☰KAILASA Library/Satsangs/"அகம்பாவத்திலே இருக்க இருக்க வாழ்க்கையே பவர்லெஸ்ஸா (powerless)…Sign in
16 April 2026

“"அகம்பாவத்திலே இருக்க இருக்க வாழ்க்கையே பவர்லெஸ்ஸா (powerless)…”

Live notesUntitled · opening words shown
The Satsang

"அகம்பாவத்திலே இருக்க இருக்க வாழ்க்கையே பவர்லெஸ்ஸா (powerless) இருக்கும். உங்க மேலயும் உங்களை சுத்தி இருக்கிற எல்லாத்து மேலயும் கடுமையான வெறுப்பும், டிப்ரஷனும் (depression), துக்கமும், பிரஸ்ட்ரேஷனுமா (frustration) இருக்குன்னா புரிஞ்சுக்கோங்க...

நீங்கள் கடந்த காலச் சிறையிலே...

நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, செய்யக் கூடிய ஒன்றே ஒன்று... எதிர்காலத்தெல்லாம் மாத்த முடியாது. எதிர்காலத்தை மாத்தச் சொல்லி யார் உங்களுக்குக் கத்துக் கொடுத்தாலும்...

சத்தியம் சொல்லுகின்றேன்... உங்கள் பாவ (Bhaava) பலத்தின் பலமும், ஆன்ம பலமும் உங்களுக்குத் தெரிந்துவிட்டால், உங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பதற்காக சமூகம் உங்களை உங்கள் பாவ பலம் தெரியாமலேயே வைத்திருந்து...

ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க... உங்க கடந்த காலம் அத்தனையுமே...

இப்ப நிகழ் காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். பாவ பலத்தினால்…

"Blessings to everyone of you. Blessings to all the Paramashivachamena participants in Kailasa Tiruvannamalai, Kailasa Guinea-Bissau , all the Chit Sabha members, Rajya Sabha members, Kailasavasis.

Today for all the Paramashiva Sena participants in Kailasa Guinea-Bissau and Tiruvannamalai, I am giving healers initiation, Ananda Gandha Deeksha for self-healing and healing others.

All of you sit straight. Have the Atma Linga in your palms. All of you are initiated into Ananda Gandha...

And... as the ultimate manifestation of Paramashiva, Gurumurthy, and Subramanya Moorthy, I bless you all. Bless the Subramanya Homa, Subramanya Moola Mantra Homa, and the Maheswara Pooja going to happen today. Blessings to everything. Paramadvaita Prapthirasthu." --- "நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்"

உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

எல்லோரும் பரம அத்வைதத்தில் நிலைபெறுவீர்களாக என்று ஆசீர்வதிக்கின்றேன்.

திருவிளையாடல் புராணம் சத்சங்கம், ஆழ்ந்து கேளுங்கள்.

உண்மையிலே இந்த பதினெட்டு நாள் சத்சங்கமும் திருவிளையாடலை பற்றித்தான் பேசப் போகின்றேன். வெறுமனே திருவிளையாடற் புராணத்தை பற்றி மட்டுமல்ல... பெருமான் நிகழ்த்தும் திருவிளையாடல்கள் அதன் அறிவியல்...

அதாவது திருவிளையாடல் புராணம் அப்படின்னா மதுரையில் நடந்த அந்த அறுபத்தி நான்கு லீலைகளோடு, பரஞ்சோதி முனிவராலே அருளப்பட்ட அந்த திருவிளையாடல் புராணத்தோட மட்டும் என்னை நான் நிறுத்திக் கொள்ளப் போவதில்லை. சேக்கிழார் பெருமான் எழுதிய பெரிய புராணம், காஞ்சிப் புராணம்... கவிராட்சசர், அந்த காஞ்சிப் புராணம் எழுதிய ஆசிரியருக்குப் பேர் கவிராட்சசர். காஞ்சிப் புராணம், அருணாசலப் புராணம்... இந்த எல்லா புராணங்களோடும் பெருமான் நிகழ்த்துகின்ற திருவிளையாடலைப் பற்றி, அதனுடைய அறிவியலை, அடிப்படை சத்தியங்களை உங்களுக்கு அளிக்கின்றேன்.

அடிப்படையான சில உண்மைகளைப் புரிந்து கொள்ளுங்கள்.

பரமசிவப் பரம்பொருள் இப்பொழுதும் பிரத்யட்சமாக நமக்கு அவைலபிளா (available-ஆ) இருக்காரு. நாம நம்மளுக்கு எவ்வளவு அவைலபிளா இருக்குறோமோ அதவிட அதிகமா நமக்கு பெருமான் அவைலபிளா இருக்காரு. நல்லா புரிஞ்சிக்கோங்க... நீங்கன்னு நீங்க என்ன நினைக்கிறீங்களோ, எத நினைக்கிறீங்களோ, உங்களுடைய ஒரிஜினல் இமேஜினேஷன் (original imagination) அகம் பாவம், ஒரிஜினல் அசம்ப்ஷன் (original assumption)... உங்களுடைய அகம் பாவம், ஒரிஜினல் அசம்ப்ஷன் உங்களுக்கு எந்த அளவுக்கு வாழ்க்கையில் நேரடி துணையாக இருக்கின்றதோ, அதைவிட அதிகமாக உங்களுடைய அகம் சுபாவமான பரமசிவப் பரம்பொருள் உங்களுக்கு அவைலபிளா இருக்காரு.

நல்லா புரிஞ்சிக்கோங்க... நீங்கன்னு நீங்க எத நினைக்கிறீங்களோ அந்த அகம் பாவம், நீங்க எதுவா இருக்கீங்களோ அது அகம் சுபாவம். அந்த அகம் சுபாவம், அகம் பாவத்தை விட உங்களுக்கு அதிகமாக அவைலபிளா இருக்கு, லைஃப்க்கான ரிசோர்ஸா (life-க்கான resource-ஆ) இருக்கு. இதைப் புரிந்து கொள்வது தான் திருவிளையாடல். வாழ்க்கையின் அடிப்படை பாடம், இதை ஒவ்வொரு படியா படியா புரிய வைக்கிறேன், ஆழ்ந்து கவனிங்க.

இந்த கவிராட்சசர் கச்சியப்ப முனிவர்... முதல்ல சொல்லிருந்தேன் இல்லையா? காஞ்சிப் புராணம் எழுதுன... சிவஞான சுவாமிகளோட மாணவர். 'கவிராட்சசர்'னு அவருக்கு பேரு. கவிராட்சச கச்சியப்ப முனிவர். இந்த மொத்த அவர் எழுதுன காஞ்சிப் புராணத்தையும் பார்த்தோமானால், உண்மையிலேயே அவர் கவிராட்சசர்னு புரிஞ்சுக்கலாம். ஏன்னா, மனம் நடுங்கிப் போய்விடும் அதைப் படித்துப் புரிந்து கொண்டோமானால். இப்போ சைவ எல்லப்ப நாவலர் கூட அருணாசலப் புராணம் எழுதி இருக்காரு. அதைப் படிச்சா மனம் இனிக்கும், நல்லா 'ஆஹா' அப்படின்னு அனுபவிக்கலாம்.

அதே மாதிரி திருவாரூர் தியாகராஜப் பெருமானுடைய 365 லீலைகளை புத்தகமா படிச்சிருக்காங்க. அதெல்லாம் படிச்சா மனம் இனிமையா இருக்கும். ஆனா இந்த கவிராட்சசர் கச்சியப்ப முனிவருடைய காஞ்சிப் புராணம் படிச்சா... மனம் நடுங்கும் அளவுக்கு ஆனந்தம் அடையும். அந்த எலாபரேட் டீடைலிங் அண்ட் டிஸ்கிரிப்ஷன் (elaborate detailing and description)...

காட் இஸ் இன் டீடைல்ஸ் (God is in details) சாமி! சத்தியம் பிளஸ் டீடைல்ஸ் (Truth \+ details). இந்த அகம் சுபாவம் அக்சஸ் (access) ஆனவங்களுக்கு மட்டும்தான் அகம் பாவத்தைத் தாண்டிய பரம சத்தியங்களைச் சொல்ல முடியும். அகம் பாவத்தோடு பார்க்கும் பொழுது... ஐயா நல்லா புரிஞ்சுக்கோங்க, உங்களுடைய அகம்... நீங்க இப்ப வச்சிருக்கிற உங்களுடைய ஒரிஜினல் அசம்ப்ஷன் (original assumption), அகம் பாவத்தை நீங்களா டெவலப் (develop) பண்ணிக்கல.

எல்லாம் சமுதாயம் மொத்தமா வந்து உங்க மேல கொட்டிட்டுப் போயிருக்கு. அப்பா, அம்மால இருந்து ஆரம்பிச்சு, பெரியவங்க, தாத்தா, பாட்டி, சுத்தி இருக்கிற சொந்த பந்தம், மாமா, மச்சான், சமூகம், டீச்சர்... இவங்க எல்லாம் உங்க மேல கொட்டுறாங்க. கொடுமை என்னன்னா, அந்த அவர்களுடைய அசம்ப்ஷன்ஸை (assumptions) எல்லாம் நீங்கள் கேள்வியே கேட்காமல் உள்வாங்குகிறீர்கள்.

ஏன்னா, ஒரு நாளைக்கு ஒரு நூறு ஃபைல் (file) வந்தா... நீங்க அதை அட்டென்ட் (attend) பண்ணி, வெரிஃபை (verify) பண்ணி, கேள்வி கேட்டு, புரிஞ்சுக்கிட்டு உள்வாங்கி, இல்ல ரிஜெக்ட் (reject) பண்ணி... இது மாதிரி ஒரு லாஜிக்கலா ஃபங்ஷன் (logically function) ஆக முடியும். ஒரு நாளைக்கு ஒரு கோடி ஃபைல் வந்தா என்ன பண்ணுவீங்க? மொத்தமா எடுத்து "டம்ப் பண்ணுப்பா (dump)" அப்படின்னு, அந்த மொத்த ஃபைல்ஸையும் டம்ப் பண்ண ஆரம்பிச்சுடுறீங்க உங்களுக்குள்ள. சுற்றி இருக்கின்ற உலகம் உங்கள் மீது சாற்றுகின்ற அசம்ப்ஷன்ஸ் (assumptions), பாவங்கள்...

முக்கியமா, இந்தக் காலத்துக் குழந்தைகள் மீது நடத்தப்படுகின்ற கான்ஷியஸ் (conscious) தாக்குதல் சொல்ல முடியாதது. நல்லா புரிஞ்சுக்கோங்க, குழந்தைகளுடைய பாவ சக்தியை... கான்ஷியஸ்னஸ் (consciousness) பியூட்டிஃபுல்லா மேனிஃபெஸ்ட் (beautifully manifest) ஆகி ஃபங்ஷன் ஆகுற... அததான் பாவ சக்தின்னு சொல்றேன். அதை வளர்க்கணும்னு நினைச்சீங்கன்னா, குழந்தைகளை முதல்ல ராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களைப் படித்துப் புரிந்துகொள்ள வையுங்கள். அதுக்கப்புறமா பார்க்கட்டும். எடுத்த உடனே பார்க்க வைக்காதீங்க... படிக்கணும். அப்புறம் இவர்களுக்குள் அந்த பாவ...

பாவ பலம் வளரும்... ராமர் எப்படி இருந்திருப்பார், சீதை எப்படி இருந்திருப்பாங்க, எப்படி லட்சுமணன் இருந்திருப்பார், அனுமான் இருந்திருப்பார், எப்படி அந்த கதை நடந்திருக்கும்...

பாவ பலம் வார்த்தைகள் மூலமாக குழந்தைகளுக்குள் உருவாகி, அதுக்கு பிறகு அவங்களை விசுவலா திரைப்படமாவோ, இல்ல டிவி சீரியலாவோ, திரைக்காட்சி தொடராவோ, ஏதோ ஒன்னு தொலைக்காட்சி தொடராவோ பார்க்க வச்சீங்கன்னா, அந்த குழந்தைகளுக்கு அது உபயோகமாகும்.

ஆனால், தனக்குள் பாவத்தை உருவாக்குவதற்கு காலம் அளிக்கப்படாமல், வெளியிலிருந்து கொட்டப்படுகின்ற... முக்கியமா, குழந்தைகளை நோக்கி, இளைஞர்களை நோக்கி குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்தான் இந்த சமூக ஊடகங்கள். குழந்தைங்களை அடிக்ட் பண்ணி அவங்களுக்குள்ள அந்த பாவ பலம் வளராமல், உருவாகாமல் பார்த்துக்கொள்வது.

நம்ம சொல்றதுக்கு மட்டுமே அவங்க அடிக்ட் ஆகி, நாம சொல்றதை மட்டுமே அவங்க கேட்கிற மாதிரி அவர்களை அடிமையாக வைத்துக்கொள்ளுகின்ற... வாழ்க்கை முறைக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த சமூக ஊடகங்கள். நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.

சில பேர் கேட்கிறதுண்டு, "நீங்களே சமூக ஊடகத்துலதானே சாமி வர்றீங்க"ன்னு. நானாவது அதனால் ஏற்படுகின்ற தீமைகளை உங்களுக்கு புரிய வைத்து, இந்த ஆன்மீக விஷயங்களை தவிர வேறு எதற்கும் சமூக ஊடகங்களை உபயோகப்படுத்தி அதிலே உங்கள் காலத்தை, வாழ்க்கையை வீணடிக்காதீர்கள்னு சொல்லித்தான் ஆகணும். அதுக்காகத்தான் சமூக ஊடகத்துக்குள்ள வர்றேன்.

புத்தகங்களினாலே ஞானம் கிடைக்காது, உள்ளுக்குள் திரும்பிப் பார்னு எழுதி வைக்கப்பட்டிருக்கு. அதுவும் புத்தகங்களை படித்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டும். அதுபோல சமூக ஊடகத்திலே வாழ்க்கையை சீரழிக்காதே என்பதையும், வாழ்க்கையை இழந்து விடாதேங்கிறதை சொல்றதுக்காகத்தான் சமூக ஊடகத்துக்குள்ள வர்றேன்.

இந்த ஞானத்தை உள்வாங்குவதை தவிர வேறு எதற்காகவும் சமூக ஊடகத்திற்குள் உங்கள் வாழ்க்கையை, நேரத்தை சீரழிக்காதீர்கள், வீணடிக்காதீர்கள், கொடுக்காதீர்கள். இப்ப சொல்ல வேண்டிய இந்த பரம சத்தியங்களை சொல்லுகிறேன், கேளுங்கள்.

பரமசிவ பரம்பொருளின் விளையாடல்...

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்...

இந்த திருவிளையாடற் புராணங்கள் எல்லாமே... பெருமான் திருவிளையாடலை சொல்லுகின்ற இந்த புராணங்கள் எல்லாமே... பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் ஆகட்டும், சேக்கிழார் பெருமான் செப்பிய பெரியபுராணம் ஆகட்டும், அருணாசல புராணம் ஆகட்டும், ஆரூர் புராணம் ஆகட்டும், காஞ்சிப் புராணம் ஆகட்டும்…

இது எல்லாமே ஆகமாந்த சத்தியங்களை நமக்கு விளக்கும் வகையிலே சொல்லப்பட்ட சத்தியக் கதைகள். அது ரொம்ப முக்கியமான வார்த்தை: 'சத்தியக் கதைகள்' — அவை கற்பனைக் கதைகள் அல்ல. எப்படி வேத, வேதாந்த சத்தியங்களை நமக்குள் ஆழமாகப் புரிய வைப்பதற்காக வியாசர் 18 புராணங்கள் செய்து வைத்தாரோ, அது மாதிரி ஆகமாந்த சத்தியங்களை நாம முழுசா புரிஞ்சிக்கிறதுக்காக சேக்கிழாரும், பரஞ்சோதி முனிவரும் செய்து வைத்த ஆகமாந்த சார சத்தியக் கதைகள்தான் இந்தப் புராணங்கள்.

கடந்த இரண்டு நாள் சத்சங்கங்கள்ல நான் சொன்ன பல கருத்துக்கள் சமூக ஊடகங்கள்ல (Social Media) பெரிய சலசலப்பை உண்டாக்கி, நிறைய கேள்விகள் எல்லாம் பாக்குறேன். முதல்ல, நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய அறிமுகமான பரம சத்தியங்களை பொறுமையா விளக்கிட்டேன்னா, அதுக்கப்புறம் இந்த மொத்த புராணங்களுடைய கதைகளை ரொம்ப ஆழமா புரிஞ்சுக்கலாம்.

முதல் விஷயம், என்னுடைய சத்சங்கங்களை கேட்பதற்கு சற்றே அமைதியும், பொறுமையும், ஆழ்ந்து கேட்கின்ற சிரத்தையும் இருக்கணும். நல்லா புரிஞ்சுக்கோங்க;

ஆன்மீகம், கடவுள், புராணங்கள் இதெல்லாம் முழுப் பொய் அப்படின்னு சொல்றது 'துஸ் சங்கம்'.

ஆன்மீகம், கடவுள், புராணங்கள் இதெல்லாம் உண்மை, ஆனா அந்த காலத்துல நடந்தது, இப்போ அதெல்லாம் நடக்காது அப்படின்னு சொல்றது 'பிரசங்கம்'.

இப்பவும் அது சாத்தியம், சத்தியம் அப்படின்னு சொல்றதுதான் 'சத்சங்கம்'.

அதைச் சாத்தியப்படுத்துறதுக்கான சக்தியைக் கொடுக்கிறதுதான் 'தீட்சை'.

அந்த ஞான ரசவாதத்தை நிகழ்த்துறதுதான் 'சக்திபாதமும், சக்திநிபாதமும்'.

அது நடந்து, அந்த நிலையில் வாழறதுதான் 'அனுபூதி'.

நல்லா புரிஞ்சுக்கோங்க... "ஏய், இதெல்லாம் சும்மா கதைப்பா!" அப்படின்னு சொல்றது துஸ் சங்கம். அந்த துஸ் சங்கம் உங்களுக்கெல்லாம் நிறையவே இருக்கும். சுத்திப் பார்த்தீங்கன்னா, அந்த துஸ் சங்கம் எவ்வளவு இருக்குன்னு பாருங்க. ஏன்னா, தான் முன்னேறாவிட்டால், தனக்கு ஒன்று புரியாவிட்டால், தனக்கு ஒன்று தெளிவாகாவிட்டால், அது யாருக்கும் நடக்கக்கூடாதுங்கிற அந்த துர்புத்தி கொண்ட தீய சக்திகள் எப்பவும் சுத்தி இருக்கும்; அது துஸ் சங்கம்.

"இல்ல இல்ல, இந்தப் புராணங்கள், ஆன்மீகம், இந்த ஞானமெல்லாம் உண்மைதான். ஆனா அதெல்லாம் அந்த காலத்துல நடந்தது, இப்பல்லாம் நடக்காது; கலிகாலம், கெட்ட காலம்..." [என்று சொல்வது பிரசங்கம்].

"இது எங்க நம்ம எல்லாம் அவ்வளவெல்லாம் குவாலிஃபைடா (Qualified) இல்ல, அப்படிலாம் நமக்கெல்லாம்... அப்படின்னு சொல்றதுதான் பிரசங்கம்.

வெறும் கதைகளை கேட்டு ரசித்து, இதையெல்லாம் மொத்தமா ரெலிக்ஸா (Relics) மாத்தி வைக்கிறது. சனாதன இந்து தர்மத்தை, சைவத்தை மியூசியத்துக்குள்ள (Museum) தள்ள முயற்சி பண்றது. கோயில்களை வெறும் இந்த டூரிசம் சென்டரா (Tourism center) மாத்த முயற்சி பண்றது. லிவிங் என்லைட்டன்மென்ட் ஈகோசிஸ்டமா (Living enlightenment ecosystem) கோயில்கள் இல்லாமல், அத ஒரு மியூசியமா மாத்த முயற்சி பண்றது, இல்ல வெறும் டூரிசம் சென்டரா மாத்த முயற்சி பண்றது.

இது பிரசங்கம்.

இல்லை, நம்முடைய சனாதன இந்து தர்மத்தின் வேதமொடு ஆகமமும் மெய், அது சொல்லும் ஆன்மீகம் சத்தியம். பரமசிவப் பரம்பொருள் இப்பொழுதும் நமக்கு கிடைத்துக்கொண்டே இருக்கின்றார். உள்ளும் வெளியிலும் இப்பொழுதும் நமக்காக எப்பொழுதும் இருக்கின்றார். அவரை அடைவதும், அனுபூதியாய் உணர்வதும், வாழ்வில் அவரையே வெளிப்படுத்தி வாழ்வதும் சத்தியம், இது சத்தியம் என்று புரிய வைப்பதுதான் சத்சங்கம்.

அந்த சக்தியை, அதை அவ்வாறு வாழ்வதற்கான சக்தியை அளிப்பதுதான் தீட்சை. அதை உங்களுக்குள் மலரச் செய்வதுதான் சக்திபாதமும், சக்தினிபாதமும். அது மலர்ந்து நீங்கள் வாழ்வதுதான் அனுபூதி நிலை, சிவானுபூதி நிலை, சிவானுபவ நிலை.

அடிப்படையான உண்மைகளை சொல்றேன் கேட்டுக்கோங்க. முதல் விஷயம், மிகப்பெரிய பக்தராக கருதப்படுகின்ற திருநாவுக்கரசு சுவாமிகள் எல்லாம் கூட ஆகமாந்த பரம சத்தியமான, மகா வாக்கியமான 'சிவோகம்' எனும் பாவத்தில் (Bhaavathil) தான் இருந்தார்கள். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், வெளியில் இருந்து பார்த்தவர்கள் அவர்களை அப்பர் என்றும், ஞானசம்பந்தர் என்றும், சுந்தரர் என்றும், சிவனடியார் என்றும், பக்தர்கள் என்றும் தனக்குப் புரிந்ததை வரைந்து வைத்தார்களே தவிர, அவர்கள் உள்ளுக்குள் அகம் சுபாவமாக மூவர் முதலிகளும், மணிவாசகப் பெம்மானும் அகம் சுபாவத்திலே சிவோகம் என்கின்ற நிலையில் தான் வாழ்ந்தார்கள், இருந்தார்கள்.

ஆயிரக்கணக்கான நுட்பமான, ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்ற தேவார, திருவாசக திருமுறைக் குறிப்புகளை என்னால சொல்ல முடியும்..."

தமிழ் லிட்ரேச்சர்ல இருக்கிற... முக்கியமான புராணங்கள்... தமிழ் இலக்கியங்கள்ல இருக்கிற முக்கியமான புராணங்கள் நல்லா புரிஞ்சுக்கங்க.

பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், கந்தபுராணம், அருணாசல புராணம், காஞ்சிப் புராணம், திருவிரிஞ்சைப் புராணம், திருவாரூர் திருவிளையாடல், திருவிடைமருதூர் புராணம், சீர்காழிப் புராணம், சிதம்பர மகாத்மியம்...

இந்த... ஆக்சுவலா இந்த புத்தகங்களை எல்லாம் தான் இந்த சத்சங்கங்கள்ல இவைகளைப் பற்றி எல்லாம் தான் பேசப் போறேன். இவைகள் எல்லாத்தையுமே பார்த்தீர்களானால், ஆழமாக ஒரு விஷயம் புரியும். ஆகமாந்த சத்தியங்களைத்தான் இந்த புராணங்கள் சத்தியக் கதைகள் மூலம் விரித்துத் தெளிவாய் உரைக்கின்றன.

முதல் சத்தியம்... உங்களுடைய அகம் சுபாவம்... பரமசிவம்.

உங்க ஒரிஜினல் அசம்ப்ஷனான (original assumption) அகம் பாவம், ரொம்ப உங்களைக் கட்டிடுச்சு. அந்தக் கட்டுத் தளர்ந்து சில வினாடிகள் கூட நீங்கள் இருக்க இயலாத வகையிலே, அகம் பாவம் உங்களை ஆக்டோபஸ் (octopus) மாதிரி சுத்தி சூழ்ந்துட்ட மாதிரி... அந்தத் தீய சக்திகள் எப்பவுமே அப்படித்தான் பண்ணும் ஐயா. ஒரு தீய சக்தி பரவிச் சூழும் போது பாத்தீங்கன்னா, அது எல்லா சக்தியையும் புடிச்சுக்கும். அரசியல், என்ன சொல்றது... அந்த லெஜிஸ்லேச்சர் (legislature), மீடியா (media), எக்ஸிகியூட்டிவ் (executive), ஜுடிஷியரி (judiciary), சோஷியல் நரேட்டிவ்ஸ் (social narratives)... இது அத்தனையும் அந்த ஆக்டோபஸ் மாதிரி ஆக்குபை (occupy) பண்ணிக்கும் அந்தத் தீய சக்தி. அப்ப மட்டும்தான் நீங்கள் தெய்வ சக்தியின் அருளாலே விழித்துக் கொள்ளாமல் வைத்திருக்க முடியும்.

உங்களுடைய அகம் பாவம், ஒரிஜினல் அசம்ப்ஷன் (original assumption)... அதாவது சமூகம் உங்கள் மீது திணிக்கின்ற லார்ஜ் குவாண்டிட்டியான (large quantity) அவங்க எல்லாருடைய அசம்ப்ஷன்ஸை (assumptions) நீங்க கேள்வி கேக்குறதுக்கு நேரமில்லாததுனால, ஆராய்வதற்கு நேரமில்லாததுனால, உங்கள் மீது திணிக்கப்பட்டவைகளை அப்படியே உங்க அசம்ப்ஷன்ஸா (assumptions) மாத்திக்கிறது தான் அகம் பாவம். உங்களுடைய ஒரிஜினல் அசம்ப்ஷன்ஸா (original assumptions) மாறிடுது.

ஆனா உண்மையில, இந்த அகம் பாவம் அதோட கட்டுத் தளருகின்ற சில வினாடிகளிலாவது நீங்க உங்களுடைய அகம் சுபாவத்தைப் பார்த்தால், நீங்கள் பரம்பொருள் அப்படிங்கறதை அனுபூதியா தெரிஞ்சுக்கலாம்.

ஒண்ணுமே வேண்டாங்க... நான் உங்களை... உங்களுடைய நாள் முழுவதிலும்...

ஒரு வினாடிய கூட நான் கேக்கல. உட்கார்ந்து அரை மணி நேரம் தியானம் பண்ணுங்க, 20 நிமிஷம் பிராணாயாமம் பண்ணுங்க, ஒரு மணி நேரம் சூரிய நமஸ்காரம் பண்ணுங்க, நான் எதையுமே கேக்கல. என்னா வேணா பண்ணிக்கோங்க டே டைம்ல. ராத்திரி தூங்கும் பொழுது, தயவுசெஞ்சு மது அருந்திவிட்டு உறங்காமல், மது அருந்தாமல் மட்டும் உறங்குனீங்கன்னா, இந்த அகம்பாவத்தினுடைய கட்டு தளர்ந்து, நீங்கள் அகம் சுபாவத்துக்குள்ள நுழையுற அந்த பிரிட்ஜ (Bridge) உங்களால கண்டுபிடிக்க முடியும்ங்க ஐயா.

நன்றியோடு என்னுடைய பாட்டனாரை நான் இப்ப நினைவு கூறுறேன். ராஜமுதுலியார் என்னுடைய தாயுடைய தந்தை. காலையில முழுக்க அவர் அந்த அரிசி வியாபாரம் பண்ற மண்டி வச்சிருந்தார். சைவ வேளாளர் அதனால வேளாண்மை செய்வதும் வேளாண் பொருட்களை விற்பதும்தான் அவருடைய வாழ்க்கை. ஆனா அதுல அதுவே பாத்தீங்கன்னா சிவத்தொண்டுக்காகவே பொருள் ஈட்டினார். அந்த மாதிரியான ஒரு உயர்ந்த மனிதர். அவர் வாழ்ந்த காலத்துல ஊருக்குள்ள நடந்த எந்த சமூக சேவை ஆகட்டும், சின்னதோ பெருசோ அந்த பத்திரிக்கையில நன்கொடையாளர்கள் லிஸ்ட் எடுத்துப் பார்த்தா அவர் பேர் இல்லாம இருக்கவே இருக்காது. அது கோவில் கும்பாபிஷேகமோ இல்ல ஊர் திருவிழாவோ இல்ல ஏதாவது ஒரு அன்னதானமோ எதுவானாலும் சரி அது மாதிரி.

அவரு ஆனா எனக்கு கொடுத்த ஒரு முக்கியமான பழக்கம், 11 மணிக்கு இரவு 11 மணிக்கு அரிசி மண்டில வேலையெல்லாம் முடிச்சிட்டு வந்து, அதுக்குப் பிறகும், இந்த கை கால் கழுவி தன்னை சுத்தம் செய்து கொண்டு, உட்கார்ந்து அந்த திருமுறை முற்றோதல், தினந்தோறும் ஒரு பகுதி, ஒரு 45 நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரம் வரையாவது படிச்சிட்டு பிறகு தான் உறங்கப் போவார்.

நான் உங்ககிட்ட அந்த மாதிரி அந்த கடைசி 45 நிமிஷம் குடுங்கன்னு கூட கேக்கல. அதைக் கேட்டா கூட முடியாது. நான் செல்போனை நோண்டிக்கிட்டே இருந்து டூம்ஸ்க்ரோலிங் (Doomscrolling) பண்ணிட்டு அப்படியே தான் பொத்துனு விழுந்து செத்து போவேன் அப்படின்னு நீங்க சொன்னீங்கன்னா என்னால ஒன்னும் பண்ண முடியாது. சரி அப்படித்தான் உங்க வாழ்க்கைன்னா போகட்டும்.

ஆனால், அந்த தூக்கத்திற்குள் விழுகின்ற அந்த நிமிடம், அகம்பாவத்தினுடைய பிடி தளர்ந்து, அந்த இறுக்கமான அகம்பாவத்தினுடைய பிடி தளர்ந்து, அகம் சுபாவத்துக்குள்ள நீங்க நழுவுகின்ற அந்த நேரம்... அது எப்படின்னு தெளிவா சொல்றேன், அதாவது உடம்பு இயங்குவதை நிறுத்திவிட்டது, உடல் அடங்கிவிட்டது. மனமும் வேறு வேறு விஷயங்களிலே சஞ்சரிப்பதிலிருந்து பின்வாங்கிருச்சு. ஆனா இன்னமும் உணர்வு இருக்கு. அந்த காலகட்டம் தான் அகம்பாவத்தினுடைய பிடி தளர்ந்து அகம் சுபாவத்திற்குள் நீங்க முழுகுகிற நேரம்.

அந்த காலகட்டத்திலே, அந்த நேரத்தில் மாத்திரம் சற்றே விழிப்போடு இருந்தீங்கன்னா, நீங்கள் உங்களுடைய உண்மையான அகம் சுபாவம் பரம்பொருளே அப்படின்னு தெளிவா புரியும். அந்த நேரத்துல...

உங்களுடைய அகம் பாவம், அகம் சுபாவத்துல ஸ்லிப் ஆகுற அந்த நேரத்தை மட்டும் நீங்கள் எனக்குக் கொடுங்கள். அந்த நேரத்துல மட்டும் நீங்க அவேர்னஸ்ஸோட இருங்க. உங்களுக்கு நான் ஞானத்தைக் கொடுத்திடுறேன், வேற ஒண்ணுமே வேணாம். நான் உங்ககிட்ட இருந்து எதையும் டிமாண்ட் பண்ணல.

இந்த பதினெட்டு நாட்களும் சத்சங்கம் மூணு மணி நேரம் கேளுங்கன்னு சொல்றேன். காரணம் என்னன்னா, இந்த சத்தியங்களைப் புரிஞ்சுக்கிறதுக்கு. புரிஞ்சுகிட்ட பிறகு, உங்க பிராக்டீஸ், தினசரி நீங்கள் செய்ய வேண்டிய நடைமுறை பிராக்டீஸா நான் எதுவுமே கேட்கல. இவ்வளவுதான் கேட்கிறேன்.

அகம் பாவம் அகம் சுபாவத்திற்குள் நழுவும்பொழுது, முழுகும்பொழுது அவேர்னஸ்ஸோட இருங்க. உங்களுடைய அகம் சுபாவம் பரம்பொருள் அப்படிங்கிறதை அனுபூதியாகத் தெரிந்து கொள்ளலாம்.

நான் சொன்னேன்னா ஆர்கியூமென்ட் எல்லாம் வரும் ஐயா. அது... அது என்ன சொல்றது... அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம், சுத்தாத்வைதம், சகலவிதமான தத்துவ ஆர்கியூமென்ட்ஸ் எல்லாமே வரும். நான் இந்த வாதப் பிரதிவாதங்களில் எல்லாம் உங்கள் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை. நான் பரம்பொருளை அனுபவித்திருக்கின்றேன். பரமசிவப் பரம்பொருள் எனக்குள் அனுபூதியாக இருக்கின்றார். உங்களுக்கு என்னால் அந்த அனுபூதியை அளிக்க முடியும். அவ்வளவுதான்.

யார் பேசுவதை நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறீர்களோ, அவர் பரமசிவப் பரம்பொருள். அவரால் உங்களுக்கு இதே அனுபூதியை அளிக்க முடியும்.

இந்த பரம சத்தியங்களைப் புரிந்துகொள்ளுங்கள்.

அடுத்து நான் உங்களுக்குச் சொல்லணும்னு நினைக்கிறேன். பரம சத்தியம்… உங்களுடைய கடந்த காலம் மாற்றப்படக் கூடியது. உங்க கடந்த காலம், கல்லில் செதுக்கப்பட்ட, கல்லால் வடிக்கப்பட்ட ஒரு நிரந்தரமான, நிலையான, ஏதோ இறுகிப்போன ஒரு ஃபேக்ட் (fact), உண்மை, செய்தி அப்படின்னு நினைக்காதீங்க.

ஐயா, வரலாறுக்கு ஒரு சின்ன விளக்கம் கொடுத்திடுறேன், புரிஞ்சுக்கோங்க. கடந்த காலத்திற்கும், நிகழ் காலத்திற்கும் இடையே நடக்கின்ற முடிவே இல்லாத, எல்லை இல்லாத, இடையறாத உரையாடல்தான் வரலாறுங்க. உங்களுக்கு உங்க வாழ்க்கை எப்படித் தோணுதோ, இப்போ உங்க மூட் (mood) எப்படி இருக்கோ, அதை வெச்சுத்தான் உங்க கடந்த காலத்தையும் நீங்க புரிஞ்சுப்பீங்க. இது சமூக வரலாறு, அரசியல் வரலாறு, எல்லாவற்றோடும் தனிமனித வரலாற்று... இந்த மூணுத்துக்கும், எல்லாத்துக்குமே இதான் அடிப்படை விளக்கம் ஐயா. இதான் அடிப்படை definition.

அரசியல் வரலாறு வேற ஒன்னும் இல்ல. இப்ப யாரு ஜெயிச்சிருக்காங்களோ, அவங்க மொத்தத்தையும் அவங்களுடைய பார்வைப்படி தான் அரசியல் வரலாறு. சமூகத்திலயும் அப்படித்தான். உங்க தனிமனித வாழ்க்கையிலயும் அப்படித்தான்.

ஆழ்ந்து கேளுங்க...

இப்ப உங்க வாழ்க்கையில உங்களுடைய மூட் (mood) ரொம்ப டிப்ரஸ்டா (depressed), டல்லா (dull) இருந்தீங்கன்னா, உங்க மொத்த வாழ்க்கையுமே நரகமா தான் இருந்ததுன்னு நினைப்பீங்க. இப்ப உங்க வாழ்க்கையோட மூட் பிரெஷ்ஷா (fresh), எனர்ஜெட்டிக்கா (energetic), அலைவா (alive) இருந்ததுன்னா... மொத்த வாழ்க்கையுமே ஆஹா! அப்படின்னு நினைப்பீங்க.

எத்தனை பேருக்கு நான் சொல்றது புரியுது? இப்ப உங்களுடைய மூடை வெச்சு தான் உங்களுடைய கடந்த காலத்தையே நீங்கள் புரிந்து கொள்ளுகின்றீர்கள், பார்க்கின்றீர்கள், அனுபவிக்கின்றீர்கள், நினைவு கூறுகின்றீர்கள்.

அடிப்படையா புரிஞ்சுக்கோங்க... உங்கள் நினைவைத் தவிர கடந்த காலம் அப்படின்னு ஒன்னு இல்லவே இல்லை. உங்களுடைய நினைவு மட்டும் தான் கடந்த காலம். அது ஒன்னும்... கடந்த காலம்ன்றது ஏதோ ஒரு ஃபெய்த்ஃபுல்லான (faithful), டாக்குமெண்டட் ஆர்கைவ்ஸ் (documented archives), நாம கரெக்டா போய் அதுக்கு தேவையானதை எடுத்துட்டு, எடுத்து வந்து பார்க்கிறோம் அப்படின்லாம் நினைக்காதீங்க. கிடையாது.

உங்கள் நினைவுகள் தான் கடந்த காலம். அதனால தான் ஒரே நிகழ்ச்சிய, அந்த ஒரே நிகழ்ச்சியில இருந்த அண்ணன் தம்பி வேற வேற விதமா அந்த கடந்த காலத்த அவங்களுக்குள்ள டாக்குமெண்ட் (document) பண்ணி வைக்கிறாங்க.

ஆழ்ந்து கேளுங்கள்... ஒரு சின்ன உதாரணம் சொல்றேன்.

இப்போ நிகழ்காலத்தில நீங்க எப்படி ஃபேக்ட்ஸ (facts) ப்ராசஸ் (process) பண்றீங்க... கடந்த காலத்தைப் பற்றி நீங்கள் வைத்திருக்கிற கருத்துக்கள், நினைவுகள், அந்த கருத்துக்களால் நீங்கள் நினைத்துப் பார்க்கின்ற நினைவுகள்... இது எப்படி உங்களுடைய நிகழ்காலத்தை நேரடியாக பாதிக்கிறதுன்னு மட்டும் கொஞ்சம் ஆழமா புரிஞ்சுக்கோங்க.

ஒரு மரத்தைப் பார்க்கும் பொழுது நீங்கள் மரத்தைக் காண்பதில்லை. மரம் என்ற கடந்த கால நினைவை, இப்போதைய உணர்வின் மீது ஒட்டிப் பார்க்கிறீர்கள். நீங்க வாழ்க்கையை நேரடியா அனுபவிக்கல. ஒவ்வொரு அனுபவமும் நடந்து முடிந்த பின்னரே, மனம் அதற்கு பெயரிட்டு நினைவாக மாற்றுகிறது.

உங்களுடைய அகம்பாவம், ஒரிஜினல் அசம்ப்ஷன்ல (original assumption)...

"நான் இப்படிப்பட்டவன், என் கடந்த காலம் இப்படி" அப்படிங்கிற ஒரு கற்பனை அடையாளம் வச்சிருக்கீங்க இல்லையா, அதுதான் உங்களை கட்டிப் போட்டுருக்கு. அந்த பிரிசம் (Prism) அது மூலமா மட்டும்தான் நீங்கள் வாழ்க்கையையே அனுபவிக்கின்றீர்கள். இந்த 'அகம்பாவம்' அப்படிங்கிற வார்த்தைக்கு தப்பான விளக்கம் எடுத்துக்காதீங்க. அதாவது 'திமிர்' அப்படிங்கிற அந்த விளக்கம் எடுத்துக்காதீங்க, எடுத்துக்கிட்டிங்கன்னா நான் சொல்றது புரியாது.

"ஓ நான் ரொம்ப பணிவானவன், நான் யாரோ..." அப்படி அதுவும் அகம்பாவம் தான், ஒரிஜினல் அசம்ப்ஷன் (Original assumption). "அதிவினயம் தூர்த்த லட்சணம்". ரொம்ப பணிவா இருக்குறவன் ரொம்ப டேஞ்சரஸான (Dangerous) ஆளுன்னு தெரிஞ்சுக்கோங்க.

"நான் இப்படிப்பட்டவன், என் கடந்த காலம் இப்படி" அப்படிங்கிற இந்த கற்பனை அடையாளங்கள் இருக்கு பாருங்க, அந்த பிரிசத்து (Prism) மூலமா நீங்க பார்த்தீங்கன்னா அது மாதிரியே தான் உங்க கடந்த காலம் முழுமையா தெரியும்.

இது வந்து விசியஸ் சர்க்கிள் (Vicious circle) மாதிரிங்க. உங்களுடைய ஒரிஜினல் அசம்ப்ஷனான அகம்பாவத்தை வைத்துத்தான் உங்கள் கடந்த காலத்தை நீங்கள் கணிப்பீர்கள், புரிந்து கொள்வீர்கள். அந்த கடந்த காலத்தை நீங்க எப்படி புரிஞ்சிக்கிறீங்களோ அதை வச்சு இந்த அகம்பாவம் இன்னும் பலமா மாறும். அது ஒன்றினோடு ஒன்று சம்பந்தப்படுத்திக் கொண்டு ஒன்றாலே ஒன்று வளர்ந்து...

எப்படி எல்லாரும் செக்யூர்டா (Secured) ஃபீல் பண்ணி செலவு பண்ணிட்டே இருந்தா எக்கானமி (Economy) நல்லா ப்ளரிஷ் (Flourish) ஆகிட்டே போயிட்டு இருக்கும். இன்செக்யூரிட்டி (Insecurity) வந்து எல்லாரும் ஹோல்ட் (Hold) பண்ண ஆரம்பிச்சாங்கன்னா எக்கானமி கொலாப்ஸ் (Collapse) ஆகி டிப்ரஷனுக்கு (Depression) போயி... அதாவது இந்த டிப்ரஷனால இன்னும் நிறைய ஹோல்ட் பண்ணுவாங்க, நிறைய ஹோல்ட் பண்றதால டிப்ரஷன் நிறைவாகும். நிறைய ஃப்ரீயா ஸ்பென்ட் (Spend) பண்ணிட்டு இருந்தாங்கன்னா எக்கானமி நல்லா வளரும், நல்லா வளர்ந்தா இன்னும் நிறைய ஸ்பென்ட் பண்ணிட்டு இருப்பாங்க. இது அந்த விசியஸ் சர்க்கிள் (Vicious circle), வெர்சுவஸ் சர்க்கிள் (Virtuous circle) அந்த மாதிரி. எக்கானமியை கரண்ட்லயே வச்சிருக்கிறது வெர்சுவஸ் சர்க்கிள்.

இந்த அகம்பாவம் உங்களை இறுகப் பிடித்து... இந்த அகம்பாவம்ங்கிற வார்த்தைக்கு நான் திமிர்ன்ற விளக்கம் சொல்லல... நீங்க ரொம்ப பணிவானவர்கள், நீங்க ரொம்ப பணிவே வடிவானவர்கள்னு நீங்க சொல்லிக்கிட்டீங்கன்னா அதுவும் அகம்பாவம் தான். இந்த அகம்பாவத்தின் மூலமாக கடந்த காலத்தை நீங்கள் தொடர்ந்து பார்க்கும் பொழுது உங்களை நீங்களே டிப்ரஷன்ல போட்டுக்கிற அந்த விசியஸ் சைக்கிள்ல (Vicious cycle) மாட்டிக்கிட்டு அழியுறீங்க.

அகம் சுபாவத்திலிருந்து உங்கள் கடந்த காலத்தை பார்க்கும்பொழுது உங்களுக்கு தெளிவா புரியும், கடந்த காலத்தை ரொம்ப ஈஸியா மாத்த முடியும்.

ஒரு சில சிறு உதாரணங்கள் மட்டும் சொல்றேன். ………..சுந்தரர் அவிநாசியில முதலையால் விழுங்கப்பட்ட பிராமணச் சிறுவனை ஆண்டுகள் கழித்து உயிர்ப்பித்ததாகட்டும்... சம்பந்தப்பெருமான் திருமயிலையிலே சிவநேசச் செட்டியார் மகளான பூம்பாவையை...

பூம்பாவையை உயிர்ப்பித்ததாகட்டும், அதுவும் பாம்பு கடித்து இறந்து, உடம்பை எரித்து, எலும்பையும் சாம்பலையும் சட்டியில் வைத்திருக்க, அந்தச் சட்டியிலிருந்து "மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலை" என்று தொடங்கும் அந்தப் பூம்பாவைப் பதிகத்தைப் பாடி, "காணாதே போதியோ பூம்பாவாய்"னு திருவிழாக்களை எல்லாம் வைத்துப் பாட, குடம் உடைந்து பெண்ணாக வந்தாள்.

அதே மாதிரி திருமருகல், மருகலீஸ்வரர் கோயில்ல ஒரு வணிகன் மடத்திலே பாம்பு தீண்டி இறந்ததைக் கண்டு, அவனை "சடையாய் எனுமால் சரண்நீ எனுமால்" எனும் பதிகம் பாடி உயிர்ப்பித்தது. அடுத்து அப்பர் திங்களூரிலே, அப்பூதியடிகளுடைய மகனாகிய மூத்த திருநாவுக்கரசை, பாம்பு கடித்து இறந்த பாலனை, "ஒன்றுகொலாம் அவர் சிந்தை" என்று பதிகம் பாடி உயிர்ப்பித்தது... பட்டியல் போட்டுக்கிட்டே போலாங்க ஐயா.

அதுக்கடுத்து சிறுத்தொண்டர். சிறுத்தொண்டர் புராணமாவது பெருமானே நேரா வந்து, அந்தக் குழந்தை சீராளனை வெட்டி, சமைக்கச் செய்து, திரும்ப உயிர் கொடுத்தார். அது பெருமானே நேரடியாக நடத்துனது. நீங்க உடனே சொல்லுவீங்க, "இல்ல இல்ல அது பெருமானே நேரா பண்ணார்"னு. ஆனா அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் கதைகள் எல்லாம் பார்த்தா, அடியார்கள் செய்திருக்கிறார்கள் ஐயா. அதனால இது உங்களுக்கு சாத்தியம்.

முதல் விஷயம் புரிஞ்சுக்கோங்க. உடனே எடுத்த உடனே, "ஆ... அப்போ நானும் யாரையாவது கொலை பண்ணிட்டு, என் பாஸ்ட்டை (Past), என்னுடைய கடந்த காலத்தை டெலீட் (Delete) பண்ணி ரீரைட் (Rewrite) பண்ணுனா அவங்க உயிரோட வந்துருவாங்களா?" அப்படின்னு எடுத்த உடனே விதண்டாவாதம் பேசாதீங்க. முதல்ல நான் சொல்றத பொறுமையா, படிப்படியா கேளுங்க.

அதாவது, முதல்ல உங்க வாழ்க்கையில உங்களை நீங்க எத்தனை தரம் அழிச்சிருக்கீங்கன்னு பார்த்து, அதையெல்லாம், அந்த கடந்த காலத்தையெல்லாம் அழித்து ரீரைட் (Rewrite) பண்ணுங்க. இது உங்களுக்கு புரிந்து, அனுபவமாய், அந்த பாவம் அகம் சுபாவத்திலிருந்து மலர்ந்து, அந்த கடந்த காலம் மாற்றி எழுதப்பட்டு அது நிகழ்காலத்தில் வெளிப்படும் பொழுது உங்களுக்கே தெளிவா புரிஞ்சிடும்.

"ஆஹா... உண்மையில கடந்த காலத்துல நடந்ததா நாம நினைச்சுட்டு, நம்மள நாமளே அழிச்சிட்டு, குற்ற உணர்ச்சியும் குற்றுயிரும் கொலையுயிருமா நொந்து செத்துட்டு இருக்கிற இந்த வாழ்க்கை வாழ வேண்டிய அவசியமில்லப்பா, கடந்த காலத்தை நம்மால் மாற்ற முடியும்"னு உங்களை உயிர்ப்பித்துக் கொள்ளுங்கள். இதுதான் இந்த முதல் நிலை.

அதுக்குப் பிறகு, மகாப் பிரளயத்தாலே, மரணத்தாலே கொண்டுபோன விஷயங்களைக்கூட மீண்டும் கொண்டு வருகின்ற சக்தி உங்களுக்குள் மலரும். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். அகம் பாவத்திலிருந்து அகம் சுபாவத்திற்குள்ளே கரைகின்ற அந்த பாவ பலம் உருவாகும் பொழுது... அதாவது அகம் சுபாவத்துல நீங்க இருக்க இருக்க, பாவ பலம் உங்களுக்குள் உருவாகும். அகம் பாவத்திலே இருக்க இருக்க, வாழ்க்கையே பவர்லெஸ்ஸா (Powerless) இருக்கும். உங்க மேலேயும், உங்களைச் சுத்தி இருக்கிற எல்லாத்து மேலேயும் கடுமையான வெறுப்பும்...

டிப்ரஷனும், துக்கமும், பிரஸ்ட்ரேஷனுமா இருக்குன்னா புரிஞ்சுக்கோங்க... நீங்கள் கடந்த காலச் சிறையிலே சிக்கிச் சீரழிந்து சின்னாபின்னமாய்க் கொண்டிருக்கிறீர்கள்.

பாகவதம் ரொம்ப அழகா சொல்லுது...

"நைமித்திக: ப்ராக்ருதிகோ நித்யாந்திக ஏவ ச | சம்ஸ்தாஸ்ச சதஸ்ர: கதிதா காலஸ்ய பரமாத்மன:"

பரமாத்மாவின் காலம் என்ற அம்சம் நான்கு வகையான பிரளயங்களை உருவாக்குகிறது: நைமித்திக பிரளயம் - இடையிடையே நிகழற பிரளயம். ப்ராக்ருதிக பிரளயம் - மூலப்பொருள் சார்ந்த மகா பிரளயம். நித்ய பிரளயம் - தொடர்ச்சியா நடக்கிறது. ஆத்யந்திக பிரளயம் - இறுதி முக்தி.

இந்த நான்கு விதமான பிரளயங்கள் நடக்குது. அதாவது நித்ய பிரளயம்கிறது தொடர்ச்சியான கரைவு. தினமும் நிகழற மரணம்... அதாவது உங்க செல்கள் அழிஞ்சுகிட்டே இருக்கு, ஒவ்வொரு தருணமும் மாறிக்கிட்டே இருக்கு.

இந்த நித்ய பிரளயத்திலே நிகழுத கடந்த காலத்தை, நித்ய பிரளயத்தாலே அழிக்கப்பட்ட கடந்த காலத்தை... உங்கள் அகம் சுபாவத்திற்குள் முழுகி, மாற்றி அமைத்து, அந்த அனுபவத்தை, அனுபூதியை நீங்கள் பார்த்து விட்டீர்களானால், உங்களுக்கே அந்த பாவ பலம் வந்துவிடுவதனால், மீண்டும் மீண்டும் அகம் சுபாவத்திலே இருந்து, நைமித்திக பிரளயம், ப்ராக்ருத பிரளயம், ஆத்யந்திக பிரளயம் போன்ற பிரளயங்களினால் அழிக்கப்பட்ட, விழுங்கப்பட்ட கடந்த காலத்தைக் கூட மாற்றி அமைக்கின்ற சக்தி உங்களுக்கு சாத்தியமாகின்றது.

அதைத்தான் ஞானசம்பந்தப் பெருமானோ, சுந்தரமூர்த்தி நாயனாரோ, அப்பர் பெருமானோ உபயோகிக்கின்றார்கள். வாதவூராரோ, காழியூராரோ, ஆரூராரோ, அப்பரோ இந்த சக்திகளைத் தான், இந்த பாவ பலத்தைத் தான் பிரயோகப்படுத்துகிறார்கள்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இதை அனுபூதியாக உங்களுக்கு அளிப்பது தான் இந்த மொத்த சத்சங்கத்தோட நோக்கம்.

நீங்கள் எதை நினைவு கூற தேர்ந்தெடுக்கிறீர்களோ, அந்த நினைவே உங்கள் கடந்த காலத்திற்கு உயிர் கொடுக்கின்றது. உங்கள் கடந்த காலம் என்பது நீங்கள் செய்யும் தொடர்ச்சியான மறுபடைப்பு (Re-creation). திரும்பத் திரும்பத் திரும்ப வேற வேற கோணத்துல, வேற வேற ஐடியால வெட்டி ஒட்டிக்கிட்டே இருக்கிறது தான்.

உங்கள் வாழ்க்கையில் எதையாவது நீங்கள் மாற்ற விரும்பினால், உங்கள் கடந்த காலத்தை மறுபடைப்பு செய்யுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, செய்யக்கூடிய ஒன்றே ஒன்று. எதிர்காலத்தையெல்லாம் மாத்த முடியாது. எதிர்காலத்தை மாத்தச் சொல்லி யார் உங்களுக்கு கத்துக் கொடுத்தாலும் காக்கா பிரியாணி தான் தின்னுட்டு இருக்கீங்க!

ஐயா, நம்முடைய ஆகமங்கள்... வேதமும் ஆகமங்களும் இந்த பரம சத்தியங்களை தங்களுக்குள்ளே வைத்திருக்கின்ற..

"ஆனா துரதிர்ஷ்டவசமா இந்த மேக்ஸ் முல்லேரியன் ட்ரான்ஸ்லேஷன் (Max Müllerian translation), மெக்காலே எஜுகேஷன் (Macaulay education), மேக்ஸ் முல்லேரியன் ட்ரான்ஸ்லேஷன்... இந்த கும்பல் சாஸ்திர பத்ததிப்படி படித்து அனுபூதியை அடையாதல்... அடையாமல், இந்த மாடர்ன் டே ட்ரான்ஸ்லேஷன்ஸ் (modern day translations), உரைகள் இவைகளை வைத்துக்கொண்டு, வாழ்க்கையோட பரம சத்தியங்களை, வாழ்வியல் சத்தியங்களை புத்தகங்களா எழுதி மத்தவங்களுக்கு சொல்லி மிகப்பெரிய குழப்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த குழப்பத்தின் ஒரு பாகம்தான் இந்த 'எதிர்காலத்தை மாற்றியமை'ன்னு... ஆழ்ந்து கேளுங்கள்.

சாஸ்திர பத்ததி... முறையாக வேத அங்கங்களையும், அதாவது வியாகரணம், இவைகளை முழுமையாக, முறையாக கற்று, அதுக்குப்பிறகு வேதங்களை புரிந்துகொண்டு, சாஸ்திர பத்ததியோடு... அதே மாதிரி ஆகம அங்க சாஸ்திரங்களை படித்து ஆகமங்களை புரிந்துகொண்டு, சாஸ்திர பத்ததியோடு இவைகளை உள்வாங்கியிருப்பவர்களுக்கு மட்டுமே இந்த பரம ரகசியங்கள் புரியும்; வாழ்வியல் சத்தியங்கள் புரியும். நல்லா புரிஞ்சுக்கோங்க.

எதிர்காலத்தை மாத்து, எதிர்காலத்தை மாத்துன்னு உங்களுக்கு சொல்றவன் எல்லாமே, அவர்கள் அறியாமலேயே உங்களை மேலும் துக்கத்துக்கு ஆளாக்குகிறார்கள். தெரிஞ்சே பண்ணா அவங்க கன்னிங் (cunning), குள்ளநரி, கிரிமினல்ங்க (criminals). தெரியாம பண்ணா முட்டாள்ங்க. எதிர்காலம்னு ஒன்னு இல்லைங்கய்யா. இருக்கறது ஒன்னே ஒன்னுதாங்கய்யா, கடந்த காலம் மட்டும்தாங்கய்யா. நிகழ்காலம் கூட கிடையாதுங்கய்யா. ஏன்னா நிகழ்காலத்தை நீங்க புடிக்க முயற்சி பண்ணிங்கனா அது கடந்த காலமா மாறிடும் அது. உற்று பாருங்க... உற்று உற்று நோக்க நோக்க கடந்த காலமா மாறிட்டிருக்கும் அது. இருக்கறது ஒன்னே ஒன்னுதான், கடந்த காலம் மட்டும்தான்.

இந்த கடந்த காலம், இறந்த காலம் அப்படிங்கறது கூட நல்லா புரிஞ்சுக்கோங்க... கடந்த காலம் எப்ப இறந்த காலம்னா, நீங்கள் அதைக் கொன்றால் தான் இறந்த காலம். அது தானாகவே இறந்த காலம் அல்ல. ஏன்னா கடந்த காலம் உங்க மேல தொடர்ந்து இன்ஃப்ளூயன்ஸ் (influence) பண்ணிட்டு இருக்கு. அதோட தாக்கம் உங்க மேல இருக்கிற வரைக்கும் அது எப்படி இறந்த காலமா மாறிட முடியும்? கடந்த காலத்தை நீங்கள் கொன்றால் தான் அது இறந்த காலமாகும். உங்களால் கொல்ல முடியும்.

இந்த நித்ய பிரளயத்தாலே விழுங்கப்பட்ட கடந்த காலம்... இப்ப நான்கு பிரளயத்தை சொன்னேன் இல்லையா... உங்களுடைய வாழ்க்கையில நித்ய பிரளயம் நடக்குது. அந்த நித்ய பிரளயத்தாலே விழுங்கப்பட்ட கடந்த காலம்... அந்த கடந்த காலத்தை மாற்றியமைத்தீர்களானால்... அது உங்களால நிம்மதியா முடியும்."

நிச்சயமா முடியும், ரொம்ப நிம்மதியா செய்ய முடியும். அதற்கான முறையைத்தான் இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க.

இந்த நித்ய பிரளயத்தை, நித்ய பிரளயத்தாலே விழுங்கப்பட்ட கடந்த காலத்தை மாற்றி, அதோட தாக்கத்தை உங்கள் நிகழ் காலத்திலும் எதிர்காலத்திலும் பார்த்தாலே உங்களுக்கு 'ஆஹா!' அப்படிங்கிற அந்த ஆனந்தப் பொறி, எக்சைட்மென்ட் தட்டிடும். அதுக்கு பிறகு நான் சொல்றது உங்களுக்கு அனுபூதியாக விளங்கும், நீங்களாவே அதை வாழ துவங்கி விடுவீர்கள். ஒண்ணுமே இல்ல ரொம்ப எளிமையானதுங்க.

கடந்த காலத்தின் காரணமாக உங்களுக்கு ஒரு வயித்து வலியோ, ஏதோ ஒரு வியாதி இருக்கு. அந்த வியாதி கடந்த காலத்துல தான் ஆரம்பிச்சது. தலைவலியோ, வயித்து வலியோ, இல்ல உடம்புல இருக்க ஏதாவது ஒரு தீராத வியாதியோ, வலியோ ஏதோ ஒன்னு. இல்ல மனசுல இருக்கிற தீராத ஒரு வலியோ, துக்கமோ, குற்ற உணர்ச்சியோ, சங்கடமோ ஏதோ ஒன்னு. இதெல்லாம் நித்ய பிரளயத்தாலே விழுங்கப்பட்ட கடந்த காலம்.

அந்த தினந்தோறும் தூக்கத்துக்கு போகும் பொழுது, அகம் பாவத்திலிருந்து அகம் சுபாவத்திற்குள் நீங்கள் முழுகும் பொழுது, அப்படியே அவேர்னஸ்ஸோட உங்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் குடுங்க. உங்களுடைய கடந்த காலம் நீங்க மாத்தணும்னு நினைக்கிறதை அத்தனையும் அழித்து, நீங்க எப்படி அந்த கடந்த காலம் இருக்கணும்னு விரும்புறீங்களோ அதுபோலவே நினையுங்கள். காரணம்...

ஒரு உதாரணம் சொல்றேன் கேட்டுக்கோங்க. ஒரு உதாரணம் சொன்னா அதுக்கு அப்புறம் நான் சொல்ற இந்த சத்தியம் புரியும். அதாவது, கடந்த காலத்துல ஏதோ ஒரு உணவு தவறாக சாப்பிட்டு, இல்ல சரியா சாப்பிடாம வயித்துப் பிரச்சனை வந்துருச்சு. போய் அந்த நிகழ்வை அப்படியே பார்த்து, அந்த நிகழ்வை அழித்துவிட்டு, நீங்க சரியான உணவை சாப்பிட்டு சரியா உடம்பை ஆரோக்கியமா வச்சிருந்தீங்க அந்த காலத்துல, அதனால இப்போ ஆரோக்கியமா இருக்கீங்க அப்படிங்கிற தெளிந்த பாவத்தை உருவாக்குங்கள். சத்தியமா சொல்றேன் உங்க உடம்பு சரியாயிடும். ஐயா, அனுபூதியிலிருந்து சொல்லுகின்றேன், உங்களுக்கு அனுபூதியை அளிப்பதற்காக சொல்லுகின்றேன். சத்தியம் இது, சாத்தியம் இது.

உடல் வியாதி மட்டுமல்லையா, மன வியாதி மட்டுமல்ல. உங்களுடைய முட்டாள்தனங்கள், முட்டாள்தனங்களாலே நீங்கள் எடுத்த முடிவுகள், பொருளாதார இழப்புகள், உறவு இழப்புகள்... ஏதாவது நீங்க வேகத்துல சண்டை போட்டு உங்களுடைய வாழ்க்கையில முக்கியமான நல்ல உறவுகளை இழந்து இருந்தீங்கன்னா, இல்ல கசந்து போயிருந்ததுன்னா, இன்னைக்கு நைட்டு, இன்னைக்கு ராத்திரி படுக்கும் பொழுது...

அந்த காலத்திலெல்லாம் இன்னைக்கு ராத்திரி படுக்கும் பொழுது இதை செய்யுங்கன்னு சொல்லுவேன், ஆனா இந்த காலத்துல படுக்கும் பொழுது மது அருந்தி விட்டு தூங்காதீர்கள்னு தனி இன்ஸ்ட்ரக்ஷனா கொடுக்க வேண்டிதா இருக்கு. காரணம் என்னன்னா மது அருந்தி விட்டு உறங்குவது ஆல்மோஸ்ட் ஒரு சராசரியான வாழ்க்கை முறை மாதிரி ஆயிடுச்சு. கொடுமை... என்ன கொடுமைங்க!

எந்த காரணம் சொன்னாலும் மதுவையும் மாமிசத்தையும் நார்மலைஸ் பண்ணத ஏத்துக்கவே முடியாது. அவனுங்க அத்தனை பேரும் தீய சக்திகள். மதுவையும் மாமிசத்தையும் நார்மலைஸ் பண்ண அத்தனை பேரும் தீய சக்திகள்.

இரவு உணவு மாமிசம் இல்லாமலும், இரவு உறக்கத்துக்கு முன்பு குறைந்தபட்சம் மூணு மணி நேரத்துக்கு முன்பாகவே எந்தவிதமான மது, போதை வஸ்துக்கள் இல்லாமலும்... மூணு மணி நேரம்னு ஏன் சொல்றேன் அப்படின்னா, இப்பல்லாம் குடிச்சு குடிச்சு, தரித்திரம் புடிச்சவனுங்க மூணு மணி நேரத்துக்கு மேல அவனுங்களால அந்த போதையில் இருக்க முடியறதில்ல. வெள்ள தானா தள்ளிருது. அதனால மினிமம் மூணு மணி நேரம் சொல்றேன். ஆனா குடிக்காமல் இருப்பது தான் நல்லது. மது இல்லாத வாழ்க்கையே உத்தமம்.

குறைந்தபட்சம் உறங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவாவது மது இல்லாமல் ஒரு தெளிந்த உணர்வோடு உறங்கச் செல்லுங்கள். இந்த உறங்கும் பொழுது, அகம் பாவத்திலிருந்து அகம் சுபாவத்துக்கு ஸ்லிப் ஆகுற அந்த காலகட்டம், அகம் பாவத்திலிருந்து அகம் சுபாவத்துக்குள்ள நீங்க முழுகுற அந்த பிரிட்ஜ் காலகட்டம், அதுதான் மிக மிக மிக முக்கியம். இறைவன் உங்களை பார்க்கும் காலம், நீங்கள் பரம்பொருளை உணரும் காலம் அது. அந்த காலகட்டத்துல நீங்க என்ன நினைத்தாலும் அது நிஜமாக மாறிவிடும். அந்த காலகட்டத்துல...

தயவுசெய்து நீங்க அழிக்கணும்னு நினைக்கிற அந்த கடந்த காலத்தை அழித்து, நீங்க விரும்புன மாதிரி கடந்த காலத்தை நிகழ்வாக பாவியுங்கள், எழுதுங்கள், உருவாக்குங்கள்.

உதாரணத்துக்கு, ஏதோ ஒரு மோசமான, துர் வாய்ப்பாக, துரதிஷ்டமான ஒரு சண்டையினாலே உறவை இழந்து கசந்து போயிருந்தா, அந்த நினைவை கொண்டு வந்து, அந்த நிகழ்ந்ததை மனதாலே, பாவத்தாலே அழித்துவிட்டு, அந்த சண்டையே நடக்கவில்லை என்றும், அந்த காலகட்டத்திலே நீங்கள் உங்கள் இருவருக்கும் இடையிலே நல்ல உறவு இருந்தது, இனிமையான வாழ்க்கை இருந்தது, இனிமையான உறவு இருந்தது, அதனால் இப்பொழுதும் நீங்கள் இனிமையாக வாழ்கிறீர்கள் அப்படிங்கிற அந்த பாவத்தை கொண்டு வாருங்கள் போதும்.

உடனே, இத நான் செஞ்சா உடனே சரியாயிடுமா? கொஞ்சம் செய்யுங்கப்பா. விதையை போடுவதற்கு முன்பாகவே முளைக்குமா முளைக்காதா? போடு, தண்ணி ஊத்து, உரம் போடு. உடனே மறுநாளே அந்த விதையை நோண்டி...

"தோண்டி திரும்ப எடுத்துப் பார்க்காதே முளைச்சிருச்சா இல்லையான்னு. நடக்க விடு, ட்ரஸ்ட் த ப்ராசஸ் (Trust the process). சத்தியம் சொல்லுகின்றேன், உங்கள் பாவ பலத்தின் பலம் உங்களுக்கே தெரியவில்லை. உங்கள் பாவ பலத்தின் பலமும், ஆன்ம பலமும் உங்களுக்குத் தெரிந்துவிட்டால் உங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பதற்காக, சமூகம் உங்களை உங்கள் பாவ பலம் தெரியாமலேயே வைத்திருந்து சீரழிக்கின்றது.

செஞ்சு பாருங்க, உங்கள் உடல் மாறிவிடும், மனம் மாறிவிடும். யாரு கூடையாவது சண்டை நடந்து இந்த மாதிரி பிரச்சனை இருக்குன்னா, நைட்டு உங்களுடைய அந்த அகம் சுபாவத்துக்குள்ள போகும் பொழுது, அந்த கடந்த காலத்தை அழித்துவிட்டு நீங்கள் விரும்புவது போல உங்கள் கடந்த காலத்தை மாற்றி எழுதுங்க. செஞ்சு பாருங்க, அடுத்த நாளே திடீர்னு அவரிடமிருந்து கால் வரும். ரிலேஷன்ஷிப்ல (Relationship), உறவுல இருந்த கசப்பெல்லாம் மறைஞ்சு போயிட்டு இனிமையா மலர்ந்துரும். சில நாட்கள்ல உங்க ரெண்டு பேர் மனசுக்குள்ளையுமே இந்த மாதிரி ஒரு பிரச்சனை நடந்தது அப்படிங்கறதே நினைவில்லாம போயிடும்.

ஐயா, இந்த நுட்பத்தை உபயோகப்படுத்தி, இந்த ஞான ரசவாத நுட்பத்தை உபயோகப்படுத்தி பல உடைந்து போன திருமணங்களையும் மனங்களையும் நான் ஒட்டியிருக்கேங்கயா. பல கேன்சரை கியூர் (Cancer Cure) பண்ணியிருக்கேன். நல்லா புரிஞ்சுக்கோங்க, பல உடல் வியாதிகள், மன வியாதிகள், குடும்ப பிரச்சனைகள், பொருளாதார பிரச்சனைகளை சரி பண்ணியிருக்கேன்.

அனுபூதியிலிருந்து சொல்றேன் கேட்டுக்கோங்க. நாற்பது ஆண்டுகளாக இந்த துறையிலே தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பவன் அப்படிங்கறதனால என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்றேன் புரிஞ்சுக்கோங்க. மூணு வயசுல முதல் சாதுர்மாஸ்யம், அஞ்சு வயசுல முதல் ஆன்மீக மேடை, பத்து வயசுல யோக பட்டாபிஷேகம். தொடர்ந்து குறைந்தது நாற்பது ஆண்டுகளாக இந்த துறையில் பல லட்சக்கணக்கான சீடர்களுக்கும், கோடிக்கணக்கான அன்பர்களுக்கும், பின்தொடர்பவர்களுக்கும் நேரடியாக உதவி, அவர்களுக்கு இதை அனுபூதியாகத் தந்திருக்கின்றேன் என்பதனால் தெளிவாகச் சொல்லுகின்றேன், நல்லா புரிஞ்சுக்கோங்க.

கடந்த காலத்தை அழித்து மாற்றுகின்ற இந்த ஒரு ஞான ரசவாத செயலை, தியானத்தை, இந்த 18 நாள் மட்டும், சித்ரா பௌர்ணமி அன்னைக்கு வரைக்கும் மட்டும் பண்ணுங்கயா... போதும்யா. உங்கள் வாழ்க்கையே மாறிப்போகும். ஏதாவது ஒரு துரதிஷ்டவசமான காரணங்களால, தவறான முடிவுகளாலோ அல்லது ஏமாற்றப்பட்டதனாலோ செல்வத்தை இழந்திருந்தீங்கன்னா, உங்கள் உறவுகளை இழந்திருந்தீங்கன்னா, இல்ல உறவினர்கள் இறந்தே போயிருந்தால் கூட, நான் சொல்ற இதை மட்டும் செய்யுங்கயா. எடுத்த உடனே கேள்வி கேட்காதீங்க. என் வாழ்க்கையில இறந்து போன உறவினரை பத்தி அந்த

"கடந்த காலத்தை நான் மாத்தி, அவர் என் கூட இருக்கிற மாதிரியே எழுதுனா அந்த உறவினர் உயிரோட வந்துருவாரா? எடுத்த உடனே இந்தக் கேள்வியைக் கேட்காதீங்க. கொஞ்சம் ஆழ்ந்து செய்யுங்க.

ஒரு பக்தர், துரதிர்ஷ்டவசமா அவர் வாழ்க்கையில ஒரு உறவை இழந்துவிட்டார். ரொம்ப அவர் நேசிச்ச உறவு. அதனால நொந்து போய், அல்மோஸ்ட் நடைபிணமா மாறிட்டார். ஜஸ்ட் இதை செஞ்சு பாருங்கன்னு நான் இந்த தியான ரசவாதத்தைக் கொடுத்தேன். அவருக்கு என் மேல ஒரு ஸ்ரத்தை இருக்கிறதுனால செஞ்சு பார்த்தாரு.

பத்தே நாள்ல, அந்த இறந்து போன நபர் இவருடைய கனவிலே தொடர்ந்து வந்து, இவரோட பேசி, அவங்க ரெண்டு பேரும் உண்மையிலேயே இப்பவும் தொடர்ந்து வாழுகின்ற மாதிரியான அந்த அனுபவத்திற்கு அவர் வந்ததனால், இவர் நடைபிணமாக இருந்த வாழ்க்கையிலிருந்து மீண்டும் வாழத் துவங்கினார். அதுக்கு அடுத்து நடந்ததுதான் மிகப்பெரிய ஆச்சரியம். இப்பவும் அவருடைய அந்த இறந்த உறவு, இவர் எப்பல்லாம் நினைக்கிறாரோ அவருக்கு ஒரு வழிகாட்டி துணை மாதிரி ஆயிட்டாரு. இவருடைய பிரச்சனைகளை அவரோட பேசி, கன்சல்ட் பண்ணி, சால்வ் பண்ணிக்கிறதுக்கான துணையா மாறிப் போயிட்டாரு.

இது சத்தியம், சாத்தியம். நான் வேணா அந்த அன்பர்ட்ட பேசிட்டு, அவர்ட்ட அனுமதி வாங்கிட்டு, அவருடைய போன் நம்பரை நாளைக்கு சத்சங்கத்துல புரொஜெக்ட் பண்றேன். நீங்க வேணா நேரா பேசிக்கோங்க. இதெல்லாம் ஒன்னும் பெய்டு ஏஜென்ட்டுங்க கிடையாது. பணம் கொடுத்து ஆள் வச்சு ப்ரொமோட் பண்றது கிடையாது. ரியல் பீப்பிளோட ரியல் எக்ஸ்பீரியன்ஸஸ் சொல்றேன் கேட்டுக்கோங்க.

ஏ.. எத்தனையாயிரம் பேரு எத்தனை ட்ரோல் பண்ணி, அவதூறு பண்ணி, அசிங்கப்படுத்தி, இதுக்கு மேல தாக்கவே முடியாதுன்ற அளவுக்கு தாக்கிய பிறகும்... பெருமான் நேரடியா தலையிட்டு, நேரடியா அருள் பண்ணி, நேரடியா வெளிப்படுறதுனால உயிரோட இருக்கிறதை மட்டும் இல்லாம, இன்னும் தொடர்ந்து உலகத்துக்கு பெரும் சேவை செஞ்சுட்டு இருக்கேன். இத்தனை கோடி பேர் இன்னும் தொடர்ந்து ஃபாலோ பண்ணிட்டு இருக்காங்கன்னா, ஒரே ஒரு ரகசியம்தான்; நான் டீச் பண்ற சயின்ஸ் வொர்க்ஸ் (Science works) அவ்வளவுதான். நான் அளிக்கின்ற இந்த அறிவியல் சத்தியம், சாத்தியம், செயல்படுகிறது. அவ்வளவுதாங்கய்யா, வேற ஒன்னும் கிடையாது.

இந்த 18 நாள் செஞ்சு பாருங்க, நான் என்ன உங்க பகல் நேரத்தையா கேட்கிறேன்? ஆழ்ந்து கேளுங்கள். ஏதாவது ஒரு வியாபாரத்துல நஷ்டம், டிரேடிங்ல பணம் போயிருச்சு, ஷேர் மார்க்கெட்ல பணம் போயிருச்சு, இல்ல ஒரு வியாபாரத்துல நஷ்டமடைஞ்சிருச்சு... இந்த அகம் சுபாவத்துக்குள்ள போற அந்த நேரத்துல உட்கார்ந்து, அந்த கடந்த காலத்தை அழித்துவிட்டு, உங்களுடைய வியாபாரத்துல நீங்க பெரும் செல்வம் அடைந்ததாக, அந்த செல்வத்தோடு இன்னமும் நீங்கள் வளமோடு வாழ்வதாக உங்க கடந்த காலத்தை மாற்றி எழுதுங்கள்.

இந்த 18 நாள் செஞ்சு பாத்துட்டு அப்புறம் வந்து என்கிட்ட கேள்வி கேளுங்கய்யா. ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்கய்யா, உங்க கடந்த காலம் அத்தனையுமே மாற்றக்கூடியது. கடந்த காலத்தை மாத்தறதை மட்டும்தான் உங்களால செய்ய முடியும்."

"...அது மூலமா மட்டும்தான் உங்கள் நிகழ்காலமும் எதிர்காலமும் மாறும்.

லட்சக்கணக்கான என்னுடைய சீடர்கள், கோடிக்கணக்கான அன்பர்கள், இந்த கடந்த காலத்தை மாத்தற இந்த ஞான நுட்பத்தை செஞ்சு பார்த்துட்டு, திடீர்னு எதிர்பார்க்காத மிராக்கிள் மாதிரி பணம் வரதையும், அந்த உறவுகள் திரும்ப ஒட்டிக்கிறதையும், பகை மறைவதையும், உடல்ல இருக்கிற கட்டிகள் மறைவதையும், வியாதிகள் கரைவதையும், திரும்ப திரும்ப திரும்ப அனுபூதியாக வந்து சொல்றாங்க. இது எனக்கு மட்டுமல்ல, உங்கள் எல்லோருக்கும் ஒர்க் ஆகுற அறிவியல்.

அதனால உங்க இளமையை மீட்டெடுக்கலாங்கையா. உங்க உடம்புல இழந்த பலவிதமான பலங்கள், இப்போ வேகவேகமா நடக்க முடியல அப்படின்றதே கூட ஒரு இழந்த ஒரு பலம், இந்த மாதிரி இழந்த பலங்களை மீட்டெடுக்கலாம்.

நித்திய பிரளயத்தாலே விழுங்கப்பட்ட அனைத்தையுமே உங்களாலேயே மீட்டெடுக்க முடியும். அந்த அடுத்த நிலை பிரளயங்களால் விழுங்கப்பட்டவைகளை மீட்டெடுக்கத்தான் குரு வேணும். இப்போ அவிநாசியிலே அந்தணர் மகனை முதலை உண்ணுதல்ங்கிறது நித்திய பிரளயம் கிடையாது, அடுத்த நிலை பிரளயம். அது மாதிரியான நிகழ்வுகளுடைய கடந்த காலத்தை மாற்றி அமைத்து, அந்த கடந்த கால நிகழ்வுகளையே மாற்றி அமைத்து அற்புதங்களை செய்வதற்கு, அனுபூதி அடைந்த சுந்தரர் மாதிரி ஒரு மகான் தேவை, ஒரு ஞான புருஷன் தேவை.

ஆனா நித்திய பிரளயத்தினாலே விழுங்கப்பட்ட விஷயங்கள், உங்களுடைய செல்வம், உங்களுடைய உடல் நலம், உங்களுடைய உறவுகள், உங்களுடைய மனநலம் இவைகளை எல்லாம் நீங்களாகவே உங்கள் கடந்த காலத்தை மாற்றி அமைத்து அதிசயத்தை நிகழ்த்தி திரும்ப பெற்றுவிட முடியும்.

ஒரு எக்ஸாமினேஷன்ல பெயில் ஆகி இருந்தீங்கன்னா கடந்த காலத்தை மாற்றி அமையுங்கள். நினைத்துப் பார்க்க முடியாத பேரறிவு பொங்கி, அடுத்த எக்ஸாம்ல அதே எக்ஸாம் இன்னொரு அட்டெம்ப்ட் பண்ணீங்கன்னா ஜெயிச்சிருவீங்க. நினைத்துப் பார்க்க முடியாத பெரும் சாதனைகளை, பெரும் நன்மைகளை, பெரும் மலர்ச்சிகளை, இந்த நுட்பம் அளிக்கும். நல்லா புரிஞ்சுக்கோங்க.

பொய் சொல்ல மாட்டேன் அப்படிங்கிறது மட்டும் இல்லாம, உங்கள் நேரத்தை வீணடிக்கின்ற எந்த செயலையும் செய்ய மாட்டேன். எந்த செயலையும் செய்யச் சொல்ல மாட்டேன்.

காரண சரீரம், காரண சரீரம்தான் உங்க ஆழ்ந்த உறக்கத்துல நீங்க அனுபூதியா உணர்ற சரீரம் காரண சரீரம்தான். இந்த காரண சரீரம் சொல்ற அந்த ஆழ்ந்த சித்தம் அதுதான் அந்த அகம் சுபாவத்துக்குள்ள நீங்க முழுகுற பிரிட்ஜ்."

அகம் சுபாவத்துக்குள்ள முழுகுற அந்த பிரிட்ஜ் (Bridge) ஆன காரண சரீரம் தான் உங்க எதிர்காலத்தை உருவாக்குது. அதுக்கு ஆனா எதிர்காலத்திலே சிந்திக்கத் தெரியாது. ஏற்கனவே நடந்து விட்டது மட்டும்தான் அதுக்குத் தெரியும். அதனால, அந்த நடந்து விட்டதைப் போய் மாற்றி அமைத்தீர்களானால், அதை எதிர்காலமாக அது நடத்திக் காட்டிவிடும்.

இது கிடைக்கணும் அப்படின்னு ஏங்குறதுனால கிடைக்காது. கிடைத்துவிட்டது என்று உங்கள் கடந்த காலத்தை நீங்கள் உணர வைப்பதனால், அது நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் நிகழ்ந்துவிடும். இதுதான் கல்பதரு அறிவியல்ங்க. நீங்க அடைய நினைக்கின்ற எதை வேண்டுமானாலும் அடைவதற்கான கல்பதரு அறிவியல்.

மீதி எல்லாமே, இந்த கிரியேட்டிவ் விசுவலைசேஷன் (Creative visualization) எல்லாமே வீண். இந்த வெஸ்டர்ன் மேனிபெஸ்டேஷன் டெக்னிக்ஸ் (Western manifestation techniques), கிரியேட்டிவ் விசுவலைசேஷன், அதாவது சாஸ்திர பத்ததி படி முறையாக வேதாகமம் கற்காமல், இந்த மெக்காலே எஜுகேஷன் (Macaulay education), மேக்ஸ் முல்லேரியன் ட்ரான்ஸ்லேஷன் (Max Müllerian translation) செய்யப்பட்ட ஹிந்து ஸ்கிரிப்ச்சர்ஸ் (Hindu scriptures), இந்த நாலேட்ஜ் சோர்ஸ்ல (Knowledge source) இருந்து கத்துக் கொடுக்கப்படுற எல்லா மேனிபெஸ்டேஷன் சயின்ஸும் (Manifestation science) வேஸ்ட், வேலை செய்யாது. அதைக் கத்துக்குறதுக்கு, பிராக்டிஸ் பண்றதுக்கு நீங்க கொடுக்குற பணம், காலம் எல்லாம் வேஸ்ட். அதுதான் உண்மை.

மொத்தமா இந்த வெஸ்டர்ன் மேனிபெஸ்டேஷன் சயின்ஸே வேற ஒன்னும் இல்லைங்க. நம்முடைய வேத ஆகமங்கள்ல சொல்லப்படுற கல்பதரு அறிவியலை ப்ளேகரைஸ் (Plagiarize) பண்ணி... ஆனா, ப்ளேகரைஸ் பண்றது, வேதாகமங்களை ப்ளேகரைஸ் பண்றது சாதாரண வேலை இல்லை. இந்த வேதாகமங்களை ப்ளேகரைஸ் பண்ண முயற்சி பண்ணி, அதத் திருடும் பொழுது, அதோட ஆழமான, நுட்பமான, அதுல பொதித்து வைக்கப்பட்டிருக்கிற அதி நுட்ப ரகசியங்களை அவங்களால திருட முடியாது, ஒன்னும் பண்ண முடியாது.

உத்தரகோசமங்கை மரகத நடராஜரை பத்தி யாராவது கேள்விப்பட்டிருந்தீங்கன்னா தெரியும். அந்த நடராஜப் பெருமானுடைய திருமேனி அந்த ஆலயத்துக்குள்ளேயே லாக் (Lock) பண்ணப்பட்டிருக்கு. இப்ப அந்த நடராஜப் பெருமானுடைய திருமேனியை யாராவது திருட முயற்சி பண்ணி அசைச்சாங்கன்னா, அந்த கோவிலே அவங்க மேல விழுந்துரும். அந்த கருவறையே அவங்க மேல விழுந்து செத்து போயிடுவாங்க. அசைக்கவே முடியாது. அது மாதிரியான ஒரு இன்டர்லாக்கிங் சிஸ்டம் (Interlocking system) கட்டமைப்பு. அவர வழிபடத்தான் முடியுமே தவிர, அசைச்சு, நகத்தி, திருடி கொண்டுபோகலாம் முடியாது. அதனால தான் இன்னும் இருக்காரு.

அதே மாதிரி, வேதாகமங்களுக்குள்ளே இருக்கின்ற இந்த கல்பதரு அறிவியலான பரம ரகசியம், சாஸ்திர பத்ததியை முறையாக கற்று அதை அனுபூதியாக வாழ்பவர்களுக்கு மட்டும்தான் பிடிபடும். மீதி எல்லா வெஸ்டர்ன் மேனிபெஸ்டேஷன் சயின்ஸ், இந்த ப்ளேகரைஸ் பண்ண, காப்பி அடிக்க முயற்சி பண்ண சகல வெஸ்டர்ன் மேனிபெஸ்டேஷன் சயின்ஸும், இந்த அதி சூட்சும ரகசியத்தை மிஸ் பண்ணிடுறாங்க. ஏன்னா இத கண்டுபிடிக்கவே முடியாது. அவங்க எல்லாம் பியூச்சரை (Future) விசுவலைஸ் பண்ணு, உக்காந்து முட்டி முட்டி முட்டி நீ என்ன வேணா முட்டிக்க, ஒன்னும் பண்ண முடியாது.

கற்பதரு அறிவியலோட பரம ரகசியத்த சொல்றேன் கேட்டுக்கோங்க. நீங்க எவ்வளவு நாள் வரைக்கும் உங்களுடைய காரண சரீரத்திலே 'இல்லாமை' அப்படிங்கற இயக்கத்தோட இருக்கீங்களோ, அது எதிர்காலத்திலும் இல்லாமைங்குற இயக்கத்தைத்தான் வெளிப்படுத்தும். அந்த இல்லாமைங்குற வாழ்க்கையைத்தான் வெளிப்படுத்தும்.

கடந்த காலத்தை போய் அழித்து சரிசெய்து முழுமையாக்கி விட்டீர்களானால், உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கடந்த காலத்திலே செய்து வைத்து விட்டீர்களானால், அதை அடைந்து விட்டதை கடந்த காலத்திலே உணர்ந்து விட்டீர்களானால், அப்படியே அது நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் நிஜமாக வெளிப்பட்டு விடும். ஏய்யா ஒரு நாடு செஞ்சவன்யா நானு... அந்த அறிவியல தாங்கையா சத்தியத்தோடு உங்களுக்கு சொல்லுகின்றேன்.

சந்திக்காததும் இல்லை, சாதிக்காததும் இல்லை அப்படிங்கிற அனுபூதி பலத்தாலே சொல்றேங்கையா... இந்த அறிவியலை மட்டும் செய்யுங்கள். எத்தனை எதிரிகள், எத்தனை தாக்குதல் நடத்தினாலும் இது ஒன்னே ஒன்னு தான் பண்ணுவேன். கடந்த காலத்துல போய் அத டெலீட் (delete) பண்ணிட்டு, அந்த மாதிரி நடக்கவே இல்லைனு, எல்லாம் நல்லபடியாக நடக்கிறதுனு நான் விரும்பியபடி கடந்த காலத்தை மாத்தி வச்சிருவேன், முடிஞ்சு போச்சு.

மறுநாள் காலையில அந்த வேகவேகமா எதிர்த்து ஓடிவந்தவனுக்கே திடீர்னு அந்த எதிர்க்கணும் அப்படிங்கிற சக்தி, ஸ்திரம், தேவை, எண்ணம் அதெல்லாம் கழண்டு போய், இல்லாம போய், அவன் பாட்டுக்கு அவன் வேலைய பாக்க ஆரம்பிச்சுருவான். முடிஞ்சா, "இவரு பெரிய ஆள்தான்பா, எவ்ளோ எதிர்த்தாலும், யார் எதிர்த்தாலும் ஒன்னும் பண்ண முடியலப்பா" அப்படின்னு புகழ்ந்துட்டு போயிருவான்.

அப்பர் பெருமான் இதையே தான் அனுபூதியா காட்டுறாருங்க. உங்களுடைய நிகழ்கால சூழலைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் கடந்த காலத்திற்குள் சென்று அதை மாற்றுவதை மட்டும் பாருங்கள், செய்யுங்கள். அத மாத்திட்டு ஒரு சில நாள்கள் மட்டும் செஞ்சுட்டு உடனே நிகழ்காலம் மாறிடுச்சானு எட்டி பார்க்காதீங்க. அந்த விதை வளர்றதுக்கு ஒரு சில நாளாவது நேரம் குடுங்க. இந்த பதினெட்டு நாள் நோண்டி பாக்காதீங்க விதைய, போட்ட விதை வளர்ந்துருச்சானு.

இந்த மூணு குரங்கு கதைய எப்பவும் நான் சொல்லுவேன் நியாபகம் இருக்கா? மூணு குரங்கு ஒரு மாம்பழத்துக்காக அடிச்சிக்கிச்சு. ஒரு ஞானி சொன்னாரு, "அப்பா கவலைப்படாதீங்க, இந்த மா விதைய ஊன்றுனீங்கன்னா ஒரு பெரிய மரம் வரும், அதுல நிறைய மாம்பழம் வரும், நீங்க எல்லாரும் சாப்டலாம்". மூணு குரங்கும் ஒத்துக்கிச்சு.

பள்ளம் தோண்டினார்கள், விதையை போட்டார்கள், மண் மூடினார்கள். ஒரு குரங்கு தினம் தண்ணி ஊத்துது, இன்னொரு குரங்கு தினம் உரம் போடுது, மூணாவது குரங்கு காவலுக்கு இருக்கு. ஆனாலும் விதை முளைக்கல. ஆறு மாசம் ஆயிருச்சு மரம் முளைக்கல.

உடனே மூணு குரங்கும் அந்த ஞானிகிட்ட போச்சு. "சாமி நீங்க சொன்னபடியே செஞ்சோம் மரம் முளைக்கலயே". அவரு கேட்டாரு, "என்ன பண்ணீங்க?". முதல் குரங்கு சொல்லுச்சு, "நான் ஒரு நாள் விடாம தவறாம தண்ணி ஊத்துறேன்". ரெண்டாவது குரங்கு, "நான் ஒழுங்கா உரம் போடுறேன்". மூணாவது குரங்கு, "நான் தினந்தோறும் கரெக்டா தோண்டி தோண்டி விதை முளைச்சிருச்சா இல்லையானு பாத்துகிட்டே தான் இருக்குறேன்". தினந்தோறும் குரங்கு தோண்டி பாத்தா எப்படி விதை முளைக்கும்?

அதனால இந்த பதினெட்டு நாள் தோண்டி பார்க்காதீங்க.

உங்க வாழ்க்கையில முக்கியமான உறவு, நபர் யாரையாவது இழந்துட்டீங்கன்னா, அது உங்க முட்டாள்தனமா இருக்கலாம் இல்ல ஏதோ ஒரு காரணமா இருக்கலாம், கவலைப்படாதீங்க. இரவு அந்த உறங்கும் பொழுது அகம் பாவத்திலிருந்து நீங்க அகம் சுபாவத்துக்குள்ள போற அந்த காரண சரீர காலத்துல, நீங்க அந்த உங்களுக்கும் அவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது அல்லது பிரிந்தது, சங்கடமானது அதையெல்லாம் அழிச்சுட்டு, உங்களுக்கும் அவருக்கும் நல்ல உறவு இருக்கிற மாதிரியே இருக்குது, நீங்க நல்லா இருக்கீங்க, ரொம்ப ஆனந்தமா இருக்கீங்க, இன்னமும் இனிமையா ஒன்றோடு ஒன்றாக இனிமையோடு ஒருமையிலே ஒன்றாக இருக்கின்றீர்கள் அப்படிங்கறத கடந்த காலத்துல எழுதுங்க. நிம்மதியா அந்த உணர்வோடியேயே அகம் சுபாவத்துக்குள்ள முழுகிடுங்க.

சில நாட்கள் மட்டும் இதை செய்யுங்கய்யா. திடீர்னு பட்டுப்போனதாக நீங்கள் நினைத்த அந்த உறவு துளிர்த்து வருவதைப் பார்ப்பீர்கள். திடீர்னு அந்த உறவு கிட்ட இருந்து ஒரு போன் கால் வரும், ஈமெயில் வரும், மெசேஜ் வரும், பிரெண்ட் ரெக்வஸ்ட் வரும், ஏதோ ஒன்னு உறவு துளிர்க்க துவங்கும். புது வாசல் திறக்க துவங்கும். இப்ப நிகழ்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். பாவ (Bhaava) பலத்தினால் எதையும் மாற்ற முடியும்.

அப்பர் பெருமான் வாழ்க்கையை பாருங்கய்யா மகேந்திர பல்லவன் அவரை சுண்ணாம்பு காளவாயில் போட்டுடறான். சுண்ணாம்பு காளவாய்னா என்ன? ஐம்புலன்கள் வழியாகவும் சூட்டை உள்ளே திணித்து ஒருவனை அழிக்கின்ற முறைதான் சுண்ணாம்பு காளவாய்ங்கய்யா.

உடம்புல நெருப்பு வச்சுட்டா கூட அதிகபட்சமா அரை மணி நேரத்துல எல்லாம் முடிஞ்சு போயிரும். எறிஞ்சு செத்துப் போயிருவாங்க. அரை மணி நேரம் ஜாஸ்தி, ரொம்ப அதிகம். ஆனா அந்த சுண்ணாம்பு காளவாய் இருக்கு பாருங்க, பெரும் கொடுமை. பெரும் கொடுமை மட்டும் இல்ல, ஐம்புலன்கள் வழியாகவும் சூட்டை உள்ள அனுப்புறது. கண் வழியா போகும், காது வழியா போகும், மூக்கு வழியா போகும், வாய் வழியா போகும், தோல் ஒவ்வொரு மயிர் கால் வழியா போகும், முழு தோல் வழியா போகும்.

அந்த சுண்ணாம்பு காளவாயில உட்கார்ந்துகிட்டு, என்ன பெர்சனாலிட்டீங்கய்யா, என்ன பவர்ஃபுல்லான... என்ன மாதிரியான உயிர்மை, ஆண்மை! ஞான புருஷன்...

"மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நிழலே..."

இந்தப் பாட்டை கொஞ்சம் நல்லா புரிஞ்சுக்கோங்க. அதாவது, ஐம்புலன்களும் எரித்து கொந்தளிக்க வைக்கப்பட்டு, ஐம்புலன்களும் மனத்தை வறுத்த மனம் கொந்தளித்து, நரகத்தை நிஜமாக காட்டுகின்ற அந்தச் சூழலிலே... அவர் பாட்டை பாருங்க, "மாசில் வீணையும்...".

காது, மாசில் வீணை கேட்கும் பொழுது ஏற்படுற பாவத்தில இருக்கு. மாசில் வீணை கேட்கும் பொழுது காதுக்கு எவ்வளவு இனிமையா இருக்குமோ, அந்த மாதிரி காது இருக்கு.

"மாலை மதியம்..." மாலை நேரத்து மதியம் என்ன ரம்மியமான காட்சி! அதைப் பார்க்கும்போது கண்ணுக்கு இருக்கிற சுகந்த உணர்வுல கண் இருக்கு.

"வீசு தென்றல்..." அந்த தென்றல் வீசும்போது தோல் முழுவதும், ஸ்கின் (Skin) முழுவதும், உடல் முழுவதும் எப்படி ஃபீல் (Feel) பண்ணுதோ, எப்படி உணருதோ அந்த உணர்வுல ஸ்கின் இருக்கு.

"வீங்கிள வேனில்..." அந்த வீங்கு இளவேனில் காலத்துல மனம் எப்படி வசந்தமா இருக்கோ, அது மாதிரி மனம் அந்த வசந்தத்துல இருக்காம்.

"மூசு வண்டறை பொய்கை..." அதாவது தேனைக் குடித்த வண்டு எவ்வாறு ஆனந்தமாக சத்தமிடுகிறதோ, அந்த மாதிரி அந்த நாக்கு தேன் குடித்துவிட்டு 'ஊ...' அப்படின்ற வண்டு அறை தான்... அந்த மாதிரி உணர்வுல நாக்கு இருக்காம். அந்த வண்டறை பொய்கை... அந்த பொய்கை பக்கத்துல இருந்தா எப்படி எல்லா புலன்களும் இனிமையோடு இருக்குதோ, மனமும் இனிமையோடு இருக்குதோ... அந்த பொய்கையை காண்பதனால் கண்ணும்...

இந்த ஐம்புலன்களும் இது மாதிரியான ஆனந்தத்துல, சுகந்தத்துல, இனிமையில இருக்குன்ற பாவத்தை உள்ள வெச்சு, "அதுதான் என் ஈசன் எந்தை இணையடி நிழல்" - அவருடைய பதம், அதில் நான் இருக்கின்றேன்ற பாவத்தை அவர் ஹோல்ட் (Hold) பண்றாரு. அந்த பாவத்து பலத்தில அவர் இருக்காரு.

மூன்று நாட்கள் கழிந்தும் அப்பர் பெருமான் இறக்கவில்லை என்பது மட்டுமல்லாது, அந்த மகேந்திரவர்ம பல்லவன் அப்பர் பெருமானுக்கு சீடனாக, அடியவராக மாறினான்.

தான் அழியாது தன்னுடைய சுற்றியிருக்கும் சூழலையே, ஒரு நாட்டோட ஈகோ சிஸ்டத்தையே (Eco-system) தன்னுடைய பாவ பலத்தாலே மாற்றுகின்றார். அதுவும் அந்த பாவம் எல்லாம் பார்த்தீங்கன்னாங்கய்யா, அந்த ஐம்புலன்களோட சுகத்தை சொல்றது கூட அருமையான சாய்ஸ் (Choice) எடுத்து சொல்றாரு.

"மாசில் வீணை... வீணை எவ்வளவு நேரம் அந்த இசையை கேட்டாலும் காதுக்கு துக்கம் கொடுக்காத, மந்தமாக்காத சத்துவ குண இசை. இசைகள்லயே இந்த ட்ரம்ஸ் மாதிரி டமால் டமால் டமால்ன்றதெல்லாம் தமோகுண இசை. முதல்ல கேட்கும்போது கொஞ்சம் ருசிக்கும் அப்புறமா காது வலிக்கும்.

புலனை பலவீனப்படுத்தாது பலப்படுத்துகின்ற, சுகமாகவும் இருக்கின்ற சுகங்களுக்கு 'சத்துவ குண சுகங்கள்'னு பேரு. புலனை பலமும் படுத்தாது பலவீனமும் படுத்தாது ஆனா ருசிக்கும் அப்படிங்கறது 'ரஜோகுண சுகங்கள்'. புலனை ருசிக்கும் ஆனால் பலவீனப்படுத்தும்ங்கறது 'தமோகுண சுகங்கள்'.

இங்க அப்பர் பெருமான் செலக்ட் பண்ணியிருக்கிற எல்லாமே பாருங்க... 'மாசில் வீணை'. காது சுகத்திலே கூட புலனை பலவீனப்படுத்தாத, பலப்படுத்தக்கூடிய சத்துவ சுகம்.

அடுத்து 'மாலை மதியம்'. மாலை மதியம் அது மாதிரி அந்த மாலை நேரத்து சந்திரனின் ஒளி கண்ணை பலவீனப்படுத்தாது மட்டுமல்லாது பலப்படுத்தும் சுகம். சுகம், பலமும் படுத்தும் சுகம்.

அதே மாதிரி 'வீசு தென்றல்'. உடலை, புத்துணர்ச்சியை தருகின்ற சுகம்.

'வீங்கிள வேனில்'. மொத்த மனதையும், ஐம்புலன்கள்ல இருந்து செய்திகள் சுகங்களை பெற்று அத பிராசஸ் (process) பண்ற மொத்த மனதையும் புத்துணர்வு தந்து பலப்படுத்துகின்ற சுகம், வீங்கு இளவேனில் காலம்.

'மூசு வண்டறை பொய்கை'. இந்த தேன்... நாக்குக்கு பலம் தந்து சுவையும் தருகின்ற சத்துவ சுகம். மத்த எந்த இனிப்பு வேண்டுமானாலும், சில இனிப்புகள் கொஞ்சம் சாப்பிட்டவுடனே திகட்டைக் கொடுத்தாலும் நாக்க பலவீனப்படுத்திவிடும், அந்த சுவை உணர்வை பலவீனப்படுத்திவிடும், உடலை பலவீனப்படுத்திவிடும். சில சுவைகள் பலமும் கொடுக்காது பலவீனமும் படுத்தாது சுவையா இருக்கும். ஆனா தேன் சுவையாகவும் இருந்து நாக்கையும், சுவைப்பதையும், உடலையும் பலப்படுத்தக்கூடியது. அதனால தேன் உண்ட வண்டு அறைவது போலே 'மூசு வண்டறை பொய்கையும்'... அது மாதிரி நாக்கு உணருகின்றது.

அந்த பொய்கையின் குளிர்ச்சியை போலே மொத்தமும் உணருகின்றது. ஐம்புலன்களுமே உச்ச சத்துவ சுக போதத்திலே இருக்கின்ற பாவத்தை தாங்குகின்றார் அப்பர் பெருமான். மூன்று நாட்களாகியும் உடலோ மனமோ அழியவும் இல்லை. சுண்ணாம்புக் காளவாயில் இருந்து வெளிவந்த பின் மன்னனும் அவன் ஆளும் நாடும் இவர் அடியாராய் மாறிப்போனது."

. பாவ பலம் ங்கய்யா...

"சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே"

அந்த மகேந்திர வர்மனே... கல்லில் பூட்டி கடலில் இட்டான். அந்த பாவம் பாருங்க... 'கற்றுணைப் பூட்டிக் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே' அந்த பாவத்துல இருக்க கல் தெப்பமாய் மிதந்து கரையேறுகின்றார்.

நான் உங்களை எல்லாம் உடனே, ஆஹா கல்லை கட்டி கடல்ல போடுறோம், அப்படியே உன் பாவத்தால கடல்ல இருந்து கல்லு மிதந்து கடல்ல இருந்து வெளில வாங்கன்னுலாம் சொல்லலைங்கய்யா.

உங்க டிப்ரஷன் (Depression) என்ற கல்லுல உங்களை நீங்களே பூட்டிக்கிட்டு, கடந்த காலத்தில் நீங்கள் நடந்ததாகக் கருதுகின்ற கொடுமைகள், நடந்ததாக ஆழமாக நம்புகின்ற பிரச்சனைகள், இதனால ஏற்படுற டிப்ரஷன்ன்ற கல்லுல பூட்டிக்கிட்டு மொத்தமா இந்த சம்சார கடல்ல, துக்கக் கடல்ல விழுந்து கெடக்குறீங்கல்ல... அதுல இருந்து வெளில வாங்கன்னு தாங்கய்யா சொல்றேன்.

இந்த ஒரு ஞான நுட்பத்தை இன்னைக்கு செஞ்சிட்டு வாங்க. இதுல இன்னும் ஆழமான சில அதிரகசியங்கள் இருக்கு. அத நீங்க செஞ்சப் பிறகு வருகின்ற கேள்விகளுக்கு நான் விடை கொடுத்தா தான், அந்த அடுத்த நிலை சத்தியம் புரியும். இதை இன்னைக்கு செஞ்சிட்டு நாளைக்கு வாங்க. சித்தியாகும்.

ஆசியோடு அனுப்புகின்றேன். தீக்ஷையோடும், சக்தி பாதத்தோடும், சக்தினி பாதத்தோடும் அனுப்புகின்றேன். சிரத்தையோடு தைரியமாகச் செய்யுங்கள், நான் பார்த்துக் கொள்ளுகின்றேன்.

(ஆங்கிலத்தில் பேசுவது) என் Kailasa. Guinea-Bissau Blessings for all of you. And I also accepted the Subramanya homa all of you offered. My blessings.

இந்த ஞான ரசவாத தியான நுட்பத்தை செய்துவிட்டு, நாளை மீண்டும் வாருங்கள். தொடர்ந்து நித்ய நேரலையில், தினந்தோறும் இந்த திருவிளையாடல் சத்சங்கத்திற்காக இணைந்திருங்கள்.

எல்லோரும் நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, நித்யானந்தத்தில் கரைந்து, நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன்.

ஆனந்தமாக இருங்கள்.

Blessings.

Details

The talk

Date
16 April 2026
Language
English

The recording

Recording
No recording linked to this transcript

The transcript

Status
Live notes
Time-synced
Not time-synced
Length
6,152 words · 34 min read
Topics
None recorded