☰KAILASA Library/Satsangs/கார்த்திகை தீபம் சிறப்பு ஸத்ஸங்கம் - நாள் - 14Sign in
4 December 2025

கார்த்திகை தீபம் சிறப்பு ஸத்ஸங்கம் - நாள் - 14

Live notes·Mahakailasa
The Satsang

ஓம் நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம்

நித்யானந்தேஶ்வரி பரமஶக்தி மத்யமாம்

அஸ்மதாச்சார்ய பர்யந்தாம்

வந்தே குருபரம்பராம்

உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

இணையத்தாலும் இதயத்தாலும் இணைந்திருக்கும் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், கைலாஸவாசிகள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

அருணாச்சல புராணம் - பரமஶிவ ஜ்ஞாநமும், பக்தியும், விஜ்ஞாநமும்.

தொடர் ஸத்ஸங்க நிகழ்வு, இன்று 14வது நாள்.

17 நாள் தொடர் ஸத்ஸங்கத்தில் இன்று 14வது நாள்.

36 தத்துவங்களைப் பற்றியும், அதன் ஊடாகவே பரமஶிவ பக்தியைப் பற்றியும்,

கடந்த மூன்று நாள் ஸத்ஸங்கங்களில் விளக்கிக் கொண்டிருந்தோம்.

இப்பொழுது, பரமஶிவ பக்தியைப் பற்றி முழுமையாகக் காண்போம்.

முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது,

பக்தி, தானாக வந்துவிட்டுப் போகின்ற, உடலினுடைய hormones மேலே ஏறி கீழே இறங்கும்பொழுது, அதனுடைய ups and downs மாதிரி, தானாக வந்துவிட்டுப் போகின்ற உணர்வு, உணர்ச்சிக் கொந்தளிப்பு கிடையாது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... பக்தி, பொங்கி ஓயும், எழுந்து விழும், அலைபோலே நிகழும் ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பு கிடையாது.

Conscious-ஆக உயிர் உணர்வோடு உருவாக்கப்படும், ஒரு conscious infrastructure தான் பக்தி - Conscious Experience.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்…

'எது பக்தி இல்லை' என்று புரிந்தால்தான். 'எது பக்தி' என்று புரியும்.

Emotional ups and downs... வேண்டியது கிடைக்கவில்லை என்றால், ஒரு மாதிரி மனமும், கிடைத்த உடனே ஒரு மாதிரி மனமுமாக அந்த ups and downs பொங்குகிறது இல்லையா?

அது deception. Devotion என்று நீங்கள் நம்புகின்ற deception.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: வந்து செல்லுகின்ற உணர்ச்சிக் கொந்தளிப்புகள், devotion என்று நீங்கள் நம்புகின்ற deception.

Conscious- ஆக உயிர் மலர்ந்துக் கட்டமைக்கின்ற, உயிர் மலர்ந்துக் கட்டமைக்கின்ற,

வாழ்க்கைக்கு மிகப்பெரும் துணையாக இருக்கின்ற, consciousness-ல் இருந்து super Consciousness-க்கு போவதற்கு, super Conscious breakthrough நமக்கு நடப்பதற்கு Conscious-ஆக கட்டமைக்கப்படும் உயிரின் உயர்வுத்தன்மையே பக்தி.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்:

நேற்று இந்த மதுர பாவத்தைப்பற்றி கொஞ்சம் பேசத் துவங்கினேன். ஸநாதன ஹிந்து தர்மத்தினுடைய சில ஸம்ப்ரதாயம்...கௌடிய வைஷ்ணவம், ராதா வல்லப ஸம்ப்ரதாயம்,

ராஸேஸ்வரி, ராதா ராணியையே ப்ரதாந இஷ்ட தெய்வமாக வழிபடும் ராஸேஸ்வரி ஸம்ப்ரதாயம்,

ராஸ ப்ரேம பக்தி ஸம்ப்ரதாயம் என்று சொல்லப்படுகின்ற அந்த ஸம்ப்ரதாயங்கள்... இவைகளெல்லாம் மதுர பாவத்தையே ப்ரதாநமாகக் கொண்டவை.

ஸ்ரீ வைஷ்ணவத்திலே மதுரம் உண்டு. ப்ரதாநமாக இல்லாமல் மற்ற பாவங்களோடு சேர்ந்து இதுவும் ஒரு பாவமாக உண்டு.

சைவத்திலும் உதாரணங்கள் இருக்கின்றார்கள். வீர சைவத்திலே அக்கமாதேவி போன்று

சைவத்திலும் உதாரணங்கள் இருக்கின்றார்கள், இல்லாமல் இல்லை.

இப்பொழுது, இந்த நூற்றாண்டிலே வந்த அவதார புருஷர் பகவான் ரமணர் எழுதிய

அக்ஷரமணமாலை...மதுரத்தின் உச்சம், மதுர பாவத்தின் உச்சம்.

மதுர பாவத்தினுடைய அழகு என்னவென்றால்…

பரம்பொருளை நம்முடைய A.T.M-ஆக treat பண்ணாமல், பரம்பொருளை A.T.M மாதிரி, நமக்குத் தேவையானதையெல்லாம் கொடுக்கின்ற கல்பதரு மாதிரி, நமக்கு தேவையானதையெல்லாம் வாங்கிக்கொள்வதற்கு, பிடுங்கிக்கொள்வதற்கு use பண்ணாமல்…

ஒரு சின்ன கதை. நீங்கள் எல்லோரும் கேட்டிருப்பீர்கள்...

ஒரு நாள் நாரதர் க்ரு'ஷ்ணரை த்வாரகையில் போய் பார்த்து, ''என்னைப்போல ஒரு பக்தர், பக்தன் உண்டா உன்னுடைய பக்தன்?'' என்று கேட்க, க்ரு'ஷ்ணர் புன்னகைத்துக்கொண்டே, ''நாரதா நல்ல நேரத்தில் வந்தாய். எனக்கு கொடுமையான தலைவலி வாட்டி வதைக்கின்றது. ஏதாவது அதற்குத் தீர்வு கொடுக்க வேண்டும். இந்த த்வாரகையில் இருக்கின்ற ராஜ வைத்யர்கள் எல்லோரும் எல்லா விதமான மருந்தும் கொடுத்து விட்டார்கள். அது தீரவில்லை. இது தீருவதற்கு ஒரே ஒரு மருந்துதான் இருக்கின்றது. என்னுடைய நிஜமான பக்தர்களுடைய திருவடித் தூளி - பாத தூளியை நான் தலையில் தரித்துக்கொண்டால்தான், இந்த தலைவலி தீரும். கொஞ்சம் கொண்டு வாயேன்'' என்கின்றார்.

நாரதருக்கு குலை நடுங்கிப் போயிற்று!

''ஐயோ! என் திருவடித் தூளி அவருடைய தலையிலே பட்டால் எனக்குப் பாழும் கொடும் நரகம் அல்லவா கிடைக்கும்? ஊர் ஏசும், உலகு பேசும், தூற்றும். வதந்திகளைப் பரப்புவதிலேயே வல்லவனாக இருக்கும் என்னைப்பற்றி பல வதந்திகள் பரவுமே?

எப்படியாவது இதிலிருந்து நாம் கழண்டு கொள்ளலாம்'' என்று பெருமானிடம்,

''கொண்டு வருகின்றேன்... அப்படியே ஆகட்டும் பெருமானே'' என்று ஓடுகின்றார் ஸத்யபாமா ருக்மிணியிடம்.

ஸத்யபாமா நடுநடுங்கிப் போய், ''நாரதரே இவ்வளவு நாள் உங்களை கலகக்காரர் என்று தான் நினைத்தேன். இப்பொழுதுதான் எனக்குப் புரிகிறது, நீங்கள் பைத்தியம் பிடித்தவரோ என்று. சகுனியை விட மோசமாக சதி செய்கின்றீரே?'' என்கிறார்.

ருக்மிணியும் அதையேத்தான் சொல்கிறார், ''அய்யய்யோ கொடும் நரகம் வந்து வாய்க்குமே?'' என்கிறார்.

நேராக ஓடினார் ப்ருந்தாவனத்திற்கு. கோபிகைகளிடம் முறையிட்டார் நாரதர்.

அதைக் கேட்ட அந்த வினாடியே ஒரு கோபிகை தன்னுடைய மேலாடையைக் கழற்றி கீழே விரித்தாள். சகல கோபிகைகளும் வந்து அந்த ஆடையின் மேலே குதித்தார்கள்.

தங்களுடைய கால் தூசி அதன் மீது படுமாறு குதித்தார்கள்.

நாரதர் கேட்டார், ''என்ன செய்கிறீர்கள்? உங்களுடைய பாதத் தூளியை க்ரு'ஷ்ணன் தலையில் தரித்தால், உங்களுக்குக் கெட்ட பெயர் வரும். ஊர் உங்களை பழிக்கும், உலகம் உங்களை பழிக்கும். கொடும் நரகம் கிட்டும்'' என்கிறார்.

கோபிகைகள், ''வாயை மூடிக்கொண்டு சொல்வதைச் செய்யுங்கள். எங்களில் யார் சிறந்த பக்தர் என்று எங்களுக்குத் தெரியாது. அதனால் எல்லாரும் மொத்தமாக குதிக்கின்றோம். யாருடைய திருவடித் தூளி பட்டாவது பெருமானுடைய தலைவலி சரியானால் போதும். அட பாவிகளா! அவரை நன்றாகப் பார்த்துக்கொள்வீரக்ள் என்று சொல்லி தானேடா அனுப்பினோம்? அவர் தலைவலியைக்கூட சரி பண்ண முடியாமல் என்னய்யா பண்றீங்க? இதைக் கொண்டுபோய் அவருக்குக் கொடு. தலைவலி சரியானால் நல்லது. ஆகவில்லை என்றால், அவரை உடனே அனுப்பி விட்டுவிடுங்கள். அவரை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம்'' என்று அந்த எல்லா கோபிகைகளுடைய திருவடித் தூளியையும் மூட்டை கட்டி, மூட்டையை நாரதரிடத்திலே கொடுத்தார்கள்.

நாரதருக்குப் ''பளீர்'' என்று புரிந்தது!

மோக்ஷத்தைக்கூட A.T.M CARD மாதிரி, A.T.M Machine மாதிரி வாங்கிக்கொள்வதற்கு, பரம்பொருளை உபயோகப்படுத்தாததுதான் - மதுர பாவ பக்தி.

நாரதர் சொல்றாரு, ''பாழும் நரகு வரும். மோக்ஷ, பரமுக்தி கிடைக்காது''.

கோபிகைகள் சொன்னார்கள், ''அதெல்லாம் இப்போ யாருக்கு வேண்டும் என்று கேட்டோம் நாங்க?

நாங்கள் கேட்டோமா அதெல்லாம் வேண்டும் என்று? கொண்டு போய்யா, முதல்ல அவர் தலைவலியை சரி பண்ணுய்யா'' என்கிறார்கள்.

கொண்டு போய் கொடுத்தார்.

இங்கு தலைவலி இருந்தால் தானே சரியாவதற்கு? அதை பார்த்த மாத்திரத்திலேயே,

க்ரு'ஷ்ணர் அதை தரித்துக் கொண்டு ஆனந்தக் கூத்தாடினார்.

ஏனென்றால், நாரதருக்கு என்ன புரியவேண்டுமோ அதை புரியவைத்து விட்டார்.

சற்றே புரிந்துகொள்ளுங்கள்.

உங்களுடைய energetic posture-ஐ ஸாக்ஷி பாவத்திலோ, 'நான்' என்று எனக்குள் பொங்கும் இந்த உணர்வு பரமூலத்தில் இருந்துதான் பொங்குகிறது என்கின்ற, 'நான் பரம்' -'சோஹம்' என்கின்ற ஸத்யத்திலோ, 'அஹம் ப்ரஹ்மாஸ்மி' போன்ற பரம ஸத்யத்தை உங்களுடைய energetic posture-ஆக நீங்கள் வாழும்பொழுது, உங்களையும், உங்கள் life-யும் நீங்கள் approach பண்ணுகின்ற attitude-ஆக இந்த பரம ஸத்யம் மாறும்பொழுது, உங்களுடைய emotional baseline அளவில்லாத பெருநன்றியாலே பொங்கும்.

இந்த awarness-க்காகவே நன்றி சொல்வீர்கள்.

நீங்கள் இருக்கும் இருப்பை நினைந்தே, இருப்பைப் பார்த்தே தெள்ளேனம் கொட்டிக்கொண்டாடி, ஆனந்த தாண்டவம் ஆடி, ஆர் பழித்தாலும்…

சூடோ சொரணையோ, ஊர் பழித்தாலும் உலகு பழித்தாலும் 'பழிக்கிறார்கள்' என்கின்ற எண்ணமோ, வலியோகூட இல்லாது, சிந்தை நிறைந்து உங்களுடைய emotional baseline அளவில்லாத ஒரு gratitude, நன்றியில் பொங்கும்.

உங்களுடைய emotional baseline அளவு இல்லாத, அளக்க முடியாத, காரணமே தெரியாத, காரணம் சொல்ல இயலாத ஒரு அளப்பரிய நன்றியிலே, நன்றியால் விளையும் ஆனந்தக் கொண்டாட்டத்திலே பொங்கி வழியும்பொழுது உங்களுக்குள் ஏற்படுவதுதான், conscious-ஆக உங்களுக்குள் உருவாவதுதான் - பக்தி.

இந்த மூன்று விஷயங்களைப் புரிந்துகொள்ளுங்கள்.

Inner dialogue, Emotional baseline, Energetic posture.

Inner dialogue என்பதுதான் உங்களுடைய length dimension - உள்ளே ஓடிக்கொண்டே இருக்கின்ற அந்த வார்த்தைகள்.

Emotional baseline தான் உங்களுடைய breath dimension - உணர்வு, உணர்ச்சிகள்.

Energetic posture தான் உங்களுடைய depth dimension - Conscious decision எடுத்து உங்களுடைய will-லினால், உங்களுடைய ஶக்தியாலே நீங்கள் உருவாக்கிக்கொள்ளக் கூடியது, உருவாக்கிக்கொள்ள முடிவது. உருவாக்கிக்கொள்ள முடிவது, அதுதான் energetic posture.

உங்களுடைய energetic posture-ஐ, ஸாக்ஷியை ஸாக்ஷியாய்ப் பார்த்தல், observer- ஐ observe பண்ணுவது, witness-ஐ witness பண்ணுவது, 'நான்' எனும் உணர்வும், அந்த 'நான்' அனுபவிக்கும் அனைத்தும் எவ்வாறு எழுகிறது, எவ்வாறு இருக்கின்றது என்கின்ற தோன்றா நிலையில், துரியத்தில் இருக்கின்ற அந்த உணர்வை, energetic posture-ஐ, conscious-ஆக build பண்ண ஆரம்பித்துவிட்டீர்களானால், உங்களுடைய emotional baseline அளப்பரிய பெருநன்றி...

காலையில் விழிக்கும்பொழுதே, இந்த awareness-க்காகவே நன்றி சொல்வர்கள்.

WOW! I am aware!

ஐயா, நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: தொடர்ந்து இந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு அலைகளிலேயே மாட்டிக்கொண்டிருந்தீர்களானால், கடலின் ஆழமான பகுதியான உங்களுடைய

பேருணர்வை உணராமலேயே, வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி சீரழித்து இழந்து விடுகிறீர்கள்.

கடலின் மேற்பகுதியிலேயே வாழ்க்கையை அழித்துவிடுகின்றீர்கள். இழந்துவிடுகின்றீர்கள்.

யார் ஒருவர் கடலின் ஆழத்தில் இருக்கும் இந்த உணர்ச்சி கொந்தளிப்புகள், உணர்வு கொந்தளிப்புகள்,ups,downs,hormones -னாலும், chemical-னாலேயும், மேலேயும் கீழேயும் போகின்ற சகலவிதமான அனுபவங்களையும் தாண்டி…

பேருணர்வு...

இது எல்லாம் எதன் மீது நடக்கின்றதோ, அதனுடைய மூலமான ஸாக்ஷிக்கு ஸாக்ஷியாக இருக்கும் அந்தப் பேருணர்வில் இருக்கத் துவங்கினீர்களானால், காலையில் விழிக்கும்பொழுது அந்த பேருணர்வு வரும்பொழுதே அதைப் பார்த்து 'ஆஹா!' என்று இந்த பேருணர்விற்காகவே பெருநன்றி பொங்கும்.

அந்த பெருநன்றியே பக்தி!

உங்களுடைய energetic posture-ஐ…

'நான் பரம்' என்பதுகூட இல்லை... பரம்... இருப்பது பரம் மட்டும்தான். அதில் 'நான்' என்று ஒன்றும், 'உலகம்' என்று ஒன்றும், 'கடவுள்' என்று ஒன்றும் தனித்தனியாக எல்லாம் எதுவும் எழவில்லை.

இருப்பது, தன்னுடைய இருப்பை அனுபவிக்கின்றது.

அந்த இருக்கின்ற ஒன்றே ஒன்றான பரம், அதன் இருப்பிலே இருப்பதை, energetic posture -ஆக நீங்கள் மாற்றும்பொழுது, உங்களுடைய awareness-க்காகவே, உங்களுடைய பேருணர்விற்காகவே, உங்களையும், வாழ்க்கையையும் கொண்டாடும் பேரானந்தம் பொங்கும்.

ஐயா, எதை இழந்தாலும் பரவாயில்லை…

இதை இழந்துவிடாதீர்கள்.

இதுதான் ஒரு மனிதன் அடைய வேண்டிய உச்சகட்டம்.

உண்மையான வாழ்வின் பயன்.

உயிரின் உயிர்ப்பின் நோக்கம்.

உயிரின் உயிர்ப்பின் பயன்.

மனித வாழ்வின் பயன் மட்டுமல்ல,

உயிர் உயிர்ப்பதற்கே நோக்கம் இதுதான்,

உயிர் உயிர்ப்பதற்கான பயனே இதுதான்.

Energetic posture-ஐ மட்டும் மாற்றினீர்களானால் போதும், emotional baseline தானாக பொங்கிப் பெருகும் நன்றி உணர்வால் வரும் நல்-பக்தியாய் மலரும்.

பெருமானை A.T.M machine மாதிரி உபயோகப்படுத்துகின்ற எல்லாரும் புரிந்துகொள்ளுங்கள்,

உங்களுடைய deception-ஐ தான் devotion என்று கடைப்பிடித்துக்கொண்டிருக்கின்றீர்கள்.

ஒன்றும் கேளாத பக்தி இல்லை ஐயா...

ஒன்றுமே தேவையில்லாத நன்றி உணர்வால் பொங்கி நிறையும் பக்தி.

அப்பொழுது என்ன ஆகும்?

Inner dialogue-ம் conscious-ஆக, பரத்தை வாழும், பரத்தை வெளிப்படுத்தும்,

பரமாய் inner dialogue-ம் வெளிப்படும்.

பக்தியினுடைய ரச பாவங்கள்...

பொதுவாக வேதாந்தத்தில் ஐந்து பாவங்களைச் சொல்வார்கள்.

ஸக பாவம்,

தாஸ பாவம்,

மாத்ரு பாவம்,

வாத்ஸல்ய பாவம்

மதுர பாவம் என்று சாதாரணமாகச் சொல்வார்கள்.

ஆனால் ஆழ்ந்து பார்த்தால் பத்து பாவங்கள் இருக்கின்றன.

அந்த பக்தி பாவங்களைப் பற்றியே, நாரதர் பக்தி ஸுத்ரம் செய்திருக்கின்றார். அதற்கு பாஷ்யம், பக்தி ஸுத்ரத்தினுடைய பாஷ்யம், இந்த பத்து பாவங்களையும் மிக மிக அருமையாக விளக்குகின்றது.

பத்து பாவங்களிலே பரம பாவம், மஹா பாவம் - மதுரமே!

ஏனென்றால், அங்கு gold digging கிடையாது. ஒரு gold digger-ருக்கு மதுர பாவம் வராது.

பரம்பொருள் A.T.M machine கிடையாது. நம்முடைய wish list-ஐ fulfil பண்ணுகின்ற delivery boy கிடையாது.

இருப்பதைப் கண்டே, எல்லையில்லாத உணர்வு நிறைவினால் பொங்கும் பேரானந்தம்.

அந்தப் பேரானந்தம், பெருநன்றியால் பொங்கி conscious -ஆக உருவாகின்ற

inner infrastructure பக்தி!

உண்மையில், பகவான் ரமண மஹரிஷி அக்ஷர மணமாலையிலே,

'நாம் எவ்வாறு அண்ணாமலையாரோடு அருணாச்சல பரம்பொருளோடு தொடர்பு கொள்ளவேண்டும்' என்கின்ற பாடத்தைச் சொல்லுகின்றாரே தவிர, அவர் உண்மையில், அதை அடைந்த பரிபூர்ண ஆனந்த நிலையில் இருந்துத்தான் இதைப் பொழிகின்றார்.

இது உண்மையில் ஐயா, அண்ணாமலையார் தன்னை அடைவதற்கான route map-ஐ போட்டு நமக்குக் கொடுத்திருக்கின்றார். அதுதான் அக்ஷரமண மாலை. 'இந்த வழியா வா, என்கிட்ட வந்துருவ' என்று தன்னை அடைவதற்கு, தானே அருணாச்சலப் பரம்பொருள் காட்டிய வழிதான் அக்ஷரமண மாலை.

ரமண மகரிஷி, அருணாச்சல பரம்பொருளின் பரம அவதாரம்.

எல்லோரும் தன்னை அடைவதற்கு, அருணாச்சலப் பரம்பொருள் தானே போட்டுக் கொடுத்த map தான் இந்த அக்ஷரமண மாலை.

ஆழ்ந்து கேளுங்கள்:

எந்த உணர்விலே இருந்து ஒரு கவிதையோ, ஓவியமோ, பாடலோ வருகின்றதோ...

நீங்கள் அந்த கவிதை, பாடல், ஓவியத்தை, ரசிக்கும்பொழுது, ருசிக்கும்பொழுது, புசிக்கும்பொழுது - அதே உணர்விற்கு உங்களைக் கொண்டு செல்லும்.

Intense-ஆன perverted lust -ல் இருந்து ஒரு music வந்ததென்றால், அதை நீங்கள் கேட்கும்பொழுது, உங்களையும் அதே உணர்ச்சிக்குத்தான் அது கொண்டு செல்லும்.

பரமானுபூதியிலிருந்து ultimate -ஆன energetic posture, emotional baseline -ல் இருந்து

பகவான் ரமணர் வெளிப்படுத்தியது இந்த அக்ஷரமண மாலை.

இதை ஆழ்ந்து digest பண்ணினீர்களானால்... ரசிக்க, ருசிக்க, புசிக்க, நீங்களும் அதே உணர்வு நிலைக்குச் செல்வீர்கள்.

இதில் பெருமான் express பண்ணுகின்ற sentiments எல்லாம் பாருங்கள்…

எனை அழித்திப்போ தெனைக் களவாவிடில்

இதுவோ ஆண்மை அருணாசலா!

- அதாவது உங்களுடைய நாயகனுடைய ஆண்மையைக் கேள்வி கேட்டீர்களானால், அதுதான் மிக

மோசமான ego-வை touch பண்ணுவது. Pain point-ஐ touch பண்ணுவது. இரண்டுதான் நடக்கும், ஒன்று relationship-ஐ உடைத்துக்கொண்டு ஒதுங்கிவிடுவார்கள் அல்லது நீங்கள் எதை வைத்து குத்திக் காட்டுகின்றீர்களோ, அதைச் செய்து காட்டுவார்கள். அவர்கள் ஆண்மையை prove பண்ணுவதற்கு அதைச் செய்து காட்டுவார்கள்.

இங்கு, 'கட்டாயமாக relationship-ஐ உடைத்துக்கொண்டு பெருமான் ஒதுங்கிவிடமாட்டார்...

நாம் ஆண்மையைக் கேள்விகேட்டு, எதை வைத்துக் குத்துகின்றோமோ அதைச் செய்துதான் காட்டுவார்' என்கின்ற ஒரு ஆழமான, logic-ஆல் புரிந்துகொள்ள முடியாத trust. அது இருப்பதனால்தான் ரமண மஹரிஷி, ஆண்மையைக் குத்திக்காட்டுகின்றார்.

எனை அழித்து இப்போது எனை களவாவிடில்

இதுவோ ஆண்மை அருணாசலா!

- அப்பொழுது உனக்கு ஆண்மை இருக்கிறது என்று prove பண்ணி, இப்பொழுது எனக்கு பரமானுபூதியைக் கொடு!

பாவம்.. இந்த தலைமுறை 90's kids, Gen-Z எல்லாம் இந்த trust-ஐயே இழந்துவிட்டீர்கள். வாழ்க்கையில் எந்த உறவு மீதும், இந்த மாதிரி ஒரு ஆழமான trust இல்லாமல், ரொம்ப

ஆழமில்லாத ஒரு வாழ்க்கையாகப் போய்விட்டீர்கள். பார்க்கும்பொழுது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

அந்த cheap thrill-ம், immediate gratification-ம், பரபரவென்று, 'இப்ப என்ன நடக்கும்? இப்ப என்ன? இன்னைக்கு நான் கேட்பதைக் கொடுக்கவில்லை என்றால், break-up. இன்னைக்கு எனக்கு attention கொடுத்து என் mood swing-ஐ attend பண்ணவில்லை என்றால் break-up அல்லது இன்னைக்கு நான் கூப்பிடுகின்ற இடத்திற்கு என் girl friend வரவில்லை என்றால், break-up அல்லது இவளைவிட better-ஆன ஒரு பொண்ண பார்த்துட்டா break-up அல்லது இவனைவிட ஒரு better-ஆன பையனைப் பார்த்துட்டா, பணக்கார பையனோ அல்லது வேறு ஒரு விதத்தில் better-ஆன பையனோ பார்த்துட்டா break-up.'

அதனால், இது மாதிரியான…

ஐயா, நான் வந்து இந்த physical polygamy பற்றிப் பேசவில்லை.

Mental polygamy பற்றிப் பேசுகின்றேன். இந்த mental polygamy என்ன செய்யும் என்றால், உங்களை வேர் இல்லாத மனிதராக, வேர் பிடுங்கிய, வேர் அறுந்த மனிதனாக ஆக்கிவிடும் ஐயா.

Trust தான், life-ல் உங்களைச் சுற்றி யார் யார் மீது…

அதாவது உங்களைச் சுற்றி இருக்கின்ற உறவுகளுக்கும், உங்களுக்கும் நடுவில் இருக்கின்ற trust-னுடைய ஆழம்தான் conscious potency ஐயா. நீங்கள் அவர்கள் மீது வைத்திருக்கின்ற trust, அவர்கள் உங்கள்மீது வைத்திருக்கின்ற trust.

Trust is not about certainty.

It is about he will always be for my interest.

'அவர் என்ன மாதிரி முடிவெடுப்பார் என்று என்னால் certain -ஆகச் சொல்ல முடியாது.

ஆனால் எனக்காக மட்டும்தான் முடிவெடுப்பார். அதாவது என்னுடைய interest தான் first priority-ஆக வைத்துத்தான் அவர் முடிவெடுப்பார்' - அதுதாங்க ஐயா trust.

உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்கள் மீது வைத்திருக்கின்ற trust, நீங்கள் அவர்கள் மீது வைத்திருக்கின்ற trust. இந்த trust-டோடு, depth–தோடு இருக்கின்ற energetic posture, அதுதான் conscious potency ஐயா. அது மாதிரி ஒரு trust பரம்பொருளோடு வந்துவிடுவதுதான் வாழ்க்கை!

நான் நேற்று அண்ணாமலையானைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து நிறைய comments.

பொதுவாக, ஸத்ஸங்கம் முடிந்து அன்று இரவு...

அதாவது, இரவில்தான் ஸத்ஸங்கம் அளிக்கின்றோம். அந்த ஸத்ஸங்கம் முடிந்த பிறகு night ஒரு 12 மணி அளவில் அமர்ந்து, மொத்த comments-யும் scrap பண்ணி sentiment analysis பண்ணி, மறுநாள் என்னென்ன கேள்விகளுக்கு answer பண்ணவேண்டும் என்று chose பண்ணி எடுப்போம்.

நேற்று வந்திருந்த நிறைய கேள்விகள், sentiment-க்கு இப்பொழுது respond செய்கின்றேன்.

ஐயா அண்ணாமலையானுக்கும் எனக்கும் இருக்கின்ற உறவு, monologue கிடையாது.

அதாவது, 'நான் மட்டும் பேசுறேன், அவர் திரும்ப பதில் சொல்லவில்லை' என்கின்ற monologue -ம் கிடையாது. Dialogue-ம் கிடையாது. 'நான் பேசுகிறேன், அவர் உடனே பதில் பேசுகிறார்.

அதனால் வருகின்ற தைரியம். இப்பொழுது அவர் சொல்வதெல்லாம்… அவர் எனக்கு என்ன பதில் சொல்கின்றாரோ அதெல்லாம் நடக்கிறது' என்ற இந்த dialogue-ம் கிடையாது ஐயா.

'நீங்கள் மட்டும் பேசிக்கொண்டிருக்கின்றீர்கள், அவர் பேசாமல் இக்கின்றார்' என்ற monologue-ம் கிடையாது அல்லது 'நீங்கள் பேசுகின்றீர்கள், அவரும் பதில் சொல்கின்றார்' என்ற dialogue -ம் கிடையாது ஐயா. Monologue-ம் கிடையாது, dialogue -ம் கிடையாது.

ஒரு ஆழமான trust.

அதை explain பண்ணினால், 'எனக்கு நல்லா தெரியும், அவர் எனக்கு எது நல்லதோ, அதை மட்டும் தான் செய்வார். நான் என் வாழ்க்கையில் அவரை மட்டும்தான் first priority-யாக வைத்து

அதை நோக்கி மட்டும்தான் சிந்திப்பேன்'... இது என்னவோ ஒரு ஆழமான, ஒரு energetic posture-ஆக settle ஆகிவிட்டது ஐயா.

Dialogue-ம் இல்லாத, monologue-ம் இல்லாத trust ஐயா.

இருப்பின் மீது ஏற்படும் ஶ்ரத்தை.

நான் ஒரு சின்ன வேண்டுகோள் வைக்கின்றேன் ஐயா...

முக்கியமாக Gen Z. தயவுசெய்து இந்த trust-ஐ உருவாக்கிக்கொள்கின்ற மாதிரி, இந்த trust-ஐ experience பண்ணுகின்ற மாதிரி, human relationships ஒன்று இரண்டு build பண்ணுங்கள் ஐயா. பக்தியை build பண்ணுங்கள், அதுதான் பரமப் பிரயோஜனம். வாழ்க்கையினுடைய பரமப் பிரயோஜனம் அதுதான். அதில் சந்தேகம் இல்லை. உடனடியாக ஏதோ ஒன்று இரண்டு relationship ஆவது, இந்த ஆழமான trust…

எப்பொழுது பார்த்தாலும் அடுத்தவன் bedroom-ஐ எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கின்ற தரித்திரம் பிடித்த இந்த scandals, rumours, 'யார் யாரோடு ஓடிப் போனார்கள், யார் யாரை வைத்துக்கொண்டிருக்கிறார்கள், யார் யாரை இரண்டாவது கல்யாணம் செய்துகொண்டார்கள்,

யார் யாரை எட்டாவது கல்யாணம் செய்துகொண்டார்கள்' - இதுதான் ஒரு cheap-ஆன வேரறுந்த மரம் போலே தன் வாழ்க்கையில் எந்த தரமான ஶ்ரத்தையுடைய trust-டோடு இருக்கின்ற relationship இல்லாததனால், எங்கு வாயை வைக்கலாம், எந்த குப்பை தொட்டியில் வாயை வைக்கலாம் என்று சுற்றுகின்ற நாய் மாதிரி அலைந்துகொண்டிருக்கின்றீர்கள் பாருங்கள்.

அதிலும் social media-வில்… social media-வில் sexting-ம் flirting-ம் பண்ணுகின்றவர்கள், உண்மையிலேயே mental impotent ஐயா. தன் மீதே தனக்கு ஶ்ரத்தையோ, தைரியமோ, உறவுகளை உருவாக்குகின்ற ஶ்ரத்தையோ, தைரியமோ இல்லாத mentally impotent. அவர்கள்தான், சோஷியல் மீடியாவில் flirt பண்ணிக்கொண்டு, sext பண்ணிக்கொண்டு உட்கார்ந்துகொண்டிருப்பார்கள் ஐயா. Sexting பண்ணிக்கொண்டு உட்கார்ந்துகொண்டிருப்பார்கள் ஐயா. இந்த scandals -ஐயே பார்த்துக்கொண்டிருப்பது, rumours, scandals, இதைப் போய் அடுத்தவன் bedroom-ஐ எட்டிப் பார்ப்பது.

அதையெல்லாம் விட்டுவிட்டு, ரமண மஹரிஷி தன்னுடைய secret life-ஐ திறந்து வைக்கின்றார்... இதைப் பாருங்கள் ஐயா. Atleast இதைப் பார்த்தீர்களானால், வாழ்க்கையின் பரமப் பிரயோஜனம் புரியும் ஐயா.

அடுத்தவன் bedroom-ஐ எல்லாம் எட்டிப் பார்ப்பதை விட்டுட்டு, இந்த scandals, rumours-க்கு நாக்கை தொங்கப்போட்டு அலைந்துகொண்டு, எப்பொழுது பார்த்தாலும் sexting, flirting-என்று சுற்றிக்கொண்டு இல்லாமல், ஆழமான, நினைத்தேப் பார்க்க முடியாத trust-டோடு, depth-த்தோடு உறவுகளை உருவாக்குங்கள்.

சும்மா வாழ்க்கையில் ஒரு உறவு, இரண்டு உறவு... அந்த மாதிரி இருந்தால்கூட, உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற அனுபவம் வேறு நிலைக்குப் போய்விடும், வேறு level-க்கு போய்விடும்.

ரொம்ப easy-யாக யார் தெரியுமா build பண்ண முடியும்? அம்மாவிடம் build பண்ண முடியும். ஏனென்றால், உங்களுக்கு ஏற்கனவே தெரியும், தாய்க்கு அவர்களை விடவும் நீங்கள்தான் first priority. தாயோடு இந்த உறவை, ஆழமாக உயிரை அவர்கள் முன்னால் திறந்து வைக்க முடியும். அவர்கள், அவர்களுடைய வாழ்க்கையையே உங்கள் முன்னால் திறந்து வைக்க முடியும்.

தாயோடு இந்த இனிமையான உறவு வந்தது என்றால், அந்த ஶ்ரத்தை உங்களுக்குக் கொடுக்கின்ற தைரியம், வாழ்க்கை மீது உங்களுக்குக் கொடுக்கின்ற தைரியம், அடுத்தடுத்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் உருவாக்கிகொள்ள வேண்டிய உறவுகள்மீது வர ஆரம்பிக்கும்.

தந்தையோடு அதுவே வர ஆரம்பிக்கும்,

குருவோடு வர ஆரம்பிக்கும்.

கணவனோ, மனைவியோ, girl friend-ஓ, boy friend-ஓ உங்கள் வாழ்க்கை துணைவன் மீது வர ஆரம்பிக்கும். இது மாதிரி ஒரு deep trust இருக்கின்ற, ஒரு ஆணையோ, பெண்ணையோ வாழ்க்கையில் உணர்ந்துவிட்டீர்களானால்…

இன்னொன்று தெரிந்துகொள்ளுங்கள், யாருமே உலகத்தில் நல்லவரோ, கெட்டவரோ கிடையாது.

இந்த relationship, இந்த trust வந்து நமக்குள் இருக்கின்ற ஶ்ரத்தையினுடைய mirror.

சும்மா எப்பொழுது பார்த்தாலும், 'இல்ல, இல்ல... நான் ஒரு பொண்ண உயிருக்கு உயிரா காதலிச்சேன். அவ என்னை ஏமாத்திட்டா சாமி. நான் ஒரு பையனை உயிருக்கு உயிரா காதலிச்சேன். அவன் என்னை ஏமாத்திட்டு வேற ஒரு பொண்ணோட கல்யாணம் பண்ணிட்டான் சாமி' - இதெல்லாம் முழுக்க fraud. முழுக்க முழுக்கப் பொய்.

இந்த 90's kids, 90's kids, love failure story எல்லாம் நம்புவதற்கு வேறு எவனாவது இருப்பான், அவனைப் போய் பார்த்துப் பேசிக்கொள்ளுங்கள். சொல்லிக்கொள்ளுங்கள்.

உங்களுடைய சுய-பட்சாதாபக் கதைகள் அனைத்தும் பொய். சுய-பட்சாதாபக் கதைகள் சொல்லுகின்ற அனைவருக்கும், ஒரே ஒரு விஷயம்தான் செய்யப்பட வேண்டும். பிஞ்ச செருப்பெடுத்து அடி அடி என்று அடிப்பது. அதுதான் செய்யப்பட வேண்டும்.

உங்களை எவன் ஏமாற்றினாலும், நீங்கள் உள்ளுக்குள் ஶ்ரத்தை இல்லாமல், ஏமாற்றுவதற்குத் தயாராக இருந்தீர்கள், அவன் முந்திக்கொண்டான். அவ்வளவுதான் ஐயா.

இதெல்லாம் பரம ஸத்யம், மாற்றவே முடியாது.

உடனே emotional-ஆக message போடாதீர்கள்…

'என்ன சாமி? உங்களுக்கு என்ன பத்தி தெரியாது. என் வாழ்க்கையில் அப்படி எல்லாம் கிடையாது, நீங்க சொல்றதெல்லாம் உண்மை கிடையாது' என்று டக டக டக டக டக டக என்று வேக வேகமாக கொந்தளித்து type பண்ண ஆரம்பிக்காதீர்கள்.

பரம ஸத்யங்கள் மாறுவதில்லை.

ஒரு புலிகூட ஐயா, உங்கள் உடலில் பயம், தாக்குவதற்குத் தயாரான toxins மழை மாதிரி பொழிந்து, அந்த smell புலிக்கு வந்தால்தான் உங்களைத் தாக்கும் ஐயா. நீங்கள் பயம் மற்றும் பயத்தினால் fight பண்ணுவதற்குத் தயாராகின்ற, Flight or fight.... இந்த இரண்டிற்கும் தயாராகின்ற… உடல் அந்த மாதிரி தயாராகும்பொழுது, உடல் முழுவதும் ஒரு neuropeptides, அந்த chemical பரவி ஒரு smell வரும். அந்த smell வந்த பிறகுதான் புலி attack பண்ணும்.

உறவுகளில், இதுதான் பரம ஸத்யம்.

'இல்ல சாமி, அப்படி எல்லாம் இல்ல சாமி. நான் ரொம்ப உயிருக்கு உயிரா, உயிருக்கு உயிரா

என் வாழ்க்கையே கொடுத்து நேசிச்சேன் சாமி. அவ US மாப்பிள்ளை கிடைச்ச உடனே டாட்டா காட்டிட்டு போயிட்டா சாமி' என்றால்...

90's kids, இந்த மாதிரி லூசுத்தனமாக உட்கார்ந்து சுய-பட்சாதாபப் பொய்களை எல்லாம் என்னிடம் எடுத்து வந்து சொல்லிக்கொண்டிருந்தீர்களானால், அப்பொழுது மொட்ட பசங்களாகவே சுற்றிக்கொண்டிருங்கள். அவ்வளவுதான்.

அந்த காலகட்டத்தில் உங்களுக்கும் அவ்வளவுதான் maturity இருந்தது. நீங்களும் அப்படி இப்படித்தான் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தீர்கள். அவர்களும் அதை அழகாக smell பண்ணுகிறார்கள். அதனால் இருவருடைய consciousness-ம், உங்களுடைய வார்த்தைகளைத் தாண்டிய, உங்களுடைய இருப்பை பகிர்ந்துக்கொண்டதனால், அவர்கள் அந்த முடிவு எடுத்தார்கள். அவ்வளவுதான்.

அதனால், யார் முடிவையும் காரணம் காட்டி, உங்களுடைய ஶ்ரத்தையின் ஆழத்தைக் குறைக்காதீர்கள். குறைக்கின்றீர்கள் என்றால், 'ஏற்கனவே என் girl friend ஓடிப்போய்விட்டதனால்,

இந்த girl friend-டோடு நான் ரொம்ப cautious-ஆக பழகிக்கொண்டிருக்கின்றேன்.

ஏற்கனவே என் boy friend என்னை ஏமாற்றிவிட்டதனால், இந்த relationship-ல் ரொம்ப careful ஆக இருக்கின்றேன்' என்றால், மொட்ட பையனாகவே சுற்றி செத்து போய்விட வேண்டியதுதான்.

ஆழமான உறவுகள்... ஶ்ரத்தை, த்யாகத்தை அடிப்படையாக வைத்து நீங்கள் உருவாக்கும் உறவுகள், உங்களை முழுமையாக்குகிறது. உங்களை வாழ்வின் உச்சத்திற்குக் கொண்டு செல்கின்றது. அதிலிருந்துதான், பரம்பொருளோடு, இந்த ஆழமான உறவை உருவாக்கிக் கொள்ளும் conscious capacity வந்துவிடும் ஐயா.

பெருமான் - அருணாச்சல பரம்பொருள், அருணாச்சல கருணாமூர்த்தி, அருணாச்சலேஶ்வர கருணாமூர்த்தி, சந்திரசேகர ஸ்வரூபத்திலே தெப்பத்தில் வீற்றருளுகின்றார்.

அருணாச்சல ஸ்மரணம் செய்து, ஸ்மரணாத் அருணாச்சலம், ஸ்மரணாத் அருணாச்சலம்.

'சொலல்' இல்லாத ஸ்மரணம் செய்யுங்கள்.

சொலல் இல்லாத ஸ்மரணத்தோடு ஆழ்ந்து கேளுங்கள்.

உங்களைச் சுற்றி இருக்கின்ற உறவுகளில் இந்த ஶ்ரத்தை, trust-ஐ உருவாக்கக் கற்றுக்கொண்டீர்களானால், conscious-ஆக பரம்பொருளோடும் இந்த உறவு உருவாகிவிடும், மலர்ந்துவிடும்.

உண்மையில் சொல்கிறேன் ஐயா…

என் வாழ்க்கையில் சிறுவயதிலே என் தாயாருக்கும் எனக்கும் இருந்த ஶ்ரத்தையும்,

என் தந்தைக்கும் எனக்கும் இருந்த ஶ்ரத்தை,

நான் அவர்களை நம்பியது, அவர்கள் என்னை நம்பியது,

என் குருமார்களுக்கும் எனக்கும் இடையிலே இருந்த ஶ்ரத்தை,

நான் அவர்களை நம்பியது, அவர்கள் என்னை நம்பியது,

இதனுடைய ஆழம்தான் அண்ணாமலையான் மீது, பரமஶிவ பரம்பொருள் மீது அதே ஶ்ரத்தையாக மலர்ந்தது ஐயா.

ஒரு நல்ல வளர்ப்பு, உங்களை பரம ஜ்ஞாநியாக்கிவிடும்.

நல்ல ecosystem, இந்த society-யே சேர்ந்து குழந்தையை வளர்க்கின்ற ecosystem ஐயா. வெறும் ஒரு தாய், ஒரு தகப்பன், ஒரு அண்ணன், ஒரு தம்பி... அந்த மாதிரி ஒரு சின்ன...இந்த சிறு குடும்பங்கள்…

சிறு குடும்பங்கள்தான் ஸநாதன ஹிந்து தர்மத்திற்கு நிகழ்த்தப்படும் மிகப்பெரிய துரோகம்.

சிறு குடும்பங்கள் வாழ்க்கைமுறை ஸநாதன ஹிந்து தர்மத்தை அழிப்பதற்காகச் செய்யப்படும் மிகப்பெரிய சதி.

மனிதன் முழுமையான ஜ்ஞாந வாழ்க்கை வாழாமல், தனித்தனியாக, depended-ஆக இருப்பதற்காக, அவனை அடிமையாக வைப்பதற்காக, மனித இனத்தின் மீது நிகழ்த்தப்படும் சதிதான் இந்த சிறு குடும்பங்கள் - small families.

ஆழ்ந்து கேளுங்கள்: சின்ன குழந்தையாக இருக்கும்பொழுதே பல உறவுகளோடு ஆழ்ந்த ஶ்ரத்தையோடும் நம்பிக்கையோடும்... அதாவது நிறைய மாமாக்கள், நிறைய சித்தப்பாக்கள், பெரியப்பாக்கள், நிறைய அக்கா, தங்கைகள், நிறைய அத்தைகள் என பல உறவுகள், large families, அதிலும் tight-knit- large families... இதில் பிறந்து வளருகின்ற குழந்தைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

உறவுகளின் பலமும், இனிமையும், அந்த உறவுகள் உங்களை எந்த அளவிற்கு முழுமையாக்குகிறது என்கின்ற உணர்வு பலம், trusted -ஆக நீங்கள் நம்புகின்ற, அவர்கள் நம்புகின்ற உறவுகளை உருவாக்குவதுதான் - conscious potency.

இங்கு ரமண மஹரிஷி அந்த conscious potency-ஐ தான் காட்டுகின்றார்.

இந்த வார்த்தை மூலமாக...

'எனை அழித்து இப்போது எனைக் களவாவிடில்

இதுவோ ஆண்மை அருணாசலா' என்று பெருமானுடைய ஆண்மையைக் குத்திக் காட்டுகின்றார்.

அப்பொழுது என்ன?

'கட்டாயமாக இது மாதிரி நான் குத்துவதனால், அவர் கிளர்ந்து எழுந்து, அவருடைய ஆண்மையை நிரூபிப்பதற்காக, என்னை இப்போது அழித்து, என்னோடு கலந்து பரமாத்வைதத்தை - அனுபூதியைத் தான் கொடுப்பாரே தவிர, உடைத்துக்கொண்டு போகமாட்டார்' என்கின்ற ஆழ்ந்த ஶ்ரத்தை இருப்பதனால்தான் ஆண்மையைச் சீண்டுகிறார்.

என்ன ஆழமான உறவு!

Colloquial- ஆக, இந்த modern day language-ல், gen-z language-ல் சொல்லவேண்டும் என்றால்... என்ன சொல்கிறார் என்றால், 'ஏய், இப்ப எனக்கு பரமாத்வைத அனுபூதி கொடுக்கலைன்னா, நீ பொட்டப் பையன் டா' என்று சொல்கின்றார்.

ஆனால், 'அதைச் சொன்னாலும் பெருமான் கிளர்ந்தெழுந்து அனுபூதிதான் கொடுப்பார்.

உறவை முறித்துக்கொள்ள மாட்டார்' என்கின்ற ஆழமான ஶ்ரத்தை கலந்து, அந்த ஶ்ரத்தை மலர்ந்துபோன உறவு என்பதனால்தான், அவ்வளவு bold-ஆக சொல்கிறார் ஐயா. இதைவிட ஆழமான, sweet-ஆன, உயிருக்கே இனிமையான ஒரு flirting-ஐ பார்க்கவே முடியாது ஐயா. இதைப் பாருங்கள் ஐயா, இதைP பாருங்கள்.

பகவானுடைய இந்த அக்ஷர மணமாலையைப் பாருங்கள், படியுங்கள், கேளுங்கள் ஐயா.

அதை விட்டுவிட்டு, எப்பொழுது பார்த்தாலும் அடுத்தவன் bedroom-ஐ எட்டிப் பாத்துக்கொண்டிருந்தால், நாசமாகத்தான் போவீர்கள். அடுத்தவன் bedroom-ஐ எட்டிப் பார்த்தீர்களானால், மொட்டப் பையனாகத்தான் சுற்றிக்கொண்டிருப்பீர்கள்.

அதைவிட பெருமான் ரமண மஹரிஷி என்ன அழகாக அவருடைய secret life-ஐ திறந்து வைக்கிறார் பாருங்கள். இதைப் படியுங்கள். வாழ்வின் பரமப் பிரயோஜனத்தை அடைவீர்கள்.

இதைப் புரிந்துகொள்ளுங்கள், பரமப் பயனை அடைவீர்கள்.

இகத்திலும் சரி, இகத்தில் இந்த மாதிரி ஒரு ஆழ்ந்த trust -ஆன relationship-ஐ உருவாக்கினீர்களானால், பெருமானோடு அது ரொம்ப easy-யாக மலர்ந்துவிடும் ஐயா.

உடனே, 'ஆ,.. நித்யானந்தர் காதலிக்க சொல்றாரு' என்று type பண்ண ஆரம்பித்துவிடாதீர்கள். Title போட ஆரம்பித்துவிடாதீர்கள். இப்பொழுது நான் சொன்னாலும், சொல்லவில்லை என்றாலும், பண்ணாமல் இருக்கப் போகின்றீர்களா?

நான் சொல்வதை முழுமையாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா...

ஶ்ரத்தையோடு, அதாவது, உங்கள் boy friend-ஓ, girl friend-ஓ அவர்களுக்குத் தெரிய வேண்டும், 'உங்கள் வாழ்க்கையில் கட்டாயமாக அவர்களைத்தான் நீங்கள் priority-யாக வைத்து முடிவெடுப்பீர்கள். அவர்கள்தான் first priority-யாக இருப்பார்கள்' என்று நீங்கள் அவர்களுக்கு அந்த ஶ்ரத்தையைக் கொடுக்க வேண்டும்.

அதே மாதிரி அவர்கள், 'அந்தப் பையனா, நான்தான் பா அவன் life-ல் first priority. அப்புறம்தான்பா மீதி எல்லாம். அதுமாதிரிதான் முடிவெடுப்பான்பா, think பண்ணுவான்பா' என்று அவர் உங்களுக்குக் கொடுக்கின்ற confidence, நீங்கள் அவருக்குக் கொடுக்கின்ற confidence, இந்த trust...

இதில் பிரச்சனை என்னவென்றால், 'முதலில் அவன் எனக்கு அந்த trust-ஐ கொடுக்கட்டும், நான் பிறகு அவனுக்கு அந்த trust-ஐ கொடுக்கிறேன்' என்பீர்கள்.

நடக்காது!

நாம் துவங்குவதுதான், நம்மைத் தேடி வரும்.

நாம் எந்த உணர்வோடு ஆரம்பிக்கின்றோமோ, அந்த உணர்வு நிலையில் இருப்பவர்கள்தான் நம்மைத் தேடி வருவார்கள். நம்மிடம் attract ஆவார்கள்.

இந்த ஶ்ரத்தையை நீங்கள் கொடுங்கள்.

இந்த ஶ்ரத்தையில், உங்களுக்கு வருகின்ற உறவை உருவாக்குங்கள்.

உறவின் வெற்றியே வேறொன்றும் இல்லை ஐயா, உங்கள் உயிர் மலர்ந்து விடுவதுதான் ஐயா. அதுதான் உறவின் வெற்றி.

உறவின் வெற்றி - உயிர் மலர்தல்.

இப்பொழுது இதில் cheating பண்ணாமல் இருப்பது, polygamous activity பண்ணாமல் இருப்பது, இது எல்லாமே பார்த்தீர்களானால், ஒரு உறவினுடைய இரண்டாம் நிலை வெற்றிதான் ஐயா.

உயிர் மலர்தல்தான், இரண்டு உயிருமே மலர்ந்துவிடும்.

ஒரு உயிராக மலர்ந்துவிடும்.

அதுதான் உறவின் வெற்றி!

அதற்குப் பிறகு பார்த்தீர்களானால், சில நேரத்தில் சமூகம் define பண்ணுகின்ற அந்த relationships-னுடைய box எல்லாம்கூட உடைந்துபோகும். சிலநேரத்தில் இந்த மாதிரி உயிர் மலர்ந்த உறவுகளுக்கு நடுவில், சமூகம் define பண்ணுகின்ற... அதாவது 'அந்த cheat பண்ணக்கூடாது' என்பதுபோன்ற அந்த மாதிரியான quotes, அந்த மாதிரியான contexts, அந்த மாதிரியான restrictions எல்லாம்கூட உடைந்திருக்கின்றது, காணாமல்போய் இருக்கின்றது. ஆனாலும் அந்த உயிர் மலர்தல், அந்த உயிர் மலர்ந்த அந்த உறவு உடைந்ததே இல்லை ஐயா.

அதனால் சமூகம் சார்ந்து ஒரு successful -ஆக, சமூகம் சொல்கின்ற definition-படி successful-ஆக வாழ்ந்துவிடுவது உறவின் வெற்றி கிடையாது ஐயா.

இரண்டு உயிரும் ஒரு உயிராய் மலர்தல். அதுதான் உறவின் வெற்றி.

இரண்டு உயிரும் ஓருயிராய் மலருகின்ற உறவுகளை உருவாக்குவதுதான் royal life.

செல்வ வளம் என்றால் என்ன தெரியுமா ஐயா?

அடுத்தவன் செல்வத்தைப் பார்த்து வயிறு எரியாமல் இருக்கின்ற முழுமை.

''ஏய்! life- ல் நமக்கு என்ன வேணுமோ நமக்கு இருக்கப்பா, இதுக்கு மேல எதுக்குயா அவனையும், இவனையும், இவனையும் பார்த்து compare பண்ணி என்னைய நானே சிதைத்துக் கொள்வானேன்?' என்ற அந்த comparison-னுக்கான தேவையே இல்லாமல் இருப்பவனே முழுமையான செல்வந்தன்.

அதேமாதிரிதான் ஒவ்வொரு துறையிலும், அடுத்தவன் bedroom-ஐ எட்டிப் பார்த்து, அதில் ஒரு வக்கிரமான ஏக்கம், வெறுமையும்... ஐயோ...

உலகத்தில் ஒரு கொடுமை பார்த்தீர்களானால், உலகத்தில் இருக்கின்ற அத்தனை பேரும் நினைக்கிறார்கள், 'அவனைத் தவிர உலகத்தில் இருக்கின்ற எல்லோருமே over sexed. அவன் மட்டும்தான் sexually deprived' என்று. இப்படித்தான் அத்தனை பேரும் நினைக்கிறார்கள்.

அதனால்தான் ஒரு 'அரசியல்வாதி ஊழல் செய்தார்' என்று சொன்னாலோ அல்லது ஏதோ ஒரு

சமூகப் பிரபலம் 'sex scandal-ல் மாட்டிக்கொண்டார்' என்று சொன்னாலோ, யாருமே அதை சந்தேகமேப் படாமல் நம்புவார்கள். 'பண்ணியிருப்பான். அவன் பண்ணியிருப்பான்' என்று நம்புவர்கள். Evidence எல்லாம் கொடுக்க வேண்டியது இல்லை... சும்மா பரப்பி விட்டால் போதும். ஒரு நான்கு வார்த்தை எழுதிவிட்டீர்களானால் போதும். அவர்கள் மீதி evidence எல்லாம் உருவாக்கிக்கொள்வர்கள்.

ஏனென்றால், அவனவன் sexually deprived-ஆக இருப்பதாகவும், உலகத்தில் இருக்கின்ற மற்ற எல்லோருமே over sexed -ஆக இருப்பதாகவும் அவன் கற்பனையில், அதில்தானே வாழ்ந்துகொண்டிருக்கின்றான். அதனால் அவனுக்கு evidence எல்லாம் தேவையில்லை. Just அவன் அவனுடைய opinion-ஐ support பண்ணுகிற மாதிரி ஏதாவது ஒன்று, இரண்டு கிடைத்தால் போதும்.

இதுதான் conscious impotency, mental impotency. மொட்டப் பையனாவே சுற்றிக்கொண்டிருப்பது. அது outdated life. விட்டுவிடுங்கள் ஐயா...

இதை விட்டுவிட்டு, Gen-Z-யாவது நான் சொல்வதைக் கேளுங்கள் ஐயா.

நிறைய பேர் இந்த சமூகம் சார்ந்த நிறைய பிரச்சினைகள், கேள்விகள் எல்லாம் எழுதிக்கொண்டு, கேட்டுக்கொண்டிருக்கின்றீர்கள்.

இது கடந்த 14 நாட்கள் ஸத்ஸங்கத்தினுடைய மொத்த… questions, comments எல்லாம்

scrape பண்ணி, AI மூலமாகத்தான் scrape பண்ணுகிறோம். AI மூலமாக scrape பண்ணி sentimental analysis பண்ணி, classify பண்ணும்போது வருகின்ற ஒரு மிகப்பெரிய பூதாகரமான பிரச்சினை... மக்கள் என்னிடம் எடுத்துவந்து, தீர்வை எதிர்பார்க்கின்ற பிரச்சினை...

பரமாத்வைதம், பரமானுபூதி அதையெல்லாம்விட, மக்கள் இதைதான் நிறைய பேர் கேட்கின்றீர்கள்.

ஒரு ideal வாழ்க்கைமுறையை சொல்லிவிடுகின்றேன் ஐயா.

இதில் என்னென்ன எல்லாம் உங்களால் உபயோகப்படுத்த முடியுமோ, கடைப்பிடிக்க முடியுமோ அதெல்லாம் manifest பண்ணுங்கள்.

முதல் விஷயம்: 40 வயதிற்குள் இருந்தால், ஒரு வருடம் இந்தியா முழுக்க பரிவ்ராஜக யாத்ரை செல்லுங்கள்.

திருமணம் ஆனவராக இருந்தால், உங்களுடைய கணவனையோ மனைவியையோ, துணையையும்; convince பண்ணிகூட அழைத்துச்செல்லுங்கள். அது ஒன்று. திருமணம் ஆகாதவராக இருந்தால், கட்டாயமாக இந்த ஒரு வருடம் பரிவ்ராஜக யாத்ரை செய்துவிட்டு திருமணம் செய்துகொள்ளுங்கள்.

'இல்ல கல்யாணம் ஆகலை சாமி. ஆனால் girl friend, boy friend இருக்கிறார்கள். நிச்சயம் ஆகிவிட்டது' என்றால், அப்பொழுது இருவரும் என்ன செய்யுங்கள்... இந்த மாதிரி ஒரு வருடம் யாத்ரை செய்துவிட்டு, பிறகு திருமணம் செய்துகொள்ளுங்கள். ஒன்றாகவே யாத்ரை செய்யுங்கள்.

அதற்குப் பிறகு திருமணம் செய்துகொள்ளுங்கள்.

காரணம் எனனவென்றால், உங்களுடைய உறவை முழுமையாக்க, உயிர் மலர்ந்துவிடும் ஐயா.

செல்போனை மாற்றிக்கொள்வதற்கு பயந்துகொண்டு வாழ்ந்துகொண்டிருக்கின்ற அந்த உறவு இல்லை ஐயா. உங்கள் மனதையே மாற்றிக்கொண்டு, 'இந்தா என் மனசோட நீ ஒரு பத்து நாள் வாழு. இந்தா உன் மனசை எனக்குக் கொடு, நான் அதோட ஒரு பத்து நாள் வாழ்கிறேன்' என்று அந்த மாதிரி வாழக்கூடிய உறவாக மாறிவிடும் ஐயா.

இது மாதிரி ஆழமான உறவை உருவாக்குங்கள்.

அந்த மாதிரி உறவை உருவாக்குவதற்கு ஶ்ரத்தையோ, தைரியமோ, அதெல்லாம் எதுவும் இல்லை என்றால், ஒன்றும் வேண்டாம், தூக்கிப் போட்டுவிட்டு ஸந்ந்யாஸி ஆகிவிடுங்கள்.

அப்பொழுது உங்களுக்குள் உட்கார்ந்து ஆழ்ந்து தவத்தாலும், யோகம், த்யானம் மற்றும் ஆன்மீகப் பயிற்சிகளாலும், வாழ்க்கையினுடைய அடுத்த நிலை பரிமாணத்திற்குப் போகின்ற வேலையை கவனிக்கலாம். ஆனால் ஏதாவது ஒன்றை ஶ்ரத்தையோடு செய்யுங்கள்.

அடுத்து, இனிமேல்...

கல்யாணம் ஆகி settle ஆகிவிட்டால், இரண்டு பேரும் சேர்ந்து உழைத்து உங்களுடைய சொந்த நிறுவனத்தைக் கட்டமையுங்கள், உருவாக்குங்கள்.

தயவுசெய்து இன்னொருவருக்கு வேலை செய்யாதீர்கள்.

கணவனும் மனைவியும் சேர்ந்து உழையுங்கள். நீங்கள் உங்களுடைய சொந்தமான வருமானத்திற்கான சகல விதமான அமைப்பையும் உருவாக்கிக்கொள்ளுங்கள்.

சிலபேர் கேட்டிருக்கின்றீர்கள், 'நாம மற்றவர்களுக்கு வேலை கொடுத்தால், அப்பொழுது அவர்களுக்கு நாம் அநீதி இழைக்கிறோம் இல்லையா?' என்று.

ஏய், நான் சொல்வதைக் கேட்டு எல்லோரும் புத்திசாலியாக மாறி, சுய தொழில், சுயமான நிறுவனத்தை உருவாக்குகின்ற அளவிற்கு தைரியமாக வந்துவிடமாட்டார்கள் ஐயா.

அந்த மாதிரி வராதவர்கள், மற்றவர்களுக்குக் கீழ்தான் வேலை செய்தாகவேண்டும்.

சொல்வதைக் கேட்பவர்கள், புத்திசாலியாக இருப்பவர்கள், தெரிந்து தெளிந்துகொள்ளுங்கள் -

உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

மற்றொருவருக்கு வேலை செய்யாமல் உங்கள் வாழ்க்கையை நீங்களே உழைத்து,

நீங்களே கட்டமைத்து, உங்களுடையப் பொருளாதாரத்தை நீங்கள் சம்பாதிக்கின்ற மாதிரி நிறுவனங்களை, வாழ்க்கையை அமைத்துக்கொண்டீர்களானால், அப்பொழுது என்ன ஆகும் என்றால், நம்முடைய உயிர் முதிர்ச்சி அடையும்.

கொஞ்ச நாள்…

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வருடமும், நம்முடைய மனம், நம்முடைய உடல், நம்முடைய consciousness இதெல்லாம் முதிர்ச்சி அடைகிறது. இது முதிர்ச்சி அடையும்போது ஏற்படுகின்ற பலனை நீங்களே அனுபவிக்க வேண்டும் ஐயா. இல்லையென்றால், நீங்கள் யாருக்கு வேலை செய்கின்றீர்களோ, அவன் அனுபவித்துக்கொண்டிருப்பான்.

நீங்கள் அடையும் முதிர்ச்சியின் பலனை நீங்களே அனுபவிக்க வேண்டும் ஐயா.

அதனால் சுய தொழிலோடு இயங்குங்கள்.

இப்பொழுது என்ன ஆகும் என்றால், society-ல் அடுத்து வருகின்ற latest trend என்னவென்றால், ஆயிரக்கணக்கான சுய-தொழில் செய்கின்ற free lancers ஒன்றாகச் சேர்ந்து ஒருவருக்கு ஒருவர் உதவிசெய்துகொள்கின்ற large industries-ஆக மாறுவார்கள்.

அதுதான் Ideal society ஐயா.

அப்பொழுது என்ன ஆகும் என்றால், காலையில் எழுந்து உங்களுடைய priority-யான உங்கள் உடலைப் பார்த்துக்கொள்கின்ற யோகா செய்வது, உங்களுடைய ஆன்ம வளர்ச்சியை பார்த்துக்கொள்கின்ற த்யானம் செய்வது….

ஆழ்ந்து கேளுங்கள்., கணவனும் மனைவியும் சேர்ந்து உழைத்து ஒன்றை உருவாக்கினீர்களானால்,

உங்கள் உயிர்மை மேம்படும்.

The girl who makes his man a king, will live as a queen.

The girl who keeps his man as a slave, will live ever as a slave’s wife. That’s all.

அதனால், இன்னொருவருக்கு வேலை செய்யாதீர்கள்

நீங்கள் இருவரும் உழைத்து, உங்கள் வாழ்க்கையைக் கட்டமையுங்கள்.

அப்பொழுது என்னவென்றால், உங்களுடைய உடல் நலத்திற்காக யோகா செய்வது, மனநலம் உயிர் நலத்திற்காக பூஜை செய்வது, உங்களுடைய ஆன்மீக சாதனைகள்,

உங்கள் வாழ்க்கையின் உயிர்மைத் தேடுதல், இவை எல்லாவற்றிற்கும் உங்களுடைய தொழில், பணம், இந்த வியாபாரம் போன்றவைகள் தடையாக இருக்காமல், உங்களால் அழகாக அந்த priorities-ஐ adjust செய்துகொள்ள முடியும்.

பணத்திற்காக உங்களுடைய நேரத்தை மற்றவர்களுக்கு விற்றீர்களானால்,

உங்கள் வாழ்க்கையை விற்கின்றீர்கள் ஐயா.

அப்பொழுது natural- ஆக என்ன செய்வீர்கள்?

யோகா செய்ய முடியாது அல்லது நீங்கள் நினைக்கின்ற மாதிரி உணவு

சமைத்து சாப்பிட முடியாது. எதுவுமே உங்கள் control-ல் இருக்காது.

அப்பொழுது நாசமாகப் போக வேண்டியதாகப் போகும். அதெல்லாம் outdated life style -ஐயா முடிந்துவிட்டது!

இந்த ஜாவா முருகேசன் life style எல்லாம் outdated.

ஒரு வாரத்தில், ஒரு மாசத்தில் two wheeler , மூன்றாவது மாசத்தில் கார்,

ஒரு வருடத்திற்குப் பிறகு apartment, அதெல்லாம் outdated.

இதையெல்லாம் செய்துவிட்டு என்ன செய்வாய்?

அது மொத்தமுமே, உன்னிடம் சாவி இருக்கின்ற உன்னுடைய graveyard. அவ்வளவுதான்.

வாழ்க்கைக்குத் தேவையானது எல்லாம் பெற்று வாழ்வை இழந்தவன் கதைபோலே.

வாழ்க்கையை build பண்ணுவதையே ரசித்து, ருசித்து, அனுபவித்து, build பண்ணுங்கள் ஐயா.

life-ஐ build பண்ணுவதே அவ்வளவு ரசனையோடும், ஆனந்தத்தோடும் build ஆகவேண்டும் ஐயா.

அதற்கடுத்தது: இது கொஞ்சம் controversy-யான guidance . ஆனால் உண்மை இதுதான்.

பத்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

பத்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

school-க்கு எல்லாம் அனுப்பாதீர்கள், home schooling பண்ணுங்கள்.

சுய தொழில் நடத்துபவர்களால், கட்டாயமாக இவை எல்லாவற்றையும் அழகாக manage பண்ண முடியும். இப்பொழுதெல்லாம் AI tools நிறைய வந்துவிட்டது ஐயா. உங்களுடைய life-ஐ organise செய்துகொள்வதற்கும், disciplined -ஆக நடத்துவற்தகும், உங்களுடைய life beautiful-ஆக manage செய்துகொள்வதற்கும் எல்லாமே வந்துவிட்டது ஐயா. அழகாக manage பண்ண முடியும்.

Franchise பண்ண வேண்டிய விஷயங்களை franchise பண்ணி விடுங்கள்.

குழந்தைகளை வளர்ப்பதை franchise பண்ணி விடாதீர்கள்.

நீங்கள் வளர்க்கவில்லை என்றால், சோஷியல் மீடியாவும், video games-ம், entertainment industry -யும் உங்கள் குழந்தைகளை வளர்க்கும்.

பிறகு ''நாசமா போயிருச்சே'' என்று நடுத்தெருவில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தால்,

என்ன பண்ண முடியும்? நீங்கள் வளர்க்கவில்லை, யாரோ வளர்த்தார்கள். பிறகு என்ன ஆகும்?

அது அப்படித்தான் போகும்.

பத்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு, நன்றாக home schooling பண்ணி, குழந்தைகள் ஒவ்வொன்றிற்கும் அதனுடைய தனித்தன்மைகளைக் கண்டுபிடிக்க வைத்து, அந்த filed- ல் excel பண்ண வைப்பதுதான் ஐயா.

எப்பொழுது பார்த்தாலும் இந்த மெக்காலே தரித்தரம் பிடித்த, ''என்ன பண்ணாலும் engineer ஆக்கு. எல்லாத்தையும் ஆ... 10th, 12th, engineer''.

அவன் அந்த engineer ஆனவுடனே என்ன பண்ணுவான், குரங்கு மாதிரி நின்றுகொண்டிருப்பான்.

எதுவும் செய்யத் தெரியாது. வாழ்க்கையில் என்ன என்ன செய்வது என்றும் தெரியாது.

பணம்… ஏங்கய்யா ஒரு மனுஷன் 25 வருஷம் எல்லாம், உபயோகமில்லாத

ஒரு கல்விக்காக வீணடிக்கலாமா ஐயா?

குழந்தைகளை வளர்க்கும்பொழுதே, AI மூலமாக educate பண்ணி, உங்களுடைய business னுடைய பாகமாக மாற்றி… வளரும்பொழுதே உடலுக்குத் தேவையானது, மனதிற்குத் தேவையானது, உடல் நலம் இருக்க, மன நலம் இருக்க, பொருளாதார வளத்தோடு வாழ practical-ஆக உங்கள் business-ஐ கத்துக்கொடுத்தே business-னுடனேயே வளர்த்துவிடுங்கள் ஐயா.

உடனே இப்பொழுது கமெண்ட் போடுவீர்கள், ''ஆ... நித்யானந்தா குலக்கல்வி முறையை promote பண்றாரு'' என்று போடுவீர்கள்.

ஆமாம்! அதுதான் செய்கின்றேன்.

life-ல் ரொம்ப successful ஆக இருக்கின்ற எல்லோரையும் பாருங்கள். business man ஆகட்டும், politicians ஆகட்டும், பேரெல்லாம் நான் தனியாக சொல்லவில்லை. அத்தனை பேரும் பாருங்கள். குலக்கல்வி முறையால்தான் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

ஐயா, second, third generation-ல் தான் expertise develop ஆகும் ஐயா.

specialization develop ஆகும் ஐயா. இதுதான் உண்மை ஐயா.

அதனால், என்ன business பார்க்கின்றீர்களோ. உங்கள் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே

அந்தத் துறை அறிவு அதை கொடுத்து, வளர்க்கும்பொழுதே அந்த மாதிரி வளர்த்துவிடுங்கள் ஐயா.

அப்பொழுது அவர்களுடைய taste உங்களுக்குத் தெரிந்துவிடும்.

அதனால், இது மாதிரியான ஒரு tight-knit, large family-யாக உருவாகுங்கள் ஐயா.

வாழ்க்கை முழுமை அடையும் ஐயா.

அப்பொழுது பூமியை விட்டுவிட்டுப் போகும்பொழுது, நீங்கள் கைலாஸம் போகும்பொழுது, ''ஆஹா, வந்ததற்கு மிகப்பெரும் நல் செயல் செய்தேன். இந்த குழந்தைகள் இந்த தர்மத்தை தொடர்ந்து நிகழ்த்துவார்கள்'' என்று உங்களுடைய வம்ஸம் உங்களைக் கொண்டாட, நீங்கள் உங்கள் வம்ஸத்தின் மீது மிகுந்த ஶ்ரத்தையும் நம்பிக்கையும், உங்கள் வாழ்க்கை முழுமை அடைந்தது என்கின்ற ஆனந்தத்தோடு கைலாஸம் போவீர்கள். அவர்களும் தொடர்ந்து, அவர்களுக்கு உங்கள்மீது இருக்கின்ற ஶ்ரத்தையினால் ஸ்ராத்தம் கொடுத்து, உங்களுக்கு பித்ரு கர்மாக்கள் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள்.

நீங்கள் எந்த vertical time zone , மேலுலகங்களில் பயணித்துக்கொண்டு இருந்தாலும், அங்கிருந்தே உங்களுடைய ஆழ்ந்த உணர்வோடு, ஶக்தியோடு, அன்போடு இவர்களை கருணையோடு ஆசீர்வாதம் செய்துகொண்டே இருப்பீர்கள்.

இதுதான் ஐயா நம் வாழ்க்கைமுறை.

இதுதான் ஐயா ஸநாதன ஹிந்து தர்மத்தின் வாழ்க்கைமுறை ஐயா.

தர்மார்த்த காம மோக்ஷம் எனும் நான்கும் ஒன்றாய் இணைந்து

நான்குமே synergistic-ஆக function ஆவது.

என்னுடைய பக்தர்கள் எல்லோருக்கும் சொல்லிவிடுகிறேன் கேட்டுக்கொள்ளுங்கள்.

உங்கள் தாய் தந்தை உங்களோடுதான் வாழ வேண்டும்.

உங்கள் குழந்தைகள், நீங்கள் உங்கள் தாய் தந்தைகளை care எடுப்பதைப் பார்க்க வேண்டும்.

உங்கள் குழந்தைகள், நீங்கள் சொல்வதைக் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நீங்கள் செய்வதைப் பார்த்து செய்வார்கள்.

சொல்வதைக் கேட்க மாட்டார்கள்.

நீங்கள் செய்வதைத்தான் செய்வார்கள்.

ஐயா, eco-system -மே நீங்கள் நல்ல தன்மையோடேயே வாழ வேண்டிய விதமான eco-system த்தை அமைத்துக்கொள்ளுங்கள். அதுதான் discipline.

Discipline என்றால், ஒரு உத்வேகம், Inspiration, Motivation வரும்பொழுது, நீங்கள் என்ன மாதிரி உங்களுடைய வாழ்க்கை அமைய வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ, அது மாதிரி eco-syste த்தை உருவாக்கி வைத்துவிடுவது. அப்பொழுது அந்த Inspiration போனாலும், Motivation போனாலும், இந்த eco-system உங்களை discipline-ல் எடுத்துச் சென்று, வாழ்க்கையை முழுமை அடையச் செய்துவிடும். வெற்றி அடையச் செய்துவிடும்.

இப்பொழுது நான் சொல்வது எல்லாமே practical.

Modern day-ல், AI-யின் காரணத்தினால், எல்லாவிதமான Knowledge, expertise எல்லாமே democratize ஆகிவிட்டது ஐயா. நமக்குத் தேவையானது எல்லாமே காற்றில் இருக்கிறது ஐயா. எடுத்து வைத்துக்கொண்டு, organise பண்ணிக்கொண்டு வாழ வேண்டியது மட்டும்தான் ஐயா.

இதுதான் பத்து வருஷத்துக்கு பிறகு, successful ஆன life style-ஆக establish ஆகப்போகின்றது.

நீங்கள் வேண்டுமானால் பார்த்துக்கொள்ளுங்கள்.

Tight-knit families,

Self -sustaining communities,

Poverty, Money இரண்டுமே irrelevant-ஆக மாறிய system. இதுதான் நடக்கப்போகிறது.

Globalization, இந்த Chronic capitalism-த்தை மையமாக வைத்த அந்த globalization னோட future முடிந்துவிட்டது. இதற்குமேல். அந்த Chronic capitalism-குக் கீழ் அதை மையமாக வைத்த Globalization கிடையாது.

இந்த single brand company உலகம் முழுக்க நடக்கும் பாருங்கள், பெரிய பெரிய brand எல்லாம் இருக்கிறது பாருங்கள், என்னென்ன? coco cola.. இப்போழுது என்ன சொல்கின்றீர்களோ என்னென்னவோ அதன் பெயர் எல்லாம் எனக்கு முழுதாகத் தெரியவில்லை. ஆனால் இந்த பெரிய பெரிய, pizza hut, coco cola, இந்த Ikea, wall mart, amazon இந்த பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் centered அந்த global globalization முடிந்துவிட்டது.

Ingenious -ஆக tight-knit families-ஆகவும், self -sustaining communities-ஆகவும், மக்கள் life-ஐ celebrate பண்ணி, இவர்கள் எல்லாம் inter-dependent -ஆக, ஒரு sweet- ஆன சமூகமாக உருவாவதுதான் இப்பொழுது நடக்கப் போகின்றது.

இதுதான் future of the human civilization.

எவனும் இதற்குமேல் இந்த 9 to 5, 9-5 job-காக தங்கள் life, relationships,

வாழ்க்கையினுடைய இந்த மற்ற விஷயங்களை எல்லாம் sacrifice பண்ணிவிட்டு அதெல்லாம் பண்ணப்போவது கிடையாது.

இந்த work-life balance என்பது, ''இப்பொழுது அதைத் தாண்டி, life- ஐ வாழுப்பா, போதும்பா.

life-ஐ வாழ்வதிலேயே வேலையைச் செய்து economical-ஆக என்ன வேண்டுமோ நம்மால் திரட்டிகொள்ள முடியுமா'' என்கின்ற level- க்குத்தான் society வரப்போகின்றது 10 ஆண்டுகளுக்குள்.

ஏற்கனவே இது அங்கங்கு வர ஆரம்பித்துவிட்டது.

இந்த கார்ப்பரேட் கம்பெனிகள், பெரிய இந்த chronic capitalism அந்த பலூனில் ஓட்டை மட்டும் விழுந்தது என்றால் முடிந்துவிட்டது!

ஸ்வதந்த்ரத்தை விட்டுக்கொடுக்காமல், தன்னுடைய சுய வாழ்வை வாழுகின்ற ஸ்வதந்த்ரத்தை விட்டுக்கொடுக்காமல், conscious sovereignty , தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்ற, conscious sovereignty-யை இழக்காமல், செல்வத்தை உருவாக்கிக் கொள்கின்ற சமூகம், evolve ஆகிக்கொண்டிருக்கிறது. evolve ஆகப்போகின்றது. அப்படித்தான் பத்து ஆண்டுகளுக்குள் உலகம் அமையப்போகிறது. இப்பொழுதேத் தயாராகிவிடுங்கள்.

இந்த பரிவ்ராஜ யாத்ரை நான் பண்ணச் சொல்வதற்குக் காரணமே, இந்த மாதிரி

multiple , different kinds of வாழ்க்கைமுறைகள் மீது உங்களுக்கு ஶ்ரத்தையும், நம்பிக்கையும் வரும் ஐயா.

உங்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட, உங்களை அடிமையாக வைத்திருப்பதற்காக சொல்லிக்கொடுக்கப்பட்ட lower middle class mental set-up, ஒரு கம்பெனியில் இருந்து salary-யை வாங்கி இன்னொரு கம்பெனிக்கு EMI கட்டி நாசமாகப் போகின்ற, மேலும் சம்பளத்தை வாங்கி அப்படியே டாஸ்மாக் கடையில் எடுத்துட்டுப்போய் கொடுத்து, நடுவில் நடந்தது என்னவென்றால், உங்கள் உடலும்-மனமும் நாசமாகப் போயிருந்திருக்கும்.

இந்த வாழ்க்கைமுறை முடிந்துவிட்டது.

இதெல்லாம் outdated life.

இந்த வாழ்க்கைமுறை வாழ்ந்துகொண்டு, ''ஐயோ நான் 90’s Kid சாமி.

எனக்கு பொண்ணு கிடைக்கல. கல்யாணம் ஆகல'' என்று புலம்பினால்…

நீ உயிரோட இருக்கிறதே தப்பு. உனக்குப் பொண்ணு கிடைக்கலை என்று வேறு புலம்பறியா?

அதுவே ஜாஸ்தி.

இந்த வாழ்க்கைமுறையைக் கொண்டு வந்தீர்களானால், உங்கள் தினசரி வாழ்க்கையிலேயே..

நம் பெருமான் வந்து சர்யா பாதம், க்ரியா பாதம், ஜ்ஞாந பாதம், யோக பாதம் என்று சொல்கிறார். தினசரி வாழ்க்கையிலேயே இந்த பரமாத்வைதம் அனுபூதியாக மலர ஆரம்பித்துவிடும்.

ஒரு ஆன்மிக maturity வரும்பொழுது, நீங்கள் அந்த பொங்குகின்ற ஆன்மிக maturity- யால் வருகின்ற ஶக்தி, உத்வேகம், Inspiration, Energy, Motivation, அதிலிருந்து வருகின்ற discipline இதெல்லாம் நீங்கள் யாருக்கு வேலை செய்துகொண்டிருக்கீன்றீர்களோ அவர்களுக்கு productivity-ஆக மாறிப் போய்விடும் ஐயா.

நீங்கள் உங்களுக்கே வேலை செய்துகொண்டீர்களானால், இவை எல்லாம் உங்களுக்கே உபயோகமாகும். அப்பொழுது என்ன ஆகும் என்றால், அப்பொழுது more time நீங்கள் உங்களுடைய ஆன்மிக சாதனைகளில் spend பண்ண முடியும். உங்களை organise பண்ணிக்க முடியும்.

ஒரு ஒரு வருடத்திற்குப் பிறகும் உங்களுடைய பட்ஜெட்டைப் பார்த்து, உங்கள் economic success, social success எல்லாம் பார்த்து, உங்களை நீங்கள் re-organise செய்து, உங்கள் priorities -ஐ re-invent செய்துகொள்ள முடியும் ஐயா.

லஞ்சப் பணத்தை நம்பி government job-க்கு போனவன் எல்லாம்,

அவனையெல்லாம் பார்த்தால் இந்த ஒரு line தான் எனக்குத் தோன்றகிறது… ''வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா!'

அதுமட்டும் இல்லை ஐயா, யாருக்கு வேலை செய்கின்றீர்களோ, உங்களை அறியாமலே அந்த நபருடைய life-ஐ பற்றிய நம்பிக்கைகள், முடிவுகள், ideology உங்களுக்குள் penetrate ஆக ஆரம்பித்துவிடும். அது மிகப்பெரிய கொடுமை ஐயா.

எல்லாவற்றிலும் ஸ்வதந்த்ரத்தை முன்னிறுத்தி வாழ்க்கையைக் கட்டமையுங்கள்.

அப்பொழுது என்ன ஆகும் என்றால், உடலை விடும்பொழுதும் அதே ஸ்வதந்த்ரத்தை முன்னிறுத்தி முடிவெடுப்பீர்கள். ஜீவன் முக்தராக மாறுவீர்கள்.

மனித வாழ்க்கை ஒரு பெரிய gift.

அதைப்போய் எவனோ ஒருவனுக்கு வேலை செய்து நாசமாக்குவது என்ன...?

ஒரு சித்தர் பாடல்கள் சொல்றமாதிரி

நந்தவனத்தில் ஓர் ஆண்டி,

நாலாறு மாதமாய் குயவனை வேண்டி,

கொண்டு வந்தான் ஒரு தோண்டி,

அதை யாருக்கோ கார்ப்பரேட் கம்பெனிக்கு வேலை செய்து கூத்தாடி கூத்தாடி போட்டுடைத் தாண்டி.

நீங்க செத்துப்போய் விட்டீர்களானால், வெறும் மூன்றே நாளில் அவர்கள் உங்களுக்கு

replacement-ஐ கண்டுபிடித்துவிடுவார்கள் ஐயா. நினைச்சுக்கூடப் பார்க்க மாட்டார்கள்.

அதைவிட நீங்களாக உருவாக்கி, உங்கள் குழந்தைகளை வாரிசுகளாக்கி

விட்டுவிட்டு, போகும்பொழுதுகூட அவ்வளவு திருப்தியாக விட்டுவிட்டுப்போவீர்கள்.

இவர்கள் உங்களுக்கு, உங்கள்மீது இருக்கின்ற ஶ்ரத்தையினாலே ஸ்ராத்தம் கொடுப்பார்கள்.

நீங்களும் எங்கிருந்தாலும் உங்கள் கருணையினாலே இவர்களை ஆசீர்வதிப்பீர்கள்.

என்றென்றும் தொடருகின்ற உயிர் உறவுகளை உருவாக்கிவிட்டு, ஜீவன்முக்தராக ஆனீர்களானால்,

குலதெய்வமாக வாழ்வீர்கள்.

அதுதான் ஐயா...

'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்' என்று வள்ளுவன் சொன்னது.

அறவே social drinkingகூட இருக்கக்கூடாது.

மதுவும், மாமிசமும் அறவே ஒழியுங்கள்.

ஆழ்ந்து சிந்திக்கின்ற உங்களுடைய திறனை மதுவும், மாமிசமும் சீரழிக்கும்.

உடனே தூக்கிட்டு வந்துவிடாதீர்ள், 'இந்த scientific research, இந்த scientific research. ..

அதற்கெல்லாம் scientific research -ல் எல்லாம் ஒரு…

பல்லாயிரக்கணக்கான நேர்மையான அறிவியல் ஆராய்ச்சிகள் நிரூபித்துவிட்டன.

social drinkingஆக இருந்தாலும் சரி, எப்போதாவது சாப்பிடுகின்ற non-vegஆக இருந்தாலும் சரி,

toxins-ஐ உங்கள் உடலிற்குள் செலுத்தி, உங்களுடைய மூளை, உடல் இவைகளின் இயக்கத்தை நிச்சயமாக மட்டுப்படுத்துகிறது.

உங்களுடைய வாழ்வின் முழுமையைப் பார்ப்பதற்கு நிச்சயமாக மதுவும் மாமிசமும் மிகப்பெரிய தடை. இப்பொழுது அதை சாப்பிட்டு சாப்பிட்டு வாழுகின்ற ஒரு பெரிய கும்பலோடு வாழ்வதனால்,

difference தெரியாமல் இருக்கலாம். இது வந்து collective suicide .

அதனால் நீங்கள் செய்வது 'சரி' என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்.

ஏதாவது பெரிதாக சாதிக்க வேண்டும் என்று நினைத்தீர்களானால், பரமாத்வைதத்தை, ஜீவன் முக்தியை, பரமுக்தியை வாழ்க்கையாக வாழ வேண்டும் என்று நினைத்தீர்களானால், இதை செய்யுங்கள் ஐயா.

இதுதான் ஒரு Ideal க்ரு'ஹஸ்த life style structure .

பரமஶிவ பக்தியைப் பற்றி explain பண்ண ஆரம்பித்தேன், உறவுகளின் ஆழம், அதைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன், இப்பொழுது க்ரு'ஹஸ்த வாழ்க்கையைப் பற்றியே ஒரு சிறு வகுப்பாக, சிறு தொகுப்பாகக் கொடுத்துட்டேன்.

மனித வாழ்க்கையிலே உறவுகளோடு ஏற்படுகின்ற ஆழமும் ஶ்ரத்தையும்,

நம்முடைய மூலப்பொருளாகிய பரத்தோடு ஏற்படுவதே - பக்தி.

நம் உயிருக்குள் பரம்பொருளின் உரைப்பு.

எப்படி ஒரு காரத்தை சாப்பிட்டால் நாக்கில் உரைக்கின்றதோ… 'காரம்' என்றால் என்னவென்றுக் காட்டச் சொன்னால் காட்ட முடியுமா? அது ஒரு உரைப்பு.

அதுமாதிரி உயிருக்குள்ளே பரம்பொருளின் உரைப்புதான் - பக்தி ஐயா.

பரம்பொருள் உயிருக்குள் நிகழும்பொழுது ஏற்படுகின்ற உரைப்பு- பக்தி ஐயா

காந்தம் இரும்பு போல் கவர்ந்து எனை விடாமல்

கலந்தென்னோடிருப்பாய் அருணாசலா.

காந்தம் இரும்பு போல் கவர்ந்து என்னை விடாமல்

கலந்து என்னோடு இருப்பாய் அருணாசலா.

இரண்டு அறக் கலந்து என்னோடு இருப்பாய் அருணாசலா.

கேளாது அளிக்கும் உன் கேடில் புகழை

கேடு செய்யாதருள் அருணாசலா.

ஆழ்ந்து கேளுங்கள்...

சகலமும் விழுங்கும் கதிரொளி யினமன

சலச மலர்த்தியிடு அருணாசலா.

சாப்பாடு உன்னைச் சார்ந்துண வாயான்

சாந்தமாய்ப் போவன் அருணாசலா.

சித்தம் குளிரக் கதிரத்தம் வைத்து அமுத

வாயைத் திற அருள்மதி அருணாசலா.

சீரை அழித்து நிர்வாணமா செய்தருட்

சீரை அளித்தருள் அருணாசலா.

சொலல் இல்லாது, பார்ப்பவனை பார்த்தபடி, ஸாக்ஷியை ஸாக்ஷியாகப் பார்த்து,

சற்று நேரம் அமருங்கள்.

யார் யாரெல்லாம் தீக்ஷை எடுத்திருக்கின்றீர்களோ, அவர்களெல்லம் ஆத்ம லிங்கத்தை

கரத்திலே நமஸ்கார முத்ரையில் பிடித்து அமருங்கள்.

சில நிமிடங்கள் பரமஶிவ ஜ்ஞாநமும், பரமஶிவ பக்தியும், பரமஶிவ விஜ்ஞாநத்தையும்

உங்களுக்குள் அனுபூதியாக, உணர்வாக, ஶக்தி பாதத்தின் மூலம், ஶக்தினி பாதத்தின் மூலம் அளிக்கின்றேன். பெற்றுக்கொள்ளுங்கள்.

வார்த்தைகளைத் தாண்டி அளிக்கப்படும் இந்த பரமாத்வைத அனுபூதியை

ஆழ்ந்து உள்வாங்கிக் கொள்ளுங்கள்.

ஆனந்தத்தோடு பார்ப்பவனைப் பார்த்து,ஸாக்ஷியை ஸாக்ஷியாய் பார்த்து அமருங்கள்.

Observe the observer.

Witness the witness.

Be a sakshi to the sakshi.

'நீங்கள்' எனும் இந்தப் பெருந்திரையில்தான்,

உங்கள் தனி அஹங்காரமான ஜீவனும்,

இந்த ப்ரபஞ்சமான ஜகத்தும்,

ஈஶ்வரனும் வெளிப்பட்டு உங்கள் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கின்றது.

எல்லோரும் பரமாத்வைதத்தில் மலர்ந்து, நித்யானந்த நிலையில் இருந்து, நித்யானந்தத்தில் கரைந்து நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன்.

ஆனந்தமாக இருங்கள்.

---------------------------------------------------------------------------------------------------------------

Details

The talk

Date
4 December 2025
Place
Mahakailasa
Occasion
Kaarthigai deepam Special satsang - அருணாசல புராணம் -பரமஶிவ ஞானமும்,பரமஶிவ பக்தியும்,பரமஶிவ விஞ்ஞானமும்
Language
Tamil

The recording

Recording
No recording linked to this transcript

The transcript

Status
Live notes
Time-synced
Not time-synced
Length
5,352 words · 30 min read
Topics
None recorded