☰KAILASA Library/Satsangs/GREAT REVELATIONS ON KARMA, DIGESTION, KAYAKALPA, IMMORTALITY TAMIL VOL 2Sign in
12 April 2021

GREAT REVELATIONS ON KARMA, DIGESTION, KAYAKALPA, IMMORTALITY TAMIL VOL 2

Live notes·Kailāsa·51 min
The Satsang

[00:04:08] ஓம் நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம் அஸ்மாத்ச்சார்ய பரியந்தாம் வந்தே குரு பரம்பராம்

I welcome you all with my love and respects. உங்கள் எல்லோரையும் வணங்கி வரவேற்கின்றேன். உலகம் முழுவதிலும் அமர்ந்திருக்கும் எல்லா அன்பர்களையும், பக்தர்களையும், சீடர்களையும் வணங்கி வரவேற்கின்றேன். பரமசிவ பரம்பொருள், எம்பெருமான், இறையனார், திருக்கைலாயத்திருந்து எல்லோருக்கும் அளிக்கின்ற இன்றைய சத்தியங்கள். கர்மத்தின் ஞான ரகசியம். கர்மத்தின் பிரபஞ்ச ரகசியம். நேற்றிலிருந்து ஜீரணம், கர்மம், காயகல்பம், நித்யத்துவ வாழ்க்கை, இந்த நான்கு சாத்தியங்களை பற்றியும், பல்வேறு ஞான ரகசியங்களை பரமசிவ பரம்பொருள், எம்பெருமான், இறையனார் நமக்கு அளித்துக்கொண்டிருக்கின்றார். இன்று கர்மத்தின் விளக்கமும் தெளிவும், கர்மத்தை பற்றிய பிரபஞ்ச பேரியல் உண்மைகளும். ஆழ்ந்து கேளுங்கள், கர்மம் அப்படிங்குறது உங்களுடைய உயிர் மென்பொருள். conscious software . எப்படி ஒரு கணினி, கம்ப்யூட்டர், அதுல download செய்யப்படுகிற சாப்ட்வேரை அடிப்படையாக வைத்து தான் இயங்குகிறதோ, அதேபோல உங்கள் வாழ்க்கை உங்களுடைய உயிரோட மென்பொருள். உங்களோட கான்ஸியஸ்னெஸ்ஸோட சாப்ட்வேர மையமா வச்சு தான் இயங்குது. உங்களுடைய கான்ஸியஸ் சாப்ட்வேர் தான் உங்களுடைய கர்மம். கான்ஷியஸ் ப்ளூபிரிண்ட் - ன்ற வார்த்தையயும் சொல்லலாம். உங்க கான்ஸியஸ் சாப்ட்வேர்.உயிர் மென்பொருள். ஆழ்ந்து கேளுங்க. வெறுமனே, நீங்கள் செய்த சில செயல்களோ, செய்யாத சில செயல்களோ, செய்ய வேண்டிய சில செயல்களோ, இவைகளை செய்வதால், செய்யாமல் விடுவதால் ஏற்படும் நன்மை தீமைகளின் தொகுப்போ கர்மம் கிடையாது. கர்மம் அப்படினா உங்களுடைய உயிர் எவ்வாறு இயங்குகிறதோ, உங்களுடைய கான்ஸியஸ்னெஸ்ஸோட, உயிரோட மென்பொருள், சாப்ட்வேர்.

[00:09:06] நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை அடைவதில்லை, எதை நம்புகிறீர்களா அதை அடைகிறீர்கள். உங்க வாழ்க்கைல எதை அடையணும்னு விரும்புறிங்களோ அத அடையுறதில்ல, எதை நீங்கள் அடைந்து விடுவீர்கள் என்று நம்புகிறீர்களா அதைத்தான் அடைகிறீர்கள், அதனாலதான் நீங்க உங்க உயிரை, வாழ்க்கையை இயக்குவதற்கு உபயோகப்படுத்துற கான்ஷியஸ் சாப்ட்வேர், அதன் மீது உங்கள் கவனம் திருப்பப்பட வேண்டும். பல நேரத்துல பெரும் செல்வ வளத்தோட வாழனும்ன்னு விரும்புவீங்க, ஆனா அந்த பெருஞ்செல்வ வளத்தை உங்கள் வாழ்க்கையிலே ஈர்க்க முடியும்னு நம்ப மாட்டீங்க, அங்க தான் பிரச்னை. நீங்க, எதை உங்கள் வாழ்க்கையிலே உருவாக்க முடியும். எப்படி நீங்கள் வாழ முடியும்னு நம்புறீங்களோ அது தான் உங்கள் வாழ்க்கையில் நிகழும். இன்றோ, நாளையோ, அடுத்த ஆண்டோ, அல்லது அடுத்த பத்து ஆண்டுகள் கழித்தோ, எத்துணை தடைகள் வந்தாலும், என்ன வந்தாலும், என் உயிர் மென்பொருளின் போக்கு, எப்படி இருக்க வேண்டுமென்று, என்னுடைய கான்ஷியஸ் சாஃப்ட்வேரோட போக்கும், நான் என் வாழ்க்கைல வெளிப்படுத்த வேண்டிய லக்ஷ்யங்கள் பத்தியும், நான் தெளிவாக இருந்தால் அதை என்னால் வெளிப்படுத்த முடியும், வெளிப்படுத்தியே தீருவேன்.

[00:11:09] உங்கள் எல்லார் வாழ்க்கையையும், நீங்களே ஒரு முறை திரும்பி பாருங்கள், பாத்து ஆண்டுக்கு முன்பாக நீங்கள் எதை அடைய வேண்டுமென்று விரும்புனீர்களோ அதை அடைந்திருக்க மாடீர்கள், எதை அடைந்து விட வேண்டும் என்று நீங்கள் நம்பினீர்களோ, எது நடக்கும் என்று நம்பினீர்களோ, எதை அடைவீர்கள் என்று நீங்கள் நம்பினீர்களோ அதை அடைந்திருப்பீர்கள். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உயிர் மென்பொருள், இதுல ஒரு நல்ல செய்தி என்னன்னா, உங்களுடைய கான்ஷியஸ் சாஃப்ட்வேர, உங்க உயிர் மென்பொருள, நீங்கள் உங்களுடைய உணர்வினால், உணர்ச்சியினால், கான்ஷியஸ்னால், உங்கள் மனத்தால், நீங்கள் வடிவமைக்க முடியும். அது தான் மிகப்பெரிய நல்ல செய்தி. அதாவது, நம்முடைய வாழ்க்கை, நாம எப்படி இருக்கும்னு நம்புறோமோ அதைத்தான் அடைவோம்னு சொன்ன உடனேயே நமக்கு எல்லாருக்கும் வர்ற பயம், என் வாழ்க்கையை பத்தி அப்போ எனக்கு எந்த positive - ஆன நம்பிக்கையுமே இல்லாம இருக்கே, எனக்கு இருக்குற பயத்தையெல்லாம் தான் அப்போ நான் அடைஞ்சுருவேனா? இந்த பயமே வேண்டாம். நல்ல புரிஞ்சுக்கோங்க. நீங்கள் உங்களுடைய உயிர் மென்பொருளை எழுத முடியும், மாற்ற முடியும். வடிவமைக்க முடியும், சில பாகங்களை அழிக்க முடியும். சில பாகங்களை மேம்படுத்த முடியும். உங்களுக்கு சர்வ சுதந்திரம் இருக்கின்றது. பெருமான், பரமசிவ பரம்பொருள் கருணையே வடிவானவன். அவன் எப்படி தன்னுடைய சுதந்திரத்தை மதிக்கின்றானோ, தன்னுடைய சுதந்திரத்தின் ஆனந்தத்தினாலேயே இந்த பிரபஞ்சத்தை உருவாக்கி விளையாடுகின்றானோ, அதே போல உங்கள் உலகத்தை நீங்கள் உருவாக்கி விளையாடுவதற்கான ஸ்வதந்திரத்தை உங்களுக்கு அளிக்கின்றான். அதுல அவன் மறுபடுவதே இல்லை. அது தான் பரமசிவ பரம்பொருளின் பெருங்கருணை. என்கிட்ட பல பேர் கேக்குறதுண்டு, சாமி நான் தப்பு பண்ணும் போது, பெருமான் என்ன தடுத்திருந்தா என் வாழ்க்கை நல்ல இருந்திருக்குமே, ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ்வதற்கும் தவறு செய்வதற்கும் கூட, நீங்கள் விரும்புகின்ற விதத்திலே உங்கள் வாழ்க்கையை மலர செய்வதற்கும் கூட, சரியோ தவறோ அதை பற்றி கவலை படாமல், உங்களை எடை போடாமல் உங்களுக்கு ஸ்வதந்திரத்தை அளிப்பது தான் பெருமானுடைய பெருங்கருணை. அவரு உங்கள கட்டுப்படுத்துனாலும் என்ன பண்ணுவீங்க? ஆ.. நான் நெனைக்குற மாதிரி வாழ விட மாட்டேங்குறாரு பெருமான், உங்களை பந்தப்படுத்தியதற்காக அவர் மீது பழி சொல்வீர்கள். உங்களுக்கு சுதந்திரம் கொடுத்தாலும் என்ன பண்ணுவீங்க? உங்கள ஃபிரீயா விட்டாரு, என்ன வேணா தப்பு பண்ண விடுறாரு. அந்த தப்புனால வர்ற கஷ்டத்தையெல்லாம் நீங்க அனுபவிக்க வேண்டியதை இருக்குன்னு, அதுக்கும் திட்டுவீங்க. அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல், பெருமான் தன்னுடைய பெருங்கருணையினாலே தான் சுதந்திரத்தை எந்த அளவிற்கு மதிக்கின்றாரோ, அதே போல உங்கள் சுதந்திரத்தையும் மதிக்கின்றார்.

[00:15:33] நீங்களாகவே வந்து, பெருமானே எனக்கு முழுமையான ஞானம் வேண்டும், முழுமையான பரமசிவ கதி வேண்டும், அதற்கு வழி சொல்லுங்கள்ன்னு சொன்னால், கேட்டால்தான், அதற்க்கு வழி சொல்லுவாரே தவிர அங்கும் கூட உங்கள் சுதந்திரத்தை பறிக்க மாட்டார். உங்களுக்கு ஞான தெளிவை அழிப்பாரே தவிர சுதந்திரத்தை பறிக்க மாட்டார். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், தன் செல்வத்தை மதிக்கின்ற ஒருவன், அடுத்தவர் செல்வதோடு வாழவேண்டும் என்று அவருக்கு இருக்கின்ற ஆசையையும் மதிப்பான். தன் சுதந்திரத்தை மதிக்கின்ற ஒருவன், அடுத்தவர்கள் ஸ்வதந்திரத்தோடு வாழ விரும்புவதையும் மதிப்பான். தன் வாழ்க்கையை மதிக்கின்ற ஒருவன், அடுத்தவர்கள் வாழ்க்கையையும் மதிப்பான். எப்போவுமே தன்னுடைய வாழ்க்கைல என்னென்னல்லாம் வேணும்ன்னு நாம நெனைக்கிறோமோ, அதை எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு அளிக்கவும், அதெல்லாம் மற்றவர்களுக்கும் இருக்கவேண்டும் என்று நினைப்பதும் தான் நம்முடைய இயல்பான ஸ்வபாவம். பரமசிவ பரம்பொருள், தன் ஸ்வதந்திரத்தை முழுமையாக மதிப்பவர், ரசிப்பவர், அனுபவிப்பவர். அதனால் அவர் நம் ஸ்வதந்திரத்தையும் மதிக்கிறார், ரசிக்கிறார், அனுபவிக்கின்றார், அனுமதிக்கின்றார். நம்முடைய வாழ்விலே நம்பிக்கை என்கின்ற, நல்லா இந்த வார்த்தையை நன்றாக புரிந்துகொள்ளுங்கள், நம்பிக்கை அப்படின்னா, குருட்டுத்தனமாக, சிந்தனை செய்யாது, பிளைண்ட்ஸ்பாட்ஸ்சோட, எதோ ஒன்னு யாரோ சொன்னாங்கன்றதுக்காக, எங்கயோ காதுல விழுந்த, எங்கயோ படிச்ச, எதோ ஒரு, நிஜத்திற்கு தொடர்பில்லாத கருத்துக்கள், தொண்டையிலே சிக்கிய இந்த மீன் முல்லை போல, தொண்டையிலே சிக்கிய இந்த மீன் முல்லை போல, உங்கள் உணர்ச்சி கொந்தளிப்பிலே சிக்கிக்கொண்ட சில கருத்துக்களை நான் நம்பிக்கைன்னு சொல்ல மாட்டேன். எப்படி உண்டு ஜீரணமான உணர்வு உங்களுக்கு சக்தியா மாறுதோ, அதுமாரி நீங்கள் சிந்தித்து, உணர்ந்து, உயிர்த்து, உங்கள் அனுபவமா மாறின, அறிவைத்தான் உங்கள் நம்பிக்கைன்னு நான் ஏத்துப்பேன்.

[00:18:45] தொண்டையில் சிக்கிய மீன் முள்ளை போலே உங்கள் உணர்ச்சியில் சிக்கிக்கொண்ட ஏதாவது ஒரு பைத்தியக்காரத்தனமான கருத்துக்கள் உங்கள் நம்பிக்கையும் அல்ல, அது உங்கள் வாழ்க்கையும் அல்ல. சில நேரத்துல ஏதாவது ஒரு சினிமா நடிகரையோ இல்ல உணர்ச்சி பூர்வமா பேசுற யாரோ ஒரு பேச்சாளரையோ, அவங்க ஏதோ ஒரு காரணத்துல, ஏதோ ஒரு விவகாரத்துல, ஏதோ ஒரு போக்குல, எதோ சொல்ற பஞ்ச் டயலாக்குங்ல அப்படியே உள்வாங்கி வச்சுக்கிட்டு, அது உங்களுடைய வாழ்க்கையோட நம்பிக்கைன்னு யோசிக்க ஆரம்பிச்சா தொண்டையில சிக்குன்னு மீன் முள் மாதிரி தான். அது உங்கள் நம்பிக்கை அல்ல, அது உங்கள் நம்பிக்கையும் ஆக முடியாது, அது உங்கள் வாழ்வின் அடிப்படையான உயிர் மென்பொருளாக, conscious software - ஆ மாற முடியாது. conscious software அப்படிங்கிறது, பல ஜென்மங்களாக நீங்கள் சிந்தனையாலே, உணர்ச்சியாலே, உணர்வாலே, மீண்டும் மீண்டும் மீண்டும் வரும் முடிவுகளின் தொகுப்பு. பல முறை நெருப்பை தொட்டோ அல்லது வேறு யாராவது தொட்டு தீக்காயம் அடைவதையோ நீங்கள் பார்த்து அதனால் வருகின்ற தெளிந்த முடிவு, தீ சுடும். இது தான் உங்க கான்ஷியஸ் சாப்ட்வேரோட பாகமா இருக்கும். உங்கள் உயிர் மென்பொருளின் பாகமாக மாறி இருக்கின்ற நம்பிக்கை. சாப்ட்வேர்ல கோடிங்ஸ் பண்ராங்களோ அந்த மாதிரி இது ஒரு கோடிங்கா உங்களுக்குள்ள மாறி இருக்கும். அதே மாதிரி உணவு உண்டால் தான் உயிர் வாழ முடியும் அப்படின்னு மற்றவர்கள் எல்லோரும் அவர்கள் அனுபவத்திலே இருந்து சொல்வது, நீங்களே அந்த அனுபவத்தை பார்ப்பது. இதனால், அந்த உணவு உண்டால் தான் உயிர் வாழ முடியும்ங்கிற கருத்து உங்கள் உயிர் மென்பொருளின் பாகமா மாறிடும். கான்ஷியஸ் சாப்ட்வேரோட பாகமா மாறிடும். இப்போ உணவு உண்டால் தான் உயிர் வாழமுடியும்ங்கிறது உங்களுடைய கர்மத்தின் பாகம். தீ சுடும் அப்படிங்கிறது உங்களுடைய கர்மத்தின் பாகம். இதுல ஒரு நல்ல செய்தி என்னன்னா, இது மாதிரி ஆழமான, கர்மத்தின் பாகமாக, உங்கள் உயிர் மென்பொருளை பாகமாக, உங்கள் கான்ஷியஸ் சாப்ட்வேரோட பாகமாக எந்த அளவுக்கு ஆழமாக எந்த கருத்து மாறிவிட்டிருந்தாலும் கூட அதை மாற்றி கொள்ள முடியும்ங்கிறது தான் நல்ல செய்தி.

[00:22:26] உணவு உண்டால் தான் உயிர் வாழ முடியும்ங்கிற கருத்து, பல ஜென்மங்களாக உங்களுக்குள் பதிந்து உங்களுடைய உணர்வு மென்பொருளாக, கான்ஷியஸ் சாஃப்ட்வேராக, உயிர் மென்பொருளாக மாறிவிட்டிருந்தாலும் கூட, அதை மாற்றி, இல்லை, உணவு தேவை இல்லாமல் வெறும் பிராணனை உள்வாங்கி நம்மால் உயிர் வாழ முடியும் அப்படிங்கிற புது கர்மமாக, புது கான்ஷியஸ் சாஃப்ட்வேராக, புது உயிர் மென்பொருளாக உங்கள நீங்களே reprogram பண்ண முடியும். அது தான் கர்மத்தின், தளைகளிலிருந்து, கட்டுப்பாடுகளிலிருந்து நம்மை விடுவித்து கொள்ளுகின்ற நுட்பம். ஆழ்ந்து கேளுங்கள், வினை, வினைக்கான எதிர்வினை, இந்த வினை எதிர்வினை நிகழும் பொழுது எதேச்சயாகவோ அல்லது எதிர்பாராத விதத்திலோ வருகின்ற பக்க வினைகள், இவைகளில் ஆபத்தோ அல்லது அதிசயமோ, அதாவது, நீங்க எதிர்பாக்காத ஒன்னு நடந்து, அது உங்களுக்கு நல்லதுன்னு நீங்க நெனச்சா அது அதிசயம்ன்னு சொல்லுவீங்க, உங்களுக்கு கேட்டதுன்னு அத நெனச்சீங்கன்னா ஆபத்துன்னு சொல்லுவீங்க. ஆபத்தோ, அதிசயமோ, இது எல்லாத்தோட தொகுப்பு, அதாவது வினை, எதிர்வினை, எதிர்பாராத வருகின்ற ஆபத்து அல்லது அதிசயம், இந்த நான்ங்கையுமே உங்களால் கான்ஷியஸா மாற்ற முடியும். இவைகளோடு விளையாட முடியும். நல்ல புரிஞ்சுக்கோங்க, நீங்கள் மிகப்பெரிய சக்தியும், சுதந்திரமும் வாய்ந்தவர்கள். தர்மத்தைப் பற்றி ஞான ரகசியங்களை புரிந்துகொள்வீர்களானால், உங்கள் வாழ்க்கையிலே மிகப்பெரும் ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள், நீங்கள் நினைக்கிறதை எல்லாம் வெளிப்படுத்த முடியும், வாழ்க்கைல அடைய முடியும். வேற ஒண்ணுமே தேவை இல்ல. உழைப்பு கடினமானது அப்படின்ற ஒரு தவறான programming , உங்களுக்குள்ள பண்ணி வச்சுருந்திங்கன்னா, கான்ஷியஸ் ப்ரோக்ராம்மிங் பண்ணி வச்சிருந்திங்கன்னா, அத மாத்தி, ஏ ! உழைப்பும், active - ஆ இருக்குறதுந்தான் லைஃப இன்ஸ்பிரிங்கா வச்சிருக்கும், இல்லன்னா இத்து பொய் நொந்து போயிருவோம். உங்களுடைய தேவை மற்றவர்களுக்கு இல்லாமல், மற்றவர்கள் தேவை உங்களுக்கு இல்லாமல் போகும் பொழுது, துரு பிடித்த இரும்பை போல், உங்கள் வாழ்க்கை துரு பிடித்து போய்விடும்ங்கிற தெளிவுக்கு வந்து, உழைப்பு வலி தராது, உழைப்பு வலிமை தரும், அப்படின்னு கான்ஷியஸா உங்கள ரீப்ரோக்ராம் பண்ணிட்டீங்கன்னா, உழைப்பு வலி அல்ல வலிமை அப்படின்னு கான்ஷியஸா உங்கள ரீப்ரொக்ராம் பண்ணிக்கிட்டீங்கண்ணா, alive - ஆ inspired - ஆ excited - ஆ உங்கள் வாழ்க்கையை நடத்திட்டு போயிட்டே இருக்க முடியும். உடம்பு இயங்க இயங்க, உடம்பு ஆரோக்கியமாகும். மனம் சிந்திக்க சிந்திக்க செம்மையாகும், மொழி, பேச பேச இனிமையாகும். உயிர் உயிர்க்க உயிர்க்க தன் சக்திகளை வெளிப்படுத்தும்.

[00:27:24] கர்மம், கர்மம் அப்படிங்கிறது நம்மை சுற்றி நாமே விதித்துக்கொண்ட கட்டுப்பாடுகளை பற்றிய அறிவு அல்ல, நம்மை சுற்றி நாமே விதித்துக்கொண்ட கட்டுப்பாடுகளிலிருந்து வெளிவருவதற்கான தெளிவு. ஞானத்தெரிவு. சில நேரத்துல வினையும், எதிர்வினையும், எதிர்பாராத வினையும், இந்த எதிர்பாராத வினை வந்து ஆபத்தாகவோ அல்லது அதிசயமாகவோ இருக்கலாம். இந்த நான்கிற்கு நடுவிலே, நாம் சிக்கிக்கொண்டு நம் மீது நமக்கே நம்பிக்கை இல்லாத சூழலுக்கு போகிறோம். அது தன் வாழ்க்கையில் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்லா ஆழ்ந்து கேளுங்கள், இந்த சில உதாரணங்களை புரிந்துகொள்ளுங்கள், நான் சொல்ற சில உதாரணங்கள். சாதாரணமா இந்தியாவ பொறுத்த வரைக்கும், ஒரு நடுத்தர வர்க மக்கள் எல்லாருமே முதல்ல இன்ஜினியரிங் படிச்சுறது, அதுக்கப்புறம் தன் வாழ்க்கைல என்ன படிக்கலாம், என்ன career - க்கு போகலாம், எப்படி வாழ்க்கை அமையனும்ன்னு அப்புறம் தான் யோசிக்க அராமிக்குறோம். அது மாதிரி தன் வாழ்க்கை ஆயிடுச்சு. ஆனா உண்மைல வாழ்க்கையினுடைய அடிப்படையான பாடம், அடிப்படையான சத்தியம், நம்முடைய வினையும், அதன் எதிர்வினையும், எதிர்பாராத வினைகளும் வரும் பொழுது, அதற்குள் சிக்கி, நம்மை பற்றி நாம் வைத்திருக்கின்ற தைரியம், பலம், அழியாமல் உயிரோடு இருக்கின்ற அளவுக்கு நம்மை நாமே புரிந்து, தெரிந்து நம்மைக்குள் அந்த பலத்தையும், நம்முடைய நரம்பு மண்டலத்தை அந்த அளவுக்கு ஸ்திரமாக மாற்றிக்கொள்வதும் தான் வாழ்க்கையோட அடிப்படையான பாடம். பல தரம் பாத்துருக்கேன், என்னுடைய வாழ்க்கைல, பரமசிவ பரம்பொருள் எனக்களித்த பெருங்கருணை, அவர் அளித்த ஆசி, பாக்கியம், நன்கொடை, திருவண்ணாமலைங்கிற ஞானசூழல்ல பிறந்து வளர வைத்தார். இந்த ஞானசூழலிலே பிறந்து வளர்ந்ததனால் சிறு வயதிலிருந்தே ஆயிரக்கணக்கான ஆன்மீக சாதகர்களை பார்த்ததனால், வாழ்க்கையிலே தேடுதல் உடையவர்களை கண்டதனால், நான் வளர்ந்து, எனக்குள் ஞானம் மலர்ந்து, இந்த மிகப்பெரிய கைலாசத்தின் மறுமலர்ச்சிக்கான இந்த சங்கத்தை நான் உருவாக்கிய பிறகு, லக்ஷக்கணக்கான மக்களை தனித்தனியாக சந்தித்திருக்கின்றேன், அவர்களுடைய வாழ்வின் பிரச்சனைகளை ஆழ்ந்து கேட்டிருக்கின்றேன், என்னாலான தீர்வுகளை அளித்திருக்கிறேன். இந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன் கேளுங்கள். almost நாற்பத்தி ஓரு ஆண்டுகள் சாதுர்மாஸ்ய விரதமிருந்து, சந்யாச வாழ்க்கை, இப்போ வர போகின்ற சாதுர்மாஸ்யம், குரு பூர்ணிமைல இருந்து வர போகின்ற சாதுர்மாஸ்யம், என்னுடைய நாற்பத்தி ஒன்றாவது சாதுர்மாஸ்ய விரதம். மூன்று வயதிலே சிறு குழந்தையாக எனக்கு முதல் சாதுர்மாஸ்ய விரதம், பால சன்யாசம் கொடுத்து செய்து வைத்தார்கள் என்னுடைய குருமார்கள். so நாற்பத்தொரூ சாதுர்மாஸ்யம், நாற்பத்தி ஒன்றாவது சாதுர்மாஸ்யம், இந்த ஜூலை 24 வரப்போகிறது. பட்டாபிஷேகம் செய்து இருபத்தி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது, 1994 ங்கிலே பட்டாபிஷேகம் செய்தார்கள், யோக பட்டாபிஷேகம்.

[00:32:33] தொண்ணூற்று நான்கிலிருந்து இன்று வரை லக்ஷக்கணக்கான மக்களை பல வாழ்க்கை பின்னணி உடையவர்களையும் பார்த்து, சந்தித்து, என் அனுபவங்கள், அறிவு, ஞானம், இறைவன் கொடுத்த அத்தனையையும் பகிர்ந்து கொண்டிருக்கின்றேன். இந்த எல்லா அனுபவத்திலிருந்தும் இந்த சில சாத்தியங்களை உங்களுக்கு சொல்லுகின்றேன், உள்வாங்கிக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் எக்காரணம் கொண்டும், எந்த எதிர்வினை வந்தாலும், எதிர்பாராத வினை வந்தாலும், உங்கள் மீது உங்களுக்கு இருக்கின்ற நம்பிக்கையை இழக்காதீர்கள். உங்களை நீங்களே அடித்து துவைத்து கொள்ளாதீர்கள். உங்கள் மிகப்பெரிய சொத்து, உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. ஸ்ரத்தை. நன்றாக புரிந்துகொள்ளுங்கள், அடிப்படையான ஒரு சத்தியம், உங்களுடைய வாழ்க்கையினுடைய canvas , உங்கள் வாழ்க்கை வந்து பெரிய ஓவியம் அப்படின்னா, அந்த ஓவியத்தின் அடிப்படை துணி, எந்த canvas மேல அந்த ஓவியம் வரையப்படுதுன்னா? நீங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் மரியாதை, நீங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. அதை இழக்காதீர்கள். பெரிய பிரச்னை என்னன்னா? மத்தவங்க கிட்டலாம் உங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக நீங்க பேச ஆரம்பிக்கும் போது, சொல்ல ஆரம்பிக்கும் பொழுது, கொஞ்ச நாள்ல நீங்களே அத நம்ப ஆரம்பிச்சு, உங்களை நீங்களே ஆழித்து கொள்வதற்கான எல்லா செயல்களையும் செய்கிறீர்கள். உங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக நீங்கள் மற்றவர்களிடம் பேச துவங்கும் பொழுது, சொல்ல சொல்ல துவங்கும் பொழுது, நம்ம எல்லாருக்குமே காத்து கொடுக்கப்பற்றுக்குற தவறான ஒரு பாடம், மனசுல என்ன துக்கம் இருந்தாலும் யார்கிட்டயாச்சும் பேசி அலுத்துறணும்ன்னு, தப்பு. தனியா உக்காந்து பேசி அழுதுருங்க, அது தான் நல்லது. ஏன்னா தனியா உக்காந்து உங்க கஷ்டத்த நீங்களே பேசி அழுதுட்டீங்கன்னா, அத நீங்க நம்ப மாட்டீங்க, அது பொய்ன்னு உங்களுக்கே தெரிஞ்சு போய்டும். மத்தவங்க கிட்ட உக்காந்து பேசி அழுத்திங்கன்னா, அத ரொம்ப அழகா விவரணையோடு சொல்லி, அவன் நம்பிடான்னா, அவன் வேநுண்ணே நம்புவான் வேற, நீங்க நாசமா போகணும்ன்னு அவன் காத்துருக்குறான். அவன் நம்பிடான்னா நீங்களும் நம்ப அரமிச்சுருவிங்க, போச்சு. அவன் நம்புனது மட்டுமில்லாம உள்ளுக்குள்ள அத ரசிப்பான் வேற, உனக்கு வேணுண்டா. அவன் நம்புனதுனால நீங்களும் நம்பி மொத்தமா நாசமா போவீங்க. அதனால எப்போதும் உங்களது வாழ்வு பற்றிய, நீங்கள் வைத்திருக்கின்ற குறைந்த நிலை முடிவுகள், அதாவது உங்கள் தகுதிக்கு நீங்கள் பல கோடி அடைந்திருக்க வேண்டும், ஆனா உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதனால பதவி உயர்வு கிடைக்காம, பண பலம் வரல அல்லது எதோ ஒரு போட்டியில நீங்க வெற்றி அடயல, எதோ ஒரு விதத்துல உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக நீங்கள் நம்பினால், அத தனியா உக்காந்து உங்களுக்குள்ள சிந்திச்சு அல்லது பேசி, அழுது, எதுவாயிருந்தாலும் உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள், ஏன்னா உங்களுக்குள்ளேயே வச்சுக்கிட்டீங்கன்னா அது ஒரு ஆழமான நம்பிக்கையா உங்களுக்குள்ள மாறாது. என்னைக்காவது ஒரு நாள் அத எடுத்து வெளில போட்டு உங்க வாழ்க்கைய புதுசா மாத்திர முடியும். ஆனா அத மத்தவங்க கிட்டலாம் சொல்லி அழ அரமிச்சிங்கன்னா அத எத்தனை பேர் நம்புறானோ அந்த அளவுக்கு ஆழமா நீங்க அத நம்ப அரமிச்சுருவிங்க, அது தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாக மட்டுமல்லாது நுரையீரலில் சிக்கிய மீன் முள்ளாக இதயத்தில் சிக்கிய மீன் முள்ளாக மாறி உங்கள் வாழ்வை அழித்து விடும். அது தான் உங்கள் வாழ்க்கை அப்படிங்கிற ஓவியம் தீட்டப்பட்டு இருக்கிற கேன்வாஸையையே கிழிச்சுரத்துக்கு சமம். உங்கள் வாழ்க்கை செதுக்கப்பட்டிருக்கிற கல்லயே உடைத்துவிடுவதற்கு சமம். அதைச்செய்யாதீர்கள். இந்த ஒன்றை மட்டும் செய்யாதீர்கள். உங்கள் வாழ்க்கைல கர்மத்தில் நீங்கள் ஜெய்த்துவிடலாம். இந்த ஒன்றை மட்டும் செய்யாதீர்கள்.

[00:38:53] கர்மத்தை பற்றிய அடுத்த ஒரு ஞான ரகசியம். ஆழ்ந்து கேளுங்கள்,உங்களுடைய அடிவயிற்றிலே இருக்கின்ற ஜீரணசக்தி, அதாவது போடுகின்ற உணவை மட்டுமல்லாது உங்களுடைய உடம்பையே கூட ஜீரணகின்ற சக்தி உங்கள் அடிவயிற்றிலே இருக்கின்ற ஜடராக்னிக்கு உண்டு. ஆழ்ந்து கேளுங்கள், உங்கள் அடிவயிற்றிலே எப்போதும் எரிந்து கொண்டிருக்கின்ற அந்த ஜடராக்னி, அந்த ஜடராக்னிக்கு உங்க வயித்துல போடுற உணவு, பொருட்கள், அதை மட்டும்தான் சேரிக்குற சக்தி இருக்குதுன்னு நெனைக்காதிங்க, உங்க உடம்பையே சேரிக்குற சக்தி உண்டு. அதனாலதான் நீங்க என்ன வேணா கூகிள் பண்ணி பாருங்க, நீங்க மாடர்ன் மெடிசின்ஸ் சொல்ற, மாடர்ன் மெடிக்கல் சயின்ஸ் சொல்ற அந்த கருத்துக்களை எல்லாம் படிச்சு பாருங்க, நான் சொல்ற இந்த எல்லா கருத்துக்களுமே மாடர்ன் மெடிக்கல் சயின்ஸும் எதுக்குறாங்க, இந்த ஒரு விஷயத்தை ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உங்களுடைய குடல், சில மாதங்களுக்கு ஒரு முறை தன்னைத்தானே முழுமையாக புதுப்பித்துக்கொள்ளுகிறது. உங்களுடைய மூளை, வருடத்திற்கு ஒரு முறை தன்னைத்தானே முழுமையாக புதுப்பித்துக்கொள்ளுகிறது. ஆழ்ந்து கேளுங்கள், ஆழ்ந்து கேளுங்கள், உங்களுடைய அடிவயிற்றிலே இருக்கின்ற ஜடராக்னி, நீங்கள் வயிற்றுக்குள்ளே போடுகின்ற உணவை மட்டுமல்லாது உங்கள் உடல் உறுப்புகளையே கூட ஜீரணகின்ற சக்தி வாய்ந்தது. அதனால தான் உங்கள் நுரைஈரல் மீண்டும் மீண்டும் புதுப்பிக்க பட்டுக்கொண்டே இருக்கிறது. உங்கள் இதயம், மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதயத்துக்குள் செலுத்தப்படும் இரத்தம் மட்டும்தான் புதுப்பிக்க படுகிறது தூய்மை செய்ய படுகிறதுன்னு தயவுசெய்து நினைக்காதீர்கள். இதயமே புதுப்பிக்க பட்டுக்கொண்டிருக்கிறது. அதே மாதிரி தான் கல்லீரலே புதுப்பிக்க படுகிறது. கல்லீரல் இயங்கி உங்க உடம்பு முழுசையும் எல்லா நச்சையும் வெளியேற்றி உங்கள் உடம்பை புதுப்பிப்பது மட்டுமல்லாது, கல்லீரலே புதுப்பிக்க பட்டுக்கொண்டிருக்கின்றது. அதே மாதிரி உங்கள் உடம்பின் எல்லா பாகங்களுமே உங்கள் ஜடராக்னியினால் தொடர்ந்து ஜீரணம் செய்யப்பட்டு, புதுப்பிக்க பட்டுக்கொண்டே இருக்கிறது. இதுல ஒரு நல்லா விஷயம், நல்லா செய்தி என்னன்னா, உங்களுடைய தசை நினைவுகள் - muscle memory , உயிர் நினைவுகளும் - bio memory , இந்த இரண்டுமே கூட உங்களுடைய ஜடராக்கினியினாலே ஜீரணம் செய்யப்பட்டுவிடும், அப்படின்னா என்ன சொல்ல வரேன்னா, பழைய கர்மங்கள், கர்மத்தொகுப்புகள், அதனால் வருகின்ற துக்கங்கள், துக்க மன அமைப்புகள், இவைகளை நீங்கள் என்றென்றும் சுமந்து உங்கள் வாழ்க்கையை அழித்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. புதிய மன அமைப்பும், உணர்வு அமைப்பும், உயிர் அமைப்பும் சாத்தியம். இந்த ஒரு சத்தியத்தை தொடர்ந்து தியானியுங்கள். இன்னைக்கு நான் பல சாத்தியங்களை ஆடுக்கடுக்கடுக்காக உங்களோடு பகிர்ந்துகொண்டிருந்திருக்கிறேன். கர்மத்தை பற்றி, இவைகளை ஆழ்ந்து உள்வாங்குங்கள், சிந்தியுங்கள், தியானியுங்கள். கர்மம், ஜீரணம், காய கல்பம், நித்யத்துவம் இந்த நான்கை பற்றிய ஞான ரகசியங்களையும் தொடர்ந்து அடுத்தடுத்த சத்சங்கங்களில் பகிர்ந்துகொண்டே வருகின்றேன். இப்போதைக்கு இன்று நான் உங்களோடு பகிர்ந்துகொண்ட இந்த சாத்தியங்களை தியானியுங்கள், உள்வாங்குங்கள், ஜீரணியுங்கள் என்று கூறி நீங்கள் எல்லோரும், நாம் எல்லோரும் நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, நித்யானந்தமாகிட ஆசிர்வதித்து முடிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள். [00:45:29]

[image1]: [BASE64_REMOVED]

Details

The talk

Date
12 April 2021
Place
Kailāsa
Language
Tamil

The recording

Watch
youtu.be/Fe4ay00ELAM](https://youtu.be/Fe4ay00ELAM)
Published
12 April 2021
Duration
51 min

The transcript

Status
Live notes
Time-synced
Not time-synced
Length
2,138 words · 12 min read
Topics
None recorded