KATHAVAI THIRA KATRU VARATTUM –
PARAMAADVAITAM (KTKV) - DAY 2
ஓம்
நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம்
நித்யானந்தேஶ்வரி பரமஶிவ ஶக்தி மத்யமாம்
அஸ்மதாச்சார்ய பர்யந்தாம்
வந்தே குருபரம்பராம்
உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.
உலகம் முழுவதிலும் இதயத்தாலும் இணையத்தாலும் இணைந்திருக்கும் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள்,
பார்வையாளர்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.
இன்று கைலாஸ நித்யானந்த ஜெயந்தி மஹோத்ஸவம், நித்யானந்தோத்ஸவம், ஜெயந்தி
ப்ரஹ்மோத்ஸவத்தின் இரண்டாவது நாள், பூர்வாங்கப் பூஜைகள் நிகழ்கின்றன.
உலகம் முழுவதிலும் இருக்கும் கைலாஸங்களிலும், கைலாஸா திருவண்ணாமலை, கைலாஸா
லாஸ் ஏஞ்சலிஸ் மற்றும் எல்லா கைலாஸங்களிலும், இந்த ப்ரஹ்மோத்ஸவத்திற்காக, ஸத்ஸங்கத்திற்காக
ஒன்றுகூடியிருக்கும் அன்பர்களையும், பக்தர்களையும், சீடர்களையும் வணங்கி வரவேற்கின்றேன்.
மராஸ் டிவி மலேஷியா, வாழ்ந்துதான் பார்க்கலாம் வாடா, ராணி ஆன்லைன், பிரபாகர் கலைக்கூடம்,
இளைய பாரதம் மற்றும் பல்வேறு இணைய தொலைக்காட்சிகள் மூலமாகவும் மற்றும் எல்லா
கைலாஸங்களின் எல்லா தொலைக்காட்சிகள் வழியாகவும் இணைந்திருக்கும் அன்பர்கள், பக்தர்கள்,
சீடர்கள் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.
கதவைத் திற காற்று வரட்டும் - 28 நாள் தொடர் த்யான ஸத்ஸங்க ஜ்ஞாந ரஸவாத நிகழ்வில், இன்று இன்று
இரண்டாம் நாள்.
(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 1
பல அன்பர்கள் ஆழமான தேடுதல் உடைய, நேர்மையான, ஶ்ரத்தையான தேடுதல் உடைய பல அன்பர்கள்
உங்களுடைய கேள்விகளை அனுப்பி இருக்கின்றீர்கள். தேடுதலோடு கேள்விகளை அனுப்புகின்ற
எல்லோருடைய கேள்விகளுக்கும் இந்த 28 நாட்களில் பதிலளிக்கின்றேன்.
அதுமட்டுமல்லாமல், ஏறத்தாழ 10,000 Social Media Platforms-ல் இந்த ஸத்ஸங்கங்கள் நேரலையிலோ அல்லது
அதற்குப் பிறகு காணொளியாகவோ வெளியிடப்படுகின்றன.
அதில் போடப்படுகின்ற comments, மற்றும் எல்லா சேனல், எல்லா platform, எல்லா Instagram, எல்லா face book
pages என எங்கெங்கெல்லாம் இந்த ஸத்ஸங்கங்கள் வெளியிடப்படுகின்றதோ, அங்கெல்லாம் நீங்கள்
போடுகின்ற எல்லா command-ஐயும், AI மூலமாக scrap செய்து, sentiment analysis செய்து, உங்களுடைய
comments-னுடைய சாரங்களைத் தொகுத்து, அவைகளையும் கேள்வியாகக் கொண்டு அவைகளுக்கும்
பதிலளிக்கின்றேன்.
இன்று முதல் கேள்வி, பலபேர் நேற்று ஸத்ஸங்கத்திற்குப் பிறகு எழுதியிருக்கின்ற கேள்வி,
''ஸ்வாமி, நீங்கள் சொல்கின்ற நிலையைப் பற்றி புரிகின்றது. ஆனால் நான் அதை அடையவில்லையே
என்கின்ற ஏக்கம்தான் வருகின்றது. எப்படி அதை அடைவது? நான் ஜ்ஞாநமடையவில்லையே? அந்த
முழுமையான, சுத்தமான pure witnessing, ஸாக்ஷியாக இருக்கின்ற சுத்த ஸாக்ஷி பாவம், பரம ஸாக்ஷி பாவம்,
பரம ஸாக்ஷித்தன்மை எனக்குள் மலரவில்லையே? அதை எப்படி மலரச் செய்வது?'' என்பதாகும்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். இந்த ஒரு ஸத்யத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.
உங்களுக்குள் இருந்து, ''அந்த பரமானுபூதியை, பரம ஸாக்ஷி நிலையை நீங்கள் உணரவில்லை''
என்று யார் சொல்கிறார்கள் என்று ஆழ்ந்து பாருங்கள்.
எங்கிருந்து அந்த எண்ணம் எழுகின்றது என்று ஆழ்ந்து பாருங்கள்.
எங்கிருந்து சுய-சந்தேகங்களுக்கான, அதாவது ''நீங்கள் அதை அடையவில்லை.
அந்த அனுபூதி உங்களுடையது இல்லை. நீங்கள் அந்த நிலையில் இப்பொழுது இருக்கவில்லை.
அது நீங்கள் அல்ல'' என்று உங்களுக்குள் சுய-சந்தேகங்களை அடுக்குகின்ற 'அது' யார்? 'அது' எது?
சுய-சந்தேகத்தை, சுய-மறுப்பை, சுய-வெறுப்பை அடுக்குகின்றது யார்?
''எனக்கு இந்த அனுபூதி நடக்கலையே?
எனக்கெல்லாம் நடக்குமா?
இது எனக்கெல்லாம் சாத்தியமா?
எனக்கு உங்களைப் பற்றி தெரியாது சாமி. என்னைப் பற்றி எனக்கு தெரியாது சாமி. இதெல்லாம் எங்கு
சாமி முடியப்போகின்றது? இதெல்லாம் எங்கு சாமி நடக்கப் போகின்றது?
என்னைப் பற்றி உங்களுக்கு தெரியாது சாமி. எனக்கெல்லாம் போய் இந்த அனுபூதி வருமா?
அதுக்கெல்லாம் எவ்வளவு புண்ணியம் செய்திருக்கவேண்டும், எவ்வளவு தவம் செய்திருக்க வேண்டும்?''
என்ற சுய-சந்தேகம், சுய-வெறுப்பு, சுய-மறுப்பு...
இவை 'எங்கிருந்து' உருவாகின்றன?
'எங்கிருந்து' அவை வெளிப்படுகின்றன?' என்ற அந்த மூலத்தை ஆழ்ந்து பாருங்கள்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.
உங்களுக்குள் இருக்கும் எந்த எண்ணமுமே நீங்கள் உருவாக்கியது அல்ல.
இதுதான் ஐயா நான் உங்களுக்குச் சொல்கின்ற மிகப்பெரிய நல்ல செய்தி.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் மனம் என்றால் என்னவென்று புரிந்துகொள்ளுங்கள்.
வேறு ஒன்றுமே இல்லை ஐயா, சிறு வயதிலிருந்து, உங்களைச் சுற்றியிருப்பவர்கள் எல்லோரும்
உங்களைப் பார்த்து எறிந்த வார்த்தைகள்.
அது மொத்தமாக உள்ளே சேர்ந்துகொண்டு. உங்களுடையக் கட்டுப்பாட்டில் இல்லாமல்,
அதுவாகத் தானே வருகிறது. சில எண்ணங்கள் ஆழமாக வெளியில் வரும்.
(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 2
ஒரு பெரிய நீர் பரப்பிலே, ஏரியிலே அல்லது கடலிலே வருகின்ற அலைபோல,
அந்த ecosystem-த்தில் தானாக நடந்துகொண்டிருக்கும்.
ஏன் வருகின்றது?
எதற்காக வருகின்றது?
எந்த சூழ்நிலையில் வருகின்றது?
வெளியில் நடக்கின்ற நிகழ்வுகளுக்கு response ஆக வருகிறதா?
எந்த லாஜிக்கும் இருக்காது.
சற்று ஆழ்ந்துபாருங்கள். உங்களில் பெரும்பாலானவர்கள், உங்கள் மொத்த வாழ்க்கையையுமே ஐயா,
reaction mode-லேயே முடித்துவிடுகின்றீர்கள்.
உங்களுடைய மனத்தை மூன்று பாகமாகப் பிரிக்கலாம்.
முதலாவது: நீங்கள் conscious-ஆக சிந்தித்து, நீங்கள்தான் உள்ளே இருந்து command-ஐ generate பண்ணுவீர்கள்,
நீங்கள்தான் அந்த command-ஐ கேட்பீர்கள் - அது ஒரு பாகம்.
அது எப்பொழுதென்றால், conscious-ஆக உட்கார்ந்து த்யானம் செய்யும்பொழுது அல்லது conscious- ஆக
சிந்திக்கும்பொழுது, conscious- ஆக உங்களுடைய வாழ்க்கையை வடிவமைக்கும்பொழுது நடக்கிறது.
இரண்டாவது: யாரோ உள்ளுக்குள் இருந்து பேசிக்கொண்டிருப்பார்கள், ஆனால் கேட்பதுமட்டும்தான்
நீங்கள். Unconscious- ஆக ஒரு thought வரும்.. 'ஒரு கார் வாங்கினா என்ன? இது இருந்தால் நல்லா இருக்குமே.
பக்கத்து வீட்டுக்காரன் வச்சிருக்கான் பாரு, எதிர் வீட்டுக்காரன் வச்சிருக்கான் பாரு, மாமா ஒருத்தர்
வாங்கிட்டார் பாரு. மச்சான் பிளாட் வாங்கிட்டான் பாரு, நாமும் வாங்க வேண்டும். அப்பதான் மரியாதை
இருக்கும்'' என்று வரும். அதற்கும் உங்களுக்குள்ளேயே, இன்னொரு thought வரும்... ''அதெல்லாம்
வாங்கினால் அவ்வளவுதான், life நாசமாகப் போய்விடும். அதற்குப் பிறகு எவன் கடனுக்கு வட்டி
கட்டிக்கொண்டிருப்பது? கடனில் மூழ்கி, இருப்பதும் சுத்தமாக காணாமல் போய்விடும்.
உங்களுக்குள்ளேயே அதுவாக தானாகவே fight பண்ணும். இதில் நீங்கள் conscious-ஆக எந்த involvement-மே
செய்யமாட்டீர்கள்.
ஆசையோ, அதற்கு எதிராக நடக்கும் போராட்டங்களோ, பயங்களோ, இதில் எதுவுமே நீங்கள் involve ஆக
மாட்டீர்கள். Command உள்ளிருந்து generate ஆகும், கேட்பதை மட்டும்தான் நீங்கள்
செய்துகொண்டிருப்பீர்கள். Reactionary part of life. இது இரண்டாவது.
மூன்றாவது: Command generate ஆவதும் உங்களுக்குத் தெரியாது, கேட்பதும் நீங்கள் கிடையாது. அது அந்த
deep sleep அல்லது dream state. அதில் நடக்கின்ற thinking process. Command generate பண்ணுவதும் நீங்கள்
கிடையாது, கேட்பதும் நீங்கள் கிடையாது.
இந்த மூன்றாவது நிலை.
முதல் நிலை: நீங்களே command-ஐ generate செய்து, நீங்களே கேட்பீர்கள். அதற்கு ஸத்வ நிலை என்று பெயர்.
இரண்டாவது நிலை: நீங்கள் generate பண்ணமாட்டீர்கள், ஆனால் உள்ளுக்குள் யாரோ generate
செய்துகொண்டிருப்பார்கள். அது automated, auto pilot mode-ல் ஓடிக்கொண்டிருக்கும்.
கேட்பது மட்டும்தான் நீங்கள். கேட்டுக்கொள்கின்ற அடிமைதான் நீங்கள்.
ஆனால், பேசிக்கொண்டிருப்பது, command-ஐ generate செய்துகொண்டிருப்பது வேறு யாரோ. இதுதான் ரஜோ
நிலை.
மூன்றாவது நிலை: Command- ஐ generate செய்வதும் நீங்கள் அல்ல, கேட்பதும் நீங்கள் அல்ல, அது தமோ
நிலை.
(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 3
99.999% மக்கள் தங்களுடைய வாழ்க்கையை, 99.99% மணி நேரத்தை ரஜோ நிலையில்தான்
கழிக்கின்றார்கள்.
அப்படியென்றால், ஏன் command generate ஆகின்றது?
யார் generate செய்கின்றார்கள் என்று உங்களுக்குத் தெரியவே தெரியாது.
யாரோ generate செய்கின்றார்கள். நீங்கள் கேட்டுக்கொள்கின்றீர்கள். அவ்வளவுதான்.
பல நேரத்தில், 'வெட்டுடா அவனை, பரவாயில்லை வருவதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.
என்னடா ஆகிவிடப்போகிறது?' என்று command generate ஆகும்.
இது என்ன?
எங்கேயோ ஏதோ ஒரு சினிமாவிலோ அல்லது வேறு யாரோ ஒருவரின் வாழ்வின் நிகழ்விலோ அல்லது
வேறு யாரோ உங்களை உசுப்பேற்றி விடுவதற்காக உங்கள் தலையில் போட்டது.
Command generate ஆகும். நீங்கள் அதை obedient-ஆக கேட்டுக்கொண்டு போய் வெட்டிவிடுவீர்கள்.
ஆனால் அதற்குப் பிறகு வருகின்ற side effect... Police, court, case, jail அதை உங்களால் handle பண்ண முடியாது.
உள்ளிருந்து command என்ன generate ஆகும்?
'வருவதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்' என்று.
ஆனால் வரும்போது face பண்ண முடியுமா?
முடியாது.
உங்கள் வாழ்க்கையில், almost பெரும்பாலும் 99.99% மக்கள், 99.9% மணி நேரம் இந்த மாதிரி command generate
செய்வது நீங்கள் இல்லாமல், அது தானாக generate ஆகிறது. கேட்டுக்கொள்வதை மட்டும்தான் நீங்கள்
செய்கின்றீர்கள்.
இதில் கொடுமை என்னவென்றால், அந்த மாதிரி generate ஆகின்ற command... அதனால்
சிலநேரத்தில் நீங்கள் பத்து ஆண்டுகள், இருபது ஆண்டுகள் கட்டி வைத்த வாழ்க்கையையே ஒரு
வினாடியில் சீரழித்துவிடுவீர்கள். தூக்கிப் போட்டுவிடுவீர்கள். உடைத்து விட்டுவிடுவீர்கள்.
அழித்து விடுவீர்கள்.
பல ஆண்டுகள் கட்டி வைத்த உறவுகள்,
பல ஆண்டுகள் கட்டி வைத்த வியாபாரம்,
பல ஆண்டுகள் கட்டி வைத்த பல நல்ல விஷயங்களை இந்த ஒரு single command-னால், அந்த command யார்
கொடுக்கின்றார்கள் என்று தெரியாத, அதுபோன்று வருகின்ற command-ஆல் அழித்துவிடுவீர்கள்.
ஆழ்ந்து பாருங்கள், உங்களுக்குள் இந்த மாதிரி தொடர்ந்து யார் இந்த commands-ஐ generate செய்வது?
எங்கிருந்து command வருகிறது? என்று பாருங்கள்.
அதேபோல, react பண்ணுவதை நிறுத்துங்கள்.
அதாவது வாழ்க்கையில் ஏதாவது ஒரு உயர்நிலை வேண்டும் என்று தேடுகின்ற எல்லோரும்...
உடல் நலம் வேண்டும் என்று நினைக்கின்றீர்களா?
மன நலம் வேண்டும் என்று நினைக்கின்றீர்களா?
பொருளாதார வளம் வேண்டும் என்று நினைக்கின்றீர்களா?
ஆன்ம அனுபூதி வேண்டும் என்று நினைக்கின்றீர்களா?
என்ன நினைத்தாலும், இந்த ஒரே ஒரு விஷயத்தைச் செய்யுங்கள்.
இந்த 28 நாளும், reaction பண்ணுவதையே நிறுத்திவிடுங்கள்.
யார் உள்ளுக்குள்ளிருந்து command generate பண்ணிணாலும், என்ன மாதிரி command generate ஆனாலும்,
ஒன்றுமே react பண்ணாமல், silent ஆக, 'எங்கிருந்து அந்த command generate ஆகிறது?' என்று மட்டும்
பாருங்கள். ஸாக்ஷியாகப் பாருங்கள்.
(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 4
நீங்கள் கேட்கலாம், ''அப்பொழுது நான் எப்படி சாமி ஆபீஸ் பேவது, வேலை செய்வது?'' என்று.
அதெல்லாம் தானாக நடக்கும்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களுடைய constant, unending distraction, diversion, agitation - இதெல்லாம்
செய்கின்ற அந்த personality, அந்த identity, அந்த மனம் இல்லாமலேயே, உங்களுடைய வாழ்க்கையை நடத்த
முடியும்.
சிறு பழக்கம் தான்.
நம் தமிழில் 'செந்தமிழும் நாப்பழக்கம்' என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.
அது மாதிரிதான்,
சித்திரமும் கைப்பழக்கம்,
செந்தமிழும் நாப்பழக்கம்,
ஸமாதி மனப்பழக்கம்.... அவ்வளவுதான்.
சித்திரமும் கைப்பழக்கம்,
செந்தமிழும் நாப்பழக்கம்,
பரமானுபூதி மனப்பழக்கம்.
மிக எளிமையாகச் சொல்கின்றேன், வெறும் இந்த 28 நாள் மட்டும், react பண்ணுவதை
விட்டுட்டு, உள்ளுக்குள் என்ன நடக்கின்றதோ, அதை அப்படியே ஸாக்ஷியாகப் பாருங்கள்.
'உங்களுக்கு அனுபூதி இல்லை, இதெல்லாம் பண்ணா வந்துவிடுமா?
அவரே எங்கேயோ ஒரு நாட்டில் கைலாஸத்தில் உட்கார்ந்துகொண்டு எதையோ பேசிக்கொண்டிருக்கிறார்.
அதையெல்லாம் கேட்டு நீ செய்துகொண்டிருக்கிறாயே?' என்று மனம் எல்லா சந்தேகங்களையும் கிளப்பும்.
சுய-சந்தேகம், குருவின் மீது சந்தேகம்,
சுய-மறுப்பு, குருவை மறுத்தல்,
சுய-வெறுப்பு, குருவை வெறுத்தல் அல்லது வாழ்க்கையில் எல்லாவற்றின்மீதும் வெறுப்பு,
எல்லாவற்றின்மீதும் சந்தேகம், எல்லாவற்றின் மீதும் frustration என இப்படி எந்த command உள்ளிருந்து
generate ஆனாலும், ஸாக்ஷியாகப் பாருங்கள்.
சித்திரமும் கைப்பழக்கம்,
செந்தமிழும் நாப்பழக்கம்,
ஸமாதி யது மனப்பழக்கம்.
ஸாக்ஷியாக நின்று பார்க்கத் துவங்கும் இந்த மனம், உங்களை மனங்கடந்த நிலைக்குள் ஆழ்த்திவிடும்.
ஒரு சில ஆழமான ரகசியங்கள் சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள்.
இவை பரம ரகசியங்கள்..
உங்கள் வாழ்க்கையில் வருகின்ற எல்லா பயமுமே ஐயா, misunderstood excitement.
அதாவது வரம்பில்லாத உற்சாகம், கங்கை காட்டாற்று வெள்ளமாகப் பொங்கி வரும்போது,
அதைப் பார்த்து பயப்படுகின்ற மனிதன், ஒரு சின்ன அணையை கட்டிக்கொண்டு, அதற்குள் தண்ணியை
வைத்துக்கொண்டு, அதற்குள்ளேயே தன்னுடைய வாழ்க்கையை நடத்திக்கொண்டு,
அப்படியே வாழ்ந்துவிடலாம், safe -ஆக இருக்கும் என்று விளையாட ஆரம்பிக்கின்றான்.
அதே மாதிரிதான் ஐயா உங்கள் வாழ்க்கை.
பொங்கிப் பெருகும் எல்லையில்லா உற்சாகம், எல்லையில்லாத சாத்தியக்கூறுகள், possibility.
அதைப்பார்த்து பயந்து, உங்களுக்கு நீங்களே ஒரு விதமான, 'என்னால் இதுதான் முடியும், அதுதான் முடியும்,
இதை முதலில் நான் ஆரம்பித்து, இதை முதலில் நான் செய்தேன் என்றால்தான், நான் எதிலும் உருப்படியாக
இருப்பேன்' என்று உங்களுக்கு நீங்களே, உங்கள் excitement-ஐ misunderstand செய்துகொண்டு, ஏதோ
(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 5
உங்களுக்குப் பாதுகாப்பு போட்டுக்கொள்ள வேண்டும் என்கின்ற மாதிரி, உருவாக்கிக்கொள்கின்ற
உணர்ச்சிதான் ஐயா பயம்.
Fear is nothing but, misunderstood excitement..
அளவில்லாத, அளப்பரிய உற்சாகம், சாத்தியத்தின் ஸத்யத்தைக் கண்முன் பார்க்கும்பொழுது,
அது மிகவும் பெரியதாகத் தெரிவதனால், 'நம்மளால இவ்வளோ பெரிய கங்கையை handle பண்ண
முடியாதுப்பா' என்று நீங்களே ஒரு கற்பனையை செய்துகொண்டு, நீங்களே ஒரு சின்ன அணை மாதிரி
கட்டிக்கொண்டு, ஒரு சின்ன நீச்சல் குளம் அளவிற்கு வைத்துக்கொண்டு, அதில்
விளையாடிக்கொண்டிருப்பது.
குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவது, கிணற்றுத் தவளை என்று சொல்வோம். கிணற்றுத் தவளை எவ்வளவு
தூரம், எத்தனை முறை குதித்தாலும், தாவினாலும், கிணற்றுக்குள்ளேயே கிடந்து இறந்து போகும். அதனால்,
இந்த பயக்கட்டுக்குள் உங்களை உருவாக்கிக்கொண்டு,
நீங்கள் எவ்வளவு பெரிய சாதனை செய்திருந்தாலும், 'ஹே... ஒரு கப் டீக்குள் அடிக்கின்ற புயல் தாண்டா,
போடா போடா!'. ஒரு டீ கப்பிற்குள் அடிக்கின்ற புயலால் என்ன நடந்துவிட முடியும்?
அதுபோன்ற பயத்தால் உங்களைக் கட்டிக்கொண்டு, நீங்கள் எவ்வளவு பெரிய சாதனை செய்து விட்டதாக
உங்களை நீங்களே மெச்சிக்கொண்டாலும், அது வெறும் உங்கள் சாத்தியத்தில் ஒரு சதவிகிதம் கூட
இல்லை.
உங்களுடைய கடந்தக்கால வலிகளும், தோல்விகளும், 'தோல்விகள்' என்று நீங்கள் நினைக்கின்ற
நிகழ்வுகளும், அதுபோன்றதுதான்.
ஐயா கொஞ்சம் ஆழ்ந்து யோசியுங்கள்.
ஆழ்ந்து பார்த்தீர்களானால், உங்கள் கடந்த காலத்தைப் பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற கருத்தே,
கற்பனை உருவாக்கம்!
இறந்த காலம், உண்மையில் இறந்துவிட்ட காலம்.
ஆனால் அந்த இறந்த காலத்தைப் பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற கற்பனை உருவாக்கம்,
இப்பொழுது நவீன கால அறிவியல், அருமையான அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகள் எல்லாம் செய்து
நிரூபித்திருக்கின்றார்கள். R.A.S என்று சொல்கின்றார்கள்… அதாவது 11 மில்லியன் information நம் mind-க்கு
வரும்பொழுது, நம்முடைய நம்பிக்கைகளைச் சார்ந்து, நாம் அதில் வெறும் 50 information-ஐ மட்டும்தான்
எடுத்து, நிகழ்காலத்திலேயே நம் வாழ்க்கையைக் கட்டமைக்கிறோம்.
கடந்தக்காலத்தைப் பொறுத்தவரை, நம்முடைய நம்பிக்கைகளை வைத்தும், நம்முடைய
கற்பனைகளை வைத்தும்தான், நாம் கடந்தக் கால நிகழ்வுகளையே கட்டமைக்கின்றோம்.
நீங்கள் உங்களுடைய கடந்தக் காலம் என்று எதை உங்கள் நினைவில் வைத்திருக்கின்றீர்களோ,
அதற்கும், கடந்தக் காலத்தில் நடந்த facts-நிஜத்திற்கும் சம்பந்தமே இருக்காது ஐயா.
சற்றே தள்ளி நின்று ஸாக்ஷியாகப் பார்த்தீர்களானால், நான் சொல்வது முழுமையாக உங்களுக்குப் புரியும்.
ஸாக்ஷியாக நின்று பார்த்தீர்களானால், நான் சொல்வது புரியும்.
ஒரு பக்கம் ஆனந்தக் கண்ணீர் பொங்கும்.. 'ஆஹா! எவ்வளவு பெரிய ஸத்யம் புரிந்தது!
இந்த வாழ்க்கையில் இதற்குமேல, துக்கமே இல்லையேடா' என்று புரியும்.
இன்னொரு பக்கம், 'என்னடா இவ்வளவு வருடங்களை வீணடித்துவிட்டோமே?' என்று பெரும் துக்கம்
பொங்கும்.
புரிந்துகொள்ளுங்கள்… ஒரு கண்ணில் ஆனந்தக் கண்ணீரும், ஒரு கண்ணில், 'இத்தனை வருடங்களை
வீணடித்துவிட்டோமே' என்ற துக்கக் கண்ணீரும் பொங்க வைக்கும் பரம ஸத்யம் இது.
(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 6
உங்கள் கடந்தக் காலத்தைப் பற்றி நீங்கள் வைத்திருக்கின்றக் கருத்தை அடிப்படையாக வைத்துதான்,
உங்களைப் பற்றியே உங்களுக்கு ஒரு கருத்தை உருவாக்குவீர்கள். அதை வைத்துதான், உங்கள்
வாழ்க்கையில் எல்லா எதிர்கால முடிவுகளையும் எடுப்பீர்கள்.
''என்ன business செய்யலாம், என்ன invest செய்யலாம், எந்த மாதிரி வாழ்க்கைத் துணையை
தேர்ந்தெடுக்கலாம் அல்லது எந்த மாதிரி வாழ்க்கை முடிவுகளை எடுக்கலாம்'' என்ற major-ஆன
உங்களுடைய எல்லா முடிவுகளையும் எடுப்பீர்கள்.
உங்களுடைய கடந்தக் காலத்தைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்து, அதாவது உங்களால்
என்னென்னவெல்லாம் சாதிக்க முடியும்?
எது எதில் எல்லாம் நீங்கள் ஜெயிப்பீர்கள்?
எது எதில் எல்லாம் நீங்கள் தோற்பீர்கள்?
என்ன செய்யலாம்? என்பது போன்று நீங்கள் கருத்துக்கள் வைத்திருக்கின்றீர்கள் பாருங்கள், அது
மொத்தமுமே ஸத்யம் சாராத, கற்பனைக் கட்டுரு!
அதை மட்டும் கொஞ்சம் புரிந்துகொண்டீர்களானால், உங்கள் எதிர்காலம், மிகப்பெரிய சாத்தியமும்,
அளவில்லாத உற்சாகமும், தெளிவும் அப்படியே reset button -ஐ தட்டிவிட்டு restart பண்ண மாதிரி இருக்கும்.
மொத்தத்தையும் delete செய்துவிட்டு, past-ஐ delete செய்துவிட்டு,
complete-ஆக fresh- ஆக, life ஆரம்பிக்கின்ற அந்த ஶக்தியும், உற்சாகமும், தைரியமும் வந்துவிடும்.
உங்களுடைய கடந்தகால வலிகள், காயங்கள், அதைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்து,
இது எல்லாமே போலி! கொஞ்சம் ஸாக்ஷியாகப் பாருங்கள். வெறும் இந்த 28 நாள் மட்டும் எனக்குக்
கொடுங்கள். எனக்குக் கொடுங்கள் என்றால், நான் உடனே உங்களை என் ஆஶ்ரமத்திற்கு வந்துவிடுங்கள்
என்றெல்லாம்கூட கூப்பிடவில்லை. அப்படி வந்து இருக்க முடிந்தால் வாருங்கள்.
கைலாஸா திருவண்ணாமலையின் கதவுகள் திறந்தே இருக்கின்றன.
ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து, 31-ஆம் தேதி வரை இலவசமாக, பரமஶிவ சேனை நிகழ்ச்சி நடக்கின்றது.
உணவு, தங்குமிடம், வகுப்புகள் அனைத்தும் இலவசமாகக் கொடுத்து, வகுப்பு கொடுக்கிறேன். அது 5 லக்ஷம்
ரூபாய் பெருமானமுடைய program. அதை இலவசமாகக் கொடுக்கின்றேன், அது ஒரு பக்கம்.
இரண்டாவது: இந்தியா முழுவதும் யாத்ரை செய்ய வேண்டும் என்று நினைகின்றவர்களுக்கு, பரிவ்ராஜக
யாத்ரையாகப் போக வேண்டும் என்று நினைக்கின்றவர்களுக்கு, இந்த ஒரு மாத வகுப்பையும்
இலவசமாகக் கொடுத்து, 5 லக்ஷம் ரூபாய் பெருமானமுடைய வகுப்பையும் இலவசமாக கொடுத்து, நீங்கள்
யாத்ரை செல்வதற்கு குறைந்தபட்சம் 1 லக்ஷமாவது ஒவ்வொருவருக்கும் செலவழிக்கின்றேன்.
நீங்கள் பல்வேறு spiritual ecosystem எல்லாவற்றையும் பார்த்து, வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்காக,
வாழ்க்கையை அறிந்துகொள்வதற்காக, வாழ்க்கையில் மலர்வதற்காகவே நான் இதைச் செய்கின்றேன்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த 28 நாள் மட்டும், நீங்கள் கைலாஸா திருவண்ணாமலைக்கு வர
முடியவில்லை என்றாலும், வீட்டில் இருந்தபடியாவது, இந்த ஒரு விஷயத்தைச் செய்யுங்கள்.
உங்களுக்குள் என்ன reaction நடந்தாலும், உங்களைப் பற்றி, உங்கள் கடந்த காலத்தைப் பற்றி நீங்கள்
வைத்திருக்கின்ற கருத்துக்கள், வலிகள், வேதனைகள், துக்கங்கள், எதை நினைத்தால் immediate-ஆக react
பண்ணுகின்றீர்களோ, கொந்தளித்து வெடித்து விடுகின்றீர்களோ, அவை எல்லாவற்றையும் ஸாக்ஷியாக
பாருங்கள்.
யாரைப் பார்த்தால் trigger ஆகின்றீர்களோ, எந்த நிகழ்வு, எந்த நபர், எந்த சூழல், எந்த வார்த்தை,
எந்த எண்ணம் உங்களைக் கொதிக்கச் செய்கிறதோ, de-stabilize ஆக்கிவடுகின்றதோ, அவைகள்
எல்லாவற்றையும் ஸாக்ஷியாகப் பாருங்கள்.
நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் மிகப்பெரிய வெற்றியடைவீர்கள், அதற்கு நான் பொறுப்பு.
(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 7
ஸமாதி மனப்பழக்கம் ஐயா. வேறு ஒன்றுமே இல்லை ஐயா.
இதில் கம்ப ஸுத்ரமோ, இயலாததோ, சாத்தியமில்லாததோ, மூடி மறைக்க வேண்டியதோ, மிகப்பெரிய
ரகசியமோ ஒன்றுமே இல்லை ஐயா.
ஸமாதி மனப்பழக்கம்.
வேண்டுமானால் ஒரு பெரிய பேப்பரில் எழுதி, உங்கள் படுக்கையறையில் ஒட்டிக்கொள்ளுங்கள்.
உங்கள் ஆபீஸில் ஒட்டிக்கொள்ளுங்கள். 'ஸமாதி மனப்பழக்கம்' என்று எழுதி ஒட்டிக்கொள்ளுங்கள்.
ஸாக்ஷியாய் இருந்து, உள்ளுக்குள்ளேயும் வெளியிலும் நடப்பதையெல்லாம் ஸாக்ஷியாகப்
பாருங்கள். பார்த்தீர்களானால் பத்தே நாளில் புரிந்துவிடும். அதாவது உங்களைப் பற்றியும்,
உங்கள் past—ஐ பற்றியும், நீங்கள் வைத்திருக்கின்ற மொத்த கருத்தும் டுபாக்கூர்.
Opinionated news, fact கிடையாது. Opinionated news.
அதனால் உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்தும், அந்த கருத்து ஏற்படுத்துகின்ற perversions,
அந்த reactions-க்கு நீங்கள் react பண்ணுவது….
அதாவது, 'நீங்கள் எதைத் தொட்டாலும் உருப்படாது' என்று ஒரு கருத்தை நீங்கள் அமைத்து
வைத்துக்கொண்டீர்களானால், வாழ்க்கையில் ஒரு பெரிய வாய்ப்பு வரும்பொழுது,
அதைப் பார்த்த உடனே உற்சாகம் வருவதற்குப் பதிலாக, எரிச்சல் வரும். 'ஐயோ, நான் தொட்டா
உருப்படாது, நான் அடையமாட்டேன். ஆனால் எவனோ ஒருவன் இதைத் தட்டிக்கொண்டு போய்விடப்
போகிறானே, ஐய்யோ' என்று உங்கள் reaction- ஏ உற்சாகத்திற்குப் பதிலாக, வேதனையும், வெறுப்பும்,
frustration-ஆக இருக்கும். அதனால் அந்த frustration-ஐ பார்த்து இன்னும் frustrate ஆகி...
இது மாதிரியான உணர்ச்சிக் கொந்தளிப்பு, வலி, காயங்கள், இவைகளுக்கு நடுவிலே நடக்கின்ற
போராட்டங்கள், இதனால் ஏற்படுகின்ற வெறுப்பினால் திருடுவது, கொலை செய்வது, கொள்ளையடிப்பது,
கற்பழிப்பு, ஊழல் என எல்லா விதமான அதர்மத்திலும் செல்வதற்கான முடிவை எடுப்பது … அதை
'தைரியம்' என்ற வார்த்தையில் சொல்ல முடியாது, 'அதர்மத்தில் செல்வதற்கான தற்கொலைத் துணிச்சல்',
'தற்கொலை மனப்பான்மை' வருகின்றது.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: அதர்மங்களில், பெருங்குற்றங்களில் ஈடுபடுபவர்கள்,
அதனுடைய பின்விளைவுகள் தெரியாதவர்கள் அல்ல.
ஆனால் ஒரு விதமான வெறுப்பினால், அந்தத் தற்கொலை முடிவை எடுப்பது.
வாழ்க்கையின் மீது அளவிற்கு மீறிய வெறுப்பினால், தற்கொலை முடிவிற்கு வந்து செயல்படுகின்ற
தன்மையிலிருந்து முதலில் விடுபடுங்கள்.
தற்கொலை முடிவிற்கு வந்து செயல்படத் துவங்குவது எப்படியெனில், முதலை காலைக்
கவ்விக்கொண்டிருக்கும்பொழுது, comfortable-ஆக நீந்திக்கொண்டிருப்பதைப் போன்றதாகும்.
அது எப்பொழுது வேண்டுமானாலும் பிடித்து, உள்ளே இழுத்துவிடும். முதலில் காலைக்
கவ்விக்கொண்டிருக்கின்ற முதலையிடமிருந்து விடுபடுங்கள்.
சிகரெட் பிடிப்பவர்கள், chain smokers , குடிப்பவன், சாராயம் குடிப்பவர்கள், அவர்களை நான் decent-ஆன
வார்த்தையினால் எல்லாம் சொல்ல முடியாது. சாராயம் குடிப்பவன், சாராயம் குடிப்பவன்தான்.
'மதுப்பிரியர்' என்ற வார்த்தையெல்லாம் உபயோகப்படுத்த முடியாது. 'குடிகாரன்' என்ற வார்த்தைத்தான்
சொல்ல முடியும். மாமிசத்திற்கு, மாமிச உணவிற்கு அடிமையாய்ப் போய்க் கிடத்தல். இதைச் செய்பவர்கள்
எல்லோருக்கும், அது தவறு, அதனால உடல் நலம் கெடும், மனநலம் கெடும், உயிர் நலம் கெடும் என்று
தெரியாமலெல்லாம் இல்லை. தெரியும்.
ஆனால், ''என்னடா பண்ணப் போறோம் life-ல?'' என்ற இந்த argument- ஐ normalize ஆக்குகின்றார்கள்.
'இதையெல்லாம் விட்டுவிட்டு வாழ்ந்து என்னடா பண்ணப் போகிறோம்?' என்று வாழ்க்கையின்மீது
இருக்கின்ற frustration-னால், ''teetotaler -ஆக வாழ்ந்து என்னடா பண்ணப் போகிறோம்?'' என்ற argument- ஐ
normalize ஆக்குகின்றோம்.
(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 8
Especially gen-Z நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.
Teetotaler life style, என்ன pleasant -ஆன வாழ்க்கைமுறை தெரியுமா?
ஐயா உங்கள் இருப்பே pleasure-ராக இருக்கும்.
Celebrate being a human.
டேய்! Gen-Z முதலில் இதைப் புரிந்துகொள்ளப்பா.
Celebrate being a human. Teetotaler ஆக இருந்தீர்களானால், you can celebrate being a human.
ஒரு இனிமையான மலரின், ஒரு இயற்கையான தாமரை, ரோஜா, பன்னீர் புஷ்பங்களுடைய இனிமையான
நறுமணம் மாதிரி, நம்முடைய வாழ்க்கையில் உள்ளுக்குள்ளும் வெளியிலும், ஒரு நறுமணம் பொங்குகின்ற,
just celebrating being a human.
வேறு ஒன்றும் வெளியிலிருந்து எல்லாம் தேவையில்லை. அது மாதிரி life-ஏ romance-ஆக இருக்கும். எதைப்
பார்த்தாலும் sweet-ஆக இருக்கும், எதைப் பார்த்தாலும் joyful- ஆக இருக்கும், யாரைப் பார்த்தாலும் smile
பண்ணுவீர்கள். அதுதான், celebrate being a human.
இந்த frustrations, நீங்கள் layer by layer -ஆக frustrations னுடைய layer அதிகமாகி,
அந்த frustration-னுக்கு நீங்கள் react பண்ணுவது, அதற்கு perversion... இது multiple complication. இந்த complication -
ஆல், உங்களுக்கும் உங்களுக்கும் இருக்கிற உறவு மிகவும்
complicate ஆகித்தான், 'டேய், வாழ்ந்து என்னடா பண்ணப் போகிறோம்? தண்ணிய அடிடா, குடிடா
பார்த்துக்கொள்ளலாம். என்ன வேண்டுமானாலும் குடிக்கலாம், smoke பண்ணலாம். என்ன
வேண்டுமானாலும் பண்ணலாம். வரும்போது பார்த்துக்கலாம் இருடா. இதற்கெல்லாம்கூட பயந்துகொண்டு
இருக்குற?' என்ற ஒரு தற்கொலை முடிவோடு செயல்படுகிறீர்கள்.
வாழ்க்கையின் மீது frustration வந்து, தற்கொலை முடிவோடு செயல்படுகின்ற அந்த எண்ண ஓட்டத்தோடு,
அதன் காரணமாக, போதைப் பழக்கங்கள், மற்ற மற்ற, இப்போ, smoking, குடி, இதோடு நிற்கவில்லை.
கஞ்சாவிற்குப் போய்விட்டது. மற்றபடி வேறு வேறு வேறு போதை வஸ்துக்கள்... பெயர்கூட எனக்குத்
தெரியவில்லை. அந்த meth.. என்பதைப்போன்று ஏகப்பட்ட போதை வஸ்துக்கள். இவையெல்லாம் normalize
ஆக ஆரம்பித்துவிட்டது.
இது மாதிரியான மனத்தை உருவாக்கிக்கொண்டீர்களானால், என்ன செய்தாலும் failure தான்.
மாதம் 10 லக்ஷம் அல்ல, 20 லக்ஷம் அல்ல, 50 லக்ஷம் சம்பளம் வாங்கினீர்களானாலும், என்ன use? எதை
வைத்து எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டுமோ, அது அழிந்து விட்டால் என்ன பயன்?
நாக்கை வைத்துத்தான் ருசிக்க வேண்டும், நாக்கு அழுகிப் போய்விட்டதென்றால்,
நீங்கள் எவ்வளவு ருசியான, விதவிதமான ஆயிரம், இரண்டாயிரம் தின்பண்டங்களை வைத்திருந்தாலும்,
என்ன உபயோகம்?
கண்ணை விற்று ஓவியம் வாங்கியவனும்,
உடல், மனம், உணர்வை விற்று, வாழ்க்கையில் எதைச் சேர்த்தவனும் - மிகப்பெரும் மூடன்.
வாழ்வில் முதல்படி, Celebrate being a human. இந்த மனித உடலோடு, மனத்தோடு, உணர்வோடு, உயிரோடு
இருக்கின்ற, இந்த நிலையை celebrate பண்ணுவோம்.
உங்களுக்குள் நிகழும் அனைத்தையும் ஸாக்ஷியாகப் பார்க்கத் துவங்கினீர்களானால், கடந்தகால
காயங்கள், அந்த காயங்கள் - வலிகளாலே ஏற்படுகின்ற எதிர்காலத்தைப் பற்றிய பயம், இதெல்லாம் layer by
layer -ஆக, அப்படியே உறிந்து விழுந்துவிடும் ஐயா.
கரைந்து விழுந்துவிடும். அவை எல்லாமே 'போலி' என்று புரிந்துவிடும்.
(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 9
இதில் ஒரு கெட்ட செய்தி என்வென்றால், இந்த ஸத்யங்கள் சிறு வயதிலேயே உங்களுக்குக் கற்றுக்
கொடுக்கப்பட்டு, நீங்கள் அதை நடைமுறைப்படுத்திக்கொள்ளாமல், இது உங்கள் வாழ்க்கைப் பாடமாக
உங்களுக்கு அளிக்கப்படாதது.
நல்ல செய்தி என்னவென்றால், இப்பொழுது செய்ய ஆரம்பித்தீர்களானால்கூட, எதிர்காலம் நன்றாக
இருப்பது மட்டுமல்ல, ஒரு முக்கியமான ஸத்யத்தைப் புரிந்துகொள்ளுங்கள்,
'உங்கள் கடந்த காலம் மாறும்!'
இங்குதான், நான் நுழைகின்றேன்.
'அசாத்தியமானது' என்று நீங்கள் நினைப்பவற்றைச் சொல்வதும்,
அதை உங்களுக்கு சாத்தியமாக்குவதும்தான், என் வாழ்க்கையின் குறிக்கோள்.
அதை, கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தொடர்ந்து கோடிக்கணக்கான மக்களுக்குச் செய்து
கொண்டிருக்கின்றேன். இப்பொழுதும் செய்கின்றேன், இனியும் செய்வேன்.
இந்த ஸத்யத்தைப் புரிந்துகொள்ளுங்கள். ஸாக்ஷியாக, உங்களுக்குள்ளும் வெளியும் நடப்பவை
அனைத்தையும் ஸாக்ஷியாகப் பார்க்கத் துவங்கினீர்களானால், ஸாக்ஷியையே ஸாக்ஷியாகப் பார்க்கத்
துவங்கினீர்களானால், சில நாட்களிலேயே, கடந்தகால வலிகள், காயங்கள் கரையும்.
மனம் எப்பொழுது கொந்தளித்தாலும் ஸாக்ஷியாகப் பாருங்கள் ஐயா.
எதிர்காலம் பற்றிய பயங்கள், துக்கங்கள் கரையும்.
தொடர்ந்து, பயம், குற்ற உணர்ச்சி, துக்கம், ஆற்றாமை, பொறாமை, வயிற்றெரிச்சல்,
இதில் இருந்தெல்லாம் react பண்ணுவது அடங்கும். உங்கள் எதிர்காலத்தின் சாத்தியக் கூறுகள், உங்கள்
வாழ்க்கையைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றி, உங்களுக்கு இருக்கின்ற பயங்கள் அனைத்தும் கரைந்து,
ஒரு மிகப்பெரிய ஸ்திரத்தன்மையும், ஸ்திரத்தன்மையின் மீது கட்டி எழுப்பப்பட்ட ஶ்ரத்தை, நம்பிக்கை,
வாழ்க்கையைப் பற்றிய ஒரு புதிய நம்பிக்கை மலரும்.
இதெல்லாம் கூட நீங்கள் logic-காகப் புரிந்துகொள்ளலாம்.
நான் அடுத்து சொல்வதுதான், உங்கள் கடந்த காலத்தைப் பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற கருத்து
மட்டுமல்ல, கடந்தகால அனுபவமே மாறும்.
காரணம் என்னவென்றால், கடந்த காலத்தில் நீங்கள் உங்களுடைய அனுபவங்கள் பலவற்றை, வலி, துக்கம்,
பயம், தோல்வி என்றெல்லாம் உள்ளுக்குள் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றீர்கள்.
அது மெதுமெதுவாகப் பார்த்து கரைய கரைய கரைய, அது சம்பந்தமான நபர்கள், அதே சூழ்நிலையை
எப்படிப் பார்த்தார்கள், எப்படி handle பண்ணினார்கள், என்ன idea-ல் operate செய்தார்கள் என்று பார்த்து,
அவர்களோடெல்லாம் interact செய்து, புரிந்துகொள்ள ஆரம்பிப்பீர்கள்.
அப்பொழுதுதான், 'கடந்த காலத்தைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்து மட்டுமல்ல,
கடந்த காலமே கற்பனை!' என்று புரியும். கடந்த காலமே மாறும்.
பொய்யுரையேன், புகட்டுரையேன்!
நீங்கள் அனைவரும் உங்களுடைய அரிய 3 மணி நேரத்தை, தினசரி இந்த ஸத்ஸங்கத்திற்காகக்
கொடுக்கின்றீர்கள் எனும் பொழுதே, நீங்கள் என் மீது வைத்திருக்கும் ஶ்ரத்தையை, நான் மதிக்கின்றேன்.
மிகுந்த அன்போடும், நேர்மையான காதலோடும், நேர்மையான நட்போடும் சொல்கின்றேன், கேளுங்கள்.
உங்களுக்குள், உள்ளும் வெளியும் நிகழும் அனைத்தையும் ஸாக்ஷியாகப் பார்க்கத் துவங்கினால், பத்து
நாட்களுக்குள், எப்படி ஒரு அரச மரத்தின் விதை, ஒரு கோட்டையின் சுவற்றில் சிக்கிக்கொண்டால், அது
வளர்ந்து, பெரிய மரமாகி, கோட்டையையே உடைத்துத் தகர்க்கிறதோ, அது மாதிரி உங்களுக்குள்
பெருகிப்போய் இருக்கின்ற இந்த பயம் எனும் கோட்டையே காணாமல் போய்விடும். கருகி உருகி கீழ
விழுந்துடும். எரிந்துபோய் கீழே விழுந்துவிடும்.
(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 10
எதிர்காலம் மாறுவது மட்டுமல்லாது, கடந்த காலம் மாறிவிடும்.
ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள்..
நிழல் நீயும் - நிஜ நீயும், 'நீ' என நின்றது ஒன்று
அகமெலாம் உலகாய் கிளர்ந்ததென்று அறிந்திடில்
கண்முன் உலகம் காண்க, காதமுது கேட்கவும்
உள்ளொளி தானே உனைச் சேர்
தன்னை உணர்ந்து நிற்கும் நீ
வேடமொரு சோர்வுற்று, வீழ்விடா நினைவிழ
யான் யார் எனும் ஏக்கம் யாவிலும் தீயென
பார்ப்பதும் பார்த்ததுமாய் பாகுபாடு அற்றிட
சிந்தையும் சிந்தனையும் சேர்ந்தே ஒளிரும் நீ
எண்ணமென்று எண்ணாதே எண்ணமெல்லாம் எழுந்திடும்
வெண்வெளி நீ எனவே, விளங்குதற் கற்றிடு
நினைவு நினைவுடைய நானென்றுமாய் கடந்து
உணர்வினுட் கலந்த உறைவிடம் நீயே நீ!
உங்களுக்கு உள்ளும் - வெளியும் நிகழும் அனைத்தையும் ஸாக்ஷியாய் பாருங்கள்.
இது ஏதோ அரை மணி நேரம் செய்கின்ற த்யானம் இல்லை ஐயா. நாள் முழுவதும் செய்யுங்கள்.
அதே ஆபீஸிற்குச் செல்லுங்கள், சென்றவுடன்... மேனேஜர் அழைப்பதற்கு முன்பாகவே, முதலாளியை
சந்திப்பதற்கு முன்பாகவே எப்படி கொந்தளிக்கின்றீர்கள் என்று ஸாக்ஷியாகப் பாருங்கள். எத்தனை
rehearsal, எத்தனை பயம், எத்தனை பொய் விடைகள், எத்தனை spontaneous lies என்று எத்துனையை
உருவாக்குகின்றீர்கள் என்று அப்படியே ஸாக்ஷியாகப் பாருங்கள்.
உங்கள் உடலிற்குள்ளும், மனதிற்குள்ளும் நடக்கின்ற அத்தனைக் கொந்தளிப்பையும்
ஸாக்ஷியாகப் பாருங்கள். இந்த 28 நாளும் முடிந்தவரை குறைந்த வார்த்தைகளை உபயோகப்படுத்துங்கள்.
மனத்திற்குள்ளும், மனத்திற்கு வெளியிலும் குறைந்த வார்த்தைகளை உபயோகப்படுத்துங்கள்.
உங்கள் மனம் உங்கள் மனைவி மாதிரி, நீங்கள் என்ன respond செய்தீர்கள் என்றாலும் ஒழிந்தீர்கள். சும்மா
இருந்தீர்களானால், அப்பொழுதும் பிரச்சினை வராது என்று அர்த்தம் இல்லை. ''நான் பேசிட்டே இருக்கேன்,
கத்திட்டே இருக்கேன், நீ என்ன சும்மாவே இருக்க?'' என்று அதற்கும் சண்டை வரும்.
ஆனால் ஒரு பத்து நாள் அதை பொறுத்துக்கொண்டீர்களானால், 'சரி, இப்படித்தான் ஆயிருச்சு இது' என்று,
சும்மா இருக்கின்ற காரணத்திற்காக சண்டை வருவது வராது. அப்பொழுது என்ன ஆகும் என்றால்,
கொந்தளிப்புகள் அடங்கி, நிஜத்தைப் பார்க்கத் துவங்குவீர்கள்.
கொந்தளிப்புகளில் இருந்து, அதாவது இந்த நவரச உணர்ச்சிக்கொந்தளிப்புகள்…
உங்கள் நாக்கு spicy-யான food-க்கும், ஊறுகாய்க்கும், எப்படி இந்த அறுசுவைக்கு அடிமைப்பட்டுக்
கிடக்கின்றதோ, அதே மாதிரி உங்களுடைய மனம் இந்த நவரச உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கு
அடிமைப்பட்டுக் கிடக்கின்றது.
நீங்கள் உண்மையில், உங்கள் வாழ்க்கையில் வெற்றியைத் தேடுவதை விட, இந்த
நவரச உணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கின்றீர்கள்.
வெற்றி என்பதைவிட ஐயா, நான்குபேர் உங்களைப் பற்றி, 'அவன் எவ்வளவு கஷ்டப்பட்டு வெற்றி
அடைந்தான் என்று தெரியுமா? வேறு யாராவது அவன் இடத்தில் இருந்தால் எப்பொழுதோ தூக்கு மாட்டி
செத்திருப்பார்கள்' என்று சொல்லவேண்டும் என்பதற்காக, நீங்களே சொல்லிச் சொல்லிப் பார்த்து, இதை
நான்குபேரை சொல்ல வைப்பதற்கான dialogues-ஐ நீங்களே மற்றவர்களுக்குள்ளும் feed செய்கின்றீர்கள்.
(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 11
ஒரு கொடுமை என்னவென்றால், இந்த நவரச உணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்கு அடிமையாவதுதான்
மிகப்பெரிய அடிமைத்தனம்.
மது, மாமிசம், போதை என சகல போதைக்கும் அப்பாற்பட்டு, இந்த நவரச உணர்ச்சிக் கொந்தளிப்புகளின்
அடிமைத்தனம்தான் மோசமான அடிமைத்தனம். மோசமான அடிமைத்தனம்.
இந்த நவரச உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கு அடிமையாகும்போது தான்...
அதாவது இந்த endless distraction, doom scrolling என்று சொல்வது, scroll செய்துகொண்டே இருப்பது.
முதலில் எல்லாம் ஐயா, ஒரு பத்து நிமிஷம் வீடியோவைப் பார்த்தால்தான், ஒரு எட்டாவது நிமிஷத்திற்கு
வரும்பொழுது, முதல் நிமிஷம், இரண்டாவது நிமிஷத்தில் அந்த வீடியோவில் என்ன சொன்னார்கள் என்று
மறந்துவிடுவோம். இப்பொழுது ஒரு shorts பார்த்தாலே, end of the shorts-க்கு வரும்பொழுது, ஒரு reels-ஐ
பார்த்து end-க்கு வரும்போது ஆரம்பத்தில் இருந்த content என்னவென்று மறந்துவிடுகின்றது.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: உண்மையில், நீங்கள் எப்பொழுது பிறந்திருந்தாலும் சரி, 24 மணி நேரமும்
smart phone-ஐ படுக்கையின் அருகிலேயே வைத்துக்கொண்டு, யார் யாரெல்லாம் காலையில் எழுந்த உடனே
முதலில் smart phone கண்ணில் விழிப்பது, இரவு கடைசியாக smart phone-ஐ பார்த்துவிட்டு கண்ணை
மூடுவது என்று வாழ்க்கை வாழ்கின்றீர்களோ, அவர்கள் அத்தனை பேருமே gen-Z, gen alpha தான்.
நீங்கள் 80 வயது கிழவனாக இருந்தாலும் சரி, அதாவது உங்கள் வயது என்னவாக இருந்தாலும் சரி...
காலையில் எழுந்த உடனே செல்போனில் கண் விழிப்பதும், இரவு தூங்கச் செல்கின்றவரை, அதாவது
தூங்குவதற்கு முன் இறுதியாகப் பார்ப்பதும் செல்போன்தான் என்ற வாழ்க்கையை யார் யாரெல்லாம்
வாழ்கின்றீர்களோ, நீங்கள் அத்துனை பேரும் gen-Z தான்.
அத்தனை பேரும் கேட்டுக்கொள்ளுங்கள், உங்களுக்கு நான் சொல்கின்ற அடிப்படை ஸத்யம்:
இந்த நவரச உணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்கு அடிமையாகி endless distraction-ல் சிக்காதீர்கள்.
ஆழ்ந்து கேளுங்கள்.
இந்த உணர்வு போதை மிகவும் கொடுமையானது.
இந்த ஒரு 28 நாள் மட்டும் ஐயா, உள்ளுக்குள்ளும் வெளியிலும் நடப்பதை தயவு செய்து
ஸாக்ஷியாகப் பாருங்கள்.
தேவையானதை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்.
அதாவது உங்களுக்கென்று ஒரு ecosystem ஒன்றை உருவாக்கிக்கொண்டு,
அந்த ecosystem சார்ந்த விஷயங்களை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு, நீங்கள் அரசியல் துறையில் இருந்தீர்களானால், அந்த அரசியல் நியூஸ் மட்டும்
தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் பொருளாதார துறையில் இருந்தீர்களானால், அந்தப் பொருளாதாரச் செய்திகளை மட்டும்
தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் வாழ்க்கையை நடத்துகின்ற அளவிற்கு information வாங்கிக்கொள்ளுங்கள்.
தேவை இல்லாதவைகளைச் செய்ய மறுப்பதுதான், உங்கள் வாழ்க்கையில் உங்கள் நேரத்தையும்,
உங்களையும் manage செய்வதற்கான முதல் படி.
(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 12
நீங்கள் சாதிக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்களுடையக் குறிக்கோளை அடைந்து,
வெற்றி அடைந்து, சாதனை செய்ய வேண்டுமென்றால்…
முதல் வேலை, நீங்கள் செய்ய வேண்டியதை எல்லாம் செய்வது கிடையாது. தேவை இல்லாதவைகளை
எல்லாம் செய்வதை நிறுத்துவது. அந்த தேவை இல்லாதவைகளைச் செய்வதை நிறுத்தும்பொழுதுதான்,
உங்கள் முன்பாக எவ்வளவோ நேரம், ஶக்தி, energy இருக்கிறது என்று புரியும் ஐயா.
உடல் energetic -ஆக, mind fresh- ஆக, உங்களுடைய prime time, உங்கள் வாழ்க்கையினுடைய cream
என்னவென்றால், உங்கள் prime time தான்.
மனமும், உடலும், உயிரும் fresh- ஆக இருக்கின்ற, tiredness இல்லாமல், boredom இல்லாமல், frustration
இல்லாமல், fresh- ஆக இருக்கின்ற அந்த time. பொதுவாக உங்கள் எல்லோருக்கும் சொல்ல வேண்டுமானால்,
அந்த fresh- ஆக, alive- ஆக, active ஆக இருப்பது maximum 5 மணி நேரம்.
அந்த நேரத்தை, உங்கள் குறிக்கோளை நோக்கி நீங்கள் செலுத்த வேண்டும் என்றால், தேவை இல்லாததை
எல்லாம் செய்வதை நிறுத்தினால்தான், இந்த prime time 5 மணி நேரத்தை,
உங்களுடைய குறிக்கோளை நோக்கி முழுமையாகச் செலுத்த முடியும். அது முதலாவது,
இரண்டாவது: இந்த தேவை இல்லாததெல்லாம் செய்வதை நிறுத்திய உடனேயே, இந்த prime time-னுடைய
quality-யும், quantity-யும் அதிகமாகும். காரணம் என்னவென்றால்,
தேவை இல்லாத விஷயங்களைச் செய்வதை நிறுத்தும் போதே, tiredness, boredom, frustration - இவற்றின் depth
குறையும்.
உங்களுக்கு உள்ளும் வெளியிலும் நடப்பதை ஸாக்ஷியாகப் பார்த்தீர்களானால்,
ஒருவருடைய comment எல்லாம் உங்களைப் பாதிக்கவே பாதிக்காது ஐயா.
comment என்றால் என்ன? ஒரு வார்த்தை. அவ்வளவுதான். அதில் போய் என்ன இருக்கிறது?
முடிந்துவிட்டது. பிறகு என்ன?
ஐயா, நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: நீங்களே உங்களை இழிவாகப் பழித்து, என்ன வார்த்தைகளைச்
சொல்லிக்கொள்கின்றீர்களோ, அந்த அதே வார்த்தை வெளியிலிருந்து வரும்பொழுதுதான் உங்களுக்கு
வலிக்கும். இல்லையென்றால் வலிக்காது. இதுதான் உண்மை.
உங்களை நோக்கி எய்யப்படுகின்ற எல்லா அம்பு, வேல், ஈட்டி... இந்த எல்லாமே ஐயா, உங்கள் skin
அளவிற்கு வந்து நின்று போய்விடும் ஐயா. அதற்குப் பிறகு அதை உங்கள் கையில் பிடித்து, நீங்களாகக்
குத்திக்கொண்டால்தான் உண்டு. இதுதான் உண்மை.
அது skin அருகில் வந்து நின்றுவிடும். அதற்குப் பிறகு நீங்களாக அதைப் பிடித்து குத்திக்கொண்டு, 'ஐயோ
வலிக்குதே, வலிக்குதே, குத்துதே, குடையுதே' என்று வேதனைப்பட்டுக்கொண்டால் உண்டு.
இதுதான் நிஜ ஸத்யயம்.
உள்ளுக்குள்ளும், வெளியிலும் நடப்பதை ஸாக்ஷியாகப் பார்த்தீர்களானால்…
கர்ணன் சினிமாவில் காட்டுகிறார்கள் பாருங்கள், எல்லா அம்பும் வந்து அவர்மீது அப்படியே மாலையாக
விழுந்து கீழே விழுந்துவிடும். அதே மாதிரி வெளியில் இருந்து என்ன வந்தாலும்,
அது உங்களை தாக்காமல் மாலையாய் கீழே விழுந்துவிடும். மாலையாக மாறி கழுத்தில்கூட
விழுந்துவிடும்.
என் அனுப வத்திலிருந்து சொல்கின்றேன்...
(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 13
Reaction பண்ணாமல் மட்டும் இருந்தீர்களானால்,
ஸாக்ஷியாக மட்டும் இருந்தீர்களானால்,
எப்பேற்பட்ட சூழ்நிலையிலிருந்தும் வெளிவருகின்ற மிகத்தெளிவான அறிவு, சுத்த புத்தி நமக்குள் மலர்ந்து,
அப்படியே நீங்கள் சுத்த புத்தியின் வழிகாட்டுதலால், எந்த சூழ்நிலையிலும் ஜெயித்துவிடுவீர்கள் ஐயா.
எந்த சூழ்நிலையிலும் ஜெயித்துவிடுவீர்கள்.
உங்களை நீங்கள், உங்களுக்கு உள்ளும் வெளியும் நிகழ்பவற்றை ஸாக்ஷியாக இருந்துப் பார்க்கத்
துவங்கும்பொழுது, புதிய வாழ்க்கை பிறக்கின்றது.
ஐயா, உங்களுக்கும் உங்களுக்கும் இருக்கின்ற உறவு, ஒரு sweet – ஆன, smooth – ஆன, happy – ஆன relationship
– ஆக இருக்க வேண்டும். உங்களுக்கும் உங்களுக்கும் இருக்கின்ற உறவை எப்படி
தெரிந்துகொள்வதென்றால், நீங்கள் தனியாக உட்கார்ந்திருக்கும்பொழுது, எப்படி உங்களோடு நீங்கள்
இருக்கின்றீர்கள் என்று பாருங்கள்.
வெளியிலிருந்து யாரும் உங்களோடு இல்லை, நீங்கள் தனி அறையில் உட்கார்ந்து relaxed-ஆக
இருக்கின்றீர்கள். செல்போன், டி.வி எதுவும் கிடையாது, நீங்கள் மட்டும் தனியாக இருக்கின்றீர்கள்.
அப்பொழுது எப்படி உங்களோடு உங்களை feel பண்ணுகின்றீர்கள்?
அதுதான் உங்களுக்கும் உங்களுக்கும் இருக்கின்ற உறவு.
நிறையபேர் இந்த face book -ல் எல்லாம் relationships status போட்டிருப்பீர்கள்.
Single, Married, Divorce என்று போட்டிருப்பீர்கள். சில பேர் complicated என்று போட்டிருப்பீர்கள். அதுபோல
உங்களுக்கும் உங்களுக்கும் இருக்கின்ற relationships status போட வேண்டும் என்றால், அத்தனைபேரும்
'confused, complicated, convoluted' - அப்படித்தான் போட்டுக்கொள்ள வேண்டும்.
'Confused, complicated, convoluted' என்று வேண்டுமானால் அதைப் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
அப்பொழுது உங்களுக்கு ஞாபகம் வந்துகொண்டே இருக்கும், ''ஆஹா.. இப்படித்தான் நாம
இருக்கின்றோம், இதில் இருந்து நாம் வெளியில் வரவேண்டும்'' என்று புரிந்துகொண்டே இருக்கும்.
முதலில், நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய அடுத்த ஸத்யம்:
உங்கள் கடந்த காலம், உங்கள் வாழ்க்கையில் இதுவரை நடந்துகொண்டிருந்தது,
இவைகள் எல்லாவற்றைப் பற்றியும் ஒரு தெளிவிற்கும், புரிதலுக்கும் வருதல்.
வந்தால்தான், dissolution நடந்தால்தான், transformation ஆரம்பிக்கும்.
நீங்கள் ஏற்கனவே செய்துகொண்டிருந்த செயல்கள்...
உள்ளுலகத்திலும், வெளியுலகத்திலும் உங்களுடைய reactions, மனம் இயங்கிய விதம்
என இவை எல்லாவற்றைப் பற்றியும் ஒரு dissolution வந்தால்தான்,
உங்களுடைய தினசரி வாழ்க்கை, உங்களுடைய மனப் பழக்கங்கள், உடல் பழக்கங்கள், வாழ்க்கைப்
பழக்கங்கள், உறவுப் பழக்கங்கள் என இவை எல்லாவற்றைப் பற்றியும் dissolution வந்தால்தான், அதாவது
'என்னாடா இப்படி நடந்துட்டு இருக்கு, என்னடா இப்படி போய்கிட்டு இருக்கு?' என்ற ஒரு விழிப்பு
வந்தால்தான், இந்த மயக்கத்திலிருந்து நீங்கள் தெளிந்தால்தான் - வெற்றி, ஜீவன் முக்தி, முழுமையான
வாழ்க்கை 'சாத்தியம்' - இகமானாலும் சரி, பரமானாலும் சரி.
பரத்திலே அடைய வேண்டிய வெற்றியைத்தான், ஜீவன் முக்தி என்றும், பரம ஸ்வதந்த்ரம் என்றும்
சொல்கின்றேன்.
இகத்திலே அடைய வேண்டிய ஸ்வதந்த்ரத்தை, வெற்றியைத்தான் success என்று சொல்கின்றேன்.
இகத்திலே அடைய வேண்டிய ஸ்வதந்த்ரம் - வெற்றி, success...
(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 14
உங்கள் goal -ஐ அடைந்துவிடுவது, உங்கள் குறிக்கோளை அடைவது...
அது என்னவானாலும் சரி...
It can be as simple as… சாதாரணமாக எல்லோருக்கும் வருகின்ற ஆசையான, 'healthy யான body- யாக இருக்க
வேண்டும்' என்பதில் இருந்து, 'நாடாள வேண்டும் அல்லது பெரும் செல்வந்தனாக வேண்டும்' என்று நீங்கள்
உங்களுடைய இகத்தில், உலகில் வைத்திருக்கின்ற என்ன குறிக்கோளாக இருந்தாலும் சரி...
பரத்தில் ஜீவன் முக்தி, ஜ்ஞாநம் என என்ன குறிக்கோளாக இருந்தாலும் சரி,
உள்ளுலகம், வெளியுலகம் எதில் எந்தக் குறிக்கோளாக இருந்தாலும் சரி,
அடைவதற்கு முன்பு, வெற்றிக்கு முன்பு வரவேண்டிய முதல் விஷயம் - 'கடந்தகாலம் எவ்வளவு மோசமாக
இருந்திருக்கிறது' என்று புரிந்துகொள்வது. அதற்காகக் கஷ்டப்படுவது அல்ல, வருத்தப்படுவது அல்ல.
துக்கப்படுவது, துயரப்படுவது அல்ல.
இந்தப் பரிதல் வந்தாலே அதைக் கழற்றி விட்டுவிடுவோம். அது 'நாமே உருவாக்கிக்கொண்ட மாயை' என்று
புரிந்து, அதைக் கழற்றி விடுவது, அதிலிருந்து ஒதுங்குவது...
அப்பொழுதுதான் அதிலிருந்து விடுபடுத்திக்கொள்வது நடக்க ஆரம்பிக்கும்.
நேற்றைய ஸத்ஸங்கத்தில் சொன்னேன்…
கானல் நீ
நிழல் நீ
நிஜ நீ என்று.
இந்த கானல் நீ, நிழல் நீ - இந்த இரண்டிலிருந்தும் விடுபடுவதற்கானத் தெளிவிற்கு வந்தீர்களானால்தான்,
நிஜ நீயைப் பார்ப்பீர்கள். உண்மையான உங்களை அப்பொழுதுதான் சந்திப்பீர்கள். அப்பொழுதுதான்
'உண்மையான உங்களுக்கும்', 'உங்களுக்கும்' நடுவிலே உறவு உருவாகும்.
அடுத்த முக்கியமான புரிதல் ஐயா…
நான் சொல்கின்ற வார்த்தைகளை ஆழ்ந்து கேட்டீர்களானால்தான் புரியும்.
ஏனென்றால், நாம் ரொம்ப paradoxical ஆன statement எல்லாம் சொல்லிக்கொண்டே வருவேன்.
''கோடி பேரும் உண்மையில் ஒருவராகத்தான் இருக்கின்றார்கள்
ஒருவனுக்குள் தேடினால் உண்மையில் கோடி பேரைப் பார்ப்பீர்கள்''
- இதெல்லாம் paradoxical ஆக இருக்கும். ஆனால் சத்தியம்.
அதனால், நான் சொல்வதை ஆழ்ந்து கேட்டீர்களானால்தான் புரியும்.
உண்மையில் ஐயா, உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற அந்த கற்பனைகள், அந்த rigid ஆன ஒரு
identity, boundary, 'இதெல்லாம் என்னுடைய ஆசை, இதெல்லாம் என்னுடைய அச்சம், இதெல்லாம் எனக்குப்
பிடிக்கும், இதெல்லாம் எனக்குப் பிடிக்காது, இதுதான் என் வாழ்க்கை, இப்படித்தான் இருக்க வேண்டும்,
இப்படி இல்லை என்றால் நடக்காது, இப்படி இருந்தால்தான் எனக்குப் பிடிக்கும், மகிழ்ச்சியாக இருக்கும்.
இப்படி இல்லை என்றால் நாசமாகப் போய்விடும்' என்று rigid boundaries வைத்திருக்கின்றீர்கள் பாருங்கள்,
அந்த rigid boundaries மொத்தமுமே fraud.
அது மொத்தமுமே உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கின்ற 420.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நான் உங்களை, 'நீங்கள் மற்றவர்களை ஏமாற்றுகின்றீர்கள்' என்று
சொல்லவில்லை. உங்களை நான் அவதூறு செய்யவில்லை, உங்களை நான் பழிக்கவில்லை.
(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 15
உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கின்றீர்கள். Self 420 ஐயா, இந்த rigid boundaries எல்லாமே
கற்பனையிலிருந்து நீங்கள் நட்டு வைத்துக்கொண்டிருப்பது ஐயா. அடித்தளம் இல்லாது கட்டப்பட்டக்
கட்டிடங்கள் மாதிரி ஐயா. Foundation போடாமல் நூறடுக்கு மாடி கட்டி வைத்திருப்பது மாதிரிதான், நீங்கள்
உங்களைப் பற்றி வைத்திருக்கின்ற rigid boundaries எல்லாமே.
இதில் ஒரு நல்ல செய்தி என்ன தெரியுமா?
நீங்கள் எதிர்காலத்தைப் பற்றி வைத்திருக்கின்ற பயங்கள்... அதெல்லாம்கூட இந்த
rigid boundaries-ஆல் வருவது ஐயா. அதெல்லாம்கூட போலி ஐயா.
உங்களுடைய உறவுகள், உங்களுடைய வாழ்க்கைமுறை, உங்களுடைய குறிக்கோள், உங்களுடைய patterns
உங்களுடைய habits - இது எல்லாமே rigid ஆனதே கிடையாது. இது எல்லாமே சமூகம் உங்களுக்குச் செய்த
மூளைச்சலவை!
கொஞ்சம் ஆழ்ந்து பாருங்கள், நீங்கள் 'ஸுகம்' என்று எதை நினைக்கின்றீர்களோ, அந்த ஸுகம்
உங்களுக்கு வரும்பொழுதுகூட, அந்த ஸுகத்தை நீங்கள் அடைவதாக நினைத்துப் பார்த்துக்கொண்டுதான்
இருப்பீர்களே தவிர, அந்த ஸுக அனுபூதி முழுமையாக உங்களை நிறைப்பதற்கு நீங்கள் அனுமதிப்பதே
இல்லை. அந்த நேரத்தில்கூட உங்களுக்குள் ஏதாவது ஒரு dialogue தான் ஓடிக்கொண்டிருக்கும். அந்த
அனுபூதி நிறைவதில்லை. அந்த அனுபூதி உங்கள் உடல், மனம், உயிர் அனைத்தையும் உத்சாகப்படுத்தி,
நிறைந்து நடப்பதே இல்லை ஐயா.
என்ன ஸுகமானாலும் சரி, நீங்கள் 'ஸுகம்' என்று நினைக்கிற எல்லாமே, அதாவது உணவு – நாக்கு
ஸுகமாகட்டும் அல்லது ஏதோ ஒன்றைப் பார்க்கின்ற ஸுகமாகட்டும் அல்லது உடலாலே அடைகின்ற காம
ஸுகமாகட்டும் அல்லது என்ன ஸுகமானாலும் சரி, ஐம்புலன்களால் அடையும் ஸுகம் மற்றும் மனதால்
அடையும் ஸுகம், எல்லா ஸுகங்களிலும், உண்மையான அந்த ஸுக அனுபவம் நிகழும்பொழுது, உங்கள்
மனம் குறுக்கிட்டு, 'இதைப் பற்றி சிந்திப்பது' என்கின்ற சிந்தனை ஓட்டம்தான் உங்களுடைய layer-ல்
நடந்துகொண்டிருக்கும். இது சார்ந்த ஆசை-அச்சம் என்கின்ற சிந்தனை தான் ஓடிக்கொண்டிருக்குமேத்
தவிர, உண்மையில் அந்த அனுபூதி நிகழ்வதில்லை.
இது எப்படியென்றால், ஒரு பெரிய plastic wrap செய்து உங்களை முழுவதுமாக மூடிக்கொண்டு,
இந்த கொரோனா காலத்தில் எல்லாம் sweat suit–என்று போட்டுக்கொண்டிருந்தார்களே, அந்த safety suit
அதைப் போட்டுக்கொண்டுச் சென்று, வாழ்க்கையை அனுபவிக்கின்ற மாதிரி.
உங்களுக்கும், உங்களுடைய அனுபவத்திற்கும் இடையிலே, இந்த தொடர்ந்த தலைவலியாக இருக்கின்ற
எண்ண ஓட்டங்களால், நீங்கள் எதையும் அனுபவிப்பதும் இல்லை. உங்கள் வாழ்க்கையைப் பற்றி
வைத்திருக்கின்ற கருத்துக்கள் எல்லாமே இந்த மாதிரியான ஒரு போலித்தனமான rigidity தான்.
அடித்தளமில்லாதக் கட்டிடத்தைப்போல, வெறும் எண்ணக்கட்டினாலே எழுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது.
ஒரு 10 நாள் உங்களை ஸாக்ஷியாகப் பார்த்தீர்களானால், உங்களுக்குள் இருக்கும் எத்தனைக் கட்டிடம்
தானாக தட தட தடவென்று இடிந்து விழுகிறது பாருங்கள்.
நீங்கள் கட்டி வைத்த பயம் எனும் பத்தடுக்கு மாடி, ஒளிந்து, எழுந்து இடிந்துவிழுந்து போகும்.
உங்களுக்கு மிக நெருக்கமான ஆசை என்று நீங்கள் கட்டிவைத்த நூறடுக்கு மாடி, அணுகுண்டு
போட்டது போன்று, சிதறிச் சின்னாபின்னமாகப் போகும்.
உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியம் என்று நீங்கள் நினைத்து,
எதை நோக்கி ஓடிக்கெண்டிருந்தீர்களோ, அது மறந்து போகும்.
(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 16
எந்த குறிக்கோளும் இல்லாமல், தரித்தரம் மாதிரி வீணாகச் சுற்றிக்கொண்டு வாழ்க்கையைக்
கழித்துக்கொண்டிருந்தீர்களானால், அது எல்லாவற்றைப் பற்றியும் விழிப்புணர்வு வரும்.
இந்த விழிப்பு, துரியம், ஸமாதி என்று நான் சொல்லிக்கொண்டிருக்கின்றேன் அல்லவா,
அதைப் பற்றி அது என்ன என்று ஒரு சின்ன definition சொல்லிவிடுகின்றேன்.
அதாவது, அந்த ஸமாதி நிலையில் உள்ளுக்குள் காலம் கடந்து நித்ய நிகழ்வில் இருப்பீர்கள்.
கடந்த காலமோ, எதிர்காலமோ, நிகழ்காலமோ எதுவுமே பாதிக்காத,
இது எதுவுமே இல்லாத நித்ய நிகழ்வு.
இப்பொழுது இருக்கின்ற இந்த நிகழ்வு. இந்த நித்ய நிகழ்வில் இருப்பீர்கள்.
வெளியில் நீங்கள் உபயோகப்படுத்துகின்ற இந்த மனம், உடல், இதை வைத்து செயல்படுவது
எப்படி செய்வீர்கள் என்றால்…
ஒவ்வொரு வினாடியும் 'உங்கள் வாழ்க்கை' என்பதைப் புரிந்து செயல்படுவீர்கள்.
காலத்திற்கு உள்ளே இயங்குகின்ற உடல்-மனம், ஒரு வினாடியைகூட வீணாக்காமல் குறிக்கோளை நோக்கி
இயங்குவதும்,
காலத்திற்கு அப்பாற்பட்டிருக்கும் உங்கள் ஆன்மா, நீங்கள், நித்ய நிகழ்விலே எதைப் பற்றியும் கவலை
இல்லாமல் இருப்பதும்,
- இந்த இரண்டுமே simultaneous -ஆக நடக்கும்.
Stress இல்லாமல் 24 மணிநேரம் வேலை செய்வீர்கள். 24 மணி நேரமுமே vacation ஆகவே இருக்கும். அதுவே
vacation ஆக இருக்கும், அதுவே வேலையாகவும் இருக்கும்.
அதுவே இனிமையான entertainment -ஆக இருக்கும். அதுவே வாழ்க்கையினுடைய
entrainment -ஆக இருக்கும். அதுதான் Enlightenment!
Entertainment-ம், entrainment-ம், work-ம்,
உங்களுடைய தொழில், உறவுகள், vacation - இது எல்லாமும் ஒன்றாக 24 மணி நேரமும் ஒரே
mood-ல் இருக்கும். அதுதான் ஐயா Enlightenment.
வேலை தனி, வாழ்க்கை தனி, entertainment தனி, enjoyment தனி என்ற
stress ஒன்றுமே இருக்காது.
உள்ளுக்குள், இந்த conscious sovereignty - ஆன்ம ஸ்வதந்த்ரம் ஐயா.
உங்களுடைய conscious sovereignty-ஐ reclaim பண்ணுங்கள்.
அதற்கான வழிதான் நான் சொல்கின்றேன்.
உள்ளுக்குள்ளும் வெளியிலும் நடப்பவை அனைத்தையும் ஸாக்ஷியாகப் பாருங்கள்.
உள்ளுக்குள் கொந்தளிக்கும்போது, உள்ளுக்குள்ளேயும் வார்த்தைகளை உபயோகப்படுத்தாதீர்கள்.
வெளியிலேயும் வார்த்தைகளை உபயோகப்படுத்தாதீர்கள். ஒரு 10 நாள்தான் அந்த மனப்பழக்கம்
வருவதற்கு struggle பண்ணுவீர்கள். ஆனால் வந்துவிட்டதென்றால், முடிந்துவிட்டது.
ஸாக்ஷியாக இருப்பது உங்களுக்குப் பழக்கமாகிவிடும்.
'நீங்கள் இப்படித்தான் இருக்கப் போகின்றீர்கள்' என்று உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும்
பழக்கமாகிவிடும். ஒரு மாதத்தில் உங்கள் life-ஏ வேறு level- க்கு மாறிவிடும்.
''சாமி, நான் இந்த மாதிரி எல்லாம் ஶாந்தமாக, peaceful- ஆக இருந்தால்,
என் girl friend என்னை விட்டு ஓடிப்போயிடும் சாமி'' என்றால்…
'விட்டது சனி' என்று நிம்மதியாக இருங்கப்பா.
சனீஶ்வரரை disrespect செய்ய வேண்டாம். அவர் தர்மவான்.
'விட்டது தலைவலி, விட்டது தரித்திரம்' என்று நிம்மதியாக இருங்கள்.
(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 17
நீங்கள் matured ஆகும்பொழுது, நீங்கள் என்ன maturity level-க்கு, frequency-க்கு போகின்றீர்களோ, அந்த
frequency-க்கு உரிய உறவுகள் உங்களைச் சுற்றித் தானாகவே வரும். அந்த உறவுகளோடு வாழுங்கள் ஐயா.
இந்த old environment, old people, old frequency-யில் நீங்கள் கட்டமைத்த அது உடையட்டும். அதிலிருந்து
வெளியில் வாருங்கள்.
இந்த பரமஶாந்த நிலை, முழுமையான ஸாக்ஷி நிலை, பரம ஸாக்ஷி நிலை,
பரம சித் நிலை, இந்த ஸமாதி பழகுங்கள். பழக பழக பழக உங்களுடைய old environment, உங்களுக்கே taste-
ஆக இருக்காது ஐயா. Drop ஆக ஆரம்பித்துவிடும். ரொம்ப empty-ஆக இருக்கும். அந்த பழைய party, பழைய
friends அதெல்லாம் போலித்தனமாக இருக்கும். அதில் உங்களுக்கே taste இருக்காது.
என்ன அதையே பேசுவது, அதே தண்ணி அடித்துக்கொண்டு, அதையே புலம்பிக்கொண்டு,
அதே வீராப்புப் பேசிக்கொண்டு, அப்படியே உருண்டுவிடுவது. மீண்டும் காலையில் எழுந்து,
திரும்ப போதை தெளிந்துவிட்டால், இன்னும் நிஜ வாழ்க்கை வந்துவிடுமே என்பதற்காக, நிஜ வாழ்க்கையில்
வராமல் இருப்பதற்காக மீண்டும் குடிப்பது.
அப்படி மீண்டும் குடிப்பதற்குப் பணம் இல்லையென்றால், அந்த செல்போனை எடுத்து
நோண்டிக்கெண்டிருப்பது. ஏனெனில் அதுவும் ஒரு விதமான போதைதானே?
உங்களில் இருந்து உங்களை விலக்கி வைக்கும், உங்களை நீங்கள் மறந்து, உங்கள் வாழ்க்கையைப் பற்றி
உங்களுக்கு எந்தவிதமான awareness-ம், consciousness-ம் இல்லாமல் உங்களில் இருந்து உங்களை நகர்த்தி
வைக்கும் எல்லாமே போதைதான்.
உங்களை உங்களுக்கு மறக்கச் செய்ய வைக்கும் எல்லாமே போதைதான்.
Depression-ஏ ஒரு விதமான போதைதான் ஐயா.
ஏன் நீங்கள் failure என்று உங்களை நீங்களே justify பண்ணிக்கொண்டு, அந்த justification- க்கு உலகத்தில்
இருக்கின்ற அத்தனை பேர் மீதும் பழிபோட்டு, அதை நீங்களே திரும்பத் திரும்ப சொல்லிக்கொள்வதனால்,
நம்ப ஆரம்பித்துவிடுவதுதான் depression. வேறு ஒன்றும் இல்லை.
நிஜமான பிரச்சினைகள் வந்தால், depression தானாகக் காணாமல் போய்விடும்.
ஒருவன் depression-ல் இருக்கின்றான் என்றால், அருமையான treatment இருக்கிறது.
அவனுக்கு நிஜமான பிரச்சினைகளைக் கொடுங்கள். Depression-ல் இருந்து வெளியில் வந்துவிடுவான்.
அவனை re-invent செய்துகொள்வான்.
நிஜமான பிரச்சினைகள் இல்லாததனால், மனத்தால் போலித்தனமாக, கற்பனையானப் பிரச்சினைகளை
எல்லாம் உருவாக்கிக்கொண்டு, அதை strong -ஆக நம்பி, இதில் ஒரு கொடுமை என்னவென்றால், depression -
னை normalize ஆக்குவது மட்டுமல்லாமல், இப்பொழுது gen-z அதை ஒரு sacred-ஆக மாற்றுகின்றார்கள்.
அப்பொழுது என்ன ஆகின்றதென்றால், உங்களுக்கு depression வந்தால், எல்லோரும் உங்களுக்கு attention
கொடுப்பார்கள் என்று நீங்கள் நம்ப ஆரம்பித்த உடனே, depression-ஐ தண்ணீர் ஊற்றி மட்டுமல்ல, உரம்
போட்டு வளர்க்க ஆரம்பித்துவிடுகின்றீர்கள்.
நீங்கள் depression-ல் இருந்துகொண்டு, depression-க்கு medicine எடுத்துக்கொண்டு, அப்படியே உங்கள்
வாழ்க்கைக் கழிந்தால் யாருக்கு வருமானமோ, அவர்கள் depression-ஐ sacred-ஆன ஒரு விஷயமாக மாற்றி,
உங்களை மூளைச்சலவை செய்துகொண்டிருக்கின்றார்கள்.
Normalize ஆக்குவது மட்டுமல்ல, அதை மெதுமெதுவாக நீங்கள் உள்ளுக்குள் பல பேருடைய attention, sympathy
கிடைப்பதற்காக celebrate பண்ண ஆரம்பிக்கின்ற அந்த style-க்கு இப்பொழுது போக ஆரம்பிக்கின்றீர்கள்.
இந்த old ecosystem எல்லாவற்றிலிருந்தும் உடைத்துவிட்டு வெளியில் வாருங்கள் ஐயா.
அப்படி வருவதற்கான அந்த தைரியம் எப்பொழுது வரும் என்றால், எப்படி வருவீர்கள் என்றால்,
அந்த பட்டாம்பூச்சி மாதிரி கூட்டை உடைத்துக்கொண்டு, வெளியில வந்து சிறகடித்து எப்பொழுது
(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 18
பறக்க ஆரம்பிப்பீர்கள் என்றால், உங்களுக்கு உள்ளும்-வெளியிலும் நிகழ்வதை ஸாக்ஷியாகப் பாருங்கள்.
ஸாக்ஷியாகப் பார்க்க அது நிகழும்.
ஆழ்ந்து கேளுங்கள், இந்த ஒரே ஒரு 'ஸமாதி பழகுதல்' - இதை ஆரம்பித்தீர்களானாலே, உள்ளுக்குள்ளும்
வெளியிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் வந்துவிடும். வாழ்வில் உங்கள் taste மாறிவிடும் ஐயா. உணவு, உடை
இது சம்பந்தமாக மட்டுமல்ல... உறவு, உங்கள் குறிக்கோள் என சகலத்தைப் பற்றிய taste-ம் மாறிவிடும்.
அடுத்த முக்கியமான ஸத்யம், இந்த ஸமாதி பழகத் துவங்கும்பொழுது,
உங்களுடைய வாழ்க்கையில ஒரு அருமையான synchronicity-யும், flow-வும் ஆரம்பித்துவிடும்.
நீங்க யாராக மாற வேண்டுமோ, உங்கள் வெற்றி…
அதாவது நிஜமான நீங்களும், உங்களுடைய தினசரி வாழ்க்கையும் ஒரு இனிமையான synchronicity-க்கு
வந்துவிடும், flow-க்கு வந்துவிடும்.
உங்களை அறியாமலேயே extraordinary -யான விஷயங்கள் உங்களுக்குள் மலர ஆரம்பிக்கும்.
உங்களுக்குள் நடக்கின்ற அத்தனையும் ஸாக்ஷியாகப் பார்த்து, இந்த நித்ய நிகழ்வில் இருக்க
ஆரம்பித்தீர்களானால், நீங்கள் நினைத்துப் பார்க்காத, இதுவரை கற்பனையே செய்து பார்க்காத
சாத்தியங்கள் சத்தியமாவதும், நிஜமாவதும், அதை நோக்கிச் செல்ல முடியும் என்ற தைரியம், ஶ்ரத்தை,
தெளிவு, உயிர்மை உங்களுக்குள் மலர்வதை நீங்களே பார்ப்பீர்கள்.
தந்தையாகின்ற ஶக்தியை 'ஆண்மை' என்று சொல்கின்றோம்.
அது மாதிரி வெற்றி அடையும் ஶக்தியை 'உயிர்மை' என்று சொல்கின்றேன்.
வெறும் ஒரு பெண்ணை கர்பமாக்குகின்ற ஶக்தி மட்டும் 'ஆண்மை' கிடையாது.
ஒரு நல்ல தந்தையாகின்ற ஶக்திதான் ஆண்மை.
நாமெல்லாம் நிறைய நல்லத் தாய் பற்றி பேசுகின்றோம்.
நல்ல தந்தை பற்றி யாருமே பேசுவதில்லை.
ஒரு பையன் ''ஏம்மா, உன் புருஷன்கிட்ட சொல்லி வை, ரொம்ப என் route-ல cross பண்ணிட்டே இருக்கான்''
என்று சொன்னால், பையனுக்கு வயசு 14.
''ஏம்மா, நான் எங்கப் போறேன், வரேன் என்று என் friends கிட்ட எல்லாம் தொடர்ந்து பேசி என்னை
கண்காணிச்சுட்டே இருக்கிறான். சொல்லி வை'' என்று சொன்னால், பையனுக்கு வயசு 18.
''ஏம்மா, எப்படித்தான் போயும் போயும் இந்த ஆளைப்போய் கல்யாணம் பண்ணிட்டு, நீ குடித்தனம்
பண்றியோ?'' என்று சொன்னால், பையனுக்கு வயசு 21.
''ஏம்மா, என்னதான் இருந்தாலும் உழைச்சு உழைச்சு நம்மளுக்கெல்லாம் சோறு போடுறாரு இல்ல மா?''
என்று சொன்னால், பையனுக்கு வயசு 28.
''அம்மா, அந்த கஷ்டத்திலேயும், அந்த வறுமையிலும் அவரால முடிந்ததைத் திரட்டி, என்னவோ செய்து,
நம்மளையெல்லாம் கரையேத்திட்டாருல்ல மா'' என்று சொன்னால், பையனுக்கு வயசு 45.
''I miss you அப்பா'' என்று சொன்னால், பையனுக்கு வயசு 50.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கையில் பல நேரத்தில் நமக்குள் நாம் matured- ஆக இல்லாமல்
இருப்பதனால், வெளியில் இருக்கின்ற உறவுகளைப் பற்றி நாம் வைத்திருக்கின்றப் பார்வைகள் எல்லாம்
போலியானவை. அந்தப் பார்வை எல்லாம் rigid ஆனது, உண்மை சத்தியத்தின் மீது ஸ்தாபிக்கப்பட்டது
கிடையாது.
(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 19
அதனால், உங்களுக்குள் இருக்கின்ற அத்தனையும், உள்ளே இருப்பது, வெளியில் இருப்பது என
அத்தனையும் ஸாக்ஷியாகப் பார்க்கத் துவங்கினால், உங்களை அறியாத பெரிய சாத்தியங்கள்,
ஸத்யங்கள், முதிர்ச்சி, இதெல்லாம் மலரத் துவங்கும்.
ஒரு நல்ல தகப்பனாக மாறுவதுதான் ஆண்மை.
வெற்றியை அடைவதுதான் உயிர்மை.
உயிரோடு இருப்பவன் எல்லாம் உயிர்மை உடையவன் இல்லை ஐயா.
ஆணாய் பிறந்தவன் எல்லாம் ஆண்மை உடையவனும் அல்ல,
உயிரோடு இருப்பவனெல்லாம், இருப்பவன் எல்லாம் உயிர்மை உடையவனும் அல்ல.
உயிரை உயிர்ப்பித்து, இகமும் பரமும் முழுமை காண்பதே உயிர்மை!
உங்களுக்கு உள்ளும், வெளியிலும் நடப்பதை ஸாக்ஷியாகப் பார்க்க ஆரம்பித்தீர்களானாலே,
வெளி உலகத்தில்கூட எவ்வாறு செயல்பட வேண்டும் என்று, உங்கள் taste மாறுவதனால் வருகின்ற
முதிர்ச்சியினாலேயே, மிகத்தெளிவான சரியான முடிவுகள் எடுக்க ஆரம்பிப்பீர்கள்.
பயம் கரைந்து போய்விடும்.
நீங்கள் எல்லாருமே, endless distraction -ஐ ஸுகம் என்று நினைக்கின்றீர்கள்.
பயத்தை பாதுகாப்பு என்று நினைக்கின்றர்கள்.
கிடையாது.
பயத்தால் ஒரு நாளும் பாதுகாப்பு வருவதில்லை.
Endless distractions ஸுகமும் கிடையாது.
Endless distractions ஸுகமும் தருவதில்லை.
ஸாக்ஷியாகப் பார்க்கும்பொழுது வருகின்ற தெளிந்த புத்திதான், எதிர்கால வாழ்க்கைக்கு மிகப்பெரிய
பாதுகாப்பு. பயமில்லாத தெளிந்த புத்தி இருந்தால், எப்பேற்பட்டத் தாக்குதல்கள் வந்தாலும், அந்தத்
தாக்குதல் உங்களை ஒன்றும் செய்ய முடியாமல் ஜெயித்துவிடுவீர்கள்.
ஜெயித்தது மட்டுமல்லாமல், நீங்கள் வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும் என்று நினைத்தீர்களோ,
அதைச் சாதித்துவிடுவீர்கள்.
அந்தத் தாக்குதலின்போது உங்கள் மீது செலுத்தப்பட்ட அம்புகள், ஆயுதங்கள், கற்கள், இவைகளையே
உங்களுக்கு உபயோகமாகின்றப் பொருளாக மாற்றிக்கொண்டு,
நீங்கள் வெற்றி அடைந்துவிடுவீர்கள் ஐயா.
இந்த 49 ஆண்டுகளில் சாதிக்காததும் இல்லை, சந்திக்காததும் இல்லை என்கின்ற அனுபவம் உடையவன்
என்பதனால் இதைச் சொல்கின்றேன், கேளுங்கள்:
ஐயா, என்னை அழிக்க முயற்சிசெய்து, கொடூரமான பல்முனைத் தாக்குதல் நிகழ்த்தினார்கள்.
Defame செய்வது. Defame என்றால் சாதாரண defamation அல்ல. Hate speech,
மீடியா மூலமாக, சமூக ஊடகங்கள் மூலமாக என அத்தனை ஊடகங்கள் மூலமாகவும் extreme hate speech
செய்தார்கள்.
Law fare…
Law fare என்றால், சட்டத்தை உபயோகப்படுத்தி ஒருவனை அழிப்பது.
அது மாதிரியாகவே வழக்குகளைப் புனைந்து சிக்கவைத்து, அந்த process-ஏ punishment.
அந்த மாதிரி மாற்றுவது. இதுதான் Law fare.
நேரடியானக் கொலைவெறித் தாக்குதல்கள்.
இது மாதிரி அத்தனை விதமான layer persecution -யும் face பண்ணியிருக்கின்றேன்.
(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 20
இதையெல்லாம் செய்தவர்கள்...
பணம் இல்லாதவர்கள் கிடையாது - என்னை விட பல கோடி மடங்கு பணம் உடையவர்கள்.
அறிவு, strategy - இதெல்லாம் என்னைவிட பல கோடி மடங்கு உடையவர்கள்.
அதிகார பலம், அரசியல் பலம் - என்னை விட பல கோடி மடங்கு உடையவர்கள்.
சமூக பலம், ஊடக பலம் - என்னைவிட பல கோடி மடங்கு உடையவர்கள்.
அவர்களிடம் இல்லாத, என்னிடம் இருந்த ஒன்றே ஒன்று என்னவென்றால்,
பரமஶிவன் அருளால் அனைத்தையும் ஸாக்ஷியாகப் பார்க்கின்ற,
பயமில்லாத பரம ஶாந்த நிலையில் இருக்கின்ற சுத்த புத்தி.
நித்யமாக உங்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த இருப்பு.
கடந்ததனால் கொந்தளிக்காது,
எதிர்காலத்தால் இழுத்தடிக்கப்படாது,
இந்த நித்ய நிகழ்விலே உள்ளும், வெளியும்... நிகழ்வது அனைத்தையும் ஸாக்ஷியாகப்
பார்க்கத் துவங்குங்கள். ஸாக்ஷியாகப் பாருங்கள்.
இதைச் செய்யும்பொழுது, உங்களுக்கு உள்ளே இருக்கின்ற 'நீங்கள்' மாறுவீர்கள்.
எப்படி கானல் நீ... அதாவது நன்றாகப் பாருங்கள், கனவில் நீங்கள், 'நீங்கள்' என்று பார்க்கின்ற
அந்த கானல் நீ, உள்ளே திரும்பிப் பார்க்கும்பொழுது, நிழல் நீ விழிப்பிற்கு வந்துவிடுவீர்கள்.
விழிப்பில் இருக்கின்ற நீங்கள் உங்களை உள்ளே திரும்பிப் பார்க்கும்பொழுது, துரியத்திற்கு
வந்துவிடுவீர்கள். 'நிஜ நீ'யாக விழித்துக்கொள்வீர்கள்.
அப்பொழுது உங்களை அறியாமலேயே, நீங்கள் ஒரு ஆழ்ந்த ஶாந்தத்தின் ஸாந்நித்யத்தை,
இருப்பை உடையவராக, சுத்த புத்தியோடு இருப்பவராக மாறிவிடுவீர்கள்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: என்னை எதிர்க்க நினைத்து, அழிக்க நினைத்து செயல்பட்டவர்கள்,
சதித்திட்டம் தீட்டியவர்கள்... இவர்கள் எல்லோரிடமும் இல்லாத, ஆனால் என்னிடம் இருந்த ஒன்றே ஒன்று
பரமஶிவன் அருளாலே, அனைத்தையும் ஸாக்ஷியாகப் பார்க்கின்ற, ஸமாதியில் இருந்தே அனைத்தையும்
ஸாக்ஷியாகப் பார்க்கின்ற, பரமஶிவன் அருளிய சுத்த புத்தி.
அதுதான் இவர்கள் செய்த அத்துனைத் தாக்குதல்களில் இருந்தும், நான் என்னை விடுபடுத்திக்கொண்டு,
காப்பாற்றிக்கொண்டு, வெற்றி அடைந்து, இவர்கள் செய்த தாக்குதல்கள் அனைத்தையுமே, என் வெற்றிக்கு
ஒரு காரணமாகவும் மாற்றிக்கொண்டு, அதையே உபயோகித்து வெற்றியையும் அடைய வைத்திருப்பது -
பரமஶாந்த நிலையில் இருக்கும் சுத்த புத்தி.
இதில் ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி என்னவென்றால், இது உங்களுக்கும் சாத்தியம்.
ரொம்ப எளிமை ஐயா. நீங்கள் இதில் ஒன்றும் பெரிதாக செய்ய வேண்டியது இல்லை.
தொடர்ந்து குழப்பிக்கொண்டே இருப்பதை நிறுத்தினீர்களானால் போதும்.
பல நாடுகளில், 2026 புத்தாண்டு பிறந்து விட்டது, பிறந்து கொண்டிருக்கின்றது.
இந்த புத்தாண்டு 2026, பரமஶிவப் பரம்பொருளின் பேரருளால் எல்லோருக்கும் நன்மையாகவும்,
இனிமையாகவும், பரம ஶாந்தத்தை மலர்த்துவதாகவும், முழுமையை அளிப்பதாகவும், ஆனந்தத்தை
அளிப்பதாகவும், ஜ்ஞாநத்தை அளிப்பதாகவும், பரமானுபூதியை அளிப்பதாகவும் மாறட்டும்.
இக-பரம் இரண்டும் அடைந்து, எல்லா நன்மையும் பெற்று, ஆனந்தத்தோடு வாழ்வீர்களாக.
பரமாத்வைத ப்ராப்திரஸ்து.
ஸர்வ மங்கள ப்ராப்திரஸ்து.
ஸர்வ ஆனந்த ப்ராப்திரஸ்து.
(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 21
ஸர்வ ஆரோக்ய ப்ராப்திரஸ்து.
ஸர்வ ஐஸ்வர்ய ப்ராப்திரஸ்து.
எல்லோருக்கும் எல்லா நன்மையும் கிடைத்து, எல்லா ஆனந்தத்தோடும் வாழ்வீர்களாக என்று பரமஶிவப்
பரம்பொருளின் வாழும் ஶக்தியாக, வாழும் வெளிப்பாடாக உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கின்றேன்.
அனைவரையும் ஆசீர்வதிக்கின்றேன்.
அனைவரையும் ஆசீர்வதிக்கின்றேன்.
பரமாத்வைத ப்ராப்திரஸ்து.
பரமானந்த ப்ராப்திரஸ்து.
ஸர்வ ஆனந்த, ஆனந்த ப்ராப்திரஸ்து.
ஸர்வ ஐஸ்வர்ய ப்ராப்திரஸ்து.
ஸர்வ மங்கள ப்ராப்திரஸ்து.
பரமஶக்தி ப்ராப்திரஸ்து.
பரமஶிவ பத ப்ராப்திரஸ்து.
'எல்லோருக்கும் எல்லா நன்மையும் உண்டாகுக' என்று பரமஶிவப் பரம்பொருளின் வாழும் வெளிப்பாடாய்,
அனைவரையும் வாழ்த்துகின்றேன், ஆசீர்வதிக்கின்றேன்.
இந்த புத்தாண்டு, இனிய புத்தாண்டாய், நல்ல நாளாய், நல்ல வருடமாய், நல்வாழ்க்கையாய்
எல்லோருக்கும் அமையட்டும்.
ஓம்
இப்பொழுது, கைலாஸ நித்யானந்த ஜெயந்தி மஹோத்ஸவம், ப்ரஹ்மோத்ஸவம்,
இரண்டாம் நாள் பூஜைகள், உத்ஸவங்கள் நிகழுகின்றன. அனைவரும் கலந்துகொள்ளுங்கள்.
தொடர்ந்து இணைந்திருங்கள். உத்ஸவங்களை, உலகம் முழுவதிலும் இருக்கும் கைலாஸத்தின்
ஆலயங்களில் நடக்கும் பூஜைகளையும், உத்ஸவங்களைக் கண்டு, பரம்பொருளின் பேரருள் பெறுங்கள்.
எல்லோரும் பரமானந்தத்தில் திளைத்து, பரமாத்வைதத்தில் திளைத்து, நித்யானந்தத்தில் நிலைபெற
ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 22
Details
The talk
- Date
- 31 December 2025
- Place
- MAHĀKAILĀSA
- Type
- JAYANTHI BRAHMOTSAVAM SPECIAL SATSANG SERIES
- Occasion
- JAYATHI MAHOTSAVAM DEC2025- JAN2026
- Language
- Tamil
The recording
- Recording
- No recording linked to this transcript
The transcript
- Status
- Live notes
- Time-synced
- Not time-synced
- Length
- 6,096 words · 34 min read
- Topics
- None recorded