்ஸ்கிரிட்ல இருந்து தான் தமிழ் வந்தது அப்படி வேணாலும் சொல்லிக்கோங்க. ரெண்டு ஆர்கியுமென்ட்டுமே (Argument) ஓகே. ஆனா, ரெண்டு மொழிக்கும் சம்மந்தமே இல்லைன்னு சொல்றவங்க தான் தீய சக்திகள். அவர்களை அனுமதிக்காதீர்கள்.

இங்கிருந்து அங்க வந்தது, அங்கிருந்து இங்க வந்தது, கோழியில் இருந்து முட்டை வந்தது குஞ்சு வந்தது, இல்ல குஞ்சிலிருந்து அடுத்து கோழி வந்தது, நீங்க இந்த ஆர்கியுமென்ட் வச்சிக்கறதுல தப்பில்லை. அது ஒரு... அந்த ஆர்கியுமென்ட்லாம் ஆக்சுவலா இருக்கிறது ஒரு ஜூசியா (Juicy) இருக்கும் லைஃப். ஒரு நல்ல, இந்த பக்கமும் அந்த பக்கமும் ஒரு ரெண்டு மூணு ஆர்கியுமென்ட்ஸ் இருந்தா ஜூசியா இருக்கும். ஆனால், இந்த ஜூசியான ஆர்கியுமென்ட்டுக்கு நடுவுல தீய சக்திகள் புகுந்து ரெண்டையும் அழிக்கப் பாக்குறானுங்க. அதை அனுமதிக்காதீர்கள், அதைத்தான் சொல்றேன்.

நான் எப்பவும் சொல்வேன், சைவத்திலிருந்து தான் சனாதன இந்து தர்மமே உருவாச்சுன்னு சொல்லிக்கறதா சொல்லிக்கோங்க, தப்பில்லை. அது ஒரு என்ன... சைவத்தின் பெருமை. அது ஒரு அஸ்மிதா, அது ஒன்னும் தப்பில்லை. அஸ்மிதம், சைவாஸ்மிதம் ஒன்னும் தப்பில்லை. அதே மாதிரி, இல்ல இல்ல சனாதன இந்து தர்மத்தோட ஒரு பாகம் தான் சைவம் அப்படி சொல்லிக்கிட்டீங்கனாலும் ஓகே, அதுவும் ஒன்னும் தப்பில்லை. அது ஒரு சனாதன அஸ்மிதம், தப்பில்லை. இந்த ரெண்டுத்துக்கும் சம்மந்தமே இல்ல, ரெண்டும் வேற வேறன்னு சொல்ற தீய சக்திகளை உள்ள விடாதீங்க, அவ்வளவுதான் நான் சொல்றேன். அவ்வளவுதான் மொத்தமா நான் சொல்றேன்.

சமஸ்கிருதம் தமிழ் பிரச்சனையாகட்டும், சைவம் சனாதனம் பிரச்சனையாகட்டும், அவரவர்கள் என் சம்பிரதாயத்தில் இருந்து தான் அதாவது... சைவம் தான் மூலம், சைவத்திலிருந்து தான் சனாதன இந்து தர்மமே உருவானது அப்படின்னு சொல்லிக்கிறது ஒன்னும் தப்பில்லை. அதுக்கு எனஃப் ஆர்கியுமென்ட்ஸ் (Enough arguments) இருக்கு. எனஃப் டீடைலிங்ஸ் (Enough detailing) குடுக்க முடியும். அதே மாதிரி இவங்க, சனாதன தர்மத்தோட ஒரு பாகம் தான் சைவம், அதுவும் தப்பில்லை. அதுக்கும் எனஃப் ஆர்கியுமென்ட்ஸ் குடுக்க முடியும். காரணம் என்னன்னா, ரெண்டுமே ஸ்பாண்டேனியஸா (Spontaneously), சைமல்டேனியஸா (Simultaneously) வேற வேற ஜாகரபில (Geography) உருவான ஒரே ட்ரெடிஷன்ஸ் (Traditions) ஐயா. ஆனால், எக்காரணம் கொண்டும் ரெண்டும் வேற வேறன்னு சொல்ற தீய சக்திகளை உள்ள விடாதீங்க.

சேக்கிழார் பெருமான் இரண்டு மொழியிலும் ஆழமான புலமை உடையவர். அதனாலதான், இந்த நாயன்மார்கள் காலத்தை நிர்ணயிப்பதாகட்டும், சமூக நிலை மக்களின் பழக்க வழக்கங்களை நிர்ணயிப்பதாகட்டும், இது எல்லாத்திலுமே பாணினி ஸ்டைலையே (Style) ஃபாலோ (Follow) பண்ணியிருக்காரு. பாணினி எப்படி 300 கம்யூனிட்டிக்குள்ளேயும் (Community) போய், தங்கி இருந்து, டாக்குமெண்ட் பண்ணி, ஆராய்ந்து, 300-ஐயும் கம்பைல் (Compile) பண்ணி, 4000 சூத்திரமா தொகுத்து கொடுத்திருக்காரோ, அது மாதிரி...

சேக்கிழார் பெருமான் அந்த காலகட்டத்திலே சமூக நிலை, மக்கள் பழக்கவழக்கம் மட்டும் இல்ல, தமிழ் டயலெக்ட்டையுமே (dialect) ஆராய்ச்சி பண்ணி... நல்லா புரிஞ்சுக்கோங்க இன்னொன்னு சொல்றேன், மொத்த பெரிய புராணத்தையும் பாத்தீங்கன்னா, சோழ நாட்டு நாயன்மார்களைப் பற்றி அவர் விவரிக்கின்ற தமிழும், பாண்டி நாட்டு நிகழ்வுகள் நாயன்மார்களை விவரிக்கின்ற தமிழும், சேர நாட்டு நிகழ்வுகளை விவரிக்கின்ற தமிழும், தொண்டை நாட்டு நிகழ்வுகளை விவரிக்கின்ற தமிழும் சட்டிலா (subtly) வேற வேறையா இருக்கும்.

பெரிய புராண ஆய்வு நூல்களை புரட்டி பாத்தீங்கன்னா, தெளிவா இந்த விவரங்களை காட்டுறாங்க. காரணம் என்னன்னா, பாணினி மாதிரியே லாங்குவேஜ்ஜோட (language) டிஃபரண்ட் டயலெக்ட்ஸ (different dialects) கூட டாக்குமெண்ட் (document) பண்றாரு சேக்கிழார் பெருமான். இப்ப லாங்குவேஜ்ஜோட டிஃபரண்ட் டயலெக்ட்ஸ கூட துல்லியமா ஆராய்ச்சி பண்ணி டாக்குமெண்ட் பண்றவரு, பரம சத்தியங்களை கண்மூடித்தனமா, கவிதைத்தனமா, பொய் சேர்த்து புனைந்து எழுதி விடுவாரா? சனாதன இந்து தர்மத்தோட ஆர்க்கிடெக்ட் (architect) வியாசர்னா, சைவத்தோட ஆர்க்கிடெக்ட் சேக்கிழார்!

வாழ்க்கையையே தியாகம் பண்ணி, இவ்வளவு ஆராய்ச்சி பண்ணி, வரலாற்று உண்மைகளை சரி பார்க்கும் பொழுது, ஒவ்வொரு நாயனாருடைய வரலாறு வரலாற்று உண்மைகளோடு பொருந்துகிறதான்னு சரிபார்த்து, தன்னுடைய காவியத்துல, இந்த புராணத்துல எந்த ஒரு வரலாற்று பிழையும் நேராதவாறு இவ்வளவு கவனமா செயல்பட்ட... சொற்குற்றம் இல்லாது பார்த்துக்கொண்ட, வரலாற்று பிழை இல்லாது பார்த்துக்கொண்ட சேக்கிழார் பெருமான், பொருட்குற்றம் நடக்கவா அனுமதித்து விடுவார்?

அதே மாதிரி தத்துவ ஆய்வுகள்ங்க ஐயா, அந்த காலம் வரை, சேக்கிழார் காலம் வரை கிடைத்த திருமுறைகள், ஆகமங்கள், இந்த சைவ நூல்கள் எல்லாம் அவைகளில் இருக்கின்ற எண்ண ஓட்டம், தாட் கரண்ட் (thought current), அந்த பேக்ரவுண்ட்ல (background) இருந்து அந்த பார்வையிலிருந்து பக்தியை, பல்வேறு நிலை பக்திகளை, பரம்பொருளுக்கும் மனிதனுக்கும் இருக்கின்ற உறவு, அந்த உறவினால் ஏற்படுகின்ற உணர்வு, அந்த உணர்வு ஸ்தூலமாக எப்படி வெளிப்படுகின்றது, அதுல அருள் இருக்கும், பர்சனல் அட்டாச்மென்ட் (personal attachment) பாசம் இருக்கும், சில நேரத்துல ஆழமான காதல் இருக்கும், இவைகள் எல்லாத்தையும் என்ன டீடைல்லா (detail)...

'பழைய வைதீக சைவம் பறக்கவே' அப்படின்னு அந்த பழைய வைதீக சைவத்த என்ன டீடைல்டா (detailed) இந்த நாயன்மார்களுடைய வரலாற்றோட டாக்குமெண்ட் பண்ற பெருமான் பரம சத்தியத்தில் பழுது வைத்து விடுவாரா? அதனால சற்றே தயவுசெய்து, சற்றே தயவுசெய்து கேளுங்கள்.

திருவிளையாடல் புராணமும் பெரியபுராணமும் சத்தியம்!

ஐயா, பெரிய புராணத்தையும் திருவிளையாடல் புராணத்தையும் பத்தி பேசணும் அப்படின்னா கட்டாயமா இந்த ஐந்து இலக்கண நூல்களைப் பற்றியும் பேசித்தான் ஆக வேண்டும். பாணினியோட சூத்திரமும், பதஞ்சலியோட மகாபாஷ்யமும், கார்த்தியாயனருடைய வார்த்திகமும், அகத்தியரோட இலக்கண நூல் விதியும், தொல்காப்பியரோட தொல்காப்பியமும்... இந்த ஐந்துமே வார்த்தைகள், இவைகளைப் பற்றிய விளக்கங்கள், இவைகளை எல்லாம் விளக்கும் பொழுது வெறுமனே சொற்குற்றம் இல்லாது ஒரு நூலை சமைத்து வைப்பதைப் பற்றி மட்டும் பேசவில்லை, பொருட்குற்றம் இல்லாது சமைத்து வைக்க வேண்டும் என்கின்ற தெளிவை அளிக்கின்ற நூல்கள்.

இந்த நூல்களோட இலக்கணம் மாறாது ஒருவர் சிந்திக்கப் பழகினால் மட்டும்தான் திருவிளையாடல் புராணம் மாதிரி, பெரிய புராணம் மாதிரி புராணங்களை செய்து வைக்க முடியும். அது போன்றவர்களுடைய சிந்தை பரம சத்தியத்தில் பழுது வைக்க இயலவே இயலாது. இத நான் பிரசன்ட் (present) பண்ற ஒரு ஆர்கியூமெண்ட் (argument) தான். இன்னும் குறைந்தபட்சம் ஒரு நூறு ஆர்கியூமெண்ட் இந்த பதினெட்டு நாட்கள்ல சொல்ல போறேன், எப்படி இந்த திருவிளையாடல் புராணமும் பெரியபுராணமும் பரம சத்தியம் அப்படிங்கிறது.

அடுத்த இப்ப இது... இந்த பெரியபுராணம் திருவிளையாடல் புராணம் போன்றவை முழுக்க முழுக்க... (ஆடியோ முடிவடைகிறது)

முழுக்க கட்டுக்கதைன்னு சொல்ற தீய சக்திகள் ஒரு பக்கம். அதுக்கடுத்து சிவபக்தர்களிலேயே கூட, "இதெல்லாம் உண்மை, அப்போ நடந்திருக்கலாம்... இப்பலாம் அதெல்லாம் எங்கப்பா சாத்தியம்? நம்மளுக்கெல்லாம் எங்கப்பா வரப்போறார்? நம்மள சுத்தி இருக்கறவங்களுக்கு எல்லாம் எங்கப்பா வரப்போறார்? காலம் மாறிடுச்சுப்பா, கலிகாலம் பொறந்துருச்சு" (என்பார்கள்).

டேய் என்ன... பெருமான் என்ன எக்ஸ்பயரி டேட் (Expiry date) போட்டாரா? "எனை அழைத்தவர்கள் அத்தனை பேருக்கும் வருவேன், சிவாய நம எனச் செப்பினால் உடனே வருவேன், அபாயமில்லை"ன்னு பெருமான் கொடுத்திருக்கிற உறுதி... இல்ல நம்முடைய மூவர் முதலிகள் அப்பரும், சுந்தரரும், சம்பந்தரும் கொடுத்திருக்கிற உறுதிகள், மாணிக்கவாசகப் பெருமான் கொடுத்திருக்கிற உறுதி... இதெல்லாம் என்ன எக்ஸ்பயரி டேட் இருக்கா? என்ன பேசுறீங்க?

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், "அப்போ நடந்தது இப்போ நடக்காது" அப்படின்னு சட்டிலா (subtle-ஆ) நம்புறவங்க எல்லாருமே கூட, தீய சக்திகளோட, நாத்திக சக்திகளோட சாஃப்ட் வெர்ஷன் (soft version). அதாவது சைவத்தையும், சனாதன இந்து தர்மத்தையும் மியூசியம் (museum) ஆக்கிப் பார்க்க முயற்சி பண்றாங்க. அது வாழ்வியல் சத்தியம்னு வாழ்வதற்குத் துணிவோ, தெளிவோ, நேர்மையோ, பலமோ இல்லாததனால், அதை மியூசியத்துல வைக்கப் பண்ற முயற்சிதான் "அப்போ நடந்தது இந்தக் காலத்துல எப்பப்பா நடக்கும்?" என்பது.

ஒரு கொடுமை என்னன்னாய்யா, சைவத்தையும், சனாதன இந்து தர்மத்தையும் வியாச பீடத்துல அமர்ந்து, மேடையில் அமர்ந்து முழங்குகின்றவர்களே கூட, சட்டிலா அவங்களுக்குள்ள இருக்கிற அந்தச் சுய சந்தேகத்தைக் காட்டிக்கிட்டே இருக்காங்க. "அப்போ நடந்தது, புராணத்துல இருக்கிறதை சொல்றேன், இப்போ நடக்குமான்னெல்லாம் என்கிட்ட கேட்காதீங்க..." என்னய்யா இது? என்ன இதெல்லாம்?

அண்ணாமலையான் அருளாலே, அண்ணாமலையானுடைய அருளாகவே, அருளிலிருந்து வடிவெடுத்து வந்தவன் என்பதனால், அண்ணாமலையான் சாட்சியாக, என் ஆன்ம மூர்த்தி அண்ணாமலையான் சாட்சியாகச் சொல்லுகின்றேன் கேளுங்கள். இந்தப் புராணங்கள், திருவிளையாடற் புராணமும், பெரியபுராணமும் சத்தியம்! அவைகள் எல்லாம் இன்றும் சாத்தியம்!

அடுத்த சத்தியம் சொல்றேன் கேளுங்க. "ஓ... அவங்க அளவுக்கு, அதாவது நாயன்மார்கள் அளவுக்கு பக்தியோடயோ, இல்ல திருவிளையாடற் புராணத்துல வர்ற அந்தப் பாணனைப் போலவோ, அதுல சொல்லப்படுற அந்த பக்தர்கள் தருமியைப் போலவோ, அவங்கள மாதிரியெல்லாம் ஒருவேளை பக்தி இருந்தால் பெருமான் வருவாரு... நம்மள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் எங்க வருவாரு?"

இது இன்னொரு படி... இந்தச் சுய சந்தேகம், தன்னைத்தானே அழிச்சுக்கிறது, கான்ஷியஸ் சூசைட் (conscious suicide). கான்ஷியஸ் சூசைட், பிஸிக்கல் சூசைடை (physical suicide) விட மோசமானது. ஆன்மீக ரீதியான பரம சத்தியங்கள் நம்ம வாழ்க்கையில நடக்காது அப்படின்னா, வாழ்ந்து என்ன? செத்துத் தொலைய வேண்டியதுதானே. பூமிக்குப் பாரம், சோத்துக்குப் பஞ்சமா இல்லாமலாவது போய், இன்னொரு ஜென்மமாவது பிறவி எடுத்து வந்து இந்தச் சத்தியங்களையெல்லாம் புரிஞ்சுக்கலாம். இருந்தென்ன, இறந்தென்ன?

ஐயா, நம்முடைய சுய சந்தேகத்தைப் 'பணிவு' அப்படின்னு காட்டாதீங்க. பணிவுக்கும் சுய சந்தேகத்துக்கும் வித்தியாசம் இருக்கு.

பணிவு அப்படிங்கிறது, "எனக்குள் இருக்கும் பரம்பொருளே எல்லோருக்குள்ளும் இருப்பதனால், அந்தப் பரம்பொருளை எப்போதும் வணங்குகின்றேன்." இது பணிவு. "அவர்களை விட நான் உயர்ந்தவனும் அல்ல, தாழ்ந்தவனும் அல்ல, எல்லோருக்கும் சமமானவனும் அல்ல, எல்லோருக்குள்ளும் இருப்பவன் நான்" அப்படிங்கிற புரிதலோடு வாழுதல் பணிவு.

"நமக்கெல்லாம் எங்க வரப்போறார்? அப்பருக்கு வந்தார், சுந்தரருக்கு வந்தார், தருமிக்கு வந்தார், பன்றிக்குட்டிக்குப் பாலூட்டினார்... நமக்கெல்லாம் எங்க வரப்போறார்?" அப்படின்னு சொல்றது பணிவு இல்ல, சுய சந்தேகம்.

அதனால, நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், இவையெல்லாமே பரம சத்தியம். திருவிளையாடற் புராணமும், பெரியபுராணமும் பரம சத்தியம். அதாவது, நமக்குப் புரியாத, நாம் பார்க்காத, புரிந்துகொள்ள முயற்சிக்காத வேற வேற டைமென்ஷன் (dimension), பிரபஞ்சத்தோட வேற வேற பரிணாமம், பரிமாணங்களில் இருந்து நிகழ்ந்த நிகழ்வுகளைத் தொகுத்து வைப்பதனால்... இவை பொய் என்கின்ற பாழ் மனதை... பொய் என்று சொல்லுகின்ற மூளைசலவையை ஏற்று உங்கள் வாழ்வை சீரழிக்காதீர்கள். சற்றே இந்த சத்தியத்தை புரிந்து உள்வாங்குங்கள்.

இன்னைக்கு நான் இந்த சத்சங்கத்தில உங்களுக்கு சொல்லப்போற ஒரே சத்தியம் இதுதான். திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் சத்தியம். அது இன்றும் சாத்தியம். உங்களுடைய தகுதி , தகுதியின்மை, இவைகள் எல்லாம் பெருமானுக்கு ஒரு பொருட்டே இல்லை. அதனால பெருமானை விட உங்களுடைய தீயவைகள் பலம் வாய்ந்தவை என்று நினைத்துக் கொண்டிருக்கிற சுய சந்தேகத்தை விட்டொழியுங்கள்.

அடுத்த சத்தியம், நல்லா புரிஞ்சுக்கோங்க. கண் திறந்து பார்த்தீர்களானால் உங்களை சுற்றிக்கூட எத்தனையோ நாயன்மார்கள் அதே இன்டென்சிட்டியோட (Intensity), அதே ஸ்ரத்தையோட வாழ்ந்து கொண்டிருப்பதை மெய்யாக பார்ப்பீர்கள். சிவனடியார்களுக்குள் இருக்கும் ஸ்ரத்தை, அவர்களுக்கு நடக்கின்ற அனுபவங்களை பார்த்து புரிந்து கொண்டீர்களானால், உங்கள் வாழ்விலும் அது சாத்தியம் என்கின்ற ஸ்ரத்தை வரும், சாத்தியப்படும். சுய சந்தேகம் அழியும்.

ரொம்ப அழகா 'சம்சய ராட்சச நாச மஹாஸ்திரம்’ அப்படின்னு குருவினுடைய சம்பந்தத்தை சொல்வார்கள். குருவினுடைய சம்பந்தமும், ஒரு நல்ல சிவபக்தர், சிவனடியாருடைய சம்பந்தமும், சத்சங்கமும் இதெல்லாம் ஒன்றுதான். சம்சய ராட்சச, அதாவது சுய சந்தேகம் என்னும் அரக்கனை அழிக்கின்ற மகாஸ்திரம் என்னன்னா... நல்ல சத்சங்கம். நல்லவர்களுடைய சங்கம் . சிவனடியார்களையுடைய உறவு, அவர்களோடு கலந்து பேசி, பழகி புறிந்துகொள்ளுதல், 'சம்சய ராட்சச நாச மஹாஸ்திரம்’. அதனாலதான், அடியார் கூட்டத்தை விறன்மிண்ட நாயனாருடைய கூட்டத்தையும் தேவாசாரிய மண்டபத்தையும் அந்த புராணத்தை, விளக்கத்தை (description ) புரிஞ்சிக்கிட்டிங்கனா, அடுத்த அடுத்த சத்சங்கங்கள்ல இத எல்லாம் நான் விளக்கிறேன். ஆரூரானுக்கும் அதிகமாக, அடியார் சங்கத்தை, அடியார் கூட்டத்தை முன்னோர்கள் வைக்கிறார்கள். இது என்ன சொல்றது. விறன்மீண்டார் தேவாசிரிய மண்டபத்தில் அமர்த்துஇருந்த சிவடியார்களை வணங்கிவிட்டு செலவில்லை என்ற காரணத்தினாலே, வன்தொண்டரையும் ஒதுக்குவோம், அந்த வன்தொண்டரை தன் நண்பன் என்று சொல்லிக்கொண்டு அர்ருறான் வந்தால் அவனையும் ஒதுக்குவோம். இது என்னய்யா கூத்து. அதாவது அனுபூதியை அளிக்கின்ற ecosysஸிஸ்டத்திற்கு எவ்வளவு மிகப்பெரிய ஸ்தானத்தை நமது முன்னோர்கள் கொடுத்தார்கள் அப்படிங்கறதுதான் இந்த கதையில் இருந்து இந்த நிகழ்விலிருந்து நாம் புரிந்துகொள்ளவேண்டும். கட்டாயமாக எப்படி பெருமானை விலக்க முடியும்ங்க. பெருமானுக்கே வாழ்க்கையை தந்தவர்கள் தானே ...மாதொரு பாகனுக்கே வழி வழி அடிமைகள் தானே நாம். அதனால தான அந்த சிவனடியார் என்ற டைட்டிலே (Title) வந்தது.

அதனால நம் வாழ்வின் முதல் பொருள், நம்முடைய வாழ்க்கையோட கேப்பிடல் (Capital) அவர்தான். முதல்ல அவரை விளக்கப்போறதில்லை, அவரை விளக்கவும் முடியாது. ஆனால், தான் அனுபூதியை அளிக்கின்ற இந்த ஈகோ சிஸ்டத்துக்கு (Ecosystem), தொகையடியார் திருக்கூட்டத்திற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம்முடைய முன்னோர்கள் வைத்திருந்தார்கள் அப்படிங்கிறத நீங்க புரிஞ்சுக்கணும்.

அந்த தொகையடியார் திருக்கூட்டத்து சத்சங்கம், சிவனடியார் சங்காத்தம், சிவனடியார் சம்பந்தம், தொகையடியார் சங்கமம், தொகையடியார் சத்சங்கம் எவ்வளவு முக்கியம்!

கண்திறந்து பாருங்கள், நம் வாழ்விலும் கூட பெருமான் விளையாடல்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கின்றான். நம்மை சுற்றி இருப்பவர்கள் வாழ்விலும் கூட பெருமான் தன் திருவிளையாடல்களை இன்றும் நிகழ்த்திக்கொண்டே தான் இருக்கின்றான்.

இந்த அடிப்படை சத்தியங்கள் புரிஞ்ச பிறகு தான், இந்த திருவிளையாடல் புராணத்தையும், பெரியபுராணத்தையும் உங்களுக்கு அனுபூதியாக என்னால மாற்ற முடியும். அதுக்காகத்தான், இதுக்காகவே தனியா நேரத்தை ஒதுக்கி இந்த சத்தியங்களை சொல்றேன்.

இதுக்கு அடுத்த சத்தியம், இங்க தான் நித்தியானந்தா என்டர் (Enter) ஆகுறேன். கொஞ்சம் பொறுமையோட கேளுங்கள்.

இவ்வளவு என் கூடையே வந்துட்டீங்க. இதுவும் கொஞ்சம் கூட வந்துருங்க. வாசல் வரை வந்துட்டு உள்ள வராம போயிராதீங்க, வந்துருங்க.

உங்களுடைய தேகமே மதுரை. உங்கள் துவாதசாந்தத்திலே எம்பெருமான் இப்பொழுதும் அமர்ந்து கொண்டு, சுந்தரேசப் பெருமான் இப்பொழுதும் தொடர்ந்து தன் திருவிளையாடல்களை செய்து கொண்டிருக்கின்றார். அதுதான் உங்கள் வாழ்க்கை.

நீங்க எந்த கோணத்திலிருந்து உங்களுக்குள் இருக்கும் பரம்பொருளை அணுகுகிறீர்களோ, அந்த கோணத்திலிருந்து அவர் வெளிப்படுறார்ங்க ஐயா. தருமி 'எனக்கில்ல, எனக்கில்ல, எனக்கில்ல, எனக்கு வராது'ன்ற சுய சந்தேகத்தோட அணுகினா, அந்த சுய சந்தேகத்தோட பிரதிபலிப்பா மிரர (Mirror) தான் நக்கீரனா காட்டுறாரு. "நிறுத்துங்கள்... குறையுள்ள பாட்டுக்கு பரிசில் அளிக்கப்பட்டால் அதற்காக வருந்துபவனும் நானே"னு நக்கீரனை தூண்டிவிட்டு, தருமியோட சுயசந்தேகத்துக்கு மிரராத்தான் நக்கீரன் தடையை காட்டுறாரு.

தருமி தோற்ற பிறகும், வீட்டுக்கு ஓடாம கோவிலுக்கு வந்து "பெருமானே" அப்படின்னு அழுது கரைந்து சரணாகதி அடையும் பொழுது, "தோற்றாலும் வென்றாலும் துணை உன் பதமே"னு வந்து சரணாகதி பண்ணதுனால... "சரி, இல்லைன்னானாலும் பரவாயில்லை ஆனா என் வாழ்க்கை உனதுதான், உன் காலடியில்தான். கொடுத்தால் செல்வத்தோடு மகிழ்ந்து சிறந்து வாழ்க்கை அப்பவும் உன்ன நெனச்சித்தான். நீ குடுக்காம மறுத்தாலும், அடித்தாலும் அப்பவும் உன்ன நெனச்சித்தான் போ" அப்படின்னதும், அப்ப பெருமான் என்ன பண்றாரு, "ஆஹா, டேய் உன் சரணாகதிய நீ காமிச்சிட்டடா, நான் வர்றேன்டா"னு தானே திருமேனி தாங்கி வந்து விளையாடுறார்.

அதுவும் என்ன விளையாட்டு? ஆழ்ந்து அந்த கதைய படிச்சீங்கன்னா, நக்கீரன் என்ன சொல்றான்? "சொற்குற்றம் இல்ல, இருந்தாலும் அத மன்னிக்கத்தக்கதே, பொருட்குற்றம் தான் பிரச்சனை"ங்கிறான். நக்கீரன் என்ன சொல்றாரு... அந்த கருத்து, பொருள், இயற்கையாகவே மணம் உண்டு அப்படிங்கிற பொருள்தான் குற்றம் அப்படின்னு நக்கீரர் வாதம் பண்றாரு. பெருமான் அது இல்லைன்னு சொல்றாரு, மூன்றாவது கண்ணை திறக்கிறாரு, அவன நக்கீரன எரிக்கிறாரு. அதுக்கப்பறம் திரும்ப உயிர் கொடுத்து மீண்டு கொண்டு வர்றாரு.

அது இன்னொரு நல்லா புரிஞ்சுக்கோங்க, மூன்றாவது கண் திறந்து அவர் எரிக்கும் பொழுதெல்லாமே தூய்மை படுத்துற வேலை மட்டும்தான் செய்றாரு. அங்க மன்மதனை மூன்றாவது கண் திறந்து எரித்த போதும் சரி, திரிபுராசுரர்களை மூன்றாவது கண் திறந்து எரித்த போதும் சரி, இங்க நக்கீரனுக்கு மூன்றாவது கண் திறந்து எரித்த போதும் சரி... இந்த மூன்றாவது கண் ஸ்டோரி (Story) எல்லாம் எடுத்து படிச்சு பாருங்க. ரீஜுவனேட்பண்ணி (Rejuvenate) புனரமைத்து உயிர் குடுக்குறாரே தவிர, யாரையும் சுத்தமா அழிக்கல. அது மூன்றாவது கண்ணுடைய விதி. எல்லா இடத்துலயுமே பாருங்க, அந்த மூன்றாவது கண் ஹிஸ்டரி (History) மொத்தத்தையும் எடுத்து பாருங்க. அந்த மலங்களை மட்டும்தான் அழிக்கிறாரு.

அழிச்சிட்டு ஞானத்தை கொடுத்துறாரு. இத குடுத்துட்டு திரும்ப நக்கீரன பொற்றாமரை குளத்துல இருந்து மீட்டு எடுத்துட்டு வராரு, எழுப்பி வராரு. எழுப்பிட்டு வந்த பிறகு என்ன பண்றாரு? அகத்தியர்ட்ட அனுப்பி இலக்கணம் படிக்க சொல்றாரு. அகத்தியம் படிக்க சொல்றாரு. ஏன்பா, உண்மையிலேயே இவன் பொருட்குற்றம் மட்டும்தான்னு சொல்றான், சொற்குற்றம் கண்டுபிடிக்கல அப்படின்னா... நக்கீரன் குடுக்குற ஆர்கியுமெண்ட்டே (Argument) பொருட்குற்றம் சார்ந்ததுதான் அப்படின்னும் போது, பொருட்குற்றம்தான் அப்படின்னு நக்கீரன் நினைக்கிறான்னா, பொருட்குற்றம் அளவுல நக்கீரன சரி பண்ணனும் அப்படின்னா ஞானத்தை கொடுத்தா முடிஞ்சு போச்சு.

ஆனா ஏன் இலக்கணம் படிக்க அனுப்புறாருன்னா... அகத்தியத்தின் சக்தி, அகத்தியமோ தொல்காப்பியமோ இலக்கணம் படிச்சீங்கன்னாலே, இந்த வார்த்தைகளை பிரித்து, ஆண்டு, புரிந்துகொள்ளுகிற அந்த தெளிவு வரும்பொழுது, சொற்குற்றம் மட்டுமல்ல பொருட்குற்றம் இருந்தாலும் கூட கண்டுபிடிப்பீர்கள், அல்லது பொருட்குற்றம் இல்லை என்றால் பொருட்குற்றம் இருப்பதாக மாயையில் விழ மாட்டீர்கள்.

ஐயா தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் அந்த சக்தி உண்டுங்கய்யா. இலக்கணத்தோடு முறையாக படித்தீர்களானால் தலைக்கணம் வரவே வராது. ஏன்னா, இலக்கணம் படிக்கும்பொழுதே, எப்படி அநாகதம், அகம்பாவம் அப்படிங்கறது ஆகதம் அது இடிச்சு, அகம்பாவம் அநாகதத்தின் மீது இடித்து, அது நாதமாக வடிவெடுத்து, நாதம் சப்தமாக திரண்டுருண்டு, சப்தம் சொல்லாய் வெளிவிழுந்து, சொல்லுக்கு எவ்வாறு பொருள் விளைகின்றது, அது கேட்பவர்க்குள் என்ன பொருளை விளைவிக்கும் என்கின்ற முழுத்தெளிவும் உருவாவதனால்...

அகத்தியம் படித்தாலே, சொற்குற்றம் செய்ய மாட்டோம் என்பது மட்டுமல்லாது, பொருட்குற்றம் செய்ய மாட்டோம் என்பது மட்டுமல்லாது, சொற்குற்றம் இல்லாவிட்டாலும் சொற்குற்றம் இருப்பதாய் கண்டுபிடிக்க மாட்டோம், பொருட்குற்றம் இல்லாவிட்டாலும் பொருட்குற்றம் இருப்பதாய் கண்டுபிடிக்க மாட்டோம். இந்த நக்கீரனுடைய பிரச்சனையே... தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல், அந்த பாடலுக்கும், பாடலையும் முழுமையாக படிக்காமல்...

அரசன் பிரச்சனைக்குத் தான் தீர்வு சொல்வதற்கு முன்பாக வேறொருவர் தீர்வை கொண்டு வந்து விட்டாரே என்கின்ற, தன்னுடைய ஒரிஜினல் இமேஜ் (Original image) ஆன 'தலைமைப் புலவன்' என்கின்ற அகம்பாவம், அந்த ஒரிஜினல் இமேஜுக்கு வலி வந்ததனால், வலித்த அகம்பாவம் அனாகதத்தின் மீது அடித்து, அந்த அனாகத தொனியில் இருந்து நாதம் உருண்டு, நாதம் சத்தமாய்த் திரண்டு வெளிப்பட்டு வரும்பொழுது ஏற்பட்ட குழப்பத்தினாலே, பெருமான் வரைந்து அளித்து அனுப்பிய பாடலில் சொற்குற்றமும் இல்லை, பொருட்குற்றமும் இல்லை என்பதை மறந்து, தவிர்த்து, கண்டும் அகம்பாவம் மறைத்து, காணாமல் இருந்து தன்னை மீறி இங்கு யார் விவாதம் செய்து ஜெயித்து விடப் போகிறார்கள் என்கின்ற சற்றே எழுந்த அந்த அகம்பாவத்தினாலும், வந்திருக்கும் தருமியின் வறுமைக் கோலத்தைக் கண்டும் நிச்சயமாக இவனாலே வாதம் செய்து வென்று விட முடியாது என்கின்ற முடிவுக்கு வந்து, அகம்பாவம் சற்றே தலையில் இடித்து, எப்படி அளவுக்கு மீறி உண்டுவிட்டு ஜீரணமாகாத உணவு புளியேப்பமாய் வருகின்றதோ, அகம்பாவம் அனாகதத்தில் இடித்தால் பொங்குகின்ற வார்த்தைகள் தலைக்குக் கனமாக மாறி, அதிலிருந்து தான் இந்த வாதப் பிரதிவாதங்கள்... அந்தப் பிரச்சனை துவங்குகிறது.

இங்க பெருமான் நக்கீரனை உபயோகித்து தருமிக்கு அவன் சுய சந்தேகத்தையும் காட்டுகின்றார், தருமிக்கும் பாடம் சொல்றார். "எனக்கு வராது, எனக்கு வராது"ன்னு நெனச்சா அப்படித்தான்டா போகும். ஆனா வராமல் போனாலும் "பெருமானே கதி" அப்படின்னு விழும் பொழுது, பூரணமாக தனக்குள்ளே எல்லாமாய் இருக்கின்ற அகண்ட பரிபூரணமான சுந்தரேசப் பெருமானே கதின்னு சொல்லும்பொழுது, என்று சரணடையும் பொழுது, தருமியின் அகம்பாவம் கரைவதனால் தருமிக்காய் தானே வருகின்றான். இப்போ நக்கீரனைக் காட்டி தருமிக்கும் பாடம் சொல்லி, தருமி சரணாகதி செய்து விட்டதனால் அவனுக்காகத் தானே இறங்கி வந்து நக்கீரனுக்கும் பாடம் சொல்லுகின்றான்.

இது ஒரு மல்டிபிள் லேயர் காம்ப்ளக்ஸ் (Multiple layer complex) ஆன, காம்ப்ளிகேட்டடான (Complicated) திருவிளையாடல்ங்கய்யா. யாருக்கு பாடம் சொல்றார்னு புரிஞ்சதுன்னா புரிஞ்சிரும், நமக்குத் தான்டா பாடம் சொல்றாரு. நம்முடைய பல்வேறு நிலைகளுக்குப் பாடம் சொல்றாரு. நம்முடைய சுய சந்தேகத்துக்குப் பாடம் சொல்றாரு. நம்முடைய நம்பிக்கையின்மைக்குப் பாடம் சொல்றாரு. நம்முடைய ஸ்ரத்தையின்மைக்குப் பாடம் சொல்றாரு. நம்முடைய அகம்பாவத்துக்குப் பாடம் சொல்றாரு. ஒவ்வொரு விதத்திலும் நமக்கே கண்ணாடி காட்டுகின்றான் ஆலவாய் கண்ணாளன். அவர் அங்கயற்கண்ணிக்கு மட்டும் கண்ணாளன் அல்ல, ஆலவாய்க்கே கண்ணாளனே... ஆலவாயே அவரை ரசிச்சதுப்பா. ஆலவாய்க்கே கண்ணாளன்! சுந்தரேசப் பெருமான் நமக்கே தான் கண்ணாடி காட்டுறாருங்கய்யா.

அதனால ஞானசம்பந்தப் பெருமான் பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததாகட்டும், சுந்தரமூர்த்தி நாயனார் முதலை உண்ட சிறுவனை மீட்டதாகட்டும், அப்பர் பெருமான் அரவம் தீண்டிய அப்பூதியடிகள் மகனை மீட்டதாகட்டும், திருவிளையாடல் புராணத்தில் வருகின்ற ஒவ்வொரு கதைகளாகட்டும், அல்லது சிறுத்தொண்டருடைய மகனை அரிந்து கறி சமைத்து வைத்து இலையில் படைக்கப்பட்ட மகனை மீண்டும் அழைத்து வருவதாகட்டும்... இவைகள் எல்லாம் சத்தியம்! இன்றும் சாத்தியம்!

இவைகளையெல்லாம் எப்படி உங்கள் வாழ்க்கையில் சத்தியமாக்கிக் கொள்வது, சாத்தியமாக்கிக் கொள்வது, அனுபூதியாக்கிக் கொள்வது என்பதைத்தான் இந்த 18 நாட்களும் உங்களுக்குப் பகிர்ந்தளிக்கின்றேன். தொடர்ந்து இருங்கள் நித்திய நேரலையில், திருவிளையாடல் புராணத்தை அனுபூதியாய் உணர்ந்திட. இதோட திருவாரூருடைய 365 லீலைகள் அதையும் சேர்த்துக்கொள்கின்றேன், ஏன்னா இது எல்லாமே பல இடங்கள்ல ஓவர்லேப் (Overlap) ஆகுதுங்கய்யா. பல இடங்கள்ல ஒன்னோட ஒன்னு இணைந்து பின்னிப் பிணைகின்றது. அதனால குறைந்தபட்சம் ஒரு இன்னொரு பத்து ஆலயங்களுடைய புராணக் கதைகளையும் இதோட சேர்க்கிறேன். அருணாசல புராணம், திருநாகைப் புராணம், காஞ்சிப் புராணம் இந்த நூல்களையும் கூட இதோட சேர்த்து இந்த பதினெட்டு நாட்கள் சொல்லும்பொழுதே அங்கங்க இருந்து சில கதைகள் எல்லாம் எடுத்துச் சொல்றேன். கதைகள் அப்படிங்கறதை விட வரலாற்று உண்மைகள், அதை சொல்றேன்.

இணைந்திருங்கள்! பெருமானை இணைந்து ரசிப்போம், ருசிப்போம், புசிப்போம், ஆனந்தித்து கொண்டாடுவோம், அனுபூதியாக்கி வாழ்வோம். பரமசிவ ஞான பிராப்திரஸ்து! பரமசிவ அனுபூதி பிராப்திரஸ்து! பரமாத்வைத பிராப்திரஸ்து! என்று எல்லோரையும் ஆசீர்வதிக்கின்றேன்.

எல்லோருக்கும், எல்லோரும் நித்தியானந்தத்தில் நிறைந்து, நித்தியானந்தத்தில் மலர்ந்து, நித்தியானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள்!

Details

The talk

Date
14 April 2026
Language
English

The recording

Recording
No recording linked to this transcript

The transcript

Status
Live notes
Time-synced
Not time-synced
Length
4,826 words · 27 min read
Topics
None recorded