☰KAILASA Library/Satsangs/கார்த்திகை தீபம் சிறப்பு ஸத்ஸங்கம் - நாள் - 13Sign in
3 December 2025

கார்த்திகை தீபம் சிறப்பு ஸத்ஸங்கம் - நாள் - 13

Live notes·Mahakailasa
The Satsang

ஓம் நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம் நித்யானந்தேஶ்வரி பரமஶக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்

உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

இணையத்தாலும் இதயத்தாலும், இந்த கார்த்திகை தீபத் திருநாள் ஸத்ஸங்கத்திற்காக இணைந்திருக்கும் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

இந்த கார்த்திகை தீப நன்னாளில், பரமஶிவப் பரம்பொருளின் வாழும் வாரிசாக, பரமஶிவப் பரம்பொருளின் பரமவெளிப்பாடாய் இருந்து, உங்கள் அனைவருக்கும், எல்லோருக்கும் பரமாத்வைதத்தை அருளி ஆசீர்வதிக்கின்றோம்.

பரமாத்வைத ப்ராப்திரஸ்து! ஸர்வ ஐஸ்வர்ய ப்ராப்திரஸ்து! ஸர்வ மங்கள ப்ராப்திரஸ்து! தர்மார்த்த காம மோக்ஷ ப்ராப்திரஸ்து! ஜீவன் முக்தி ப்ராப்திரஸ்து! ஆரோக்ய ப்ராப்திரஸ்து! ஆனந்த ப்ராப்திரஸ்து! சுக, போக, பல, ஸர்வ மங்கள, ஸர்வ ஐஸ்வர்ய, ஸர்வ ஆனந்த ப்ராப்திரஸ்து!

ஸாலோக்ய, ஸாமீப்ய, ஸாரூப்ய, ஸாயுஜ்ய முக்தி ப்ராப்திரஸ்து!

இன்று கார்த்திகை தீபத் திருநாள்.

பரம்பொருள், பரமஶிவப் பரம்பொருள் ஏகன் அநேகனாய் மலர்ந்து, Big Bang என்று சொல்லப்படும் காலம் கடந்து, நேரம் கடந்து, வடிவம் கடந்து, நாம ரூபம் கடந்து, இருப்பும் இருப்பின்மையும் எனும் நிலை கடந்து இருக்கும் பரம்பொருள்… நாம, ரூப, கால, தேசங்களுக்குள் வெளிப்பட்டு, அவ்யக்தமாய் இருக்கும் பரம்பொருள் வ்யக்தமாய் வெளிப்பட்டு, Big Bang என்று சொல்லப்படும் மஹா ஸ்ரு'ஷ்டி நிகழும் அந்த நிகழ்வே பரணி தீபமாக விடியற்காலையில் காட்டப்படுகின்றது.

பிறகு மாலையிலே தாயார் பராஶக்தி, ஶக்தி சிவத்துள் கரைந்து அர்தநாரீஸ்வரராய்... அநேகன் ஏகனாய் ஆகின்ற ப்ரஹ்மாண்டங்களும் ப்ரஹ்மாவிற்குள் ஒடுங்கி, ப்ரஹ்மா விஷ்ணுவிற்குள் ஒடுங்கி, விஷ்ணு ஶக்திக்குள் ஒடுங்கி, ஶக்தி பெருமானுக்குள் கரைந்து 'அர்தநாரீஸ்வரராய்' நிற்கும் திருக்கோலம், அனுபூதி, மஹா தீபமாக நிகழ்ந்திருக்கின்றது.

நம் எல்லோருக்குள்ளும் பார்ப்பவனைப் பார்த்து, ஸாக்ஷியை ஸாக்ஷியாய் பார்க்கும்பொழுது ஏற்படும் நித்ய நிகழ்வில் பரஞ்ஜோதி அனுபூதி, நித்ய ஜோதி அனுபூதி, பரம ஜோதி அனுபூதியே - 'கார்த்திகை தீபம்'. பரஞ்ஜோதி கண்டு, கார்த்திகை தீபம் கண்டு, பரமாத்வைதத்தில் நிலைத்திருக்க ஆசீர்வதிக்கின்றோம்.

இந்த நன்னாளிலே, திருவண்ணாமலையில், அண்ணாமலையார் ஆலயத்தின் மேலக் கோபுரம், 'பே கோபுரம்' என்று அழைக்கப்படும் மேலக் கோபுரத்தின் நேரெதிரில், கோபுரத்தின் நிழல் விழுகின்றபடியாக ஒரு இடத்தை கிரயம் பெற்று, 'கைலாஸா திருவண்ணாமலை நித்யானந்த அவதார ஸ்தலம்' என்கின்ற பெயராலே, பீடமாக, கைலாஸ பீடமாக அமைத்து, அங்கு நித்ய பூஜையும், நித்ய அன்னதானமும் நிகழ்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இப்பொழுது, கைலாஸா திருவண்ணாமலை நித்யானந்த அவதார ஸ்தலம், கைலாஸ பீடத்தை முறைப்படி, எல்லாவிதமான கணேஷ பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து ஶாந்தி மற்றும் சகலவிதமான வேத-ஆகம முறைப்படியான பூஜைகள் நிகழ்ந்து, க்ரஹப்ரவேஸத்திற்கான சகல பூஜைகளும் மற்றும் கும்பாபிஷேகத்திற்கான சகல பூஜைகளும் நிகழ்ந்து, அவைகள் பூர்ணாகுதியோடு முழுமையடைந்திருக்கின்றன.

இப்பொழுது முறையாக இந்த அறிவிப்பின் மூலம், கைலாஸா திருவண்ணாமலை நித்யானந்த அவதார ஸ்தலத்தை துவக்கி வைக்கின்றோம்.

ஆரத்தியும் பூஜையும் நிகழ்ந்து, அன்னதானங்கள் தொடர்ந்து நிகழும் நித்யானந்த அவதார ஸ்தலத்தை, கைலாஸா திருவண்ணாமலை நித்யானந்த அவதார ஸ்தலத்தை முறையாக துவக்கி வைக்கின்றோம்.

பரமாத்வைத ப்ராப்திரஸ்து! ஸர்வ மங்கள ப்ராப்திரஸ்து! ஸர்வ ஆனந்த ப்ராப்திரஸ்து!

அருணாச்சல கருணாமூர்த்தி, அருணாச்சலேஶ்வரப் பரம்பொருள், அருணாச்சல ஶிவ பரம்பொருள் என்றென்றும் இங்கு வீற்றிருந்து, கணபதி முதல் தன்னுடைய சகல பரிவார தேவதைகளோடு, ஸர்வ ஆனந்தத்தோடு, சகல கலைகளோடு, பரம்பொருள் என்றென்றும் இங்கு வீற்றிருந்து எல்லோர்க்கும் அருள் செய்வாராக.

எல்லோர்க்கும் எல்லா நன்மையும் கிடைக்கட்டும்.

இந்த ஸ்தலத்திற்கு வருவோர்கள் அனைவருக்கும், எல்லா நன்மையும் கிடைக்கட்டும். தர்மார்த்த காம மோக்ஷ ப்ராப்திரஸ்து!

ஓம்

முறைப்படி கைலாஸா திருவண்ணாமலை - நித்யானந்த அவதார ஸ்தலம் துவங்கப்பட்டுவிட்டது. அனைவரும் வருக, பரம்பொருளின் பேரருள் பெருக.

பரமானந்த ப்ராப்திரஸ்து! பரமாத்வைத ப்ராப்திரஸ்து! ஸர்வ மங்கள ப்ராப்திரஸ்து! ஸர்வ ஐஸ்வர்ய ப்ராப்திரஸ்து!

எல்லோருக்கும் எல்லா நலன்களும் கிடைக்க, எல்லோரும் எல்லா நலனோடும், வளத்தோடும் எல்லா நல்வாழ்வும் பெற்று தர்ம, அர்த்த, காம, மோக்ஷதோடு, ஜீவன் முக்தர்களாக, வாழ்வாங்கு வாழ்வீர்களாக.

ஓம்

இந்த கார்த்திகை தீப நன்னாள், பரம் பொருளை அனுபூதியாக உணர்வதற்கான ஶக்தி மிக உயர்ந்த அளவிலே, இந்த பூமியில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நேரம். இந்த நேரத்தை உபயோகித்து, பரமாத்வைத அனுபூதியைப் பற்றிய அடிப்படையான சில ரகசியங்களை, ஸத்யங்களை, பரம ஸத்யங்கள், பரம ரகசியங்களை உள்வாங்கிக் கொள்ளுங்கள்.

அனுபூதி இப்பொழுது நிகழும். கார்த்திகை தீபப் பரஞ்ஜோதியை, அனுபூதியாய், பரமானுபூதியாய், இப்பொழுது காண்பீர்கள். ஆழ்ந்து கேளுங்கள்… பார்ப்பவனை, ஆழ்ந்து பார்க்க... நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: இந்த ஸாக்ஷியை ஸாக்ஷியாய் பார்த்தல்.

இது கஷ்டப்பட்டு, stressful-ஆக, அந்த தலையில் ஏதோ அழுத்தத்தோடு செய்வதில்லை. ரொம்ப relaxed-ஆ, 'எனக்குள்தான் இவை அனைத்தும் ஓடுகின்றன. இதெல்லாம் எதன் மீது ஓடுகிறதோ, இதையெல்லாம் பார்ப்பது எதுவோ, அதைப் பார்த்திருக்கின்றேன். அதைப் பார்ப்போம்' என்று relaxed-ஆக பாருங்கள்.

அதாவது ஐயா, செயல்படுவதுதான் stress. இங்கு, எல்லா செயல்பாட்டிலிருந்தும் உங்களை withdraw செய்துகொள்கின்றீர்கள். தோன்றா நிலையாக, அவ்யக்த பரம்பொருள், வ்யக்தமாகத் தோன்றாத நிலையில், துலங்கி இருத்தல். வ்யக்தமாகத் தோன்றும்பொழுதும், இரண்டாக மாறாது, 'இருப்பு ஒன்றே' எனும் பரமாத்வைதத்திலேயே இருக்கும் 'இருப்பு நிலை'.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இன்று 13-வது நாள் ஸத்ஸங்கம். 10-வது நாள் திருவிழா. கடந்த சில நாட்களாக, 36 தத்துவங்களைப் பற்றியும், முக்கியமாக எப்படி நீங்கள் தினந்தோறும், 'நீங்கள்' என்கின்ற தனி வ்யக்தி, நீங்கள் மயக்கத்திலே உங்களுக்கு உருவாக்கிக்கொண்ட இந்த தனி வ்யக்தி இல்லாத நிலையை, அனுபவமாய் பார்த்து, கண்டு, மீண்டும் உங்களை தினந்தோறும் உருவாக்குகின்றீர்கள் என்கின்ற ஸத்யத்தைச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

இன்று காலை அதே ஸத்யங்களைத்தான், ஆங்கிலத்தில் ஸத்ஸங்கமாக கொடுத்தேன். இப்பொழுது இந்த ஸத்யங்களை ஆழ்ந்து உள்வாங்குங்கள்.

நம் வாழ்க்கையில் நடக்கின்ற, மிகப்பெரிய ஒரு miracle, தினந்தோறும் இரவு நடக்கின்றது. எந்த identity இல்லாமல் வாழ முடியாது என்று நீங்கள் ஆழமாக நம்புகின்றீர்களோ, எந்த identity -யை காப்பாற்றுவதற்காக, சகலவிதமான போராட்டங்களையும் செய்கின்றீர்களோ, அந்த identity -யை, volunteer-ஆக காணாமல்போக வைத்துவிடுகின்றீர்கள் ஐயா. volunteer-ஆக அந்த identity-யை தற்கொலை செய்ய வைத்துவிடுகின்றீர்கள். தினந்தோறும் இரவு, volunteer-ஆக அந்த identity-யை விட்டுவிடுகின்றீர்கள். காரணம் என்னவென்றால், திரும்ப உங்களால் build பண்ண முடியும் என்கின்ற தைரியத்தினால்!

தினந்தோறும் இரவு, அந்த identity-யை கரைத்துவிடுகின்றீர்கள், voluntary suicide பண்ணிவிடுகின்றீர்கள். காலையில் எழும்பொழுது, சில வினாடிகளில், microseconds – ல் மொத்த identity-யும் மீண்டும் கட்டமைத்து, அந்த identity மூலமாக இந்த உலகத்தைப் பார்த்து, உங்களுடைய memory, ambitions, good, bad, right, wrong, fear, greed எல்லாவற்றையும் எடுத்துவிட்டு வந்து, உங்கள் வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிடுவீர்கள்.

ஐயா இது மொத்தத்தையும், தினந்தோறும் இரவும், விடியற்காலையும் செய்கிறீர்கள். இது எவ்வளவு பெரிய miracle! ஆனால் கொடுமை என்னவென்றால், இந்த miracle-ஐ நாம் கண்டுகொள்ளாமலே இருக்கின்றோம். இவ்வளவு பெரிய விஷயம் தினந்தோறும் உங்கள் வாழ்க்கையில் நடக்கின்றது என்று கண்டுகொள்ளாமலே இருக்கின்றீர்கள்.

ஓர் இரவு உறக்கத்தையும், ஒரு காலை விடியலையும், உதயத்தையும், நீங்கள் conscious-ஆக வாழ்ந்துவிட்டீர்களானால், அதற்குமேல் உங்கள் வாழ்க்கையே வேறு நிலைக்கு மாறிவிடும். ஒரு conscious breakthrough உங்களுக்கு நடந்துவிடும்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்… சற்றே பாருங்கள்... பெருமான் இரண்டுமுறை, பெருவெளிப் பரஞ்ஜோதியாக வெளிப்படுகின்றார். முதல்முறை இந்த ப்ரபஞ்சத்தை ஸ்ரு'ஷ்டி செய்யும்பொழுது, அவ்யக்தத்திலிருந்து வ்யக்தமாக வெளிப்படுவது. அதுதான் காலையிலே காட்டப்பட்ட பரணி தீபம்.

இன்னொரு முறை, ப்ரஹ்மா விஷ்ணுவிற்கு அடிமுடி காணாத, காட்டாத அருட்பெருஞ்ஜோதியாய் நின்றார். அது ஶிவராத்ரியின்போது நிகழ்ந்தது.

ஆனால் இரண்டுமே நிகழ்ந்த இருப்பு - திருவண்ணாமலை.

காரணம் என்னவென்றால், அவர் உருவான உடனே, முதலில் உருவாக்கியது, முதலில் வெளிப்பட்டது திருவண்ணாமலைதான்.

பிறகு அடிமுடி காணாத அருட்பெருஞ்ஜோதியாக வெளிப்பட்டு, ப்ரஹ்ம-விஷ்ணுக்களை, அடிமுடியைத் தேடச் சொன்னதும் திருவண்ணாமலைத் தலத்தில்தான்.

பிறகு, அன்னை பராஶக்திக்காக, அன்னை பராஶக்தி, உமையன்னை, அபீதகுஜாம்பிகை, பெருமானோடு இடப்பாகம் பெற்று, அர்தநாரீஶ்வரராக, ஒன்றிட வேண்டும் என்று தவமிருந்த பொழுது, மலையின் நுனியில் ஜோதியாய் காட்டி, ஜோதியாய் தன்னை வெளிப்படுத்தி, அர்தநாரீஶ்வரராக, அன்னையை ஏற்றுக்கொண்டு, இடப்பாகம் தந்து, அர்தநாரீஶ்வரக் கோலம் காட்டி அருளும், அந்த நிகழ்வுதான் மாலை மஹா தீபம்.

இந்த மூன்றையும் புரிந்துகொள்ள வேண்டும். அவ்யக்தம் வ்யக்தமாக வெளிப்படுதல் - காலையில் நடந்த பரணி தீபம். அடிமுடி காட்டாது, ப்ரஹ்மா விஷ்ணுவிற்கு அடிமுடி காட்டாது, அவர்களைத் தேட விடுவதற்கு தேடவிட்டு, அவர்களுக்காக பரஞ்ஜோதியாக வெளிப்பட்டு, ஜோதி ஸ்தம்பமாக வெளிப்பட்டது ஶிவராத்ரி நன்னாளில். பிறகு, தாயாருக்கு, மலை உச்சியில் பரஞ்ஜோதியாய் வெளிப்பட்டு, இடப்பாகம் தந்து, அர்தநாரீஶ்வரர் ஆக்கிக்கொண்டு, அர்தநாரீஶ்வர கோலத்தில் நம் எல்லோருக்கும் அருள்செய்யும், அந்த, திருவிளையாடல் செய்தருளியது - மாலை மஹாதீபமாகக் காட்டப்படுகின்றது.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்: நம் எல்லோருக்கும், இந்த மொத்த ப்ரபஞ்சத்திற்கும் 'புருஷன்' ஒருவன்தான். அது 'பரமஶிவ பரம்பொருள்தான்'.

நாம் எல்லோருமே, ப்ரக்ரு'தியின் வெளிப்பாடுகள். நாம் எல்லோருமே தாயாரின் பாகம்தான். உமையன்னையின் பாகம்தான். உண்ணாமுலையாளின், அபீதகுஜாம்பிகை அன்னையின் பாகம்தான். தாயாருக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்கும் புருஷன் ஒருவர்தான்.

பதி ஒருவனே! அது அருணாச்சல பரம்பொருளே! அருணாச்சல கருணாமூர்த்தியே! பரமஶிவ பரம்பொருளே!

நாம் எல்லோரும், அவரைத் தேடி, அவரை அடைந்து, ஸாயுஜ்ய நிலை அடைந்து, அவருக்குள் கரைவதுதான், அர்தநாரீஶ்வர தத்துவம்.

இன்னும் பல விதத்திலே இதை, இந்த அனுபவத்தை விளக்கலாம். ஆழ்ந்து கேளுங்கள்: பார்ப்பவனைப் பார்த்தீர்களானால், ஸாக்ஷியை ஸாக்ஷியாய் பார்த்தீர்களானால்… observer-ஐ observe பண்ணுங்கள், witness-ஐ witness பண்ணுங்கள்... அப்பொழுது என்ன நடக்கும் என்றால்... கண்களாலே பார்க்க முடியாத, உணர்விலே நிறைகின்ற பேரொளி அனுபவம் ஏற்படும். அந்த ஒளியை கண்ணால் visualize பண்ணி பார்க்க முடியாது. 'ஆயிரம் கோடி சூரியன் ஜோதி...' அந்த மாதிரி visualize பண்ணி, உவமையாலே, உவமானங்களாலே, உவமேயங்களாலே சொல்கின்ற கற்பனைகூட செய்து பார்க்க முடியாது.

இந்த 'அருணாச்சலம்' என்கின்ற வார்த்தையே, 'ஆயிரம் கோடி சூரியன் ஜோதி' என்கின்ற வார்த்தைதான் அருணாச்சலம். அதாவது, சூரியன்களாலேயே ஆன மலை. ஒவ்வொரு துகளும் ஒரு சூரியன். ஒவ்வொரு அணுவும் ஒரு சூரியன் என்றால், அந்த மலை எத்தனை கோடி சூரியன் என்று புரிந்துகொள்ளுங்கள். சூரியன்களாலேயே ஆன மலை!

காரணம் என்னவென்றால், ஏன் அந்த மாதிரி வர்ணிக்கப்படுகின்றார் என்றால், 'வர்ணிக்க முடியாதது' என்று சொல்ல முடியாததனால், 'வர்ணிக்க முடியாதது' என்று சொல்ல முடியாது இல்லையா? அதனால் ஏதோ ஒரு வர்ணனை, 'வர்ணிக்க முடியாது' என்கின்ற பொருள் வருகின்ற வர்ணனையாவது கொடுத்தாக வேண்டுமே என்பதற்காகத்தான்… அண்ட முடியாத மலை, அண்ணாமலை. அண்ணாமலை! உடலால் மட்டுமல்ல, மனதால் மட்டுமல்ல, வார்த்தைகளால் மட்டுமல்ல, எந்த உணர்வாலும் அண்ட முடியாத அண்ணாமலை. ஆயிரம் கோடி சூரியன் ஜோதி.

பார்ப்பவனைப் பார்த்தீர்களானால், observer-ஐ observe பண்ணீர்களானால், witness-ஐ witness பண்ணீர்களானால், உங்களுக்குள் அந்த கண்களால் காணமுடியாத, கற்பனையில் நினைக்க முடியாத பரஞ்ஜோதி, பேரொளி அனுபவம் தெரியும்.

அந்த பரஞ்ஜோதியே கார்த்திகை தீபம். அந்த பரஞ்ஜோதியே பரமஶிவப் பரம்பொருள். அந்த பரஞ்ஜோதியே அர்தநாரீஶ்வர அனுபூதி. வைணவத்தில் ஒரு அழகான ஒரு ஸத்யம் சொல்லப்படுவது, sacred sentiment... ''ப்ரு'ந்தாவனத்திலே, க்ரு'ஷ்ணரைத் தவிர வேறு புருஷனே கிடையாது. மற்ற எல்லோருமே கோபிகைகள்தான். ஒரே ஒரு புருஷன்தான், அது க்ரு'ஷ்ணன் மட்டும்தான்.''

ப்ரபஞ்சத்திலேயே ஒரே ஒரு புருஷன் மட்டும்தான் ஐயா இருக்கின்றான். அது பரமஶிவப் பரம்பொருள் மட்டும்தான் ஐயா. நாம் எல்லாருமே அங்கு இங்கு, அங்கு இங்கு சுற்றிக்கொண்டிருக்கின்ற ப்ரக்ரு'தி. எப்பொழுது அவனைக் கண்டு, அவன் திருவடி அடைகின்றோமோ, அப்போது நாம் 'அர்தநாரீஶ்வரர்' ஆகின்றோம்.

யாருமே நினைத்தே பார்க்க முடியாது. ரமண மஹரிஷி மதுர பாவத்தில் கொஞ்சிக் குலாவுகின்றார் ஐயா. வேதாந்தத்தின் உச்சம், பரமானுபூதியை கண்ட பகவான் ரமணர்… 'அகக்குகை புகுந்து எனை...' என்று அருணாச்சல அக்ஷர மணமாலையில் பாடுகின்றார்.

ஒவ்வொரு வரியும்... அகம்புகுந்து ஈர்த்து உன் அகக்குகைச் சிறையாய் அமர்வித்தது என்கொலோ அருணாசலா!

ஆருக்காவெனை ஆண்டனை அகற்றிடில் அகிலம் பழித்திடும் அருணாசலா!

ரமண மஹரிஷியோட, பகவான் ரமண மஹரிஷியோட secret life-ஐ, secret-ஆக பார்க்கின்ற ஒரு window தான் ஐயா அந்த அக்ஷர மணமாலை. அதுமாதிரி ஒரு வேதாந்த பரம ஜ்ஞாநி, இவ்வளவு மதுர பாவம் ரசம் சொட்டச்சொட்ட, பெருமானை நோக்கி பாடி உருகி இருக்கின்றார்.

அக்ஷர மணமாலை - அதுதான் பெருமான் எழுதியது. ரமண மஹரிஷி எழுதியது. ஒவ்வொரு வரியும்… 'அழகு சுந்தரம்போல் அகமும் நீயுமுற்று' அழகு சுந்தரம் - அவர்களுடைய, அவருடைய தாய் தந்தையர் பெயர். 'அது மாதிரி நீயும் நானும் இருக்கலாமா?' என்று சொல்லி சொல்லிக் கூப்பிடுகின்றார். அதாவது கொஞ்சம் polite-ஆக, open-ஆக discuss பண்ண முடியாத, இந்த வள்ளுவர் காமத்துப்பாலில் உபயோகிக்கின்ற language-ல், அந்த elite, ஒரு veiled language-ல், திரையிட்டு பேசுகின்ற, அந்த நாணம் பொங்குகின்ற language-ல், 'அம்மா அப்பா விளையாட்டு விளையாடலாம் வா' என்று அண்ணாமலையானை அழைக்கின்றார்.

'அழகுசுந்தரம் போல் அகமும் நீயுமுற்று அபின்னமாய் இருப்போம் வா அருணாசலா!

அக்ஷரமண மாலைக்கு பொருள் சொல்லவேண்டும் என்ற உடனே, நான் ஆயிரம் தலைகொண்ட ஆதிஶேஷனாக மாறி பதஞ்சலி எப்படி மஹா பாஷ்யம் எழுதினாரோ, அது மாதிரி நான் ஆயிரம் தலைகளோடு, ஆயிரம் நாக்கோடு வடிவெடுத்தால் மட்டும்தான், அக்ஷர மணமாலைக்கு பொருள் சொல்ல முடியும்.

ஏனென்றால், அவ்வளவு உணர்வு பொங்குகிறது. ஒவ்வொரு வரியும் மதுர பாவத்தின் உச்சம்! அது ரமண மஹரிஷியிடமிருந்து யாருமே எதிர்பார்க்க முடியாது.

ரமண மஹரிஷி ஸநாதன ஹிந்து தர்மத்திற்கு செய்த மிகப்பெரும் பங்களிப்பு - இந்த அக்ஷர மணமாலை. இந்த அக்ஷர மணமாலை இல்லை என்றால், இந்நேரம் அவரையும் J. கிருஷ்ணமூர்த்தி, ஓஷோவை எல்லாம் எப்படி அந்த Max Mullerian, Macaulay-educated… Macaulay-educated, Max Mullerian religious educated, Left Wing Liberals எப்படி ஓஷோ, J. கிருஷ்ணமூர்த்தி இவர்களையெல்லாம் digest பண்ணிவிட்டார்களோ, அந்த மாதிரி ரமண மஹரிஷியை digest பண்ண முடியாமல், 'ஒரு பரம ஜ்ஞாநி theistic stand எடுப்பது' என்கின்ற trend-ஐ ஆழமாக set பண்ணியவர் பகவான் ரமண மஹரிஷிதான் ஐயா.

நீங்கள் கொஞ்சம் அப்படியே பொறுமையாகப் பாருங்கள்... ரமணருக்கு முன்பு, British invasion-னுக்குப் பிறகு இந்தியாவில் உருவான ஜ்ஞாந குருமார்கள், ஜ்ஞாநிகள், ரமணருக்கு முன்பு, ரமணருக்குப் பின்பு என்று பிரித்தீர்களானால், அதற்கு முன்னாடி எல்லோருமே, especially இந்த Western influence, Macaulay-education-ஐ பார்த்தவர்கள், Max Mullerian religious education பண்ணியவர்கள், அத்தனை பேரும் liberal, agnostic அல்லது atheistic stands எடுத்து, universality என்கின்ற பெயரால், ஸநாதன ஹிந்து தர்மத்தை யார் வேண்டுமானாலும் digest பண்ணிவிட்டு, product-ஐ digest பண்ணிவிட்டு, brand-ஐ அழித்துவிடுவதற்கான, பழத்தைப் பறித்துக்கொண்டு மரத்தை வெட்டி விடுவதற்கான அந்த stand, அந்த strategy-தான் எடுத்தார்கள். பெரிய list எடுத்து நீங்களே போட்டு பாருங்கள்.

பகவான்தான் first time, British invasion-னுக்கு பிறகு உருவான ஜ்ஞாநிகளிலே first time, ஒரு ஜ்ஞாந புருஷன், ஒரு பரம அனுபூதி அடைந்த ஜ்ஞாந குரு, theistic stand எடுப்பது. Atheistic-ஓ அல்லது agnostic stand-ஓ எடுக்காமல், theistic stand எடுப்பதை முதலில் பகவான்தான் செய்கின்றார். அதுவும் இந்த அக்ஷரமண மாலையில்தான் செய்கின்றார்.

அதற்குப் பிறகு, பகவானுக்குப் பிறகு வந்தவர்கள் சகல குருமார்களும் bold-ஆக theistic stand எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ராமகிருஷ்ணரே theistic stand எடுத்தாலும், பல இடங்களில் விவேகானந்தர் agnostic stand எடுக்கின்றார்.

Western influence, Macaulay-education, Max Mullerian religious education, இந்த இரண்டிலும் அடிபட்டவர்கள், அந்த இரண்டு toxin-ம், toxic ideas, toxins-ம் உள்ளேப் போனவர்கள் அத்தனை பேருமே, ஜ்ஞாநம் அடைந்த பிறகும் liberal Left Wing strategy, agnostic, atheistic stands-ஏ எடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்த language-லேயே அவர்களை express பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

ரமண மஹரிஷி அந்த trend-ஐ உடைத்தார். உடைத்து, theistic stand எடுக்க ஆரம்பித்தார். ரமண மஹரிஷிக்குப் பின்னாடி வந்தவர்கள் எல்லோருமே, பெரும்பாலானவர்கள் theistic stand-ஏ எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

Exemption, of course, ஓஷோ, J. கிருஷ்ணமூர்த்தி, ரமண மஹரிஷிக்குப் பின்னாடி வந்தவர்கள்தான். அது ஏதோ காரணத்தினால் அவர்கள் agnostic stand-ஐ எடுத்துவிட்டார்கள். பெரும்பாலானவர்கள் theistic stand எடுப்பது, நான் உட்பட, theistic stand எடுப்பதற்கு, அனுபூதிக்குப் பிறகு theistic stand எடுப்பதற்குக் காரணம் ரமண மஹரிஷி, பகவான் ரமண மஹரிஷி.

அதிலும் முக்கியமாக இந்த அக்ஷர மணமாலை. அக்ஷர மணமாலை. பகவானைப்போய் மதுர பாவத்தில் மயக்கி இருக்கிறார் என்றால், 'அண்ணாமலையானே உன் பேராண்மை!'

யாரோ ஒருவர், என்னை விமர்சனம் பண்ணுபவர்தான், அவதூறு பேசுபவர். ஒரு நல்ல விமர்சனம் கூட கிடையாது, அவதூறு பேசுகின்ற ஒருவர், அவருடைய video-ல் சொல்லியிருக்கின்றார்... ''திருவண்ணாமலையில் பிறந்த ஒரே காரணத்தால், தன்னை பெரிய ஆள் என்று நினைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்கிறார்'' என்று சொல்லியிருக்கின்றார்.

ஹே! அதைவிட வேறு என்னய்யா காரணம் வேண்டும்?

அவர் பேரைச் சொல்ல நான் விரும்பவில்லை. ஆனால் உனக்குத் தெரியும் அந்த வீடியோ போட்டது நீதான் என்று. உனக்கு பதில் சொல்கிறேன்... கேட்டுக்கய்யா.

உலகத்திலேயே இருக்கின்ற ஒரே புருஷன்... ஏய்யா... நீ எல்லாம்... சும்மா, இன்னைக்கு வரும், நாளைக்கு ஓடிப்போய்விடும். வந்து இருக்கும்போதும் எத்தனை தலைவலி கொடுக்கும், எத்தனை தரம் breakup சொல்லும், எத்தனை தரம் திரும்ப patch-up பண்ணும் என்று தெரியாத girl friend, boy friend-க்கெல்லாமே இந்த அலை அலைகிறாய்.

ஒருவேளை அப்படி ஏதாவது ஒன்று சிக்கிவிட்டதென்றால், அதற்காக அந்தப் பெருமைப்பட்டு, அது 'yes' சொன்ன உடனே ''ஆ லாலா லூ லூ'' என்று அந்த சினிமா duet எல்லாம் ஆடுகின்றாய், imagination-ல். அதுவா... வருவதற்கு முன்னாடியும் ஏங்கித் தவிக்க வைக்கும். வந்த பிறகும் பெரும் தலைவலி குடைச்சலாக இருக்கும். 'Breakup ஆயிடுமா?' என்ற பயமும் இருக்கும். ஆனால் breakup ஆகாமல் இருந்தாலும், குடைச்சலாக இருக்கும். Breakup ஆனாலும் தலைவலி, ஆகவில்லையென்றாலும் குடைச்சல். ஒருவேளை breakup-ஏ ஆகி ஓடிப்போய்விட்டது என்றாலும், ஒன்றுமில்லால் போகும். ஒருவேளை கூடவே வாழ்ந்தாலும், பெரும் தலைவலியாக இருக்கும். இந்த மாதிரியான boy friend, girl friend-டுக்கே நீங்கள் இவ்வளவு கொண்டாடுகின்றீர்களேடா...

அந்த பொண்ணு 'yes’ சொன்ன உடனே.. 'ஆ….' என்று, கத்தி party வச்சி அல்லது அந்த பையன் 'yes’ சொன்ன உடனே 'ஊ…… ' என்று, அப்படியே சினிமாவில் காட்டுகின்ற மாதிரி 'லாலா லூலூ' என்று duet பாடி, ஆட்டம் ஆடி கொண்டாடுறீங்களே….

ஜென்ம ஜென்மத்திற்கும், வாழ்வெலாம் துணையாய் இருந்து, வழியாய் இருந்து, என் வாழ்முதல் பொருளாய் இருந்து, ஜென்ம ஜென்மத்திற்கும் ஆத்ம நாயகனாக ஒருவன் கிடைப்பது என்ன சாதாரண வேலையாப்பா?

அதுவும், ரமண மஹரிஷி சொல்கிறார் பாருங்கள்.. 'அகம் புகுந்து ஈர்த்து உன் அகக்குகை சிறையாய் அமர்வித்தது என்கொலோ அருணாசலா

ஆருக்காவெனை ஆண்டனை அகற்றிடில் அகிலம் பழித்திடும் அருணாசலா

இப்பழி தப்புனை ஏன் நினைப்பித்தாய் இனியார் விடுவார் அருணாசலா' என்று சொல்கிறார் பாருங்கள் ஐயா.

என்ன அழகாகச் சொல்கிறார் பாருங்கள்… என்னுடைய அகத்திலே புகுந்து, என்னை இழுத்து வந்து விட்டாய். வீட்டில் புகுந்து என்னைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டாய். 'அகத்திலே புகுந்து' என்ற வார்த்தைக்கு இரண்டு பொருள். வீட்டில் புகுந்து தூக்கிக்கொண்டு வந்துவிட்டாய் அல்லது உணர்வுக்குள் - அகத்திலே புகுந்து தூக்கிக்கொண்டு வந்துவிட்டாய் என்று இரண்டு விதத்திலேயும் சொல்லலாம்.

'புகுந்து தூக்கிக்கொண்டு வந்துவிட்டாய், இப்பொழுது என்னைக் கல்யாணம் செய்துகொண்டு என்னோடு வாழவில்லை என்றால் ஊர் பழிக்கும். என்ன பேசுவார்கள் உன்னைப் பற்றி? ஆருக்காவெனை ஆண்டனை, அகற்றிடில் அகிலம் பழித்திடும் அருணாசலா' என்று கேட்கிறார் பாருங்கள் அண்ணாமலையானை!

நான் என் கதையை சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள், சும்மா சாதாரண, 'இருக்குமோ இருக்காதோ' என்று தெரியாத, இருந்தாலும் குடைச்சலாக இருந்துகொண்டு, இல்லாமல் போனாலும் miss பண்ணுகின்ற மாதிரியான சாதாரண boy friend, girl friend-க்கே இந்த ஆட்டம் ஆடுகிறீர்கள், தலை-கால் புரியாமல் குதிக்கிறீர்கள்.

எனக்கு ஜென்ம ஜென்மத்திற்கும் பெருந்துணையாய் இருப்பவன், போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருள் - என் வாழ்க்கையின் முதல், என்னுடைய capital, என் வாழ்க்கையின் பாதை, என் வாழ்க்கையின் நாயகன், ஆத்ம நாயகன் எனக்குக் கிடைத்துவிட்டான் எனும்பொழுது…

அப்பா… 'என்ன வந்தாலும் தன்னை சாய்த்துக்கொள்ள ஒரு தோள் இருக்கின்றது' என்கின்ற மாதிரி ஒருவர் கிடைப்பது என்ன சாதாரண வேலையா?

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கருணாச்சல மூர்த்தியே, அருணாச்சலனே உனை மறவேன். அவர் கற்பனை இல்லை என்று எனக்கு அனுபூதியாகத் தெரியும்.

''காட்டு, காட்டினியா, காட்டு, பாத்தியா?'' என்று கேட்டால், ஏய் electron-ஐ எந்த physics professor-ம் பார்த்தது கிடையாது. அந்த electron நம்மீது ஏற்படுத்துகின்ற effect-ஐ வைத்துத்தான் electron இருக்கிறது என்று கண்டுபிடிக்கின்றோம், புரிந்துகொள்கின்றோம்.

அதே மாதிரிதான், கண்ணில் காட்டப்படுவதற்கு அல்ல, கருத்தால் உணரப்படும் பரம்பொருள் அண்ணாமலையான்.

'என் ஆத்ம நாயகனை கண்டுவிட்டேன், அடைந்துவிட்டேன், அவன் என்னை ஏற்றுக்கொண்டான்' எனும்பொழுது ஏன் ஆட மாட்டேன்? ஆடுவேன்தான்!

அது மட்டும் இல்லை ஐயா, ஒரு possessive-வான boy friend, இந்த பிள்ளையை வேறு எங்கேயாவது விட்டால், கிளி கொத்தி விடக்கூடாது, குரங்கு பறித்து விடக்கூடாது, கள்வன் கவர்ந்து சென்று விடக்கூடாது என்று, தன் தோட்டத்திலேயே பழுக்க வைத்து, தானே ஆச்சார்யர்களை நியமித்து, காவல் காத்து, தானே தனக்காக்கிக்கொண்ட தன்மயமான இது மாதிரி ஒரு ஆத்ம நாயகன் எனக்கு கிடைத்த பிறகு, ஏன் ஐயா திமிரெடுத்து ஆட மாட்டேன்? ஆடுவேன் தான்.

ஆனந்தத் தெள்ளேனம் கொட்டியாடுவேன்.

'திருவண்ணாமலையில் பொறந்துட்ட ஒரே காரணத்துக்காக இந்த ஆட்டம் ஆடுகிறான்'' என்று. ஹேய்... இருக்கு, அண்ணாமலையார் திருவடியில் பிறந்ததைவிட வேறு என்னய்யா வேணும்? அது பிறந்தது எப்படி தெளிவாகச் சொல்கிறேன் புரிந்துகொள்ளுங்கள்:

வேறு எங்கேயாவது பிறந்து, வேறு ஏதாவது society-ல் இருந்தால், அந்த பழத்தைக் கிளி கொத்திவிடுமோ, குரங்கு தின்றுவிடுமோ அல்லது கள்வன் தூக்கிக்கொண்டு போய்விடுவானோ என்பதனால், ஒரு possessive boy friend மாதிரி, ஒரு possessive-வான கணவன் மாதிரி தன் வீட்டிலேயே, தன் தோட்டத்திலேயே, தன் திருவடிக்கு கீழேயேப் பிறக்க வைத்துக்கொண்டு, பழுக்க வைத்து, தன்னுடைய மக்களையே காவலாக வைத்துக் காத்து, ஒரு கிளியும் கொத்தாமல், ஒரு கிளியும் பார்க்கவும் பார்க்க இயலாது, ஒரு குரங்கும் கடிக்காமல், ஒரு கள்வனும் தொடாதது மட்டுமல்லாமல், கண்ணாலும் காணாத நிலையில் வைத்து தனதாக்கிக்கொண்டானே…

அவனைப் போன்ற ஒரு ஆத்ம நாயகன் கிடைத்ததற்கு ஏன் பெருமைப்படமாட்டேன்? ஆனந்தத் தெள்ளேனம் கொட்டியே ஆடுவேன். அதை 'அஹங்காரம்' என்று சொன்னால் நீ சொல்லிக்கொள். எனக்கென்ன?

ரமண மஹரிஷியினுடைய private life, secret life-னுடைய ஒரு உயிர் இனிக்கின்ற உண்மைதான் இந்த அக்ஷர மணமாலை ஐயா.

அகம் புகுந்து ஈர்த்து உன் அகக்குகை சிறையாய் அமர்வித்ததென்கொலோ அருணாசலா?

வீடு புகுந்து என்னைத் தூக்கிக்கொண்டு வந்து, உன்னுடைய குகையிலே வைத்துக் கொண்டாய். 'ஆருக்காவெனை ஆண்டனை' - யாருக்காக என்னைக் கூட்டிக்கொண்டு வந்தாய்? இப்பொழுது அகற்றிடில், அகிலம் பழித்திடும் அருணாசலா' - என்னையும் பழிக்கும், உன்னையும் பழிக்கும்.

'இப்பழி தப்புனை ஏன் நினைப்பித்தாய் இனியார் விடுவார் அருணாசலா' - என்ன உரிமையோடு சண்டையிடுகிறார் பாருங்கள்.

'தான் வேறு, அவர் வேறு' என்று இல்லாத ஒன்றி இருக்கும் உணர்வில்தான், இந்த இனிமையான ஊடல் நிகழும்.

இந்த முதல் மூன்று, நான்கு, ஐந்து... இந்த மூன்று பாடல்களிலும் ஊடலைக் காட்டுகிறார். முதல் பாடலிலே கூடலைக் காட்டுகிறார்.

'அருணாசலம் என அகமே நினைப்பவர் அகத்தை வேரறுப்பாய் அருணாசலா

அழகு சுந்தரம்போல் அகமும் நீயும் உற்று அபின்னமாய் இருப்போம் அருணாசலா' - இதில் கூடலைக் காட்டுகிறார்.

அடுத்த மூன்று பாடலிலே இனிமையான ஊடலைக் காட்டுகிறார். என்ன மதுரம் ஐயா!

க்ரு'ஷ்ண பக்தர்கள் மதுர பாவத்திலே பாடுவது, இது பாரம்பரியம். ஸம்ப்ரதாயத்திலேயே இருக்கின்றது. ஏனென்றால், க்ரு'ஷ்ணரே பாகவதத்திலே கோபிகைகளோடு மதுர பாவத்திலே இழைந்து, இணைந்து, விளையாடி திளைத்தக் காரணத்தினால்...

இந்த சைவத்தில் மதுரம் ரொம்ப குறைவு. அதில் அத்வைத சைவத்தில் ரொம்ப ரொம்ப குறைவு. அதிலும் ரமண மஹரிஷி மாதிரி பரம ஜ்ஞாநி, ஶிவபெருமானோடு அதுவும்... அதாவது, inner dialogue, emotional baseline, energetic posture எல்லாமே அருணாச்சல மயமாக பகவானுக்கு மாறிவிட்டதனால், அவருடைய emotional baseline-னே இந்த மதுர பாவமாகத்தான் இருந்திருக்கின்றது.

பெருமானோடு உறவு, அவருடைய energetic posture அத்வைத பரமாக இருந்திருக்கின்றது. Inner dialogue-கும் அத்வைதமாகத்தான் இருந்திருக்கின்றது. Emotional baseline பெருமானோடு ஒன்றி இருக்கும், மஹா பாவமான மதுர பாவத்தில் இருந்திருக்கின்றார். 'போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே...' சும்மா.. 'இரண்டு நாள் இருக்குமோ, இருக்காதோ, இருந்தாலும் தலைவலி, போனாலும் தலைவலி' என்கின்ற மாதிரி boy friend-டுக்கே நீங்கள் இரண்டு நாள் duet ஆடுகிறீர்கள், நான்கு நாள் party வைக்கின்றீர்கள் எனும்பொழுது, எத்துனை ஜென்மத்திற்கும் ஆத்ம நாயகனாக, என் வாழ்முதல் பொருளாக அண்ணாமலையான் எனக்கு வாய்த்தால், நான் அப்பொழுது ஜென்மம் முழுக்க ஆனந்தமாகத்தான் ஐயா இருக்கவேண்டும். ஜென்மம் முழுக்க celebrate தான் பண்ணுவேன். 'தெள்ளேனம் கொட்டாமோ" என்று ஆடிக்கொண்டுதான் இருப்பேன். அது உங்களுக்கு அஹங்காரமாக தெரிந்தால் நான் என்ன செய்வது?

'நான்' முளைக்கும் முன்பாகவே அவன் 'தானாய்' எனக்குள் மலர்ந்துவிட்டதனால், நான் எனை அறிந்த காலம் முதல், எனை அறிவதற்கு முன்பாகவே அவரை அறிந்ததனால், அவர் தனை அறிவித்துக் கொண்டதனால், எனை அறிந்த காலம் முதல், ஊர் ஊராகப்போய் ஆடிக்கொண்டு இருக்கிறேன் ஐயா.

நான் பேச ஆரம்பித்ததே, அவரைப் பற்றி ஆன்மீக ஸத்ஸங்க மேடைகளில் தான் ஐயா. நான் எழுத ஆரம்பித்ததே, அவர் புகழைப் பாடுகின்ற ஶாஸ்த்ர ங்களையும் ஸ்தோத்ரங்களையும் ஸுத்ரங்களையும் தான் ஐயா. நடக்க ஆரம்பித்ததே அவருடைய ஆலயத்தைச் சுற்றித்தான் ஐயா. 'அவருடைய ஆலயத்தை தரிசிக்கவே நடக்கத் துவங்கினேன்' எனும்பொழுது, Natural -ஆக வாழ்நாள் எல்லாம் celebrate பண்ணிக்கொண்டேதான் இருப்பேன்.

போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே! 'பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே' என்று நம் முன்னோர்கள் சொல்கின்றார்கள். நான் சொல்கிறேன், 'அருணாச்சல ஸ்மரணம் இல்லாத நொடியெல்லாம் பிறவா நொடியே'. சொலல் இலாத ஸ்மரணத்து இருந்து, அருணாச்சல ஸ்புரணத்து இருந்து, அவரை அனுபூதியாய் அனுபவியுங்கள்.

உங்களுடைய inner dialogue, emotional baseline, energetic posture எல்லாம் பரம்பொருளாய், ஸாக்ஷிக்கு ஸாக்ஷியாய் நிற்கும் ஸாக்ஷிநாதப் பரம்பொருளாய், ப்ரபஞ்சம் அனைத்திற்கும் பரம ஸாக்ஷியாயிருக்கும் ஒரே தனிப்பரம்பொருள் அருணாச்சல கருணாமூர்த்தி, பரமஶிவப் பரம்பொருள். அவர் உங்களுக்குள் பெரும் ஸாக்ஷியாய் நின்றிருக்க, பரமாத்வைதத்தை வாழுங்கள்.

இன்னொரு உண்மையைச் சொல்கின்றேன். இப்பொழுது ஒரு இரண்டு வருடமாகத்தான் என்னை விமர்சிக்கின்ற, troll செய்கின்ற வீடியோக்களை எல்லாம் பார்க்க time இல்லாமல் போய்விட்டது. அதற்கு முன்பெல்லாம், என்னை விமர்சிக்கின்ற, troll பண்ணுகின்ற வீடியோக்கள் எதாவது எடுத்துவந்து காட்டினார்கள் என்றால், அந்த விமர்சனம் செய்கின்றவர்கள், first line 'திருவண்ணாமலையில் பிறந்தார்' என்று சொல்லிவிட்டார்கள் என்றால் முடிந்துவிட்டது! அதற்குப் பிறகு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றே எனக்குக் கேட்காது ஐயா. நான் பாட்டுக்கு ' லா லா லா mood-ல்' இருப்பேன். 'திருவண்ணாமலையில் பிறந்தார்' என்ற ஒரே line போதும். நான் என் world-க்குப் போய்விடுவேன். அதற்குப் பிறகு அவர்கள் என்ன திட்டிக்கொண்டிருக்கின்றார்கள், என்ன பேசிக்கொண்டிருக்கின்றார்கள், எதுவும் கேட்கவும் கேட்காது, சுரணையும் உரைக்காது, சூடும் கிடையாது.

அக்னிக்கு எங்க சூடு வைக்க முடியும்? 'தான்' என்கின்ற தனிச்சுரணை இல்லாதவனுக்கு எச்சுரணை வர முடியும்? நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள், எனக்கு என்ன? அதுமட்டும் இல்லை ஐயா, என்னைப் பற்றி என்ன narrative வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் நீங்கள் திரித்துக்கொள்ளலாம், மாற்றிக்கொள்ளலாம், 'இது பொய்' என்று சொல்லலாம், 'அது பொய்' என்று சொல்லலாம், 'இது உண்மை' என்று சொல்லலாம், 'அது பொய்' என்று மாற்றி மாற்றி debate பண்ணலாம்.

'திருவண்ணாமலையில் பிறந்தேன்' என்கின்ற ஒரு மிகப்பெரும் ஆன்மிகப் புகழ். அது ஒரு ஆன்மீகப் புகழ் ஐயா, அதை யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது, மாற்றமுடியாது.

அது மட்டும் இல்லை ஐயா, கொஞ்சம் உங்கள் வாழ்க்கையில் எல்லாம் நொந்து நூலாய் நாசமாக போகும்பொழுது, 'மனதிற்கு இதமாக யாராவது இருப்பாங்களா?' என்று எப்படி அலைந்து தேடுகின்றீர்கள்…

ஒரு தெய்வத்தின் மீதோ, ஒரு குருவின் மீதோ, ஶ்ரத்தை வருவதே பல ஜென்ம தவம், புண்ணியத்தால்தான் வரும் ஐயா. ஒரு தெய்வத்தின் மீதோ, ஒரு குருவின் மீதோ ஶ்ரத்தை வந்துவிட்டதென்றால், வாழ்க்கையில் எத்தனை ஆயிரம் கோடி துக்கங்களை, அனாவசியமாக கடந்து போய்விடுவீர்கள் ஐயா.

கப்பல் கிடைத்தவன் எப்படி, எத்துனை கோடி மைல் கடலையும் கடந்துவிட முடியுமோ, அது மாதிரி ஒரு குரு, ஒரு கடவுள் மீது ஶ்ரத்தை வந்துவிட்டதென்றால், எத்துனை அலை வந்தாலும், வென்று ஜெயித்து, குறிக்கோள் சேர்ந்து விடலாம் ஐயா. அதைக் கொஞ்சமாவது வாழ்க்கையில் அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும் எனும்பொழுது, 'நான்' என்பது எனக்கு தெரிவதற்கு முன்பாகவே, 'தான் தானாகவே' அவர் தன்னை எனக்கு விளக்கிக் கொண்டு, வெளிப்படுத்திக் கொண்டு, அனுபவ அனுபூதியாய் அளித்து, அலைய விடாது அணைத்துக் கொண்ட என் அம்பலவாணன் அண்ணாமலையான்!

உலகாயுதக் கிளி கொத்திவிடாமல், நாத்திகக் குரங்கு திருடிவிடாமல், வேற்று மதத் திருடர்கள் கவ்விக்கொண்டு சென்றுவிடாமல், தனக்கென்று வைத்து, தானே ருசித்து, தன்மயமாக்கிக் கொண்ட என் ஆத்மநாதனை, ஆன்மார்த்த மூர்த்தியை, ஆத்மநாயகனைப் பெற்றமைக்கு தெள்ளேனம் கொட்டி ஆடுவோம்.

வாழ்க்கையில், இந்த அனுபவத்தை அனுபவித்தவனுக்கு மட்டும்தான் ஐயா புரியும்.

ஒரு தெய்வத்தின் மீது பக்தி வந்துவிடுவதும், ஶ்ரத்தை வந்துவிடுவதும், ஶரணாகதி வந்துவிடுவதும் சாதாரணமான வேலை இல்லை ஐயா. அதை சின்ன வயதிலேயே எனக்கு கொடுத்துவிட்டாரே! 'நினைக்கும் பொழுதெல்லாம் நெஞ்சு பொங்கும் நன்றியோடு...'

என்னுடைய inner dialogue சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். 'அருணாச்சலம், திருவண்ணாமலைதான்' என்னுடைய inner dialogue. அண்ணாமலையார்தான் என் inner dialogue.

இன்னொரு ஆழமான ரகசியத்தைச் சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். இப்பொழுது நீங்களெல்லாம் கிழக்கு, தெற்கு, வடக்கு என்றெல்லாம் மனதில் ஏதாவது ஒரு, அதாவது எப்படி அந்த கிழக்கு, தெற்கு, வடக்கு என்று கண்டுபிடிப்பது, measure பண்ணுவதற்கெல்லாம், உங்களுக்குள் mind-ல் ஒரு scale வைத்திருப்பீர்கள், ஒரு முறையை வைத்திருப்பீர்கள். 'இது கிழக்குன்னா, இது தெற்கு, இது வடக்கு' என்று.

எனக்கு இன்னமும் ஒரு திசை கண்டுபிடிக்க வேண்டும் என்றால், 'ஓ! இது கிழக்கா?' அப்படியென்றால் அண்ணாமலையார் கோயிலைத்தான் map பண்ணுவேன். 'அப்பொழுது இது ராஜகோபுரம். ஓகே, இது கிழக்கு. இது அம்மணி அம்மன் கோபுரம், இது வடக்கு. இது திருமஞ்சன கோபுரம், இது தெற்கு. இது பே கோபுரம், இது மேற்கு' என்று இன்னமும் அண்ணாமலையானை வைத்துத்தான் திசைகூட என் உணர்வு கணக்கிடும். 'ஆ, இதுவா? இது அக்னி லிங்கம். இதுதான் ஆக்னேயம்' என்று.

நான் வாழ்க்கையை அளவிடும் அளவி, அலகு, unit-ஏ, scale-லும் unit-மே அண்ணாமலையார்தான் ஐயா.

அதுதான் நான் வாழ்க்கையை அளக்கின்ற அளவி - scale, அளக்கிற அலகு - unit. சரி-தவறு, சுகம்-துக்கம், நன்மை-தீமை இவை அத்துனையையும் நான் அளக்கின்ற அளவியே, அளவுகோலே, அலகே அண்ணாமலையானும், அவர் தந்த அனுபூதியும் தான்.

இது மாதிரி ஒரு ஆத்ம நாயகன் வாய்ந்துவிட்டால், ஏன் தலைகால் புரியாம ஆடமாட்டேன்? உண்மையிலேயே தலையும் காலும் எனக்கு புரியவில்லை ஐயா, அதனால்தான் ஆடுகின்றேன்.

காலைக் கட்டும் சங்கிலிகளும் இல்லை, தலை மீது தனித்துவமான அஹங்கார பாரமும் இல்லை. அதனால் ஆனந்தமாக ஆடுகின்றேன். தெள்ளேனம் கொட்டி ஆடுகின்றேன். பெருமான் திருப்புகழ் பாடி ஆடுகின்றேன்.

அண்ணாமலையார் மீது பக்தி வந்துவிட்டதென்றால், அதிலும் ரமண மஹரிஷி காட்டுகின்ற இந்த மாதிரி ஒரு secret life காதல், secret life relationship வந்துவிட்டதென்றால், 'அட போயா, அதுக்கு மேல எவன் எதைப்பத்தி என்ன பேசினா யாருக்கு என்ன வேணும்?'

மத்குரு ஜகத்குரு, மன்னாத ஜகன்னாத, மமாத்மா பரமாத்மா. - என்னுடைய தலைவன் உலகத்திற்கேத் தலைவன். எனக்கு குருவாய் வந்தவன், ஜகத்திற்கு குரு என்பதனால், என் ஆத்மா, ப்ரபஞ்சத்தின் பரமாத்மா என்கின்ற அனுபூதியைத் தந்துவிட்டான்.

மன்னாத ஸ்ரீ ஜகன்னாதோ மத்குரு ஸ்ரீ ஜகத்குரு மமாத்மா ஸர்வபூதாத்மா. எனக்கு வாய்த்த தலைவன், என் ஆன்மநாதன் அண்ணாமலையான் உலகத்திற்கே நாதன் என்பதனால், 'மன்னாத ஸ்ரீ ஜகன்னாதோ மத்குரு ஸ்ரீ ஜகத்குரு' - எனக்கு குருவாய் வந்த அருணகிரியோகீஶ்வரர் உலகத்திற்கே குருவான ஜகத்குரு அருணாச்சலப் பரம்பொருள் என்பதனால், 'மமாத்மா ஸர்வபூதாத்மா' - என்னுடைய ஆத்மாவே ஸர்வபூதத்திற்கும் ஆத்மா என்று, 'ஸர்வபூதாத்மன்' என்கின்ற ஸத்யத்தை அனுபூதியாய் தந்தான்.

அப்பொழுது ஏன் ஆட மாட்டேன்? ஆடுவேன் தான்… ஆட்டுவிப்பவன் அவன் என்பதனால், ஆடிக்கொண்டே இருப்பதற்கான ஆனந்தத்தை பொங்க வைத்துக்கொண்டிருப்பவன் அவன் என்பதனால், ஆடுவோம்... பள்ளு பாடுவோம்… அண்ணாமலையானைப் பாடுவோம்.

ஒரு ஆன்ம மூர்த்தி மீது பக்தி வருவதற்கும், ஒரு ஆன்மார்த்த மூர்த்தி மீது பக்தி வருவதற்கும்… ஆன்மார்த்த மூர்த்தி மீது ஶ்ரத்தை வருவது எவ்வளவு கஷ்டம் தெரியுமாங்கய்யா?

ஒரு பையன் கிடைத்தால், ஒரு பொண்ணு கிடைத்தாலே 'ஐயோ, எவ்வளவு கஷ்டம், ஜெயிச்சிட்டோமே' என்று வாழ்க்கையிலேயே ஜெயித்த மாதிரி குதிக்கின்றீர்களே.. கடவுள் கிடைப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா ஐயா? கடவுள் கிடைப்பது என்றால் என்ன அர்த்தம்? நமக்கு அந்த அளவிற்கு ஒரு ஶ்ரத்தையும் பக்தியும் வந்துவிடுவது.

ஏதோ ஒன்று click ஆகி, அது right-ஓ, wrong-ஓ, fluke-ஓ - ஏதோ ஒன்றில் நம் உணர்வு அவரிடம் சிக்கிவிடும். அவர் மயமாகிவிடும். அது வருவதென்றால் சும்மாவா?

அதுவும் சின்ன வயதிலேயேக் கொடுத்துவிட்டார் ஐயா.

கிராமங்களில் எல்லாம் பூசணிக்காய் விவசாயம் செய்பவர்கள். அந்த பூசணிக்காய், தர்பூசணி, பூசணிக்காய் விவசாயம் செய்பவர்கள், இந்த பூசணிக்காயை எலி கடித்துவிடக்கூடாது என்பதற்காக அல்லது மற்ற பறவைகள் கொத்திவிடக் கூடாது என்பதற்காக, வைக்கோல் சுற்றி வைப்பார்கள். அது மாதிரி நான் பிறந்தவுடனே, வளரும்பொழுதே, வளரும்பொழுது வேறு எந்த மாயையும் கொத்திவிடக் கூடாது, கொண்டுபோய்விடக் கூடாது என்பதற்காக, காவி சுற்றி எனைக் காத்து, தனக்காக்கிக் கொண்டானே… தன்மயப் பரம்பொருள் அண்ணாமலையான்!

நாத்திகக் கள்வர் நாவினில் படாது நன்றாய் எனைக் காத்த நல்லோய் அருணாசலா. திரமற்ற சூத்திரக் கொடியோர் சூழ்ந்தெனை கொண்டு போகாது தானே காத்து தனதாக்கிக் கொண்ட தயாபரனே அருணாசலா.

உலகாயதம் என் உளத்தில் நுழையாது, உள்ளுள் இருந்து உணர்வாய் காத்து, 'நான்' விளங்கும் முன் 'தானாய்' விளங்கிய தன்மைப் பரம்பொருளே அருணாசலா.

Gen Z அத்தனை பேருக்கும் சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள்: கொஞ்சம் ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தால்கூட, கொஞ்சம் இந்த ஆன்மிக நூல்களைப் படித்து, ஏதாவது ஒரு தெய்வத்தின் மீது ஶ்ரத்தையோடு கூடிய பக்தி வந்துவிட்டதென்றால்… அதை எப்படியாவது கொஞ்சம் வரவழைத்துக்கொள்ளுங்கள். அது ஒன்னும் கஷ்டம் இல்லை.

முருகனோ, ஶிவனோ, அண்ணாமலையாரோ, விஷ்ணுவோ… நீங்கள் எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் பிடித்துக்கொள்ளுங்கள். இப்பொழுது என்னைக் கேட்டீர்களானால், நான் என்ன சொல்வேன்? Natural-ஆ 'அண்ணாமலையார்' என்றுதான் சொல்வேன். 'இல்லை அப்படி முடியல, இல்ல சாமி நான் வைஷ்ணவ குடும்பம், இல்லை நான் ஶாக்த குடும்பம்' என்று சொன்னீர்களானால் சரி... எதுவேண்டுமானாலும், எந்த தெய்வமானாலும் பரவாயில்லை… அந்த பக்தி, ஶ்ரத்தைதான் முக்கியம் ஐயா. பக்திதான் முக்கியம். யாரைப் பிடிக்கின்றீர்கள் என்பதுகூட இரண்டாவது பட்சம்தான்.

யாரைப் பிடித்தாலும் பரத்தைக் காட்டிவிடுவார்கள், அதுதான் உண்மை. யாரோ ஒருவரை ஶ்ரத்தையோட பிடியுங்கள் ஐயா. அது விநாயகரைப் பிடித்தாலும் பரவாயில்லை, முருகனைப் பிடித்தாலும் பரவாயில்லை, பரமஶிவப் பரம்பொருளை பிடித்தாலும் பரவாயில்லை, அம்பாளைப் பிடித்தாலும் பரவாயில்லை, விஷ்ணுவைப் பிடித்தாலும் பரவாயில்லை. ஏதோ ஒரு தெய்வத்தை பிடியுங்கள். ஏனென்றால், யாரைப் பிடித்தீர்களானாலும் கடைசியில் பரம்பொருளோடுதான், பரமஶிவப் பரம்பொருளோடுதான் சேர்ப்பார்கள்.

யாரை ஶ்ரத்தையோடு பிடித்தீர்களானாலும்; பரமஶிவப் பரம்பொருளோடு சேர்த்துவிடுவார்கள் ஐயா, அதனால் ஒன்றும் கவலையேப்படாதீர்கள். அந்த கவலை, அந்த doubt எல்லாம் உங்களுக்குத் தேவையில்ல. ஶ்ரத்தையோடு பிடியுங்கள். பிடித்துக்கொண்டீர்களானால், அதற்குப்பிறகு இந்த லூசுத்தனமான cigarette அல்லது addiction, அதெல்லாம் சுத்தமாக... எந்த addiction-னும் தேவைப்படாது ஐயா.

இல்லையென்றால், இந்த போதைப் பழக்கத்திற்குப் போனீர்கள் என்றால், நாளாக நாளாக அந்த அந்த quantity-ஐ சேர்க்க வேண்டி இருக்கும் ஐயா. Quantity அதிகமாக்க வேண்டி இருக்கும். அதே அளவு quantity மது குடித்தீர்களானால், போதை வராது. மந்தமாக இருக்கும். அப்பொழுது போதையின், அதாவது அந்த போதைப் பொருளின் அளவைச் சேர்க்க வேண்டி இருக்கும். கடைசியில் மரணம்தான். நாசமாகப் போய்விடும். உடலும்-மனமும் நாசமாகப் போய்விடும்.

குடிப்பழக்கம் மற்றும் எல்லா விதமான அடிமையாக்குகின்ற பழக்கங்கள், உங்களை அடிமையாக்கி அழிக்கின்ற, அதாவது புகைப்பழக்கத்திலிருந்து துவங்கி, புகை, குடி, போதை வஸ்துக்கள், மற்ற, இப்பொழுது இந்த காலத்தில் உணவு.... உணவும் ஒரு போதையாகப் போய்விட்டது. இது எல்லாவற்றிற்குமான ஒரே antidote, ஒரு மிகப்பெரிய மருந்து – பரமஶிவப் பரம்பொருள் மீது ஏற்படும் பக்தி!

அழகான ஒரு பாட்டு... சித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது சிதம்பரத்தின் மன்றத்தில் ஆடும் மருந்து பாம்பும் புலியும் தேடி கிடைத்த மருந்து சித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது. ரொம்ப அருமையான பாடல் இது.

Gen-Z புரிந்துகொள்ளுங்கள்: கொஞ்சம் பக்தி வந்துவிட்டதென்றால், அதுவே ஒரு பெரிய ஜ்ஞாந போதம் ஐயா. இந்த ஜ்ஞாநபோதம் வந்துவிட்டதென்றால், வெளியில் உங்களை அழிக்கின்ற போதைப் பொருட்கள் தேவைப்படாது ஐயா.

Cheap thrills மீது interest வராது. இந்த immediate gratification, பர பர பரவென்று இருக்கின்ற அந்த restlessness இருக்காது. Game-ல் கூட violence centered-ஆகவே function ஆகின்ற அந்த violence, emotional baseline அமையாது. Games-ல் கூட, video games எல்லாம் ஐயா violence centered-ஆகவே வாழ்ந்தீர்களானால், உங்கள் emotional baseline-ஏ violence ஆகிவிடும் ஐயா.

என் வாழ்க்கையில் என் game என்ன தெரியுமா ஐயா? எனக்கு கருத்து தெரிந்ததில் இருந்து, வீட்டில் ரொம்ப துரு துருவென்று சுத்தி சுத்தி வீட்டை இரண்டாக்கிக்கொண்டிருப்பேன் என்பதனால், ரொம்ப energetic-க்கான குழந்தை. அதனால் என் தாயார் என்ன செய்வார்கள், அந்த காலத்தில் வீடுகளில் இந்த சின்ன ஒரு dining table இருக்கும். மரத்தால் செய்திருக்கும். வீட்டிற்கு நடுவில் இருக்கும். அதன் மீது தூக்கி உட்கார வைத்துவிடுவார்கள். குழந்தைக்கு அதுவே ரொம்ப உயரம். அதிலிருந்து இறங்க முடியாது.

மேல தூக்கி உட்கார வைத்து, 2- 3 விக்ரஹகங்களைக் கொடுத்துவிடுவார்கள். விநாயகர், ஶிவன் என்று வீட்டில் இருக்கின்ற விக்ரஹங்களைக் கொடுத்துவிடுவார்கள். அதை வைத்து, துணி சுற்றிக்கொண்டு, அவைகளோடு விளையாடிக்கொண்டு, பூஜை செய்துகொண்டு இருப்பேன். அதுதான் நம் entertainment.

Entertainment-ஆல் develop ஆகின்ற emotional baseline கூட, பெருமானோடு சேர்ந்ததாகவே இருந்ததனால், வெளியிலிருந்து வேறு ஒரு தேவையும் இல்லாமல் போய்விட்டது ஐயா. அதுதான் வாழ்க்கை.

தன்னை அழிக்கின்ற எந்த entertainment-டும் இல்லாமல் வாழவேண்டும் என்றால், இது மாதிரி பெருமானைச் சார்ந்த இனிமையான entertainment, life-ஐ கட்டமைத்துவிடுங்கள். இந்த emotional baseline உருவான அத்தனை பேரும் வாழ்க்கையிலே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

'திருவண்ணாமலையில பொறந்துட்டதுனாலயே over -ஆ ஆட்றாரு' என்று சொல்லி வீடியோ போட்ட அந்த அன்பருக்குச் சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் என்னை அன்பராகப் பார்க்கவில்லை, நான் உங்களை அன்பராகத்தான் பார்க்கின்றேன் என்று சொல்கின்றேன். பிறந்து, வளர்ந்து அண்ணாமலையாரை ரசித்து, ருசித்து, புசித்திருந்தீர்களானால்தான் உங்களுக்கெல்லாம் புரியும் ஐயா.

நான் மண்புழுதான் ஐயா, ஆனால் திருவண்ணாமலை மண்புழு ஐயா! கோயில் நாய்தான் ஐயா, ஆனால் திருவண்ணாமலை கோயில் நாய் ஐயா! நேற்று சொன்னேன் பாருங்கள் என்னை… அதாவது இந்த புராணத்தின் language-ல் சொல்ல வேண்டும் என்றால், புராணத்தில் சொல்கிறார்கள் இல்லையா, 'ஒரு எலி ஆலயத்தினுடைய, ஶிவாலயத்தினுடைய விளக்கிலே நெய் குடிப்பதற்காக சென்று, தன்னையே அறியாமல் அங்கிருந்த அந்த விளக்கைத் சற்று வாலால் தூண்டிவிட்டுவிட்டது. அணைய இருந்த தீபம் ப்ரகாஶமாக எரிய ஆரம்பித்துவிட்டது. அதனால் ஶிவாலயத்திலே தீபம் போட்ட புண்ணியம் அந்த எலிக்கு வந்து, அந்த எலிதான் மஹாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தது' என்று சொல்வார்கள்.

அதே மாதிரி 'ஒரு ஶிவராத்ரி அன்று வில்வ மரத்தின் மீது அமர்ந்துகொண்டு, ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த வில்வத்தைப் பறித்து, கீழே இருந்த ஶிவலிங்கத்தின் மீது தன்னை அறியாமல் போட்டுக்கொண்டிருந்த குரங்கு, முசுகுந்த சக்ரவர்த்தியாகப் பிறந்தது, அந்தப் புண்ணியத்தினாலே' என்று சொல்வார்கள்.

அந்த மாதிரி language-ல் சொல்லவேண்டுமானால், நான் நேற்று சொன்னேன் பாருங்கள், 'ஏதோ ஒரு காரணத்தினால் இந்த அண்ணாமலையார் வெளியில் வருகின்ற அழகைப் பார்த்து, அந்த அழகு பிடித்துப் போயோ அல்லது அங்கு இசைக்கப்படுகின்ற திருக்கயிலாய வாத்யத்தினுடைய vibration ஆனந்தத்தாலேயோ அல்லது அங்கு இருக்கின்ற இனிமையான அந்த குங்கிலிய நறுமணம், அந்த நறுமணம் பிடித்துப் போயோ அல்லது அங்கு கொடுக்கின்ற ப்ரஸாதத்தினுடைய ருசி பிடித்துப் போயோ, ஏதோ ஒரு காரணத்தினால் அல்லது இந்த கோயிலுடைய atmosphere பிடித்துப் போயோ, ஏதோ ஒரு காரணத்தினால், அந்த நாய் அங்கேயே சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தது.

ஏதோ ஒரு நாள் அண்ணாமலையார் தன்னுடைய ஒரு நிஜமான அன்பருக்கு, பக்தருக்கு அருள் செய்வதற்காக இறங்கி வந்தார். வந்து அந்த பக்தருக்கு அருள் செய்யும்போது, இந்த பக்கத்தில் இருந்த நாயையும் கடைக்கண்ணாலே பார்த்துவிடுகின்றார்.

பறந்த ஒரு அவருடைய திருவடித் தூளி ஒன்று, அந்த நாயின் மீதும் பட்டுவிடுகின்றது. அந்த பக்தருக்கு ஆசீர்வாதம் செய்துவிட்டு, அதோடு சேர்ந்து கடைக்கண் இந்த நாய் மீதும் பட்டதனால், அதற்கும் ஆசீர்வாதம் செய்துவிட்டு அவர் போகின்றார்.

இந்த நாய் அவருடைய திருவடித் தூளி மட்டுமல்லாது, அந்த பக்தருடைய திருவடித் தூளியையும் பெற்றுக் கொண்டது. பெருமானுடைய ஆசி கிடைத்தால், அருள் கிடைத்தால் பரம் கிடைக்கும். பெருமானுடைய அடியார்களுடைய கருணையும், அன்பும், ஆசியும் கிடைத்தால் இகமும் கிடைக்கும்.

இரண்டு திருவடித் தூளியும் பட்டதனால், அந்த நாய் என்ன செய்ததாம்;? 'பெருமானே ஆசீர்வாதம் செய்கிறார் என்றால், இவரும் பெரிய அடியார்தான்' என்று அவருடைய திருவடித் தூளியையும் ஏற்றுக்கொண்டதாம். அதனால் அடியாருடைய ஆசியும் கிடைத்தது. இரண்டும் கிடைத்தனால், இகத்திலும் கைலாஸம் கிடைத்து, பரத்திலும் கைலாஸம் கிடைத்து வாழ்ந்தார்' என்பதுதான் என்னைப் பற்றி நான் சொல்லிக்கொள்ளும் கதை.

இதுதான் என்னுடைய புராணத்தில் வருகின்ற இரண்டு line-ஆக இருக்கும் ஐயா.

மஹாபலி, முசுகுந்த சக்ரவர்த்தி இவர்களைப் பற்றியெல்லாம் சொல்கின்ற மாதிரி இரண்டு line இதுதான். ''கோவிலையே சுற்றிக்கொண்டிருந்ததாம் அந்த நாய். அதை அறியாமலே பெருமானுடைய திருவடித் தூளி தலை மீது பட்டுவிட்டதாம். பெருமான் ஆசீர்வாதம் பண்ண அடியார்கள் யாரோ ஒருவருடைய திருவடித் தூளியும் தலை மீது பட்டுவிட்டதாம். பெருமான் அவருடைய ப்ரஸாதத்தை அந்த சீடருக்கு, அவருடைய பக்தருக்கு அளிக்க, அந்த பக்தர் சாப்பிட்டுவிட்ட மிச்சத்தை… அதாவது பெருமானிடமிருந்து பெறுவது ப்ரஸாதம், அந்த ப்ரஸாதத்தை பக்தர்கள் உண்டுவிட்டு மிச்சத்தைக் கொடுப்பது உச்சிஷ்டம். ப்ரஸாதத்தையும், அது பக்தனால் உண்ணப்பட்டதனால் உச்சிஷ்டமாக ஆன அந்த இரண்டு நன்மையும் பெற்ற அதை, இந்த நாய் உண்டதனால், இகம்-பரம் இரண்டும் பெற்று இனிமையாய் வாழ்ந்தது. அவ்வளவுதான் ஐயா.

யாரோ ஒருவர், 'இந்த நாய் இங்கு இருந்தால் நாம திருட வரும்போது கத்தும், குலைக்கும்' என்று கல்லை எடுத்து அடிக்க, அது பயந்து கத்திட்டே ஓடிப்போய், எங்கேயோ ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு அண்ணாமலையாரைப் பார்த்துக்கொண்டு வாழ்ந்து, அவரோடயே கலந்துவிட்டதாம். அவ்வளவுதான் மொத்த கதையும்.

இதில் வேறு எந்த climax-ம் கிடையாது.

'அந்த நாய் உடனே போய், இன்னொரு நான்கு நாய்களை திரட்டிக்கிட்டு, ஏய் என்னய்யா அடிக்க வந்த என்று, திரும்ப அந்த அடிச்சவரை வந்து தாக்குவது', அந்த story-யெல்லாம் இங்கு இல்லை. அந்த மாதிரி climax எல்லாம் எதுவும் இங்கு இல்லை.

இங்கு climax இதுதான்… 'அந்த நாய் ஓடிப்போய்விட்டது. எங்கேயோ ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு, அண்ணாமலையாரையே நினைத்துக்கொண்டு, 'சொலல்' இல்லாத ஸ்மரணத்தில் இருந்து, பரமாத்வைதத்தில் இருந்து, பரமஶிவப் பரம்பொருளையே பாடி, ஆடி, நினைந்து, உருகி, உணர்ந்து, ஒன்றாய் கலந்து அருணாச்சல ஸ்மரணத்தில் இருந்து, 'சொலல்' இல்லாத ஸ்மரணத்தில் இருந்து, அருணாச்சல ஸ்புரணத்தில் மலர்ந்து அவரோடேயே கலந்து நிறைந்தது.' - இவ்வளவுதான் ஐயா என் வரலாறு. அதற்குமேல் வேறு ஒன்றும் கிடையாது ஐயா.

இதுதான் முழுமை ஐயா. அவரைப் போல் ஒரு தலைவனுக்கு அடிமைப்படுவதும், உணர்வாலே ஆட்கொள்ளப்படுவதும். அது நிகழ்ந்துவிட்டதென்றால், அது நிகழ்ந்துவிட்டதனால், ஏன் ஆடாமல் இருப்போம், கொண்டாடாமல் இருப்போம்?

ஐயா, உன் ஒன்றையனா boy friend-டிற்கும், ஒன்றையனா girl friend-டிற்கும், அது கிடைத்துவிட்டது என்று duet ஆடுகின்றீர்கள். என் வாழ்முதல் ஆகிய பொருள் எனக்குக் கிடைத்ததனால், ஆடித்தான் தீருவேன்! ஆடத்தான் செய்வேன்... ஆடத்தான் செய்வேன்.

போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே!

ஒன்று தெரிந்துகொள்ளுங்கள், இந்த பக்தி வந்துவிட்டதென்றால், காரணமே இல்லாமல் excited-ஆக இருப்பீர்கள் ஐயா, ஒன்றுமே வேண்டாம், 'அண்ணாமலையார் உற்சவம் நடக்கிறது' என்றால், உடனே நமக்கு உயிரே உற்சாகமாகிவிடும் ஐயா.

ஏன் உற்சாகமாகிறது? ஏன் அந்த excitement? அதெல்லாம், கணக்கெல்லாம் பார்த்து வருவது excitement கிடையாது ஐயா. Excitement எல்லாம் கணக்குப் பார்த்தெல்லாம் வராது. அது அப்படியே வரும், அவ்வளவுதான்.

Gen Z.... சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள்… இந்த பக்தி dimension-ஐ உங்களுக்குள் flower பண்ண வைத்துவிட்டீர்களானால், வாழ்க்கையினுடைய quality-யே வேறு level ஆகிவிடும்.

ஊர் சுற்று உளம் விடாது உனைக் கண்டடங்கிட, உன் அழகைக் காட்டு அருணாசலா. - 'மனம் ஊரெல்லாம் சுற்றாது இருக்க, உன் அழகைக் காட்டு அருணாசலா' என்று சொல்கின்றார். இங்கு ரமண மஹரிஷி என்னவெல்லாம் சொல்கிறாரோ, அதை சின்ன வயதிலேயே பெருமான் எனக்குக் கொடுத்துவிட்டார் ஐயா.

நான் ஊரைச் சுற்றினாலுமே அவர் அழகுதான் கண்ணில் தெரிகிறது ஐயா. அண்ணாமலையான் அழகுதான் கண்ணில் தெரிகிறது.

இங்கு 'ஊர் சுற்று உளம் விடாது உனைக் கண்டடங்கிட உன் அழகைக் காட்டு அருணாசலா' என்று சொல்கிறார்.

நான் சொல்கிறேன், 'ஊர் சுற்றியும் உளம் விடாது, எங்கு சுற்றினாலும் நீதான் தெரிகின்றாய்... ஊர் சுற்றியும் உளம் விடாது உனைக் கண்டு அடங்கிட, உன் அழகைக் காட்டிய அருணாசலா!'

பகவான் சொல்கின்றார், உண்மையில் பகவான் ப்ரார்தனை செய்வதும் நமக்காகச் செய்கின்றார். அவர் எல்லாம் அனுபூதியாக அடைந்துவிட்டார். அவர் அவருக்காக கேட்கவில்லை, நாம் எப்படிக் கேட்க வேண்டும் என்று சொல்லித்தருகின்றார்.

'உனை ஏமாற்றி ஓடாது உளத்தின் மேல் உறுதியாய் இருப்பாய் அருணாசலா' என்று சொல்கின்றார். - உனை ஏமாற்றி ஓடாது உளத்தின் மேல் உறுதியாய் இருப்பவனே, இருக்கின்றாயே அருணாசலா! உண்மையில் அவர் ஏக்கத்தின் மூலமாக சொல்வது, நாம் எப்படி ப்ரார்தனை செய்யவேண்டும் என்று காட்டுகின்றார்.

ஆனால், அவர் பார்வையிலிருந்துப் பார்த்தீர்களானால், இது ஆனந்தக் களிப்புதான். அவருடைய அனுபூதியிலிருந்து பாடியதனால், பார்த்தால், இது ஆனந்தக் களிப்பு.

'உனை ஏமாற்றி ஓடாது உளத்தின் மேல் உறுதியாய் இருக்கிறாயே அருணாசலா!' அதுதான் அவருடைய பார்வையிலிருந்து, அவருடைய அனுபூதியை சொல்ல வேண்டுமானால், அதுதான் உண்மை. ஆனால் நாம் எப்படி ப்ரார்த்திக்க வேண்டும் என்று இது மூலமாக நமக்குச் சொல்லித்தருகின்றார்.

ஐயா, தினந்தோறும் உறக்கத்திலே, 'நான் நான்' என்று நீங்கள் பிடித்து வைத்துக்கொண்டிருக்கின்ற அந்த நான், எதை defend பண்ணுவதற்காக life-ல் என்னென்னவோ செய்கின்றீர்களோ, அதையெல்லாம் மொத்தமாக கரைத்துவிட்டுக்கொண்டிருக்கின்றீர்கள் பாருங்கள். அப்படியென்றால், அது இல்லாமலேயே உங்கள் வாழ்க்கை இயங்கும் என்பதுதான் ஸத்யம், நிதர்சனம் ஐயா.

'நான் நான்' என்று நடு விட்டில் புகுந்த நாய் மாதிரி உங்களுக்குள் ஒன்று வந்து, இருப்பது அத்துனையிலும் வாயை வைத்துக்கொண்டிருக்கிறது பாருங்கள், அது இல்லாமலேயே உங்கள் வாழ்க்கையை இனிமையாக நடத்த முடியும் ஐயா.

இந்த 'நான் நான்' என்று பிடித்துக்கொண்டு திரிவதே பித்தம்! 'பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது பேரின்பம் ஒன்றினுள்ளே'. 'நான் நான்' எனும் பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது பேரின்பம் ஒன்றினுள்ளே'. 'பாம்பும் புலியும் மெய் பாடுபட்டுத் தேடிப் பார்த்துப் பயிரிட்டது, பாரளந்த திருமாயனும் வேதனும் பார்த்துக் களித்ததுண்டு, பார்வதி என்றொரு சீமாட்டி யதில் பாதியைத் தின்றதுண்டு, இன்னும் பாதி இருக்கு, பரையா நீயும் போய்ப் பார் என்று உத்தாரம் தாரும் தீரும்.

ரமண மஹரிஷி இன்னொரு அழகான வார்த்தைச் சொல்கின்றார்.

ஏன் இந்த உறக்கம் எனைப் பிறர் இழுக்க இது உனக்கு அழகோ அருணாசலா?

எனை அழித்திப்போ தெனைக் களவாவிடில் இதுவோ ஆண்மை அருணாசலா?

மதுரத்தின் உச்சத்தில்தான் மணவாளனின் ஆண்மையைக் கேள்வி கேட்க முடியும். ஏனென்றால், ஆண்மையை கேள்வி கேட்பது ego-வை touch பண்ணிவிடுகிறது. ரொம்ப ஆழமான, வலிக்கின்ற ஒரு point-ஐ touch பண்ணிவிடுகிறது. ரொம்ப இனிமையான, மனதிற்கு நெருக்கமான, 'தன்னவர்' என்றால் மட்டும்தான் அந்த ஆண்மையைக் கேள்வி கேட்கின்ற அந்த point-ஐ touch பண்ண முடியும். அந்த அளவிற்குப் பெருமானோடு தன்னை உணர்வதனால், 'இதுவோ ஆண்மை' என்று பெருமான் ஆண்மையைக் கேள்வி கேட்கின்றார்.

'எனை அழித்து இப்போ தெனைக் களவாவிடில், இதுவோ ஆண்மை அருணாசலா!'

ஏன் இந்த உறக்கம் எனைப் பிறர் இழுக்க இது உனக்கு அழகோ அருணாசலா?

ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது அகத்தினில் நீ இல்லையோ அருணாசலா என்று கேட்கின்றார்.

என்னுடைய அனுபூதியிலிருந்து சொல்லவேண்டுமானால், இது வந்து நாம் எப்படி ப்ரார்தனை செய்ய வேண்டும் என்று, பெருமான் பகவான் ரமண மஹரிஷி கற்றுக்கொடுக்கின்றார். ஆனால் அவருடைய அனுபூதி, இதை அடைந்த நிலைதான்.

அவருடைய அனுபூதியிலிருந்து சொல்லவேண்டுமானால், 'எனை அழித்து இப்போது எனைக் கலந்தாயே, என்னே ஆண்மை அருணாசலா!' எக்காலத்தும் உறக்கமிலாது, எனைப் பிறர் இழுக்காது, எனைக் காத்த அழகே அருணாசலா! ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகாத வண்ணம் அகத்தினில் இருந்து காக்கும் அருணாசலா! ஒருவனாம் உன்னை ஒளித்தெவரும் வாராது, சூதிலாது எனைக் காக்கும் அருணாசலா."

பார்ப்பவனைப் பார்த்து இருக்க, ஸாக்ஷியை ஸாக்ஷியாய்ப் பார்த்திருக்க, தானாவே உங்களுடைய emotional baseline, gratitude-ல் வந்து settle ஆகிவிடும் ஐயா. அதிலிருந்து பொங்குவதுதான் பக்தி!

பக்திக்கு definition புரிந்துகொள்ளுங்கள்... உங்களுடைய inner dialogue-ம், energetic posture-ம், பார்ப்பவனைப் பார்த்து இருக்க இருக்க, ஸாக்ஷியாக, ஸாக்ஷியை ஸாக்ஷியாகப் பார்க்கப் பார்க்க, உணர்வு நிறைந்து உங்களுடைய emotional baseline, gratitude-ல் வந்து settle ஆகிவிடும் ஐயா.

Emotional baseline gratitude-ல் settle ஆவதுதான் பரமஶிவ பக்தி. அது வந்துவிட்டதென்றால், நாம் என்ன செய்கின்றோம், பேசுகின்றொம் என்றெல்லாம் ஒன்றும் நமக்குப் புரியாது. எதிரில் இருப்பவர்களுக்கும் புரியாது. நமக்கும் புரியாது. எதிரில் இருப்பவர்களுக்கும் புரியாது. இன்று, முழுவதுமாக இந்த ஸத்ஸங்கத்தை இன்னொரு தடவைக் கேட்டுப் பாருங்கள் நான் என்ன பேசியிருக்கின்றேன் என்று எனக்கும் புரியாது, உங்களுக்கும் புரியாது. ஒன்றே ஒன்று தெரியும். ''சாமி பரமஶிவ பக்தியைப் பற்றி ஏதோ பேசிக்கொண்டிருக்கிறது, அந்த பக்தியில சாமி இருக்கு. அது மட்டும்தான் தெரியுது. அந்த பக்தியை நமக்கும் சொல்ல முயற்சி பண்ணுது சாமி''. அவ்வளவுதான். அவ்வளவுதான் உங்களுக்குத் தெரியுமே தவிர, அதற்கு மேல் ஒன்றும் புரியாது.

இப்பொழுது நான் பேசியதில் எந்த consistent -ஓ, ஒரு consistency-யோ அல்லது ஒரு cohesive -ஆகவோ எல்லாம் இருக்காது. ஏனென்றால், emotional baseline-ல் அந்த gratitude பொங்கும்பொழுது, பக்தி பொங்கும்பொழுது, large quantity water வந்து ஒரு சின்ன pipe வழியாக வெளியில் வர முயற்சி பண்ணும்பொழுது, நடப்பதுதான் நடக்கும்.

Dam-ல் ஒரே ஒரு கண்மாய் மட்டும் திறந்துவிட்டார்கள் என்றால், ஒரே ஒரு பாகத்தை மட்டும் திறந்துவிட்டார்கள் என்றால், எப்படி நிறைந்து இருக்கின்ற dam பொங்கி தண்ணீர் வெளியில் வருகின்றதோ, அது மாதிரி, emotional baseline gratitude-ல் settle ஆகிவிட்டதென்றால், நன்றி உணர்விலே, பெருமான் மீது, இந்த ப்ரபஞ்சத்தின் மீது, இந்த வாழ்க்கையின் மீது நன்றி உணர்வில் set ஆகிவிட்டதென்றால், பொங்குகின்ற பக்தி, பெருமானையே வாழ்த்தும்.

மாணிக்கவாசகர் பாடுகின்றார் பாருங்கள்… 'நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.'

ரமண மஹரிஷி பாடுகின்றார்... என்போலும் தீனரை இன்புறக் காத்து நீ எந்நாளும் வாழ்ந்தருள் அருணாசலா. ஆழ்வார்கள் பாடுறாங்களே, 'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் எந்தோள் மணிவண்ணா...' என்று பெருமானையே வாழ்த்தத் துவங்கி விடுவோம்.

கிராமங்களில் எல்லாம் ஒரு பழமொழி சொல்வார்கள், 'கள்ளும் சாராயமும் கலந்து குடிச்சவனுக்கு கலெக்டரும் கால் தூசுக்கு சமம்' என்று. அதுபோல், 'ஜ்ஞாநமும்-பக்தியும் கலந்து குடிச்சவனுக்கு, இந்த கடல், உலகமே கால் தூசுக்கு சமம்' என்று ஆகிவிடும்.

காந்தம் இரும்பு போல் கவர்ந்தெனை விடாமல் கலந்த தென்னோடிருப்பாய் அருணாசலா என்று சொல்கின்றார்.

நான் சொல்ல வேண்டுமானால்.. காந்தம் இரும்புபோல் கவர்ந்து எனை விடாமல் கலந்து என்னோடு இருக்கின்றாயே அருணாசலா.

ஓங்காரப் பொருள் ஒப்புயர்வில் இல்லோய், உனையார் அறிவார் அருணாசலா என்று பகவான் சொல்கின்றார்.

என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்ல வேண்டுமானால்.. ஓங்காரப் பொருள் ஒப்புயர்வில்லோய், உனை எனக்கு அறிவித்தாயே அருணாசலா.

ஔவைபோல் எனக்குன் அருளைத் தந்தெனை ஆளுவது உன் கடன் அருணாசலா என்று பகவான் சொல்கின்றார்.

நான் சொல்ல வேண்டுமானால்.. ஔவை போலும் எனக்கு உன் அருளைத் தந்து எனை ஆண்டாயே அருணாசலா.

கண்ணுக்குக் கண்ணாய் கண்ணின்றி காணுனை காணுவது எவர்பார் அருணாசலா என்று பகவான் சொல்கின்றார்.

நான் சொல்ல வேண்டுமானால்.. கண்ணுக்குக் கண்ணாய் கண்ணின்றி காணுனை காண்பவனைக் காட்டினாயே அருணாசலா.

கண்ணுக்குக் கண்ணாய், கண்ணின்றி காணுனை... 'கண்ணுக்குக் கண்ணாய்' கண் பார்ப்பது இல்லை, கண் மூலமாக நாம் பார்க்கிறோம். கண் மூலமாக, கண்ணுக்குக் கண்ணாக இருந்து பார்ப்பது யாரோ, அவரைக் கண் இல்லாமல்தான் காண முடியும்.

அவரை, கண்ணுக்குக் கண்ணாய் இருந்து பார்ப்பவரை, பார்க்க வைத்து... கண்ணுக்குக் கண்ணாய் கண்ணின்றி காணுனை காட்டி வைத்தாயே அருணாசலா.

காந்தம் இரும்புபோல் கவர்ந்து எனை விடாமல் கலந்தென்னோடு இருக்கின்றாயே அருணாசலா.

கிரியுருவாகிய கிருபைக் கடலே, கிருபை கூர்ந்து அருளினாயே அருணாசலா.

கீழ் மேல் எங்கும் கிளரொளி மணியென், கீழ்மையை பாழ் செய்து அருளினாயே அருணாசலா.

குற்றமுற்று அறுத்து என்னை குணமாய் பணித்து ஆள் குருவுருவாய் ஒளிர்கின்றாயே அருணாசலா.

கேளாது அளிக்கும் உன் கேடில் புகழைக் கேடு செய்யாது அருளினாயே அருணாசலா.

கையினில் கனியுன் மெய்ரசம் கொண்டு உவகை வெறி கொண்டு உளவே அருளினாயே அருணாசலா.

பரமஶிவ ஜ்ஞாநமும், பரமஶிவ விஜ்ஞாநமும் நமக்குள் மலரச் செய்வதே, 'பரமஶிவ பக்தி'.

பொதுவாக இந்த கார்த்திகை தீபம் மாதிரி ஆன்மீக பெரும் ஶக்தி பொங்கும் நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிறகு, நான் அமைதியாக ஸமாதியில் அமர்ந்துவிடுவேன்.

ஏனென்றால், அந்த நேரத்தில் நான் என்ன பேசுகின்றேனோ, அது சாதாரண மனிதனுடைய logic-க்குக்குப் புரியவே புரியாது. பிடிபடவும் பிடிபடாது. அதனால் நான் பொதுவாக ஸமாதியில் அமர்ந்துவிடுவேன். இன்று ஏற்கனவே, தொடர் ஸத்ஸங்க நிகழ்வாக இது நடந்து கொண்டிருப்பதனால், வந்து அமர்ந்தேன். முடிந்தவைகளைச் சொன்னேன்.

'குற்றம் குறையிருப்பின் பொறுத்தருள்க' என்று கேட்டுக்கொள்கிறேன். ஆனால் குற்றம் குறை நான் சொன்ன வார்த்தையில் எதிலும் இல்லை. உங்களுக்கு புரியவில்லை என்றால், அது குற்றம் குறை. அதை நீங்களே உங்களை மன்னித்துக்கொண்டு பொருத்து அருளிக்கொள்ளுங்கள்.

இது புரிகின்ற விதத்திலே மீண்டும் மீண்டும் இந்த ஸத்ஸங்கத்தைக் கேட்டு, இந்த உணர்வை உள்வாங்க முயற்சி செய்யுங்கள்.

'குற்றம் குறையிருப்பின் பொறுத்தருள்க' என்று அவையடக்கத்தோடு நான் சொன்ன வார்த்தை, என்னைப் பொறுத்தருள்வதற்காக அல்ல. உங்களுக்குப் புரியாது, புரியாமல் போனால் அது உங்களிடம் இருக்கின்ற குறை. அதை நீங்கள் பொறுத்து அருளிக்கொள்ளுங்கள். உங்களுக்கே அருள் செய்து கொள்ளுங்கள் என்ற ஜ்ஞாந அறிவுரை ஸத்யமாகச் சொன்ன வார்த்தை.

நீங்கள் எல்லோரும் நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, இந்த கார்த்திகை தீப நன்னாளில் பரமஶிவப் பரம்பொருளோடு ஒன்றி, பரமாத்வைத அனுபூதியில் நிலைத்து, பரமஶிவ ஜ்ஞாநமும், பரமஶிவ விஜ்ஞாநமும், பரமஶிவ பக்தியும் முழுமையாய் மலர்ந்து, ஆனந்தமாய் இருந்திட ஆசீர்வதிக்கின்றேன்.

இன்று நிறைய கைலாஸாவினுடைய நன்கொடைகள், உலகத்திற்குப் பரமஶிவப் பரம்பொருள் நேரடியாக அளிக்கின்ற நன்கொடைகள் இருக்கின்றன. அதையெல்லம் பாருங்கள். அதற்குப் பிறகு ஸந்ந்யாஸ தீக்ஷை. உலகம் முழுவதும் அன்பர்கள் ஸந்ந்யாஸம் எடுக்கின்ற அன்பர்களுக்கு தீக்ஷையும், அதற்குப் பிறகு கேள்வி பதிலும் தொடர்ந்து நிகழும்.

முதிலில், பரமஶிவப் பரம்பொருளிடம் இருந்து, உங்கள் அனைவருக்குமான நன்கொடைகள் காத்திருக்கின்றன. அவைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

Digital gifts நிறைய இருக்கின்றன. அவைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

எல்லோரும் பரமாத்வைதத்தில் மலர்ந்து, நித்யானந்த நிலையில் இருந்து, நித்யானந்தத்தில் கரைந்து நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன்.

ஆனந்தமாக இருங்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Details

The talk

Date
3 December 2025
Place
Mahakailasa
Occasion
Kaarthigai deepam Special satsang - அருணாசல புராணம் -பரமஶிவ ஞானமும்,பரமஶிவ பக்தியும்,பரமஶிவ விஞ்ஞானமும்
Language
Tamil

The recording

Recording
No recording linked to this transcript

The transcript

Status
Live notes
Time-synced
Not time-synced
Length
5,536 words · 31 min read
Topics
None recorded