☰KAILASA Library/Satsangs/ஓம் நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம் நித்யானந்தேஶ்வரி பரமஶக்தி…Sign in
1 December 2025

“ஓம் நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம் நித்யானந்தேஶ்வரி பரமஶக்தி…”

Live notesUntitled · opening words shown
The Satsang

EDITED _TRANSCRIPT

ஓம் நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம் நித்யானந்தேஶ்வரி பரமஶக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்

உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

இதயத்தாலும், இணையத்தாலும் உலகம் முழுவதிலும் இருந்து இணைந்திருக்கும் அன்பர்கள், சீடர்கள், பக்தர்கள், கைலாயத்தின் குடிமக்கள், பார்வையாளர்கள் - உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

இன்று கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாவது நாள் திருவிழா. பெருமான் கைலாஸ வாகனத்தில் அமர்ந்து, தாயார் காமதேனு வாகனத்தில் அமர்ந்து வலம் வந்து, மக்களுக்கு காட்சி தந்து, அருள் செய்கின்ற உற்சவம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. திருவண்ணாமலையிலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. உலகம் முழுவதிலும் உள்ள கைலாஸங்களிலும் இந்த உற்சவம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது.

ஒன்பதாவது நாள் திருவிழா மற்றும் பன்னிரண்டாம் நாள் ஸத்ஸங்கம்.

அண்ணாமலையானுக்கு மஹா ஆரத்தி நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. அருணாச்சலேஶ்வர கருணாமூர்த்திக்கு மஹா ஆரத்தி நிகழ்கின்றது. அருணாச்சல ஸ்மரணம் செய்து பெருமானை ஸ்மரித்து, 'சொலல்' இல்லாத ஸ்மரணத்தில் இருந்து, அருணாச்சல ஸ்மரணம், அருணாச்சல ஸ்மரணம், அருணாச்சல ஸ்மரணம்... ஸ்மரணாத் முக்தி அருணாச்சலம்.

அருணாச்சல ஸ்மரணத்தோடு 'சொலல்' இல்லாது நினைவில் இருக்கும் அருணாச்சல ஸ்புரணத்தோடு இந்த ஸத்ஸங்கத்தை துவங்குவோம். வாருங்கள்.

ஆழ்ந்து கேளுங்கள். கடந்த சில நாட்களாக 36 தத்துவங்களைப் பற்றி விளக்கிக் கொண்டிருக்கின்றேன். இதில் மூன்று பிரிவு - ஆன்ம தத்துவம், வித்யா தத்துவம், ஶிவ தத்துவம்.

ஐயா நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: நீங்கள் எப்படி இருப்பதாக நீங்கள் கற்பனை செய்துகொண்டிருக்கின்றீர்களோ, அதுதான் ஆன்ம தத்துவம். நீங்கள் எப்படி மாற வேண்டும் என்ற ஏங்குகின்றீர்களோ, கற்பனை செய்கின்றீர்களோ, முயற்சி செய்கின்றீர்களோ...அது வித்யா தத்துவம். நீங்கள் உண்மையில் எப்படி இருக்கின்றீர்களோ, அது ஶிவ தத்துவம். மொத்தமாக இவ்வளவுதான்.

ஐயா, வாழ்க்கையினுடைய பெரிய பெரிய பிரச்சினைகளுக்கெல்லாம், எப்பேற்பட்ட பெரிய பிரச்சினையாக இருந்தாலும், தீர்வு மிக மிக மிக எளியது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

பல பெரும்பாலான மனிதர்கள், பெரும்பாலான நேரங்களில் 'தீர்வு ரொம்ப சிறியதாக இருக்கிறதே' என்பதற்காகவே, அந்த தீர்வை செயற்படுத்தாமலேயே தள்ளிப்போட்டு, பிரச்சினையிலேயே சிக்கி சின்னாபின்னமாகியிருக்கின்றார்கள். தீர்வும் ரொம்ப பெரிதாக, நமக்குப் புரியாத மாதிரி ஏதோ, 'இதை பண்ணு, அதை பண்ணு, அதை பண்ணு' என்று தீர்வும் நமக்கு complicated -ஆக கொடுக்கப்பட்டால்தான், நம்முடைய பிரச்சினைக்கான தீர்வு என்று நாம் ஒரு விஷயத்தை நம்புகின்றோம்.

உண்மையில், நீங்களே worthless. உங்கள் பிரச்சினைகள் ரொம்ப பெரிதா? அதனால் நம் மொத்த பிரச்சினையுமே டீ கப்பிற்குள் அடிக்கின்ற புயல்தான் ஐயா. வேறு ஒன்றுமே... அதற்குமேல் ஒன்றுமே கிடையாதுங்கய்யா. டீ கப்பிற்குள் அடிக்கின்ற புயல்தான் ஐயா நம்முடைய மொத்த பிரச்சினையும். அதனால்தான், நிஜமான தீர்வு ரொம்ப ரொம்ப சிறிய, எளிமையான தீர்வுகள் தான் ஐயா.

இப்பொழுது இந்த 36 தத்துவங்களை, especially இதையெல்லாம் நிறைய புத்தகங்களில் எல்லாம் போய் படித்துவிட்டு வந்தவர்கள்... 'என்னய்யா இந்த சாமி மூன்றே மூன்று line-ல் சொல்லிவிட்டார், நாம் எப்படி இருக்கிறோம் என்று நாம் கற்பனை பண்ணிக்கொண்டு, மாயையில் சிக்கிக்கொண்டு கிடக்கின்றோமோ - அது ஆன்ம தத்துவம். எப்படி மாற வேண்டும் என்று நாம் நினைக்கிறோம், ஏங்குகிறோம், முயற்சி பண்ணுகின்றோமோ – அதெல்லாம் வித்யா தத்துவம். உண்மையில் நாம் எப்படி இருக்கின்றோமோ - அது ஶிவ தத்துவம் என்று மூன்றே line-ல் முடித்துவிட்டார்' என்று நினைப்பீர்கள்.

இதுதான் சத்தியம்! நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களுடைய ஒரே ஒரு பிரச்சினையை உட்கார்ந்து நோண்டி, நோண்டி, நோண்டி ஆராய்ந்து, ஆராய்ந்து, ஆராய்ந்து பார்த்தீர்களானால், ஆயிரம் காரணம் கண்டுபிடிப்பீர்கள். உங்களுடைய எல்லா பிரச்சினையும் மொத்தமாக, ஒரு தெளிந்த கண்ணோடு பார்த்தீர்களானால், ஒரே ஒரு காரணம்தான் இருக்கும்.

ஒரு பிரச்சினைக்கு ஆயிரம் காரணம் கண்டுபிடிப்பவர்கள், ஒரு நாளும் வாழ்க்கையை வாழப் போவதில்லை. ஆயிரம் பிரச்சினைக்கும் ஒரே காரணத்தை கண்டுபிடித்து, அதனுடைய மூலக் காரணத்தை கண்டுபிடித்து தீர்வு கண்டுபிடிப்பவர்கள்தான் எப்பொழுதும் வாழ்கிறார்கள்.

நான் சொல்வேன்... சில ஆதீனவாசிகள், especially பெண்கள், என்ன தீர்வு… அதாவது அவர்கள் என்ன பிரச்சினை எடுத்து வந்தாலும், நான் தீர்வு கொடுப்பேன். நான் என்ன தீர்வு கொடுத்தாலும் அதில் அவர்களால் பிரச்சினையை உருவாக்க முடியும்.

மொத்தமாக, வாழ்க்கையின் குறிக்கோள், அடையப்பட வேண்டிய ஜீவன் முக்தி, இது மொத்தத்தையும், இந்த மூன்றே மூன்று வரியில் சொல்கின்றேன், புரிந்துகொள்ளுங்கள்: நீங்கள் எப்படி எல்லாம் இருப்பதாக நினைத்து, கற்பனை பண்ணிக்கொண்டு… நீங்கள், உங்களுடைய உலகம், உங்கள் வாழ்க்கை, எப்படியெல்லாம் இருக்கிறது என்று கற்பனை பண்ணி, கற்பனையில் மயங்கிக் கிடக்கின்றீர்களோ, அதுதான் ஆன்ம தத்துவங்கள் 24. எப்படி இருக்க வேண்டும் என்று ஏங்குகின்றீர்களோ, மாறவேண்டும் என்று முயற்சி பண்ணுகிறீர்களோ, அந்த நிலைகள் தான் வித்யா தத்துவங்கள் 7. உண்மையில் எப்படி இருக்கின்றீர்களோ, அதுதான் ஶிவதத்துவங்கள்- 5.

கொஞ்சம் ஆழ்ந்து கேளுங்கள்: ஒரு ஏழை, பணக்காரனாக மாறவேண்டும் என்று நினைத்தால், அவனுடைய கற்பனையிலேயே, அவனுக்கு 'எது எது இல்லை' என்று நினைக்கின்றானோ, 'அதையெல்லாம் அடைவதுதான் பணக்கார வாழ்க்கை' என்று நினைத்து, அதற்காக முயற்சி செய்துகொண்டிருப்பான். ஆனால், அவன் எதை நோக்கி ஏங்குகின்றானோ, தவிக்கின்றானோ, அந்தப் பொருட்கள் வந்தவுடன், அவனுக்கு 'பணக்கார வாழ்க்கை' என்று அவன் நினைக்கிற அந்த 'முழுமை வாழ்க்கை' வந்துவிடுமா என்று அவனுக்கே தெரியாது.

ஏழை, பணக்கார வாழ்க்கையைப் பற்றி வைத்திருக்கும் கற்பனையும்கூட, ஏழ்மையை சற்றே விரித்துப் பார்த்தல்... அவ்வளவுதான். 'இது இல்லையா? அப்ப அது இருக்க வேண்டும்.' 'இல்லை' என்பதை இருக்கிறது' என்கின்ற வார்த்தையினால் நிரப்புவதைத்தான், ஒரு ஏழை 'பணக்கார வாழ்க்கை' என்று நினைப்பான். ஆனால், நிஜமான பணக்கார வாழ்க்கை, முழுமை வாழ்க்கை எது என்று அவனுக்கே தெரியாது.

அது மாதிரிதான், நாம் எப்படி இருக்கிறோம் என்று கற்பனை மாயத்தால், delusion-னால், நாம் எப்படி இருக்கிறோம் என்று நாம் நினைத்துக்கொண்டு உட்கார்ந்துகொண்டிருக்கின்றோமோ, அதுதான் ஆன்ம தத்துவங்கள் 24-ம். அந்த ஆன்ம தத்துவத்தின் அடிப்படையில் இருந்து, 'எப்படி ஆக வேண்டும்' என்று நீங்கள் நினைத்து, ஏங்கி, பயிற்சி செய்து, முயற்சி செய்து, குட்டிக்கரணம் போட்டு, சகலமும் செய்கின்றோம் இல்லையா? - அது அடையப்படுகின்ற நிலைகள், அதுதான் வித்யா தத்துவம். உண்மையிலேயே, இப்பொழுதுகூட நீங்கள் எப்படி இருக்கின்றீர்களோ, அதுதான் ஶிவதத்துவம். மூன்றே மூன்று ஆங்கில வார்த்தையில் சொல்கின்றேன். Who you think you are right now is Atma Tattva. Who you really want to become, all your amazing fantasy, imagination, extension of your ultimate and your efforts...Everything ... All put together is Vidya Tattvam. Right now, who you are, is Shiva Tattvam.

நீங்கள் என்பதைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்து மாறும்பொழுது, அனுபவம் மாறும் பொழுது, உங்களைப் பற்றி உங்களுடைய அனுபூதி மாறும்பொழுது, உங்களைச் சுற்றி இருக்கும் அனைத்தும் மாறுகிறது.

நீங்கள் உங்களைப் பற்றி வைத்திருக்கும் கருத்து, அனுபவம் மாறும்பொழுது, உங்களைச் சுற்றி இருக்கின்ற அனைத்தும் மாறுகிறது.

நான் சொன்ன ஸத்யம், கொஞ்சம் ஆழ்ந்து உங்களுக்குள் இறங்க வேண்டும் என்பதற்காகத்தான், சற்று இடைவெளி கொடுக்கின்றேன்.

ஆழ்ந்து கேளுங்கள்: இந்த 'நீங்கள்' என்று, உங்களைப் பற்றி வைத்திருக்கின்ற கருத்து, நீங்கள் உங்களைப் பற்றி வைத்திருக்கின்ற அனுபூதி, 'அதை' எதை வைத்து முடிவு பண்ணுவது? 'அதை' எப்படி கண்டுபிடிப்பது? என்றால், என்னவென்று மூன்றே மூன்று வார்த்தையில் சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். உங்களுடைய inner dialogue, உங்களுடைய emotional baseline, உங்களுடைய energetic posture. - இந்த மூன்றே மூன்று தான் ஐயா.

நேற்றே define பண்ணினேன். உங்களுடைய inner dialogue என்னவாக ஓடிக்கொண்டே இருக்கிறது? தொடர்ந்த struggle-ஆக ஓடுகிறதா? உங்களை பழி சுமத்துவதிலேயே ஓடுகிறதா? உங்களை அழிப்பதிலேயே ஓடுகிறதா? அல்லது உங்களை சந்தோஷப்படுத்துவதில் ஓடுகிறதா? உங்களுக்குள் இருக்கின்ற வெறுமையைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறதா? உங்களுடைய inner dialogue தொடர்ந்து எப்படி இயங்குகிறது? The quiet conversations you have with yourself whole day, all day... - அதை கொஞ்சம் கவனியுங்கள். அதுதான் உங்களைப் பற்றி உங்களுக்கு ஏற்படுகின்ற அனுபவம்.

Emotional baseline, உங்களுடைய emotional baseline என்றால் என்னவென்றால்... இப்பொழுது உங்கள் வீட்டில், எங்கேயாவது வெளியில் போக வேண்டும் என்றால், காரை எடுத்துக்கொண்டு போகின்றீர்கள். எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, வீட்டிற்குத் திரும்ப வந்துவிட்டீர்களானால், காரை park பண்ணிவிடுகின்றீர்கள்.

அதே மாதிரி, உங்களுடைய emotion-னை எந்த இடத்தில் park பண்ணி வைக்கின்றீர்கள்? உங்களுடைய emotional baseline, இந்த cheap thrill-ஐ நோக்கி, பரபரவென்று, agitated-ஆக எதை நோக்கியோ ஓடிக்கொண்டே இருக்கின்ற அந்த agitated mind-ல், உங்களை, அந்த agitated space-ல் உங்களை park பண்ணி வைக்கின்றீர்களா? உங்களுடைய emotional baseline எதுவாக இருக்கிறது? - இதுதான் உங்களைப் பற்றி உங்களுக்கு இருக்கின்ற அனுபூதி.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களைப் பற்றி, நீங்களே உங்களோடு தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கின்றீர்கள் இல்லையா?உங்களோடு நீங்கள் நடத்திக்கொள்கின்ற தொடர் பேச்சு வார்த்தைகள், உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது பாருங்கள்... quiet-ஆக பேசிக்கொண்டே இருக்கின்றீர்கள் பாருங்கள்... அந்த வார்த்தைகள்தான் உங்களைப் பற்றி உங்களுடைய அனுபவம். உங்களுடைய emotional baseline... வேறு எதுவும் செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்றால், உங்களை சாதாரணமாக நீங்கள் எந்த emotion-ல் park பண்ணி வைக்கின்றீர்கள்? The feelings you return to when there is nothing particular is happening around you.. எதுவும் specific-க்காக நீங்கள் attend பண்ண வேண்டிய செயலோ அல்லது ஒரு விஷயமோ ஒன்றும் நடக்கவில்லை என்றால், என்ன feeling-ல் உங்களை நீங்கள் park பண்ணி வைக்கின்றீர்கள்? உங்களுடைய emotional baseline - இதுதான் உங்களைப் பற்றி உங்களுக்கு இருக்கின்ற அனுபூதி.

மூன்றாவது: Energetic posture என்றால், உங்களுடைய க்ரியா ஶக்தி. The attitude with which you approach life, you feel life.

சில நேரத்தில் inner dialogue--க்கும், emotional baseline -னும் ரொம்ப damaged -ஆக இருந்தால், ரொம்ப அடி வாங்கி இருந்தால், உங்களுடைய energetic posture, conscious-ஆக, ''பாத்துருவோம்டா ஏதோ ஒன்னுடா. life-ஐ பார்ப்போம்டா'' என்ற ஏதோ ஒரு தைரியத்தில் இருந்தால்கூட ஜெயித்துவிடுவீர்கள்.

ஆனால் அந்த emotional baseline-னும், inner dialogue-கும், support பண்ணினால் மிகப்பெரிய வெற்றி அடைந்துவிடுவீர்கள். Emotional baseline-னும், inner dialogue-கும் support பண்ணவில்லை என்றால்கூட, energetic posture மட்டும்... energetic posture என்றால், தெரிந்துகொள்ளுங்கள்... The attitude with which you approach life.

அந்த attitude, energetic posture - அது conscious-ஆகவும், powerful-ஆகவும், positive-ஆகவும் இருந்தால், inner dialogue-க்கும், emotional baseline-னும் கொஞ்சம் சொதப்பினாலும் ஜெயித்துவிட முடியும். ஆனால் இந்த மூன்றுமே சொதப்பியது என்றால், போச்சு life.

இதில் ஒரு நல்ல news என்னவென்றால், நல்ல செய்தி என்னவென்றால்… இந்த energetic posture மட்டும் உங்களுடைய consciousness சம்பந்தப்பட்டது. உங்களால் மாற்றிக்கொள்ள முடியும்.

இப்பொழுது inner dialogue-கும், emotional baseline-னும்கூட conscious-ஆக மாற்ற முடியும். கொஞ்சம் time எடுக்கும், practice பண்ண வேண்டும். ஆனால் energetic posture-ரை conscious-ஆக உடனடியாக மாற்ற முடியும்.

''வரட்டும் பாத்துப்போமடா. என்ன.. என்ன நடந்துற போகுது? பார்ப்போம். இது நடந்துரும், அது நடந்துரும், அது நடந்துரும், இது நடந்துரும் என்று எவ்வளவோ பயந்தோம். அது மாதிரிலாம் நடந்துரலையே? Face பண்ணுவோம் வா'' என்ற energetic posture-ரை எடுத்தீர்களானால்கூட, நீங்கள் எடுத்தவற்றிலே வெற்றி அடைந்து விடுவீர்கள்.

இந்த மூன்றும் சேர்ந்ததுதான், நீங்கள் உங்களைப் பற்றி வைத்திருக்கும் கருத்து. உங்கள் வாழ்க்கையினுடைய foundation – அடிப்படை.

இப்பொழுது இந்த மூன்றும் கற்பனையில் உழன்று, delusion-ல் உழன்று, அரைகுறைத்தனமான, மூடத்தனமான, நிஜ வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாத கருத்துக்களை வைத்துக் கொண்டிருப்பதுதான் - ஆன்ம தத்துவங்கள்.

நன்றாகக் கொஞ்சம் ஆழ்ந்து பாருங்கள், எத்தனை முறை மிகப்பெரிய வெற்றி எல்லாம், we just take it for granted. மிகப்பெரிய வெற்றிகளைக்கூட, அந்த வெற்றிக்காக பத்து ஆண்டுகள் உழைத்திருப்பீர்கள். அதற்குப் பிறகு பத்தே நாளுக்குள் அந்த வெற்றியை மறந்துவிட்டு, 'நீங்கள் வெற்றி பெறுவதற்கு தகுதியானவர்கள், வெற்றியை அடைபவர்கள், வெற்றியைப் பார்ப்பவர், வெற்றி உங்கள் வாழ்க்கையின் பாகமாக இருக்கின்றது' என்பதையே மறந்துவிட்டு, திரும்ப நீங்கள் ஏற்கனவே உருட்டி வைத்துக்கொண்டிருந்த அதே உருட்டையே உருட்டிட்டு இருப்பீர்கள்... ''ஐயோ, நான் தொட்டால் எதுவும் உருப்படாதுபோல இருக்கே, எதை தொட்டாலும் தடையா இருக்கே. கால் வைக்கிற இடத்தில் எல்லாம் கன்னி வெடி வைக்கிறானுங்களே, எங்க போனாலும் தொந்தரவா இருக்கே, ஒருத்தனையும் நம்ப முடியலையே'' என அந்த பழைய உருட்டையே பத்தே நாளில் உருட்ட ஆரம்பித்துவிடுவீர்கள்.

எத்தனை பேருக்கு நான் சொல்வது புரிகிறது? பத்தே நாளில் திரும்பவும் பழைய உருட்டை உருட்ட ஆரம்பித்துவிடுவீர்கள். பத்து நாளே அதிகம் என்று நினைக்கிறேன். எப்படியென்றால், எப்படியும் எந்த வெற்றி அடைந்தாலும், உடனே ரெண்டு நாள் தண்ணி அடிப்பீர்கள். தண்ணி அடித்து எல்லாம் தெளிந்து முடிந்து ஆகிவிட்டதென்றால், பிறகு அந்த வெற்றியும் மறந்து போய்விடுகிறது.

Deluded-கவே உங்களைப் பற்றி நீங்கள் சிந்தித்துக்கொண்டே இருப்பதுதான், ஆன்ம தத்துவங்களான 24-மே ஐயா.

இந்த ஆன்ம தத்துவங்கள் 24-ஐ பற்றி நான் ரொம்ப detail-ஆக போகாமல் இருப்பதற்குக் காரணம்… அங்கே போய் கிளறி புடுங்குகின்ற ஒரு ஆணியும் அங்கு உருப்படியா இல்லை ஐயா. அதெல்லாம் ஏற்கனவே என்ன… கிட்னி சட்னியா போச்சு. ஒவ்வொன்றுமே, எதுவுமே ஒரு functional-லான, ஒரு basic functionality, basic-ஆக ஒரு liveable-ஆக, basic-ஆக ஒரு ஓடுகின்ற காராகவோ அல்லது ஒரு ஓடுகின்ற தேர் அளவிற்குக்கூட எதுவும் இல்லை ஐயா.

அதிலும் இந்த gen-Z எல்லாம் ஆன்ம தத்துவங்கள் 24-யும் பிச்சி சின்னாபின்னமாக்கி வைத்துவிடுகின்றீர்கள். 21, 22 வயது ஆவதற்குள்ளாகவே, ஆன்ம தத்துவம் 24-ம் போச்சு. சின்னாபின்னமாக்கி வைத்துவிடுகின்றீர்கள். அதனால் ஆன்ம தத்துவத்தைப் பற்றி நான் அதிகமாக பேசினால், இருப்பதைவிட இன்னும் ஜாஸ்தி பிரச்சினை இருக்கின்ற மாதிரியான மனநிலைக்குத்தான் போவீர்கள். அதனால், நான் இப்பொழுது அதைத்தொடப் போவதில்லை. அதற்குப் பிறகு எப்பொழுது தொட வேண்டுமோ அப்பொழுது தொடுகின்றேன். எப்பொழுது சொல்ல வேண்டுமோ அப்பொழுது அதை சொல்கின்றேன்.

இப்பொழுது நான் உங்களுக்கு பேசப்போகின்ற ஸத்யங்கள், உங்கள் inner dialogue, emotional baseline, energetic posture... இந்த மூன்றும் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? எதை நோக்கி போகின்றீர்கள்? எப்படி இருக்கிறது, எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்? எதை நோக்கி போகின்றீர்கள்? எப்படி இருக்கிறது என்று கற்பனை செய்துகொண்டு, கவலைப்பட்டுக்கொண்டு, துக்கத்தில் ஆழ்ந்து போகின்றீர்கள்... இந்த பல்வேறு பரிமாணங்கள், உங்களைப்பற்றி நீங்கள் வைத்திருக்கும் அனுபவம், அனுபூதி, நீங்கள் உலகத்தைப் பற்றி வைத்திருக்கும் இந்த attitude, இதைப் பற்றி இதனுடைய பல்வேறு பரிமாணங்களைப் புரிந்துகொண்டீர்களானால், பரமானுபூதி, இந்த வினாடி மலரும்.

உண்மையில் enlightenment, quantum experience. Quantum-என்று நான் சொன்ன உடனே, பெரிய physics, பெரிய அறிவியல் அதெல்லாம் சொல்கிறேன் என்று கற்பனை பண்ணாதீர்கள்.

Quantum என்று நான் என்ன சொல்கிறேன் என்றால், right now, எப்பேற்ப்பட்ட மோசமான horror movie உங்களைப் பற்றி நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தாலும், சொல்லிக்கொண்டிருந்தாலும், அதை உங்கள் வாழ்க்கையாக நீங்கள் project பண்ணி பார்த்துகொண்டிருந்தாலும், நம்பிக்கொண்டிருந்தாலும், நீங்கள் அந்த movie இல்லை ஐயா. அந்த movie ஓடுகின்ற screen ஐயா.

Worst horror movie-யை பார்த்து நீங்கள் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும்போது கூட, அந்த movie ஓடுகின்ற screen நீங்கள்.

Movie-யில் எவ்வளவோ பெரிய தீ விபத்து நடந்தாலும், screen தீப்பிடிக்காது. Movie-யில் எவ்வளவோ பெரிய கொடுமையான பேய் வந்து ஆடினாலும், screen-னுக்கு பேய் பிடிக்காது.

உங்களுடைய நிஜ ஸத்யம், நிஜ போதம், நிஜ ஸ்வரூபம், அதை மட்டும் கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள். ஶிவ தத்துவம் அஞ்சும் முழுவதுமாகப் புரிந்துவிடும்.

நிஜ ஸ்வரூபம் தெளிவாகப் புரிந்ததென்றால்தான், யாராலும் பாதிக்க இயலாத, rule பண்ண இயலாத, ஸர்வ ஸ்வதந்த்ரமான ஸர்வஜ்ஞத்துவமான, ஒரு pure conscious-உடன் வாழ்வதனால்தான், நான் நிம்மதியாவும், ஆனந்தமாகவும் இருக்கின்றேன் ஐயா. இந்த அடிப்படை ஸத்யத்தை உங்களுக்குச் சொல்வதற்காகதான், இந்த மொத்த ஸத்ஸங்கமும் ஐயா. இதை உங்களுக்கு அனுபூதியாக மாற்றுவதற்காகத்தான் இந்த மொத்த ஸத்ஸங்கமும் ஐயா.

திரும்பத் திரும்ப சொல்கிறேன் புரிந்துகொள்ளுங்கள்: நிழல் முழுமையைத் தேடினால், நிழல் முழுமையும் வாராது. நிஜ முழுமையும் வாராது - இரண்டும் இழப்போம். நிழல் சுதந்திரத்தைத் தேடினால், நிழல் சுதந்திரமும் வாராது. நிஜ சுதந்திரமும் வாராது - இரண்டையும் இழப்போம்.

நிஜ சுதந்திரத்தைத் தேடினீர்களானால் - நிஜ சுதந்திரமும் வரும், நிழல் சுதந்திரமும் வரும்.

அதுதான் சொல்வார்கள் ஐயா, political sovereignty, social sovereignty - அதைத் தேடினீர்களானால், வாழ்க்கை வீணாகப் போய்விடும். முதலில் Conscious sovereignty தேடுங்கள்... Conscious sovereignty வந்துவிட்டதென்றால், political sovereignty, social sovereignty, economical sovereignty எல்லாம் உங்கள் பின்னால் வரும்.

Conscious fulfilment தேடினீர்களானால், Conscious fulfilment-ஐ அடைவதற்கு முன்பாகவேக் கூட, தேடும்பொழுதேகூட, outer fulfilment எல்லாமே தானாகவே உங்களைத் தேடி வந்துவிடும் ஐயா.

பரம ஸத்யங்கள், இந்த பரம ஸத்யங்கள் மொத்தமாக ஒரு ஐந்தே ஐந்தைத்தான் சொல்லப் போகின்றேன். இந்த ஐந்தை மட்டும் புரிந்துகொண்டீர்களானால், ஶிவ தத்துவம் முழுமையாகப் புரிந்துவிடும்.

இந்த பரம ஸத்யங்களை முதலில் விளக்குகின்றேன், அதற்குப் பிறகு ஶிவ தத்துவத்தை சொல்கின்றேன், உங்களுக்கு நன்றாகப் புரியும். ஶிவ தத்துவம் நன்றாகப் புரிந்துவிடும். ஏனென்றால், இதை நீங்கள் கேட்கும்பொழுதே அனுபூதியாக உள்வாங்கி மாற்றிக்கொள்ள முடியும். இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை. ஒன்றுமே இல்லை. புரிந்தால்போதும், பரம் மலரும்.

ஶ்ரவணத்தினாலேயே பரமானுபூதி - கேட்பதனாலேயே பரமானுபூதி. அதுதான் quantum enlightenment- என்று சொல்கின்றேன்.

ஐயா, நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: நம் புராண காலங்களில், tejas, ojas transplant பண்ணியிருப்பார்கள். இப்பொழுது எப்படி liver transplant, kidney transplant எல்லாம் செய்கீன்றீர்கள் இல்லையா, அந்த மாதிரி tejas, ojas transplant பண்ணியிருப்பார்கள்.

Tejas என்றால், வாழ்க்கையை வாழுகின்ற ஶக்தி, உயிர் ஶக்தி. Ojas என்றால், உங்களை energetic-ஆக வைத்துக்கொண்டிருக்கின்ற உயிரின் வெளிப்பாடு. Tejas வந்து உங்களுடைய இருப்பு, life-னுடைய இருப்பு. Ojas வந்து life-னுடைய வெளிப்பாடு. இந்த tejas, ojas-ஐ transplant பண்ணியிருக்கின்றார்கள் ஐயா நம் புராண காலத்தில்.

ஏனென்றால், மஹாபாரதத்தில் ஒரு அழகான ஒரு நிகழ்வு இருக்கிறது... document ஆகியிருக்கிறது. ஒரு அரசன் பல நூறாண்டுகள் வாழ்ந்தும், அவனுக்குத் திருப்தி கிடைக்காததனால், அவனுடைய மகனுடைய இளமையை, life-ஐக் கேட்கின்றான். மகனும்... ஒரு மகன் அதைத் துறந்துவிடுகின்றான். தந்தைக்காக த்யாகம் செய்கின்றான். உடனே மகனுடைய tejas, ojas-ஐ transplant பண்ணுகின்றார்கள். தந்தை வாழ்கின்றார். Ethical-ஆக இது சரியா, தவறா என்றெல்லாம் கேட்காதீர்கள். அதைப்பற்றி இப்பொழுது நான் முடிவு செய்யப்போவதில்லை, அதைப் பற்றி நான் பேசப் போவதில்லை. ஆனால் ojas-ஐயும், tejas-ஐயும் transplant பண்ணியிருக்கின்றார்கள். அது சாத்தியம். அதைப் புரிந்துகொள்ளுங்கள்.

இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். பரமஶிவப் பரம்பொருள் எனக்கு அனுபூதியாக வெளிப்பட்டு, அவரே முழுமையாய் எனக்குள் மலர்ந்திருப்பதனால், unending, அளப்பரிய எல்லையில்லாத tejas-ஐயும், ojas-ஐயும் எனக்குள் பொங்கி.. மலர்த்தி பொங்கிக்கொண்டே இருக்கிறார் ஐயா. பொங்க வைத்துக் கொண்டே இருக்கின்றார். 'பொங்க வைத்துக்கொண்டே இருக்கின்றார்' என்ற வார்த்தையைவிட 'பொங்கிக்கொண்டே இருக்கின்றார்' என்ற வார்த்தைதான் சரியானது. அதனால் அளப்பரியது இருப்பதனால், உங்கள் அத்தனை பேருக்குள்ளும் transplant பண்ணுகிறேன். கவலையேப் படாமல் வாங்கிக்கொள்ளுங்கள். இதுதான் ஶக்திபாதம், ஶக்திநிபாதம்.

இந்த பரம ஸத்யங்களோடு சேர்ந்து, tejas-ஐயும், ojas-ஐயும் transplant பண்ணுகிறேன். ஶக்திபாதம், ஶக்திநிபாதம் அளிக்கின்றேன். ஆழ்ந்து உள்வாங்கிக்கொள்ளுங்கள். இந்த விநாடி, எனக்குள் இருக்கும் பரமானுபூதி உங்களுக்குள் மலர முடியும்.

நான் சொல்லிக்கொண்டே வருகின்ற ஸத்யங்களை அப்படியே உள்வாங்கிக்கொண்டே வாருங்கள். முதலில் திரை, தன் மீது செலுத்தப்படும் திரைப்படத்தை, தானே பார்த்தாலும், பார்த்து மயங்குகின்ற காலத்திலும்கூட, திரை அசுத்தப்படுவதே இல்லை.

தன்மீது காட்டப்படுகின்ற, அதாவது தீப்பிடித்து எரிகின்ற மாதிரி ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, 'தான் எரிந்ததாக' கற்பனை செய்துகொண்டு, 'அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அங்க படுதே, அங்க படுதே, இங்க படுதே, தொட தொட தொட தொட, அய்யோ தண்ணி ஊத்துங்க, அய்யோ மண்ணை கொட்டுங்க, இந்த தீய அணைங்க' என்று கத்தி கலாட்டா பண்ணி, என்ன பண்ணினாலும், திரை தீ பிடிப்பதில்லை.

அதே மாதிரி அந்தத் திரையில் பெரிய பேய் படம் காட்டும்பொழுதும், 'அய்யோ.. அய்யோ இந்த பேய் என்னைப் பிடிக்க வருதே, என்னைக் காப்பாத்துங்க, என்னைக் காப்பாத்துங்க, யாராவது என்னைக் காப்பாத்துங்க' என்று திரை அஞ்சி நடுங்கி, ஓடி, ஆடி, கூத்தடித்து, என்ன பிரச்சினை செய்து கலாட்டா பண்ணாலும் திரையைப் பேய் பிடிப்பதில்லை.

அதனால் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் 'இந்த உலகம்' எனும் திரையும், அதில் 'நீங்கள்'என்று ஒரு character-ம், இது மொத்தமான திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கின்ற திரை.

நன்றாப் புரிந்துகொள்ளுங்கள், இந்த உலகமே ஒரு திரை. அதன் மேல் பல திரைப்படங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. அது எல்லாம் 'நீங்கள்' என்று நீங்கள் நினைக்கின்ற உங்கள் தன்மை மேல் ஓடிக்கொண்டு இருக்கிறது. இது மொத்தமுமே ஒரு திரைப்படம் தான். அது ஓடிட்டு இருக்கிற திரை தான் நீங்கள்.

உலகத்திரையும், உலகத்திரையில் நீ உருட்டிப் பார்க்கும் திரைப்படங்களும், அந்த திரைப்படத்தைப் பார்ப்பதற்காக நீ கற்பனையாக உருவாக்கி வைத்துக்கொண்டிருக்கும் நீயும் சேர்ந்து ஒரு திரைப்படமாக, அந்தத் திரைப்படம் உருட்டப்படும் திரைதான் நீ.

அதனால், எக்காலத்திலும் நீ கர்மத்தாலும், வினையாலும், வினையின் எச்சத்தாலும், மிச்சத்தாலும், சொச்சத்தாலும் கட்டுப்படுத்தப்படுவதே இல்லை.

ஐயா நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், என் மனதிற்கு இனியவர்களே, என் அன்பிற்கு உரியவர்களே, மிகுந்த அன்போடு சொல்கின்றேன், கேளுங்கள். யார் உங்களை மூளைச்சலவை செய்தாலும் நம்பாதீர்கள்.

உண்மையிலேயே கட்டு, கட்டுறு மனப்பாங்கு, பந்தம், கர்மம் இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட நித்ய ஸ்வதந்த்ர, நித்ய ஆனந்த, சச்சித், சுகமய, ஸதானந்த போத, பரானந்த போத, பரமானந்த போத, பரமஶிவ ஸ்வரூப, பரம்பொருள் நீங்கள்!

உங்களுக்கெல்லாம் தோணலாம், 'இந்த அனுபூதியை என்னைக்காவது நான் அடைந்துவிடுவேனா சாமி?' என்று.

அடைய முடியும் மட்டும் இல்லை ஐயா, அடைந்தாக வேண்டும்! இது கட்டாயம், compulsory ஐயா.

'அடைவேனா...?' என்றால்… உண்மையில் பார்த்தீர்களானால், இப்பொழுது உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருக்கின்ற எல்லோருமே என் மனதிற்கு இனியவர்கள், என்னுடைய நண்பர்கள், என்மீது ஆழ்ந்த அன்பும், ஶ்ரத்தையும், பக்தியும் உடையவர்கள். அதனால் கட்டாயமாக நான் சொல்வதை நீங்கள் நம்புவீர்கள்.

'உண்மைதான், சாமி சொல்றாரு, அதை நான் என்னைக்காவது ஒரு நாள் அடைஞ்சுருவேனா சாமி' என்று நினைப்பீர்கள்.

அப்பா அடைந்தாக வேண்டும், அது compulsion பா. அது ஒன்றும் 'நீங்கள் அடைவீர்கள்' என்று நான் உங்களுக்கு தன்னம்பிக்கை கொடுப்பதற்கு நான் இங்க இல்லை.

I am not here just to give a good news, that you will achieve the Paramanubhuti. No! It is inevitable! I am here to tell you, it is inevitable. The great news!

Good news என்வென்றால், இந்த பரமானுபூதியை உங்களால் அடைய முடியும் என்பது. Good news என்னவென்றால், அது inevitable பா. அதனால், நான் இப்பொழுது இங்கு சொல்கின்ற ஸத்யங்களை உள்வாங்கி, உங்களுடைய inner dialogue, emotional baseline, energetic posture... இதை மட்டும் கொஞ்சம் அப்படியே ஒரு shift-டுக்கு எடுத்து வாருங்கள்.

இந்த ஸத்யங்களை உள்வாங்கி அந்த மூன்றையும் shift பண்ணுங்கள், முடிந்துவிட்டது!

ஐயா, கொஞ்சம் நான் சொல்வதை ஆழ்ந்து கேளுங்கள். கனவில் ஏதாவது ஒரு nightmarish dream, ஒரு புலி துரத்துகின்ற மாதிரி, பாம்பு துரத்துகின்ற மாதிரி, யானை துரத்துகின்ற மாதிரி, பேய் துரத்துகின்ற மாதிரி ஏதாவது ஒன்று ரொம்ப பயந்து நடுங்குகின்ற அல்லது exam miss பண்ண மாதிரி... இதுதான் இந்த modern day புலி, சிங்கம், யானை.

லூசுங்க, பைத்தியக்காரர்கள் தான் exam எழுதுவார்கள். நான் திமிரில் பேசுகிறேன் என்று தயவுசெய்து நினைக்காதீர்கள். உண்மையில் பார்த்தீர்களானால், 'வாழ்க்கை' என்பது பேரறிவாற்றலை தூண்டிக்கொண்டு, மலர்த்திக்கொண்டு வாழ்வது. சரி இதை பிறகு பார்ப்போம், examination-பற்றி பிறகு பேசுவோம். நான் இப்பொழுது வேறு subject-டுக்கு போக விரும்பவில்லை.

இப்பொழுது... இப்பொழுது நான் சொல்கின்ற இந்த ஸத்யங்கள், இந்த பரம ஸத்யங்களை கேட்டுக்கொள்ளுங்கள் போதும். ஒரு nightmarish dream, பேய் துரத்துகின்ற மாதிரி அல்லது யானை, சிங்கம், புலி, பாம்பு இதெல்லாம் ஏதாவது துரத்துகின்ற மாதிரி அல்லது ஏதோ ஒரு nightmarish dream பார்க்கும்போது, ஒரு point-ல் அந்த fear-னுடைய heat, pressure ஜாஸ்தியாகும்போது, நீங்களே ''ஏய் ஏய்... இது இது dream-பா இது, நான் இல்லப்பா... இது dream-பா, இதுல இருந்து முழிக்கணும்பா', என்கின்ற ஒரு சின்ன struggle வரும். அப்புறம் 'பளீச்'ன்னு விழித்துக்கொள்வீர்கள்.

இப்பொழுது நான் சொல்கின்ற அனுபவத்தை எத்தனை பேர் அனுபவிக்கின்றீர்கள் என்று கை உயர்த்துங்கள்.

கொஞ்சம் கேளுங்கள். அதேதான் ஐயா இந்த வாழ்க்கையிலும்... உண்மையில், நனவு நிலையில் இருக்கின்ற நீங்கள்தான், கனவிற்குள் ஆழ்ந்து, கனவிலே ஒரு புது உங்களை உருவாக்கிக்கொண்டு, உலகத்தை உருவாக்கிக்கொண்டு, இந்த drama-ல்லாம் பண்ணி அந்த drama ரொம்ப சிக்கலாகப் போகும்போது, அது 'நீங்கள் இல்லை' என்கின்ற அதைத் தாண்டிய identity-ய நோக்கி திரும்பி, விழித்துக்கொள்வீர்கள்.

அதே மாதிரிதான் இந்த வாழ்க்கை. இப்பொழுது நீங்கள் நனவு விளையாட்டு விளையாடிக்கொண்டிருக்கின்றீர்கள் பாருங்கள், இந்த விளையாட்டில் இருக்கின்ற நீங்கள், நீங்கள் உருவாக்கி வைத்திருக்கின்ற ஆட்கள், இந்த population, உலகம், நீங்கள் experience பண்ணுகின்ற உலகம், இது எல்லாம் சேர்ந்து, இந்த விளையாட்டு எப்பொழுது ரொம்ப கஷ்டமாகிறதோ, அப்பொழுது 'பளீச்' என்று விழித்துக்கொண்டு, துரிய நிலையை, துரிய நிலையிலிருந்து அனைத்தையும் வாழ்வீர்கள்.

அந்த விழித்துக்கொள்கின்ற 'தன்மை'… விழித்துக்கொள்ளும்பொழுது நீங்கள், 'நீங்கள் யார்' என்று உங்களை உணர்கின்றீர்களோ - அது பரமஶிவம்!

இப்பொழுதும் பரமஶிவம்தான், தன்னை ஒரு தனிமனிதன் என்று இந்த தோல் பைக்குள் அடைபட்டுக் கொண்டிருக்கின்ற சிற்றுயிர், அனாதை, சிறு உயிர் என்று கருதிக்கொண்டு, இந்த drama-வை செய்துகொண்டிருக்கின்றது. இந்த லீலைகளையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கின்றது.

'ஏன் சாமி?' என்று என்னிடம் கேட்காதீர்கள், உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள்தான் அதை செய்துகொண்டிருக்கின்றீர்கள். நான் செய்துகொண்டிருக்கவில்லை. நான் விழித்துக்கொண்டேன். 'ஏன்?' என்ற கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்.

சிலபேர் என்னிடம் வந்து அந்த மாதிரி கேள்வியைத்தான் கேட்டுக்கொண்டு இருக்கீன்றீர்கள். இப்பொழுது கடந்த 11 நாள் ஸத்ஸங்கத்திலும் மக்கள் கேட்டிருக்கின்ற எல்லா கேள்வி, comments, எல்லா social media-விலும், ஏறத்தாழ பத்தாயிரம் சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் இது நேரலையிலும், இந்த ஸத்ஸங்கங்கள் பிறகு காணொளிகளாகவும் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அதில் வருகின்ற மக்கள் போடுகின்ற comments, questions, எல்லாவற்றையும் AI மூலமாக scrap பண்ணுகிறோம். Scrap பண்ணி sentimental analysis பண்ணி, அந்த questions-ஐ filter பண்ணி, அதாவது இப்பொழுது multiple people கேட்கின்ற questions -ஐ எல்லாம் ஒன்றாக பார்த்து, அந்த sentiment respond பண்ணிக்கொண்டிருக்கிறேன் ஐயா.

ஸத்ஸங்கங்களின் நடுவிலேயே அந்த sentiments-க்கு respond பண்ணிவிடுகின்றேன்.

அதில் ஒரு முக்கியமான sentiment, நிறைய பேர் கேட்கின்ற கேள்வி, 'நீங்கள் பேசுவது எல்லாம் ரொம்ப உயர்ந்த தத்துவங்களாக இருக்கே?' என்பது.

ஐயா, இது உயர்ந்ததும் கிடையாது, தாழ்ந்ததும் கிடையாது. ரொம்ப எளிமை என்று நினைத்தீர்களானாலும் செய்யமாட்டீர்கள். ரொம்ப உயர்ந்தது என்று நினைத்தாலும் செய்ய மாட்டீர்கள். நான் பேசுவது யதார்த்த ஸத்யம்.

பாமரனுக்கு பரமானுபூதி கொடுக்கவே பேசிக்கொண்டிருக்கின்றேன். சாதாரணமான, யதார்த்த ஸத்யம்.

நீங்கள் ஏதோ ஒரு சின்ன, ஒரு துளி, இந்த சதைப் பைக்குள் மாட்டிக்கொண்டு, இதற்குள் இருந்து இந்த உலகத்தை அப்படியே பார்த்துக்கொண்டு, பயந்துகொண்டிருக்கின்ற… என்ன ஒரு பயந்து நடுங்கிக்கொண்டிருக்கின்ற ஒரு குழந்தை, ஜன்னலினுடைய ஒரு ஓட்டை வழியாக மெதுவாக அந்த உலகத்தை எட்டிப் பார்க்கும் பாருங்கள், அந்த மாதிரி நீங்கள் ஏதோ ஒரு நடுநடுங்கிப்போன, அனாதையான, பயந்துபோன ஒரு குழந்தை, இந்த கண்கள் வழியாக, அப்படியே எட்டி இந்த உலகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றீர்கள் ஐயா. இல்லை ஐயா.

ப்ரபஞ்சம் இந்த கண்களின் வழியாக தன்னைத் தானே பார்த்து ரசித்து, ருசித்து, புசித்து, கொண்டாடிக் கொண்டிருக்கின்றது ஐயா. 'ஏகோஹம் பஹுஶ்யாம:' அவ்யக்தமாக இருந்த 'நீங்கள்' பலவாகி, 'நான் என்னை கொண்டாடுவேனாக' என்று முடிவெடுத்து வெளிப்பட்டு விளைடுகின்றீர்கள் ஐயா.

Just உங்களுடைய inner dialogue-கையும், emotional baseline-னையும், energetic posture-ரையும் ஒரு சின்ன cognitive shift-க்குள் எடுத்து வாருங்கள் ஐயா.

ஒன்றுமே இல்லை ஐயா, உங்களுக்குள்ள 'நான்' என்கின்ற அந்த உணர்வு எப்படி இருக்கு? 'உணர்வு' எப்படி இருக்கு? உங்களுக்கு வெளியில் இருப்பதெல்லாம் எப்படி உயிர்ப்புடையதாக, உங்களுக்கு அனுபவமாக இருக்கிறது? மனோ மௌனத்தோடு உங்களுக்கு உள்ளேயும், வெளியிலேயும் நடப்பதைப் பார்த்தீர்களானால் போதும் ஐயா.

இது quantum universe ஐயா. Separation-னே இல்லை ஐயா. உங்களுக்கும் எனக்குமோ அல்லது உங்களுக்கும் உங்களைச் சுற்றியிருக்கின்ற உலகத்திற்குமோ, எனக்கும், என்னைச் சுற்றியிருக்கின்ற உலகத்திற்குமோ, நம் எல்லோருக்கும் நடுவில் separation-னே இல்லை ஐயா. நீங்கள் எழுப்பிகொள்கின்ற இந்த வார்த்தைகள் மட்டும்தான் separation ஐயா.

'இது நான், இது நீ, இது எனது, இது உன்னுடையது. இது தன்மை, இது முன்னிலை, இது படர்க்கை. இது தன்மைக்குரியது, இது முன்னிலைக்குரியது, இது படர்க்கைக்குரியது' என்ற இது மட்டும்தான் separation.

இப்பொழுது இந்த distinctions எல்லாம் ok. இப்பொழுது பத்திரப் பதிவு பண்ணி வைக்கவேண்டும், register பண்ணி வைக்கவேண்டும். 'அப்பதான் நீ என் வீட்டுக்குள்ள வரமாட்ட, நான் உன் வீட்டுக்குள்ள வரமாட்டேன்' என்பது போன்ற, ஒரு உபயோகத்திற்காக உருவாக்கப்பட்ட illusions ஐயா. AI மாதிரி. உபயோகத்திற்காக உருவாக்கப்பட்ட கருவிகள்.

ஆனால் சிதாகாஶத்தில் கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தீர்களானால், என்ன நடக்கின்றது? தன்மை முன்னிலை படர்க்கை எனும் மேகக் கூட்டங்கள் ஆயிரம் வந்தாலும், அதனாலெல்லாம் தொடப்படாத சுத்த ஆகாஶம் - சிதாகாஶம் நாம். இந்த சிதாகாஶம் நீங்கள்.

அழிவதற்கும் ஒன்றும் இல்லை இழப்பதற்கும் ஒன்றும் இல்லை பயத்திற்கும் ஒன்றும் இல்லை பற்று கொள்வதற்கும் ஒன்றும் இல்லை இருப்பின் சுகம் நாமெல்லாம் ஐயா.

என் அன்புக்குரியவர்களே! உங்களை மூளைச்சலவை செய்த உங்கள் சமூகம், பெற்றோர்கள், 'கெட்டவர்கள்' என்று நான் சொல்ல வரவில்லை. அவர்களே அஜ்ஞாநத்தில் இருப்பதனால், அவர்களுக்குத் தெரிந்த சிறந்ததை உங்களுக்குக் கொடுத்தார்கள். ஆனால் அது முழு ஜ்ஞாநம் இல்லாமல் போனது.

அவர்களுடைய intention குறைபாடு இல்லை ஐயா, அறிவு குறைபாடு.

இதைச் சற்று புரிந்துகொண்டு… அதாவது நீங்கள் conscious -ஆக கேள்வியே கேட்காமல் நிறைய விஷயத்தை assume பண்ணிக்கொண்டிருக்கின்றீர்கள். Assumptions which you never questioned, are the food you ate, but not digested. நீங்கள் உண்டு செரிக்காது இருக்கும் உணவு, எவ்வளவு பெருந்துக்கம் கொடுக்குமோ, அதுபோல உணர்வு ரீதியாக, conscious-ஆக நீங்கள் தெரிந்துகொள்ளலாம், புரிந்துகொள்ளாமல், கேள்வி கேட்காமல், assume பண்ணிக்கொண்டு எல்லா assumptions-ம் தான் உங்கள் ஆன்மீக வாழ்வில், நிஜ வாழ்வில், பர வாழ்வில் பெருந்துக்கமாய் வருகின்றது.

நீங்கள் உங்களைப் பற்றிக் கேள்வியே கேட்காமல், ஒரு personality-யை assume பண்ணிக்கொண்டீர்கள் ஐயா. ஒரு identity-யை assume பண்ணிக்கொண்டீர்கள். இப்பொழுது அந்த assumption-னை வைத்துக்கொண்டு 'இது என்ன? அது என்ன?' என்று அதை வைத்துக்கொண்டே எல்லாவற்றையும் கம்பு சுத்திக்கொண்டிருக்கின்றீர்கள்.

You believed yourself to be a fixed entity shaped by your memory and the stories you narrate about yourself> you weave around yourself> you weave about yourself

நிறைய பேர் ஆங்கிலத்தில் பேசச் சொல்லி கேட்டிருக்கின்றீர்கள். அதனால்தான் இந்த technical terms-ஐ எல்லாம் english-லும் explain பண்ணிவிடுகின்றேன்.

'நீங்கள்' என்று உங்களை assume பண்ணிக்கொள்கின்ற உங்கள் identity-யும், உங்களைப் பற்றி நீங்கள் திரும்பத் திரும்ப சொல்லிக்கொள்கின்ற கதைகளும், உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்கின்ற கதைகள்… அதாவது உங்களைப் பற்றி நீங்கள் மற்றவர்களுக்கு சொல்கின்ற கதைகள் ஒன்று. உங்களைப் பற்றி, உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்கின்ற எல்லாக் கதைகளும்… இது மொத்தமுமே உருட்டு! உருட்டு!

நான் இதை சொல்லும்பொழுது எத்தனை பேருக்கு உண்மையிலேயே, 'ஆமாம்பா, நாம கொஞ்சம் over-ராகத்தான் நம்மளைப் பற்றியே நம்மகிட்டயே உருட்டிட்டு இருக்கிறோம்' என்று புரிகிறது.

அதாவது வெளியில் சொல்லும்போது, இருப்பதைவிட அதிகமாகச் சொல்லுவோம். உள்ளுக்குள் உருட்டும்போது, இருப்பதைவிட கம்மியாக உருட்டிக்கொண்டிருப்போம். உள்ளுக்குள் உருட்டுவதெல்லாம் குற்ற உணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை, இல்லாத பிரச்சினையைப் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு, இந்த பயம்... இந்த மாதிரியே உருட்டுவது.

வெளியில 'டேய்… நான் யார் தெரியுமா? நீ யார்... உன்னை என்ன பண்ணுவேன் தெரியுமா?' என்று உருட்டுவது. இந்த ரெண்டுமே மொத்தமாக 'உருட்டல்' தான் என்பது எத்தனை பேர் கண்ணில் 'ஆமாம்பா' என்று கண்ணில் ஒரு பொறி பறக்கின்றதோ… நீங்கள் எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்… நீங்கள் எல்லோரும் பரமானுபவத்திற்கு, பர ஜ்ஞாநத்திற்குத் தயாராக இருக்கிறீர்கள்.

ஐயா, உங்களுடைய ஆசை, பந்தப்படுத்துகின்ற obsessive compulsive disorders patterns-ஐ, 'pleasure' என்று நம்ப வைப்பதுதான் மிகப்பெரிய பிரச்சினை ஐயா.

நீங்கள் எல்லாம் என்ன நினைக்கின்றீர்கள்..? இந்த cheap thrills, immediate gratification - இதை நோக்கி ஓடுவது... இதையே pleasure என்று நினைக்கின்றீர்கள். அது ஒரு விதமான மூளைச் சலவைதான் ஐயா, வேறு ஒன்றும் கிடையாது.

நம் குருகுலங்களில், முதலில் நான் கற்றுக்கொடுக்கின்ற ஒரு விஷயம், இந்த immediate gratification, instant gratification-ஐ நிறுத்துங்கள் என்பதுதான். அதை நிறுத்தினாலே உங்கள் உயிர் மலரத் துவங்கிவிடும்.

இந்த immediate gratification-ஐ நிறுத்தி, இந்த immediate gratification, அதனால் வருகின்ற பரபரப்பு, agitation, உங்கள் inner dialogue-ல் இருந்து குறைந்ததென்றால், உங்களுடைய emotional base-line-ல் இருந்து குறைந்ததென்றால், உங்களுக்கு ஒரு மிகத்தெளிவான ஒரு விஷயம் புரியும் ஐயா. உங்களுடைய desires-ஏ உங்கள் life-ஐ நோக்கிய direction! அது உங்களைக் குறைப்படுத்துகின்ற, உங்களை 'குறைவானவன்' என்று உங்களை feel பண்ண வைப்பது கிடையாது.

ஐயா, ப்ரபஞ்சமே விரிவடைந்து கொண்டே போய்கொண்டிருக்கிறது ஐயா. இன்று அறிவியல் விஜ்ஞாநிகளே சொல்கிறார்கள். இன்று விஜ்ஞாநிகள் சொல்கிறார்கள், Cosmos is expanding, Universe is expanding.

பெருமானே expand ஆகிக்கொண்டுதான் இருக்கிறார் என்பதனால், desire,... இப்பொழுது ப்ரஹ்மாண்டம் expand ஆகும்பொழுது, பிண்டாண்டமும் expand ஆவதுதான் இயற்கை.

உங்களுடைய எல்லா ஆசைகளுமே obsessive compulsory behaviour, அந்த pattern-ல் இருந்தும், இந்த instant gratification, தொடர்ந்து agitated-ஆக இருக்கின்ற cheap thrills-ஐ நோக்கி ஓடுவது... இதை மட்டும் எடுத்துக்கொண்டீர்களானால், உங்களுடைய desires எல்லாமே expansion என்று புரியும் ஐயா. ஒரு cool-ஆன, sweet-ஆன expansion தான் உங்களுடைய desires.

எப்படி ப்ரபஞ்சம் விரிகிறதோ... அதுபோல.. அதாவது ப்ரபஞ்சம்தான் நீங்கள், நீங்கள்தான் ப்ரபஞ்சம். நீங்களும் விரிகின்றீர்கள். ப்ரபஞ்சத்தோடு நீங்கள் tune-ல் இருப்பதனால், அதுவும் நீங்களும் ஒன்றுதான் என்பதனால், நீங்களும் விரிகின்றீர்கள். அதுதான் desire.

'ஆசையே துன்பத்திற்குக் காரணம்' என்கின்ற வார்த்தையை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். Instant gratification, cheap thrills-ஐ நோக்கி ஓடி தொடர்ந்து agitation-னிலேயே வைத்திருப்பது, obsessive compulsory behaviour - இதையெல்லாம் pleasure என்று நினைக்கின்ற ஆசைதான் துன்பத்திற்குக் காரணம் ஐயா.

சற்றுப் புரிந்துகொண்டீர்களானால், ஆசை உங்களுடைய expansion.

வித்யா தத்துவங்கள் அனைத்துமே... வித்யா தத்துவங்கள் ஏழு. ஏழுமே 'நீங்கள்' என்கின்ற canvas மீது எழுதப்படுகின்ற படங்கள்தான் ஐயா. அந்த canvas -ஆன நீங்கள்தான் ஶிவ தத்துவம்.

ஶிவதத்துவம் ஐந்தைப் பற்றியும் சொல்கிறேன், கேளுங்கள். முதலில் ஶிவம். ஶிவதத்துவத்தில் ஐந்தில் - ஶிவம்...சுத்த ஶிவம், பரமஶிவம், பரம சுத்த சைதன்யம். குணங்களுக்கு அப்பாற்பட்டதும், உருவம் அற்றது, உருவம், உருவமின்மை இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதும், காலம் கடந்தது, எல்லையற்றது, சுத்த ஸ்படிக ஸங்காஸம் என்று பெருமான் தன்னைத்தானே அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.

தன்னை எப்படி த்யானம் செய்ய வேண்டும் என்று சொல்லும்பொழுது சொல்கிறார்: 'சுத்த ஸ்படிக ஸங்காஸம். சுத்த ஸ்படிகத்தைப் போன்ற எல்லையற்ற விழிப்புணர்வும், தூய்மையானதும் மாறாத நிலையான உணர்வும், எங்கும் நிறைந்ததும், நித்யமானதும், நிரந்தரமானதுமான ததாடம், தத் - இருப்பு. இதுதான் ஶிவம், பரமஶிவம். பரமஶிவம்.

இரண்டாவது, ஶக்தி: பரமஶிவம் செயல்படுவது, இயங்குவது, இந்த ப்ரபஞ்சம் வெளிப்படுகின்ற படைப்பாற்றல், படைத்தல், காத்தல், rejuvenate பண்ணுகின்ற அழித்தல், ஸம்ஹாரம் என்று சொல்கிறோம். பிறகு மறைத்தல், மறைப்பிலிருந்து வெளியேற்றுதல் - வெளியே எடுத்தல், அருளல்... இதையெல்லாம் செய்கின்ற இந்த 36 தத்துவங்களையும் வெளிப்படுத்தி நிகழ்த்துகின்ற ஶக்தி. இது இரண்டாவது.

மூண்றாவது, ஸதாஶிவம். அதாவது இச்சா ஶக்தி, க்ரியா ஶக்தி, ஜ்ஞாந ஶக்தி அனைத்தும் பொங்கி உருவம் உடையவராகவும், உருவம் இல்லாதவராகவும், ஸகல-நிஷ்கலம் இரண்டும் உடையவராகவும், முழுமையாக வெளிப்படும் அருள் வடிவம் ஸதாசிவம்.

நான்காவது, ஈஶ்வரம்: இந்த ப்ரபஞ்சத்தையே, மொத்தத்தையும் ஆட்சி செய்கின்ற பரம்பொருள். ஈஶ்வரத்தன்மை. இந்த ப்ரபஞ்ச தர்மத்தை, Cosmic Law-வை, Universal Law-வைப் படைத்து, காத்து, அதை நிகழ்த்தும் ஈஶ்வரம்.

அடுத்து, ஐந்தாவது, சுத்த வித்யை: இந்த சுத்த வித்யைதான் பரம ஜ்ஞாநம், பரமானுபூதி. - இந்த ஐந்தும் சேர்ந்ததுதான் பரமஶிவம் என்று சொல்கின்றோம். ஶிவதத்துவங்களான இந்த ஐந்தும் சேர்ந்தது - பரமஶிவம்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ஒரே ஒரு வார்த்தையில் சொல்கிறேன்: 'நீங்கள் இந்த பரமஶிவத்தின் வெளிப்பாடுகள்.'

எங்கிருந்து வந்தீர்களோ அதை மீண்டும் உற்று நோக்கினீர்களானால், 'நீங்கள் பரமஶிவம்' என்பதை உணர்வீர்கள். கண்ணாடியில் பார்த்தீர்களானால், 'நீங்கள்' என்று நீங்கள் கற்பனை செய்துகொண்டிருக்கின்ற நபர் தெரிவார். முன்னாடி இருக்கின்ற கண்ணாடியில் பார்க்காமல், 'கண்ணாடியில் பார்க்கிறது யார்?' என உள் நாடிப் பார்த்தீர்களானால், பரமஶிவம் தெரிவார்.

முன் நாடிப் பார்த்தல் மயக்கத்தையும், உள் நாடிப் பார்த்தல் பரமஶிவத்தையும் காட்டும்.

'உள்நாடி பார்த்தல் எப்படி?' என்று நீங்கள் கேட்டீர்களானால், அதற்குத்தான் இந்த மூன்றே மூன்று வரி சொல்றேன். உங்களுடைய inner dialogue, emotional baseline, energetic posture - மூன்றுமே identity-ஆக, உங்களுக்குள் திரும்பி, 'நான், நான்' என்று நான் ஏதோ ஒரு identity-யை உருவாக்குகிறேனே, இந்த identity எங்கிருந்து வருகிறது? இந்த awareness, observe பண்ணுகின்ற இந்த awareness என்ன? எங்கே இருந்து வருகிறது? எப்படி இருக்கிறது? உள்ளுக்குள்ளும், வெளியிலும், இந்த awareness எப்படி இருக்கிறது?

பார்ப்பவனை பார். Observe the observer. Be aware of the awareness. . ஸாக்ஷியாக உங்களுக்குள்ளிருந்து எல்லாவற்றையும் பார்ப்பவனை ஸாக்ஷியாக பாருங்கள். கண்ணாடி முன்நின்று, முன் நாடி பார்த்தால், உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்து பிம்பம் தெரியும். உள்நாடி பார்த்தால், உண்மையான நீங்களான பரமஶிவ பரம்பொருள், பரமஶிவம், 'quantum you' தெரியும். பரமான நீங்கள் தெரிவீர்கள்.

இதற்கு ஒன்றும் ரொம்பவெல்லாம் கஷ்டப்பட வேண்டியது இல்லை. உங்களுடைய energetic posture-ரை மாற்றினீர்களானால் போதும் ஐயா.

இன்னும் ஒரு சின்ன, நான் சொல்கின்ற இந்த ஒரு சின்ன உதாரணத்தைப் புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு நாளுமே, உங்கள் வாழ்க்கையில் நடக்கின்ற மிகப்பெரிய ஒரு miracle-ஐ நீங்கள் கண்டுகொள்ளாமலே வாழ்ந்துகொண்டிருக்கின்றீர்கள். சமூகம் உங்களை மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறது.

தினந்தோறும் இரவு படுக்கும்பொழுது 'நீங்கள்' என்று நீங்கள் உருவாக்கி வைத்திருக்கின்ற அந்த identity-யை drop பண்ணிவிட்டு தானாகவே, identity இல்லாத இருப்பை அனுபவிக்கின்றீர்கள். அந்த சுத்த இருப்பு, சுத்த வித்யை, சுத்த இருப்பை, உங்களுடைய energetic posture-ஆக மாற்றினீர்களானால், முடிந்துவிட்டது ஐயா.

''ஏய்! நான் என்று நான் நினைக்கின்ற, இந்த கற்பனை பண்ணிக்கொள்கின்ற இந்த identity இல்லாமல், இதனுடைய ஆட்டம் பாட்டம் இல்லாமல், என்னால் exist ஆக முடிவது, நன்றாக என் கனவில், என் தூக்கத்தில் எனக்குத் தெரிகிறது.''

தூக்கம் என்கின்ற அனுபவமே… நன்றாக ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்: தினந்தோறும் உங்களுடைய identity-யை மொத்தமாக collapse பண்ணிவிட்டு, drop பண்ணிவிட்டு, அது literal-லாக identity suicide. Voluntary-ஆக identity suicideதான் செய்துகொள்கின்றீர்கள். செய்துகொண்டு, காலையில் எழும்பொழுது, திரும்ப அழகாக உங்களுடைய identity-யை கட்டி எழுப்பி இந்த உலகம் முழுக்கவும் பார்த்து, இந்த உலகத்தில் உங்களுடைய role என்னவோ, அதை விளையாடுவதற்குத் தயாராகி, இது மொத்தத்தையும் மிஞ்சிப்போனால் ஒரு 5 second-க்குள் செய்துவிடுகின்றீர்கள் பாருங்கள்... விழிப்பு வந்து முழுமையாக விழிப்பதற்கு அதிகபட்சமாக 5 second தான் ஆகும். அதற்குள் மொத்தத்தையும் செய்துவிடுகின்றீர்கள் பாருங்கள்.

எவ்வளவு பெரிய miracle-ஐ daily செய்துகொண்டிருக்கின்றீர்கள் பாருங்கள். But you are taking the consciousness for granted. அது மாதிரி மூளைச்சலவை செய்யப்பட்டதனால், You are taking the consciousness for granted.

ஆழ்ந்த உறக்கத்தைப் புரிந்துகொண்டீர்களானால், உங்கள் தினசரி வாழ்க்கை ஜ்ஞாந வாழ்க்கையாக மாறிவிடும். நீங்கள் எதையெல்லாம் விட்டால் 'வாழ்க்கை கஷ்டமாகும்' என்று பயப்படுகின்றீர்களோ, அந்த identity, அந்த self-defence mechanism, தூக்கிப் பிடித்துகொண்டே இருக்கின்ற அந்த கேடயம்… இந்த road-ல் இருக்கின்ற வெறிநாய் பார்த்தீர்களானால், தன்னுடைய எல்லையைப் பாதுகாப்பதற்கு, அங்கெல்லாம் போய் urine பண்ணிவிட்டு வந்து, உட்கார்ந்துகொண்டு, smell பண்ணிக்கொண்டே உட்கார்ந்துகொண்டு இருக்கும். படுத்துக்கொண்டே இருக்கும், யாராவது அந்த எல்லைக்குள் நுழைந்தால் 'உர்ர்ர்... உர்ர்ர்... உர்ர்ர்' என்று இங்கு இருக்கின்ற இடத்திலிருந்தே உறுமிக்கொண்டிருக்கும்.

அதே மாதிரி, எப்பொழுதுப் பார்த்தாலும் இந்த உலகத்தைப் பார்த்து, நபர்களோ அல்லது ஏதோ ஒரு சூழ்நிலையோ, நிகழ்வோ, உங்களுடைய எல்லைக்குள் நுழைந்து உங்களை violate பண்ணுவதாகவே நினைத்துக்கொண்டு, 'உர்ர்... உர்ர்... உர்ர்' என்று உறுமிக்கொண்டே இருக்கின்றீர்கள்.

உங்களுடைய அந்த identity, அது இல்லாமல் உங்களால் வாழ முடியும் என்று ஒவ்வொரு நாள் தூக்கத்திலும் உங்களுக்கே அனுபவம் ஆகிறதே! தெரியவில்லையா ஐயா?...

அதனால், கொஞ்சம் relax பண்ணிவிட்டு, இந்த 'உர்ர்ர்... உர்ர்ர்... உர்ர்ர்' என்று இருக்கின்ற அந்த identity-ல் இருந்து கொஞ்சம் relax பண்ணிவிட்டு, 'எனக்குள் awareness எப்படி நடக்கிறது? என்னைச் சுற்றியிருப்பதை எப்படி நான் experience பண்ணுகிறேன்?'' என்று வார்த்தைகளை எல்லாம் துறந்து விட்டு... பார்ப்பவனை ஆழ்ந்து பார்த்தல், உணர்வை உணர்தல், ஸாக்ஷியை ஸாக்ஷியாய் பார்த்தல். - இப்பொழுது இதைச் செய்யுங்கள் ஐயா, இப்பொழுது நீங்கள் பரமஶிவம்!

'இன்றிலிருந்து செய்யத் துவங்குங்கள். 12 வருஷம் கழிச்சு பரமஶிவன் காட்சி கொடுப்பார்'' என்று சொல்லமாட்டேன். இப்பொழுது செய்யுங்கள், இப்பொழுது அனுபூதி!

'அடைய முடியும், பரமானுபூதி அடைய முடியும்' என்ற வெறும் good news சொல்வதற்காக மட்டும் நான் வரவில்லை ஐயா. 'அது inevitable,' என்ற great news சொல்வதற்குதான் ஐயா நான் வந்திருக்கின்றேன். அதுதான் ஐயா உண்மை.

Kailasa news: Hereby, I tell you the great news. Not only you can experience Paramanubhuthi> Paramasivam. It is inevitable . . ஸாக்ஷியை ஸாக்ஷியாய் பார்க்க, ஸாக்ஷிக்குள் ஸாக்ஷியாய் ஸாக்ஷிநாதனாய் பரம்பொருள் விளங்குகின்றான். உங்கள் தனி இருப்பும், சுய இருப்பும் ஸாக்ஷிக்குள் கரைந்து, ஸாக்ஷி நாதனின் பரம இருப்பாய் இப்பொழுதே இருக்கின்றது.

இஹைவ, இஹைவ, இஹைவ - இந்த வினாடி, இந்தபொழுது, இப்பொழுது. Here and now. Now here.

உங்களுக்குள் ஸாக்ஷியாக இருந்து அனைத்தையும் பார்ப்பவனை, ஸாக்ஷியாக இருந்து பாருங்கள். பார்க்கும்பொழுது உங்களுக்கு நன்றாகப் புரியும்… 'நீங்கள்தான்' உங்களுடைய இந்த உலகத்தை உருவாக்கிப் பார்க்கின்றீர்கள் என்று. பார்ப்பவன் பார்க்கப்படும் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றான். பார்ப்பவனே பார்க்கப்படுவதாகவும் ஆகின்றான். பார்ப்பவனும் பார்க்கப்படுவதும் இல்லாமல், பார்வை தானாகவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. 'பார்ப்பவனும்' - 'பார்க்கப்படுவதும்' - 'பார்வை' எனும் மூன்றும் தனித்தனியாக இல்லாமல், மூன்றுக்கும் இடைவெளியும், பேதமும் இல்லாமல், அபேதமாய் இருப்பது, தன்னையே பார்த்துக்கொண்டு தானாகவே இருக்கின்றது.

நான் இந்த சாராயம், மது, மாமிசம், போதைப்பொருட்களைப்பற்றி எல்லாம் ரொம்ப ரொம்ப strong-கான வார்த்தைகளை உபயோகம் பண்ணி, condemn பண்ணுவதனால், நிறைய அன்பர்கள், நிறைய பார்வையாளர்கள் comment போடுகின்றீர்கள்… ''எனக்கு அந்த பழக்கம் எல்லாம் இருக்கு சாமி. எனக்கு இந்த அனுபூதி எல்லாம் கிடைக்காது தானே? எனக்கு இந்த அனுபூதி எல்லாம் வாய்க்கிறதுக்கு சாத்தியம் இருக்கா?'' என்று.

ஐயா, நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: நான் இந்த, இந்த பழமையான old type-ஆன ஆள் ஐயா. அதனால் திட்டுகின்றேன்.

ஒரு மதுப்பழக்கம், போதைப்பழக்கம் - இவைகளால் உடல் நலம் கெடும், மனநலம் கெடும் என்பது உண்மை. ஆனால் உங்களுடைய பரமானுபூதியை, எந்த பழக்கமும் உங்களிடமிருந்து எடுத்துவிட முடியாது. அதை புரிந்துகொள்ளுங்கள். பரமானுபூதிக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது. அதெல்லாம்விட்டால், இந்த பரமானுபூதியை நோக்கி நீங்கள் செல்கின்ற அந்த அனுபவம், பயணம் உடனடியாக, இனிமையாக, சுலபமாக, எளிமையாக முடியும் என்பதற்காகத்தான், அதையெல்லாம் விடுங்கள் என்று சொல்கின்றேன்.

ஆனால், அந்தப் பழக்கமே உங்கள் பரமானுபூதியை உங்களிடமிருந்து எடுத்துவிடவோ, தடுத்து விடவோ, நிறுத்திவிடவோ முடியாது ஐயா. அதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.

இன்னொன்று, நான் கொஞ்சம் இந்த மாதிரி பழைய type... அந்தக் காலத்து type. நான் என்னுடைய அந்த காலத்து type-ஆன குருமார்களால் வளர்க்கப்பட்டவன் ஐயா. அதனால் அப்படித்தான் சிலதெல்லாம் திட்டுவேன், கண்டுக்காமல் விட்டுவிடுங்கள், பரவாயில்லை. ஆனால், அது உங்களுடைய பரமானுபூதிக்கு பங்கம் தர முடியாது, அதைப் புரிந்துகொள்ளுங்கள்.

வீட்டில் உட்கார்ந்துகொண்டிருக்கின்ற தாத்தா – பாட்டி, எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள் இல்லையா, அந்த மாதிரி type ஐயா நான். அதனால்... அது வேறு.. விடுங்கள். ஆனால், உங்கள் வாழ்க்கையில் இருக்கின்ற எந்தப் பழக்கவழக்கத்தாலும்... ஏனென்றால், அந்த எல்லா பழக்க வழக்கமுமே உங்களுடைய identity-யின் மீது தான் சுற்றிக்கொண்டிருக்கிறது. உங்களுடைய identity-யே உங்களுடையப் பரமானுபூதியை பந்தப்படுத்த முடியாது, பங்கப்படுத்த முடியாது. ஏனென்றால் உங்களுடைய identity-யே உங்கள் பரமானுபூதியில், 'நீங்கள்' என்கின்ற திரை மீது ஓடுகின்ற identity தானே? ஆனால், அந்தத் 'திரை' - 'நீங்கள்', உங்களுடைய identity-யினால் பாதிக்கப்படுவதே இல்லை.

அதாவது, இந்த modern day gurus எல்லோருமே பொதுவாக இந்த agnostic stand எடுப்பார்கள். ரொம்ப modern-ஆன, westernised thinking -உடன், அவர்களுடைய எல்லா நடை, உடை, பாவனை, பேச்சு, பழக்க வழக்கம், அவர்கள் எடுக்கின்ற stands, சமூகம் மற்றும் எல்லா பிரச்சினைகளுக்கும் அவர்கள் எடுக்கின்ற stands, இதெல்லாம் ஒரு agnostic-ஆக, liberal என்கிறார்கள் இல்லையா...அந்த மாதிரி இந்த Left wing, அந்த மாதிரி views-ஆக நிறைய இருக்கும்.

நான் ஆனால் complete-ஆக theistic stand எடுக்கின்ற person ஐயா. அதில் நான் ரொம்ப தெளிவாக இருக்கின்றேன். நான் complete theistic stand எடுக்கின்ற person.

அதனால்தான் நிறையபேர் comment போடுகின்றவர்கள் எல்லாம், என்னைப் 'பார்ப்பன அடிமை, பார்ப்பன அடிவருடி, ப்ராஹ்மண அடிமை' என்று எல்லாம் போட்டுக்கொண்டிருக்கின்றீர்கள் அதெல்லாம் ஒன்றும் நீங்கள் கவலையேப்படாதீர்கள். அதற்கெல்லாம் நான் கவலையேப்பட மாட்டேன், hurt ஆகமாட்டேன். ரொம்ப தெளிவாக சொல்கின்றேன்.

இப்பொழுது நான் சொல்கின்ற incident-ஐ வேண்டுமானால், அழகாக edit பண்ணி, நீங்கள் என்னை troll பண்ணி, memes பண்ணி என்ன வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள்.

ஒன்றும் இல்லை ஐயா, அண்ணாமலையார் கோயிலில், கோயில் கருவறைக்கு முன்பாக இருக்கின்ற அர்த்த மண்டபம், அந்த அர்த்த மண்டபத்தில் உட்கார்ந்துதான் அபிஷேகம் பார்க்க முடியும். நான் பிறந்து வளர்ந்த அந்த 80-களில் எல்லாம், 'அபிஷேகத்திற்கு பணம் கட்டியவர்கள் மட்டும்தான் அந்த அர்த்த மண்டபத்திற்குள் போக முடியும்' என்றெல்லாம் கிடையாது.

கட்டளைதாரர்கள் முன் வரிசையில் உட்கார்ந்திருப்பார்கள், தர்ஶநம் பண்ணப் போகின்ற யாராக இருந்தாலும் அந்த அர்த்த மண்டபத்தில்போய் பின்னால் ஓரமாக உட்கார்ந்துகொண்டு அபிஷேகம் பார்க்கலாம். தர்ஶநம் செய்துவிட்டு எழுந்து வரலாம்.

உண்மையில் பார்த்தீர்களானால், என்னுடைய permanent seat, என்னுடைய seat அந்த ஒருமூலையில், அந்த கர்ப்ப... அந்த அர்த்த மண்டபத்திற்குள் நுழையும்பொழுது இருக்கின்ற கதவிற்கு இடது பக்கம், பின்பக்கம் மூலை... அது எனக்கு permanent seat மாதிரி, நான் பாட்டுக்கு காலையில் போய் உட்கார்ந்துகொள்வேன்.

ஶிவாச்சார்யார்கள் ஒருநாளும் 'எந்திரிச்சு போ' என்றெல்லாம் சொல்லமாட்டார்கள். எவ்வளவு நேரம் முடியுமோ உட்கார்ந்துவிட்டு, evening-ஆனால் வெளியில் வருவேன். அல்லது கோயில் மூடும் பொழுது… மதிய நேரத்தில் கொஞ்சம் break இருக்கும், அந்த time-ல் வெளியில் வருவேன்.

Anyhow, உட்கார்ந்து அபிஷேகம் பார்த்துக்கொண்டிருப்பேன். ஶிவாச்சார்யார்கள் அபிஷேகம் செய்துவிட்டு வெளியில் வருவார்கள். அபிஷேகம் முடிந்த உடனே, கர்ப மந்திரில் இருந்து, அம்பாள் சந்நிதிக்கு போவதற்காக வருவார்கள். அவர்களைத் தொடக்கூடாது. அதனால், ஆனால் அபிஷேகம் பண்ணிண தீர்த்தம் அவர்கள் காலில் விழுந்து... அதைத் தாண்டித்தான் நடந்து வருவார்கள் இல்லையா? அதனால், அவர்கள் நடந்துபோன உடனே, அந்த தண்ணிர், அந்தத் தீர்த்தத்தை எடுத்து, அந்த தண்ணிர், அவர்களுடைய காலடித் தடம், அதை வழித்து நெற்றியில் பூசிக்கொள்வேன், தலையில் வைத்துக்கொள்வேன் ஐயா.

நான் absolute-ஆக ஒரு theistic person ஐயா. அதாவது, இந்த பாரம்பரியம், மரபு இவைகள் மீது ரொம்ப ஶ்ரத்தையும், மதிப்பும், அன்பும், எனக்கே ஒரு ஆழ்ந்த ஶ்ரத்தையும் அதன்மீது உடைய, அந்த மாதிரியான being. நான் எடுக்கின்ற being எல்லாமும் அப்படித்தான் இருக்கும். அது மட்டுமல்லாமல், வெகு காலம் எனக்கு க்ரியாவதி தீக்ஷை செய்து வைத்தது திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தின் ஶிவாச்சார்யார்கள்தான். அதாவது ஜ்ஞாநவதி தீக்ஷை... ஜ்ஞாநவதி தீக்ஷை என்றால், ஜ்ஞாநத்தைக் கொடுத்து, அந்த மந்த்ரம் கொடுத்து ஜ்ஞாநவதி தீக்ஷை செய்தது, தொண்டை மண்டல ஆதீனத்தினுடைய 230-வது சன்னிதானம்.

ஆனால் அவர் ஜ்ஞாநவதி தீக்ஷை பண்ணும்பொழுது, ஹோமம் செய்து க்ரியைகள் செய்யவேண்டும். சன்னிதானம் வந்து ஸந்ந்யாஸி என்பதனால், அவர் க்ரியைகள் செய்யமாட்டார், செய்யக் கூடாது. அதனால் அந்த ஹோமங்கள் எல்லாம் செய்து, இந்த க்ரியைகள் எல்லாம் பண்ணி, க்ரியாவதி தீக்ஷை கொடுத்தது அண்ணாமலையார் ஆலயத்தின் ஶிவாச்சார்யார்கள்தான். அதனால் எப்பொழுதும் நான் அவர்களை, அண்ணாமலையார் ஆலயத்தின் ஶிவாச்சார்யார்கள், என்னுடைய க்ரியாவதி-தீக்ஷா குருவாகத்தான் மதிக்கின்றேன். அப்பொழுதும் அப்படித்தான் மதிப்பேன். இப்பொழுதும் அப்படித்தான் மதிக்கின்றேன். வணங்கி விழுந்துதான் திருநீறு வாங்கிக்கொள்வேன்.

பிற்காலத்தில் இந்த பீடாதிபதி ஆனதனால், நான் விழுந்து வணங்கினால், அவர்கள் வந்து ''இல்ல சாமி, நீங்க விழுந்து வணங்கினா, அப்ப நாங்களும் விழுந்து வணங்க வேண்டியதா இருக்கும். இது சங்கடமா இருக்குமே. விழுந்து வணங்காம வாங்கிட்டு போங்க போதும் சாமி'' என்று அவர்களே request பண்ணியதனால், விழுந்து வணங்குகின்ற பழக்கத்தை கொஞ்சம் குறைத்துக்கொண்டேன். விழுந்து வணங்கவில்லை, குனிந்து வணங்குவேன்.

விழுந்து வணங்குவது அண்ணாமலையாருக்கு மட்டும்தான். ஸாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவது அண்ணாமலையாருக்கு மட்டும்தான்.

குனிந்து வணங்கி, குனிந்து திருவடியைத் தொட்டு வணங்கி, திருநீறு வாங்கிக்கொள்கின்ற பழக்கம். அதையும் அவர்கள் வேண்டாம் என்று மறுத்ததனால், கொஞ்சம் குறைத்துக்கொண்டேன். நிறைய photos இருக்கும்.

திருவண்ணாமலைக்கு நான் போகும்பொழுதெல்லாம், அவர்களை... ஶிவாச்சார்யார்களை வரவேற்றால், அவர்களுக்கு நான்தான் serve பண்ணுவேன். வேறு யாரும் workers வைத்து எல்லாம் பண்ண மாட்டேன். நானே போய் நின்றுதான் serve பண்ணுவேன்.

நான் தெளிவாகச் சொல்கிறேன் ஐயா… என்னுடைய stand, நான் வந்து theistic stand. அதை நீங்கள் எந்த view-ல் பார்த்துக்கொண்டாலும் அது உங்கள் விருப்பம். நீங்கள், 'ப்ராஹ்மண அடிமை, பார்ப்பன அடிமை' என்றெல்லாம் சொல்லிக்கொண்டால், அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படப் போவதில்லை. உண்மையில் அதனால் எனக்கு hurt-ஏ ஆகவில்லை.

இன்னொன்று, இப்பொழுது north இந்தியா, வடநாட்டில் எல்லாம் பயணித்தேன் என்றால், வடநாட்டுத் தலங்களுக்கு எல்லாம் சென்றால், அந்த பண்டாக்கள் எல்லோரையும் நன்றாக முழுமையாக நமஸ்காரம் செய்து, நன்றாகக் காலைத் தொட்டு வணங்கிதான் அந்த ப்ரஸாதம், கோயில் ப்ரஸாதம் வாங்கிக்கொள்வேன். ஏனென்றால், திருமேனி தீண்டுகிறார்கள். அவர்கள் என் மீது பெரிய, ரொம்ப மரியாதை உடையவர்களாகவும், 'வேண்டாம் சாமி' என்று சொன்னாலும்கூட, குறைந்தபட்சம் உணர்வளவிலாவது முழுமையான மரியாதையைக் கொடுத்துத்தான் வாங்குவேன்.

பாரம்பரியங்கள், மரபுகள், ஸம்ப்ரதாயங்களை, இதை மிகுந்த மரியாதையோடும், ஶ்ரத்தையோடும் அணுகுபவன் நான்.

நிறைய உங்களுடைய questions, உங்களுடைய sentiments, உங்களுடைய comments, இதையெல்லாம் பார்த்து, அதை condense பண்ணி, அதற்கெல்லாம் respond பண்ணிவிடலாம் என்றுதான் பண்ணிக்கொண்டிருக்கின்றேன்.

'இப்பொழுது இந்த பாரம்பரியமான theistic stand எடுக்காமல், agnostic stand எடுத்தவர்கள் எல்லாம் ஜ்ஞாநம் அடையலையா சாமி?' என்ற கேட்டீர்களானால், அப்படியெல்லாம் இல்லை. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இப்பொழுது J. கிருஷ்ணமூர்த்தி மாதிரி agnostic stand எடுத்தவர்கள், 'அவர்கள் எல்லாம் ஜ்ஞாநி இல்லையா?' என்று கேட்டீர்களானால், நிச்சயமாக அவர்கள் ஜ்ஞாநிகள். 'அவர்கள் ஜ்ஞாநிகள் இல்லை' என்று நான் சொல்லவேமாட்டேன். J. கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ - agnostic stand எடுத்தவர்கள். ஆனால், அவர்கள் நிச்சயமாக ஜ்ஞாநிகள். பரம ஜ்ஞாநத்தில் அவர்களுக்கு ஒரு குறையும் இல்லை.

ஏன் இந்த agnostic stand எடுக்கிறார்கள், theistic stand எடுக்கிறார்கள் என்பது அவர்களுடைய தனிப்பட்ட அனுபூதி, சுதந்திரம், உரிமை. அவர்களுடைய அனுபவம், அனுபூதி இவைகளைச் சார்ந்து அந்தந்த stand எடுக்கின்றார்கள்.

ரமண மஹரிஷி பார்த்தீர்களானால், theistic stand எடுக்கின்றார். இதில் இன்னொன்று, ராமகிருஷ்ணர் complete theistic stand எடுக்கின்றார், விவேகானந்தர் சில நேரங்களிலே agnostic stand எடுக்கின்றார். பல நேரங்களில் theistic stand எடுக்கின்றார், சில நேரங்களில் agnostic stand எடுக்கின்றார். அதனால் இந்த theistic stand-ஆ, agnostic stand-ஆ என்பது பொறுத்து ஜ்ஞாநம் முடிவு செய்யப்படுவதில்லை.

நான் பல்வேறு காரணங்களினால் theistic stand எடுக்கின்றேன். ஶிவாச்சார்யார்கள் மீது மரியாதை வைத்திருக்கின்றேன், அவர்களை வணங்குவேன். அவர்களிடம் ஶ்ரத்தையோடு இருப்பேன். ப்ராஹ்மணர்கள்மீது அந்த மாதிரி மரியாதையோடு இருப்பேன்.

அதுமட்டும் இல்லை ஐயா, ஒரு நல்ல ப்ராஹ்மணர்களை, வைதீகத்தைச் செய்கின்ற ப்ராஹ்மணர்களை, வைதீக வாழ்க்கையை வாழுகின்ற ப்ராஹ்மணர்களை, 'ப்ராஹ்மண தேவதை' என்று தான் அழைப்பார்கள் ஐயா. அவர்களுக்கு உணவளிப்பது நன்மை, தானம் கொடுப்பது நன்மை என்று நானே நம்புவேன். ஶ்ரத்தையோடு அதைச் செய்வேன். நான் அந்த மாதிரி theistic stand இருக்கின்ற type. அது ஒரு பக்கம்.

ஒன்றுமில்லை ஐயா, அண்ணாமலையார் கோவிலில், திருவண்ணாமலையில் ஶிவராத்ரி முடிந்த பிறகு, உடனே மயான சூரை நடக்கும். ஶிவராத்ரி முடிந்து... மறுநாள் மயான சூரை நடக்கும். 'மயானக் கொள்ளை' என்று சொல்வீர்கள்.

திருவண்ணாமலையில், அந்த காலத்தில் மொத்தம் மூன்று அங்காளம்மன் கோவில் இருந்தது. அந்த மூன்று அங்காளம்மன் கோவிலில் இருந்தும், தாயாருக்கு அலங்காரம் பண்ணி புறப்பாடு நிகழ்ந்து, மயான சூரை நடக்கும். பக்தர்கள் எல்லாம் வேறு வேறு கடவுளுடைய வடிவங்களை... வேஷம் தாங்கி, வேடமணிந்து, அந்த அம்பாளோடு ஊர்வலமாக வருவார்கள். அவர்கள் அந்த மாதிரி போகின்றவர்களுக்கெல்லாம் தண்ணீர், நீர் மோர், பானகம் அல்லது லட்டு, இந்த மாதிரி ஸ்வீட்ஸ், அன்னதானம் எல்லாம் கொடுப்போம் ஐயா.

அதில், மீனாட்சி வேஷம் போட்டுக்கொண்டு போகின்றவர்கள், நான் கொடுக்கின்ற அந்த நீர்மோரையோ அல்லது பானகத்தையோ வாங்கி குடிக்கவில்லை என்றால், 'ஐயோ மீனாட்சியே வாங்கி குடிக்கல' என்று நினைப்பேன்.

நீங்கள் இதற்காக, 'ஓ! தரை டிக்கெட்' என்றெல்லாம் சொன்னாலும் பரவாயில்லை. அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படப் போவதில்லை. இருப்பதை அப்படியே சொல்கின்றேன். அந்த வேடம் தாங்கியவர்களை, அவராகவே பார்ப்பது. அதுதான் என்னுடைய வாழ்க்கை, என்னுடைய அனுபவம். நான் அப்படித்தான் இருந்தேன், அப்படித்தான் இருக்கின்றேன். இதற்கு மேலும் அப்படித்தான் இருப்பேன். இதை நான் மிகவும் பெருமையாகக் கருதுகிறேன்.

Theistic stand-டும்… அதாவது நீங்கள் எல்லோரும் என்ன கிண்டல் செய்தாலும், இந்த கிண்டல் செய்கின்றீர்களே, 'தரை டிக்கெட் சாமியார்' என்று... அதற்கெல்லாம் கவலைப்படுவதில்லை.

உண்மையாவே ஐயா, இப்பொழுது உங்களைப்பற்றி எல்லாம் நீங்கள் சொல்லிக்கொள்கின்ற பல கதைகளைப்பற்றி எல்லாம் நான் விவரித்தேன்.

நான் என்னைப் பற்றி சொல்லிக்கொள்கின்ற ஒரு கதையை வேண்டுமானால், உங்களுக்கு சொல்கிறேன் ஐயா.

ஓன்றுமே இல்லை. என்னுடைய மொத்த, என்னைப் பற்றி இருக்கின்ற கதையும், இந்த ஒரு இரண்டு - மூன்று வரிகளில் சொல்லிவிடுகின்றேன் ஐயா.

ஒரு நாய், அண்ணாமலையார் கோயிலுக்குள் ஏதோ ஒரு காரணத்தினால், ஒருவேளை அண்ணாமலையார் கிளம்பி வருகின்ற அந்த அழகைப் பார்த்து ரசிக்கின்ற அந்த ரசம், அந்த அழகை ரசிப்பதற்காகவோ, அந்த அழகு பிடித்துப் போனதனாலேயோ அல்லது அங்கு இருக்கின்ற அருமையான, இனிமையான smell, அந்த இசையின் vibration, திருக்கயிலாய வாத்தியத்தினுடைய vibration அல்லது அங்கு கொடுக்கின்ற ப்ரஸாதத்தினுடைய taste, ஏதோ ஒரு விஷயம் பிடித்துப் போனதனாலேயோ, ஏதோ ஒரு காரணத்தினால் அந்த கோவிலையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தது.

அருணாச்சல பரம்பொருள் என்றோ ஒருநாள், ஏதோ ஒருநாள், யாரோ ஒரு உண்மையான பக்தனுக்கு அனுக்ரஹம் செய்வதற்காக, அருணகிரியோகீஶ்வரராக வந்தார். அவர் நடந்து வரும்பொழுது, பறந்த ஒரு தூசு, இந்த நாய் தலைமீது பட்டுவிட்டது. அவருடைய காலடித் தூசு, திருவடித் தூளி, இந்த நாய் தலைமீது பட்டுவிட்டது.

அவர் யாருக்கு அருள் செய்ய வேண்டுமோ, அந்த பக்தருக்குப் போய் அருள் செய்தார். இந்த நாய் அந்த பக்தருக்கு அருள் செய்வதைப் பார்த்துவிட்டு, பெருமான் போன பிறகு, அந்த பக்தர் காலடியிலேயும் விழுந்து, அவருடைய திருவடித் தூளியையும் வாங்கிக்கொண்டது.

பெருமான் அந்த பக்தரை ஆசீர்வாதம் செய்துவிட்டுப் போகும்பொழுது, இந்த நாயையும் கடைக்கண்ணால் பார்த்து ஆசீர்வாதம் செய்துவிட்டுப் போய்விட்டார். அந்த பெருமானுடைய திருவடித் தூளியும் பட்டு, பெருமான் ஆசீர்வதித்த பக்தர்களுடைய திருவடித் தூளியும் பட்டு, அந்த புண்ணியத்தினாலே, இகத்தையும், பரத்தையும் அந்த நாய் பெற்றது.

பெருமான் கடைக்கண் மட்டும் பட்டு, அவருடைய திருவடித் தூளி மட்டும் பட்டிருந்தால், பரம் கிடைத்திருக்கும். அதில் சந்தேகமே இல்லை. பக்தனுடைய திருவடித் தூளியும் பட்டதனால், இகமும் கிடைத்தது, பரமும் கிடைத்தது.

யாரோ ஒருவர் அந்த நாயை கல்லெடுத்து அடிக்கிறார். அது 'கியா கியா' என்று கத்திக்கொண்டே ஓடிப்போய், எங்கேயோ ஒரு corner-ல் உட்கார்ந்துகொண்டு, YouTube-லியே அண்ணாமலையாரைப் பார்த்துக்கொண்டு, நிம்மதியாக இருக்கிறது. அவ்வளவுதான் ஐயா... நான் என்னைப்பற்றி சொல்லிக்கொள்கின்ற மொத்த கதையும்.

இதில் வேறு ஒன்றுமே கிடையாது ஐயா. இதில், இந்த கதையில் வேறு எந்த climax-ம் கிடையாது. அப்படியே இருந்துகொண்டு, அது அண்ணாமலையாரையே பார்த்துக்கொண்டு, அவரோடு 'சொலல்' இல்லாத ஸ்மரணத்திலே லயித்திருந்து, அருணாச்சல ஸ்மரணத்திருந்து, அருணாச்சல ஸ்புரணத்திருந்து, அவர் பதமே அடைந்தது. ஸாயுஜ்யம் பெற்றது. பரமுக்தியில் லயித்தது. அவ்வளவுதான் என்னைப் பற்றி நான் வைத்திருக்கின்ற கதை ஐயா.

இதில்… நீங்கள் என்ன வேண்டுமானாலும் இதை உங்களுடைய own interpretation-ல்… அதாவது சிலபேர் இதை வந்து 'பணிவு' என்று சொல்லிக்கொள்ளலாம், சிலபேர் இதை 'பக்தி' என்று interpret பண்ணிக்கொள்ளலாம், சிலபேர் இதை 'தரை டிக்கெட்' என்று சொல்லிக்கொள்ளலாம். சிலபேர் இதை என்ன வேண்டுமானாலும் நீங்கள் interpret பண்ணிக்கொள்ளலாம். சிலபேர் 'இல்ல, இது போலியான கதை' என்று, இந்த கதையையே நம்பாமல் அந்த interpretation-னும் கொடுத்துக்கொள்ளலாம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் interpretation கொடுத்துக்கொள்ளலாம். ஆனால் இதுதான் நான் என்னைப் பற்றி சொல்லிக்கொள்ளும் கதை. இதில் வேறு எந்த பெரிய heroic climax எல்லாம் கிடையாது ஐயா.

'அந்த நாய் உடனே போச்சு, வேறு இன்னும் நிறைய நாய்களை திரட்டிக்கிட்டு, யார்டா என்ன கல்லெடுத்து அடிச்சது? என்று திரும்ப வந்து, அந்த கல்லெடுத்து அடிச்சவனை கடிச்சது' என்று அந்த மாதிரி எல்லாம் எந்த climax-ம் இதில் கிடையாது. Heroic climax எல்லாம் ஒன்றும் கிடையாது.

அது பாட்டுக்கு ஓடிப்போய்விட்டது. உட்கார்ந்து ஏதோ ஒரு மூலையில் இருந்து அண்ணாமலையாரை பார்த்துக்கொண்டு, 'சொலல்' இல்லாத ஸ்மரணத்தில் இருந்து, அருணாச்சல ஸ்மரணத்தும், அருணாச்சல ஸ்புரணத்தும் இருந்து, பரமாத்வைதத்தில் வாழ்ந்து, பரம்பொருளோடேயே, பெருமானோடேயே கலந்தது.

அவ்வளவுதான் நான் என்னைப் பற்றி சொல்லிக்கொள்கின்ற கதை. இதுதான் மொத்த புராணமும்.

அதனால், இதில் ''பார்ப்பன அடிமை'' என்று நீங்கள் எத்தனை comments எல்லாம் சொன்னாலும் எனக்கு ஒன்றும் இல்லை. உண்மையில், நீங்கள் சொல்கின்ற ஏதாவது இந்த மாதிரி comments -க்கு எல்லாம், நான் நிறைய evidence கொடுப்பேன்.

பரம ஸத்யம் எதுவோ, பரமானுபூதி எதுவோ, அதை ஆழ்ந்த அன்போடும், ஶ்ரத்தையோடும் சொல்லுகிறேன். உள்வாங்கி, சொல்வதோடு மட்டுமல்லாமல், பெருமான் எனக்குள் பொங்கிப் பெருகச் செய்யும், பெருமானே பொங்கும் இந்த தேஜஸையும், ஓஜஸையும், ஶக்தி பாதமாக, ஶக்தினி பாதமாக உங்கள் அனைவருக்கும் அளிக்கின்றேன்.

இந்த ஸத்யங்களை உள்வாங்கி, உங்களுடைய inner dialogue, emotional baseline, energetic posture - இது மூன்றையும் மட்டும் ஒரு சின்ன shift பண்ணுங்கள் ஐயா. அவ்வளவுதான்.

கண்ணாடி முன்னாடி இருந்து, முன் நாடி பார்க்காது, உள்நாடிப் பார்த்திட, பார்ப்பவன் யாரென்று பார்த்திட, சாக்ஷியை சாக்ஷியாய் பார்த்திட, சாக்ஷிநாதன் பரம்பொருள் விளங்குவான்.

உங்கள் சுத்த இருப்பு, மேகத்தாலும், புயலாலும் பாதிக்கப்படுவதில்லை. எந்த வகை திரைப்படங்களை ஓட்டினாலும், திரை அதனால் பாதிக்கப்படுவதில்லை. நீங்கள் பரம், பரம் நீங்கள்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், 'பலம்' என்பது, 'நீங்கள் இல்லாத ஒன்று' என்று நீங்கள் நினைக்கின்ற ஒன்றோடு செய்கின்ற போட்டி. அதை அடக்கச் செய்கின்ற முயற்சி - அது பலம்.

'ஶக்தி' என்பது, நீங்கள் எதுவாக இருக்கின்றீர்களோ, அந்தத் தன்மையினால் வெளிப்படுவது.

நீங்கள் 'சாதாரண மனிதன்' என்று உங்களை மூளைச்சலவை செய்துவிட்டு, அந்த மயக்கத்தில் இருந்தால், அந்த அளவு ஶக்தி வெளிப்படும். நீங்கள் உங்களைப் பற்றிய உண்மைகளை புரிந்து, உங்களை உயர்த்த உயர்த்த, அந்த உயர்ந்த ஶக்திகள் உங்களுக்குள் இருந்து வெளிப்படும்.

'நீங்கள் பரம்பொருள்' என்று நீங்கள் அறியும்பொழுது, 'பரம்பொருள் நீங்கள்' என்று நீங்கள் conscious-ஆக பார்க்கும்பொழுது, உணரும்பொழுது, பரம ஶக்தி உங்களிடமிருந்து வெளிப்படுகின்றது. பரமஶக்தி உடையவர்களாக மாறுவீர்கள்.

பலம் வேறு, ஶக்தி வேறு ஐயா. 'பலம்' என்பது என்னவென்றால், நீங்கள் தனி, இந்த வேறு ஏதோ சிலதெல்லாம் தனியாக இருக்கிறது, அதன்மீது நீங்கள் காட்ட வேண்டும் என்று நினைப்பது - அது பலம். நீங்கள் எதுவாக இருக்கின்றீர்களோ, அதை உணர உணர, உயர உயர, உங்களுக்குள் வெளிப்படுவது - ஶக்தி.

நீங்கள் உங்களை தாழ்த்த தாழ்த்த, அந்த தாழ்ந்த நிலை ஶக்தி வெளிப்படும். உயர்த்திக்கொள்ள உயர்த்திக்கொள்ள, உயர்ந்த நிலை ஶக்தி வெளிப்படும். உண்மையை உணர உணர உயர்வீர்கள். உயர உயர உயர்நிலை ஶக்தி வெளிப்படும். இவ்வளவுதான் ஐயா மொத்த பரமாத்வைத ஸத்யம். ஒன்றையும் மறைக்காது, உள்ளதை உள்ளபடி சொல்கின்றேன்.

தினந்தோறும் உறக்கத்திலே, உங்களுடைய தனி இருப்பு, தனி நீங்கள், உங்களைப் பற்றி வைத்திருக்கின்ற கருத்தை எல்லாம் துறந்துவிட்டுத்தான் இருக்கின்றீர்கள் எனும்பொழுது, தூங்குகின்ற ஒவ்வொரு மனிதனுக்குமே, பரமானுபூதியை அடையும் ஶக்தி, தகுதி, அனைத்துமே உண்டு ஐயா.

ஏனென்றால. தூங்கும்பொழுது நீங்கள் என்ன செய்கின்றீர்களோ, அதையேதான் ஆழ்ந்த அமைதியான இருப்பிற்குள் செய்ய வேண்டும்.

'சொலல்' இல்லாத ஸ்மரணம், அதுவே ஸ்புரணம். ஸ்புரணத்து... 'அகம் அகம்' எனும் ஆன்ம ஸ்புரணத்து இருப்பதே தவம். அதுவே பரம்.

பார்ப்பவனைப் பார்! எண்ணமோ, தன்னுணர்வோ இல்லாத இருப்பிலே, 'சொலல்' இல்லாத சுகமயமான இருப்பிலே இருந்து, பரமானுபூதியில் நிலைத்திருங்கள்.

இன்னும் சில மணி நேரங்களில் பரணி தீபம். அடுத்த சில மணி நேரங்களில், நாளை இதே நேரம் மஹாதீபமே ஏற்றப்பட்டு விட்டிருக்கும்.

நாளை மாலை 6 மணி அளவில், இந்திய நேரப்படி ஆறு மணி அளவில் மஹாதீபம். இந்த தீப தர்ஶந தத்துவத்தைப் புரிந்துகொள்ளுங்கள். பார்ப்பவனை பார்த்தலே பரம தீப தர்ஶநம். பரஞ்சோதி தர்ஶநம். பரமஜோதி தர்ஶநம்.

'சொலல்' இல்லாது ஸ்மரணம் செய்தலே, அருணாச்சல ஸ்மரணம்.

தீப தர்ஶநத்திற்குத் தயாராகுங்கள்.

நாளை மாலை 4 மணிக்கே ஸத்ஸங்கம் தொடங்கிவிடும். தீப தர்ஶநத்திற்கு முன்பாகவே 4 மணிக்கே, இந்திய நேரப்படி 4 மணிக்கே நான் தர்ஶநத்திற்கு வந்து விடுவேன். 4 மணிக்கு தீப தர்ஶநம் வரை ஸத்ஸங்கம் நிகழும். பிறகு தீப தர்ஶநம் முடிந்த பிறகு, இந்த தொடர் ஸத்ஸங்கம் எட்டிலிருந்து பத்து வரை நிகழும். இந்த ஸத்ஸங்கமும் நிகழும்.

இன்று திருவண்ணாமலையிலே பே கோபுரத்திற்கு நேர் எதிராக, மேலக்கோபுரம் என்று சொல்லப்படுகின்ற மேற்குக் கோபுரத்திற்கு நேர் எதிராக, ஒரு இடம் 6600 சதுர அடி அளவுடைய ஒரு இடம், பே கோபுரத்துடைய நிழலே படும், அது மாதிரியான ஒரு இடம் வாங்கப்பட்டு, கைலாஸா திருவண்ணாமலை ஆதீனமாக, ஆஶ்ரமமாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

நாளை தீபத்திருவிழா அன்று மாலை 4 மணிக்கு முறையாக கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மற்ற பூஜைகள் அனைத்தும் நிகழ்ந்து, வேதாகமப்படி க்ரஹப்ரவேஸமும், குடமுழுக்கும் செய்யப்படும்.

நாளை முறையான திறப்பு விழா - இந்த ஆதீனத்தை உலக மக்களுக்கு அர்ப்பணிக்கின்ற விழாவும், திறப்பு விழாவும் நிகழும்.

திருவண்ணாமலையில் இருக்கும் அன்பர்களும், திருவண்ணாமலைக்கு வரும் அன்பர்களும், அண்ணாமலையார் ஆலயத்தின் பே கோபுரம், மேலக் கோபுரத்தின் நேர் எதிரில் நாளையிலிருந்து தர்ஶநமும் செய்து, அன்னதானமும் பெற்றுக்கொள்ளலாம், உண்ணலாம்.

தினசரி 24 மணி நேர அன்னதானம் அங்கே நிகழும். அதற்கான ஏற்பாடுகளை அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள் செய்கின்றார்கள்.

திரும்பவும் நான் நேற்று சொன்ன மாதிரிதான் சொல்கின்றேன். திருவண்ணாமலையில் நிகழுகின்ற எல்லா அன்னதானத்திற்குரிய புண்ணியம், நன்மை, பலன், புகழ், நல்ல பெயர் எதற்கும் நான் உரியவன் அல்ல. அதையெல்லாம் அங்கிருக்கும் கைலாஸா திருவண்ணாமலையின் ராஜ ஸபை அன்பர்களும், சித் ஸபை அன்பர்களும்தான் நிகழ்த்துகிறார்கள். ராஜ ஸபை உறுப்பினர்கள், சித் ஸபை உறுப்பினர்கள், அவர்கள்தான் பொறுப்பெடுத்து, வேலைசெய்து, செயல்பட்டு, இந்த அன்னதான சேவையை செய்கின்றார்கள். அவர்களுக்கும் நன்றி.

வந்து அன்னதான சேவை பெற்று, எங்கள் மஹேஶ்வர பூஜையை ஏற்று, எங்களுக்கு அருள் செய்யும் அன்பர்களுக்கும் நன்றிகள்.

வருகின்ற உங்கள் ஒவ்வொருவரையும் நாங்கள் பரமஶிவனாகத்தான் பார்க்கின்றோம். பரமஶிவனின் வடிவங்கள், பரமஶிவனை தரிசிக்க வந்த பரமஶிவனின் வடிவங்களாகிய உங்கள் அனைவருக்கும் அன்னதானம் செய்வதை, நாங்கள் பெருமானுக்கு நெய்வேத்யம் செய்கின்ற செயலாகத்தான் பக்தியோடு பார்த்து செய்கின்றோம்.

நாளையிலிருந்து திருவண்ணாமலையில் மூன்று இடத்தில், திருவூடல் தெருவில் நான் பிறந்த வீடு, கிரிவலப் பாதையில் இருக்கின்ற கைலாஸா திருவண்ணாமலை, இப்பொழுது பே கோபுரத் தெருவில், பே கோபுரத்திற்கு நேர் எதிராக அமைக்கப்பட்டிருக்கின்ற கைலாஸா திருவண்ணாமலை.

இந்த மூன்று இடங்களிலும் தொடர்ந்து 24 மணி நேர அன்னதானம் நிகழும். அண்ணாமலையாருக்கு தினந்தோறும் அபிஷேகம் செய்து, அந்த ப்ரஸாதத்தை கொண்டு வந்து, அதை உணவிலே கலந்து, உங்களுக்கு அண்ணாமலையார் ப்ரஸாதமாகத்தான் அன்னதானம் அளிக்கின்றோம்.

இப்போதைக்கு இரண்டு இடத்திலே நிகழுகின்றது. திருவூடல் தெருவிலும், கிரிவலப் பாதையில் ஆதி அண்ணாமலை இடத்திலும் இரண்டு இடங்களில் நிகழ்கின்றது. நாளையிலிருந்து மூன்று இடங்களில் நிகழும்.

அன்பர்கள் அனைவரையும் வருகை தந்து, அன்னதானம் பெற்று, எங்களை ஆசீர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். உங்களுக்கு நாங்கள் செய்யும் சேவை பெருமானுக்கே செய்யும் சேவையாகத்தான் நினைக்கின்றோம். அந்த உணர்வோடுதான் செய்கின்றோம். இந்த சேவையை செய்கின்ற அன்பர்கள், சீடர்கள், பக்தர்களையும் வணங்குகின்றேன், வாழ்த்துகின்றேன், ஆசீர்வதிக்கின்றேன்.

உங்கள் எல்லோருக்கும் பரிபூர்ண நல்லாசிகள்.

இந்த பரம ஸத்யங்களை உள்வாங்கி, நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, பரமாத்வைத அனுபூதியில் நிலைத்து, நித்யானந்தம் ஆகிட ஆசீர்வதிக்கின்றேன்.

ஆனந்தமாக இருங்கள். --------------------------------------------------------------------------------------------------------------

Details

The talk

Date
1 December 2025
Language
English

The recording

Recording
No recording linked to this transcript

The transcript

Status
Live notes
Time-synced
Not time-synced
Length
6,579 words · 37 min read
Topics
None recorded