கார்த்திகை தீபம் சிறப்பு ஸத்ஸங்கம் - நாள் - 11
ஓம் நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம் நித்யானந்தேஶ்வரி பரமஶக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்
உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.
இணையத்தாலும் இதயத்தாலும் இணைந்திருக்கும் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.
இன்று கார்த்திகை தீபம் எட்டாம் திருநாள். திருவண்ணாமலையிலே குதிரை வாகனத்திலே எம்பெருமானும், கைலாஸ வாகனத்திலே பிக்ஷாடனரும் எழுந்தருளி… பிக்ஷாடனர் உற்சவம் மற்றும் குதிரை வாகனத்தில் பெருமான் எழுந்தருளும் உற்சவம், தாயாரும் குதிரை வாகனத்தில் எழுந்தருளி உத்ஸவங்கள் இன்று நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
உலகம் முழுவதிலும் இருக்கும் கைலாஸங்களிலும், அதேபோல உத்ஸவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இன்று 11-ஆம் நாள் ஸத்ஸங்கம். அருணாச்சல புராணம் தொடர் ஸத்ஸங்க நிகழ்வில், 11-ஆம் நாள் இன்று.
36 தத்துவங்களைப் பற்றி அடிப்படை சில ஸத்யங்களை சொல்லிக் கொண்டிருந்தேன். நேற்று நான்கு தத்துவங்களைப்பற்றி மட்டும் விளக்கிக் கொண்டிருந்தேன்.
இன்று வித்யா தத்துவங்களைப் பற்றி சற்று விளக்குகின்றேன். ஆழ்ந்து கேளுங்கள். இதை ஆழ்ந்து கேட்டு புரிந்துகொண்டால், உடனடி பரமஶிவ ஜ்ஞாநம் மலரும். நீங்கள் எதை வாழ்க்கையில் manifest பண்ணவேண்டும் என்று நினைத்தீர்களானாலும், அதை manifest பண்ணுவதற்கான நுட்பம், இந்த ஸத்யங்களை கேட்டீர்களானால் உங்களுக்குள் மலர்ந்துவிடும். உங்கள் அனுபூதியாக மாறிவிடும்.
சற்றே பொறுமையோடு ஆழ்ந்து உள்வாங்குங்கள்.
மாயை! இன்று வித்யா தத்துவங்கள் ஏழைப் பற்றியும் விளக்குகின்றேன். அதில் முதலாவதாக மாயை, மஹா மாய மாயை. எல்லா வரம்புக்கு உட்பட்ட இருப்பு, வெளிப்பாடு... அதாவது வடிவம், நாம, ரூப, கால என எல்லா வடிவங்களுக்கும், எல்லா வரம்புக்கும் உட்பட்ட இருப்பும், வெளிப்பாடும்.
அப்பொழுது 'நீங்கள்' என்று நீங்கள் நினைத்துக்கொள்கின்ற நீங்கள், 'நான்' என்று நீங்கள் நினைத்துக்கொள்கின்ற நீங்கள், அதாவது நீங்கள் 'நான்' என்று 'எதை' நினைக்கின்றீர்களோ அது, 'நீங்கள்' என்று உங்களை 'எதை' நினைக்கின்றீர்களோ அது, இந்த 'உலகம்' என்று நீங்கள் 'எதை' நினைக்கின்றீர்களோ அது, எல்லாமே இந்த மாயைக்கு உள்ளானது. எல்லா வரம்புக்கு உட்பட்டவைகளின் இருப்பு, வெளிப்பாடு. - இந்த இரண்டிற்கும் ப்ரதாநமான பொருட்காரணம்.
ஆழ்ந்து கேளுங்கள், இந்த மாயை… பல வேதாந்த தத்துவம், வேதாந்தத்தில் பல உட்பிரிவுகள் உண்டு. வேதாந்தத்தில் உபநிஷதத்தை அடிப்படையாக வைத்த classical அத்வைதம் ஒரு மாதிரி விளக்கும். ஶங்கரரால் தோற்றுவிக்கப்பட்டு ஶங்கர ஸம்ப்ரதாயமாக மாறிய ஶங்கர அத்வைதம், அது இன்னொரு விதத்தில் விவரிக்கும்.
நாம் எல்லோரும்... even கொஞ்சம் ஶாஸ்த்ரம் படித்தவர்கள்கூட நினைக்கிறோம், 'ஶங்கரருடைய அத்வைதமும், classical அத்வைதமும் ஒன்று' என்று நினைக்கின்றோம். கிடையாது. ஶங்கரருடைய குரு கோவிந்தபாதர். கோவிந்தபாதருடைய குரு கௌடபாதர். கௌடபாதர் எழுதிய மாண்டூக்ய காரிகையை எடுத்துப் படித்துப் பாருங்கள், அதில் மாண்டூக்ய காரிகையிலே, மாண்டூக்ய உபநிஷதத்திற்கு விளக்கம் எழுதியிருக்கின்றார் கௌடபாத ஆச்சார்யார். அதுதான் மாண்டூக்ய காரிகை என்று சொல்கின்றோம்.
மாண்டூக்ய காரிகையிலே ஜீவ, ஈஶ்வர, ஜகத் மூன்றையும் விளக்கியிருக்கின்ற விதம், definitions, அது மூன்றுக்கும் இருக்கின்ற உறவு, பரமுக்தி Ultimate எது, அதை அடையும் விதம் - இது எல்லாவற்றைப் பற்றியும் கௌடபாதர் சொல்கின்ற கருத்து, அவர் வைத்திருந்த கருத்து, அவர் சொல்வது வேறாகவும், ஶங்கரர் சொல்வது வேறாகவும் இருப்பதை, நீங்கள் ஶங்கர பாஷ்யங்கள் எடுத்துப் பார்த்தீர்களானாலும், கௌடபாத காரிகை, இந்த இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே உங்களுக்குப் புரிந்து விடும்.
அதனால் ஶங்கரருக்கு முன்பாக இருந்த classical அத்வைதம் வேறு. ஶங்கரருக்குப் பிறகு, ஶங்கரரால் உருவாக்கப்பட்டு, ஆதிஶங்கரரிடமிருந்து உருவான அத்வைத ஸம்ப்ரதாயம் வேறு.
அதே மாதிரிதான் சைவ ஸித்தாந்தமும். Classical சைவ ஸித்தாந்தம், ஸ்ரீகண்ட ஶிவாச்சார்யார் ப்ரஸ்தானத்ரைய பாஷ்யம் எழுதி, அவராலே நிறுவப்பட்ட Classical சைவ ஸித்தாந்தம் வேறு. ரொம்ப recent time-ல் சில நூறாண்டுகளுக்கு முன்பு மெய்கண்டார்… நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், மெய்கண்டாரும் மஹா ஜ்ஞாநி. நான் அவரை எந்த விதத்திலும் குறைத்துச் சொல்லவில்லை. தொண்டைமண்டல ஆதீனத்திற்கே 'மெய்கண்டார் பீடம்' என்று ஒரு பெயரும் உண்டு. ஏனென்றால், மெய்கண்டாருடைய பெயராலே ஒரு மடம் அமைக்கப்பட்டது தொண்டைமண்டல ஆதீனத்திற்கு உள்ளாக. தொண்டைமண்டல ஆதீனத்தின் பாகமாக மெய்கண்டாருடைய பெயராலே ஒரு மடமும் தோற்றுவிக்கப்பட்டது. அந்த அளவுவிற்கு மெய்கண்டாருடைய ஸித்தாந்தம், மெய்கண்டாருடைய சைவ ஸித்தாந்தம் மக்களை ஈர்த்தது. மக்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதனால் ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நான் சொல்ல வருகின்ற கருத்து என்னவென்றால், மெய்கண்டார் ஸம்ப்ரதாயமாக உருவாகிய, மெய்கண்டார் அருளிய நூல்கள், அதற்கு எழுதப்பட்ட பாஷ்யங்கள், இந்த மாதிரி மெய்கண்டார் ஸம்ப்ரதாயமாக உருவான சைவ ஸித்தாந்தம், classical சைவ ஸித்தாந்தத்திற்கு வேறுபட்டதாக இருக்கின்றது. அதுதான் சொல்ல வருகின்றேன். இதில் கௌடபாதர் உயர்ந்தவரா, ஶங்கராச்சார்யார் உயர்ந்தவரா? என்றெல்லாம் நான் argue பண்ண வரவில்லை.
அதே மாதிரி classical சைவ ஸித்தாந்தத்தின் பிதாமகரான ஸ்ரீகண்டஶிவாச்சார்யார் உயர்ந்தவரா அல்லது ஒரு தனி சைவ ஸித்தாந்த ஸம்ப்ரதாயத்தை உருவாக்கிய மெய்கண்டார் உயர்ந்தவரா? என்ற அந்த argument-க்குள் எல்லாம் நான் வரவில்லை.
ஒவ்வொருவரும் இந்த 'மாயை' என்கின்ற concept-ஐ ஒவ்வொரு விதத்திலே விளக்குகிறார்கள். அவரவர்கள் அனுபூதியிலிருந்து விளக்குகின்றார்கள்.
ஆனால், என்ன இவர்கள் எல்லோருமே ஶங்கரர், ராமானுஜர், மத்வர், பாமதி, பாமதி எழுதிய வாஜஸ்பதி மிஸ்ரா, அதற்கடுத்து ஶங்கர பாஷ்யத்திற்கு வார்த்திகா, டீகா எழுதிய ஆச்சார்யர்கள்.… இந்த பக்கம் மெய்கண்டார் நூல்களுக்கு ஞானமாபாடியம் எழுதிய ஆச்சார்யர்கள், இவங்கள் எல்லோருமே பார்த்தீர்களானால்… அதாவது ராமானுஜர், ராமானுஜருடைய பாஷ்யங்களுக்கு எழுதப்பட்ட வார்த்திகம், மத்வர், மத்வருடைய பாஷ்யங்களுக்கு எழுதப்பட்ட வார்த்திகம் - இவர்கள் எல்லோருமே பார்த்தீர்களானால், வேறு வேறு விதத்திலே இந்த 'மாயை' என்கின்ற வார்த்தையை விளக்குகிறார்கள். ஆனால் ஒரு முக்கியமான விஷயம், இவர்கள் எல்லோருமே ஶாஸ்த்ர ப்ரமாணம் என்கின்ற எல்லையைத் தாண்டாமலேயே தன்னுடைய தனித்துவமான அனுபூதியை வைத்து விளக்குகிறார்கள்.
அதுதான்... இந்த ஆச்சார்யர்களுடைய மிகப்பெரிய மஹிமை என்னவென்றால், ஒருநாளும் ஶாஸ்த்ர வார்த்தைகளை பின்னப்படுத்துவது கிடையாது. அதை திரிப்பதோ, அழிப்பதோ, பழிப்பதோ, ஒழிப்பதோ கிடையாது. இந்த ஶாஸ்த்ர ப்ரமாணங்களைச் சார்ந்தே தன்னுடைய ஆத்ம ப்ரமாணம் மற்றும் ஆப்த ப்ரமாணங்களை வைத்து, அந்த எல்லைக்குள்ளாகவே அவர்கள் வாழ்ந்த காலகட்டத்திற்கு தகுந்தார்போல மக்களுக்கு தெளிவாக அனுபூதியாகின்றார்போல, மிக ஆழமான, நுணுக்கமான அனுபூதியினால் மட்டுமே வருகின்ற தெளிவை விளக்கி, ஒரு பாஷ்யங்களை செய்து, ஒரு பரம்பரையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். பரம்பரை உருவாகி இருக்கின்றது.
இப்பொழுது இந்த 'மாயை' என்கின்ற வார்த்தைக்கு இரண்டு, மூன்று கோணங்களில் இருந்து, நோக்கங்களில் இருந்து, போக்கிலிருந்து விளக்கத்தை கொடுத்துவிட்டு, என்னுடைய அனுபூதியிலிருந்து இந்த மாயை என்பதை விளக்குகின்றேன்.
ஆழ்ந்து கேளுங்கள். ஸம்ஸ்க்ரு'தத்தில் இந்த வார்த்தை - மாயைக்கு பெயர், மாயைக்கு விளக்கம் வந்து எப்படியென்றால், 'யாமா இதி மாயா'. - எது இல்லாததோ, ஆனால் இருப்பதைபோல் அனுபவத்தை நமக்கு அளிக்கின்றதோ அது 'மாயை'.
இப்பொழுது, எது எதெல்லாம் நம்முடைய வாழ்க்கையிலே இந்த அனுபவத்தை அளிக்கின்றதோ அது அது எல்லாமே மாயைதான். 36 தத்துவங்களிலே அந்தக்கரணம் நான்கு, அந்தக்கரணம்தான் நேற்று உங்களுக்கு நான் விளக்கிக்கொண்டிருந்தேன். அஹங்காரம், புத்தி, சித்தம், மனம். இந்த அந்தக்கரணங்கள் நான்கு. பஞ்ச கர்மேந்திரியங்கள் ஐந்து, பஞ்ச ஜ்ஞாநேந்திரியங்கள் ஐந்து, பஞ்ச கர்மேந்திரியங்கள் என்றால் செயல்படுவது. பஞ்ச ஜ்ஞாநேந்திரியங்கள் என்றால் உள் அறிவினை, ஜ்ஞாநத்தை உணர்வுகளை உள்வாங்குவது. பஞ்ச தன்மாத்திரைகள் ஐந்து, பஞ்சமஹா பூதங்கள் ஐந்து, வித்யா தத்துவங்கள் ஏழு, ஶிவ தத்துவங்கள் ஐந்து.
இப்போது… நான் நேற்றைய ஸத்ஸங்கத்திலே, அந்தக்கரணங்கள் நான்கை பற்றி விளக்கி கொண்டிருந்தேன். இன்று வித்யா தத்துவங்கள் ஏழைப் பற்றியும் விளக்கப் போகிறேன். அதாவது நான் என்னுடைய own style-ல் விளக்குகின்றேன்.
காரணம் என்னவென்றால், இந்த விளக்கங்களை நீங்கள் கேட்க கேட்க, இது உங்களுக்கு அனுபூதியாக மாறுகின்ற விதத்திலே இவைகளை விளக்குறேன். அதனால் சற்றே ஆழ்ந்து கேளுங்கள். வித்யா தத்துவங்கள் ஏழிலே மாயை, கலை, வித்தை - 'வித்யை' என்று சொல்லலாம் - வித்யை, நியதி, காலம், ராகம், புருஷன் - இந்த ஏழும்தான் வித்யா தத்துவங்கள். இதில் ஒவ்வொன்றாக விளக்குகின்றேன் கேளுங்கள்.
ஸித்தாந்த சைவம், இந்த ஏழையும் ஒரு விதத்திலே பிரிக்கின்றது, பார்க்கின்றது. இந்த பிற்கால சைவ ஸித்தாந்தம், இந்த பிற்கால சைவ ஸித்தாந்தம்தான் மெய்கண்டார் ஸம்ப்ரதாயம். Classical சைவ ஸித்தாந்தம் ஸ்ரீகண்ட ஶிவாச்சார்யரிடமிருந்து எழுந்தது. காஷ்மீர சைவம் என ஒரு சைவ ஸித்தாந்த ஸம்ப்ரதாயம் இருக்கிறது. கூர்ஜரத்திலே உருவான லகுலீஸ்வர சைவ ஸித்தாந்த ஸம்ப்ரதாயம் ஒன்று இருக்கிறது. இந்த மாதிரி சைவ ஸித்தாந்த ஸம்ப்ரதாயங்கள் மட்டும் 28 சைவ ஸித்தாந்த ஸம்ப்ரதாயங்கள் இருக்கின்றன.
கர்நாடகாவில், predominant-ஆக இருக்கின்ற வீர சைவம், classical வீர சைவம், பஞ்சாச்சார்யர்களை அடிப்படையாகக் கொண்டு, ஆகமத்தை அடிப்படையாகக்கொண்டு விளங்குகின்ற classical வீர சைவம். அதற்குப் பிறகு பஸவன்னா அவர்களாலே ஏற்படுத்தப்பட்ட modern day வீர சைவம்.
எப்படி இங்கு தமிழ்நாட்டில் classical சைவ ஸித்தாந்தம்... ஆகமங்களை வைத்து ப்ரஸ்தானத்ரையத்திற்கு பாஷ்யம் எழுதி, ஶிவ பரத்துவத்தை ஸ்தாபித்து, 'ஶிவாத்வைதம்' என்று சொல்லப்படுகின்ற ஸ்ரீகண்ட ஶிவாச்சார்யாருடையது classical சைவம், பிறகு மெய்கண்டார் வழித்தோன்றலாக, மெய்கண்டாரால் உருவாக்கப்பட்ட அவருடைய ஸம்ப்ரதாயமாக மலர்ந்த modern day சைவ ஸித்தாந்தம்... Recent day சைவ ஸித்தாந்தமோ.... அதே மாதிரி கர்நாடகாவிலும் பஞ்சாச்சார்யர்களை அடிப்படையாகக் கொண்டு, வீர சைவ ஆகமம், பரமேஶ்வர ஆகமம் போன்ற ஆகமங்களை அடிப்படையாக வைத்து, evolve -ஆன, உருவான classical வீர சைவம், அதற்குப் பிறகு பஸவன்னரும், பிறகு அவரைக் கடைபிடித்த அவருடைய வழியில் வந்த ஆச்சார்யர்களாலும் உருவாக்கப்பட்ட modern day வீர சைவம்.
அதனால், இந்த எல்லா ஸம்ப்ரதாயங்களுமே இந்த 'மாயை' என்கின்ற தத்துவத்தை, கருத்தை, ஸத்யத்தை வேறு வேறு விதத்திலே விளக்குகின்றன.
இப்பொழுது ஆழ்ந்து கேளுங்கள்: யாமா இதி மாயா. ஸம்ஸ்க்ரு'தத்தில் இந்த வார்த்தைக்கு நேரடியான பொருள் இதுதான். எது இல்லாததோ, ஆனால் இருப்பதை போலவே தாக்கத்தை நம் மீது ஏற்படுத்துகிறதோ, அது மாயை.
ராத்திரி தனியாக ஒரு வழியில் நடந்து போகின்றீர்கள். சற்றே இருட்டான, அந்த அளவிற்கு கண்களுக்கு முழுமையாக எல்லாம் தெரிந்துவிடக்கூடிய அளவிற்கு வெளிச்சம் இல்லாத, சற்றே இருண்ட பாதை. அந்த பாதையில் ஒரு விழுந்து கிடக்கின்ற கயிற்றை தூரத்திலிருந்து பார்த்தால், கட்டாயமாக பாம்பாகத்தான் தெரியும். அசையவில்லை என்றால்கூட, பாம்பாகத்தான் தெரியும். சற்று அருகில் போய் நெருக்கமாகப் பார்த்த உடனேதான், 'பாம்பு இல்லை, கயிறு' என்று தெரியும். ஆனால் அந்த மாதிரி முதலில் அருகில் போய் பார்க்கவேமாட்டோம்.
ஒருவேளை அருகில் போய் பார்த்தாலும்.… ஆனால் அப்படிப் பார்ப்பதற்குள்... அதற்குள்ளாகவே, அந்த பாம்பு உங்களுடைய உடலிற்குள் ஏற்படுத்த வேண்டிய சகல விதமான experiences-யையும் நீங்கள் அடைந்து முடித்துவிட்டிருப்பீர்கள்.
உடல் நடுங்கி, மனம் நடுங்கி, உயிரே, நடுங்கி, சித்தம் கலங்கி, கத்துவதெல்லாம் கத்தி, கத்த முடியவில்லை என்றாலும், வெறும் ஓட்டமாவது பிடித்து, ஏதோ ஒரு விதத்தில் react பண்ணி முடித்துவிட்டிருப்போம். ஆனால் அந்த கயிறுக்கு சொந்தக்காரனோ அல்லது 'அது கயிறுதான்' என்பதை ஏற்கனவே பார்த்து தெரிந்து, தெரிந்துகொண்ட யாரோ ஒரு நபர் அங்கு இருந்து, ''இல்லப்பா, வாப்பா இது கயிறுதான்'' என்று அவர் மிதித்துக் காட்டி, அதை மிதித்துக் காட்டி, நம்மை அருகில் அழைத்துக்கொண்டுபோய் அதை தொட்டு காட்டினார் என்றால், 'அது பாம்பல்ல கயிறுதான்' என்கின்ற புரிதல் வந்து தெளியும்.
இந்த கயிற்றிலே பாம்பை பார்ப்பது ஒரு classical-ஆன example-ஆக சகல ஸம்ப்ரதாயங்களிலும் சொல்லப்படுகின்றது. அதாவது வேதாந்த நிரூபணம், வேதாந்த ஸத்யங்களை நிரூபிப்பதற்காகவோ அல்லது question பண்ணுவதற்காகவோ, கண்டன மண்டனத்திற்காகவோ, ஏதோ ஒரு காரணத்திற்காக... இந்த 'ரஜ்ஜு ஸர்ப ந்யாயம்' என்று சொல்வோம் - கயிற்றின் மீது பாம்பை ஏற்றிப் பார்த்தல். இது classical-லான ஒரு story, ஒரு example. இதை சார்ந்து ஏறத்தாழ ஒரு 100 different arguments நம்முடைய பெரியவர்கள் கொடுக்கின்றார்கள் - நம்முடைய ஆப்தர்கள், ஸம்ப்ரதாய முதல்வர்கள், ஸம்ப்ரதாய கர்த்தாக்கள்.
ஒன்றை மட்டும் சொல்லிவிடுறேன்: இப்பொழுது அறுதி ஸத்யத்தை உணர்ந்து பரமானுபூதியை அடைவதுதான், அடைவதுதான் குறிக்கோள் - அதுதான் உண்மை. அது ஒன்று. ஆனால் இந்த classical-லான இந்த knowledge, இதனுடைய arguments - கண்டன மண்டனம்.... இதையெல்லாம் ருசிக்காத ஒரு ஹிந்து, இந்தியாவில் பிறந்த ஹிந்து, முக்கியமாக இதையெல்லாம் வாழ்க்கையில் ருசிக்கவில்லை என்றால், உண்மையிலேயே வாழ்க்கையை வீணாக்குகின்றீர்கள்.
தயவுசெய்து கொஞ்சம் time எடுத்து, 'எங்களுக்கு வயசாயிடுச்சு, இதுக்கு மேல எங்க சாமி படிக்கிறது?' என்றெல்லாம் எல்லாம் சொல்லிக்கொண்டு இல்லாமல், காரணம் எல்லாம் சொல்லாமல்… வேண்டுமானால் நம்முடைய AI use பண்ணுங்கள். நீங்கள் books எல்லாம் தேடிக்கொண்டிருக்க முடியாது. எனக்கு தெரிகிறது... practical difficulties புரிகின்றது. 'எந்த புத்தகத்தைத் எங்கு தேடுவது சாமி, எங்கே போய் வாங்குவது? அது செலவு, ஏகப்பட்ட பிரச்சினை இங்கே இருக்கு, எங்க time இருக்கு?' என்றெல்லாம் சொல்வதை விட்டுட்டு, சும்மா casual-ஆக உட்கார்ந்து Ask Nithyananda AI-ல் time கிடைக்கும் பொழுதெல்லாம் படித்துக்கொண்டிருங்கள்.
'மாயை என்றால் என்ன? ஶங்கரர் அதை எப்படி விளக்குகின்றார்? ஶங்கரருடைய குருவுக்கும் குருவான, பரமகுரு கௌடபாதர் எப்படி விளக்குகின்றார்? ராமானுஜர் எப்படி விளக்குகின்றார்? இதில் எது சரி என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?'' என்று அந்த AI-ஐ கேளுங்கள். சும்மா சாதாரணமாக விளையாடிக்கொண்டிருந்தீர்களானால், உங்களுடைய சொந்த தனிப்பட்ட அனுபூதிக்கான மிகப்பெரிய கதவுகள் திறந்துவிடும்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: அது மட்டும் இல்லை ஐயா, இந்த தத்துவ ருசி கொஞ்சம் கண்டுவிட்டீர்களானால், வீணாப்போன தரித்தரம் பிடித்த cheap pleasures-லேயே mind உழன்றுகொண்டிருக்காது ஐயா.
எப்பொழுது பார்த்தாலும், எதையாவது entertainment என்ற பெயரால் உங்களை drain பண்ணிகொள்ளுகின்ற, உங்களுடைய time, talent, energy, treasure எல்லாவற்றையும் drain பண்ணுகின்ற cheap thrills, cheap pleasures, உங்களை பரபரபரவென்று inner peace-ஏ இல்லாமல் வைத்துகொண்டிருக்கின்ற, வைத்திருக்கிற மாதிரியான entertainment-ல் இருந்தெல்லாம் கொஞ்சம் உங்களை நீங்களே liberate பண்ணிக்கொள்ளுங்கள். Liberate பண்ணிக்கொண்டு, இந்த ஶாஸ்த்ரங்களோடு விளையாடினீர்களானால், விளையாட்டுத்தனமாகக் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒன்றும் பெரிதாக, நான் உங்களை ஒன்றும் பெரிய ஶாஸ்த்ர பண்டிதனாக எல்லாம் ஆகச் சொல்லி கேட்கவில்லை. விளையாட்டுத்தனமாகக் கற்றுக்கொள்ளுங்கள் அது என்ன ஆகும் என்றால், விளையாட்டுத்தனமாக ஶாஸ்த்ரங்களை கற்றுக்கொள்வது, entertainment இல்லை ஐயா, entrainment. Entrain பண்ணிக்கொண்டு... Beautiful-ஆக உங்கள் life-க்கு உங்களை train பண்ணிவிடும். அதனால் கொஞ்சம்…
'என்ன சாமி சொல்றீங்க? போனா போகுது என்று உங்கள் ஸத்ஸங்கத்தை உட்கார்ந்து கேட்க வந்தா.. இதைக் கேட்பதே பெரிய வேலை, அதையெல்லாம் படிக்க சொல்கின்றீர்கள், சும்மா அதையெல்லாம்?' என்றால்...
ஐயா ரொம்ப casual-ஆக விளையாடுங்கள், அதாவது ஒன்றும் இல்லை ஐயா. ஏதோ வாழக்கையில் துக்கத்தோடு இருக்கின்றீர்கள், ஏதாவது ஒரு பிரச்சினை, business-ல் பணம் கொஞ்சம் இழந்துவிட்டீர்கள் அல்லது இந்த லூசுத்தனமாக எதையாவது இந்த ரம்மி - இந்த மாதிரி சூதாட்டம், ஏதோ ஒன்றைச் செய்து பணத்தை இழந்துவிட்டீர்கள் அல்லது girl friend ஓடிப் போய்விட்டாள் அல்லது boy friend ஓடிப் போயிட்டான், ஏதோ ஒரு boy friend cheat பண்றான்… இந்த மாதிரி ஏதோ ஒரு சூழ்நிலையில்... வாழ்க்கையில் ஏதாவது இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வந்தால்… ஒரு வேலை நடக்க வேண்டியது நடக்கவில்லை, வேலையில் manager promotion கொடுக்க மாட்டேன் என்கிறார் - இதுபோன்ற ஏதோ ஒரு சூழ்நிலை என்றால்கூட, இந்த ஶாஸ்த்ர ரீதியான தீர்வுகளைத் தேடிப் பார்த்தீர்களானால், இந்த AI-ல், Ask Nithyananda AI அதற்குத்தான் செய்து கொடுத்திருக்கின்றேன் ஐயா. அந்த Ask Nithyananda AI-யிடம் போய் சொல்லுங்கள், 'இந்த மாதிரி சூழ்நிலையாக இருக்கிறது. இதற்கு வாழ்க்கையில் என்ன தீர்வு கொடுக்கின்றாய்?' என்று கேளுங்கள். அது கொடுக்கிற தீர்வுகளை, இன்னும் திரும்ப ஒரு 4-5 கேள்விகள் தொடர்ந்து கேட்டுக் கேட்டு நோண்டினீர்களானால், இந்த ஶாஸ்த்ரங்களை சார்ந்து நம்முடைய ஸநாதன ஹிந்து தர்மத்தின் ஜ்ஞாந பேரறிவு கருவூல பொக்கிஷம்…
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: 'கருவூலம்' என்றால் வேறு, 'பொக்கிஷம்' என்றால் வேறு. ஜ்ஞாநக் கருவூல பொக்கிஷம். Treasury kept secretly. அந்த ஜ்ஞாந பொக்கிஷத்தை சற்றே ருசிக்க ஆரம்பித்துவிட்டீர்களானால், அது ஒரு அருமையான entertainment -டோடு சேர்ந்த training ஐயா. உள்ளுக்குள் எப்பொழுது பார்த்தாலும் இருக்கின்ற பரபரப்பு அடங்கிடும்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: இப்பொழுது இந்த மாதிரி ஏதாவது வாழ்க்கையில் ஒரு depressing-கான ஒரு பிரச்சினை, ஒரு ரொம்ப கஷ்டமான ஒரு பிரச்சினை வருகிறது... Boyfriend வேறு ஒரு பெண்ணுடன் போகிறான், cheat பண்ணுகின்றான் அல்லது girl friend ஓடிப்போய்விட்டாள் அல்லது வேலை போய்விட்டது அல்லது வாடகைக்கு இருந்த வீட்டில் வெளியில் போக சொல்லிவிட்டார்கள்... இதுபோன்று ஏதோ ஒரு சூழ்நிலைகள் வரும்பொழுது, போய் தண்ணி அடித்தீர்களானால், ஏற்கனவே இருக்கின்ற 10 பிரச்சினைகளோடு, உடம்பு நாசமாகப் போவதும் சேர்ந்து 11வது பிரச்சினையாக மாறும்.
அதை விட்டுவிட்டு இந்த மாதிரி ஶாஸ்த்ர ரீதியானத் தீர்வுகளை தேடினீர்களானால் - இந்த பிரச்சினைக்கு மட்டும் தீர்வு கண்டு கண்டுபிடிப்பீர்கள் என்பது மட்டும் கிடையாது. ஏற்கனவே இருக்கின்ற மற்ற 10 பிரச்சினைகளும் தீர ஆரம்பித்துவிடும். ஶாஸ்த்ரத்தை ருசியுங்கள் ஐயா. வாழ்க்கையில் சகலத்தையும் தீர்த்துவிட்டு, பிரச்சினைகள் அத்தனையும் தீர்த்துவிட்டு, நீங்கள் சாதிப்பதற்கு, create பண்ணுவதற்கு, உங்களுடைய time, treasure, talent, inner space, energy எல்லாவற்றையும் உங்களுக்கு fresh-ஆகக் கொடுத்துவிடும் ஐயா.
என்னுடைய ஆச்சார்யர்களுக்கு… அவர்களை நினைத்தாலே உள்ளம் கனிந்து, மனம் கனிந்து நான் உருகுவதற்குக் காரணம்... சின்ன வயதிலேயே இந்த ஶாஸ்த்ரத்திலே ருசியை ஏற்படுத்திவிட்டார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு நல்ல தாய், தந்தை, ஒரு நல்ல சமூகம், குடும்பம் அளிக்கவேண்டிய ஒரு மிகப்பெரும் நன்கொடை - ஸநாதன ஹிந்து தர்மத்தின் ஶாஸ்த்ரங்களிலே ருசி காண வைப்பது. அதிலிருந்து தன் வாழ்வுக்கானத் தீர்வுகளை எடுத்துக்கொள்வதற்குக் கற்றுக்கொடுப்பது.
ஐயா இன்னும் ஒரே ஒரு உதாரணம் சொல்கின்றேன். இது சத்தியமான... என் அனுபவத்தை அப்படியேச் சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். என்னைச் சுற்றி வாழ்பவர்கள், வாழ்ந்தவர்கள், வாழ்ந்துவிட்டு, ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் வெறுப்பு, வேகம், கொந்தளிப்பு இதையெல்லாம் கக்குகின்றவர்கள், எதிரிகள், எதிர்ப்பைக் காட்டுபவர்கள்... எனக்கு எதிரி என்று யாரும் கிடையாது, என்னை எதிரியாக நினைக்கின்றவர்கள், இவர்கள் எல்லாம், இவர்களை எல்லாம் கேட்டீர்களானால்கூட, அவர்கள் எல்லோருமே சொல்கின்ற, accept பண்ணிக்கொள்கின்ற ஒரு விஷயம், உள்ளுக்குள் அவர்களுக்கெல்லாம் பயம் கொடுக்கின்ற, accept பண்ணிக்கொள்கின்ற ஒரு விஷயம் - என்னுடைய அளவில்லாத நினைவாற்றல் திறன், extreme memory.
தெரிந்துகொள்ளுங்கள், 1200 organisations நடத்துகின்றோம். தோராயமாகச் சொல்கின்றேன், 160 நாடுகளில் 1200 organisations நடத்துகின்றோம். இந்த 1200 organisation-னுடைய trustees யார் யார்? எந்தெந்த நாட்டில் அவர்கள் என்னென்ன activities செய்கின்றார்கள்? அவர்களுடைய bank accounts எங்கெங்கு இருக்கின்றது? எந்தெந்த properties எந்தெந்த organisation-க்குக் கீழ் இருக்கின்றது? அதற்கு ஒழுங்காக அந்தந்த நாட்டிற்குக் கட்ட வேண்டிய tax கட்டினார்களா? Current bill கட்டினார்களா? அந்தந்த நாட்டிற்கு, அந்தந்த நாட்டினுடைய விதிகளுக்கு உட்பட்டு செய்ய வேண்டிய செயல்கள்… இப்பொழுது அமெரிக்காவில் இருக்கின்ற properties எல்லாம், அந்த city allow பண்ணுகின்ற, city-யினுடைய up rule-ஆக இருக்கின்ற அந்த paint -ஐ தான் front-ல் paint பண்ண முடியும். அந்த மாதிரி எல்லாம் அந்த compliance, இதையெல்லாம் செய்கின்றார்களா? இதெல்லாம் பார்க்கிறார்களா? என்பது எல்லாம்… especially இந்த 1200 organisations-னுடைய ராஜ ஸபா, சித் ஸபா… அதாவது நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் கைலாஸத்தின் structure என்னவென்றால், ஒவ்வொரு ஊருக்கும் உதாரணம் சொல்கின்றேன்.
கைலாஸா திருவண்ணாமலை என்றால், கைலாஸா திருவண்ணாமலைக்கு என்று ராஜ ஸபை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள், கைலாஸா திருவண்ணாமலைக்கு என்று சித் ஸபை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்கள்தான் இது மொத்தத்தையும் நடத்துபவர்கள். அந்த கைலாஸா திருவண்ணாமலையினுடைய எல்லா நல் திருப்பணிகள், சமூக சேவைகள், ஆலயத்தை நிகழ்த்துவது, ஆலயத்தை நடத்துவது, கோயிலில் பூஜை செய்வது, அதாவது ஆதீனத்தில் இருக்கின்ற கோவிலில் பூஜை செய்வது, ஆதீனத்தில் கோவில் இருக்கும், சன்னிதிகள் இருக்கும் அங்கு பூஜைசெய்வது மட்டுமல்லாமல், அண்ணாமலையார் கோவிலில் தினந்தோறும் பூஜை செய்வது. இந்த மாதிரி எல்லா நடவடிக்கைகள், activities, religious, social, எல்லா activities-ம் அவர்கள்தான் செய்கின்றார்கள்.
இது மாதிரி 1200 நிறுவனங்களுக்கும் யார் யார் ராஜ ஸபை உறுப்பினர்கள், சித் ஸபை உறுப்பினர்கள், யார் யார் இதை நடத்துகிறார்கள், அத்தனையும் எந்த computer-ரோ, notes-ஓ, notepad-ஓ - எதுவுமே இல்லாமல், அப்படியே உட்கார்ந்துதான் கேட்பேன், சொல்லுவேன்.
நிர்வாகம் பண்ணும்பொழுது, இவர்கள் ஏதாவது ஒரு file எடுத்துக்கொண்டு வந்தார்களானால், திருப்பிப் பார்த்து, புரட்டிப் பார்த்து, அந்த trust அதனுடைய trustees யாரு? ம்ம்ம்… எப்பொழுது அந்த organisation form பண்ணினோம்? அது எப்பொழுது trust register பண்ணார்கள்? அதற்குக் கீழே எத்தனை for-profit entity இருக்கிறது? Non-profit entity இருக்கிறது? யார் அதனுடைய bank-signatory, யார் ராஜ ஸபா members, யார் சித் ஸபா members - அத்தனையும் straight-ஆ brain-ல் இருந்துதான் வரும்.
அதுகூட பெரிய விஷயம் இல்லை. அதையும் தாண்டி, எந்தெந்த organisation-ல் என்னென்ன assets இருக்கிறது, என்னென்ன properties இருக்கிறது, என்னென்ன சேவைகள் நடக்கிறது, திருவண்ணாமலை ஆதீனத்தைப் பொறுத்தவரைக்கும், எவ்வளவு தட்டு இருக்கிறது, பௌர்ணமிக்குப் பிறகு, accounts எடுத்து settle பண்ணி கணக்குப் பார்த்து சரியாக எடுத்து வைத்தார்களா? இந்த details உட்பட, வெறும் memory-ல் இருந்து மட்டும்தான் நிர்வாகம் பண்ணுவேன்.
இப்பொழுதே இன்னொரு விஷயத்தையும் பதிவிட்டுவிடுகின்றேன்... பல அன்பர்கள் சமூக ஊடகங்களில், சமூக ஊடகங்களில் எனக்கு message போடுகின்றீர்கள், 'நன்றி சாமி, திருவண்ணாமலை உங்கள் ஆதீனத்தில் போய் சாப்பிட்டேன். உணவு நன்றாக இருந்தது. அன்னதானம் பண்றீங்க, ரொம்ப நன்றி. திருவண்ணாமலை நித்யானந்த ஜென்ம பூமியில் சாப்பிட்டேன். உணவு நன்றாக இருந்தது. நன்றி அல்லது மதுரை கைலாஸா மதுரையில் போய் சாப்பிட்டேன், உணவு நன்றாக இருந்தது. நன்றி' என்றெல்லாம் போடுகின்றீர்கள்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா: அந்த நன்றி, புகழ் எதற்கும் நான் உரியவன் அல்ல. உண்மையைச் சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். உண்மையிலேயே, அந்த நன்றி, அந்த புகழ் யாருக்குப் போக வேண்டும் என்றால், கைலாஸா திருவண்ணாமலையை நடத்துகின்ற அந்த ராஜ ஸபை, சித் ஸபை உறுப்பினர்களுக்குத்தான் செல்ல வேண்டும்.
நீங்கள் எல்லாரும் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும், திருவண்ணாமலையிலிருந்து பல்வேறு இறை பணிகளும், திருப்பணிகளும் செய்திருக்க வேண்டியவன்... என்ன வேண்டுமானாலும் காரணம் சொல்லலாம், செய்யவில்லை. ஓடிவிட்டேன். அதுதான் உண்மை. நிதர்சனமான உண்மை அதுதான். அதனால், அங்கு நடக்கின்ற சிறு சிறு சேவைகள், அந்த நன்றியும், புகழும், புண்ணியமும் அதை செய்கின்றவர்களை, செய்கின்றவர்களைத்தான் சென்று சேர வேண்டுமே தவிர, அதற்கு உரிமையானவன் நான் அல்ல, உடைமையானவன் நான் அல்ல.
இப்பொழுது இன்றுதான், இன்று பே கோபுரத்தின் நிழலிலேயே இருக்கின்ற அண்ணாமலையார் ஆலயத்தின் பே கோபுரத்தின் நேர் எதிரில் இருக்கின்ற ஒரு property, ஏறத்தாழ 6200 சதுரடி அளவிற்கான ஒரு property-யை வாங்கி, அங்கும் அன்னதானம் செய்வதற்காக ஒரு பீடத்தை உருவாக்குகின்றார்கள்.
இது எல்லாமே கைலாஸா திருவண்ணாமலையினுடைய ராஜ ஸபை உறுப்பினர்கள், சித் ஸபை உறுப்பினர்கள் செய்கின்ற செயல்கள். அதில் எந்த புண்ணியம், நன்மை, பேர், புகழ், நன்றி எதுவுமே எதற்குமே நான் தகுதியானவன் கிடையாது. அது எனக்குக் கிடையாது.
அது யாருக்குப் போக வேண்டும் என்றால், முதலில் அண்ணாமலையாருக்கு. இரண்டாவது அண்ணாமலையாருடைய கருவியாக இருந்து செயல்படுகின்ற, அந்த கைலாஸா திருவண்ணாமலையின் ராஜ ஸபை, சித் ஸபை உறுப்பினர்களுக்கு. காரணம் என்னவென்றால், அவர்கள்தான் உழைக்கின்றார்கள், அவர்கள்தான் செயலைச் செய்கின்றார்கள். மக்கள் நன்கொடை கொடுக்கின்றார்கள், அந்த நன்கொடை மூலமாக நடவடிக்கைகளை செய்து, மக்களுக்கு திரும்ப இவர்கள் சேவை செய்கின்றார்கள். அதனால் இதில் எதிலும் என் பங்களிப்பு எதுவுமே இல்லை. என் பங்களிப்பு ஒன்றுதான், Spiritual-லாக, ஆன்மீகரீதியாக அதெல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்று பார்ப்பேன்.
முதலில் எல்லாம் ரெண்டு வருடங்களுக்கு முன்பெல்லாம் இந்த 1200 organisations-னுடைய accounts எல்லாம்கூட பார்ப்பேன். இப்பொழுது அந்த மாதிரி இல்லாமல் sick unit என்று சொல்லுவோம். அதாவது எந்த ஆதீனங்கள் எல்லாம் sick ecosystem, எந்த ecosystem எல்லாம் தங்களைத் தாங்களே run பண்ணிக்க முடியாமல் தடுமாறுகின்றார்களோ, போதுமான அளவிற்கு வரவோ, நடத்துவதற்கான ஸந்நயாஸிகளோ இல்லாமல் தடுமாறுகின்றார்களோ, அந்த ecosystems மட்டும்தான் நான் direct-ஆக attend பண்ணி, guide பண்ணி பார்த்துக்கொள்கின்றேன். மற்றதெல்லாம் பார்த்துக்கொள்வதற்கு நேரம் இல்லாமல் போனது. ஆனாலும் நினைவில் இருக்கும். எல்லாம் முறையாக நிகழ்கிறதா என்று பார்த்துக்கொண்டே இருப்பேன்.
இப்பொழுது சொல்ல வந்த கருத்து என்னவென்றால், அளப்பரிய நினைவாற்றல். இந்த நினைவாற்றலுக்குக் காரணம் சொல்லிவிடுகின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள் ஐயா. ரொம்ப எளிமையான காரணம். சின்ன வயதில் என்னுடைய பாட்டனாரே, அதாவது என்னுடைய, நான் பிறந்தக் குடும்பத்தினுடைய பூர்வாஶ்ரமத்து உறவினரே, எனக்கு ஆசிரியராகவும் இருந்து, தேவாரம் திருவாசகம்… அதாவது தேவாரம், திருவாசகம் எனக்கு மொத்தமும் தெரியும் என்று நினைத்துவிடாதீர்கள், கிடையாது. அதிகபட்சமாக, ஒரு ஆயிரம் பதிகம் பார்க்காமல் பாட முடியும். பாடுவது என்றால் என்னுடைய own tune-ல் பாடுவேன். ஆயிரம் பதிகம், அதிகபட்சம் நான் சொல்வது.
அதேமாதிரி திருப்புகழ் மிஞ்சி மிஞ்சி போனால், ஒரு 250 திருப்புகழ் பார்க்காமல் பாட முடியும். கொஞ்சம் வேதங்கள், உபநிஷதங்கள்... இந்த த்வாதஶ உபநிஷத், 12 உபநிஷத் - ஈஶ, கேன, கட, முண்டக, மாண்டூக்ய, ப்ரஶ்ன, ஐத்ரேய தைத்ரீய, நாராயண, மஹாநாராயண... இந்த உபநிஷதங்கள்... ஒரு 12 major Upanishads. ஸூக்தங்கள், ஒரு 16 ஸூக்தங்கள்... இந்த மாதிரி கொஞ்சம் இவைகளையெல்லாம் மனப்பாடம் செய்ய வைத்தார்கள்.
கேட்டு, கேட்டு, கேட்டு… பெருமான் அருளாலே, இந்த 'ஏகஸந்தக்ராஹ்யம்' - ஒருமுறை கேட்டால் அப்படியே சொல்ல முடியும். அது எல்லா குழந்தைகளுக்குமே இருக்கிறது ஐயா. தரித்திரம் பிடிச்ச cellphone-ஐ கொடுக்காமல், TV பார்க்கவிடாமல், இந்த TV, cellphone-னால் உங்கள் குழந்தைகளை சின்னபின்னமாக சீரழிக்காமல், நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் உட்கார்ந்து time spend பண்ணீர்களானால்…
நல்லவேளை, எனக்கு அண்ணாமலையான் கொடுத்தப் பெரும்வரம் திருவண்ணாமலையில் ஐயா. ஒரு ஐந்து, ஆறு குருமார்கள் என்னுடன் முழுக்க முழுக்க நேரம் செலவு செய்தார்கள்.
உட்கார்ந்து என்னுடைய பாட்டனாரும், ஆசிரியருமான பாண்டுரங்கனார் வயது முதிர்ந்தவர். நான் பிறந்து வளரும்பொழுதெல்லாமே அவருக்கு 70 வயது தாண்டிவிட்டது. வயது முதிர்ந்தவர். ஆனால் ஒரு நாள் விடாமல், ஒரு நாள் விடாமல், பேரன்தான் என்பதனால் அடியும் விழும். ரொம்ப soft ஆனவர், ரொம்ப soft ஆனவர். அவர் 'அடிப்பார்' என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் சரியாகப் படிக்கவில்லை என்றால் அடியும் விழும். சொந்த தாத்தா... அதனால் அவர் மேல் இருந்த அன்பு, அவர் எடுத்துக்கொள்கின்ற care, பரிவு. அதனால் அடிப்பதைப் பற்றியெல்லாம் கவலையும்பட்டது கிடையாது. எனக்காக அவர் spend பண்ண time...
இந்த நான்கைந்து குருமார்கள் time spend பண்ணியதனால், உட்கார்ந்து சொல்லிக் கொடுத்து, சொல்லிக் கொடுத்து, சொல்லிக்கொடுத்து, சொல்லிக்கொடுத்து, சின்ன வயதில் கேட்டு, memorise பண்ணி, அதை அப்படியே store பண்ணிக்கொண்டு, எப்பொழுது வேண்டுமானாலும், எதை எந்த file-லை வேண்டுமானாலும், retrieve பண்ணுகின்ற, Confusion இல்லாமல், குழப்பம் இல்லாமல், கலக்கம் இல்லாமல் retrieve பண்ணுகின்ற இந்த clarity ஐயா - இன்று எனக்கு ஒரு நாட்டையே நிர்வாகம் பண்ணுவற்கு stress-ஏ இல்லாமல், ஒரு நாட்டையே நிர்வாகம் பண்ணுவற்கு, உணர்வு தளத்தில்... உணர்வு அடித்தளத்தை, உயிர் அடித்தளத்தை, மன அடித்தளத்தை உருவாக்கி வைத்துவிட்டது ஐயா. Mental infrastructure என்று சொல்லுவோம். conscious infrastructure. Stress இல்லாமல் இவ்வளவு பெரிய நிர்வாகத்தை நடத்துவதற்கு ஒரு அருமையான foundation-ஐ உருவாக்கி வைத்துவிட்டது ஐயா.
நன்றாகச் சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள்: என்னுடைய பக்தர்கள் என் மீது நம்பிக்கையும், ஶ்ரத்தையும் உடையவர்கள். தயவுசெய்து மூடத்தனமாக, 'ஆ தேவாரம் திருவாசகம் படித்தால் என் பையனுக்கு பின்னாடி வேலை கிடைக்குமா?' என்று கேட்காதீர்கள். அதெல்லாம் இந்த middle class, தரித்திரம் பிடித்த இந்த 70களில், 80 களில் நம் அப்பா அம்மாக்கள் ஏமாந்துபோன மாதிரி, brain wash, மூளைச்சலவை பண்ணப்பட்டு அந்த மாதிரி நாசமாகப் போகாதீர்கள். அந்த நாசமாகப் போன generation முடிந்துவிட்டது. இதற்கு மேலையாவது, 'ஓ! தேவாரம் திருவாசகம் படிச்சா வேலை கிடைக்குமா?' என்று கேட்காதீர்கள்.
வேலை கிடைக்கிறது இரண்டாவது பட்சம் ஐயா, வாழ்க்கைக் கிடைக்கும் ஐயா. எந்த வேலைக்குச் சென்றாலும், brilliant-ஆக இருந்து… உண்மையில் வேலைக்குப் போவதே தரித்திரம். வேலைக்குப் போக வேண்டும் என்று நினைப்பதே மிகப்பெரிய மோசமான, லூசுத்தனமான, தரித்திரம் பிடித்த புத்தி ஐயா.
நம்முடைய வாழ்க்கையை நாம் உருவாக்கிக்கொள்ள முடியும் ஐயா. நீங்கள் உங்கள் கனவுகளை நிறைவேற்றுங்கள். இல்லையென்றால், வேறு எவனாவது உங்களை வேலைக்கு எடுத்து, அவன் கனவை நிறைவேற்றிக் கொண்டிருப்பான்.
என் சீடர்கள் இன்னொருவருக்கு வேலை செய்யக்கூடாது. என் பக்தர்களுக்கு இது நான் அளிக்கும் குருவாக்கு. உங்க வாழ்க்கையை நீங்கள் build பண்ணிக்க முடியும் ஐயா.
இந்த காலத்தில்போய் இன்னொருத்தருக்கு வேலை செய்துகொண்டிருப்பது எல்லாம்... என்ன cheap-ஆன, third rate-ஆன, outdated life style. தூக்குமாட்டி தொங்கினால்கூட 15 நிமிஷத்தில், 15 நிமிஷத்தில் உயிர் போய்விடும். இன்னொருத்தனுக்கு வேலை செய்துகொண்டிருந்தீர்களானால், வாழ்க்கை முழுக்க தூக்கில் தொங்கிக்கொண்டு இருப்பது ஐயா. சாகாமல் தூக்கில் தொங்கிக்கொண்டு இருப்பது.
உங்கள் வாழ்க்கையை நீங்கள் கட்டமைத்துக்கொள்ளுகின்ற வாழ்க்கையை வாழுங்கள். Be your own boss.
எப்பொழுது பார்த்தாலும், 'ஆ தேவாரம் திருவாசகம் படிச்சா, திருப்புகழ் எல்லாம் படிச்சா வேலை கிடைக்குமா?'... வேலை கிடைக்காது. ஆயிரக்கணக்கானப் பேருக்கு வேலை கொடுக்கின்ற ஒரு நாட்டை செய்து வைப்பாய்! அதுதான். ஆயிரக்கணக்கானப் பேருக்கு வேலை கொடுக்கின்ற ஒரு organisation பண்ணி வைப்பாய்! ஒரு நாட்டை செய்து வைப்பாய்!
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: நீங்கள் நாசமாக போயிருந்தாலும் பரவாயில்லை. போய்விட்டுப்போகுது. உங்கள் குழந்தைகளுக்கு, சின்ன வயதில் இருந்தே கொஞ்சம் தேவாரம், திருவாசகம், உபநிஷத், ஸூக்தங்கள் memorise பண்ண வையுங்கள்.
இந்த தரித்திரம் பிடித்த school-லுக்கு எல்லாம் அனுப்புவதை விட்டுட்டு, home school பண்ண ஆரம்பியுங்கள். வீணாப்போன school-லுக்கு போய், அங்கே peer pressure-ல் அந்த ecosystem-திற்குள் மாட்டிக்கொண்டு, இந்த பசங்கள் அதே மாதிரி அந்த மற்ற பசங்கள் செய்கின்ற மாதிரியே எல்லாப் பழக்கத்தையும் கத்துக்கொண்டு நாசமாகப் போகிறார்கள். என்னுடைய பக்தர்கள் எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்: அவர்கள் அவர்கள் ஊரில், home schooling… உங்கள் வீட்டிலேயே, வாழ்க்கைக்குத் தேவையான கல்விகளைக் கற்றுக்கொடுத்து குழந்தைகளை வளர்க்கத் துவங்குங்கள். வேண்டுமானால், ஏதாவது examination எழுதியே ஆக வேண்டும், இந்த தரித்திரம் பிடித்த 'graduation, graduation' என்கின்ற அந்த மாயை, மயக்கம் இன்னும் விட்டுத் தொலைக்கவில்லை என்றால், online exam எழுதிக்கொள்ளுங்கள் அல்லது examination மட்டும் போய் எழுதுகின்ற மாதிரி இந்த IGCSE - இந்த மாதிரி syllabus எல்லாம் இருக்கிறது பாருங்கள், அந்த மாதிரி போய் exam மட்டும் எழுதி certificate வாங்கிக்கொள்ளுங்கள்.
இந்த regular-ஆக ஸ்கூலுக்குப் போவது, regular-ஆக office-க்குப் போவது, இந்த மாதிரி ஒரு தரித்திரம் பிடித்த… அது வாழ்க்கையே கிடையாது., அதுதான் மோசமான, தரித்திரம் பிடித்த நாலாம் தரம் அல்லது ஐந்தாம் தரம் அல்லது கடைத்தரமான வாழ்க்கை ஐயா. இந்த regular-ஆக school-க்கு போகின்றவர்கள், regular-ஆக college போகின்றவர்கள், இந்த regular-ஆக வேலைக்குப் போகின்றவர்கள், இவர்கள் எல்லாம் பார்த்தீர்களானால் கடைத்தரமான குடிமக்கள். கடைத்தரமான வீணாப்போனவர்கள்.
Home schooling பண்ண ஆரம்பியுங்கள். நம்முடைய வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதை build பண்ணுங்கள்.
ஒரு நல்ல தகப்பனாக இருந்தீர்களானால், நீங்கள் நல்ல தாய் தந்தையராக இருந்தீர்களானால், உங்கள் business expertise இருக்கும். அதை உங்களுடைய குழந்தைகளுக்கு transmit பண்ணுவற்கு, என்ன மாதிரியான knowledge வேண்டுமோ…. இப்பொழுதெல்லாம் AI வந்துவிட்டது ஐயா. YouTube, AI, social media, எல்லா விதமான knowledge-மே, expertise-மே democratise ஆகிவிட்டது ஐயா.
இது மாதிரி நீங்கள் choose பண்ணி குழந்தைகளுக்கு எடுத்துக்கொடுத்து வளர்த்து, train பண்ணீர்களானால், வேறு level-ல் genius-ஆக குழந்தைகளை வளர்த்துவிடலாம். இந்த ஏற்கனவே இருக்கின்ற system-க்குள் போய் மாட்டிக்கொண்டு அழிந்து போகாதீர்கள் ஐயா.
நான் சொன்னால் எல்லோரும் கேட்பார்களா என்று எனக்குத் தெரியாது. கேட்பவர்களுக்காக நான் சொல்கின்றேன், அவ்வளவுதான்.
கொஞ்சம் இந்த தேவாரம், திருவாசகம் இதெல்லாம் மனப்பாடம் செய்ய வைத்தீர்களானால், குழந்தைகளை, அபாரமான memory… அபாரமான memory-யும், மனதில் சித்தம் கலங்காமல் memory-யை retrieve பண்ணுகின்ற இந்த capacity-யும், பல ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கின்ற வாழ்க்கையை தன்னைத்தானே அமைத்துக்கொள்ளுகின்ற அறிவு ஆற்றலாக வெளிப்படும் ஐயா.
சும்மா அனாவசியமாக உட்கார்ந்துகொண்டுடு, 46 ministry நடத்துகின்றேன். அத்தனையும் இந்த ஒற்றை brain-க்குள் தான். தனியாக computer-ரோ, தனியாக notes-ஓ, தனியாக paper-ரோ, தனியாக files-ஓ கிடையாது.
எனக்கு assist பண்ணுகிற அந்தந்த ministers பெரிய பெரிய files எடுத்துக்கொண்டு வருவார்கள், நான் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு மட்டும்.
ஆனால் நான் ஒருநாளும் அந்த files-ஐ புரட்டிப் பார்ப்பதோ அல்லது computer திறந்து data-க்களைப் பார்ப்பதோ, information-ஐ பார்ப்பதோ கிடையாது. வெறும் brain தான். இதற்கு ஒரே காரணம், சின்ன வயதில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், வேதங்கள், உபநிஷதங்கள் படித்ததுதான். இதெல்லாம் ரொம்ப முழுதாக எல்லாம் தெரியும் என்று சொல்ல வரவில்லை. நான் ஒன்னும் அப்படியே உங்கள் வாழ்க்கையையே அதற்கு த்யாகம் பண்ணி, மொத்தமாக பெரிய பண்டிதர் ஆகுங்கள் என்றெல்லாம் சொல்ல வரவில்லை ஐயா. சாதாரணமாக, ஆனால் ஶ்ரத்தையோடு.. ஒன்று நீங்கள் கற்றுக்கொடுங்கள், கற்றுக்கொடுக்க முடியவில்லை என்றால், உங்கள் குழந்தைகளுக்கு YouTube-பை போட்டு போட்டாவது கற்றுக்கொடுங்கள்.
இவைகளை மட்டும், இந்தக் கருத்திற்கு மட்டும் குழந்தைகளுக்கு சிறு வயதிலே பயிற்சியளித்து விட்டீர்களானால், நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா, நாம் அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கின்ற language, vocabulary, அந்த inner dialogue - அதுதான் ஐயா மிகப்பெரிய சொத்து.
குழந்தைகளுக்கு நீங்கள் சிறு வயதில் உருவாக்கிக் கொடுக்கின்ற inner dialogue.
நாம் எதை ஆழ்ந்து கேட்டு, உள்வாங்கி, விரும்பி, ரசித்து, ருசித்து, புசிக்கிறோமோ, அதுதான் நம்முடைய inner dialogue-ஆக மாறிவிடும் ஐயா. சும்மா casual-ஆக நான் பேசும்பொழுதே என்னுடைய அந்த quiet inner dialogues இந்த தேவாரம், திருவாசகம், திருப்புகழ் இதிலெல்லாம் இருந்து உள்வாங்கிய அந்த வார்த்தைகள், வார்த்தை சொற்றொடர்கள், அந்த கருத்துக்களை தொகுத்துத்தான் உள்ளேயே ஓடும் ஐயா.
நான் ஒரு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பாக ஸத்ஸங்கத்தில், நந்தனார் படம் பார்த்துவிட்டு நான் பண்ண கூத்தை சொல்லிக்கொண்டிருந்தேன். என் பாட்டனார் முன்னாடி நான் போய் நின்று, ''சிதம்பரம் போகணும்'' என்று சொன்ன உடனே, அவர் அருகில் இருந்த அவருடைய assistant, அவரும் உறவினர்தான். அவருக்கு சொல்லி, ''அப்பா arrange பண்ணி சாமியார் பையனை அனுப்பிச்சிடுப்பா'' என்றார்.
எனக்கு ரொம்ப 'பொக்' என்று போய்விட்டது. ஏனென்றால், நான் வந்து அங்கு பெரிய argument எல்லாம் பண்ணி, practical-ஆக சிதம்பரத்தின் மஹிமையை, சைவ ஸித்தாந்தத்தை எல்லாம் quote பண்ணி, அந்த முக்கியத்துவத்தை நிர்ணயம், நிரூபணம் செய்வதற்காகவே தயாராகிவிட்டு, அங்கு போய் நின்று கொண்டிருக்கின்றேன்.
ஆனால் அவர் ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார்.
நான் அங்கு வந்து தீர்வைத் தேடிப் போகவில்லை, பிரச்சினைகளுக்காகத் தயாராகி போய்கொண்டிருக்கிறேன். அப்பொழுது நான் ரொம்ப ஏமாந்து போய் கேட்டேன். அதாவது என் முகத்தில் ஏமாற்றத்தைப் பார்த்துவிட்டு, என்னுடைய பாட்டனார் கேட்டார், ''என்னப்பா, என்ன? அதான் நீ போவதற்குத்தானே ஏற்பாடு பண்றேன். பணம் எதுவும் வேணுமா? கை செலவுக்கு இந்தா பணம் வேண்டும் என்றால் வைத்துக்கொள்'' என்று 10 ரூபாயை எடுத்து டேபிளில் வைத்தார். அந்த காலத்தில் பத்து ரூபாயே ரொம்ப பெரிய விஷயம்.
நான் உடனே, ''இல்லை தாத்தா, நீ என்னைப் போகக்கூடாதுன்னு சொல்லுவ, கேள்வியெல்லாம் கேட்பேன்னு, உன்கிட்ட பேசணும் என்பதற்காக நான் ரொம்ப details, ரொம்ப நிறைய யோசிச்சுட்டு வந்துட்டு இருந்தேன். நீ ஒரே வினாடியில போ-ன்னு சொல்லிட்டேயே?" என்றேன்.
அவர் குனிந்துகொண்டே, ''உன்கிட்ட இப்ப பேசுறதுக்கெல்லாம் யாருக்கும் நேரமில்ல. நீ இந்த கோலை வெச்சிக்கிட்டு, நீ நந்தனார் சினிமாவ பார்த்துட்டு, அவர மாதிரியே இந்த கோலை வெச்சிட்டு சுத்தும்போதே எனக்கு நல்லா தெரியும். பத்து நாள் நீ நந்தனார் பைத்தியம் பிடிச்சி தான் சுத்திட்டு இருப்ப. அதனால உன்கிட்ட இப்ப என்ன பேசணும்னாலும் நீ மொத்தத்தையும் படிச்சது, யோசிச்சது, கேட்டது மொத்தத்தையும் என்மேல கொட்டுவ. இப்ப எனக்கு அதுக்கெல்லாம் நேரம் இல்ல, கிளம்பு'' என்று சொல்லிவிட்டார்.
உண்மையில் நான் என்ன பண்ணிருந்தேன் என்றால், அந்த படத்தைப் பார்த்துட்டு என்னுடைய பாட்டி… அவர்கள் வயதானவர்கள் என்பதனால், கோல் ஊன்றி நடப்பார்கள். அவர்கள் 103 வயது வாழ்ந்தார்கள். அவர்களுடையக் கோலை பிடுங்கிக்கொண்டேன். அது, ''டேய்... டேய்... நான் நடக்கிற கோல்டா'' என்று சொல்கிறது. நான்.. ''ஆ... நீ அப்பறம் நடந்துக்கோ. நான் சிதம்பரம் போகணும்'' என்று சொல்லிவிட்டு அவர்களுடையக் கோலை பிடுங்கிக்கொண்டேன். ஏனென்றால், அதில் நந்தனார் கோல் வைத்திருகின்றார். அந்த கோலில் காப்பு இருக்கும். அதே மாதிரி போட்டு, பிறகு எடுத்து வைத்துவிட்டேன். ஊரில் கொல்லன் கடைக்குப் போய், அந்த ஆசாரிகள்... விஸ்வகர்மாவினுடைய கடை இருக்கும். அவர்களுடையக் கடைக்குச் சென்று, அதே மாதிரி அந்தக் கோலுக்கு மேலே கீழே காப்பெல்லாம் போட்டு, அதே மாதிரி ஒரு towel-ஐக் கட்டிக்கொண்டு, திருநீறு பூசிக்கொண்டு usual-லாக பெரிய ருத்ராக்ஷ மாலை போட்டிருப்பேன். அதை எடுத்துவிட்டு, நந்தனார் போட்டிருக்கின்ற மாதிரி ஒரே ஒரு ஒற்றை ருத்ராக்ஷத்தைக் கட்டிக்கொண்டு, அந்த கோலை கையில் சொருகிக்கொண்டு, தாத்தாவைப் பார்ப்பதற்கே அதோடு தான் போனேன். போய், 'நான் சிதம்பரம் போகணும்' என்றேன்.
என்ன சொல்ல வருகிறேன் என்றால், அந்த வயதிலேயே எனக்கு அவர்கள் அளித்த vocabulary-கள், inner dialogue. அது எனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய நன்கொடையாக நான் உணருகிறேன்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், பிறப்பால் உயர்வும், தாழ்வும் கிடையாது. பிறப்பால் வருகின்ற ஜாதியினால் வருகின்ற எந்த கர்வமோ, அஹங்காரமோ, பெருமையோ, pride--ஓ எனக்குக் கிடையாது ஐயா. ஆனால் 'இனிமையாக என்னை வளர்த்தார்களே' என்கின்ற அந்த வளர்ப்பிற்காக, அந்த குலத்திற்கும், குடும்பத்திற்கும் என்றென்றும் நன்றி கடன்பட்டவனாக இருக்கின்றேன்.
அதனால்தான் மறக்காமல் எப்பொழுதெல்லாம் முடியுமோ, அப்பொழுதெல்லாம் அவர்களுடைய பெயரையும், அவர்களுடைய வாழ்வு, அவர்கள் என் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தையும் பதிவிட்டுக்கொண்டே இருக்கிறேன் ஐயா.
ஏனென்றால், இந்த காலத்தில், இந்த மாதிரி குழந்தைகள் மீது நேரத்தைச் செலவிடுகின்ற பெரியோர்களுடைய.. அதாவது பெரியோர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று நான் சொல்ல மாட்டேன். பெரியோர்கள் பக்கத்தில் குழந்தைகள் வாழுகின்ற வாய்ப்பு குறைகிறது என்று சொல்ல வருகின்றேன். அது இல்லாமல் பெரியோர்களோடு குழந்தைகள் இருக்குமானால், பெரியோர்களிடம் time spend பண்ணினார்கள் என்றால், அந்த குழந்தைகள் ரத்தினங்களாக உருவாகும். மிக உயர்ந்த தலைவர்களாக உருவாகுவார்கள்.
School-ல் போய் படிப்பதெல்லாம் வேலைக்கு போய் வீணாக போகும். வீட்டில் உட்கார்ந்து தானாக home schooling-ல் படித்து உருவாகும் குழந்தைகள் எல்லாம், தலைவனாக மாறும். அதனால், தைரியமாக குழந்தைகளுக்கு home schooling பண்ண ஆரம்பியுங்கள். தன்னுடைய தனித்துவத்தைக் கண்டறிந்து, அந்த குழந்தை தலைவன் ஆக வேண்டும். அதற்குச் சரியான inner dialogue கொடுப்பதற்கு இந்த தேவாரம், திருவாசகம் எல்லாம் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
மாயை! இப்பொழுது மாயைக்கு வருவோம். எது இல்லாதது, ஆனால் இருப்பதைப் போன்ற அனுபவத்தை நமக்குள் ஏற்படுத்துவது. 'ரஜ்ஜு ஸர்ப ந்யாயம்' என்று சொன்னேன். அதாவது கயிற்றின் மீது பாம்பைக் காணும் அனுபவம்.
இது மாதிரி இன்னும் பல உதாரணங்கள் கொடுத்துக்கொண்டே போகலாம். வாழ்க்கையில் இந்த மாதிரி எது எதெல்லாம், 'இல்லாததாய்' ஆனால் 'இருப்பதாய்' உங்கள் மீது அனுபவத்தை ஏற்படுத்துகிறதோ அது எல்லாமே மாயை!
சற்று ஆழ்ந்து பார்த்தீர்களானால், உங்க வாழ்க்கையில், உட்கார்ந்து tick பண்ணி, tick பண்ணி, tick பண்ணி, tick பண்ணி, tick பண்ணி பார்த்தீர்களானால், practical-ஆக எல்லாமே மாயையில்தான் போய் முடியும் ஐயா. வரம்புக்கு உட்பட்ட எல்லாவற்றினுடைய இருப்பும் - வெளிப்படும் ப்ரதாநம், அதனுடைய வெளிப்பாடுகளுக்கும், ப்ரதாந காரணம் மாயை.
இந்த மாயையினுடைய இரண்டு dimension இருக்கின்றது: 'ஆவரணம், விக்ஷேபம்' என்று இரண்டு இருக்கின்றன. ஆவரணம் என்றால் மறைத்தல். அதாவது இல்லாத ஒன்றை இருப்பதாய் பார்த்தல். பார்த்தீர்கள் என்றால், அதாவது கயிறு, கயிற்றின் மீது பாம்பைப் பார்த்து, பாம்பாகத் தெரிகின்ற நேரத்திலே நடக்கின்ற நிகழ்வு - ஆவரணம், மறைத்தல். விக்ஷேபம் - பிரதிபலித்தல் என்றால், கயிறை கயிறாகவேப் பார்ப்பது. ஆனால் அப்பொழுதும் அது மாயைதான்.
அதற்கு வேதாந்தத்தில் இன்னொரு உதாரணம் சொல்லுவார்கள்: அதாவது எரிந்த நிலையில் இருக்கிற கயிறு. அது எரிந்துவிட்டது, அந்தக் கயிறை எடுத்து கட்டவெல்லாம் முயற்சிக்க முடியாது. அது சாம்பல், ஆனால் கயிறு வடிவத்திலேயே இருக்கும். அதை 'கயிறு' என்று நினைத்துக் கொண்டிருப்பது. அந்த கயிறு மீது பாம்பைப் பார்ப்பது. அந்த கயிறின் மீது…. அதாவது எரிந்து போன கயிறு. ஆனால் கயிறு வடிவத்திலேயே அந்த சாம்பல் இருக்கும். அந்தக் கயிற்றை பாம்பாகப் பார்ப்பது ஆவரணம். அதை கயிறாகப் பார்ப்பது விக்ஷேபம். 'அது கயிறே இல்லை. வெறும் சாம்பல் தான்' என்று புரிந்து கொள்வது, அதாவது அதை மிதித்துப் பார்த்து, 'அது சாம்பல்தான். அதை வைத்துக் கட்டக்கூட முடியாது. பந்தப்படுத்துவதற்கு உபயோகம் ஆகாத கயிறு. கயிறைப்போல் இருக்கும், கயிறின் குணங்கள் ஏதும் இல்லாதது' என்று புரிந்துகொள்வது அனுபூதி.
இது ஆவரணம், விக்ஷேபம், அனுபூதி என்கின்ற மூன்று நிலை.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், அனுபூதியில்கூட, பரமானுபூதி வாய்த்த பிறகுதான் மாயையைத் தாண்டி நாம் இருக்க முடியும். அதுவரை முதல் நிலை அனுபூதி கூட மாயைக்கு உட்பட்டதுவே.
அடுத்தது கலை: இந்த 36 தத்துவங்களிலே அடுத்ததாக வருகின்ற வித்யா தத்துவம் - கலை. கலை என்றால், வரம்பிற்கு உட்பட்டப் படைப்பாற்றல். முதல் வரம்பு - 'கஞ்சுகம்' என்று சொல்கிறார்கள். அந்த 'கஞ்சுகம்' என்ற வார்த்தை என்னவென்றால், அந்த restricted... அதாவது பெருமான் வந்து, சகல கலைகளையும் உடையவன். பெருமான் வந்து சகலத்திற்கும் சகலமும் உடையவன். சகல சக்திகள், சகல வல்லமைகள், சகல ஜ்ஞாநம், சகலமும் உடையவன். அதில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை… அதாவது யார் எதிர் நின்று எதிரியாகப் போரிட முயன்றாலும், காணாமல் போகச் செய்துவிடுவான் என்கின்ற ஒரு வல்லமை. அல்லது யார் ஜ்ஞாநத்தைத் தேடி அவர் திருவடியில் ஶரண் புகுந்தாலும், ஜ்ஞாநத்தை அளிப்பவன். அது ஒரு வல்லமை. இந்த ஒரு வல்லமைகளை, குறிப்பிட்ட வரம்புக்குட்பட்ட வல்லமைகளை, 'கலை' என்ற வார்த்தையில் சொல்லலாம். வரம்புக்குட்பட்ட வல்லமைகள். வரம்பிற்குட்பட்ட திறன்கள். அதை 'கலை' என்று சொல்லலாம்.
அதனால்தான் நாம் சொல்லுவோம் ஆயக்கலைகள் 64 என்று. வீணை வாசித்தல்… ஒவ்வொரு கலை இருக்கிறது பாருங்கள். என்ன... Scent உருவாக்குவதில் இருந்து… அதாவது வாசனைத் திரவியத்தை உருவாக்குவது ஒரு கலை. மலர் தொடுத்தல் ஒரு கலை, ஆபரணங்கள் செய்தல் ஒரு கலை, இந்த மாதிரி ஆய கலைகள் 64 இருக்கின்றன.
ஆனால் பரமஶிவனுக்கு வேறு வேறு விதமான கலைகள் இருக்கிறது. பரம்பொருளுக்கு, பரம்பொருளுடைய கலைகள் வேறு வேறு. இநத 36 தத்துவங்களில், இந்த 'கலை' என்கின்ற தத்துவம் ஒன்று.
அடுத்தது வித்யை: வித்தை என்பது ஸர்வஜ்ஞத்துவம். அதாவது எல்லாம் அறிந்தவராக இருப்பது ஸர்வஜ்ஞத்துவம். ஒரு குறிப்பிட்ட அறிவை சொல்லும்பொழுது, 'வித்யை' என்று சொல்லுவோம். பராவித்யை, அபராவித்யை என்று ஒரு குறிப்பிட்ட விஷயங்களை அறிவதாகவும், மற்றவற்றை அறியாமல் இருக்கின்ற வரம்புக்குட்பட்ட ஜ்ஞாநத்தின் வெளிப்பாட்டை, 'வித்யை' என்று சொல்கின்றோம்.
நியதி: 'நியதி' என்றால், காரண காரிய வரம்புகளுக்குள்ளே இயங்குகின்ற அந்த தன்மையை நியதி என்று சொல்கிறோம்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: இப்பொழுது உதாரணத்திற்கு மரபு வேதாந்தம் படித்தால், அதிலும் monasteries-ல், மடங்களில், பீடங்களில் பாரம்பரியமாக படித்தோமானால்… நிறைய இந்த மரபு வேதாந்தங்கள், இந்த மரபு வேதாந்தம் சம்பந்தப்பட்ட நிறைய jokes... ஏனென்றால், பொதுவாக ஸந்ந்யாஸிகள் நிம்மதியான வாழ்க்கை வாழ்பவர்கள் ஐயா. நீங்கள் நினைப்பதுபோல் suffering-ஆன வாழ்க்கை கிடையாது ஐயா. ஸந்ந்யாஸத்தை மட்டும் conscious-ஆக முடிவெடுத்தோமானால், அது ஒரு இனிமையான வாழ்க்கை.
அதிலும் எனக்கு, சிறுவயதிலேயே திருவண்ணாமலையில் அருமையான நல்ல ஜ்ஞாநிகள், ஸந்ந்யாஸிகள் அவர்களுடைய திருவடியிலே வாழுகின்ற புண்ணியம் கிடைத்தது ஒன்று. அவர்களாலே பயிற்றுவிக்கப்படுகின்ற அருள், கருணை, நன்மை எல்லாம் கிடைத்தது ஒன்று.
அதுபோக 16, 17 வயதிற்குள்ளாகவே ராமகிருஷ்ண மடத்தோடு தொடர்பு ஏற்பட்டு, அங்கு கொஞ்ச நாள் இருந்து, ஶாஸ்த்ரம் படிக்கின்ற வாழ்க்கையை, ஸந்ந்யாஸ வாழ்க்கையைப் பற்றி பயிற்சி எடுத்துக் கொள்ளுகின்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது. இது பெருமான் அளித்த பேரருள். ராமகிருஷ்ணராய் வெளிப்பட்டு வந்துதித்த பரம்பொருள் அளித்த பெருங்கருணை.
ரொம்ப இனிமையான ஒரு வாழ்க்கைமுறை ஐயா. அங்கு சொல்லுவார்கள்: 'ப்ரஹ்ம ஸத்யம் ஜகத் மித்யா' - பரம்பொருள் ஒன்றே சத்தியம், இந்த உலகமெல்லாம் மாயை. யாராவது ஒரு ஒரு ப்ரஹ்மசாரி ரொம்ப பசியோடு இருப்பவர், 'காவோர்போரே' என்பார். ''இதெல்லாம் சாப்பிட்ட பிறகு - பசி வரும்பொழுது உலகம் தான் சத்தியம், உணவுதான் சத்தியம்.'' -அதாவது ஒரு நியதிக்கு உட்பட்டு, காரண காரியத்திற்கு உட்பட்டு… பசி வந்தால் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். இந்த shared reality, நாம் எல்லோரும் share பண்ணிக்கொள்கின்ற இந்த reality-ல் இருக்கின்ற காரண காரிய நியதிகள், இது ஒரு தத்துவம்.
உதாரணத்திற்கு, நீங்கள் 'நானே பரம்பொருள்' என்கின்ற அனுபூதியை அடைந்திருந்தாலும், இந்த நியதிக்குள்ளே இருக்கும்பொழுது, இந்த நியதிக்குள்தான் சிலவற்றை இயங்க வேண்டியிருக்கிறது. அதனால் இந்த நியதி வந்து, கட்டுப்படுத்தப்பட்ட, ப்ரபஞ்சத்தின் விதிகளுக்கு உட்பட்ட ஸ்வதந்தரம். அதுதான் இந்த நியதி. அது ஒரு தத்துவம்.
அடுத்து காலம்: முதல் இரண்டு நாள் ஸத்ஸங்கங்களில், இந்த காலம் பற்றி ரொம்ப விரிவாகச் சொன்னேன். காலத்தைக் கடந்த காலாதீதராக இருக்கிறவராகிய நீங்கள், 'காலம்' என்பதற்குள் இயங்குகிறீர்கள் இல்லையா? நீங்கள் எதற்குள் வரம்பமைத்து இயங்குகிறீர்களோ அந்த உங்களுடைய வரம்பு 'காலம்' என்கிற தத்துவமாக சொல்லப்படுகிறது.
காலாதீதம் - பதி காலத்திற்கு உட்பட்டு இருப்பது - பசு. தன்னைத்தானே காலத்திற்கு உட்பட்டதாக கற்பனை செய்துகொண்டு, மயங்கிப் போய் கிடப்பதுதான் - பாசம்.
அடுத்தது ராகம்: ராகம் என்றால் ஆசையோ, ஆசையினால் அடையப்படும் பொருளோ என்று தனியாக இல்லாமல் முழுமையாக இருப்பது. எல்லாம் உள்ள முழுமையாக இருப்பது பரம்பொருள்.
முழுமையாக இருப்பது பதி. ஆனால் தன்னை குறையாக நினைத்துக் கொண்டு ஏதோ ஒன்று தனக்கு இல்லை என்றும், இல்லாதவற்றை அடைய வேண்டும் என்று நினைக்கின்ற இந்த நிலை - ராகம்.
ராகாதீதனாக இருப்பது - பதி. ராகத்தோடு, தேவையோடு இருப்பது - பசு. தேவையைக் கடந்த பதியாக இருக்கின்ற நாம், 'நாம் குறைபட்டவர்கள், தேவை உள்ளவர்கள்' என்று நம்மை நாமே மயக்கத்தில் ஆழ்த்திக்கொண்டு, தேவைகளையும் ஆசைகளையும் இருப்பதாகத் தேடுவது - பாசம்.
வரம்பு, தன்னை வரம்பிற்கு உட்பட்டவனாக நினைத்துக்கொண்டு, மற்றவற்றைத் தேடுகின்ற இந்த நிலை 'ராகம்' சொல்லுவோம். இந்த ராகம் என்கின்ற இது ஒரு தத்துவம்.
புருஷன்: இப்பொழுது நான் சொன்னேன் இல்லையா? ராகம், காலம், நியதி - இவைகள் எல்லாவற்றையும், இவைகள் எல்லாவற்றினாலும் கட்டப்பட்ட ஆன்மா 'புருஷன்' என்று சொல்லப்படுகிறது.
பதி இந்த ஐந்தாலும் கட்டப்பட்டால், 'பசுவாய்' தன்னை உணருகின்றான். இப்பொழுது இதில் சில ஸித்தாந்தங்கள் மாறுபடுகின்றன. 'பசு என்றுமே பதியாக முடியாது - பாசம் கழிந்தாலும்' என்று ஒரு ஸித்தாந்தம். Classical சைவத்தில் 'பசு தன் பாசம் எல்லாம் இழந்தால், பதியோடு ஸாயுஜ்யம் அடைய முடியும்' என்று சொல்கிறார்கள். இப்பொழுது அதெல்லாம் பாண்டித்யம், arguments... அதெல்லாம் ஒரு பக்கம் போகட்டும்.
நான் இந்த ஸத்யங்களை, உள்ளது உள்ளபடி என்னுடைய அனுபூதியிலிருந்து சொல்கின்றேன்.
ஆழ்ந்து கேட்டுக்கொள்ளுங்கள்: இப்பொழுது இந்த ஏழு வித்யா தத்துவங்களைப் பற்றி அடிப்படையான ஒரு அறிமுகம் கொடுத்தேன். இந்த ஏழு வித்யா தத்துவங்களையும் அனுபூதியிலிருந்து புரிந்துகொள்வதற்கு, அனுபூதியாக அறிந்துகொள்வதற்கு, இந்த ஏழு வித்யா தத்துவங்களையும் கடந்த பரமானுபூதியை அடைவதற்கும், அந்த பரமானுபூதி நிலையில் இருந்து இந்த ஏழு வித்யா தத்துவங்களையும், தன் வாழ்க்கையில் உபயோகப்படுத்தி விளையாடுவதற்கும், இந்த ஏழு வித்யா தத்துவங்களையும் கடந்த அனுபூதியில் நீங்கள் இருந்தீர்களானால், இந்த ஏழையும் வைத்து விளையாட முடியும். அதனால் அந்த மாதிரி விளையாடுபவர்களுக்குத்தான் வாழ்க்கை 'லீலை'!
அந்த மாதிரி விளையாடுகின்ற அவதார புருஷர்கள், ஜ்ஞாநிகளுக்குத்தான்... அவர்களுடைய வாழ்க்கையை நாம் 'லீலை' என்று சொல்வோம். ராமர் வாழ்க்கை 'ராம லீலா' என்றுதான் சொல்வோம். க்ரு'ஷ்ணர் வாழ்க்கை 'க்ரு'ஷ்ண லீலா' என்றுதான் சொல்வோம். ஏனென்றால், இந்த ஏழுமே வித்யா தத்துவங்கள். ஏழும் அவர்களுக்குக் கீழே கட்டுப்பட்டு இருந்தது. அவர்கள் இந்த ஏழையும் வைத்துக் கொண்டு விளையாடினார்கள். இந்த ஏழையும் தாண்டிய பரமானுபூதியிலே இருந்தார்கள். இந்த ஏழையும் வைத்துக் கொண்டு விளையாடினார்கள்.
ஏழையும் தாண்டிய பரமானுபூதியில் இருந்துகொண்டு, இந்த ஏழையும் வைத்துக்கொண்டு விளையாடுகின்றவர்களைத்தான் 'அவதார புருஷர்கள்' என்று சொல்கின்றோம். அவர்களுடைய வாழ்க்கைதான் 'லீலை' என்று சொல்கின்றோம்.
இப்பொழுது இந்த ஏழையும் தாண்டி பரமானுபூதியில் இருப்பது எவ்வாறு? உங்கள் வாழ்க்கையே லீலையாக வாழ்வது எவ்வாறு? என்று அந்த ஸத்யத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
முதலில் புரிந்துகொள்ள வேண்டியது, அந்த பரமானுபூதி மிகவும் சுலபம். இதுதான் good news.
விளக்கி மணிக்கணக்காக நான் சொல்கிறேன் என்பதனால், 'ரொம்ப கஷ்டம், பிரச்சனை' என்று நினைக்காதீர்கள். கிடையாது!
எப்பொழுது scroll பண்ணாமல் relaxed-ஆக வந்து உட்கார்ந்து கேட்க ஆரம்பித்துவிட்டீர்களோ, அப்பொழுதே 99.99999 சதவீத கஷ்டத்தை நீங்கள் தாண்டிவிட்டீர்கள். இதற்குமேல் கஷ்டமே இல்லை. வாழ்வது மட்டும்தான். அது ரொம்ப சுலபம். ஏனென்றால், ஒரே ஒரு வாரம் ஜிம்முக்குப் போவதுதான் கஷ்டம் ஐயா. ஒரு வாரத்தில் அந்த effect-ஐ பார்க்கத் துவங்கிவிட்டீர்களானால், அதற்குப் பிறகு அந்த result inspire பண்ணி, உங்களை regular-ஆக போக வைத்துவிடும்.
அதே மாதிரி முதலில் ஒரு நான்கு-ஐந்து அனுபூதி அனுபவங்கள், வாழ்க்கையில் அந்த miracles, manifestations இதெல்லாம் நீங்கள் பார்க்கின்ற வரைக்கும்தான் நான் push பண்ணுகிறேன் ஐயா. அதற்குப் பிறகு, அந்த அனுபூதி ருசி தானாவே உங்களை, பரமானுபூதியை ரசிக்கவும், ருசிக்கவும், புசிக்கவும் வைத்து, பெருமான், தானே, 'தானாய்' வெளிப்பட்டு தன்மயமாய் நிறைந்து ஆத்மா... 'ஆத்மா' என்றால் தனக்கு மிக நெருக்கமானது, தானே அது! என்று பொருள். அந்த ஆத்மாவினுற்குள் பெருமான் தானாய் வெளிப்பட்டு, 'நான்' என்று நீங்கள் நினைக்கிற அந்த ஆத்மா 'பெருமானாய்' வெளிப்பட்டு, பெருமான் அதில் 'தானாய்' வெளிப்பட்டு பரமானுபூதியில் நிலைத்திருப்பீர்கள்.
முதலில் தெரிந்துகொள்ளுங்கள், ஆன்மீக வாழ்க்கையில் இந்த வளர்ச்சி - growth எல்லாம் கிடையாது. Slide தான். இந்த landslide victory என்று சொல்கிறார்கள் இல்லையா, அந்த மாதிரிதான்.
Just ஒரு சின்ன விஷயத்தை நீங்கள் செய்தீர்களானால் போதும், கீதையில் க்ரு'ஷ்ணர் சொல்றார் பாருங்கள்: 'ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோபயாத்' என்று.
சிறிதளவு கடைபிடியுங்கள்... உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும். சிறிதளவு செய்யுங்கள்... உங்கள் வாழ்க்கையை... வெற்றி அளித்துவிடும்.
இந்த வித்யா தத்துவங்கள் ஏழும் கடந்து, பரமானுபூதியில் இருப்பது எவ்வாறு?
புரிந்துகொள்ளுங்கள், முதல் ஸத்யம் சொல்கின்றேன் - 'சுலபம்'.
ஐயே அதி சுலபம். ஆன்ம வித்தை ஐயே அதி சுலபம்.
இரண்டாவது கருத்தைக் கேளுங்கள், நாம் எல்லோருமே ஒரு vibration. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் எல்லோருமே ஒரு vibration. நான் கதை சொல்லவில்லை அல்லது ஏதோ ஒரு உவமையைச் சொல்லவில்லை. புரியாத ஒரு மிகப்பெரிய quantum physics ஸத்யங்களைச் சொல்லவில்லை. நிதர்சனமாக fact-ஐ சொல்கிறேன் ஐயா.
நாம் எல்லோருமே ஒரு vibration, ஒரு energetic-க்கான frequency. இதை முதலில் புரிந்துகொண்டீர்களானால்தான், நம்மை நாம் மாற்ற முடியும் என்கின்ற தெளிவே வரும்.
நீங்கள் உங்களுடைய மொத்த கடந்தகால பழக்கவழக்கங்களின் தொகுப்போ, மனப்பழக்கங்களின் தொகுப்போ, நீங்கள் உங்களுக்கே உங்களைப் பற்றி சொல்லிக்கொள்ளுகின்ற கதைகளின் தொகுப்போ அல்லது உங்கள் உடலைப் பற்றி நீங்கள் வைத்திருக்கின்றக் கருத்துக்கள், உங்களுடைய இயல்தல், இயலாமை, செய்ய இயலும் ஶக்தி, ஶக்தியின்மை, இவைகளின் தொகுப்போ கிடையாது ஐயா.
நீங்கள் ஒரு vibration.
உங்களுடைய உயிர், consciousness, real-ஆன energetic signals அனுப்பிக்கொண்டே இருக்கின்றது. Radiate பண்ணிக்கொண்டே இருக்கின்றது. நீங்கள் நம்பினாலும் நம்பவில்லை என்றாலும் இதுதான் உண்மை. அந்த signals-க்கு ப்ரபஞ்சம் respond பண்ணிக்கொண்டே இருக்கின்றது. இதுதான் நடக்கின்றது ஐயா.
நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு, ''இதையெல்லாம் என்னால் யோசிக்க முடியாது, அய்யய்யோ… நான் என் வாழ்க்கையே நரகமாக்கிக்கொள்கின்ற மாதிரி signal அனுப்பிக்கொண்டிருக்கின்றேனா?... இதெல்லாம் யாருடா யோசிக்கிறது, யாருடா பண்ணுகின்றது, இதெல்லாம் சரி பண்ண முடியுமா, சரி பண்ணவே முடியாதுபோல இருக்கே, இவரு பெரிய பெரிய கதையா சொல்றாரே, இவர் பேச்சை கேட்டா கொஞ்ச நேரம் நிம்மதி வரும்னு வந்து உட்கார்ந்தா அவர் இருக்கிறத விட ஏகப்பட்ட பிரச்சினைகளை கொண்டு வந்து விடுறாரே'' என்று புலம்பாதீர்கள்.
ரொம்ப simple. நீங்கள் ஒரு frequency என்று புரிந்துகொண்டீர்களானாலே, அந்த frequency-யோட coherence, clarity, sweet-ஆக இனிமையாக வாழ்வதுதான் உங்களுடைய base line. அதுதான் உங்களுடைய ஸ்வபாவம். Irritate ஆவது, கோபம் வருவது - இதெல்லாம் உங்களுக்குள் நடக்கின்ற ஒரு திரிபு. ஆனால் அது உங்களுடைய இருப்பு நிலை கிடையாது. Base line கிடையாது. இந்த emotional baseline அது கிடையாது.
உங்களுடையemotional baseline - பரமஶாந்த நிலை.
இது புரிய ஆரம்பித்ததென்றால், திரும்ப திரும்ப திரும்ப… வேறு ஒன்றும் வேலை இல்லை என்றால், பரபரவென்று நீங்களே போய் பைத்தியக்காரத்தனமாக அந்த பேய் படத்தைப் பார்த்துவிட்டு அல்லது வேறு ஏதாவது இந்த adrenalin rush-க்காக அலைந்துகொண்டு, இந்த லூசுத்தனமான video game... பரபரபரவென்று, அதாவது எப்படி சிரங்கை சொறிந்து சொறிந்து ஆறவிடாமல் பெரும் புண்ணாக்கி, உங்களை நீங்களே நாசமாக்கிக்கிறீங்களோ, அந்த மாதிரி மனச்சிரங்கை, மன அரிப்பை சொறிந்து கொண்டு, பெரும்படையாக மாற்றுகின்ற entertainment-க்கு எல்லாம் போகாமல்… உங்கள் emotional baseline வந்து பரம ஶாந்தம். அமைதியாக, sweet-ஆக பரம ஶாந்தத்தில் இருப்பதுதான் உங்களுடைய emotional baseline-என்று புரிந்துகொள்வீர்கள் ஐயா.
நீங்கள் ஒரு conscious frequency. நீங்கள் என்ன frequency-யை emit பண்ணிக்கொண்டே இருக்கின்றீர்களோ, அதற்குதான் ப்ரபஞ்சம் respond பண்ணும்.
நன்றாக புரிந்துகொள்ளுங்கள்: உங்கள் கண்ணாடி எந்த அளவிற்கு வேகத்தோடு உங்களைப் பிரதிபலிக்கின்றதோ, அதைவிட வேகத்தோடும், sensitive-வாகவும் ப்ரபஞ்சம் உங்களுக்கு respond பண்ணிக்கொண்டே இருக்கிறது.
இப்பொழுது நிறைய கேள்விகள் வரும். கேள்விகள் வந்தால்தான் ஸத்ஸங்கத்தைக் கேட்கின்றீர்கள் என்று அர்த்தம். இல்லையென்றால், எங்கேயோ போய்விட்டீர்கள். அந்த கேள்விகளுக்கெல்லாம் Ask Nithyananda AI--ல் போய் உட்கார்ந்து ஒவ்வொன்றாகக் கேளுங்கள், elaborate- ஆக அந்த AI பதில் சொல்லும்.
இப்பொழுது நான் உங்களுக்கு என்னென்னவெல்லாம் கேள்வி வருமோ, மொத்தமாக அவைகளுக்கான விளக்கத்தையும் கொடுக்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் release பண்ணுகின்ற frequency, உங்களுடைய vibration - இதற்குத்தான் இந்த உலகம், இந்த ப்ரபஞ்சம் respond பண்ணுகிறது. உங்கள் வாழ்க்கையில் நடக்கின்ற அனைத்தும், அதாவது உங்கள் வாழ்க்கையே நீங்கள் emit பண்ணுகின்ற frequency, vibration-க்கு, உங்களுடைய conscious vibration, உங்களுடைய conscious frequency-க்கு ப்ரபஞ்சம் respond பண்ணுவதுதான் உங்கள் வாழ்க்கை.
இது magical law இல்லை ஐயா, இதுதான் natural law - தர்மம். இதுதான் தர்மம் ஐயா 'ஸ்வதர்மம்' என்றால், நாம் எல்லாம் நினைத்துக்கொள்கின்றோம், எனக்கு விதிக்கப்பட்ட கடமையை நான் செய்வது ஸ்வதர்மம் என்று.
ப்ரபஞ்சத்தோடு, ப்ரபஞ்சத்தின் தர்மத்தை புரிந்துகொண்டு, என்னுடைய இருப்பை அந்த coherence-உடன், என்னுடைய குறிக்கோளை... நான் என்னுடைய குறிக்கோளை ப்ரபஞ்சம் mirror பண்ணுவதற்குத் தேவையான frequency-யை conscious-ஆக emit பண்ணிக்கொண்டிருப்பதுதான் - ஸ்வதர்மம்.
நான் அடைய வேண்டிய குறிக்கோளாக நான் எதை எண்ணுகின்றேனோ, conscious-ஆக முடிவு செய்கின்றேனோ, அது தர்மமாக இருக்கலாம், அர்த்தமாக இருக்கலாம், காமமாக இருக்கலாம், அர்த்தம் என்றால், பொருள். பொருள் வளமாக இருக்கலாம், காமமாக இருக்கலாம், சுகங்களாக இருக்கலாம்... என்ன வேண்டுமானாலும் சரி. நான் அடைய வேண்டும் என்று நினைப்பதை ப்ரபஞ்சம் mirror பண்ணுகின்ற மாதிரி, கொடுக்கிற மாதிரி, resonate பண்ணுகின்ற மாதிரி, கொடுக்கின்ற மாதிரியான frequency, அந்த vibration-ல், அந்த conscious frequency-யை நான் emit பண்ணுகின்றதுதான் - ஸ்வதர்மம்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: சில நேரத்தில், இந்த frustration வந்து பார்த்தீர்களானால், உங்கள் emotional baseline-ஐ அசைத்துப் பார்த்து, ''உன்னுடைய emotional baseline ஒன்றும் ஶாந்தம் எல்லாம் கிடையாது. நான் தொடர்ந்து irritated -ஆக, agitated -ஆக, angry -யோடு இருப்பவன்தான். இல்லை, நான் எப்பவும் mood-swing-ல் இருப்பவன்தான்'' என்று சொல்லும். சிலநேரத்தில் நீங்கள் பார்த்தீர்களானால், அந்த மாதிரி நீங்கள் நம்ப ஆரம்பிக்கும்பொழுது, உங்கள் மீதே உங்களுக்கு confidence போய்விட்டு, 5 வருஷம், 10 வருஷம் நீங்கள் build பண்ண வாழ்க்கையை, relationship-ஐ ஒரு வினாடியில் நாசமாக்கிவிடுவீர்கள். Especially பெண்களுக்கு mood swing வரும்போது… அதாவது உங்கள் emotional baseline வந்து ஒரு ஶாந்தம், பக்தி, ஶ்ரத்தை, sweetness என்பது மறந்து, உங்கள் மீதே confidence போய்விட்டு, உங்கள்emotional baseline மீது confidence போய்விட்டு, நீங்கள் 10 வருஷம், 15 வருஷம் சேர்த்து வைத்த அருமையான வாழ்க்கைமுறை, relationship-ஐ 'பொட்' என்று போட்டு உடைத்துவிடுவது.
அதுதான் தன்னை இழத்தல். மிகப்பெரிய கொடுமை.
கைலாஸவாசிகளுக்கு நான் எப்போதும் சொல்வேன்… பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில்... mood swing வர பெண்களுக்கு, அந்த மூன்று நாட்கள் தனியாக அமர்ந்து த்யானம் செய்வது, யோகா பண்ணுவது, பூஜை பண்ணுவது, ஶாஸ்த்ரங்கள் படிப்பது, ஆன்மீக சாதனைகள் செய்வதெல்லாம் செய்யுஙக்ள். ஆன்மார்த்த பூஜை செய்யலாம் தவறில்லை. பரார்த்த பூஜை பண்ணுகின்ற கோவில்களுக்குத்தான் செல்லக்கூடாது. ஆன்மார்த்த பூஜை எல்லாம் நன்றாகச் செய்யலாம். ஜபம் பண்ணலாம் மற்றும் ஶாஸ்த்ரங்கள் படிக்கலாம். அதை மட்டும் செய்யுங்கள். எந்த விதமான முடிவு, decisions எடுக்காதீர்கள். Office போவது, எந்த decision-னும் எடுக்கக்கூடாது. Office போகக்கூடாது. கைலாஸாவினுடைய எந்த administration, நிர்வாக வேலைகளையும் செய்யக்கூடாது. எந்த விதமான வேலைகளும் செய்யக்கூடாது.
Rest எடுத்துக்கொண்டு, சாப்பிடுங்கள், தூங்குங்கள், த்யானம் செய்யுங்கள், யோகா செய்யுங்கள், பூஜை செய்யுங்கள், ஶாஸ்த்ரம் படியுங்கள், ஸத்ஸங்கம் கேளுங்கள். ஆன்மீக செயல்கள் மட்டும், தன்னைத்தானே, தன்னுடைய emotional baseline-ஐ பரமஶாந்தத்திலே நிலைநிறுத்திக் கொள்கின்ற நடவடிக்கைகளை மட்டும் செய்யுங்கள். அந்த time-ல் நீங்கள் என்ன decision எடுத்தாலும், 10 வருஷம் 20 வருஷம் வாழ்க்கையில் சேர்த்து வைத்ததை, மொத்தத்தையும் மொத்தமாக போட்டு உடைத்துவிடுவோம்.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி, நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டுவந்தான் ஒரு தோண்டி, அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி நந்தவனத்தில் ஓர் ஆண்டி.
இது ஒரு அருமையான பாடல். 'நாலாறு மாதம்' என்றால், பத்து மாதம். 'குயவனை வேண்டி' என்றால், உடலை செய்கின்ற ப்ரஹ்மனை வேண்டி, 'கொண்டு வந்தான் ஒரு தோண்டி' - அது இந்த உடல்தான் அந்த தோண்டி. 'தோண்டி கிடைத்துவிட்டது' என்கிற ஆனந்தத்தில, கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி.
தோண்டி எதற்காக? நந்தவனத்திலே எல்லாச் செடிகளுக்கும், கிணற்றிலிருந்து நீர் எடுத்து, நீர் சொரிந்து, செடிகளை வளர்த்து, மலர்களைப் பறித்து, பெருமானுக்கு அர்ப்பணித்து பரமபதம் அடைவதற்காக, பரம்பொருளை அடைவதற்காக, பரமஸாயுஜ்யத்தை அடைவதற்காக, பரமானுபூதியை அடைவதற்காக தோண்டியை வாங்கி வந்துவிட்டு, தோண்டி வாங்கி வந்த காரணத்தை மறந்து, 'தோண்டி கிடைத்துவிட்டதே' என்கின்ற மிதப்பினாலே, மகிழ்ச்சியினாலே கூத்தாடி கூத்தாடி, கூத்தாடும் வேகத்தில் தோண்டியை போட்டுடைத்தாண்டி என்று... இதைத்தான் நாம் செய்துகொண்டிருக்கிறோம். இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றோம்.
நம்முடைய தமிழ் பழமொழிகளுக்கெல்லாம், பழமொழிகள், இது மாதிரியான ஸித்தர் பாடல்கள் இதற்கெல்லாம் ரொம்ப ஆழமான, அதிஸூக்ஷ்மமான உண்மைகள் உண்டு.
தமிழ் ஒரு அருமையான மொழி ஐயா. பல அடுக்கு... நாம் என்ன frequency-ல் இருக்கின்றோமா, அந்த frequency-யிலேயே புரியும். ஒரே சொற்றொடர், நாம் என்ன frequency-ல் இருக்கின்றோமா, அந்த frequency-க்கு ஏற்ற மாதிரி புரியும். அதுமாதிரியான ஜ்ஞாந மொழி. வெறும் 'செம்மொழி' கிடையாது, 'செய்தவன் மொழி' ஐயா. இருக்கும் இந்த இருப்பையெல்லாம் செய்து வைத்த, எம்பெருமான் இறையனார் தந்த மொழி.
ஆழ்ந்து கேளுங்கள்… மூன்றாவது ஸத்யம்: இந்த உலகம், ப்ரபஞ்சம் உங்களுடைய frequency-க்கும், உங்களுடைய vibe-க்கும், vibration-னுக்கும்தான் respond பண்ணுமே தவிர, நீங்கள் மனதில் நினைக்கிற எதற்கும் respond பண்ணாது.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், முக்கியமாக என்னுடைய பக்தர்கள், சீடர்கள், கைலாஸவாசிகள் எல்லோருக்கும் சொல்லிவிடுகின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள்: மனதில் 'கைலாஸத்துக்கு போகணும்' என்று நினைப்பது, ஆனால் உங்கள் frequency, நீங்கள் emit பண்ணுகின்ற frequency, உங்களுடைய vibration கைலாஸத்திற்கு உரியதாக, உடையதாக, கைலாஸத்தோடு இணைந்ததாக, கைலாஸம் உங்கள் வாழ்வில் வெளிப்படுவதற்கானதாக இல்லாமல் இருந்தால், நானே 'நீங்கள் வர வேண்டும்' என்று எவ்வளவு பாடுபட்டாலும், நடுவில் எவனாவது, ஏதாவது ஒன்று வந்து குறுக்கு சால் ஓட்டி, delay ஆகிக்கொண்டே போகிறது.
இப்பொழுது நான் சொல்கின்ற ரகசியத்தைப் புரிந்துகொள்ளுங்கள்: எப்படி conscious vibration, conscious frequency, conscious energetic signal-ஐ பரமானுபூதி நமக்கு வெளிப்படுகின்ற மாதிரி align பண்ணிக்கொள்வது என்பதைச் சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள்.
நாம் எல்லோருமே, பெரும்பாலானவர்கள், force பண்ணி, pressure பண்ணி, நம் வாழ்க்கையில் ஏதாவது அடைந்துவிட முடியும் என்று கற்பனை செய்கின்றோம். கிடையாது!
நீ வாழ்க்கையை நோக்கி pressure பண்ணால், வாழ்க்கை push back பண்ணும். தேடுவது கிடைக்காது. 'நீ தகுதி உடையவன்... எதற்கு நீ தகுதி உடையவன்??' என்று நீ ஆழமாக புரிந்துகொள்கின்றாயோ, அது கிடைக்கும்.
ஸாக்ஷியை ஸாக்ஷியாக நீ பார்க்கப் பார்க்க, உனக்குள்ளே பார்ப்பானை நீ பார்க்கப் பார்க்க, பார்ப்பவனை பார்க்கப் பார்க்க... உன்னுள் இருந்துதான் இது மொத்தமுமே வெளிப்படுகின்றது' என்று புரியும்பொழுது, எதையுமே அடையவும், வாழவும், பெறவும் தகுதி உனக்குள் மலர்வதனாலே, நீ தேடுவது உன்னைத் தேடி வரும்.
அந்த தகுதியை மலரச் செய்யாமல், எதை தேடினாலும் - நீ தேடுவது ஓடும். நிழல் சுதந்திரம் தேட தேட, நிழல் சுதந்திரமும் இல்லாது, நிஜ சுதந்திரமும் இல்லாது, வாழ்வு கானல் நீராய் காணாமல் போகும்.
நிஜ சுதந்திரத்தைத் தேட தேட - நிஜ சுதந்திரமும் வந்து, நிழல் சுதந்திரமும் வந்து, இரு சுதந்திரமும் ஒன்றாய் சேர்ந்த பர -சுதந்திரத்தில் இருப்போம்.
அதனால், நிஜ சுதந்திரத்தை தேட வேண்டிய அவசியம் இல்லை. பார்ப்பவனை பார்ப்பது யார்? எனக்குள் எல்லாவற்றையும் இந்த நிகழ்த்திக் கொண்டிருக்கின்ற அது எது? அந்த நிகழ்த்திக்கொண்டிருக்கிறது 'நான்தான்' என்று நீங்களே முடிவு செய்யாதீர்கள். அந்த மாதிரி 'நான்' என்றே ஒன்றும் உள்ளே இல்லை. காலி. வெத்துவேட்டு. டுபாக்கூர்.
சும்மா ஏதோ நான்... நான்.. நான்.. நான்... என்று உங்களுக்குள் நடப்பது எதை நீங்கள் பண்ண முடியும், எதைச் செய்வதற்கு உங்களுக்குத் தெரியும்?
என்ன, உங்கள் இதயத்தை அப்படியே correct-ஆக pump அடித்துவிட முடியுமா உங்களால்? அல்லது வெளியில் இருக்கின்ற காற்றை இழுத்து… ஆக்ஸிஜனைப் பிரித்து, கார்பன்டை ஆக்ஸைடை வெளியில் அனுப்பி, இதை உங்களால் பண்ணிவிட முடியுமா?
அடி வயிற்றில் இருந்து வருகின்ற அந்தக் காற்றை, அப்படியே செதுக்கி, சீரமைத்து வார்த்தைகளாக வெளியில் எடுத்துக் கொடுத்துவிட முடியுமா?
இதையெல்லாம் செய்கின்ற 'நான்' யார் என்று தேடுவதேக்கூட மடத்தனம் தான். இதையெல்லாம் செய்வது எது? இதையெல்லாம் அனுபவிப்பது எது? இதையெல்லாம் பார்ப்பது எது? இதையெல்லாம் உணருவது எது? என்று பாருங்கள்.
ரொம்ப அழகாக நெஞ்சுவிடுதூது என்று உமாபதி ஶிவாச்சார்யார் எழுதியது. சின்ன வயதில் எனக்கு இந்த ஸித்தாந்த பாடம் சொல்லிக்கொடுக்கும்பொழுது... நான் முதல்லேயே சொன்னேன் இல்லையா... ஸித்தாந்த பாடம் 14 நூல்கள் திருவாவடுதுறை மடத்தினுடையது, வேதாந்த பாடம் 16 நூல்கள் கோவிலூர் மடத்தினுடைய வேதாந்த பாடம். ஸித்தாந்த பாடம் 14 - சைவ ஸித்தாந்த ஶாஸ்த்ர நூல்கள் 14 என்று சொல்வார்கள். இதுதான் எனக்கு சின்ன வயதில், என்னுடைய ஆச்சார்யர்கள் பாடம் சொன்னார்கள்.
அதில் ரொம்ப அழகான ஒரு பாடல். வைய்யிர கொண்டதொரு காமனுக்கும், கோடனுக்கும், மோகனுக்கும் மண்டு மதமாச்சரியனுக்கும் தின் திரள் சேர் இந்திரியம் பத்துக்கும் ஈரைந்து மாத்திரைக்கும் அந்தமிலா பூதங்கள் ஐந்திற்கும் சிந்தை கவர் மூன்று குற்றம், மூன்று குணம், மூன்று மலம், மூன்றவத்தை என்று நின்று செய்யும் இருவினைக்கும் தோன்றாத வாயு ஒரு பத்திற்கும் மாறாத வல்வினையே யாய கிளைக்கும் அருள் சிந்திக்கும் நேயமாம் இச்சை கிரியை இவை தரித்து அங்கு எண்ணில்லா அச்சம் கொடுமை அவை பூண்டு கச்சரவன் சீரில் நிலை நில்லாது திண்டாடும் பல் கருவி வாரில் அகப்பட்டு மயங்கினேன் நெஞ்சுவிடு... என்று உமாபதி ஶிவாச்சார்யாருடைய ஒரு பாடல்.
சைவத்தின்படி முப்பத்தாறு தத்துவங்களை வேறு வேறு கோணத்திலே விளக்குகின்ற பாடல் இது. அது மெய்கண்டார் ஸம்ப்ரதாயத்தினுடைய சைவத்தின்படி, 36 தத்துவங்களை பற்றி விளக்குகின்ற ஒரு பாடல். ரொம்ப அருமையான பாடல்.
சுத்த வித்தையினுடைய ஏழு தத்துவங்களை தாண்டி, பரமானுபூதியில் இருப்பதற்கான ரகசியத்தை சொல்லுகிறேன் கேளுங்கள்.
பரம்பொருளைகூட, கஷ்டப்பட்டு தேடி, முயற்சி பண்ணி, பயிற்சி பண்ணி அடைவது சாத்தியமே இல்லை.
உங்களுடைய frequency-யும், conscious vibration-னும், energetic frequency -யும், பரம்பொருளோடு… பரம்பொருள் வெளிப்படுவதற்கான தகுதி உடையதாக மாறும்பொழுது, பரம்பொருள் வெளிப்படுகிறார்.
எப்படி அந்தத் தகுதியை ஏற்படுத்திக்கொள்வது? அதைத்தான் சொல்கின்றேன். மொத்தம் மூன்றே மூன்று point தான் ஐயா. இந்த மூன்று point -ஐ புரிந்துகொள்ளுங்கள். பரமானுபூதி மட்டும் இல்லாமல், உலகத்தில் எதை வேண்டுமானாலும் அடைவதற்கான, manifest பண்ணுவதற்கான, வெளிப்படுத்துவதற்கான அடிப்படை... மூன்றே மூன்று ரகசியம்தான் ஐயா.
உங்களுடைய inner dialogue. உங்க inner dialogue - உள்ளுக்குள் உங்களுடைய வார்த்தைகள், இந்த quiet conversations. அதாவது, நீங்கள் தனியாக உங்களுக்குள் நாள் முழுக்க என்ன பேசிக்கொண்டே இருக்கின்றீர்களோ...அது மிக மிக முக்கியம். ஏனென்றால், அதுதான் உங்களுடைய vibration-ஐ create பண்ணுகிறது. அதுதான் உங்களுடைய conscious frequency-ஐ emit பண்ணுகிறது.
அதனால், அது பார்ப்பவனை பார்ப்பதாக, எதிலிருந்து 'நீங்கள்' என்கின்ற தனி வ்யக்தியான அஹங்காரம் எழுந்து ஆடி விளையாடி அடங்குகிறதோ அது. அதை பார்ப்பவனாக, உங்கள் inner dialogue அதற்குள் அமைதியாக ஒடுங்கியது என்றால், 'சொலல்' இல்லாத இருப்பு நிலைக்குள் ஒடுங்கியது என்றால், பரம்பொருள் frequency-ஐ emit பண்ணுவீர்கள். பரம்பொருள் frequency-ல் vibrate ஆவீர்கள். பரம்பொருளுடைய conscious energetic frequency-ல் emit பண்ணுவீர்கள். அப்பொழுது இயற்கையாகவே பரம்பொருள் வெளிப்படுவார். பரமானுபூதி நிகழும்.
முதலில் inner dialogue. இரண்டாவது: Emotional baseline என்று சொன்னேன் பாருங்கள்.. இப்பொழுது எந்த வேலையும் இல்லை என்றால், எந்த feelings-க்கு நீங்கள் return ஆகின்றீர்கள்? தொடர்ந்த cheap thrill, sexual pleasure, ஆணாக இருந்தால் அந்த sexual pleasure-க்கான cheap thrill, அந்த feeling. பெண்ணாக இருந்தால் attention need, அந்த feeling. இந்த feeling-கிற்கே return ஆகிக்கொண்டிருந்தீர்களானால், உங்கள் emotional baseline-ஆக இதை வைத்துக்கொண்டீர்களானால் அத்தனையும் நாசமாகப் போகும் ஐயா.
உங்கள் emotional baseline எதுவோ, அதுதான் உங்களுடைய frequency. இப்போழுது செய்வதற்கு ஒன்றும் இல்லை இப்போதைக்கு. Free-யாகதான் இக்கின்றீரகள் என்றால், எந்த emotional baseline-னுக்கு நீங்கள் return ஆகின்றீர்கள்? அந்த emotional baseline, திரும்பவும்… அதாவது அது எது? awareness-ஆ? Awareness, உள்ளுக்குள்ளும், வெளியிலும் இந்த awareness எப்படி உணரப்படுகிறது? இது என்ன? என்கின்ற அந்த awareness-ல் வந்து rest பண்ணுகின்றது. அந்த restful awareness-ஐயே உங்கள் emotional baseline-ஆக மாற்றினீர்களானால், எதை வேண்டுமானாலும் manifest பண்ணுவீர்கள். நீங்கள் எதை தேடிக்கொண்டிருந்தீர்களோ, அதெல்லாம் உங்களை தேடி ஓடி வரும் ஐயா. உங்கள் emotional baseline ரொம்ப ரொம்ப முக்கியம்.
அடுத்து energetic posture. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், physical posture இல்லை, energetic posture. என்ன attitude-டோடு நீங்கள் வாழ்க்கையை நோக்கிச் செல்கின்றீர்கள்? ''நான் இதுவரைக்கும் என்ன வேண்டுமோ அதை manifest பண்ணிக்கொண்டேதான் இருக்கேன். அப்புறம் என்ன? இப்பொழுது என்ன வேண்டுமோ அதை manifest பண்ணத்தான் போகிறேன்.'' அந்த attitude ஐயா. அதுதான் energetic posture என்று சொல்கிறேன். அந்த attitude. இந்த fleeting moods... அதெல்லாம் இல்லாமல், ஒரு sustained-ஆன உங்களுடைய consciousness-ஆக, உங்களுடைய vibration ஆக, உங்களுடைய energetic frequency-யாக, உங்களுடைய conscious frequency-யாக, இந்த மூன்றையும் கட்டமைத்துவிடுங்கள்.
உங்களுடைய inner dialogue, 'சொலல்' இல்லாது இருப்பதாக… உங்களுடைய emotional base line, ஸாக்ஷியை ஸாக்ஷியாக பார்க்கும், இருப்பின் இருப்பை பார்க்கும் Witnessing the witness, observing the observer. ஸாக்ஷியை ஸாக்ஷியாக பார்க்கின்ற இந்த பரம ஶாந்த நிலையை உங்களுடைய emotional baseline-ஆகக் கட்டமைத்துக்கொள்ளுங்கள்.
'வெற்றியே என் வாழ்க்கை. இதுவரைக்கும் அப்படிதான் நடந்திருக்கு' என்கின்ற தெளிவோடு வாழ்க்கையை அணுகுவதை, energetic posture-ஆக வைத்துக்கொள்ளுங்கள். அதை energetic posture-ஆக வைத்துக்கொள்ளுங்கள். இதை conscious-ஆக சுலபமாகக் கட்டமைத்துவிட முடியும் ஐயா.
Just உங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பாருங்கள்... ''என்னென்னவெல்லாம் சாதித்திருக்கின்றீர்கள், என்னென்னவெல்லாம் அடைந்திருக்கின்றீர்கள், எப்படி எல்லாம் நீங்கள் நினைத்ததையெல்லாம் பெருமான் manifest பண்ணி இருக்கின்றார்? எப்படியெல்லாம் நீங்கள் நினைத்ததெல்லாம் உங்களுடைய வாழ்க்கையில் manifest ஆகியிருக்கின்றது'' என்று அதை கொஞ்சம் திரும்பி பார்த்தீர்களானாலே தெரியும்... Wow!
உங்கள் energetic posture-ஏ gratitude-ஆகவும், success-ஆகவும், sure success-ஆகவும் உங்களுக்குள் புரிய ஆரம்பித்துவிடும் ஐயா.
இது வந்து mood-ஆக, temporary mood-ஆக, temporary thought-ஆக... அப்படியெல்லாம் இல்லை. உங்களுடைய emotional baseline-ஆக, உங்களுடைய sustained state of being--காவே மாறிவிடும். மாற்றிவிடுங்கள். இது conscious-ஆக மாற்ற முடியும். மாறிவிட்டதென்றால், உள்ளுக்குள் இருந்து தானாகவே பெருமான் வெளிப்படுகிறார்.
''வேண்டும், வேண்டும், வேண்டும்'' என்று தேடினீர்களானால், கிடைக்காது. ''எனக்கு தகுதி இருக்கு'' என்று புரிந்துகொண்டீர்களானால், தேடி ஓடி வரும். இதுதான் பரம ரகசியங்கள் ஐயா,
இந்த மூன்றுதான் manifestation -னுடைய most important secret. Inner dialogue, Emotional baseline, Energetic posture.
தமிழில் சொல்ல வேண்டுமானால்... இச்சா ஶக்தி, க்ரியா ஶக்தி, ஜ்ஞாந ஶக்தி. ''இல்ல சாமி, நீங்க இங்கிலீஷ்லயே சொல்லிடுங்க, நல்லா புரியுது'' என்பீர்கள்.
இந்த மூன்று வார்த்தை இச்சா ஶக்தி, க்ரியா ஶக்தி, ஜ்ஞாந ஶக்தி என்று சொன்னால் என்ன புரியும்? Inner dialogue தான் இச்சா ஶக்தி. Emotional baseline தான் ஜ்ஞாந ஶக்தி Energetic posture தான் கிரியா ஶக்தி இந்த மூன்றும்…
என்னுடைய கைலாஸவாசிகள் அத்தனை பேருக்கும் சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். கைலாயத்தின் குடிமக்கள், கைலாசவாசிகள் அத்தனை பேருக்கும் சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். ''கைலாசத்தை manifest பண்ணனும், எப்படியாவது நான் இருக்கின்ற இடத்தில் வந்து என்கூட வாழணும்'' என்று நினைப்பவர்கள் அத்தனை பேரும் கேட்டுக்கொள்ளுங்கள். இந்த மூன்றை align பண்ணுங்கள். பார்ப்பவனைப் பார்த்து, உங்களுடைய inner dialogue-ஐ align பண்ணுங்கள். உங்கள் emotional baseline-ஐ பரமஶாந்த ஸ்வரூபத்திற்கு align பண்ணுங்கள். Energetic posture-ஐ பரமஶிவ வெற்றி, 'எப்போதும் வெற்றியே அடையும் பரமஶிவம் நான். ஏனென்றால், எனக்குள் இருந்துதான் எல்லாமே manifest ஆகிறது….'
ஐயா, நீங்கள் mixed signal கொடுத்துக்கொண்டே இருப்பதனால்தான், ப்ரபஞ்சமும் mixed signal ஆகக் கொடுக்கிறது ஐயா. நீங்கள் தெளிவாக clarity-யோடு இருந்தீர்களானால், correct-ஆக ப்ரபஞ்சம் manifest பண்ணிவிடும் ஐயா.
உண்மையில், நீங்கள் ஒன்றும், உங்கள் vibration-ஐ force பண்ணி உருவாக்க முடியாது. உங்கள் interference… அதாவது இருக்கின்ற patterns, ஸம்ஸ்காரங்கள், patterns... இதெல்லாம் release பண்ணுவதை மட்டும்தான் செய்ய முடியும். அதை release செய்துவிடுங்கள். அதை எல்லாம் release பண்ணிவிட்டீர்களானால் போதும். Completion மூலமாக, meditation மூலமாக, unclutching மூலமாக release பண்ணி விட்டீர்களானால் போதும்.
இந்த மூன்றே மூன்றை மட்டும் செய்யுங்கள்: Inner dialogue-ஐ, பார்ப்பவனை பார்ப்பதை நோக்கியே வையுங்கள் Emotional baseline awareness, aware -ஆக பார்க்கிறது, இருப்பின் இருப்பிலேயே வைக்கிறது, உள்ளுக்குள்ளும் வெளியிலும் இருக்கிற இந்த எல்லா அனுபவங்களும், இந்த awareness எப்படி உருவாகிறது என்று அதையே பார்ப்பது. வார்த்தைகள் இல்லாத அந்த அனுபூதியிலேயே இருப்பது. இதை உங்கள் emotional baseline-ஆக மாற்றிவிடுங்கள்.
''நான் விரும்புவதைத் தான் உருவாக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் விரும்புவதெல்லாம் manifest ஆகிக்கொண்டே இருக்கிறது எனும்பொழுது, இப்பொழுது எனக்கு என்ன வேண்டுமோ அதுவும் manifest ஆகப் போகுதப்பா. கைலாஸம் தானே வேண்டும், பகவானோட போய் வாழனும், அவ்வளவுதானே. Manifest ஆகுது பாரப்பா'' என்று அந்த energetic posture, attitude with which you approach the life. உங்கள் க்ரியா ஶக்தியும் அது மாதிரி அந்த vibration-னோடு, அந்த frequency-யோடு இருக்கிறது ஐயா.
இதை temporary mood-ஆக, சில வினாடிகள் அந்த மாதிரி எல்லாம் இல்லாமல், இதுதான் உங்களுடைய sustained state-ஆக மாறிவிட வேண்டும். அதை பண்ணுங்கள். திடீர் என்று கண்ணைத் திறந்து பார்க்கும்பொழுது, உங்கள் முன்பாக நின்று தர்ஶநம் கொடுத்துக்கொண்டிருப்பேன். நீங்கள் என்னுடன் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள், ''ஆஹா SURREAL!!! . இதுதான், இதுவா... இதையா தேடிக்கொண்டிருந்தோம், இதையா தேடிக்கொண்டிருந்தோம் உண்மையிலேயே நடக்குதே'' என்று manifest ஆகியிருக்கும்.
''கண்ணே, நல்லா இருக்கியா? ரொம்ப வருஷம் ஆச்சுல்ல சாமியை பார்த்து?'' என்று பேசுவதைக் கேட்பீர்கள்.
அதனால், உள்ளுணர்வில் பரமானுபூதியை அடைவதற்கும் சரி, வெளி உலகத்தில் எதை அடையனும்னாலும் சரி, இந்த மூன்றுதான் ஐயா key. இச்சா ஶக்தி, ஜ்ஞாந ஶக்தி, க்ரியா ஶக்தி.
எப்படி செய்வது என்ற பரம ரகசியத்தை வெட்ட வெளிச்சமாக உடைத்து சொல்லிவிட்டேன் இன்று. இந்த பதினோரு நாட்களும் ஸத்ஸங்கத்தை miss பண்ணி இருந்தாலும், இந்த ஒரு ஸத்ஸங்கத்தை miss பண்ணாமல் ஆழ்ந்து கேளுங்கள்.
இந்த மூன்று line தான் ஐயா key. இச்சா ஶக்தி, க்ரியா ஶக்தி, ஜ்ஞாந ஶக்தி. Inner dialogue, Emotional baseline, Energetic posture - இந்த மூன்றும் align ஆவது. மற்றபடி வேறு struggle\> fight\> create\> force... ஒன்றும் வேலைக்கு ஆகாது.
இந்த ஒரு comedy-ல் இருக்கிறது பாருங்கள்... ஆட்டோவிற்குள் இவர் வேகவேகமாக கைவிட்டு அடித்துக்கொண்டிருப்பார். அவன் இறங்கிப்போய் எப்போவோ எங்கேயோ இறங்கி போய்விட்டார். நீங்கள் யாரை அடித்துகொண்டிருக்கின்றீர்களோ அவர். வெறுங்கையை அடித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். ஒன்றும் வேலைக்கு ஆகாது.
'வேண்டும்' என்று நீங்கள் நினைத்தீர்களானாலே, 'வறுமை' என்ற frequency- யை vibrate பண்ணுகிறீர்கள். 'ஏழ்மை' frequency-யை vibrate பண்ணுகிறீர்கள். உலகம் அதைத்தான் பிரதிபலிக்கும் ஐயா.
Relaxed-ஆக, 'எல்லாவற்றிற்கும் தகுதி உடையவன் நான்' என்கின்ற உணர்வில் இருந்தீர்களானால், அத்தனையும் உங்களைத் தேடி ஓடி வரும் ஐயா.
இதில் practical-லாக ஏகப்பட்ட கேள்விகள் வைத்திருப்பீர்கள், ''ஆ, நான் bill-ஐ, கட்டணும் EMI கட்டணும், இப்படி இருக்கும்போது நான் எப்படி சாமி நான் உட்கார்ந்து relaxed-ஆ இருக்க முடியும்?'' என்று.
இங்க பாருங்க, வெளி உலக சூழ்நிலை, உள்ளுலகம் மாறாது வெளி உலகம் மாறாது. நீ எவ்வளவு வேண்டுமானாலும் அடித்து மாய்ந்துகொள்.
இந்த கடுவெளி ஸித்தர் சொல்கின்ற மாதிரி.. நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி, மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி, நல்ல வழிதனை நாடு. எந்த நாளும் பரமனை நத்தியே தேடு. வல்லவர் கூட்டத்திற் கூடு. அந்த வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு.
நல்ல வழிதனை நாடு. 'நல்ல வழிதனை நாடு' - அதுதான் சொல்கிறேன், இந்த மூன்று வழி அருமையாக சொல்கிறேன். இந்த Inner dialogue, emotional baseline, energetic posture - மூன்றையும் பரமானுபூதிக்கு align பண்ணுங்கள்.
பார்ப்பவனை பார்த்து பரம ஶாந்தத்தில் இருந்து, 'எனக்குள் இருந்துதான் எல்லாமே உருவாகின்றது. அதனால் நான் வேண்டுவதை உருவாக்கி பார்த்துக்கொண்டு, அனுபவித்துக்கொண்டு வாழ்க்கையை வழிப்படுத்திக்கொள்ளும் திறன் உடையவன். ஏற்கனவே இதை நான் பலமுறை கண்டிருக்கின்றேன். இதற்கு மேலும் அது நிகழும்'' என்கின்ற தைரியத்தோடு energetic posture-ரோடு இருங்கள் - இதுதான் நல்ல வழிதனை நாடு. 'எந்த நாளும் பரமனை நத்தியே தேடு' - பரம்பொருளாக எப்போதும் உங்களுக்குள் உனக்குள் விளங்கிக்கொண்டிருக்கின்ற, ஸாக்ஷியை ஸாக்ஷியாகப் பார்த்து, ஸாக்ஷியின் ஸாக்ஷியாக உங்களுக்குள் விளங்கிக் கொண்டிருக்கின்ற பரமனை நத்தியே தேடு. அதைப் பார்த்து, பார்ப்பவனைப் பார்த்து இரு.
'வல்லவர் கூட்டத்திற்குக் கூடு' - இதை செய்கின்ற வல்லவர்கள், யோகிகள், ஜ்ஞாநிகள் நிறைந்து இருக்கின்ற eco-system -ஆன பரமஶிவ சேனை program-க்கு கைலாஸா திருவண்ணாமலைக்கு வந்து, attend பண்ணி, இந்த ஜ்ஞாநத்தை உள்வாங்கி, அனுபூதியாக உள்வாங்குங்கள்.
அந்த 'வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு' - இதை என்றென்றும் நமக்கு அளித்துக் கொண்டே இருக்கின்ற வள்ளலாகிய பரம்பொருளை, பரம்பொருளின் பரம வெளிப்பாடான குருவை வாழ்த்திக் கொண்டாடு.
நல்ல வழிதனை நாடு, எந்த நாளும் பரமனை நத்தியே தேடு, வல்லவர் கூட்டத்திற்கு கூடு, அந்த வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு.
இச்சா ஶக்தி இது கேளு, பேரும் க்ரியா ஶக்தி சுகம் தன்னையே தேடு. ஜ்ஞாந ஶக்தி கொண்டு வாழு. இதை மூன்றும் அடைந்திட, புறப்பட்டு வந்திடு கைலாஸா திருவண்ணாமலைக்கு. பரமஶிவ சேனையில் இணைந்து, நீ இணைந்தே வாழ்ந்திடு, வந்திடு வந்திடு வாழ்வு. பர வாழ்வு வாழ்ந்திட நீயும் வந்து சேரு.
இந்த ஸத்ஸங்கத்தின் சாரம் மூன்று வரிதான்: இச்சா ஶக்தி, க்ரியா ஶக்தி, ஜ்ஞாந ஶக்தி. Inner dialogue, Emotional baseline, Energetic posture... அவ்வளவுதான். ஶ்ரவண, மனன, நிதித்யாஸனம் செய்து, பரமாத்வைதத்தில் நிலைபெறுங்கள்.
பரமானுபூதி ப்ராப்திரஸ்து.
நீங்கள் எல்லோரும் நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன்.
பரமஶிவ சேனை 12-வது season நிறைவு பெறுகின்றது.
All the participants of Paramashiva Sena 12th season in Kailasa Tiruvannamalai and Kailasa Saint Kitts. I bless you all with Paramadvaita and I accept all of you as the Raja Sabha members. And from today, you are all given the status of Raja Sabha members.
I welcome you all into KAILASA’s Parliaments after the successful training of Paramashiva Sena. My blessings to all of you.
And today is also first day of Paramashiva Sena batch 13 participants. All the participants who gathered for Paramashiva Sena 13th batch program today in Los Angeles KAILASA, USA, KAILASA Tiruvannamalai, KAILASA Bengaluru Bidadi.
உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். I welcome all the participants who are here for Paramashiva Sena batch 13 in gathered in KAILASA Los Angeles and KAILASA Tiruvannamalai and KAILASA Bengaluru.
I welcome all of you with my love and blessings.
After the pooja, now we are going to have the pooja to Bhikshadanar.
குதிரை வாகனத்திலே எம்பெருமான் ஏறி எழுந்தருளும் திருவிழா பூஜைகளை நிகழ்த்திவிட்டு, பூஜைகளுக்குப் பிறகு... உலகம் முழுவதும் இருக்கும் கைலாஸங்களிலே இந்த பூஜைகள் நிகழப் போகின்றன. பூஜைகளுக்குப் பிறகு, ஶிவ தீக்ஷை , காயத்ரி தீக்ஷை, மஹாவாக்ய மந்த்ர தீக்ஷை போன்றவை, பரமஶிவ சேனை 13-வது season-க்காக வந்திருக்கும் அன்பர்களுக்கு அளிக்கப்படும். தொடர்ந்து நேரலையில் இணைந்திருங்கள்.
நீங்கள் எல்லோரும் நித்யானந்தத்தில் மலர்ந்து, நித்யானந்தத்தில் கரைந்து, நித்யானந்தம் ஆகிட, பரமானுபூதி அடைந்திட, பரமாத்வைதத்தில் நிலைத்திருக்க ஆசீர்வதிக்கின்றேன்.
பரமாத்வைத ப்ராப்திரஸ்து. ஆனந்தமாக இருங்கள். Blessings. --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Details
The talk
- Date
- 2025 — Exact date not recorded
- Place
- Mahakailasa
- Occasion
- Kaarthigai deepam Special satsang - அருணாசல புராணம் - பரமசிவ ஞானமும், பரமசிவ பக்தியும், பரமசிவ விஞ்ஞானமும்
- Language
- Tamil
The recording
- Recording
- No recording linked to this transcript
The transcript
- Status
- Live notes
- Time-synced
- Not time-synced
- Length
- 7,856 words · 44 min read
- Topics
- None recorded