“As the ultimate manifestation of Parama Shiva, Gajamukhanugraha Murthy,…”
ஓம்... ஓம்... ஓம்...
As the ultimate manifestation of Parama Shiva, Gajamukhanugraha Murthy, I bless you all with Paramadvaita.
All the Parama Shiva Sena participants in Kailasa... Kailasa Thiruvannamalai, and all the Chitsabha members, Rajasabha members, Kailasavasis, blessings to each and every one of you.
As the Parama Shiva... ultimate manifestation, Gajamukhanugraha Murthy, I bless you all... Paramadvaita Prapthirasthu!
சர்வாபீஷ்ட ப்ராப்திரஸ்து! சர்வ மங்கள ப்ராப்திரஸ்து! சர்வானந்த ப்ராப்திரஸ்து! சர்வ ஐஸ்வர்ய ப்ராப்திரஸ்து! சிவ ஞான போத ப்ராப்திரஸ்து!
ஓம். உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.
திருவிளையாடற் புராணம். இந்த சத்சங்கத்தின் ஞான ரசவாதத்திற்குள் நுழைவதற்கான அடிப்படை அறிமுகத்தை அளிக்கின்றேன், புரிந்து கொள்ளுங்கள். அடிப்படையான இந்த சில சத்தியங்களை புரிஞ்சுக்கோங்க. முதல்ல...
திருவிளையாடற் புராணத்திலும், பெரிய புராணத்திலும் சொல்லப்பட்டிருக்கின்ற இந்த நிகழ்வுகள், சத்தியத்தை அப்படியே டாக்குமெண்ட் (Document) பண்ணி வெச்சிருக்காங்க. அதை முதல்ல புரிஞ்சுக்கோங்க. இங்க திருவிளையாடற் புராணமோ, பெரிய புராணமோ ஸ்பிரிச்சுவல் பொயட்ரி (Spiritual poetry) கிடையாது. ஒரு ஆன்மீகக் கவிதை கிடையாது.
கவிதையின் நடையில் சொல்லப்பட்டிருப்பதனாலேயே அதில் பொய் கலந்திருக்கும் என்று நமக்குச் செய்யப்பட்டிருக்கின்ற மூளைச்சலவை, திருவிளையாடற் புராணத்தின் முன்பாகவும், பெரிய புராணத்தின் முன்பாகவும் தோற்றுப்போய் விடுகின்றது. அதை நல்லா புரிஞ்சுக்கோங்க.
ஐயா... இந்தப் பிரபஞ்சம், நம் ஐம்புலன்களால் பார்க்கின்ற, புரிந்து கொள்ளுகின்ற அந்த அளவோடு நின்று விடுகிறது என்று நினைத்தால், உங்களைப் போன்று ஒரு மிகப்பெரிய குறையறிவு உடையவர் வேற யாரும் இருக்க மாட்டாங்க. தயவுசெய்து அந்த குறையறிவு மூளைச்சலவையை... அதுக்கு 'பகுத்தறிவு'ன்னு பெயர் வேறு கொடுத்து, இந்தக் குறையறிவு மூளைச்சலவையிலிருந்து உங்களை விடுபடுத்திக் கொள்ளுங்கள்.
அது மெட்டீரியலிசம் (Materialism) ஆகட்டும், இல்ல நாத்திகம் ஆகட்டும், லோகாயதம் ஆகட்டும்... நல்லா புரிஞ்சுக்கோங்க, லோகாயதம் வேற, மெட்டீரியலிசம் வேற. வெஸ்டர்ன் மெட்டீரியலிசத்தை (Western Materialism) தான் மெட்டீரியலிசம்னு சொல்றேன். ஈஸ்டர்ன் மெட்டீரியலிசம் (Eastern Materialism) ஒன்னு இருக்கு, அதுதான் லோகாயதம்.
ஈஸ்ட்லயே (East)... கீழ் நாடுகளிலேயே, ரெண்டு மூணு விதமான நாத்திகம் இருக்கு. பாரம்பரிய நாத்திகம், நவீன கால நாத்திகம். இந்த நவீன கால நாத்திகம் மோர் ஆர் லெஸ் (More or less) பார்த்தீங்கன்னா, இந்து மதத்தை அழித்தாக வேண்டும், சனாதன...இந்து தர்மத்தை அழித்தாக வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு செய்யப்படும் மூளைச் சலவை, அது நத்திங் பட் ஜஸ்ட் தீய சக்தி (nothing but just). தீய சக்தி அதுல ஒன்னும், அதுல ஸ்டஃப்பே (stuff) கிடையாது. ஒரு டிபேட் (debate) பண்ணி, ஆர்க்யூ (argue) பண்ணி, நேர்மையான ஒரு வாதப் பிரதிவாதங்கள் செய்து, வாக்கியார்த்த சதஸ் பண்ணி, அந்த மாதிரி எல்லாம் செய்றதுக்கு எல்லாம் அங்க மெட்டீரியலே (material) கிடையாது. ஜஸ்ட் ஒரு தீய சக்தி.
ரவுடி கும்பல், இல்ல பொலிட்டிக்கல் பவர் (political power), இந்த ஹார்ட் பவரை (hard power) ஹோல்ட் பண்ணி, ஹார்ட் பவரை கேப்சர் பண்ணி, அந்த வேகத்தோடு சாஃப்ட் பவரை (soft power) அழிக்கிற ஒரு தீய சக்தி. தீவிரவாத தீய சக்தி அவ்வளவுதானே தவிர, இதுல வாதப் பிரதிவாதங்கள், புரிந்து கொள்ளுதல், ஞானம், அறிவு என்பதற்கான பங்களிப்பே அங்க இல்ல. அந்த டைமென்ஷனே (dimension) அங்க இல்ல. சோ, இப்போ இந்த ஒன்னு ஒன்னா பாருங்க. ஒவ்வொரு நிலையா சொல்றேன், அதாவது...
பெரியபுராணம் போன்ற இந்தப் புராணங்கள் எல்லாம் பிரபஞ்சத்தோட பல்வேறு பரிணாமங்களிலும், பரிமாணங்களிலும் நிகழ்ந்தவற்றைப் பார்த்து, நமக்கு நேரடியாக சத்தியத்தை சத்தியத்தின்படியே அமைத்துத் தந்திருக்கிறார்கள். நீங்க ஒன்னு நல்லா புரிஞ்சுக்கணும், திருவிளையாடற் புராணம் செய்து வைத்த வியாசரோ, நீலகண்ட தீட்சிதரோ, திருப்பற்றப்புலியூர் நம்பியோ, பரஞ்சோதி முனிவருக்கோ எந்த வெஸ்டட் இன்ட்ரெஸ்ட்டும் (vested interest) கிடையாது.
சத்தியத்திற்கு அபச்சாரம் செய்து, பரம சத்தியத்திற்கு அபச்சாரம் செய்து, அறிவை உபயோகப்படுத்தி செய்யப்படுகின்ற எல்லா செயல்களும் அறிவு விபச்சாரம். இங்க திருவிளையாடற் புராணம் செய்து வைத்த நால்வரும், இன்னும் நிறைய பேர் திருவிளையாடற் புராணம் பண்ணியிருக்காங்க, அதுல இந்த நால்வரைத் தான் நான் மெயினா எடுத்துக்கிறேன். அவங்களைத்தான் நான் ரெஃபரன்ஸ் பாயிண்ட்டா (reference point), பேஸ்லைனா (baseline) எடுத்துக்கிறேன். அவங்களைத்தான் அடித்தளமாக எடுத்துக்கொண்டு இந்த சத்சங்கங்களை நிகழ்த்துறேன்.
வியாசரோ, நீலகண்ட தீட்சிதரோ, திருப்பற்றப்புலியூர் நம்பியோ, பெரும்பற்றப்புலியூர் நம்பியோ, இல்ல பரஞ்சோதி முனிவரோ, எந்த விதத்திலும் எந்த பிரதிபலனும் அல்லது எந்த ரெகக்னிஷன் (recognition), பெருமை இந்தக் காரணங்கள் எதுவுமே இல்லாதவர்கள் என்பதனால், சுத்தமான தியாகிகள் என்பதனால், சத்தியத்திலே தங்களை ஸ்தாபிக்கப்பெற்று, சத்தியத்திலே ஸ்தாபித்து இருந்ததனால், சத்தியத்திலே பிரதிஷ்டையாகி இருந்ததனால், அறிவு விபச்சாரம் செய்யாதவர்கள் என்பதனால்... நல்லா புரிஞ்சுக்கோங்க, இவங்க நாலு பேர்ல யாருமே எந்த அரசோட கோர்ட் போயட் (court poet) கிடையாது.
எந்த அரசாங்கத்தோட கோர்ட் போயட்டும் கிடையாது. சேக்கிழார் கோர்ட்ல இருந்தா கூட, மந்திரியா இருந்தா கூட, இந்தத் திருப்பணி அப்படின்னு வரும் பொழுது ஒரு விதத்தில் கூட அரசனுடைய தலையீடு இல்லை. எங்கேயுமே பார்த்தீங்கன்னா, அவர் இந்தப் பரம சத்தியத்தை வார்த்தையால் வடித்து வைப்பதில் காம்ப்ரமைஸ் (compromise) பண்ணிக்கவே இல்லை. இத்தனைக்கும் இன்னும் கொஞ்சம் ஆழமா இந்தப் பெரியபுராண ஆய்வு நூல்களை எல்லாம் எடுத்துப் புரட்டிப் பார்த்தோம்னா, உண்மையில சேக்கிழார் பெருமான், அந்த ஒவ்வொரு நாயன்மாருடைய வாழ்க்கையையும் எழுதுவதற்கு, படிப்பதற்கு, அந்த ஒரு ஒரு ஊருக்கும் பயணப்படுறார். அந்தக் காலகட்டத்துல ஒரு ஒரு ஊருக்கும் பயணப்பட்டு, அந்த ஊர்ல தகவல்களைத் திரட்டி...
ஒரு நல்ல விஷயம் புரிஞ்சுக்கணும், பெரியபுராணமோ, திருவிளையாடற் புராணமோ வெறும் ஞான சத்தியங்கள் மட்டுமல்ல, அந்தக் காலகட்டங்களின் சமூக, அப்படியே சமூகத்தைப் படம் பிடிச்சு வச்சிருக்காங்கய்யா. த டீடைலிங் (the detailing), அவங்க உள்ள போயிருக்கிற அந்த டீடைலிங்கைப் பார்க்கும் பொழுது, அந்த டீடைலிங்க்காக அவங்க எவ்ளோ பிரயத்தனப்பட்டு இருக்காங்க அப்படின்னு பார்க்கும் பொழுது அவர்களுடைய அறிவின் நேர்மை...
ஒரு சில உதாரணங்கள் சொல்றேன். சேக்கிழார் காலத்துல பல ஆலயங்கள்ல அம்பாள் சன்னிதி வேற மாதிரி இருந்திருக்கு, இல்லாம இருந்திருக்கு, எப்படி எப்படி அப்போ அந்த டைம்ல இருந்ததோ அதை அப்படியே டாக்குமெண்ட் (document) பண்ணி வச்சிருக்கார். ஜாகிரபி (Geography), சமூக அமைப்பு, அதாவது புவியியல் அமைப்பு, அந்த ஊர் கட்டமைப்பு எப்படி இருந்திருக்கு, அந்த ஊரோட இயற்கை அமைப்பு எப்படி இருந்திருக்கு, "அந்த ஊரோட அரசியலமைப்பு எப்படி இருந்திருக்கு, அந்த ஊரோட சமூக அமைப்பு எப்படி இருந்திருக்கு, அந்த ஊரோட ஆன்மீக கட்டமைப்பு எப்படி இருந்திருக்கு... இது அத்தனையும் எவ்வளவு டீடைலா (detail), எவ்வளவு ஆழமா ஆவணப்படுத்தி இருக்காரு.
இந்த ஆவணப்படுத்துதலுக்கு... சேக்கிழார் பெருமானோ, வியாசரோ, பெரும்பற்றப்புலியூர் நம்பியோ, பரஞ்சோதி முனிவரோ, நீலகண்ட தீட்சிதரோ எடுத்திருக்கின்ற பிரயத்தனம்... அத பார்க்கும் பொழுதே தெரியுது, சத்தியம் அப்படியே ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதில் அவர்கள் எந்த அளவுக்கு முனைப்போடு இருந்திருக்கிறார்கள்னு.
அப்பா திருவாரூர், இந்த தரையிலே கண் முன்னாடி இருக்கிற ஒரு ஊரையே போய் பார்த்து அதுல என்ன இருக்கோ அதை மட்டும்தான் டாக்குமெண்ட் (document) பண்ணனும்ன்ற அறிவுக்கற்பும் அறிவு நேர்மையும் உடையவர்கள், இப்போ தேவலோகத்தையும் சிவலோகத்தையும் மட்டும் என்ன கற்பனை பண்ணி டாக்குமெண்ட் பண்ணிடுவாங்களா?
முதல்ல தமிழ் இனமே... உன் மீது நடத்தப்பட்ட மிகக் கொடும் தாக்குதலான மிகப்பெரிய மூளைச்சலவை... அதாவது இனத்தின் மீது இன அழிப்பு (Genocide). உங்கள மீது நடத்தப்பட்ட அந்த Genocide-லருந்து வெளியில தப்பிச்சு வெளியில வாங்க. உயிரோடு தப்பித்தது மட்டும் போதாது... உயிர்மயோடு தப்பியுங்கள். உங்கள் உயிர்மையை... உயிர்மை உரிமையை மீட்டெடுங்கள். உங்க உயிர்மையின் உரிமைதான்...
திருவிளையாடற் புராணம், பெரியபுராணம் போன்றவைகள் எல்லாம் சத்தியம். இவைகள் நடந்தவைகள் நடந்தபடியே அப்படியே செய்யப்பட்டிருக்கின்ற ஆவணம்.
தமிழினமே... சில நூறு ஆண்டுகளாக உங்க மேல பல நிலைகளிலே இனப்படுகொலை தாக்குதல் நிகழ்ந்திருக்கின்றது. பல நிலைகள் என்னால சொல்ல முடியும். இந்த இனப்படுகொலை தாக்குதல்கள் வெறுமனே போர் மட்டும் கிடையாது.
அதாவதுங்கய்யா... நம்முடைய சனாதன இந்து தர்மத்தோட ஆணிவேர் ஆலயம். இந்த ஆலயம் செய்கின்ற குலமான விஸ்வகர்மா குலத்தை ஃபோகஸ் (focus) பண்ணி அடிச்சு கன்வெர்ட் (convert) பண்ணிருக்காங்க. மதம் மாற்றிருக்காங்க. ஏன்னா அவங்க மதம் மாறி போயிட்டாங்கன்னா, அந்த ஆலயம் சமைக்கின்ற கலை அழிஞ்சாலே போதும் இந்து மதத்தை, சனாதன இந்து தர்மத்தை அழிச்சிடலாம். இது மாதிரி பிளான் (plan) பண்ணி பிளான் பண்ணி... இது ஒரு ஒரு நாள் ரெண்டு நாள்ல நடந்தறதில்ல. அதனால உங்களுக்கு பலபேரு இத புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்க.
கடந்த 40 ஆண்டுகளாக இந்தத் துறையிலே முழுகி முத்தெடுத்தவன்றதுனால... உலகம் முழுக்க பல நூறு இடங்கள்ல ஆலயம் பண்ணிருக்கேன். கணக்கு போட்டு பாத்தா லார்ஜஸ்ட் (Largest) திருமேனிகள் செஞ்சது நவீன காலத்துல நாங்களா தான் இருப்போம், கைலாசமா தான் இருப்போம். ஏன்னா பல ஆயிரக்கணக்கான திருமேனிகள் செஞ்சு பல ஆயிரக்கணக்கான இடங்கள்ல பிரதிஷ்டை பண்ணிருக்கோம். இந்த துறையில வேலை செய்றவங்கள... இந்த திருமேனிகள், கருங்கல் திருமேனி பண்றவங்க, மத்த இந்த துறையில வேலை செய்றவங்களோடெல்லாம் 40 ஆண்டுகளாக பழகிக்கொண்டிருக்கிறேன். அவங்க எல்லாரும் சொல்றது அதுதான்.
கும்பகோணம், அந்தப் பகுதிகள், பல பகுதிகள்... எங்களுக்கு முந்தைய தலைமுறைகள்ல எல்லாம் பல பேர் எங்கள் குலத்தவர்கள் கட்டாயப்படுத்தியோ அல்லது வறுமையின் காரணமாகவோ மதம் மாற்றப்பட்டிருக்கிறார்கள் சாமி. அதனால எங்கள் குலத்தோட குலம் அழிந்துவிட்டது. இன்னொன்னு... இந்தப் பாரம்பரிய கல்வியை illegitimate ஆக்குறது. அதாவது அதை வந்து அங்கீகாரம் இல்லாததாக மாற்றுவது.
ஹே.. தெளிவா ஓப்பனா (open) சொல்றேன்... பாரம்பரியமா சின்ன புள்ளையிலருந்து அப்பா அம்மாவோட பட்டறையில சுத்திக்கிட்டு, உளி புடிச்சு, சுத்தி புடிச்சு... அப்பா அந்த தியான ஸ்லோகங்களை, ஆகமத்தோட தியான ஸ்லோகங்களைச் சொல்லி திருமேனிகளைச் செதுக்கும் பொழுது... தாயார் அந்த உளிய உலையில வச்சு கொதிக்க வச்சு, உளிய சூடு பண்ணிக் கொடுத்து... தாயார் சமைச்சு கொண்டுவந்து தந்தைக்கு பட்டறையில கொடுக்கும்போதே, சாப்பாடு கொடுக்கும்போதே குழந்தைக்கும் கொடுத்து... அந்த மாதிரி வளர்ந்த குழந்தைகள் செய்கின்ற சிற்பங்கள், திருமேனிகள் அதோட டீடைல் (detail), அதோட அழகு, அதோட அமைப்பு... இவங்க நடத்துற இந்த மாடர்ன் டே காலேஜ்ல (Modern day college) போய் படிச்சிட்டு வர்ற பசங்க, அவங்க செய்யற சிற்பங்கள் சிலைகள் அதோட அமைப்பு... இந்த ரெண்டுத்தையும் பாத்திங்கனாலே புரிஞ்சுருங்கய்யா
அதாவது பாரம்பரிய கல்வி முறையை illegitimate ஆக்குனதே ஒரு இனப்படுகொலை தான். சட்டத்தை யூஸ் (use) பண்ணி இனப்படுகொலை பண்றது. சட்டம்னு ஒன்னத்த உருவாக்கி அத யூஸ் பண்ணி இனப்படுகொலை பண்றது. Lawfare."
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.
கருத்தியல் ரீதியாக, நடைமுறையியல் ரீதியாக பல்வேறு விதத்திலே... தொடர்ந்து இனப்படுகொலை... நம்முடைய சனாதன இந்து தர்மத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்... தொடர்ந்து சனாதன இந்து தர்மத்தின் கருத்துக்களை அவமதித்து, மலினப்படுத்தி, பொய் என்று காட்டி, கிண்டல் கேலி செய்து, மொத்த ஊடகமே பாருங்க ஐயா... திரைப்படம் ஆகட்டும், என்ன... சின்னத்திரை ஆகட்டும், மொத்த ஊடகத்தையும் பாருங்க ஐயா.
ஒரு சில எக்ஸெம்ப்ஷன் (exemption), கொஞ்சம் நல்லவங்க சில பேர் இருந்து அவங்களும் தட்டுத்தடுமாறி, எப்படி வ.உ.சி கடன் வாங்கி உயிரைக் கொடுத்து கப்பல் ஓட்டினாரோ, அந்த மாதிரி சில அந்த காலத்து தயாரிப்பாளர்கள் சில பேரு தட்டுத்தடுமாறி திருவிளையாடல் மாதிரி ஒரு படமோ, இல்ல நந்தனார் மாதிரி ஒரு படம், இல்ல சில திருவருட்செல்வர் மாதிரி சில படங்களை தயாரித்து வைத்தார்களே தவிர, அதுக்குப்பிறகு...
எப்படி இந்த தீய சக்தி, திரை, பதிப்பு, ஊடகம்... இதுல இந்த ஊடகத்துல நான் பிரிண்ட் மீடியா (print media), சின்னத்திரை, சோசியல் மீடியா (social media) சகலத்தையும் எப்படி ஆக்டோபஸ் (octopus) மாதிரி இந்த தீய சக்தி ஆக்குபை (occupy) பண்ணிக்கிட்டு தமிழர்களை உயிர்மை ரீதியாக அழித்து...
ஆழ்ந்து கேளுங்கள்.
உங்கள் மீது செய்யப்பட்ட இந்த மூளைச்சலவை முழுமையாகப் புரிந்தால்தான், எவ்வாறு தீய சக்திகள் உங்களை வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் தின்றிருக்கின்றது. ஒரு மூணு தலைமுறையாவேங்கைய்யா, தமிழனுக்கும் சனாதன இந்து தர்மத்துக்கும் சம்மந்தம் இல்லை... என்னென்ன மூளைச்சலவைகள்... சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் பிரச்சனையை கிரியேட் (create) பண்ணி... என்னென்ன மூளைச்சலவைகள்.
இது வெறும் மூளைச்சலவை இல்லைங்க ஐயா, இனப்படுகொலை. தமிழினமே விழித்துக்கொள்! உங்களுடைய உயிர்மை உரிமையை மீட்டெடுங்கள்.
திருவிளையாடற் புராணமும், பெரிய புராணமும் சத்தியம் அப்படின்னு நம்புற மாதிரியான ஈக்கோ சிஸ்டம் (ecosystem) எதுவுமே இல்லாம சீரழிச்சு வெச்சிருக்கானுங்க பாருங்க ஐயா இந்த தீய சக்திகள்.
ஐயா நல்லா புரிஞ்சுக்கோங்க... வியாசரைப் போலே, பெரும்பற்றப்புலியூர் நம்பியைப் போலே, பரஞ்சோதி முனிவரைப் போலே, நீலகண்ட தீட்சிதரைப் போலே, சேக்கிழார் போலே, எனக்கும் எந்தத் தேவையும் இல்லாமல், சத்தியத்தை ஆவணப்படுத்தி உங்களுக்கு சாத்தியப்படுத்த வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்திற்காக மட்டும்தான் அவர்களும் பேசினார்கள், நானும் பேசுகின்றேன்.
அதனால், கொஞ்ச ஆழ்ந்து நான் சொல்றதெல்லாம் உள்வாங்குங்க. உங்களுடைய உயிர்மை உரிமையை மீட்டெடுங்கள் ஐயா.
சேக்கிழாரோட ரிசர்ச் (research) பத்தி கொஞ்சம் சொல்றேன் கேட்டுக்கோங்க ஐயா, புரிஞ்சுக்கோங்க... அதுக்கு அப்புறம் பரஞ்சோதி முனிவர்...
பெரும்பற்றுப்புலியூர் நம்பி... இவங்களுடைய ரிசர்ச் பத்தியும் சொல்றேன். அவங்க எல்லாம் எப்படி ரிசர்ச் பண்ணி இருக்காங்கன்னு.
இந்த நூல்கள் ஏன் சேக்கிழாரையும் கூட எடுத்துக்கிறேன் நான் ஐயா, திருவிளையாடற் புராணத்தோட... திருவிளையாடற் புராணம் சொல்லும்பொழுது பெரிய புராணத்தையும் ரெஃபர் பண்ணித்தான் ஆகணும் வேற வழி கிடையாது. காரணம் என்னன்னா திருவிளையாடற் புராணத்துல வர்ற பல திருவிளையாடல்கள் பெரிய புராணத்திலேயும் வருது. முக்கியமா திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் சம்பந்தப்பட்டதெல்லாம் பெரிய புராணத்திலேயும் வருது. ஏன்னா இந்த ரெண்டு நூலும் சில விதங்கள்ல ஓவர்லேப் (overlap) ஆகி வருது.
அதனாலதான் பெரிய புராணத்தையும் எடுத்துட்டு வர்றேன். ஏன்னா திருவிளையாடற் புராணம் சொல்லும்பொழுதே பெரிய புராண ரெபரன்ஸும் (reference) பண்ண போறேன். பெரிய புராணத்தோட மேற்கோள்களையும் நிறைய காட்டப்போறேன் அதனாலதான் ரெண்டையும் எடுத்துட்டு வர்றேன். என்னென்ன நூல்களை எல்லாம் உபயோகப்படுத்த போறேன், அதோட ஆழமான உண்மை, அதோட சத்தியத்தின் ஆழம்... இதை புரிய வச்சிட்டேன்னாதான் உங்களுக்கு முழுக்க முழுக்க இந்த புராணத்திற்குள் முழுகி அந்த அனுபூதி முத்தெடுப்பீர்கள்.
சேக்கிழார் அய்யா மூல நூலை ஆய்வு பண்றார். மூல நூல் வந்து நம்பியாண்டார் நம்பி தொகுத்த 'திருத்தொண்டர் திருவந்தாதி' அப்புறம் 'திருத்தொண்டத்தொகை'. இதைத்தான் சேக்கிழார் வந்து ஆதாரமா வச்சுட்டு மூல நூல் ஆய்வு பண்றார். அதுக்கு அடுத்து தேவார ஆராய்ச்சி பண்றார். தேவாரப் பாடல்கள்ல நாயன்மார்கள் பற்றி சொல்லப்பட்டிருக்கின்ற உள்ளுறை குறிப்புகள்... அதாவது ஞானசம்பந்தரோ, திருநாவுக்கரசரோ, சுந்தரமூர்த்தி நாயனாரோ பாடும் பொழுதே பல இடங்கள்ல இந்த நாயன்மார்களைப் பற்றிய குறிப்புகளோடையே ரெஃபர் பண்ணி பாடுறாங்க. சோ, அதையெல்லாம் ஆராயறார். சுந்தரமூர்த்தி நாயனார் பாடல்கள்ல பாத்தீங்கன்னா, மற்ற நாயன்மார்களைப் பற்றி பல இடங்கள்ல தேவாரத்துல சொல்றாரு, அதெல்லாம் ஆதாரமா எடுத்துக்கறாரு.
அதுக்கடுத்து சேக்கிழார் பெருமான் ஊர் ஊரா போறாரு. கள ஆய்வு பண்றாரு, ஃபீல்ட் ரிசர்ச் (field research) பண்றாரு. ஐ திங்க் (I think) கள ஆய்வு செய்து தமிழிலே எழுதப்பட்ட தெளிந்த புராணங்கள் அப்படின்னா பெரிய புராணமும் திருவிளையாடற் புராணமும்தான் சொல்லணும். ரொம்ப தெளிவா தமிழ்நாடு முழுவதும் பயணம் பண்றாரு. அறுபத்து மூன்று நாயன்மார்கள் வாழ்ந்த ஊர்கள், அவர்கள் பிறந்த இடங்கள், அவர்கள் வழிபட்ட சிவாலயங்கள் இதெல்லாம் நேர்ல போய் பார்வையிடுறார். பார்வையிட்டு வாய்மொழியா, கர்ண பரம்பரையா இருக்கின்ற கதைகளை, வரலாற்று உண்மைகளை சேகரிக்கிறாரு.
அந்தந்த ஊர்ல வாழ்ந்த வயோதிகர்கள், முதியவர்கள், அறிஞர்கள், சைவ அடியார்கள் அவங்க கிட்ட எல்லாம் போய் நேர்ல, அவங்கள எல்லாம் கேட்டு இன்டர்வியூ (interview) பண்ணி டாக்குமெண்ட் (document) பண்றாரு. இந்த வரலாறுகள், கருத்துக்கள், குறிப்புகள் இதை திரட்டுறாரு. கல்வெட்டு அப்புறம் ஸ்தலபுராணம் இதையெல்லாம் ஆராயறார். நாயன்மார்கள் வாழ்ந்த கோயில்கள்ல இருக்கிற கல்வெட்டுகள், செப்பேடுகள், தலபுராணங்கள்...
ஒரு நல்ல விதமா, நல்வாய்ப்பாக இந்த இஸ்லாமிய படையெடுப்பு, கிருஸ்தவ படையெடுப்பு இந்த ரெண்டுத்துக்கும் முன்னாடி இந்த கல்வெட்டுகள், செப்பேடுகள் இதெல்லாம் ரொம்ப நிறைய பாதுகாக்கப்பட்டு இருந்தது. நல்லா புரிஞ்சுக்கோங்க அரசர்கள் மற்ற நாடுகளை தாக்கினாலும் கூட ஆலயங்களை தாக்குவதில்லை, அழிப்பதில்லை. அரண்மனைகளை தாக்கி அழித்தார்களே தவிர ஆலயங்களை தாக்கி அழிப்பதில்லை. இஸ்லாமிய, கிறீஸ்தவ படையெடுப்பு நடக்கும் போது மட்டும்தான் ஆலயங்களை தாக்குகிற பழக்கம் வந்தது. அதுக்கு முன்னாடி வரைக்கும் ஆலயங்களை தாக்குகின்ற வழக்கம் கிடையாது.
திருவிளையாடற் புராணத்திலயே பாத்தீங்கன்னா பெருமான் ஆலயத்துல மீன் இலச்சினையை எடுத்து ரிஷப இலச்சினை, நந்தி முத்திரையை போடுறாரு. அப்படின்னா என்ன சொல்றாருன்னா, ஸ்டேட்டும் (State) டெம்பிளும் (Temple) தனித்தனியா இருங்கப்பா. இதை ஆரம்பிச்சதே பெருமான் தான். சர்ச்-ஸ்டேட் செப்பரேஷன் (Church-State separation) சொல்றதையே ஆரம்பிச்சதே பெருமான் தான். கோயிலைப் பொறுத்தவரைக்கும் யாரு வேணா வரலாம், தரிசனம் பண்ணலாம், போகலாம். இது அரசனோட டெரிட்டரி (territory) ஆளுமைக்கு கீழ வராதுங்கிறாரு.
கான்ஷியஸ் சாவரனிட்டியோட (Conscious Sovereignty) நாட்டோட சட்டம் தலையிட முடியாது. ரிலிஜியஸ் சாவரனிட்டியோட (Religious Sovereignty), ரிலிஜியஸ் சாவரனிட்டி, கான்ஷியஸ் சாவரனிட்டி... அது பிரபஞ்ச தர்மத்திற்கு உட்பட்ட ஏரியா. அந்த ஏரியாவுக்குள்ள லா ஆஃப் தி லேண்ட் (Law of the Land) வரக்கூடாதுன்னு டிக்ளர் (declare) பண்றதுதான்... ஆக்சுவலா சோழ நாட்டு அரசன் பாண்டி நாட்டுக்குள்ள வரக்கூடாது. வந்தா கைது செய்யப்படுவான், இல்ல கொலை செய்யப்படுவான், இல்ல சிறைப்படுத்தப்படுவான்.
ஆனா அந்த விதியை மீறி, கோயிலுக்குள்ள இந்த நாட்டோட விதிகள் செல்லாதுன்றத எஸ்டாப்ளிஷ் (establish) பண்ணி, சோழ நாட்டு அரசனுக்காக திருவாலவாய் ஆலயத்தோட, மீனாட்சி கோயிலோட கதவை திறந்து விட்டது மட்டும் இல்லாம, நான்தான் திறந்து விட்டேன்னு காட்டுறதுக்காக பாண்டிய நாட்டோட மீன் முத்திரையை விலக்கி தன்னுடைய நந்தி முத்திரையை, ரிஷப முத்திரையை பதிப்பித்து, தன்னுடைய கான்ஷியஸ் சாவரனிட்டியை டிக்ளர் பண்றாரு பெருமான்.
அதனால அந்த காலத்துல கல்வெட்டு, ஸ்தலபுராணம், செப்பேடுகள்... இந்த இதெல்லாம் ரொம்ப உயிரோடு இருந்த அந்த ஈக்கோ சிஸ்டம் (ecosystem). சேக்கிழார் பெருமான் இதையெல்லாம் தேடுறாரு. கல்வெட்டுகள், செப்பேடுகள், தல புராணங்கள், அந்தந்த தலங்களில் உள்ள ஸ்தல புராணங்கள் இதையெல்லாம் ஆராயறாரு. அதுக்கு அடுத்து வரலாற்று காலக்கணக்கை ரொம்ப அழகா பண்றாரு. அதாவது...
சோழ, பல்லவ, பாண்டிய மன்னர்களுடைய ஆட்சி வரலாற்றை ஆராய்ந்து, நாயன்மார்களுடைய காலத்தை நிர்ணயிக்கிறார். அதுக்கடுத்து புவியியல் துல்லியம் (Geographical detailing). நாயன்மார்களின் வாழ்க்கை நடந்த புவியியல் இடங்கள், ஊர்கள், நதிகள், மலைகள், காடுகள் இவைகளையெல்லாம் துல்லியமா குறிப்பிடுறார். அந்தக் காலத்தோட புவியியல் அமைப்ப, சமூக நிலைய, மக்கள் பழக்கவழக்கங்கள துல்லியமா ஆராய்ந்து டாக்குமெண்ட் (document) பண்றார்.
யாராவது பாணினியோட 4000 சூத்திரங்களை படிச்சீங்கன்னா தெரியும், பாணினியோட 4000 சூத்திரங்களை பத்தி ஒரு ஆழமான ஒரு சத்தியத்த புரிஞ்சிக்கணும். அந்த டைம்ல பாணினி இந்த 4000 சூத்திரம் பண்ணும் பொழுது, 300 சான்ஸ்கிரிட் ஸ்பீக்கிங் (Sanskrit speaking) கம்யூனிட்டி இருந்தது. சான்ஸ்கிரிட்ட பேசுகிற தாய் மொழியாக வைத்துக்கொண்டு வாழுகின்ற 300 கம்யூனிட்டி இருந்தது. இதுல முக்கியமான விஷயம் என்னன்னா 300 டயலெக்ட் (dialect) இருந்தது. 300 விதமான சம்ஸ்கிருத பிரயோகம். இன்னமும் தமிழ் வந்து ஒரு 18 டயலெக்ட் உயிரோடு இருக்கு. தமிழ்லயே 18 டயலெக்ட் உயிரோடு இருக்கு. அதுமாதிரி அந்த காலகட்டத்துல 300 சான்ஸ்கிரிட் டயலெக்ட் உயிரோடு இருந்தது. இவர் 300 இடத்துக்கும் பாணினி பர்சனலா போய் தங்குறாரு. தங்கி அத மொத்தத்தையும் ஸ்டடி பண்ணி, அந்த 300யும் கலெக்ட் பண்ணிதான் இந்த 4000 சூத்திரம் பண்ணி வைக்கிறாரு.
யாராவது கொஞ்சம்... முனித்ரய வியாகரணம்... அதாவது முனித்ரய வியாகரணம்னா பாணினி எழுதின 4000 சூத்திரங்கள், பதஞ்சலி எழுதின மகாபாஷ்யம், கார்த்தியாயனர் எழுதின வார்த்திகம். இந்த மூணத்துக்குதான் முனித்ரய வியாகரணம்னு சொல்லுவோம். முனித்ரய வியாகரணம் படிச்சிருந்தீங்கன்னா, கொஞ்சம் தொல்காப்பியம் படிச்சிருந்தீங்கன்னா, இந்த ரெண்டையும் படிச்சவங்களுக்கு தெள்ளத்தெளிவா புரியும்; தமிழும் சம்ஸ்கிருதமும் வேற வேற டயலெக்ட்தாங்கய்யா. ஒரு கோர்ல (core) இருந்து உருவான வேற வேற டயலெக்ட் அவ்வளவுதாங்கய்யா.
இப்ப எப்படி ஆங்கிலம்... சிவில் இன்ஜினியரிங் யூஸ் பண்ற இங்கிலீஷ் வேற, சயின்டிஸ்ட்ங்க யூஸ் பண்ற இங்கிலீஷ் வேற, காமன் மேன் (common man) யூஸ் பண்ற இங்கிலீஷ் வேற, இந்த நைட் டைம் ஷோ காமெடி ஷோஸ் பண்ற அவங்க யூஸ் பண்ற இங்கிலீஷ் வேற... வேற வேற டயலெக்ட்டோ அதே மாதிரிதாங்கய்யா. கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தா முனித்ரய வியாகரணத்தையும்... அவங்க மூணு பேர் எழுதுனது, முனித்ரய வியாகரணம்னா இதான். பாணினி எழுதின 4000 சூத்திரம், அதுக்கு பதஞ்சலி எழுதின மகாபாஷ்யம், இதே சூத்திரங்களுக்கு கார்த்தியாயனர் எழுதின வார்த்திகம். இந்த மூணும் சேர்ந்ததுதான் முனித்ரய வியாகரணம். இங்க தொல்காப்பியர் எழுதின தொல்காப்பியம்.
இதுல இன்னொரு சிறு தகவல், ஒரு சிறு உண்மை சொல்றேன் கேட்டுக்கோங்க. தொடர்ந்து தமிழர்கள், அகத்தியர் எழுதின அகத்தியம் அழிந்துவிட்டதுன்னு மூளைச்சலவை செய்து வைக்கப்படுகிறார்கள். அது ஏன்னு எனக்கு தெரியல. அகத்தியர் இலக்கண நூல் விதியை எடுத்து, தொல்காப்பியத்தை எடுத்து ரெண்டுத்தையும் ஆராயும் பொழுது மிகத்தெளிவா தெரியுது; நிச்சயமாக தொல்காப்பியருடைய குருவான அகத்தியர் எழுதி வைத்த நூல்தான் இந்த அகத்திய இலக்கண நூல் விதி. காரணம் லாங்குவேஜ், மொழி ஒற்றுமை.
அது மட்டுமில்லாம குரு உபயோகித்த வார்த்தைகளை, சொற்றொடர்களை என்ன மரியாதையோடு சீடன் உபயோகித்து அதுக்கு விளக்கம் கொடுப்பார் அப்படிங்கிற இந்த கட்டமைப்பு. இப்போ பாணினியோட சூத்திரங்களையும் பதஞ்சலியோட மகாபாஷ்யத்தையும் படிக்கும்பொழுதே, அந்த சூத்திரங்களையும் பாஷ்யங்களையும் என்ன அழகா... பதஞ்சலி என்ன பணிவோடு கட்டமைக்கிறார்... அதாவது சூத்திரக்காரருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து தன்னுடைய பாஷ்யத்தை எழுதுறாரோ, அதே மாதிரிதான் அகத்தியர் இலக்கண நூல் விதியையும் தொல்காப்பியத்தையும் படிச்சீங்கன்னா, தொல்காப்பியர் அப்படியே பண்ணியிருக்காரு. இந்த அகத்திய இலக்கண நூல் விதி அகத்தியம்தான் அப்படிங்கறது என்னுடைய தனிப்பட்ட ஆழமான தெளிந்த கருத்து. ஏஐ (AI) கூட யூஸ் பண்ணி பாத்துட்டேன்.
இத ரெஃபர் பண்றதுக்கு, பாணினிக்கும் பதஞ்சலி மகாபாஷ்யத்துக்கும் இருக்குற ரிலேஷன்ஷிப்ப ஸ்டடி பண்ணி, அந்த டீடைலிங்ஸ எடுத்து அத அப்படியே அப்ளை பண்ணா, அகத்திய இலக்கண நூல் விதி... இப்ப அவைலபிளா இருக்குற இந்த அகத்திய இலக்கண நூல் விதியும் தொல்காப்பியத்துக்கும் அப்படியே மேட்ச் ஆகுது. சோ அதனால அந்தக் காலகட்டத்துல சூத்திரக்காரர்களுக்கு பாஷ்யக்காரர்கள் கொடுத்த மரியாதை, பாஷ்யக்காரர்கள் பின்பற்றிய இலக்கணம் இது அனைத்துமே தொல்காப்பியர் அகத்தியர் இலக்கண நூல் விதிக்கு கடைபிடித்து இருப்பதனால்...
இப்ப நமக்கு அவைலபிளா இருக்கின்ற, சித்தர் பாடல்கள் தொகுப்பிலே அவைலபிளா இருக்கின்ற அகத்தியர் இலக்கண நூல் விதி, அகத்தியம்தான். அது முதல் கன்குளூஷன் (conclusion). ரெண்டாவது தொல்காப்பியரோட குரு அகத்தியர். அந்த அகத்தியர் வரைந்த நூல்தான் இந்த அகத்திய இலக்கண நூல் விதி. இவைகளையெல்லாம் நம்மளால ரொம்ப தெளிவான முடிவுக்கு வர முடியும்.
அடுத்த கன்குளூஷன், இதுதான் ரொம்ப முக்கியமான சத்தியம். இந்த... (ஆடியோ முடிகிறது)
"முனித்ரய வியாகரணம், தொல்காப்பியர், அகத்திய இலக்கண நூல் விதி... இந்த ஐந்து நூல்களையும் படிக்கும் பொழுது, ரொம்ப தெளிவா தெரியுதுங்க ஐயா...
வார்த்தைகளை அமைக்கின்ற ஸ்ட்ரக்சர் (structure), அதாவது நாதத்திலிருந்து சப்தத்தை உருவாக்கி, சப்தத்திற்கு விளக்கம் செய்து வைக்கின்ற... இந்த அமைப்பு முறை... அனாகதமாக... அனாகதமாக…..அனாகத சக்கரத்திலே நிறைந்திருக்கின்ற அனாகத த்வனிய... தொண்டைக்குழிக்கு கொண்டு வந்து நாதமாக்கி, நாதத்தை நாவிற்கு கொண்டு வந்து சப்தமாக்கி, அந்த சப்தமாக அது உருண்டு வரும்பொழுது, அந்த வார்த்தைகளை உருவாக்கி, அந்த வார்த்தைகளுக்கு விளக்கமும் இலக்கணமும் செய்து வைக்கின்ற இந்த முறை, சம்ஸ்கிருதத்துலயும் தமிழ்லயும் அப்படியே ஒன்னா இருக்குங்க ஐயா.
தொல்காப்பியத்தையே கொஞ்சம் ஆழமா படிச்சா, பல இடங்கள்ல ரெஃபரன்ஸ் (reference) இருக்கு. தொல்காப்பியரே தெளிவா சொல்றாரு, பாணினியோட சூத்திரங்களைப் பார்த்து, அகத்தியரிடமிருந்து பெற்ற தமிழ் அறிவை வைத்து, இந்த பாணினி சூத்திரங்களைப் போன்றே தான் தமிழுக்கு தான் தொல்காப்பிய சூத்திரங்கள் செஞ்சி வச்சிருக்கிறதா சொல்றாரு. தொல்காப்பியத்த... அகத்தியம் அழிந்துவிட்டதுன்னு சொல்றவர்கள் சூத்திரம்னு ஏத்துக்குறாங்க. ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும் தொல்காப்பியத்தை அகத்தியத்தின் பாஷ்யம்னு தான் நான் ஏத்துக்குறேன்.
பாணினிக்கு... பாணினி செய்த சூத்திரங்களைப் போலவே அகத்தியத்துக்கு பாஷ்யம் செய்து வைத்திருக்கின்றார் தொல்காப்பியர். இது சங்க இலக்கியங்கள்ல கூட பல இடத்துல டாக்குமென்ட் (document) ஆயிருக்குங்க ஐயா. அத தொல்காப்பியரே டாக்குமென்ட் பண்றாரு. அதனால கொஞ்சம் நாம நல்லா புரிஞ்சுக்கணும்.
இந்த ஐந்து நூல்களையும் படிக்கும் பொழுது... முனித்ரய வியாகரணம், அகத்திய இலக்கண நூல் விதி, தொல்காப்பியம்... இந்த ஐந்தையும் படிக்கும்பொழுது ஒரு விஷயம் தெளிவாகுது. சம்ஸ்கிருதமும் தமிழும் ஒன்றாகவே உருவாகி வேறு வேறு டயலெக்ட்டாக (dialect) வளர்ந்த மொழிகள்.
இப்போ... இந்த தமிழ் சுப்ரிமசி (Tamil supremacy) அப்படின்றவங்க நீங்க கவலைப்பட வேண்டாம், நீங்க என்ன சொல்லுங்க, 'தமிழிலிருந்து சம்ஸ்கிருதம் உருவாக்கப்பட்டது'-ன்னு சொல்லுங்க. அது கூட தப்பில்லை, அது வந்து கொஞ்சம் ஒபினியனேட்டட் நியூஸ் (opinionated news). அதாவது ஃபேக்ட்ல (fact) கொஞ்சம் நம்முடைய பெருமையை கலந்துக்கிறது தப்பில்லை. ஓகே, அதுவும் ஓகே தான். அதே மாதிரி இப்போ சான்ஸ்கிரிட் சுப்ரிமசி (Sanskrit supremacy) இருக்கறவங்க நீங்க சொல்லிக்கலாம், 'இல்ல இல்ல சான்ஸ்கிரிட்ல இருந்து தான் தமிழ் வந்தது', அப்படி வேணாலும் சொல்லிக்கோங்க. ரெண்டு ஆர்கியுமென்ட்டுமே (argument) ஓகே. ஆனா, ரெண்டு மொழிக்கும் சம்பந்தமே இல்லைன்னு சொல்றவங்க தான் தீய சக்திகள். அவர்களை அனுமதிக்காதீர்கள்.
இங்கிருந்து அங்க வந்தது, அங்கிருந்து இங்க வந்தது... கோழியிலிருந்து முட்டை வந்தது, குஞ்சு வந்தது, இல்ல குஞ்சில இருந்து அடுத்து கோழி வந்தது... நீங்க இந்த ஆர்கியுமென்ட் வச்சுக்கிறதுல தப்பில்லை. அந்த ஆர்கியுமென்ட்லாம் ஆக்சுவலா இருக்கிறது ஒரு ஜூஸியா (juicy) இருக்கும் லைஃப் (life). ஒரு நல்ல இந்த பக்கமும் அந்த பக்கமும் ஒரு ரெண்டு மூணு ஆர்கியுமென்ட்ஸ் இருந்தா ஜூஸியா இருக்கும். ஆனால், இந்த ஜூஸியான ஆர்கியுமென்ட்க்கு நடுவுல தீய சக்திகள் புகுந்து ரெண்டையும் அழிக்கப் பார்க்கிறானுங்க. அதை அனுமதிக்காதீர்கள். அததான் சொல்றேன்.
நான் எப்பவும் சொல்வேன். சைவத்திலிருந்து தான் சனாதன இந்து தர்மமே உருவாச்சுன்னு சொல்லிக்கிறதா இருந்தா சொல்லிக்கோங்க, தப்பில்லை. அது ஒரு... என்ன... சைவத்தின் பெருமை. அது ஒரு அஸ்மிதா (Asmita). அது ஒன்னும் தப்பில்லை. அந்த அஸ்மிதம்... சைவாஸ்மிதம்... ஒன்னும் தப்பில்லை. அதே மாதிரி, 'இல்ல இல்ல சனாதன இந்து தர்மத்தோட ஒரு பாகம் தான் சைவம்', அப்படி சொல்லிக்கிட்டீங்கனாலும் ஓகே. அதுவும் ஒன்னும் தப்பில்லை. அது ஒரு சனாதன அஸ்மிதம், தப்பில்லை. இந்த ரெண்டுத்துக்கும் சம்பந்தமே இல்லை, ரெண்டும் வேற வேறன்னு சொல்ற தீய சக்திகளை உள்ள விடாதீங்க. அவ்வளவுதான் நான் சொல்றேன். அவ்வளவுதான் மொத்தமா நான் சொல்றேன்.
சம்ஸ்கிருதம் தமிழ் பிரச்சனை ஆகட்டும், சைவம் சனாதனம் பிரச்சனை ஆகட்டும்... அவரவர்கள் என் சம்பிரதாயத்திலிருந்து தான்... அதாவது, சைவம் தான் மூலம், சைவத்திலிருந்து தான் சனாதன இந்து தர்மமே உருவானது... அப்படின்னு சொல்லிக்கிறது ஒன்னும் தப்பில்லை. அதுக்கு எனஃப் ஆர்கியுமென்ட்ஸ் (enough arguments) இருக்கு. எனஃப் டீட்டெய்லிங் (enough detailing) கொடுக்க முடியும். அதே மாதிரி இவங்க, சனாதன தர்மத்தோட ஒரு பாகம் தான் சைவம், அதுவும் தப்பில்லை, அதுக்கும் எனஃப் ஆர்கியுமென்ட்ஸ் கொடுக்க முடியும். காரணம் என்னன்னா ரெண்டுமே ஸ்பாண்டேனியஸா (spontaneously), சைமல்டேனியஸா (simultaneously) வேற வேற ஜியாகிரபில (geography) உருவான ஒரே ட்ரெடிஷன்ஸ்ங்க (traditions) ஐயா.
ஆனால், எக்காரணம் கொண்டும் ரெண்டும் வேற வேறன்னு சொல்ற தீய சக்திகளை உள்ள விடாதீங்க. சேக்கிழார் பெருமான் இரண்டு மொழியிலும் ஆழமான புலமை உடையவர்.
அதனாலதான், இந்த நாயன்மார்கள் காலத்தை நிர்ணயிப்பதாகட்டும், சமூக நிலை... மக்களின் பழக்க வழக்கங்களை நிர்ணயிப்பதாகட்டும், இது எல்லாத்துலயுமே பாணினி ஸ்டைலையே ஃபாலோ (follow) பண்ணியிருக்காரு. பாணினி எப்படி 300 கம்யூனிட்டிக்குள்ளயும் (community) போய் தங்கியிருந்து, டாக்குமென்ட் பண்ணி, ஆராய்ந்து, 300-ஐயும் கம்பைல் (compile) பண்ணி, 4000 சூத்திரமா தொகுத்துக் கொடுத்திருக்காரோ, அது மாதிரி..."
சேக்கிழார் பெருமான் அந்த காலகட்டத்திலே சமூக நிலை, மக்கள் பழக்க வழக்கம் மட்டும் இல்ல, தமிழ் டைலக்ட்டையுமே (dialect) ஆராய்ச்சி பண்ணி... நல்லா புரிஞ்சுக்கோங்க இன்னொன்னு சொல்றேன். மொத்த பெரியபுராணத்தையும் பார்த்தீங்கன்னா, சோழ நாட்டு நாயன்மார்களைப் பற்றி அவர் விவரிக்கின்ற தமிழும், பாண்டி நாட்டு நிகழ்வுகள் நாயன்மார்களை விவரிக்கின்ற தமிழும், சேர நாட்டு நிகழ்வுகளை விவரிக்கின்ற தமிழும், தொண்டை நாட்டு நிகழ்வுகளை விவரிக்கின்ற தமிழும் சட்டிலா (subtle-ஆ) வேற வேறையா இருக்கும்.
பெரியபுராண ஆய்வு நூல்களைப் புரட்டிப் பார்த்தீங்கன்னா தெளிவா இந்த விவரங்களைக் காட்டுறாங்க. காரணம் என்னன்னா, பாணினி மாதிரியே லாங்குவேஜோட (language) டிஃபரெண்ட் டைலக்ட்ஸ (different dialects) கூட டாக்குமெண்ட் (document) பண்றாரு சேக்கிழார் பெருமான். அப்பா! லாங்குவேஜோட டிஃபரெண்ட் டைலக்ட்ஸக் கூட துல்லியமா ஆராய்ச்சி பண்ணி டாக்குமெண்ட் பண்றவரு, பரம சத்தியங்களை கண்மூடித்தனமா, கவிதைத்தனமா, பொய் சேர்த்து புனைந்து எழுதி விடுவாரா?
சனாதன இந்து தர்மத்தோட ஆர்க்கிடெக்ட் (architect) வியாசர்னா, சைவத்தோட ஆர்க்கிடெக்ட் சேக்கிழார்ங்க.
வாழ்க்கையையே தியாகம் பண்ணி, இவ்வளவு ஆராய்ச்சி பண்ணி, வரலாற்று உண்மைகளைச் சரிபார்க்கும் பொழுது, ஒவ்வொரு நாயனாருடைய வரலாறு வரலாற்று உண்மைகளோடு பொருந்துகிறதான்னு சரிபார்த்து, தன்னுடைய காவியத்தில, இந்த புராணத்துல எந்த ஒரு வரலாற்றுப் பிழையும் நேராதவாறு இவ்வளவு கவனமா செயல்பட்ட, சொற்குற்றம் இல்லாது பார்த்துக்கொண்ட, வரலாற்றுப் பிழை இல்லாது பார்த்துக்கொண்ட சேக்கிழார் பெருமான், பொருட் குற்றம் நடக்கவா அனுமதித்து விடுவார்?
அதே மாதிரி தத்துவ ஆய்வுகள் ஐயா! அந்த காலம் வரை, சேக்கிழார் காலம் வரை கிடைத்த திருமுறைகள், ஆகமங்கள், இந்த சைவ நூல்கள் எல்லாம் அவைகளில் இருக்கின்ற எண்ண ஓட்டம், தாட் கரண்ட் (thought current)... அந்த பேக்ரவுண்ட்ல (background) இருந்து, அந்த பார்வையிலிருந்து பக்தியை, பல்வேறு நிலை பக்திகளை, பரம்பொருளுக்கும் மனிதனுக்கும் இருக்கின்ற உறவு, அந்த உறவினால் ஏற்படுகின்ற உணர்வு, அந்த உணர்வு ஸ்தூலமாக எப்படி வெளிப்படுகின்றது, அதுல அருள் இருக்கும், பர்சனல் அட்டாச்மென்ட் (personal attachment) பாசம் இருக்கும், சில நேரத்துல ஆழமான காதல் இருக்கும், இவைகள் எல்லாத்தையும் என்ன டீடைலா (detail), "பழைய வைதீக சைவம் பரக்கவே" அப்படின்னு அந்த பழைய வைதீக சைவத்தை என்ன டீடைல்டா (detailed-ஆ) இந்த நாயன்மார்களுடைய வரலாற்றோட டாக்குமெண்ட் பண்ற பெருமான் பரம சத்தியத்தில் பழுது வைத்து விடுவாரா? அதனால சற்றே தயவுசெய்து, சற்றே தயவுசெய்து கேளுங்கள்.
திருவிளையாடற் புராணமும், பெரியபுராணமும் சத்தியம்! ஐயா…
பெரியபுராணத்தையும் திருவிளையாடற் புராணத்தையும் பத்தி பேசணும் அப்படின்னா, கட்டாயமா இந்த ஐந்து இலக்கண நூல்களைப் பற்றியும் பேசித்தான் ஆக வேண்டும். பாணினியோட சூத்திரமும், பதஞ்சலியோட மகாபாஷ்யமும், காத்தியாயனருடைய வார்த்திகமும், அகத்தியரோட இலக்கண நூல் விதியும், தொல்காப்பியரோட தொல்காப்பியமும்... இந்த ஐந்துமே வார்த்தைகள், இவைகளைப் பற்றிய விளக்கங்கள். இவைகளை எல்லாம் விளக்கும் பொழுது, வெறுமனே சொல் குற்றம் இல்லாது ஒரு நூலைச் சமைத்து வைப்பதைப் பற்றி மட்டும் பேசவில்லை, பொருட் குற்றம் இல்லாது சமைத்து வைத்தாக வேண்டும் என்கின்ற தெளிவை அளிக்கின்ற நூல்கள்.
இந்த நூல்களோட இலக்கணம் மாறாது ஒருவர் சிந்திக்கப் பழகினால் மட்டும்தான், திருவிளையாடற் புராணம் மாதிரி, பெரியபுராணம் மாதிரி புராணங்களைச் செய்து வைக்க முடியும். அது போன்றவர்களுடைய சிந்தை பரம சத்தியத்தில் பழுது வைக்க இயலவே இயலாது. இது நான் பிரசன்ட் பண்ற (present) ஒரு ஆர்கியுமெண்ட் (argument) தான். இன்னும் குறைஞ்சபட்சம் ஒரு நூறு ஆர்கியுமெண்ட் இந்த பதினெட்டு நாட்கள்ல சொல்லப் போறேன். எப்படி இந்த திருவிளையாடற் புராணமும் பெரியபுராணமும் பரம சத்தியம் அப்படிங்கிறது.
அடுத்து, இப்போ இது... இந்தப் பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் போன்றவை முழுக்க முழுக்க...
3முழுக்க கட்டுக்கதைன்னு சொல்ற தீய சக்திகள் ஒரு பக்கம். அதுக்கு அடுத்து, சிவபக்தர்களிலேயே கூட, இதெல்லாம் உண்மை அப்ப நடந்திருக்கலாம்... இப்ப எல்லாம் அதெல்லாம் எங்கப்பா சாத்தியம்? நம்மளுக்கெல்லாம் எங்கப்பா வரப்போறார்? நம்மள சுத்தி இருக்கறவங்களுக்கு எல்லாம் எங்கப்பா வரப்போறார்? காலம் மாறிடுச்சுப்பா, கலிகாலம் பொறந்துருச்சு.
ஏய் என்ன? பெருமான் என்ன எக்ஸ்பயரி டேட் (Expiry date) போட்டாரா? என்னை அழைத்தவர்கள் அத்தனை பேருக்கும் வருவேன், சிவாய நம என செப்பினால் உடனே வருவேன் அபாயம் இல்லைன்னு பெருமான் கொடுத்திருக்கிற உறுதி, இல்ல நம்முடைய மூவர் முதலிகள் அப்பரும், சுந்தரரும், சம்பந்தரும் கொடுத்திருக்கிற உறுதிகள், மாணிக்கவாசகப் பெருமான் கொடுத்திருக்கிற உறுதி, இதெல்லாம் என்ன எக்ஸ்பயரி டேட் இருக்கா? என்ன பேசுறீங்க?
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். அப்ப நடந்தது இப்ப நடக்காது அப்படின்னு சட்டிலா (Subtly) நம்புறவங்க எல்லாருமே கூட, தீய சக்தியோட, நாத்திக சக்திகளோட சாஃப்ட் வெர்ஷன் (Soft version). அதாவது சைவத்தையும், சனாதன இந்து தர்மத்தையும் மியூசியம் (Museum) ஆக்கி பார்க்க முயற்சி பண்றாங்க. அது வாழ்வியல் சத்தியம்னு வாழ்வதற்கு துணிவோ, தெளிவோ, நேர்மையோ, பலமோ இல்லாததனால், அத மியூசியத்துல வைக்க பண்ற முயற்சி தான் 'அப்ப நடந்தது இந்தக் காலத்துல எப்பப்பா நடக்கும்?'.
ஒரு கொடுமை என்னன்னாங்கய்யா, சைவத்தையும், சனாதன இந்து தர்மத்தையும் வியாசபீடத்தில் அமர்ந்து, மேடையில் அமர்ந்து முழங்குகின்றவர்களே கூட, சட்டிலா அவங்களுக்குள்ள இருக்க அந்த சுய சந்தேகத்தை காட்டிகிட்டே இருக்காங்க. "அப்ப நடந்தது புராணத்துல இருக்கிறத சொல்றேன், இப்ப நடக்குமான்னுலாம் என்கிட்ட கேட்காதீங்க." என்னய்யா இது? என்ன இதெல்லாம்?
அண்ணாமலையான் அருளாலே... அண்ணாமலையானுடைய அருளாகவே, அருளிலிருந்து வடிவெடுத்து வந்தவன் என்பதனால், அண்ணாமலையான் சாட்சியாக, என் ஆன்ம மூர்த்தி அண்ணாமலையான் சாட்சியாக சொல்லுகின்றேன் கேளுங்கள். இந்தப் புராணங்கள், திருவிளையாடற் புராணமும், பெரிய புராணமும் சத்தியம். அவைகள் எல்லாம் இன்றும் சாத்தியம்.
அடுத்த சத்தியம் சொல்றேன் கேளுங்க. 'ஓ... அவங்க அளவுக்கு, அதாவது நாயன்மார்கள் அளவுக்கு பக்தியோடையும், இல்ல திருவிளையாடற் புராணத்துல வர்ற அந்த பாணனைப் போலே, அதுல சொல்லப்படுற அந்த பக்தர்கள் தருமியைப் போலே, அவங்கள மாதிரி எல்லாம் ஒருவேளை பக்தி இருந்தால் பெருமான் வருவாரு... நம்மள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் எங்க வருவாரு?' இது இன்னொரு படி இந்த சுய சந்தேகம், தன்னைத்தானே அழிச்சுக்கிறது. கான்ஷியஸ் சூசைட் (Conscious suicide). கான்ஷியஸ் சூசைட் பிசிக்கல் சூசைட (Physical suicide) விட மோசமானது.
ஆன்மீக ரீதியான பரம சத்தியங்கள் நம்ம வாழ்க்கையில நடக்காது அப்படின்னா வாழ்ந்து என்ன? செத்துத் தொலைய வேண்டியதுதானே? பூமிக்கு பாரம், சோத்துக்கு பஞ்சமா இல்லாமலாவது போய், இன்னொரு ஜென்மமாவது பொறந்து எடுத்து வந்து இந்த சத்தியங்கள் எல்லாம் புரிஞ்சுக்கலாம். இருந்தென்ன, இறந்தென்ன?
ஐயா... நம்முடைய சுய சந்தேகத்தை பணிவு அப்படின்னு காட்டாதீங்க. பணிவுக்கும் சுய சந்தேகத்துக்கும் வித்தியாசம் இருக்கு. பணிவு அப்படிங்கிறது எனக்குள் இருக்கும் பரம்பொருளே எல்லோருக்குள்ளும் இருப்பதனால், அந்தப் பரம்பொருளை எப்போதும் வணங்குகின்றேன். இது பணிவு. அவர்களை விட நான் உயர்ந்தவனும் அல்ல, தாழ்ந்தவனும் அல்ல, எல்லோருக்கும் சமமானவனும் அல்ல, எல்லோருக்குள்ளும் இருப்பவன் நான் அப்படிங்கிற புரிதலோடு வாழுதல் பணிவு.
'நமக்கெல்லாம் எங்க வரப்போறார்... அப்பருக்கு வந்தார், சுந்தரருக்கு வந்தார், தருமிக்கு வந்தார், பன்றிக்குட்டிக்கு பாலூட்டினார், நமக்கெல்லாம் எங்க வரப்போறார்' அப்படின்னு சொல்றது பணிவில்ல, சுய சந்தேகம்.
அதனால, நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இவை எல்லாமே பரம சத்தியம். திருவிளையாடற் புராணமும், பெரிய புராணமும் பரம சத்தியம். அதாவது நமக்கு புரியாத, நாம் பார்க்காத, புரிந்துகொள்ள முயற்சிக்காத, வேற வேற டைமன்ஷன் (Dimension), பிரபஞ்சத்தோட வேற வேற பரிணாமம் பரிமாணங்களில் இருந்து நிகழ்ந்த நிகழ்வுகளைத் தொகுத்து வைப்பதனால், இவை பொய் என்கின்ற பாழ் மனதை, பொய் என்று சொல்லுகின்ற மூளை சலவையை ஏற்காதீர்கள். சற்றே இந்த சத்தியத்தை கேளுங்கள்
இன்னைக்கு நான் இந்த சத்சங்கத்துல உங்களுக்கு நான் சொல்லப்போற ஒரே சத்தியம் இதுதான்:
திருவிளையாடற் புராணம், பெரிய புராணம் சத்தியம். அது இன்றும் சாத்தியம். உங்களுடைய தகுதி, தகுதியின்மை இவைகள் எல்லாம் பெருமானுக்கு ஒரு பொருட்டே இல்லை. அதனால பெருமானை விட உங்களுடைய தகுதிகள் பலம் வாய்ந்தவைன்னு நினைச்சுக்கிட்டு இருக்கிற சுய சந்தேகத்தை விட்டொழியுங்கள்.
அடுத்த சத்தியம், நல்லா புரிஞ்சுக்கோங்க. கண் திறந்து பார்த்தீர்களானால், உங்களை சுத்தி கூட எத்தனையோ நாயன்மார்கள் அதே இன்டென்சிட்டியோட (Intensity), அதே ஸ்ரத்தையோட வாழ்ந்து கொண்டிருப்பதை பார்ப்பீர்கள் ஐயா. சிவனடியார்களுக்குள் இருக்கும் ஸ்ரத்தை, அவர்களுக்கு நடக்கின்ற அனுபவங்களை பார்த்து புரிந்து கொண்டீர்களானால் உங்கள் வாழ்விலும் அது சாத்தியம் என்கின்ற ஸ்ரத்தை வரும். சத்தியம், சுய சந்தேகம் அழியும்.
ரொம்ப அழகா, 'சம்சய ராக்ஷச மகாஸ்த்ரம்' அப்படின்னு குருவினுடைய சம்பந்தத்தை சொல்வார்கள். குருவினுடைய சம்பந்தமும், ஒரு நல்ல பக்தர், சிவபக்தர், சிவனடியார் உடைய சம்பந்தமும், சத்சங்கமும் இதுல ஒண்ணுதான். சம்சய ராக்ஷச சுய சந்தேகம் எனும் அரக்கனை அழிக்கின்ற அஸ்திரம், மகாஸ்திரம் என்னன்னா...
அதனாலதான் அந்த சிவனடியார்ன்ற டைட்டிலே (Title) வந்தது. அதனால நம் வாழ்வின் முதல் பொருள், நம்முடைய வாழ்க்கையோட கேப்பிடல் (Capital) அவர்தான், முதல் அவரை விளக்கப்போறதில்லை. அவரை விளக்கவும் முடியாது. ஆனா இந்த ஈக்கோ சிஸ்டத்துக்கு (Eco-system), அதாவது தன் அனுபூதியை அளிக்கின்ற அந்த ஈக்கோ சிஸ்டத்துக்கு, தொகையடியார் கூட்டத் திருக்கூட்டத்திற்கு, தொகையடியார் திருக்கூட்டத்திற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம்முடைய முன்னோர்கள் வைத்திருந்தார்கள் அப்படிங்கிறத நீங்க புரிஞ்சுக்கணும். அந்த தொகையடியார் திருக்கூட்டத்து சத்சங்கம், சிவனடியார் சங்காத்தம், சிவனடியார் சம்பந்தம், தொகையடியார் சங்கமம், தொகையடியார் சத்சங்கம் எவ்வளவு முக்கியம்!
கண் திறந்து பாருங்கள். நம் வாழ்விலும் கூட பெருமான் விளையாடல்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றான். நம்மை சுற்றி இருப்பவர்கள் வாழ்விலும் கூட பெருமான் தன் திருவிளையாடல்களை இன்றும் நிகழ்த்திக் கொண்டே தான் இருக்கின்றான். இந்த அடிப்படை சத்தியங்கள் புரிஞ்ச பிறகுதான் இந்த திருவிளையாடற் புராணத்தையும், பெரிய புராணத்தையும் உங்களுக்கு அனுபூதியாக என்னால மாற்ற முடியும். அதுக்காகத்தான், இதுக்காகவே தனியா நேரத்தை ஒதுக்கி இந்த சத்தியங்களை சொல்றேன்.
இதுக்கு அடுத்த சத்தியம், இங்கதான் நித்யானந்தா என்டர் ஆகுறேன். கொஞ்சம் பொறுமையோட கேளுங்க.
இவ்வளவு என் கூடயே வந்துட்டீங்க, இதுவும் கொஞ்சம் கூட வந்துருங்க. வாசல் வரை வந்துட்டு உள்ள வராம போயிறாதீங்க, வந்துருங்க.
உங்களுடைய தேகமே மதுரை. உங்கள் துவாதசாந்தத்திலே எம்பெருமான் இப்பொழுதும் அமர்ந்து கொண்டு, சுந்தரேசப் பெருமான் இப்பொழுதும் தொடர்ந்து தன் திருவிளையாடல்களைச் செய்து கொண்டிருக்கின்றார். அதுதான் உங்கள் வாழ்க்கை.
நீங்க எந்த கோணத்திலிருந்து உங்களுக்குள் இருக்கும் பரம்பொருளை அணுகுகிறீர்களோ, அந்த கோணத்திலிருந்து அவர் வெளிப்படுறாருங்க ஐயா. தருமி "எனக்கில்ல, எனக்கில்ல, எனக்கில்ல, எனக்கு வராது"ன்ற சுய சந்தேகத்தோட அணுகினா, அந்த சுய சந்தேகத்தோட பிரதிபிம்பமா, மிரரா (mirror) தான் நக்கீரனா காட்டுறாரு. "நிறுத்துங்கள்! குறையுள்ள பாட்டுக்கு பரிசில் அளிக்கப்பட்டால் அதற்காக வருந்துபவனும் நானே"ன்னு நக்கீரனை தூண்டிவிட்டு, தருமியோட சுய சந்தேகத்துக்கு மிரராத்தான் நக்கீரன் தடையை காட்டுறாரு.
தருமி தோற்ற பிறகும், வீட்டுக்கு ஓடாம கோவிலுக்கு வந்து "பெருமானே!" அப்படின்னு அழுது கரைந்து சரணாகதி அடையும் பொழுது, "தோற்றாலும், வென்றாலும் துணை உன் பதமே"ன்னு வந்து சரணாகதி பண்ணதுனால... சரி, இல்லைனானாலும் பரவாயில்லை ஆனா என் வாழ்க்கை உனதுதான், உன் காலடியிலதான். "கொடுத்தால் செல்வத்தோடு மகிழ்ந்து சிறந்து வாழ்க்கை அப்பவும் உன்ன நினைச்சுத்தான், நீ கொடுக்காம மறுத்தாலும் அடித்தாலும் அப்பவும் உன்ன நினைச்சுத்தான், போ!" அப்படின்னதும், அப்ப பெருமான் என்ன பண்றாரு? "ஆஹா, டேய் உன் சரணாகதி நீ காமிச்சிட்டடா, நான் வர்றேன்டா", தானே திருமேனி தாங்கி வந்து விளையாடுறாரு.
அதுவும் என்ன விளையாட்டு! ஆழ்ந்து அந்த கதையை படிச்சீங்கன்னா, நக்கீரன் என்ன சொல்றான்? "சொற்குற்றம் இல்ல, இருந்தாலும் அது மன்னிக்கத்தக்கதே, பொருட் குற்றம் தான் பிரச்சனை"ங்கிறான். நக்கீரன் என்ன சொல்றாரு, "இந்த மாதிரி அந்த கருத்து, பொருள், இயற்கையாகவே மணம் உண்டு அப்படிங்கிற பொருள் தான் குற்றம்" அப்படின்னு நக்கீரர் வாதம் பண்றாரு.
பெருமான் அது இல்லைன்னு சொல்றாரு, மூன்றாவது கண்ணை திறக்கிறாரு, அவனை (நக்கீரனை) எரிக்கிறாரு. அதுக்கப்பறம் திரும்ப உயிர் கொடுத்து மீண்டு கொண்டு வராரு. அது இன்னொன்னு நல்லா புரிஞ்சுக்கோங்க, மூன்றாவது கண் திறந்து அவர் எரிக்கும் பொழுதெல்லாமே தூய்மைப்படுத்துற வேலை மட்டும்தான் செய்றாரு. அங்க மன்மதனை மூன்றாவது கண் திறந்து எரித்த போதும் சரி, திரிபுராசுரர்களை மூன்றாவது கண் திறந்து எரித்த போதும் சரி, இங்க நக்கீரனுக்கு மூன்றாவது கண் திறந்து எரித்த போதும் சரி, அந்த மூன்றாவது கண் ஸ்டோரி எல்லாம் எடுத்து படிச்சு பாருங்க. ரீஜுவனேட்ட (rejuvenate) பண்ணி, புனரமைத்து உயிர் கொடுத்தறாரே தவிர யாரையும் சுத்தமா அழிக்கல. அது மூன்றாவது கண்ணுடைய விதி.
எல்லா இடத்துலயுமே பாருங்க, இந்த மூன்றாவது கண் ஹிஸ்டரி (history) மொத்தத்தையும் எடுத்து பாருங்க. அந்த மலங்களை மட்டும்தான் அழிக்கிறாரு. அழிச்சுட்டு ஞானத்த கொடுத்தறாரு. இத கொடுத்துட்டு திரும்ப நக்கீரனை பொற்றாமரைக் குளத்துல இருந்து மீட்டு எடுத்துட்டு வராரு, எழுப்பி வராரு. எழுப்பிட்டு வந்த பிறகு என்ன பண்றாரு? அகத்தியர்ட்ட அனுப்பி இலக்கணம் படிக்கச் சொல்றாரு. அகத்தியம் படிக்கச் சொல்றாரு.
அப்பா உண்மையிலேயே, இவன் பொருட் குற்றம் மட்டும்தான்னு சொல்றான் சொற்குற்றம் கண்டுபிடிக்கல அப்படின்னா, சொற்குற்றம் இல்லைன்னு சொன்னா, நக்கீரன் குடுக்குற ஆர்கியூமென்ட்டே (argument) பொருட்குற்றம் சார்ந்ததுதான் அப்படின்னும் போது, பொருட்குற்றம்தான் அப்படின்னு நக்கீரன் நினைக்கிறான்னா, பொருட்குற்றம் அளவுல நக்கீரன சரி பண்ணனும் அப்படின்னா ஞானத்தை கொடுத்தா முடிஞ்சு போச்சு. ஆனா ஏன் இலக்கணம் படிக்க அனுப்புறாருன்னா... அகத்தியத்தின் சக்தி, அகத்தியமோ தொல்காப்பியமோ இலக்கணம் படிச்சீங்கன்னாலே, இந்த வார்த்தைகளை பிரித்து ஆண்டு புரிந்து கொள்ளுகிற அந்த தெளிவு வரும்பொழுது, சொற்குற்றம் மட்டுமல்ல, பொருட் குற்றம் இருந்தாலும் கூட கண்டுபிடிப்பீர்கள். அல்லது பொருட்குற்றம் இல்லை என்றால், பொருட்குற்றம் இருப்பதாக மாயையில் விழ மாட்டீர்கள்.
ஐயா, தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் அந்த சக்தி உண்டுங்கய்யா. இலக்கணத்தோடு முறையாகப் படித்தீர்களானால் தலைக்கணம் வரவே வராது. ஏன்னா, இலக்கணம் படிக்கும் பொழுதே எப்படி அனாஹதம், அகம்பாவம் அப்படிங்கறது ஆகதம் அது இடிச்சு, அகம்பாவம் அனாஹதத்தின் மீது இடித்து, அது நாதமாக வடிவெடுத்து, நாதம் சப்தமாகத் திரண்டுருண்டு, சப்தம் சொல்லாய் வெளிவிழுந்து, சொல்லுக்கு எவ்வாறு பொருள் விளைகின்றது, அது கேட்பவர்க்குள் என்ன பொருளை விளைவிக்கும் என்கின்ற முழுத் தெளிவும் உருவாவதனால்... அகத்தியம் படித்தாலே சொற்குற்றம் செய்யமாட்டோம் என்பது மட்டுமல்லாது, பொருட் குற்றம் செய்யமாட்டோம் என்பது மட்டுமல்லாது, சொற்குற்றம் இல்லாவிட்டாலும் சொற்குற்றம் இருப்பதாய் கண்டுபிடிக்கமாட்டோம், பொருட்குற்றம் இல்லாவிட்டாலும் பொருட்குற்றம் இருப்பதாய் கண்டுபிடிக்கமாட்டோம். நக்கீரனுடைய பிரச்சனையே தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல், அந்த பாடலையும் முழுமையாக படிக்காமல்...
அரசன் பிரச்சனைக்குத் தான் தீர்வு சொல்வதற்கு முன்பாக வேறொருவர் தீர்வைக் கொண்டு வந்துவிட்டாரே என்கின்ற தன்னுடைய 'ஒரிஜினல் இமேஜ்'-ஆன தலைமைப் புலவன் என்கின்ற அகம்பாவம், அந்த 'ஒரிஜினல் இமேஜ்'-க்கு வலி வந்ததனால், வலித்த அகம்பாவம் அனாஹதத்தின் மீது அடித்து, அந்த அனாஹதத் த்வனியிலிருந்து நாதம் உருண்டு நாதம் சப்தமாய்த் திரண்டு வெளிப்பட்டு வரும்பொழுது ஏற்பட்ட குழப்பத்தினாலே, பெருமான் வரைந்து அளித்து அனுப்பிய பாடலில் சொற்குற்றமும் இல்லை, பொருட்குற்றமும் இல்லை என்பதை மறந்து, தவிர்த்து, கண்டும் அகம்பாவம் மறைத்து, காணாமல் இருந்து, தன்னை மீறி இங்கு யார் விவாதம் செய்து ஜெயித்துவிடப் போகின்றார்கள் என்கின்ற சற்றே எழுந்த அந்த அகம்பாவத்தினாலும், வந்திருக்கும் தருமியின் வறுமைக் கோலத்தைக் கண்டும் நிச்சயமாக இவனாலே வாது செய்து வென்றுவிட முடியாது என்கின்ற முடிவுக்கு வந்து, அகம்பாவம் சற்றே தலையில் இடித்து... எப்படி அளவுக்கு மீறி உண்டுவிட்டு ஜீரணமாகாத உணவு புளியேப்பமாய் வருகின்றதோ, அகம்பாவம் அனாஹதத்தில் இடித்தால் பொங்குகின்ற வார்த்தைகள் தலைக்குக் கனமாக மாறி, அதுலருந்து தான் இந்த வாதப் பிரதிவாதங்கள்... அந்தப் பிரச்சனை துவங்குகிறது.
இங்க பெருமான் நக்கீரனை உபயோகித்து தருமிக்கு அவன் சுய சந்தேகத்தையும் காட்டுகின்றார். தருமிக்கும் பாடம் சொல்றார். "எனக்கு வராது, எனக்கு வராதுன்னு நெனச்சா அப்படித்தாண்டா போகும்..." ஆனா வராமல் போனாலும் பெருமானே கதி அப்படின்னு விழும் பொழுது, பூரணமாக தனக்குள்ளே எல்லாமாய் இருக்கின்ற அகண்ட பரிபூரணமான சுந்தரேசப் பெருமானே கதின்னு சொல்லும்பொழுது, என்று சரணடையும் பொழுது, தருமியின் அகம்பாவம் கரைவதனால் தருமிக்காய் தானே வருகின்றான். இப்போ நக்கீரனைக் காட்டி தருமிக்கும் பாடம் சொல்லி, தருமி சரணாகதி செய்துவிட்டதனால் அவனுக்காகத் தானே இறங்கி வந்து நக்கீரனுக்கும் பாடம் சொல்லுகின்றான்.
இது ஒரு 'மல்டிபிள் லேயர் காம்ப்ளக்ஸ்'-ஆன, 'காம்ப்ளிகேட்டட்'-ஆன திருவிளையாடல்ங்கய்யா. யாருக்குப் பாடம் சொல்றார்னு புரிஞ்சதுன்னா புரிஞ்சிரும். நமக்குத் தாண்டா பாடம் சொல்றாரு! நம்முடைய பல்வேறு நிலைகளுக்குப் பாடம் சொல்றாரு. நம்முடைய சுய சந்தேகத்துக்குப் பாடம் சொல்றாரு, நம்முடைய நம்பிக்கையின்மைக்குப் பாடம் சொல்றாரு, நம்முடைய சிரத்தை இன்மைக்குப் பாடம் சொல்றாரு, நம்முடைய அகம்பாவத்துக்குப் பாடம் சொல்றாரு. ஒவ்வொரு விதத்திலும் நமக்கே கண்ணாடி காட்டுகின்றான் ஆலவாய் கண்ணாளன்! அவர் அங்கயற்கண்ணிக்கு மட்டும் கண்ணாளன் அல்ல, ஆலவாய்க்கே கண்ணாளனே... ஆலவாயே அவர ரசிச்சுதப்பா! ஆலவாய்க்கே கண்ணாளன்.
சுந்தரேசப் பெருமான் நமக்கே தான் கண்ணாடி காட்றாருங்கய்யா. அதனால, ஞானசம்பந்தப் பெருமான் பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததாகட்டும், சுந்தரமூர்த்தி நாயனார் முதலை உண்ட சிறுவனை மீட்டதாகட்டும், அப்பர் பெருமான் அரவு தீண்டிய அப்பூதியடிகள் மகனை மீட்டதாகட்டும், திருவிளையாடற் புராணத்தில் வருகின்ற ஒவ்வொரு கதைகளாகட்டும், அல்லது சிறுத்தொண்டருடைய மகனை அரிந்து கறி சமைத்து வைத்து இலையில் படைக்கப்பட்ட மகனை மீண்டும் அழைத்து வருவதாகட்டும்... இவைகள் எல்லாம் சத்தியம்! இன்றும் சாத்தியம்.
இவைகளையெல்லாம் எப்படி உங்கள் வாழ்க்கையில் சத்தியமாக்கிக் கொள்வது? சாத்தியமாக்கிக் கொள்வது, அனுபூதியாக்கிக் கொள்வது என்பதைத்தான் இந்த 18 நாட்களும் உங்களுக்குப் பகிர்ந்தளிக்கின்றேன்.
தொடர்ந்திருங்கள் நித்ய நேரலையில், திருவிளையாடற் புராணத்தை அனுபூதியாய் உணர்ந்திட. இதோட திருவாரூருடைய 365 லீலைகள் அதையும் சேர்த்துக் கொள்ளுகின்றேன். ஏன்னா இது எல்லாமே பல இடங்கள்ல 'ஓவர்லேப்' ஆகுதுங்கய்யா. பல இடங்கள்ல ஒன்னோட ஒன்னு இணைந்து பின்னிப் பிணைகின்றது. அதனால ஒரு குறைந்தபட்சம் ஒரு இன்னொரு பத்து ஆலயங்களுடைய புராணக் கதைகளையும் அதோட சேர்க்குறேன். அருணாச்சல புராணம், திருநாகைப் புராணம், காஞ்சிப் புராணம்... இந்த...
நூல்களையும் கூட... இதோட சேர்த்து இந்த 18 நாட்கள் சொல்லும் பொழுதே அங்கங்க இருந்து சில கதைகள் எல்லாம் எடுத்துச் சொல்றேன்... கதைகள் அப்படிங்கிறதை விட வரலாற்று உண்மைகள்... அதை சொல்றேன்... இணைந்திருங்கள்.
பெருமானை இணைந்து ரசிப்போம், ருசிப்போம், புசிப்போம். ஆனந்தித்து கொண்டாடுவோம். அனுபூதியாக்கி வாழ்வோம். பரமசிவ ஞான பிராப்திரஸ்து! பரமசிவ அனுபூதி பிராப்திரஸ்து! பரமாத்வைத பிராப்திரஸ்து! என்று எல்லோரையும் ஆசீர்வதிக்கின்றேன்.
எல்லோருக்கும்... எல்லோரும் நித்தியானந்தத்தில் நிறைந்து, நித்தியானந்தத்தில் மலர்ந்து, நித்தியானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள்.
Details
The talk
- Date
- 15 April 2026
- Language
- English
The recording
- Recording
- No recording linked to this transcript
The transcript
- Status
- Live notes
- Time-synced
- Not time-synced
- Length
- 4,661 words · 26 min read
- Topics
- None recorded